• advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt

VERNON

கருத்துக்கள உறுப்பினர்கள்
 • Content Count

  49
 • Joined

 • Last visited

Community Reputation

4 Neutral

About VERNON

 • Rank
  புதிய உறுப்பினர்
 1. ஒரு பெண் பூப்படைவது என்பது பெண் பிள்ளைகளின் வாழ்வில் மிகவும் முக்கியமான ஒரு நிகழ்வு. இந்த மகிழ்வான செய்தியை நெருங்கிய உறவுகளுடன் பகிர்ந்து கொள்ளவதில் தவறு இல்லை. சிறுமியாக ஓடியாடித் திரிந்தவள் இன்று குமரியான நிகழ்வு சிறுவிழாவாக பதியப்படுவது பாதகமில்லை. தகவல் தொழில்நுட்ப காலத்திற்கு முன் சிறுமி தனக்குள் ஏற்பட்ட மாற்றத்தை பற்றி அறிந்திருக்கமாட்டாள். அத்தருணத்தில் தாயும் உறவினர்களும் சிறுமியை அன்புடன் கவனித்து, பரிசுகள் கொடுத்து , நல்ல அறிவுரைகளை கூறி சிறுமிக்குத் தேவையாக எச்சரிக்கை உணர்வுகளையும் வழிகாட்டல்களையும் கொடுக்கிறார்கள். இன்று தகவல் தொழில்நுட்பம் இளைய தலைமுறையின் கைகளில் இருப்பதால் அவர்கள் அப்பா அம்மாவிடம் கேட்டு அறிவதை விட கோகுலிடம் (Google) கேட்டு அறிந்து கொள்கிறார்கள். தயாராக இருக்கிறார்கள். தாயகத்தில் ஒவ்வொரு ஊரிலும் பிராந்தியத்திலும் விழாக்களை குடும்பத்தில் வயதில் மூத்த ஒருவர் நின்று வழிநடத்துவார். சில பல சடங்கு சம்பிரதாயங்களுக்கு விளக்கமும் கொடுப்பார்கள். ஆனால் புலம்பெயர் தேசத்தில் விழாக்களில் சடங்கு சம்பிரதாயங்களில் வீடியோ, போட்டோ எடுப்பர்கள் தான் நெறிப்படுத்துகிறார்கள். வீடியோ, போட்டோ எடுப்பவர்கள் தங்கள் திறமையை காட்ட பெண் பிள்ளை குளிக்கும் காட்சி, தென்னிந்திய சினிமாப் பாடலுக்கு ஒரு வெளிப்புறப் படப்பிடிப்பு....., பிள்ளையை வெளிக்கிடுத்தி அங்கம் அங்கமாக படம் பிடித்து அதனை வர்ணித்து ஒரு பின்னனிப் பாடல் (அதனை தமது விளம்பரத்துக்காக யூரியுப்பில் youyube போட்டு விடுவார்கள் ) என குடும்ப விழாவினை கேலிக்கூத்தாக மாற்றிவிட்டார்கள். அடுத்தவனை விட நாம் வசதியாக இருக்கிறோம் என்று வீம்பு காட்ட விழாவினை விரிவாக்கும் பெற்றோரும் இவ் அருமையான குடும்ப விழாவினை ஒரு இழிவான விழாவாக மாற்றிவிட்டனர்
 2. பதிலுரைத்த ஆர்வலர்களுக்கு நன்றிகள் அண்மையில் லாச்சப்பல் கடையில் பொருட்களை கொள்வனவு செய்தேன் வீடுசென்று சிட்டையை பார்த்த போது 17 பொருட்களுக்கு விலை போடப்பட்டிருந்நது நான் வாங்கிய பொருட்கள் 15 தான். ஒருவேளை தவறுதலாக இரண்டு தரம் விலை போடப்பட்டுள்ளதா என்று பார்த்த பொழுது எல்லா விலைகளும் வேறு வேறு விலையாக இருந்நது. எனவே அந்த மாயப் பொருள் எது என்றும் அதன் விலை என்ன என்றும் அறிய மறுநாள் கடைக்குச் சென்று