திருமலைச்சீலன்

கருத்துக்கள உறவுகள்
 • Content Count

  30
 • Joined

 • Last visited

 • Days Won

  1

திருமலைச்சீலன் last won the day on August 12 2013

திருமலைச்சீலன் had the most liked content!

Community Reputation

25 Neutral

About திருமலைச்சீலன்

 • Rank
  புதிய உறுப்பினர்

Profile Information

 • Gender
  Male
 1. வாணன் அண்ணா அருமையான வரலாற்று பதிவு சில சம்பவங்கள் பலருக்கு தெரிந்தாலும் உங்களைப் போன்று எழுத்து வடிவில் கொண்டு வருவது எல்லோராலும் முடியாது தலைவரின் பல் துறை சார்ந்த ஆளுமையை எமது இனத்துக்கு வரலாற்றுப் பதிவாக கொண்டு வருவதற்கு எனது வாழ்த்துக்கள். (அண்மையில் வன்னியில் தலைவர் இருந்த இல்லத்தை சிங்கள தேசம் தகர்த்து அதற்கு விளக்கம் கூறியுள்ளது இந்த இல்லம் இருந்தால் விடுதலைப் புலிகளின் வரலாறு தமிழ் மக்களிடமிருந்து அழித்திட முடியாது என்று. ஆனால் சிங்கள தேசத்துக்கு தெரியாது ஒவ்வொரு தமிழனினதும் இதயத்தில் தலைவர் இருக்கிறார் என்று.)
 2. 2009 ம் அண்டு புதுக்குடியிருப்பில் நடைபெற்ற தாக்குதலில் தீபன் அண்ணை, கடாபி அண்ணை, விதுஷா அக்க்கா, துர்க்கா அக்கா ஆகியோர் உட்பட பலர் வீரச்சாவடைந்தனர். இரணப்பாலையும் எதிரியின் கைவசம் சென்று விட்டது. பொக்கணை தொடக்கம் முள்ளிவாய்க்கால் வரையான பிரதேசத்தில் சுற்றிவளைக்கப்பட்டிருந்த நேரம், முக்கிய தளபதிகளின் இழப்பால் போராளிகளின் உளவுரண் பாதிக்கப்பட்டிருந்தது. இந்த தருணத்தில் ஒன்று கூடுவதே கடினமாக இருந்த நிலையில் கூட சில தளபதிகளுடன் தலைவர் கலந்துரையாடினார். அங்கு கலந்துரையாடலுக்கு சென்ற தளபதியெருவருடன் சென்ற நான் , அது முடிந்த பின் தலைவர் என்ன சொன்னவர் என்று ஆவலுடன் கேட்டேன். அதற்கு அவர் சந்திக்கப்போகும் போது ‘எமது வெற்றியை நாளை சரித்திரம் சொல்லும் இப்படை தோற்கின் எப்படை வெல்லும் ’ என்ற பாடலின் வரியை சொல்லி விட்டு கலந்துரையாடலைத் தொடங்கினார். அப்போது ‘தீபன் கடாபி வீரச்சாவுகள் எதிர்பார்த்ததுதான் ஆனால் துர்க்கா, விதுஷா ஆகியோரின் வீரச்சாவுதான் என்னை கவலைக்குள்ளாயிருக்கிறது. நான் இருந்தாலும் மகளிர் படையணியை அவர்கள் இருவரும் தான் வளர்த்து எடுத்தார்கள். நாங்கள் தொடர்ந்து சண்டையை பிடிப்பம்’ என்று கூறினார். இதைச் சொல்லிய தளபதி ‘கிளிநொச்சியில் எந்தளவிற்கு நம்பிக்கையுடன் தெளிவாக கதைத்தாரோ அதே நம்பிக்கையுடன் தலைவர் இருக்கிறார் ’ எனச் சொன்னார்
