யாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.
விபரங்களிற்கு

பரியாரி

கருத்துக்கள உறவுகள்
 • Content Count

  226
 • Joined

 • Last visited

Community Reputation

29 Neutral

About பரியாரி

 • Rank
  உறுப்பினர்

Profile Information

 • Gender
  Male
 • Location
  அம்பாள் இருக்கும் இடமெல்லாம்
 • Interests
  எல்லாத்திலும் கொஞ்சம் கொஞ்சம்

Recent Profile Visitors

554 profile views
 1. பேருக்கேண்டாலும் சில சில்லறைகள் எதிர்வரிசையிலை இருக்க வேணும் அல்லா எல்லாரும் மந்திரி ஏண்டா எப்பிடி? கிடைக்கிற சலுகை வந்து சேந்தாக்காணும் தானே
 2. மதத்திற்கு முன்னுரிமை வழங்குவதால் இலங்கை தோல்வியடைகிறது – நஸீர் அஹமட்! In இலங்கை June 18, 2019 9:33 am GMT 0 Comments 1247 by : Dhackshala மனங்களை வெல்லாது மதத்தை முன்னுரிமைப்படுத்தி வருவதால் தோல்வி அடைந்த நாடாக இலங்கை மாறி வருவதாக கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் நஸீர் அஹமட் தெரிவித்துள்ளார். அத்தோடு, நாட்டில் அதிகாரபூர்வமற்ற அதிகாரிகளாக பேரின மதவாதிகள் செயற்பட இடமளிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் சாடியுள்ளார். நாட்டின் சமகால நிலைமைகள் குறித்து அவர் இன்று (செவ்வாய்க்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயங்களைத் தெரிவித்துள்ளார். குறித்த அறிக்கையில மேலும் தெரிவிக்கையில், “கடந்த 30 வருட காலமாக இடம்பெற்று வந்த ஆயுத மோதலை ஆட்சியாளர்கள் வெற்றிகொண்டிருந்தாலும் நாட்டிலுள்ள பல இனத்தவர்களினதும் மனங்களை வெல்லத் தவறிவிட்டனர். இதனாலேயே இப்பொழுது மதவாத நெருக்கடி அதிகரித்து நாளுக்கு நாள் புதுப்புது வடிவத்தில் விஸ்வரூபமெடுத்து வருகிறது. பேரினவாத மதவாதம் இந்த நாட்டைப் பிளவுபடுத்தியுள்ளது. அதிகாரமளிக்கப்படாத ஆனால், அதிகாரத்தை செயற்படுத்தும் அதிகாரிகள் என மதவாதிகள் அறைகூவல் விடுத்து ஒரு சில இனவாதிகளை தவறாக வழிநடத்திச் சென்றுகொண்டிருக்கின்றனர். இந்த நிலைமையை ஆட்சியாளர்கள் கைகட்டிப் பார்த்துக்கொண்டிருப்பதை உற்றுக் கவனிக்கின்றபோது அதன் இனவாத ஆபத்து ஒவ்வொரு வீட்டுக் கதவையும் தட்டும் என்றே எண்ணத்தோன்றுகிறது. இதற்கும் மேலதிகமாக ஒருபடி மேலே சென்று ‘இனிமேல் நாட்டில் தீர்க்கப்படாமல் இருக்கும் சகல பிரச்சினைகளுக்கும் சமயவாதிகளே தீர்வைப் பெற்றுத் தருவார்கள்’ என கடுங்கோட்பாட்டு பேரினவாத மதவாதிகள் அறைகூவல் விடுத்துள்ளனர். இது எங்கு சென்று முடியுமென அச்சம் ஏற்படுகிறது. பேரினவாதமும் அயோக்கிய அரசியலும் ஒன்றிணைந்துள்ளதன் விளைவு இதுவரை நடந்த அழிவுகளைவிட இன்னமும் இந்த நாட்டை பேரழிவுக்கு இட்டுச் செல்லும். அவ்வாறு இல்லாமல் இருக்க சிங்கள, தமிழ், முஸ்லிம் சமூகங்களின் இன ஐக்கிய செயற்பாட்டாளர்கள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்” என மேலும் தெரிவித்துள்ளார். http://athavannews.com/மதத்தை-முன்னுரிமைப்படுத/
 3. மக்களவையின் 2ஆம் கூட்டத்தொடர்: தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமிழில் பதவிப்பிரமாணம் In இந்தியா June 18, 2019 9:07 am GMT 0 Comments 1140 by : Yuganthini மக்களவையின் இரண்டாவது கூட்டத்தொடரில், தமிழகத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமிழில் பதவியேற்றனர் 17ஆவது மக்களவையின் இரண்டாம் கூட்டத்தொடர் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை ஆரம்பிக்கப்பட்டது. இதன்போது பதில் சபாநாயகர் வீரேந்திரகுமார் முன்னிலையில், புதிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவியேற்றனர். குறித்த பதவியேற்பு நிகழ்வில் சத்தீஸ்கர் மாநிலம் ராஜ்நந்கான் தொகுதியைச் சேர்ந்த பா.