Jump to content

ponmalar

புதிய உறுப்பினர்கள்
  • Posts

    10
  • Joined

  • Last visited

Everything posted by ponmalar

  1. ‘நக்கீரன்’ இதழில் அக்னி ஹோத்ரம் ராமானுஜ தாத்தாச் சாரியார் ``இந்து மதம் எங்கே போகிறது?’’ என்ற தொடரை எழுதிக் கொண்டு இருக்கிறார். அதன் 25-ஆவது தொடர் (9-3-2005) ஒரு தகவலை வெளியில் கொண்டு வந்துள்ளது. "நாங்கள் பேசிக் கொள்வது சுத்த சமஸ்கிருதத்தில்தான். அதனால் பல பிராமணர் களுக்குக்கூட நாங்கள் பேசிக் கொள்வது புரியாது.``ரகசியமா பேசுகிறீர்கள்? தமிழில் பேசினால் என்ன?’’ என்று மகா பெரியவர் நகர்ந்தபிறகு சிலர் என்னிடம் கேள்வி கேட்டார்கள். அதற்கு நான் சொன்னேன்.``உனக்கு சமஸ்கிருதம் தெரியவில்லை என்றால் கற்றுக் கொள். உனக்காக அவர் ஒரு நாளைக்கு எத்தனை தடவை ஸ்நானம் பண்ணுவார்? புரிந்து நடந்து கொள்.." (`நக்கீரன்’ 9-3-2005 பக்கம் 18,19) இதனைப் புரிந்து கொள்வதற்கு என்ன சிரமம் இருக்கிறது? சங்கராச்சாரியார் தமிழைப் பேசினால். அவர் தீட்டுப்பட்டு விடுவார்; காரணம் தமிழ் நீஷப்பாஷை. தமிழைப் பற்றியும் தமிழர்களைப்பற்றியும் பார்ப்பனர்களின் நிலை என்ன என்பதைத் தெரிந்தவர்களுக்கு இது கண்டிப்பாக ஆச்சரியத் தைக் கொடுக்காது. கோயில் கருவறைக்குள் தமிழன் அர்ச்சகன் ஆனால் சாமி தீட்டாகிவிடும்; தமிழில் வழிபட்டாலும் தீட்டாகி விடும் என்பதுதானே அவர்களின் நிலை. ஆண்டாளின் ‘திருப்பாவை’யில் (பாடல் எண் 2) தீக்குறளைச் சென்றோதோம் என்றவர்க்கு விளக்கம் சொன்ன இதே சங்கராச்சாரியார் திருக்குறளைச் சென்று ஓதமாட்டோம் என்றாரா? இல்லையா? குறளை என்றால் கோள் சொல்லுதல் என்று பொருள். கோள் சொல்லும் தீயதைச் சொல்ல மாட்டோம் என்பதற்கு மாறாக திருக்குறளை ஓதமாட்டோம் என்று சொன்ன காழ்ப்புணர்ச்சிக் காரர்கள் தானே இந்தச் சங்கராச்சாரியார்கள்- பார்ப்பனர்கள். ``சமஸ்கிருத பாஷை பிரம்மத்திற்குச் சமானம். அதாவது பரம் பொருளுக்குச் சமானம். பரம் பொருள் எங்கும் நிறைந்திருக்கிறது. அதற்கென்று ஒரு குறிப் பிட்ட பகுதியோ, ஒரு தேசமோ கிடையாது. இதைத் தான் ``சர்வ வியாபகத்வம்’’ என்பார்கள்.’’ ``உலகில் முதன் முதலில் தமிழ்மொழி தோன்றிற்று. அதுவும் அகத்தியரால் தோற்றுவிக்கப்பட்டது. பிறகு தான் சமஸ்கிருதம் வந்தது. அதுவும் கொஞ்ச நூற்றாண்டு களுக்கு முன்புதான் `பாணினி’ என்ற ஒருவர் இந்த சமஸ்ருதத்திற்கு இலக்கண சாஸ்திரங்களை இயற்றினார். அது முதற்கொண்டுதான் அந்த மொழியும், பாஷையும் வளர்ச்சி ஏற்பட்டிருக்கும் என்று கூறுகிறார்கள். ஆனால் பாஷா சாஸ்திரம் என்று சொல்லக்கூடிய சாஸ்திரத்தில் சமஸ்கிருதம்தான் பண்டைய காலத்திலிருந்து வந்த ஒரு பாஷை என்று கூறப்பட் டுள்ளது” என்று