வினவிய போது 'இல்லை அண்ண ஒரே விலை மரக்கறியள ஒண்டா நிறுத்து பில் அடிச்சிருப்பினம்" என்றார் அப்படி எனில் நான் வாங்கிய பொருட்களின் எண்ணிக்கை அல்லவா கூடியிருக்க வேண்டும் என்றதும் அவர் சொன்னார் " நீங்கள் ஒரு வேள ஏதாவது சாமான பாக்கில போடாம மறந்திருப்பியள்" ஆக்கள் மறந்து விட்ட சாமான கண்டா பொடியள் கீழ எடுத்து வைச்சிருப்பினம்", பிறகு வாங்க கேட்டு சொல்லுறன் என்றவாறு அடுத்த வாடிக்கையாளரின் பொருட்களுக்கு விலை அடிக்கத் தொடங்கிவிட்டார். கடைச் சிப்பந்தியின் பதில், பல பொருட்களை கொள்வனவு செய்யும் போது லாவகமாக மாயப் பொருட்களையும் இணைத்து விடுகிறாரோ என்ற என் சந்தேகத்தை வலுவூட்டியது. நீங்களும் அவதானமாக பொருட்களின் எண்ணிக்கையையும் சிட்டையையும் சரி பாருங்கள் அடுத்ததாக பலரும் லா சப்பலில் விலை மலிவு , சேவை சுத்தம் நலிவு என்ற கருத்தை பதிந்தனர். விலை மலிவு என்பதை நான் ஏற்கவில்லை. எமது சமையலுக்கு தேவையான பொருட்கள் (கறிவேப்பிலை முருங்கை காய் , கீரைவகை இட்லி அரிசி ....... பொரிஅரிசி வெற்றிலை சுண்ணாம்பு.. பொங்கல் பானை....) இங்கே மட்டுமே கிடைப்பதாலும், எம் நாவுக்கு பழக்கமான சுவையில் உணவகங்கள் இருப்பதாலும் நான் (நாங்கள்) செல்கி(றோம்)றேன் என்பது என் கருத்து. மீன்கடைகளில் காட்சிப்படுத்தப்படும் மீனின் தொகைக்கு ஏற்ப போதுமான அளவு ஐஸ்கட்டி இடப்படுவதில்லை இது கூட சுகாதாரக் கேட்டுக்கும் துர்நாற்றத்திற்கும் காரணமாக இருக்கும். குறைகளை உரிய நிர்வாகத்திடம் தெரிவிக்க, பிரன்சு மொழியில் அலுவலகக் கடிதங்கள் எழுதுவதில் போதிய மொழியறிவு இன்மையும் ஒழுங்கீன (ர்களுக்குச்) ங்களுக்குச் சாதகமாக உள்ளது.
 3. காரணம் தெரியுமா ? பாரிஸ் லாச்சப்பல் தமிழ்க் கடை பகுதியில் அவதானித்தேன் பெரும்பான்மையான பலசரக்குக் கடைகளில் தரப்படும் சிட்டைகளில் பொருட்களின் விபரம் இல்லை ஏன் ? பொருட்களுக்கான தெளிவான விலை கூட இல்லை ஏன் ? சிகை அலங்கார நிலையங்களில் உடைந்த சீப்பு, ஊத்தை தெரியும் கறுப்பு மேல்அங்கி, அனைவருக்கு ஒரே துவாலை பாவிப்பது ஏன் ? (சவர அலகு மாற்றுகிறார்கள்) மீன் சந்தையில் கூட இல்லாத நாற்றம், லாச்சப்பலில் உள்ள மீன்கடைகளில் இருந்து வருவது ஏன் ? (நாத்தம் குடலைப் பிடுங்குகிறது. பத்தாக் குறைக்கு ஊதுபத்தி வேறு கொழுத்தி விடுவார்கள்) உணவகத்தில் குறுகிய கழிவறைகள், அசுத்தமாகவும் (தரை) ஈரமாகவும் இருப்பது ஏன் ? தமிழர் கொண்டாட்டங்கள் நடைபெறும் மண்டபங்களில் கை கழுவும் தொட்டி அடைப்பதேன் ? சிற்றுண்டி மற்றும் தேனீர் பானங்களின் வெற்றுபாத்திரங்களை கதிரைக்குக் கீழ் தள்ளுவது ஏன் ?