ஜ.க.நாடாளுமன்ற உறுப்பினர் சந்தோஷ் பாண்டே, தனது பதவியை முதலில் பொறுப்பேற்றார். அதனைத் தொடர்ந்து சிவசேனா உறுப்பினர் கிருபாள் பாலாஜி மராட்டிய மொழியில் பதவியேற்றார். பின்னர் நாடாளுமன்ற உறுப்பினர் சன்னிதியோல் ஆங்கிலத்திலும் புதுச்சேரி நாடாளுமன்ற உறுப்பினர் வைத்திலிங்கம் தமிழிலும் பதவியேற்றனர். இவர்களைத் தொடர்ந்து தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்களான கலாநிதி வீராசாமி (வடசென்னை), தமிழச்சி தங்கபாண்டியன் (தென் சென்னை), தயாநிதிமாறன் (மத்திய சென்னை), டி.ஆர்.பாலு, (ஸ்ரீபெரும்புதூர்), செல்வம் (காஞ்சிபுரம்), ஜெகத்ரட்சகன் (அரக்கோணம்), டொக்டர் செல்லக்குமார் (கிருஷ்ணகிரி), செந்தில்குமார் (தர்மபுரி), விஷ்ணுபிரசாத் (ஆரணி), ரவிக்குமார் (விழுப்புரம்), ஆ.ராசா (நீலகிரி), திருமாவளவன் (சிதம்பரம்), திருநாவுக்கரசர் (திருச்சி), கனிமொழி (தூத்துக்குடி), பாரிவேந்தர் (பெரம்பலூர்), பழனி மாணிக்கம் (தஞ்சாவூர்), கார்த்தி சிதம்பரம் (சிவகங்கை), நவாஸ்கனி (இராமநாதபுரம்) ஆகியோர் தமிழில் பதவியேற்றனர். இதேவேளை பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்களான ராஜ்நாத் சிங், அமித்ஷா, நிதின்கட்காரி, ஸ்மிருதி இரானி, காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி உள்ளிட்ட 313 நாடாளுமன்ற உறுப்பினர்கள் நேற்று பதவியேற்றனர். அந்தவகையில் புதிய சபாநாயகர் தேர்வு நாளை நடைபெறுவதுடன் எதிர்வரும் 20ஆம் திகதி நாடாளுமன்ற கூட்டுக்குழு கூட்டத்தில், ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உரையாற்றுகிறார். அதனைத் தொடர்ந்து ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது விவாதம் நடைபெற்று பொருளாதார ஆய்வு அறிக்கை ஜூலை 4ஆம் திகதி தாக்கல் செய்யப்படவுள்ளது. பின்னர் எதிர்வரும் 5ஆம் திகதி மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், வரவு – செலவு திட்டத்தை தாக்கல் செய்யவுள்ளமை குறிப்பிடத்தக்கது. http://athavannews.com/மக்களவையின்-2ஆம்-கூட்டத்/
 4. நளினியின் விருப்பத்தை அறிந்து சொல்லுங்கள்: சட்டதரணிக்கு நீதிபதிகள் உத்தரவு! In இந்தியா June 18, 2019 10:10 am GMT 0 Comments 1117 by : Yuganthini காணொளி ஊடாக வழக்கு விசாரணைகளில் கலந்துகொள்வது தொடர்பான நளினியின் விருப்பத்தை அறிந்து நீதிமன்றத்திற்கு தெரியப்படுத்துமாறு நளினியின் சட்டத்தரணிகளிடம் தெரிவித்த நீதிபதிகள் வழக்கை ஒத்திவைத்துள்ளனர். ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை கைதியாகவுள்ள நளினி, இங்கிலாந்தில் வசிக்கும் மகளின் திருமண ஏற்பாடுகளை செய்வதற்காக பிணை அனுமதி கோரி தாக்கல் செய்த வழக்கு இன்று (செவ்வாய் கிழமை) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட நிலையிலேயே மேற்குறிப்பிடப்பட்டுள்ள விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆயுள் தண்டனை கைதிகள் வருடத்துக்கு இரு முறை பிணையில் வெளிவருவதற்கு சட்ட ஏற்பாடுகள் இருக்கின்றது. ஆனால் கடந்த 28 வருடங்களாக தொடர்ச்சியாக சிறையிலேயே உள்ள தனக்கு பிணையில் செல்ல அனுமதி வழங்குமாறு நளினியினால் சட்டத்தரணி ஊடாக மனுவொன்றை உச்ச நீதிமன்றத்தில் அவர் கையளித்திருந்தார். குறித்த மனு மீதான வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது, நளினியை உச்ச நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தினால் தேவையில்லாத பிரச்சினைகள் உருவாகுமென அரசு தரப்பில் வாதிடப்பட்டது. இந்நிலையிலேயே நளினி தரப்பில் முன்னிலையான சட்டத்தரணியிடம் நீதிபதிகள், நளினியின் விருப்பத்தை அறிந்து நீதிமன்றுக்கு அறியத்தருமாறு உத்தரவிட்டதுடன் விசாரணைகளை அடுத்த வாரத்துக்கு ஒத்திவைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது. http://athavannews.com/நளினிக்கு-உச்ச-நீதிமன்றம/