கூறியவரும் சாட்சாத் அதே சந்திர சேகரேந்திர சரஸ்வதிதான். (ஆதாரம்; `ஞானவழி’ - வானதி பதிப்பக வெளியீடு). பார்ப்பனர்கள் தமிழ் மொழியைத் தங்களது வாழ்க்கை வழிக்காகவும் வசதிக்கு ஆகவும் பேசு கிறவர்களே ஒழிய அம்மொழியில் உள்ள அன்புக் காகவோ, ஆர்வத்திற்கு ஆகவோ பேசுகிறவர்கள் அல்ல. உதாரணம் என்ன வென்றால், இந்தப் பார்ப் பனர்கள் தங்களுடைய வைதீக காரியங்களிலும் தேவாதி பூஜை பிரார்த் தனைகளிலும் தமிழை விலக்கி வைத்திருக்கிறவர்கள். இந்தப் பார்ப்பனர்கள் ஆரிய மொழி (வட மொழி)யையே மேலாக எண்ணுவதோடு, அதனுடைய மேன்மையைக் காப்பாற்றவே அதிகமாக முயற்சிப்பவர்கள். இந்தப் பார்ப்பனர்கள் தங்களுடைய ஒழுக்க ஆதாரங்கள் தமிழ்மொழியை சூத்திர (இழிவான - மிலேச்ச) பாஷை என்று குறை கூறுகிறதை ஏற்றுக் கொண்டு அதன்படி பெரிதும் ஒழுகுபவர்கள்’’ (`குடிஅரசு’ 4-5-1939) என்று தந்தை பெரியார் அறுதியிட்டுக் கூறியுள்ளார். இதனையே அறிஞர் அண்ணாவும் தன் பாணியிலே எழுதுகின்றார். ``தமிழ்நாட்டில் பிறந்தும், தமிழ்மொழி பயின் றும், தமிழரெனச் சொல்லிக் கொண்ட போதிலும், தமிழ் மொழி மூலம் பிழைத்து வந்தா லும், தமிழிலே பண்டிதரென பட்டம் பெற்றாலும், சங்க நூல் கற்றாலும், பார்ப்பனர்கள் தமிழிடத்திலே அன்பு கொள்வதில்லை. அதனைத் தம் தாய்மொழி யெனக் கருதுவதில்லை. அவர்களின் எண்ணமெல்லாம் வட மொழியாகிய ஸம்ஸ்கிருதத்தின் மீதுதான்” (திராவிட நாடு’ 2-11-1947) என்கிறார் அறிஞர் அண்ணா. சனாதனப் பார்ப்பனர்களிலிருந்து அரசியல் பார்ப்பனர்கள் வரை இதில் ஒத்தக் கருத்துதான். ``என்கைக்கு அதிகாரம் வந்தால், நான் சர்வாதி காரியானால் இந்தியர்களை இந்தியுடன் சம°கிருதத் தையும் கட்டாயப் பாடமாகப் படிக்கச் செய்வேன்’’ என்றவர்தான் `வாயாடி’ சத்தியமூர்த்தி அய்யர் (`மெயில்’ 25-7-1939). ``சமஸ்கிருதத்தைப் படிப்படியாகப் புகுத்தத்தான் இப்பொழுது ஹிந்தியைத் திணிக்கிறேன்’’ என்று சென்னை லயோலா கல்லூரி விழாவில் (24-7-37) சென்னை மாநிலப் பிரதம அமைச்சர் என்ற தகுதியில் பேசியவர்தான் சக்ரவர்த்தி ராஜகோபாலாச்சாரியார் (ராஜாஜி). ஆர்.எஸ்.எஸ். பயங்கரவாதி கோல்வால்கரின் கூற்றும் இதுதான். ``மொழிப் பிரச்சினைக்கு ஒரே தீர்வுதான் இருக்கிறது. சமஸ்கிருதம் ஆட்சி மொழியாக வருகின்ற காலம் வரை, இந்திக்கே நாம் முன்னுரிமை தந்து, நமது வசதிக்காக ஆட்சி மொழியாக்கிக் கொள்ள வேண் டும்” (Bunch of Thoughts) அத்தியாயம் 8, பக்கம் 113) இவ்வளவுக்குப் பிறகும் பார்ப்பனர்களை தமிழர்கள் என்று எப்படி எடுத்துக் கொள்வது! தமிழுக்கே தூணாக இருந்த, கோவில்களுக்கு ஆயிரக்கணக்கான ஏக்கர்களைத் தந்த சோழர்கள், பாண்டியர்கள் போன்ற சக்தி வாய்ந்த அரசர்கள் நினைத்திருந்தால் தமிழில் அர்ச்சனைகளை நடத்தச் சொல்லியிருக்கலாமே. அவர்களையெல்லாம் மறந்துவிட்டு தமிழை ஒரு மொழிப் பிரச்சினையாக்கி, ஜாதிப் பிரச்சினையாக்கி அரசியலாக்கிய பெரும வந்தேரி பார்ப்பனர்களையேச் சாரும்.http://sampiraani.blogspot.in/2005/09/blog-post_112770961244412415.html