 3. வாணன் தேசியத்தலைவர் பற்றிய தங்களது தொடரை வாசித்து வருகின்றேன். தலைவரைப்பற்றி நல்ல கருத்துக்களைப்பதிவதற்கு நன்றி. உங்களின் உண்மையான பதிவுக்குள் பொய்களையும் கற்பனைகளையும் கலந்து பதிவின் தன்மையை பலவீனப்படுத்த முயற்சிக்கும் தன்மையையும் அவதானிக்க முடிகின்றது. போராட்ட காலத்தில் அங்கு வாழ்ந்த சாதாரண மக்கள் அறிந்தளவிற்குகூட தலைவரைப்பற்றி அறியாத, தம்மை முன்னாள் போராளிகள் என்ற அடையாளத்திற்கு வெளிப்படுத்தும் சிலர் சொல்லும் தவறான கருத்துக்களில் இருந்து தங்களின் பதிவை காப்பாற்றுமாறு கேட்டுக் கொள்கின்றேன். அவ்வாறான பிழையான வரலாற்றுப்பதிவுகளைக்கண்டு நீங்கள் குழப்பமடையாமல் தொடர்ந்து உங்களது பதிவுகளை எழுதுவீர்கள் என எதிர்பார்க்கின்றேன்.
 4. தங்களது கருத்துகளை தெரிவித்த அனைத்து உறவுகளுக்கும் எனது நன்றி. அந்த அவலத்தின் வலியை என்னால் ஓரளவுக்குத் தான் கொண்டுவர முடிந்தது.
 5. இரவு பெய்த மழை ஓய்வடைந்திருந்தாலும் சற்று தூறிக்கொண்டிருந்தது அந்த அதிகாலை வேளையில், ஆனால் எதிரியினால் வீசப்பட்ட எறிகணைகள் ஆங்காங்கே வெடிக்கும் சத்தத்துடன் மக்களின் அழுகுரல்களும் கேட்டுக் கொண்டேயிருந்தது. இரவு பெய்த மழையினால் பதுங்கு குழியினுள் நிரம்பியிருந்த மழைநீரினை வாளியினால் அள்ளி வெளியேற்றிக் கொண்டிருந்த வேளையில் அப்போது ஒரு எட்டு வயது நிரம்பிய சிறுவன் ஒருவன் வந்து எனது முகத்தைப் பார்த்து ஏதோ ஒன்றைக் கேட்பதற்கு முனைகிறான் என்பதை நான் புரிந்துகொண்டேன். அவன் கேட்கும் முன்பே நான் அவனைப் பார்த்து என்ன வேணும் தம்பி என்று கேட்டேன். அப்போதும் அவன் முகத்தில் கேட்பதற்கான ஒரு தயக்கம் தெரிந்தது. நான் மழை நீரை இறைத்துக் கொண்டிருந்த வாளியைக் காட்டி "மாமா அந்த வாளியைக் கொஞ்சம் தாறீங்களா? நான் எங்களின்ட பங்கருக்குள்ள இருக்கிற தண்ணியை இறைச்சிட்டு கொண்டு வந்து தாரன்." என்று கேட்டான். "ஓம் தாரன் வாங்கோ" என்று அழைத்தேன். அவனது முகத்தில் பசிக்களையுடன் கூடிய பதட்டம் தெரிந்தது. பெயரைக் கேட்டேன் அவனும் சொன்னான் (அப்பெயர் எனக்கு ஞாபகமில்லை). ஆனால் அவனை சின்னவன் என்று அழைத்தார் அவரது அம்மா. அவனைப் பார்த்து ‘செல்லடிக்குள்ள நீ ஏனப்பன் தனிய வர்றாய், அப்பா இல்லையா?‘ என்று கேட்டேன். அவனும் சாதாரணமாகவே ‘அப்பா இரண்டு மாதத்திற்கு முன்னரே விமானக் குண்டுத் தாக்குதலில் இறந்துவிட்டார்‘ என்றான். ‘இரவு சாப்பிட்டியா?