 5. 19 ஆவது திருத்த சட்டம் இருக்கும்வரை ஜனாதிபதி அதிகாரமற்றவர் – மனுஷ நாணயக்கார In இலங்கை June 18, 2019 11:12 am GMT 0 Comments 1033 by : vithushan 19 ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டம் இருக்கும்வரை ஜனாதிபதி நிறைவேற்று அதிகாரம் அற்றவர் என பிரதி அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார். இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில், “19 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தினூடாக ஜனாதிபதியின் நிறைவேற்று அதிகாரம் கட்டுபடுத்தப்பட்டு, நாடாளுமன்றத்தின் அதிகாரம் அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த திருத்தம் நடைமுறையில் இருக்கும் வரை ஜனாதிபதி நிறைவேற்று அதிகாரமற்றவர். அரசியலமைப்பினூடாக நாட்டினதும் அரசாங்கத்தினதும் தலைவராக, பாதுகாப்பு அமைச்சராக, முப்படை தலைவராக ஜனாதிபதி செயற்படுகிறார். அதற்கமைவாக முப்படைகளின் தலைவராக யுத்தத்துக்கு அறிவித்தல், யுத்ததுக்கு அமைத்தல் போன்ற கட்டளை பிறப்பிக்கும் அதிகாரம் ஜனாதிபதியிடமே உள்ளது. எனினும் பாதுகாப்பு துறையின் அமைச்சர் என்ற வகையில் முப்படையினருடன் ஜனாதிபதி நெருங்கிய தொடர்பை வைத்துள்ளார். இது அரசியலமைப்பினூடாகவே பரிசீலிக்க வேண்டும். பாதுகாப்புத்துறை யாருக்கு சொந்தம் என்பது தொடர்பாக நீதிமன்றத்துக்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை. இந்த அதிகாரங்கள் ஜனாதிபதிக்கு அரசியலமைப்பினூடாக வழங்கப்பட்டுள்ள விசேட அதிகாரங்களாகும்” என அவர் குறிப்பிட்டார். http://athavannews.com/19-ஆவது-திருத்த-சட்டம்-இருக/
 6. வாகனத்தையும் வீட்டையும் சம்பந்தன் எடுத்துச் சென்றுவிட்டார் – சபையில் மஹிந்த In இலங்கை June 18, 2019 9:44 am GMT 0 Comments 1589 by : vithushan எதிர்க்கட்சி தலைவருக்கு வழங்கப்பட்ட வாகனம் மற்றும் வீட்டை எதிர்க்கட்சி தலைவராக இருந்த இரா.சம்பந்தன் எடுத்துவிட்டார் என மஹிந்த ராஜபக்ஷ குற்றம் சாட்டியுள்ளார் இதன் காரணமாகவே தான் எதிர்க்கட்சி தலைவருக்கான வாகனத்தை வழங்குமாறு கோரிக்கை விடுத்ததாக அவர் தெரிவித்தார். இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்றுவரும் நாடாளுமன்ற அமர்வின்போது, மஹிந்த ராஜபக்ஷவிற்கும் சில அமைச்சர்களுக்கும் வாகனங்களை கொள்வனவு செய்வதற்காக 57.54 பில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டு சட்டமூலம் நாடாளுமன்றில் முன்வைக்கப்பட்டது. இந்த விடயம் தொடர்பாக நாடாளுமன்றில் பெரும் சர்ச்சை ஏற்பட்ட நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்த போதே மஹிந்த ராஜபக்ஷ மேற்கண்டவாறு கூறினார். எதிர்க்கட்சி தலைவருக்கான வீடு, வாகனம் என்பவற்றை தமிழ் தேசிய கூட்டமைப்பினர் மீண்டும் கையளிக்கவில்லை. இந்நிலையிலேயே தான் குறித்த கோரிக்கையை விடுத்ததாக தெரிவித்தார். http://athavannews.com/வாகனத்தையும்-வீட்டையும்/