  2. தமிழ்மொழியின் மூலம்தான் கடவுளர்கள் நேரில் வரவழைக்கப் படுகிறார்கள். மனிதர்களாகப் பிறப்பெடுக்கும்படிச் செய்யப் படுகிறார்கள், மனிதர்களைச் சந்திக்கும்படி செய்யப்படுகிறார்கள், மனிதர்கள் தாங்கள் விரும்பும் கடவுளர்களைச் சந்திக்கிறார்கள், மனிதர்கள் கடவுளர்களாகவே மாறுகிறார்கள். இதன் சான்றாக வாந்தவர்களே 63 நாயன்மார்கள் 12 ஆழ்வார்கள் 96 தொகையடியார்கள், இராமலிங்க அடிகள் பட்டினத்தார் போன்றோர் தமிழ்மொழியில்தான் மனிதனைக் கடவுளாக்கும் பூசைமொழி இருக்கின்றது. தமிழில் தான் மந்தரம், மந்திரம், மந்திறம், மாந்தரம், மாந்தரீகம் என்று இருக்கிறது தமிழ் எழுத்துக்கு அருளாற்றல் விளைவித்துத் தரும் ஆற்றலும், காற்று கருப்பு பேய் பிசாசு பில்லி சூன்யம் ஏவல் செய்வினை வைப்பு கழிப்பு மருந்து கண்ணேறு முதலியவற்றின் பாதிப்புக்களைத் தடுத்து நிறுத்திடும் ஆற்றலும் இருக்கின்றன. கோயில்களில் உள்ள சக்கரங்கள் அனைத்துமே தமிழில் தான் எழுதப்பட்டுள்ளது இந்துக் கோயில்கள் அனைத்திலும் கடவுளர்கள் வாழுகின்றார்கள். பல தலைகளோடும், பல கைகளோடும், வியப்பான மனித வடிவோடு காணப்படுகின்ற கடவுளர் சிலைகள் கருத்து விளக்கத்திற்காக (கார்ட்டூன் போன்று) உருவாக்கப் பட்டனவையே. இன்றுள்ள சாதிக் கொடுமைகளும், தீண்டாமைக் கொடுமைகளும், வருணாச்சிரம தரும வெறிகளும், ஏற்றத் தாழ்வுகளும் ஆதிசிவனார் முத்தமிழ் மொழியில் அருளியுள்ள வேதத்தில் இல்லை, இல்லை, இல்லை, இல்லவே இல்லை. கலியுகம் பிறந்து இரண்டாயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு நம் நாட்டுக்கு வந்திட்ட அன்னியர்களால், பிறமண்ணினர்களால் சமசுக்கிருதம் என்ற மொழியில் நாராயணர் என்ற கடவுள் கூறியதாகக் கூறப்படும் ஹிந்துவேதத்திலும் ஹிந்துமதத்திலும்தான் சாதி ஏற்றத் தாழ்வுகள், சாதிப் பாகுபாடுகள், தீண்டாமைகள், வருணாசிரம தருமங்கள், சனாதனக் கொள்கைகள், தேவதைக் கதைகள், அதிசயமான புராணங்கள், பயனில்லாத சடங்குகள், குழப்பமான தத்துவங்கள்… முதலியவைகள் இருக்கின்றன. இந்து மதத்தில் முதலாளித்துவமும், மடமையும், ஏமாற்றும், சுரண்டலும், பொய்யும், புளுகும், ஆபாசமும் கலந்து உருவாக்கப்பட்ட கலப்பட மதம்தான் இன்று நாட்டு வழக்கில் கூறப்படும் ஹிந்துமதம். இதன் தலைவர்கள் பிறாமணர்களே; இதன் மொழி சமசுக்கிருதமே; இதன் ஆயுள் மூவாயிரமாண்டுகளே.