‘ என்று கேட்க மறுபடியும் முகத்தில் கடுமையான சோகம் வெளிப்பட்டது. இரவு சுட்ட ரொட்டி மூன்று இருந்தது அதில் ஒரு ரொட்டியை அவனிடம் கொடுத்து இதைச் சாப்பிட்டு விட்டு தண்ணீரை இறைத்து விட்டு வாளியைக் கொண்டு வா என வாளியை அவனிடம் கொடுத்தேன். ஆனால் மீண்டும் என் முகத்தை அண்ணார்ந்து பார்த்துக் கொண்டே ‘இன்னும் ரொட்டிகள் இருந்தா தாரீங்களா மாமா? என் தங்கைக்கும் அம்மாக்கும் அப்பம்மாவுக்கும் கொண்டு கொடுக்கப்போறேன்‘ என்றான். என்னிடம் மீதி இருந்த இரண்டு ரொட்டிகளையும் அவனிடம் கொடுத்தேன் வாங்கிக் கொண்டு அவனும் வேகமாக ஓடிச் சென்றுவிட்டான். எங்களது பதுங்கு குழிக்கும் அவனது பதுங்கு குழிக்கும் ஒரு ஐம்பது மீற்றர் இடைவெளிதான் இருக்கும். உணவு அந்த நேரத்தில் அவனுக்கு மட்டுமல்ல அங்கு இருந்த குழந்தைகள், சிறுவர்கள் உட்பட இலட்சக்கணக்கான மக்களுக்கும் அதேநிலைதான். அந்த முள்ளிவாய்க்கால் கடற்கரையில் மனிதனுக்கு மரணம் மட்டுமே மலிவாய் கிடைத்தது மற்ற எதுவுமே கிடைக்கவில்லை. சற்று நேரத்தின் பின் அவனது பதுங்கு குழிக்குள் இருந்த நீரை இறைத்து விட்டு வாளியுடன் திரும்பி வந்தான் சின்னவன். வாளியைத் தந்து விட்டு நேரம் இருந்தால் நாளை எங்கள் வீட்டுக்கு வருவீங்களா? இல்லை இல்லை எங்கட பங்கருக்கு வருவீங்களா? என்று கேட்டுவிட்டு, அருகில் இருந்த தென்னை மரத்தைக் காட்டி அதன் கீழ்தான் எங்களது பங்கர் உள்ளது என்று சொன்னான். சரி நேரம் இருந்தால் வருகிறேன் நீ உங்கள் பங்கருக்குள் சென்று பாதுகாப்பாக இரு என்று சொல்லி விட்டு நான் என் வேலையை கவனித்தேன். வழமை போல் தொடர்ச்சியான எறிகணை வீச்சுக்களுடனும் மக்களின் அவலக் குரல்களுடனும் அடுத்த நாள் காலையும் புலர்ந்தது. வேறு பிரதேசங்களை விட அன்று எங்கள் பகுதியில் ஓரளவு செல்லடி குறைந்திருந்தது. சின்னவன் வீட்டுக்கு அழைத்தது ஞாபகம் வந்தது. ஏனோ மனம் கேக்கவில்லை அவனது இருப்பிடத்திற்கு சென்று பார்க்கவேண்டும் போல இருந்தது. இயல்பாகவே அவனில் எனக்கு ஒரு விருப்பம் ஏற்பட்டிருந்தது. அதனால் அவனது இருப்பிடம் நோக்கி நடந்தேன். அவனது பங்கரை நோக்கிப்போகையில்,. பார்க்கும் இடங்களில் எல்லாம் பதுங்கு குழிக்குள், அதற்குள் குழந்தைகளை விட்டு விட்டு, பதுங்குகுழி வாசலில் அடுப்பு மூட்டி கஞ்சி சமைத்துக் கொண்டிருந்தார்கள் தாய்மார்கள். சில முதியவர்கள் பங்கருக்கு வெளியில் படுத்திருந்தார்கள். அவரிகளிடம் செல்லடிக்கிறான் ஏன் வெளியில இருங்கிறீங்கள் என்று கேட்டேன். அதுக்கு ‘எவ்வளவு சின்னப்பிள்ளையளையெல்லாம் செல் கொண்டு போகுது எங்களுக்கு மேல ஒன்டும விழுகுதில்லையே‘ என்று விரக்தியாக பதிலளித்தனர். நான் தொடர்ந்து நடந்து அவனது தென்னை மரத்துக்கு கீழே இருந்த வங்கரை அடைந்தேன். என்னைக் கண்டதும் வாங்கோ மாமா அன்று என்னை ஆசையாய் அழைத்தான். அவன் என்னை மாமா என்று அழைத்தது அவன் மீது ஒரு இனம்புரியாத பாசம் ஏற்பட்டதை உணர்ந்தேன். இதுதான் எங்களது பங்கர் என்று காட்டினான் . மூன்று அடி ஆழத்தில் நிலத்தைத் தோண்டி ஒரு மீன்பிடி படகை கவிழ்த்து மூடி வைக்கப்பட்டிருந்தது. குனிந்து பார்த்தேன் இறைத்த நீர் இன்னும் வற்றாததால் யு.