 7. சலசலப்பின்றி நிறைவடைந்தது அமைச்சரவை கூட்டம்! In இலங்கை June 18, 2019 10:54 am GMT 0 Comments 1076 by : Dhackshala அமைச்சரவைக் கூட்டத்தின்போது, நாடாளுமன்ற தெரிவுக்குழு விவகாரம் உள்ளிட்ட சர்ச்சைக்குரிய விடயங்கள் குறித்து எந்தவொரு கருத்தையும் ஜனாதிபதி முன்வைக்கவில்லை என்று அமைச்சர்கள் தெரிவித்துள்ளனர். ஈஸ்டர் குண்டுத்தாக்குதல் தொடர்பான தெரிவுக்குழு தொடர்பாக ஏற்பட்ட முரண்பாடு காரணமாகவே கடந்த வாரம் ஜனாதிபதியினால் அமைச்சரவை ஒத்திவைக்கப்பட்டது என்ற பரவலான கருத்து நிலவிவருகின்ற நிலையில் இன்று (செவ்வாய்க்கிழமை) ஜனாதிபதி செயலகத்தில் அமைச்சரவை கூடியது. ஈஸ்டர் குண்டுத்தாக்குதல் தொடர்பிலான விசாரணைகளை மேற்கொள்ள ஸ்தாபிக்கப்பட்ட நாடாளுமன்றத் தெரிவுக்குழுவின் செயற்பாடுகள் தொடர்பாக அண்மையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அதிருப்தி வெளியிட்டிருந்தார். இக்கூட்டத்தில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்ட அமைச்சர்கள் கலந்துகொண்டதோடு, இந்தக் கூட்டம் சுமார் ஒரு மணித்தியாலங்கள் வரை இடம்பெற்றது. இதன்போது சர்ச்சைக்குரிய விடயங்கள் குறித்து எந்தவொரு கருத்தையும் ஜனாதிபதி முன்வைக்கவில்லை என்று அமைச்சர்கள் தெரிவித்துள்ளனர். வழமையாக அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்துரையாடப்படுவதைப்போல, அமைச்சரவைப் பத்திரங்கள் தொடர்பாகவே ஆலோசிக்கப்பட்டதாக அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். விசேடமாக எந்தவொரு விடயம் தொடர்பிலும் கலந்துரையாடப்படவில்லை என்றும் அமைச்சரவை பத்திரங்கள் தொடர்பில் உரிய அமைச்சர்களினால் விளக்கங்கள் அளிக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதேவேளை அமைச்சர்களான லகி ஜயவர்த்தன, அனோமா கமகே மற்றும் காமினி ஜயவிக்ரம ஆகியோரும் இன்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் முக்கியமாக எதுவும் கலந்துரையாடப்படவில்லையென தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. http://athavannews.com/அமைச்சரவையில்-சர்ச்சைக்/
 8. தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவாத அரசு மஹிந்தவுக்கு பில்லியன் ரூபாய்களை ஒதுக்குகிறது – ஜே.வி.பி. In இலங்கை June 18, 2019 9:24 am GMT 0 Comments 1267 by : vithushan குண்டுத் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நஷ்ட ஈட்டினை வழங்காத இந்த அரசாங்கம் அதிசொகுசு வாகனங்களை கொள்வனவு செய்வதற்கு பில்லியன் ரூபாய்களை ஒதுக்குவதாக ஜே.வி.பி. குற்றம் சாட்டியுள்ளது. இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்றுவரும் நாடாளுமன்ற அமர்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்னாயக்க இந்த குற்றச்சாட்டை முன்வைத்தார். இன்றைய நாடாளுமன்ற அமர்வின்போது, மஹிந்த ராஜபக்ஷவிற்கும் சில அமைச்சர்களுக்கும் வாகனங்களை கொள்வனவு செய்வதற்காக 57.54 பில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டு சட்டமூலம் நாடாளுமன்றில் முன்வைக்கப்பட்டது. இந்த விடயம் தொடர்பாக நாடாளுமன்றில் பெரும் சர்ச்சை ஏற்பட்ட நிலையில், இது குறித்து கருத்து தெரிவித்தபோதே பிமல் ரத்னாயக்க இந்த குற்றச்சாட்டை முன்வைத்தார். குறிப்பாக ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கும் பாதிக்கப்பட்டவர்களுக்கும் இந்த அரசாங்கம் நஷ்ட ஈட்டினை முழுமையாக வழங்கவில்லை. இந்நிலையில் எதிர்க்கட்சி தலைவருக்கு வாகனங்களை கொள்வனவு செய்ய பல இலட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது என்று அவர் குற்றம் சாட்டினார். இதற்கு பதிலளித்த சபை முதல்வரும் அமைச்சருமான லக்ஷமன் கிரியெல்ல எதிர்க்கட்சி தலைவருக்கு வாகனம் வழங்குவதற்கு எதிர்க்கட்சி உறுப்பினர்களே எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்று கூறினார். http://athavannews.com/தாக்குதலில்-பாதிக்கப்பட/