  3. இல்லாத மதத்தின் பெயர் இந்து! இல்லாத மதத்தின் பெயர் இந்து! - ம.செந்தமிழன் ’பொய் உரைப்பது, அதையே கொள்கையாக்குவது, அதையே தத்துவமாக்குவது, அதையே நடைமுறைப்படுத்துவது, ஏற்க மறுப்பவர்களை அச்சுறுத்துவது அல்லது அரவணைத்துக் கொள்வது’ – ’இந்து தர்மம்’ என்றால் என்னவென விளக்கம் கேட்டால், இதுவே எனக்குத் தெரிந்த இந்து தர்மம். இந்து மதம் என ஒன்று இப்பொழுதும் இல்லை, முற்பொழுதும் இருக்கவில்லை. ஆனால், இந்தியாவே ’இந்து தேசம்’ எனப் பொய் உரைத்து, அதையே கொள்கையாக, தத்துவமாக, நடைமுறையாக மாற்றிக் காட்டியிருக்கிறார்களே, இதுவே அவர்களது சிறப்பு. சிந்துவெளியைக் கண்ட கிரேக்கப் பயணிகள் ’சிந்து’ எனும் தமிழ்ச் சொல்லை அவர்கள் மொழி உச்சரிப்பிற்கேற்ப ’இண்டு’ (sindhu – indu) என்றனர். திருச்சியை ஆங்கிலத்தில் trichy எனவும், தஞ்சாவூரை tanjore எனவும் உச்சரிப்பது போல. சந்திரகுப்த மௌரியனது கிரேக்கத் தூதர் மெகஸ்தனிஸ் தமது நூலுக்கு வைத்த பெயர், ‘இண்டிகா’. சிந்துநதி நாகரிகத்தை அடிப்படையாகக் கொண்டே இவ்வாறு அழைத்தனர். இந்திய நிலப்பரப்பின் கடந்த 5000 ஆண்டுகால வரலாற்றில், சிந்துவெளி நாகரிகத்தை ஒதுக்கி விட்டு எவராலும் இந்திய அரசியலைப் புரிந்துகொள்ள இயலாது. சிந்துவெளியில் வாழ்ந்தோர் தமிழர்களே, என்பதை அஸ்கோ பர்போலா, ஐராவதம் மகாதேவன், இரா.மதிவாணன் உள்ளிட்ட சமகால அறிஞர்கள் நிறுவியுள்ளனர். சிந்துவெளி எழுத்துகள் வாசிக்கப்பட்டு, அவை அனைத்துமே தூய தமிழ்ச் சொற்கள்தாம் என்பதும் தெள்ளத் தெளிவாக உரைக்கப்பட்டுவிட்டது. ‘குயவன், கண்ணன், தச்சன், அந்தனன், அவ்வப்பன், அவ்வன், அட்டன்’ உள்ளிட்ட சொற்கள்தான் சிந்துவெளிச் சித்திர எழுத்துகளில் உள்ளன. (Dravidian Indus valley language – prof. R.Mathivanan / thamizh chanror peravai publication) ஆரியர்கள் பிழைப்பு தேடி சிந்துவெளிப்பகுதிக்கு வந்தவர்கள். வரலாற்றாசிரியர் ராகுல் சாங்கிருத்யாயன் வார்த்தைகளில் கூறுவதானால், ‘ஆரியர்கள் வந்தபோது அவர்களிடம் குதிரைகளைத் தவிர வேறு ஒன்றும் இருக்கவில்லை’. (ரிக்வேத கால ஆரியர்கள் / என்.சி.பி.