 4. வணக்கம் தமிழ் இணையங்களின் மத்தியில் யாழின் சிறப்புக்கள் 1 முற்று முழுதாக தமிழ்பதிவுகள் 2 விளம்பரங்கள் (தொல்லை) இல்லை 3 பதிவுசெய்த உறுப்பினர்களின் மின் அஞ்சல்களுக்கு 'ஸபம்" மின்னஞ்சல்கள் வந்ததில்லை 4 உயர்ந்த தொழில்நுட்பம தமிழ் யுனிக்கோட் மூலம் ஒரு மின் அஞ்சல் அனுப்ப தெரியாதோர் பலர் உள்ளனர் ஆனால் முற்றுமுழுதாக தமிழ் யுனிகோட்டில் இணையத்தை உருவாக்க எவ்வளவு தொழில்நுட்ப அறிவு வேண்டும். எத்தனை மணிநேர உழைப்பு வேண்டும். இத்தனை வருட உங்கள் உழைப்பிற்கு நிர்வாகிகளுக்கு நன்றி உங்கள் முடிவினை மீள்பரிசீலனைக்கு உட்படுத்தினால் மீண்டும் சந்திப்போம் VERNON
 5. சகலகலாவல்லி மாலை MP3 வடிவில் இருந்தால் தாருங்கள் நன்றி ஸ்ரீகுமரகுருபர சுவாமிகள் இயற்றிய சகலகலாவல்லி மாலை கட்டளைக் கலித்துறை வெண்டா மரைக்கன்றி நின்பதந் தாங்கவென் வெள்ளையுள்ளத் தண்டா மரைக்குத் தகாதுகொ லோசக மேழுமளித் துண்டா னுறங்க வொழித்தான்பித் தாகவுண் டாக்கும்வண்ணம் கண்டான் சுவைகொள் கரும்பே சகல கலாவல்லியே. 1 நாடும் பொருட்சுவை சொற்சுவை தோய்தர நாற்கவியும் பாடும் பணியிற் பணித்தருள் வாய்பங்க யாசனத்திற் கூடும் பசும்பொற் கொடியே கனதனக் குன்றுமைம்பாற் காடுஞ் சுமக்குங் கரும்பே சகல கலாவல்லியே. 2 அளிக்குஞ் செழுந்தமிழ்த் தெள்ளமு தார்ந்துன் னருட்கடலிற் குளிக்கும் படிக்கென்று கூடுங்கொ லோவுளங் கொண்டுதெள்ளித் தெளிக்கும் பனுவற் புலவோர் கவிமழை சிந்தக்கண்டு களிக்குங் கலாப மயிலே சகல கலாவல்லியே. 3 தூக்கும் பனுவற் துறைதோய்ந்த கல்வியுஞ் சொற்சுவைதோய் வாக்கும் பெருகப் பணித்தருள் வாய்வட நூற்கடலும் தேக்குஞ் செழுந்தமிழ்ச் செல்வமுந் தொண்டர்செந் நாவினின்று காக்குங் கருணைக் கடலே சகல கலாவல்லியே. 4 பஞ்சப் பிதந்தரு செய்யபொற் பாதபங் கேருகமென் நெஞ்சத் தடத்தல ராததென் னேநெடுந் தாட்கமலத் தஞ்சத் துவச முயர்த்தோன்செந் நாவு மகமும்வெள்ளைக் கஞ்சத் தவிசொத் திருந்தாய் சகல கலாவல்லியே. 5 பண்ணும் பரதமுங் கல்வியுந் தீஞ்சொற் பனுவலும்யான் எண்ணும் பொழுதெளி தெய்தநல் காயெழு தாமறையும் விண்ணும் புவியும் புனலுங் கனலும்வெங் காலுமன்பாடி கண்ணுங் கருத்து நிறைந்தாய் சகல கலாவல்லியே. 6 பாட்டும் பொருளும் பொருளாற் பொருந்தும் பயனுமென்பாற் கூட்டும் படிநின் கடைக்கணல் காயுளங் கொண்டுதொண்டர் தீட்டுங் கலைத்தமிழ்த் தீம்பா லமுதந் தெளிக்கும்வண்ணம் காட்டும்வெள் ளோதிமப் பேடே சகல கலாவல்லியே. 7 சொல்விற் பனமு மவதான முங்கவி சொல்லவல்ல நல்வித்தை யுந்தந் தடிமைகொள் வாய்நளி னாசனஞ்சேர் செல்விக் கரிதென் றொருகால முஞ்சிதை யாமைநல்கும் கல்விப் பெருஞ்செல்வப் பேறே சகல கலாவல்லியே. 