 9. கோட்டாவின் மனுக்கள் நிராகரிப்பு – நாளை முதல் தொடர் விசாரணை In இலங்கை June 18, 2019 10:16 am GMT 0 Comments 1225 by : vithushan முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தாக்கல் செய்த இரண்டு மனுக்கள், மேல்முறையீட்டு நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டுள்ளன. டீ. ஏ. ராஜபக்‌ஷ நினைவகத்தை நிர்மாணிக்க அரச நிதியை தவறாக பயன்படுத்தியதாக கோட்டாபய ராஜபக்ஷ மீது குற்றம் சாட்டப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக நிரந்தர நீதாய மேல் நீதிமன்றம் வழங்கிய உத்தரவுகளை இரத்துசெய்ய கோரி, கோட்டாபய ராஜபக்‌ஷ குறித்த மனுக்களை தாக்கல் செய்திருந்தார். இந்நிலையில் மேல்முறையீட்டு நீதிமன்றம் இன்று (செவ்வாய்க்கிழமை) அந்த மனுவை நிராகரித்துள்ளது. இதன்படி, டீ. ஏ. ராஜபக்‌ஷ நினைவக மோசடி வழக்கு நாளை முதல் தொடர் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படுவதில் தடை இருக்காது என்பதும் குறிப்பிடத்தக்கது. http://athavannews.com/கோட்டாவின்-மனுக்கள்-நிரா/
 10. அமெரிக்காவின் குற்றச்சாட்டை மறுத்தது ஈரான்! In உலகம் June 14, 2019 7:39 am GMT 0 Comments 1222 by : Benitlas அமெரிக்காவின் குற்றச்சாட்டிற்கு ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சகம் மறுப்பு தெரிவித்துள்ளது. ஓமான் வளைகுடாவில் எண்ணெய் கப்பல்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு ஈரான் அரசே பொறுப்பேற்க வேண்டும் என அமெரிக்க வெளியுறவு துறை செயலாளர் மைக் பொம்பியோ தெரிவித்திருந்தார். ஓமான் வளைகுடா பகுதியில் சென்றுகொண்டிருந்த நோர்வேக்கு சொந்தமான ஃபுரொன்ட் அல்ரயர் கப்பலில் அடுத்தடுத்து மூன்று வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது என நோர்வே கடற்படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து, சிங்கப்பூருக்கு சொந்தமான கொகுகா சரக்கு கப்பல் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இந்த தாக்குதலை தொடர்ந்து இரண்டு கப்பல்களிலும் இருந்த ஊழியர்கள் மற்றும் குழுவினர் பத்திரமாக மீட்கப்பட்டனர். முதலில் தாக்குதலில் சிக்கிய நோர்வேக்கு சொந்தமான கப்பல் கடலில் மூழ்கியதாக ஈரான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. எண்ணெய் கப்பல்களை குறிவைத்து தாக்குதல் நடத்துவதன் மூலம் உலகளவில் எண்ணெய் விலை அதிகரிப்புக்கு வழி வகுப்பதாக குறிப்பிடப்படுகிறது. இந்நிலையில், ஓமான் வளைகுடாவில் எண்ணெய் கப்பல்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு ஈரான் நாட்டு அரசே பொறுப்பேற்க வேண்டும் என அமெரிக்க வெளியுறவு துறை செயலாளர் மைக் பொம்பியோ குற்றம் சாட்டியுள்ளார். அமெரிக்காவின் இந்த குற்றச்சாட்டிற்கு ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சகம் மறுப்பு தெரிவித்துள்ளது. மேலும் அடிப்படை ஆதாரங்கள் ஏதுமின்றி அமெரிக்கா, தங்கள் மீது குற்றம் சாட்டுவதாக ஈரான் கூறியுள்ளது. http://athavannews.com/அமெரிக்காவின்-குற்றச்சா/