என்.எச்.சி.ஆர். ரென்ற் (ஒன்றினால்) (விரிக்கப் பட்டிருந்தது.) அந்தப் படங்கின் மேல் நான்கு வயதாகிய ஒரு பெண் குழந்தை இருந்தது. அவனது தங்கை இவளாகத்தான் இருக்கும் என நினைத்துக் கொண்டேன். பங்கருக்கு வெளியில் அவனது தாயும் அவனது அப்பம்மாவும் மழை நீரினால் நனைந்திருந்த கொஞ்ச அரிசியையும் உடுப்புகளையும் காயவைத்துக் கொண்டிருந்தார்கள். இந்த குடும்பம் மட்டுமல்ல அந்தச் சுற்றுவட்டாரத்தில் இருந்த அனைத்து குடும்பங்களும் நனைந்த உடைகளையும் உணவுப் பொருட்களையும் காயவைத்துக் கொண்டிருந்தார்கள். சின்னவனின் அப்பம்மா என்னைப் பார்த்து ‘இன்று எனது மகன் செத்து ரெண்டு மாசம் ஆச்சு, நாங்க மன்னாரில இருந்து ஒரு மெசினில எங்கட சாமானெல்லாம் ஏத்திட்டு வந்தனாங்க தேவிபுரத்தில் வச்சு நடந்த விமானத்தாக்குதலில் மெசின் டிரைவரும் என் மகனும் செத்திட்டாங்கள். நாங்க மிஞ்சி கிடந்த சாமான எடுத்திட்டு இங்க வந்து இந்த பங்கர வெட்டிட்டு இருக்கிறம். சின்னவன்ட அப்பா இருந்திருந்தாலும் இந்த பிள்ளைகளுக்கு நல்ல பங்கர் செய்து தந்திருப்பான். என்ன செய்ய இதெல்லாம் நாங்க அனுபவிக்க வேணும் எண்டிருக்கு. இப்ப சின்னவன்தான் எல்லாமே ஓடி ஓடி செய்றான். என்று தனது அவலத்தை சொல்லி முடித்தாள். இவற்றைக் கேட்டு விட்டு சரி வாறன் அம்மா என்று சொல்லி விட்டு, சின்னவனை கையைப் பிடித்து கூட்டிக் கொண்டு எனது இருப்பிடத்துக்கு வந்தேன். அவனது கையில் அரைக் கிலோ அரிசியும் கொஞ்சம் சோயாமீற்றும் கொடுத்து இரவைக்கு சமைத்து சாப்பிடுங்க என்று சொல்லி அனுப்பி வைத்தேன். அன்று இரவு வழமைக்கு மாறாக மிக மோசமான செல் தாக்குதல் மக்களின் ஒப்பாரிச் சத்தமும், அவர்கள் தங்கி இருந்த கொட்டில்கள் பற்றி எறியும் காட்சிகளும் என ஒரே அவலக் காட்சிகளாய் இருந்தது. இரவு பதினொரு மணியிருக்கும் சின்னவன் ஓடி வருகிறான் மாமா எங்கட பங்கருக்கு மேல செல் விழுந்து அம்மா தங்கச்சி அப்பம்மா எல்லாம் செத்திடங்க மாமா என்றான் மிகவும் சாதாரணமாக. உடனே உதவிக்கு இரண்டு பேரைக் கூட்டிக் கொண்டு அவன் இருந்த இடத்திற்குச் சென்றோம். மிக மோசமான எறிகணைத் தாக்குதல் அப்பகுதியில் நடைபெற்றிருந்தது. அம்பதுக்கும் மேற்பட்ட மக்களின் உடல்கள் சிதறிக் காணப்பட்டது. சிதறிய உடல்களை அவர்கள் இருந்த பதுங்கு குழிகளுக்குள்ளேயே புதைத்துவிட்டு மக்கள் நகர்ந்து சென்று கொண்டிருந்தார்கள். சின்னவனின் இருப்பிடத்திற்கு சென்று பார்த்த போது அவனது தாயினதும் சிறிய தங்கையினதும் அவனது அப்பம்மாவினதும் உடல்கள் சிதறிக் கிடந்ததைக் கண்டேன். மூடியிருந்த மீன் படகினைத் துளைத்துக் கொண்டு செல் பீஸ்கள் அவர்களது உயிரைக் காவு கொண்டது. அதிஸ்டவசமாக சின்னவனின் கையில் சிறிய செல் பீஸ் மட்டும்தான் பட்டிருந்த்து, அங்கு இருந்த யு.