8 சொற்கும் பொருட்கு முயிராமெய்ஞ் ஞானத்தின் தோற்றமென்ன நிற்கின்ற நின்னை நினைப்பவர் யார்நிலந் தோய்புழைக்கை நற்குஞ் சரத்தின் பிடியோ டரசன்ன நாணநடை கற்கும் பதாம்புயத் தாயே சகல கலாவல்லியே. 9 மண்கண்ட வெண்குடைக் கீழாக மேற்பட்ட மன்னருமென் பண்கண் டளவிற் பணியச்செய் வாய்படைப் போன்முதலாம் விண்கண்ட தெய்வம்பல் கோடியுண்டேனும் விளம்பிலுன்போற் கண்கண்ட தெய்வ முளதோ சகல கலாவல்லியே. 10 பதம் பிரித்து எழுதுகையில் கீழ்கண்டவாறு அமையும்: வெண்தா மரைக்குஅன்றி நின்பதம் தாங்கஎன் வெள்ளைஉள்ளத் தண்தா மரைக்குத் தகாதுகொ லோசகம் ஏழும்அளித்து உண்டான் உறங்க ஒழித்தான்பித் தாகஉண் டாக்கும்வண்ணம் கண்டான் சுவைகொள் கரும்பே சகல கலாவல்லியே. 1 நாடும் பொருட்சுவை சொற்சுவை தோய்தர நாற்கவியும் பாடும் பணியில் பணித்தருள் வாய்பங்க யாசனத்தில் கூடும் பசும்பொற் கொடியே கனதனக் குன்றும்ஐம்பால் காடும் சுமக்கும் கரும்பே சகல கலாவல்லியே. 2 அளிக்குஞ் செழுந்தமிழ்த் தெள்அமுது ஆர்ந்துஉன் அருள்கடலில் குளிக்கும் படிக்குஎன்று கூடும்கொ லோஉளம் கொண்டுதெள்ளித் தெளிக்கும் பனுவல் புலவோர் கவிமழை சிந்தக்கண்டு களிக்கும் கலாப மயிலே சகல கலாவல்லியே. 3 தூக்கும் பனுவல் துறைதோய்ந்த கல்வியும் சொற்சுவைதோய் வாக்கும் பெருகப் பணித்துஅருள் வாய்வட நூல்கடலும் தேக்கும் செழுந்தமிழ்ச் செல்வமும் தொண்டர்செந் நாவில்நின்று காக்கும் கருணைக் கடலே சகல கலாவல்லியே. 4 பஞ்சுஅப்பு இதம்தரு செய்யபொற் பாதபங் கேருகம்என் நெஞ்சத் தடத்துஅல ராததுஎன் னேநெடுந் தாள்கமலத்து அஞ்சத் துவசம் உயர்த்தோன்செந் நாவும் அகமும்வெள்ளைக் கஞ்சத்து அவிசுஒத்து இருந்தாய் சகல கலாவல்லியே. 5 பண்ணும் பரதமும் கல்வியும் தீஞ்சொல் பனுவலும்யான் எண்ணும் பொழுதுஎளிது எய்தநல் காய்எழு தாமறையும் விண்ணும் புவியும் புனலும் கனலும்வெங் காலும்அன்பர் கண்ணும் கருத்தும் நிறைந்தாய் சகல கலாவல்லியே. 6 பாட்டும் பொருளும் பொருளால் பொருந்தும் பயனும்என்பால் கூட்டும் படிநின் கடைக்கண்நல் காய்உளம் கொண்டுதொண்டர் தீட்டும் கலைத்தமிழ்த் தீம்பால் அமுதம் தெளிக்கும்வண்ணம் காட்டும்வெள் ஓதிமப் பேடே சகல கலாவல்லியே. 7 சொல்விற் பனமும் அவதான மும்கவி சொல்லவல்ல நல்வித்தை யும்தந்து அடிமைகொள் வாய்நளின ஆசனம்சேர் செல்விக்கு அரிதுஎன்று ஒருகால மும்சிதை யாமைநல்கும் கல்விப் பெருஞ்செல்வப் பேறே சகல கலாவல்லியே. 8 சொற்கும் பொருட்கும் உயிராம்மெய்ஞ் ஞானத்தின் தோற்றம்என்ன நிற்கின்ற நின்னை நினைப்பவர் யார்நிலம் தோய்புழைக்கை நற்குஞ் சரத்தின் பிடியோடு அரசன்னம் நாணநடை கற்கும் பதாம்புயத் தாயே சகல கலாவல்லியே. 