 11. தமிழகத்தில் ஐ.எஸ்.உடன் தொடர்புடையவர்கள் மீது வழக்குப் பதிவு! In இந்தியா June 14, 2019 8:51 am GMT 0 Comments 1063 by : Krushnamoorthy Dushanthini ஐ.எஸ். அமைப்புடன் தொடர்பு வைத்திருந்த குற்றச்சாட்டில் கோவையில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது மேலும் மூவர் மீது சட்டவிரோத தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. கோவையில் தீவிரவாத செயற்பாடுகளை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளதாக என்.ஐ.ஏ எனப்படும் தேசிய புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் ஏழு இடங்களில் சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. குறித்த சோதனை நடவடிக்கைகளின் போது அசாருதீன் என்பவர் கைதுசெய்யப்பட்டிருந்ததுடன், அபுபக்கர் சித்திக், இதயத்துல்லா, சதாம் உசேன், அக்ரம் ஜிந்தா உள்ளிட்ட அறுவரை என்.ஐ.ஏ அலுவலகத்தில் முன்னிலையாகுமாறு உத்தரவிடப்பட்டிருந்தது. இந்த நிலையில், முகமது உசேன், ஷாஜகான், ஷேக் ஷபிபுல்லா ஆகியோர் மீது சட்டவிரோத தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவுசெய்யப்பட்டுள்ளது. குறித்த மூவரின் வீடுகளிலும் சிறப்பு நுண் புலனாய்வு பிரிவினர் சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டதையடுத்தே வழக்கு பதிவுசெய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகிறது. அத்துடன் இவர்கள் மூவரும் இலங்கையில் தாக்குதல் நடத்திய தீவிரவாதிகளுடன் தொடர்பில் இருந்துள்ளதாகவும் கண்டறியப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. http://athavannews.com/தமிழகத்தில்-ஐ-எஸ்-உடன்-தொ/
 12. சமுர்த்தி கொடுப்பனவில் இனப்பாகுபாடு – நிகழ்வை புறக்கணித்தது தமிழ் கூட்டமைப்பு In இலங்கை June 14, 2019 9:02 am GMT 0 Comments 1082 by : Litharsan மட்டக்களப்பில் நடைபெற்ற சமுர்த்தி பயனாளிகளுக்கான கொடுப்பனவு வழங்கும் நிகழ்வினை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் புறக்கணித்துள்ளனர். சமுர்த்தி கொடுப்பனவில் இனப்பாகுபாடு உள்ளதாக தெரிவித்து இந்நிகழ்வு புறக்கணிக்கப்பட்டதாக மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் தெரிவித்தார். மட்டக்களப்பு தாமரைக்கேணியில் உள்ள அவரது அலுவலகத்தில் நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார். இங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், “அமைச்சர் தயாகமகே தலைமையில் சமுர்த்திக் கொடுப்பனவு வழங்கும் நிகழ்வு ஏறாவூர் நகரில் நடைபெற்றது. மட்டக்களப்பு மாவட்டத்தில் 74வீதம் தமிழ் மக்கள் உள்ளனர். 24 வீதம் முஸ்லிம் மக்கள் உள்ளனர். சமுர்த்தி என்பது வறிய மக்களுக்கு வழங்கப்படுகின்ற ஒரு கொடுப்பனவு. மட்டக்களப்பு மாவட்டத்தில் 14 பிரதேச செயலாளர் பிரிவுகள் இருக்கின்றன. இவற்றில் 10 பிரதேச செயலாளர் பிரிவுகள் வறுமை கூடிய பிரதேசமாகவுள்ளது. அந்த 10 பிரதேச செயலாளர் பிரிவுகளும் தமிழ் பிரதேச செயலக பிரிவுகளாகவே உள்ளன. இந்த சமுர்த்திக்கான கொடுப்பனவு என்பது குறித்த 10 பிரதேச செயலக பிரிவினையும் அடைப்படையாகக் கொண்டே மேற்கொள்ளப்பட்டிருக்க வேண்டும். ஆனால் இங்கு அரசியலை மையப்படுத்தியும் தங்களது இனம் சார்ந்தும் நடவடிக்கை எடுக்கப்படுகின்றது. தெரிவுசெய்யப்பட்ட சமுர்த்தி பயனாளிகளுக்கு இஸ்லாமிய பாடசாலையொன்றில் வைத்து கொடுப்பனவுகள் வழங்கப்படுகின்றது. இந்த நிகழ்வினை பொதுவான இடத்தில் செய்யுங்கள் என சமுர்த்தி அமைச்சர் கூறியிருக்கவேண்டும். சமுர்த்தி பெறுபவர்களின் பெயர் பட்டியலிலும் சில குளறுபடிகள் இருக்கின்றன. முன்னாள் இராஜாங்க அமைச்சர் அலிசாகிர் மௌலானாவிடம் தெரிவுசெய்யப்பட்ட சமுர்த்தி பயனாளிகளின் பெயர்ப் பட்டியலை கோரியபோதிலும் அது எங்களுக்கு வழங்கப்படவில்லை. இந்நிலையில் திடீரென சமுர்த்திக்கான அமைச்சர் தயாகமகேயை அழைத்து இந்த சமுர்த்தி கொடுப்பனவு வழங்கும் நிகழ்வினை ஏற்பாடு செய்துள்ளார். இந்த நிகழ்வினை நாம் புறக்கணித்துள்ளோம். இது குறித்து பிரதமருடனும் பேசவுள்ளோம். அமைச்சர் தயாகமகேவிடமும் பேசவுள்ளோம். தமிழ் பகுதிகளில் இவ்வாறான செயற்றிட்டங்கள் முன்னெடுக்கப்படும்போது எங்கள் ஊடாகவே இவ்வாறான நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட வேண்டும். நாங்கள் எமது மக்களின் எதிர்ப்புகளுக்கு மத்தியிலேயே இந்த அரசாங்கத்திற்கு ஆதரவினை வழங்கியுள்ளோம்” என்று தெரிவித்தார். http://athavannews.com/சமுர்த்தி-கொடுப்பனவில்-இ/