என்.எச்.சி.ஆர். படங்கினால் அந்த வங்கருக்குள்ளேயே அவர்களது உடலைச் சுற்றி வைத்து மண் போட்டு மூடினோம். இவளவு நேரமும் சின்னவன் அழவில்லை மண் போட்டு மூடிய பின் கதறி அழத்தொடங்கினான். தனது தனிமையை எண்ணி விம்மி விம்மி அழுத வண்ணமே இரவு முழுவதும் இருந்தான். ஆறுதல் சொல்ல வார்த்தைகள் இல்லாவிட்டலும் அவனை அணைத்து அன்றிரவு முழுவதும் என்னுடனேயே வைத்திருந்தேன். காலை விடிந்ததும் அந்த இடத்தில் சற்று தூரத்தில் தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தினரால் மக்களுக்கு கஞ்சி காய்ச்சி கொடுக்கும் இடம் ஓன்று இருந்தது. அங்கு சின்னவனைக் கூட்டிச் சென்றேன். அங்கு இருந்த ஒருவரிடம் சின்னவனை ஒப்படைத்து, அவரிடம் அவனைப் பற்றி சொன்னேன். யாராவது அவனது உறவினர்கள் வந்து கேட்டால் இவனை ஒப்படைத்து விடுங்கள் என்று கூறிவிட்டுச் சென்று விட்டேன். சின்னவனை அங்கு விட்டு விட்டு திரும்பி வரும்போது அவன் என்னைப் பார்த்த பார்வையை இன்றும் என்னால் மறக்க முடியாது. ஏன் மாமா என்னையும் உங்களுடனேயே வைத்திருந்திருக்கலாமே என்று அவனது பார்வை எனக்குச் சொல்லியது. ஆனால் எனது சூழல் அதற்குச் சாதகமாக இருக்கவில்லை. இரண்டு நாட்களின் பின்னர் சின்னவனை ஒப்படைத்த தமிழர் புனர்வாழ்வுக்கழகத்தைச் சேர்ந்தவரை இடையில் சந்தித்தேன். அவர் சொன்னார் நீங்கள் அன்று என்னிடம் ஒப்படைத்த சிறுவனின் உறவினர் ஒருவர் கஞ்சி வாங்க வந்த சமயம் சின்னவனைக்கண்டார். அவர் தங்களது உறவினர் என்று கூறி சின்னவனை அழைத்து கெண்டு போய்விட்டார். சின்னவன் என்னைப் கடைசியாய் பார்த்த பார்வை இன்னமும் எனது நெஞ்சை விட்டகலவில்லை. என்னை கேள்வி கேட்டுக் கொண்டே இருக்கிறது
 6. எமது இனத்தின் வீர வரலாற்றிற்கு பதிவுகளை ஆவணமாக்கும் உங்கள் பணிக்கு எனது வாழ்த்துக்கள் வாணன்.
 7. அக்கா உங்கள் கதைகளை தேடி வாசிக்கவேண்டும் போல் உள்ளது. கண்டிப்பாக உங்களின் காதல் கதையை எதிர் பார்க்கின்றேன்.
 8. அம்மா நீ அழுதுவிடும் - உனது கண்ணீர் துளியால் எனது ! கல்லறையும் உருகுது - அம்மா! அன்று நான் மண்ணில் புரண்டு' விளையாடும் காலம் - என்னை ! மடியில் துக்கி அழகு பார்ப்பாய் - அம்மா ! இன்று நான் மண்ணுக்குள்ளேயே மடிந்து கிடப்பதைக்கண்டு-உனது மனம்படும் வேதனை எனக்கு புரிகின்றது அம்மா ! விடுதலை வீரனின் வித்துக்கள் ஒருபோதும் வீண்போகாது - அம்மா ! உனது விழிநீரை துடைத்து வீடு செல்லம்மா - மன்னிக்கவும் - அகதி முகாமில் உள்ள உனது ! கூடாரதுக்கு செல்லம்மா ! எமது வீடுசெல்லும் - காலம் விரைவில் வரும்,அம்மா !!!!!!!!!!