9 மண்கண்ட வெண்குடைக் கீழாக மேற்பட்ட மன்னரும்என் பண்கண்ட அளவில் பணியச்செய் வாய்படைப் போன்முதலாம் விண்கண்ட தெய்வம்பல் கோடிஉண் டேனும் விளம்பில்உன்போல் கண்கண்ட தெய்வம் உளதோ சகல கலாவல்லியே. 10 பொருளை ஒட்டிப் பிரித்து எழுதுகையில் கீழ்க்கண்டவாறு அமையும்: வெண்தாமரைக்கு அன்றி நின்பதம்தாங்க என்வெள்ளைஉள்ளத் தண்தாமரைக்குத் தகாதுகொலோ? சகம்ஏழும் அளித்து உண்டான் உறங்க ஒழித்தான் பித்தாக உண்டாக்கும்வண்ணம் கண்டான் சுவைகொள் கரும்பே சகலகலாவல்லியே! 1 நாடும் பொருட்சுவை சொற்சுவை தோய்தர நாற்கவியும் பாடும் பணியில் பணித்தருள்வாய்! பங்கயாசனத்தில் கூடும் பசும்பொற் கொடியே! கனதனக்குன்றும் ஐம்பால் காடும் சுமக்கும் கரும்பே! சகலகலாவல்லியே! 2 அளிக்குஞ் செழுந்தமிழ்த் தெள்அமுது ஆர்ந்துஉன் அருட்கடலில் குளிக்கும்படிக்கு என்றுகூடும்கொலோ? உளம்கொண்டு தெள்ளித் தெளிக்கும் பனுவல் புலவோர் கவிமழை சிந்தக்கண்டு களிக்கும் கலாப மயிலே! சகலகலாவல்லியே! 3 தூக்கும் பனுவல் துறைதோய்ந்த கல்வியும் சொற்சுவைதோய் வாக்கும் பெருகப் பணித்தருள்வாய்! வடநூல்கடலும் தேக்கும் செழுந்தமிழ்ச் செல்வமும் தொண்டர் செந்நாவில் நின்று காக்கும் கருணைக் கடலே! சகலகலாவல்லியே! 4 பஞ்சுஅப்பு இதம்தரு செய்யபொற் பாத பங்கேருகம்என் நெஞ்சத்தடத்து அலராதது என்னே? நெடும்தாள் கமலத்து அஞ்சத் துவசம் உயர்த்தோன் செந்நாவும் அகமும் வெள்ளைக் கஞ்சத்து அவிசுஒத்து இருந்தாய் சகலகலாவல்லியே! 5 பண்ணும் பரதமும் கல்வியும் தீஞ்சொல் பனுவலும் யான் எண்ணும் பொழுது எளிதுஎய்த நல்காய்! எழுதா மறையும் விண்ணும் புவியும் புனலும் கனலும் வெங்காலும் அன்பர் கண்ணும் கருத்தும் நிறைந்தாய்! சகலகலாவல்லியே! 6 பாட்டும் பொருளும் பொருளால்பொருந்தும் பயனும் என்பால் கூட்டும்படி நின்கடைக்கண் நல்காய்! உளம்கொண்டு தொண்டர் தீட்டும் கலைத்தமிழ்த் தீம்பால் அமுதம் தெளிக்கும் வண்ணம் காட்டும் வெள்ஓதிமப் பேடே! சகலகலாவல்லியே! 7 சொல்விற்பனமும் அவதானமும் கவிசொல்லவல்ல நல்வித்தையும் தந்து அடிமைகொள்வாய்! நளின ஆசனம்சேர் செல்விக்கு அரிதுஎன்று ஒருகாலமும் சிதையாமை நல்கும் கல்விப் பெரும்செல்வப் பேறே! சகலகலாவல்லியே. 8 சொற்கும் பொருட்கும் உயிராம் மெய்ஞ்ஞானத்தின் தோற்றம்என்ன நிற்கின்ற நின்னை நினைப்பவர் யார்? நிலம்தோய் புழைக்கை நற்குஞ்சரத்தின் பிடியோடு அரசன்னம் நாண நடை கற்கும் பதாம்புயத் தாயே! சகலகலா வல்லியே! 9 மண்கண்ட வெண்குடைக் கீழாக மேற்பட்ட மன்னரும் என் பண்கண்ட அளவில் பணியச் செய்வாய்! படைப்போன் முதலாம் விண்கண்ட தெய்வம் பல்கோடி உண்டேனும் விளம்பில் உன்போல் கண்கண்ட தெய்வம் உளதோ? சகலகலாவல்லியே! 