எச்) சிந்துவெளித் தமிழர்களோ, ஐந்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, அடுக்குமாடிக் குடியிருப்புகள் கட்டி வாழ்ந்தனர். சிந்து ஆற்றிலிருந்து பெரும் படகுகளில் சரக்குகளை ஏற்றி, இன்றைய அரபிக் கடலில் நங்கூரமிட்டிருந்த கப்பல்ளுக்கு மாற்றி, கண்டம் விட்டு கண்டம் வணிகம் செய்தவர்கள். ரிக் வேதம் படித்தால், ஆரியர்களது காட்டுமிராண்டித்தனமான வாழ்வியலை எவராலும் புரிந்துகொள்ள இயலும். அவர்கள் சிந்துவெளிக்கு வந்தபோது, அவர்களுக்கென சமயமும் இல்லை, கடவுளும் இல்லை. அவர்களது வழிபாடுகள் எல்லாம், அக்னி, வாயு, வருணன் போன்ற சிறு தேவதை வழிபாடுகளே. தேவர்கள் / தேவதைகள் எல்லாரும் வானில் இருப்பதாக அவர்கள் நம்பினர். நெருப்பில் பலி பொருட்களைப் போட்டு எரித்தால், புகை வழியாக வானில் உள்ள தேவர்களுக்கு அப்பலிகள் கிடைக்கும் என்று நினைத்துக் கொண்டு வாழ்ந்தவர்களே ஆரியர்களின் முன்னோர்கள். குதிரைகளையும், அவ்வப்போது மனிதர்களையும் இவ்வாறு தீயில் போட்டு எரித்து ’வழிபட்டனர்’. இதுவே ஆதிகால ஆரியரது சமய நடைமுறை. இப்போதும், பிராமணச் சடங்குகளில், தீ வளர்த்து துணிகளைப் போட்டு எரிப்பதைக் காணலாம். இந்தத் துணிகள் வானில் உள்ள தேவதைகளுக்கு புகையாகச் சென்று சேரும் என்பதே பொருள். அவர்களது ஆதி மந்திரங்கள், குறிப்பாக ரிக் வேத மந்திரங்கள், இதைத்தான் உரைக்கின்றன. ஆனால், தமிழர்களது நாகரிகம், ஆதிச்சநல்லூர் ஆய்வுகளின்படி, பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டது. குமரிக்கண்ட ஆய்வுகளின் வழியே தமிழர் வரலாற்றைக் கண்டால், ஏறத்தாழ 20,000 ஆண்டுகளுக்கும் முற்பட்டது என்பதைச் சமகால ஆய்வுகள் எடுத்துரைக்கின்றன. குமரிக்கண்டத்தில் வாழ்ந்த மயன் எனும் மாமுனிவர் உரைத்தவையே, ’பிரணவ வேதங்கள்’ எனும் ஆதி நால்வேதங்கள் என்பதை, ஜெஸ்ஸி மெர்கே எனும் அமெரிக்க ஆய்வாளர் நிறுவியுள்ளார். மாமுனி மயனது வேதங்கள், பிரபஞ்சத் தோற்றம் குறித்த வியக்க வைக்கும் தகவல்களைக் கொண்டுள்ளதை, ஜெஸ்ஸியின் கட்டுரைகளை வாசிக்கும்போது உணர முடிகிறது. இந்த மாமுனி மயனைத்தான், தேவதச்சன் மயன் என சமஸ்கிருத இதிகாசங்கள் அழைத்தன. மயன் எனும் சொல்லே தூய தமிழ்ச் சொல்தான். மயன் உரைத்த வேதங்களைப் பிற்காலத்தில் ஆரியர்கள் தமது மொழிகளில் எழுதிக் கொண்டனர். மயனது ஆதிவேதம், ஏறத்தாழ 13,500 ஆண்டுகாலப் பழமை வாய்ந்தது என்பது ஜெஸ்ஸி மெர்கேவின் கருத்து. மயன் குமரிக் கண்டத்தில் இன்றைய தமிழகத்தின் தென் பகுதியில் வாழ்ந்தவர். ஆலமரத்தடியில் தவம் செய்து, சிவனிடமிருந்து வேதங்களைக் கற்றதாக மயன் உரைக்கிறார். இதிகாசங்களிலும் ஏறத்தாழ இக்கருத்தையே ஆரியர்கள் பதிவு செய்தனர். ஆனால், அவர்களது