 13. ஆவா குழுவிற்கு சுரேன் ராகவன் பகிரங்க அழைப்பு! In இலங்கை June 14, 2019 8:35 am GMT 0 Comments 1305 by : Benitlas ஆவா குழுவை சந்தித்து பேசத்தயார் என வட மாகாண ஆளுநர் சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் இன்று(வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு பகிரங்க அழைப்பு விடுத்துள்ளார். ஆவா குழுவுக்கு பிரச்சினை காணப்படின் அல்லது தீர்வு தேவைப்படின், எந்தவொரு சந்தர்ப்பத்தில், எந்தவொரு இடத்திலும் தன்னை சந்தித்து கலந்துரையாட முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். வட மாகாண ஆளுநராக நியமிக்கப்பட்டது முதல் சுரேன் ராகவன், பல்வேறு அதிரடியான செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றார். இந்தநிலையிலேயே யாழ்ப்பாணத்தை அச்சுறுத்தி வரும் வாள்வெட்டு குழுவான ஆவா குழுவை சந்தித்து பேசத்தயார் என அவர் பகிரங்கமாக அறிவித்துள்ளார். http://athavannews.com/ஆவா-குழுவிற்கு-சுரேன்-ரா/
 14. கிளிநொச்சியில் ஆவண வரி அறவிடும் நடவடிக்கை ஆரம்பம்! In இலங்கை June 14, 2019 7:56 am GMT 0 Comments 1178 by : Litharsan கரைச்சி பிரதேச சபை எல்லைக்குட்பட்ட பகுதியில் உள்ள குடியிருப்பாளர்கள், அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களிடமிருந்து ஆவண வரியை பெற்றுக்கொள்வதற்கான நடவடிக்கை கரைச்சி பிரதேச சபையினால் இன்று (வெள்ளிக்கிழமை) ஆரம்பித்து வைக்கப்பட்டது. குறித்த ஆவண வரியை பெற்றுக்கொள்வதற்கான மதிப்பீட்டு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டதை அடுத்து, ஆவண வரியை அறவிடுவதற்கான ஆரம்ப நிகழ்வு கரைச்சி பிரதேச சபை தவிசாளர் அ.வேழமாலிகிதன் தலைமையில் இடம்பெற்றது. குறித்த நிகழ்வில் முன்னாள் வட. மாகாண சபை உறுப்பினர்களான த.குருகுலராஜா, வை.தவநாதன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். இதன்போது வரி அறவீட்டிற்கான விண்ணப்பப் படிவங்கள் கையளிக்கப்பட்டன. இந்நிகழ்வில் கரைச்சி பிரதேச சபையின் தவிசாளர் அ.வேழமாலிகிதன் குறிப்பிடுகையில், “வரி வருமானத்தின் ஊடாக எமது பிரதேச சபையின் எல்லையில் உள்ள பல பகுதிகளையும் முன்னேற்றத்திற்கு கொண்டு வரமுடியும் எனத்தெரிவித்த அவர் சமாதான காலத்தில் விடுதலைப் புலிகளால் வரி அறவிடப்பட்ட விடயம் குறித்து இதன்போது குறிப்பிட்டார். அத்துடன், பிரதேச சபைகளினால் அறவிடப்பட்டும் வரியானது திறைசேரிக்கு செல்லாது. அவை இங்கேயே மக்களின் நலனிற்காக செலவு செய்யப்படும் எனவும் அவர் இதன்போது தெரிவித்தார். இதேவேளை, இதுகுறித்து த.குருகுலராஜா கருத்து தெரிவிக்கையில், “எமது மக்கள் அரச சட்ட திட்டங்களுக்கு இணங்க பழகிக்கொண்டவர்கள். வரி வருமானங்களை மக்கள் அந்தந்த காலப் பகுதிகளில் செலுத்தினால் பிரதேச சபை யாரிடமும் கையேந்த வேண்டியதில்லை. இப்பகுதி அபிவிருத்தி அடையும்” எனத் தெரிவித்தார். இதுகுறித்து வை.தவநாதன் கருத்து தெரிவிக்கையில், “கரைச்சி பிரதேச சபையினால் இவ்வாறான வரித் திட்டங்கள் அறிமுகப்படுத்தப்படும் போது, அவை மக்களுக்கு உரிய முறையைில் செலவு செய்யப்படுகின்றதா என்பதை அவதானிக்க வேண்டும். சில பகுதிகளில் கழிவகற்றல்கள் உரிய முறையில் மேற்கொள்ளப்படுவதில்லை. ஆகையால் இவ்வாறு மக்களிடமிருந்து பெறப்படும் வரிகளின் ஊடாக மக்களுக்கு பிரதேச சபையினால் அர்ப்பணிப்புடனான சேவைகள் முன்னெடுக்கப்பட வேண்டும்” எனத் தெரிவித்தார். http://athavannews.com/கிளிநொச்சியில்-ஆவண-வரி-அ/
