இல்லாத மதத்தின் பெயர் இந்து!
இல்லாத மதத்தின் பெயர் இந்து! - ம.செந்தமிழன்
’பொய் உரைப்பது, அதையே கொள்கையாக்குவது, அதையே தத்துவமாக்குவது, அதையே நடைமுறைப்படுத்துவது, ஏற்க மறுப்பவர்களை அச்சுறுத்துவது அல்லது அரவணைத்துக் கொள்வது’ – ’இந்து தர்மம்’ என்றால் என்னவென விளக்கம் கேட்டால், இதுவே எனக்குத் தெரிந்த இந்து தர்மம்.
இந்து மதம் என ஒன்று இப்பொழுதும் இல்லை, முற்பொழுதும் இருக்கவில்லை. ஆனால், இந்தியாவே ’இந்து தேசம்’ எனப் பொய் உரைத்து, அதையே கொள்கையாக, தத்துவமாக, நடைமுறையாக மாற்றிக் காட்டியிருக்கிறார்களே, இதுவே அவர்களது சிறப்பு.
சிந்துவெளியைக் கண்ட கிரேக்கப் பயணிகள் ’சிந்து’ எனும் தமிழ்ச