வழக்கமான கற்பனைக் கோட்டைகளை மயன் மீதும் கட்டி வைத்து, அவர் ’ஆகாயத்தில் கோட்டை கட்டினார்’ என்றெல்லாம் எழுதி வைத்துவிட்டனர். இதனால், இச்செய்திகளே பொய் என்னும் எண்ணம் ஏற்பட்டுவிட்டது. குமரிக் கண்டம், ஆதித்தநல்லூர், சிந்துவெளி, சங்ககாலம், பிற்காலச் சோழர் காலம் ஆகிய பல்லாயிரம் ஆண்டுகால தமிழர் வரலாற்றில், தமிழர்கள் தமது சமயத்தை ‘இந்து மதம்’ என ஒருபோதும் அழைத்ததே இல்லை. பிரபஞ்சத் தோற்றத்தைப் படிப்படியான வளர்ச்சிகளுடன் தெளிவாக உரைத்த பரிபாடல் ‘மாயோன்’, ‘முருகவேள்’ ஆகியோரைத்தான் வழிபட்டது. தொல்காப்பியம் ‘நிலமும் பொழுதுமே’ (time and space) முதற்பொருள் என்றது. ஐந்திணைகளுக்கும் ஐந்து கடவுளர்களைத் தொல்காப்பியம் பதிவு செய்தது. சங்க இலக்கியத்தில் எண்ணற்ற பாடல்கள் ‘ஆலமர் செல்வன்’ என சிவ வழிபாட்டு பதிவாகியுள்ளது. சிவன், திருமால், முருகவேள், வேலன், கொற்றவை, காளி, இந்திரன் உள்ளிட்ட தெய்வங்கள் தமிழர் வரலாற்றில் தொன்று தொட்டு வணங்கப்பட்டு வருகின்றன. பல்லவர், களப்பிரர் காலத்தில் ஆரியச் சமயங்களான சமணமும் பௌத்தமும் தமிழகத்தில் திணிக்கப்பட்டபோது, சிவனியமும், மாலியமும் பரவித் தழைத்தன. பிற்காலச் சோழர்கள் சிவனியத்தை வளர்த்தெடுத்தனர். பிற்காலச் சோழர் காலம் வரைக்கும், தமிழகத்தில் எந்தக் கல்வெட்டிலும், ஓலைச் சுவடியிலும், மட்பாண்டங்களிலும், இன்னபிற சான்றுகளிலும் ‘இந்து’ எனும் சொல்லே இல்லை. தமிழர்கள் தம்மை, ஒருகாலத்திலும் இந்துக்களாக எண்ணியதே இல்லை. ஏனெனில், இந்து என்று ஒரு மதம் உண்மையில் இல்லை. அது, ஆரியர்களின், குறிப்பாக ஆரிய பிராமணர்களின் கற்பனைக் கோட்டை. கணிதக் கணக்கீடுகளால் பிரபஞ்சத்தை விளக்கிய மெய்யியல் எண்ணியம் (சாங்கியம்) என்பதாகும். கபிலர் எனும் தமிழ் அந்தணர் வழியாக உரைக்கப்பட்ட வேதம் இது. கபிலை நிறம் என்பதே சாம்பல் வண்ணம்தான். ஆனால், கொஞ்சமும் சங்கடம் இன்றி, ’ரிஷி கபிலர் அருளிய ஸாங்க்ய தத்வம்’ என்று கபிலரின் சாங்கியத்தை நூலாக வெளியிடுகின்றன ஆரிய பிராமண அமைப்புகள். கீதையும் இவ்வாறே இவர்களால் திரிக்கப்பட்டது. கீதையில் கண்ணன் அர்ஜுனனிடம், ‘கபில முனிவரின் சாங்கியத்தை உனக்கு உரைக்கிறேன்’ என்கிறார். கபிலரின் சாங்கியத்தோடு, தமது ஆரிய பிராமணிய இடைச் செருகல்களை இணைத்து, கீதையின் உண்மையான வடிவத்தைச் சீரழித்துவிட்டன இவ்வமைப்புகள். கண்ணன் எனும் சொல் சிந்துவெளி