 15. மனிதப் புதைகுழி தொடர்பாக விசேட கலந்துரையாடல் – தொல்லியல் திணைக்களமும் உள்ளீர்ப்பு In இலங்கை June 14, 2019 8:24 am GMT 0 Comments 1139 by : Litharsan மன்னார், மனிதப் புதைகுழி தொடர்பாக விசேட கலந்துரையாடலுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதில் தொல்லியல் திணைக்களத்தையும் உள்ளீர்ப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. அவ்வகையில், இம்மாதம் 27 திகதி விசேட கூட்டம் ஒன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மன்னார், மனிதப் புதைகுழி தொடர்பாக நேற்று (வியாழக்கிழமை) மன்னார் பொலிஸார் நகர்தல் பத்திரம் ஒன்றை மன்னார் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த நிலையில் இது குறித்து இடம்பெற்ற விவாதத்தின்போது மேற்கண்ட முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மன்னார் பிரதான பாலத்திற்கு அருகில் ‘சதொச’ வளாகத்தில் இடம்பெற்ற கட்டுமானப் பணியின் ஆரம்ப அகழ்வு பணிகளின் போது அகழப்பட்ட மண்ணில் இருந்து சந்தேகத்திற்கு இடமான மனித எச்சங்கள் மீட்கப்பட்டதைத் தொடர்ந்து குறித்த ‘சதொச’ வளாகத்தில் பணிகள் இடைநிறுத்தப்பட்டு கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக எலும்புக்கூட்டு அகழ்வுப் பணிகள் இடம்பெற்றன. குறித்த அகழ்வு பணிகளின் போது சுமார் 318இற்கும் மேற்பட்ட மனித எலும்புக் கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்ட நிலையில், குறித்த மனித எலும்புக்கூடுகள் எந்த காலப்பகுதிக்கு உரியவை என கண்டறிவதற்காக மனித எலும்புக்கூடுகளின் மாதிரிகள் அமெரிக்காவில் உள்ள புளோரிடா ஆய்வு கூடத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டது. ஆய்வு முடிவு அறிக்கையின் அடிப்படையில் குறித்த எழும்புகள் 500 வருடங்களுக்கு மேற்பட்டவை என குறிப்பிடப்பட்டதைத் தொடர்ந்து இந்த முடிவுகள் சம்மந்தமாக பலரும் சந்தேகம் வெளியிட்டிருந்தனர். இந்நிலையில் மன்னார் நீதவான் நீதி மன்றத்தில் கடந்த மார்ச் 22ஆம் திகதி இடம்பெற்ற உயர்மட்ட கலந்துரையாடலில் குறித்த புதைகுழி அகழ்வுப் பணிகளை தற்காலிகமாக இடைநிறுத்துவதுடன் குறித்த மனித புதைகுழி பகுதியில் காணப்படும் மண் படைகள் மற்றும் ஏனைய சாதக பாதக தன்மைகள் தடையப் பொருட்கள் தொடர்பாக ஆய்வு செய்து அறிக்கை ஒன்றினை வழங்குமாறு களனிப் பல்கலைகழக பேராசிரியர் ராஜ் சோமதேவவிடம் கோரப்பட்டிருந்தது. அத்துடன், நேற்று மன்னார் பொலிஸார் குறித்த புதைகுழி தொடர்பாக நகர்தல் பத்திரம் ஒன்றை மன்னார் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர். இதன்மூலம் மன்னார் மனித புதை குழியானது 500 வருடங்களுக்கு மேற்பட்டதாக காணப்படுவதாக அறிக்கை கிடைக்கப் பெற்றமையினால் அகழ்வு பணிகள் தொடர்பாக இலங்கை தொல்லியல் திணைக்களத்தை உள்ளீர்ப்பது தொடர்பாக கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன. குறித்த வழக்கு விசாரணைகளின் போது காணாமல் ஆக்கப்பட்டவர்கள் அலுவலகம் சார்பாக சட்டத்தரணி புராதனியும், காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்கள் சார்பாக சட்டதரணி டினேசனும் முன்னிலையாகியிருந்தனர். இந்த வழக்கானது, விசேட கூட்ட நாளான வரும் 27ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. http://athavannews.com/மனிதப்-புதைகுழி-தொடர்பாக/