 9. உங்கள் வரவேற்புக்கும் பாராட்டுக்கும் கருத்துக்கும் மற்றும் வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி.
 10. மழைபோல் வந்த குண்டுகளால் மண்ணோடு மண்ணாக மாண்டுபோன மக்களைத்தான் மறக்க முடியுமா! மானம் தான் வாழ்வில் மகத்தானெதென்று மண்ணுக்காக மாண்டுபோன மாவீரர்களை மறக்க முடியுமா! முள்ளீவாய்க்கலில்,முழுவதும் தொலைத்துவிட்டு வட்டுவாய்க்கால் பாலத்தால் வானரக் கூட்டத்தின் வாய்க்குள் நுழைந்ததை மறக்க முடியுமா! தண்ணீர்த் தாகத்தால் தண்ணீர் கேட்டபோது தண்ணீர் குழாயினால் நீரைப் பீச்சிஅடித்ததை மறக்க முடியுமா! தலையால் வடிந்த தண்ணீரை நாக்கால் நனைத்து தாகம் தீர்த்ததைத்தான் மறக்க முடியுமா! நீர்த் தாகம் தீர்ந்தது அன்று இன்னும் தீரவில்லை நாம்கேட்ட சுதந்திர தாகம்.
 11. த‌ன‌க்கென‌வே வாழ்ந்தும் த‌குதியாய் வாழ‌த்தெரியாத‌ ம‌னித‌ர் முன் நீங்க‌ள் பிற‌ருக்காக வீழ்ந்த‌தின் வீரத்தின் பதிவுகள் எத்த‌னை எமக்கு எதையெல்லாமோ எண்ணிக் கொண்டிருந்த‌-நாங்க‌ள். எதையுமே பெற்றுக் கொள்ளாத‌ நிலையில் நீங்க‌ள் உங்களையே விட்டுக்கொடுத்த‌தில் நாங்க‌ள் க‌ற்றுக்கொள்ள‌ நிறையவே இருக்கிற‌து! உங்களது குருதி எமது நிலத்தில் உறைந்து கிடக்கின்றது , உங்களது சுவாசம் நாங்கள் சுவாசிக்கும் காற்றில் கலந்திருக்கின்றது உங்கள் வியர்வை எமது இனத்தின் விடுதலைப் பாதையில் சிந்திக்கிடக்கின்றது உங்கள் வீரத்தின் பதிவுகளை எங்கள் மனதில் நிறுத்தி நிமிர்த்து நிற்கின்றோம் !
 12. யுத்தம் தந்த பட்டம் - விதவை! சொந்தம் தந்த பட்டம் - தனிமை! கணவர் தந்த பட்டம் - கௌரவம்! குழந்தை தந்த பட்டம் - சொர்க்கம்! சமூகம் தந்த பட்டம் - சகுனம்! இனம் தந்த பட்டம் - பரிதாபம்! வரலாறு தந்த பட்டம் - அவலம்! வாழ்க்கை தந்த பட்டம் - வறுமை! தனிமை தந்தது - தயக்கம்! ஏக்கம் தந்தது - தாயகம்! நான் பெறாத பட்டம் - களங்கம்!
 13. உன் ஏக்கம் புரியுதடி தோழி , உனக்குள் இருக்கும் தமிழ் தாகம் தெரியுதடி தோழி . மிகவும் அருமையான வெளிப்பாடு. தொடரட்டும் உங்கள் கவிப்பயணம்.
 14. என்னை உள் நுழைய அனுமதித்தமைக்கு நன்றி.
 15. சாரிக்கா புதுசுதானே வாசலில கனநேரமா நிக்கிறன் பசிக்குது உள்ளுக்குள்ள வந்தா ஒரு பிடி சோறு சபிடலாமெண்ட ஆர்வகோளாருதனக்கா சாரிக்கா புதுசுதானே அதான் ஆர்வகோளாறு வாசலில கனநேரமா நிக்கிறன் பசிக்குது உள்ளுக்குள்ள வந்தா ஒரு பிடி சோறு சபிடலாமெண்டு நினைக்கிறன்