எழுத்துகளில் பல்வேறு இடங்களில் உள்ளது. கண்ணன் கருப்புத் தமிழரே அன்றி, சிவப்பு ஆரியர் அல்ல. இராமனும் கருப்புதான். இன்றைக்கு வழக்கில் உள்ள இராமாயணமும், பாரதமும் வெகு பிற்காலத்தில்தான் சமஸ்கிருதத்தில் இயற்றப்பட்டவை என்பதை மறந்துவிடக் கூடாது. அதற்கு முன், அவை தமிழில் இருந்திருக்க வேண்டும். சான்றாக, முதற் சங்கப் புலவர்களில் ஒருவர் ‘பாரதம் பாடிய பெருந்தேவனார்’ என்பதாகும். இவரே பாரதத்தைத் தமிழில் பாடிய புலவர். சங்ககால சேர மன்னர்களில் ஒருவர் பெயர், ‘பெருஞ்சோற்று உதியன் சேரலாதன்’ என்பது. பாரதப் போர் நடந்தபோது, படையினர் அனைவருக்குமே இம்மன்னர் உணவு வழங்கினார் என்பதால், இப்பெயர் வந்தது. தமிழில் பாடப்பட்ட மூல பாரத, இராமாயண நூல்கள் தற்போது கிடைக்கவில்லை. ஆகவே, ஆரிய பிராமணர்கள் தமக்கு வசதியாக மொழிமாற்றம் செய்த நூல்களை மட்டும் வைத்துக் கொண்டு வரலாற்றைத் தவறாகக் காணும் நிலையில் உள்ளது தமிழ் இனம். பிற்காலத்தில் தோன்றிய பிராமணிய - வைதீக மெய்யியலாளரான ஆதி சங்கரர் தமது ’சௌந்தர்ய லஹரி’யில், பாடியவை அனைத்துமே, சிவன் – சக்தி ஆகிய தமிழர் மூலக் கடவுளரைப் போற்றிய பாடல்களே. ஆதிசங்கரர் உமையம்மை மீது ஆழமான பற்று கொண்டவர். ’சௌந்தர்ய லஹரி’ சிவனைக் காட்டிலும் அம்மையின் மீது அதிக ஈடுபாட்டுடன் பாடப்பட்டது. இப்பாடல்கள், திருமூலரது திருமந்திரத்தை ஒட்டி இயற்றப்பட்டவை என்பதை, இரு நூல்களையும் படிக்கும் எவரும் எளிதில் விளங்கிக் கொள்ள இயலும். இன்றைக்கும் இந்திய நிலப்பரப்பெங்கும், வழிபடப்படும் தெய்வங்கள் தமிழர் தெய்வங்களே! சிவன், திருமால், முருகன், காளி, கண்ணன், இராமன் ஆகிய தெய்வங்களை விட்டால், ஆரியர்களுக்கு வணங்குவதற்கு கடவுளே இல்லை. விநாயகர், தெய்வானை போன்ற வடக்கிந்திய கடவுளரும் கூட, சிவன் குடும்பத்துடன் இணைந்துதான் தெய்வநிலை அடைய இயலும் நிலை உள்ளது. ஆரியரது ஆதி தெய்வங்களான, பிரம்மன், அக்னி, வாயு ஆகியோருக்குக் கோயில்களே இல்லை. விதிவிலக்காக அங்கொன்றும் இங்கொன்றும் இருக்கலாம். இந்த நிலையில், ’இந்து’ எனும் சொல்லால் தமிழர்களை அழைப்பது எவ்வளவு பெரிய மோசடி என்பதைப் புரிந்துகொள்ளலாம். இன்றைக்கு இந்தியச் சட்டத்தின்படி, ‘எவரெல்லாம் கிறித்தவர் இல்லையோ, இஸ்லாமியர் இல்லையோ அவரெல்லாம் இந்து’ ஆவர். ’எதுவெல்லாம் சாம்பார் இல்லையோ, சட்னி இல்லையோ அதுவெல்லாம் கருவாட்டுக் குழம்பு’ என்பதுபோல. புத்தம், சமணம் ஆகிய வைதீக எதிர்ப்புச் சமயங்களும் கூட இந்துசமயத்தின் பிரிவுகள்தான் என்பதே சட்டம். சித்தர்களும், அந்தணர்களும், நாயன்மார்களும், ஆழ்வார்களும், எண்ணற்ற மெய்யறிவாளர்களும் தவத்தால், வாழ்வியலால், ஆய்வுகளால் உணர்ந்து உரைத்த சிவனிய, மாலிய சமயங்களும் இந்து மதத்தின் பிரிவுகளே என்பது சட்டம். வைணவக் கோயில்களில் அர்ச்சகராவதற்கு சாதி ஒரு நிபந்தனையே இல்லை என்பதே வைணவ ஆகமத்தின் விதி. வைணவ ஆகமத்தின்படி சாதி கேட்பதே பாவம். சிவனிய ஆகம விதிகளும் பிராமணர் மட்டுமே அர்ச்சகர் ஆகலாம் என்று கூறவே இல்லை. ஆனால், ’இந்து’ என்ற போர்வையைப் போர்த்திக் கொண்டு, பிராமணர்கள் இந்த இரு கோயில்களையும் வசப்படுத்திக் கொண்டனர். உண்மையில், இக்கோயில்களைக் கட்டிய மன்னர்களும் இந்துக்கள் இல்லை, உள்ளே இருக்கும் கடவுளரும் இந்துக்கள் இல்லை, கோயிலை வடிவமைத்த சிற்பிகளும் இந்துக்கள் இல்லை. தமிழர்களுக்கென பல்லாயிரம் ஆண்டுகால வரலாறு உண்டு. அவ்வராலாற்றில் பிரபஞ்சத் தோற்றம், வாழ்வியல் குறித்த தத்துவங்கள் உண்டு. பிரபஞ்சத் தோற்றத்தைப் பற்றி உரைக்காத சமயமே தமிழர்களிடம் இருந்ததில்லை. நம்மைப் பொறுத்தவரை சமயம் என்றால், அதன் மெய்யியல் அணுவையும் அண்டத்தையும் பற்றிய அறிவியல் வழிப்பட்ட விளக்கம் தருவதாக இருக்க வேண்டும். தலையில் பிறந்தவன் பிராமணன், தோளில் பிறந்தவன் சத்ரியன் என்ற சுய நல வெறி பிடித்த கட்டுக் கதைகள் தமிழர்களால் எழுதப்பட்டவை அல்ல. இவற்றுக்கும் தமிழர்களுக்கும் வரலாற்று வழித் தொடர்புகள் ஏதும் இல்லை. சுருங்கச் சொன்னால், தமிழர்கள் இந்துக்கள் அல்லர்! ஆகவே, கோவிலுக்குச் செல்வது, சித்தர்களைப் போற்றுவது, ஓக முறையில் உடலை, மனதைப் பேணுவது, தவம் இயற்றுவது ஆகிய நடைமுறைகளைக் கடைப்பிடிப்போர், இவை அனைத்தும் தமிழர் மரபுப் பங்களிப்புகளே என்பதை உணர வேண்டும். இச் செயல்கள் அனைத்தும் இந்துத்துவ நடைமுறைகள் எனக் கூறுதலும் பழித்தலும், வரலாற்றுக்குச் சற்றும் பொருத்தமற்ற, அடிப்படையற்ற அவதூறு ஆகும். நாத்திகராக இருக்கலாம். ஆனால், தமிழர் சமயங்களின் பெருமிதங்களையும், வழிபாட்டு உரிமைகளையும் ’இந்து’ எனும் பிராமணிய அமைப்புக்குத் தாரை வார்த்துவிட வேண்டாம். ஏனெனில், இதைத்தான் கடந்த சில நூற்றாண்டுகளாக பிராமண அமைப்புகளும் செய்து வருகின்றன. - ம.செந்தமிழன்
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.