10 பொருள் பிரித்து, பதம் பிரித்து உதவிய திரு V.S. அனந்தநாராயணன் அவர்களுக்கு நன்றி. சகலகலாவல்லிமாலை பிறந்த காதை குமரகுருபரர் காசிக்குச்சென்று அங்கோர் மடத்தை நிறுவ முயன்றார். அதற்கான இடம் வேண்டும்; பொருளும் வேண்டும். அப்போது ஷா ஜஹான் டில்லி/ஆக்ராவில் முகலாய பாத்ஷாவாக இருந்தார். அவருடைய மூத்த மகனாகிய தாரா ஷிக்கோஹ் காசி உட்பட்ட பிரதேசங்களில் பாத்ஷாவின் பிரதிநிதியாக ஆளுனராக இருந்தார். அவரைப் பார்த்து தமக்கு வெண்டிய உதவியையும் அனுமதியையும் குமரகுருபரர் பெறவேண்டியிருந்தது. தாரா ஷிக்கோஹ்வுக்குத் தமிழ் தெரியாது. குமரகுருபரருக்கு ஹிந்துஸ்தானி தெரியாது. தமக்குப் பன்மொழியாற்றல் வேண்டும் என்பதால் குமரகுருபரர் சரஸ்வதியை வேண்டி 'சகலகலாவல்லி மாலை'யைப் பாடினார். சரஸ்வதியின் அருளால் அவருக்குப் பன்மொழியாற்றல் ஏற்பட்டது. தம்முடைய சித்த ஆற்றலால் ஒரு புலியை வசப்படுத்தி அதன் மீது அமர்ந்துகொண்டு தாரா ஷிக்கோஹ்வைக் காணச்சென்று அவருடன் ஹிந்துஸ்தானியிலேயே உரையாடினார். அவருடைய விருப்பத்தை அறிந்துகொண்ட தாரா ஷிக்கோஹ்மடம் கட்டிக்கொள்ள இடமும் தந்து பொருளும் கொடுத்து உதவினார். அக்காலத்தில் முகலாய சாம்ராஜ்யத்தில் இந்துக்கள் கோயில் முதலானவற்றைக் கட்டுவதற்குத் தடைகள் இருந்தன. அதனால்தான் குமரகுருபரர் தாரா ஷிக்கோஹ்விடம் விசேஷ அனுமதியையும் உதவியையும் பெறவேண்டியிருந்தது. காசியில் கட்டப்பட்ட அந்த மடம் 'காசிமடம்' என்ற பெயரில் மிகவும் சிறந்து விளங்கியது. நன்றி: அகத்தியர் குழுமம்
 6. எதிரில் இருந்த அனைவருக்கும் துரோகி, ஒட்டுக்குழு , துரோகக்கும்பல், துணை இராணுவக்குழு என அனைத்து பட்டங்களும் வசவுகளும் வாரி வழயங்கியாகி விட்டது. ஏன் எதற்கு என்று கேட்காமல் நாங்களும் அழைத்துப்பழகி விட்டோம் இப்போது வீழ்ந்தார் ? வீழ்த்தப்பட்டார் ? வாழ்ந்தார் ? , வாழ்கிறார் ? , என்ற வாதப்பிரதி வாதங்களுடன் துரோகி , விலைபோவிட்டான் என்ற புதுப்பட்டங்களை வழங்கத் தொடங்கி விட்டோம் யாரும் மன்னிக்கவோ, மன்னிப்புக் கேட்கவோ தயாரில்லை. கடந்த கால தவறுகளை ஏற்று நிகழ்காலத்தில் அனைவரும் ஒன்றிணைந்து எதிர்காலத்தை வெல்வதே ஈழக் கனவை தாங்கி ஈழத்தின் விடிவிற்காய் வீரமரணம் அடைந்த அனைத்து விடுதலை போராளிகளுக்கும் , பொதுமக்களுக்கும் நாம் செய்யக் கூடிய மிகப் பெரிய அஞ்சலி இனியும் பிரிவு வேண்டாம் ஐக்கியப்டுவோம் , கனவுகளை நனவாக்குவோம்
 7. வடமராட்சியில் ஈ.பி.டி.பி ஆதரவாளரான பெண் சுகாதாரத் தொண்டர் சுட்டுக்கொலை வடமராட்சியில் பெண் சுகாதாரத் தொண்டர் ஒருவர் புலிகளால் சுட்டுப்படுகொலை செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் நேற்று மாலை 3.30 மணியளவில் மந்திகை ஆதார வைத்தியசாலைக்கு அருகில் இடம்பெற்றுள்ளது. சுட்டுக்கொல்லப்பட்டவர் ஈழ மக்கள் ஜனநாயக்க கட்சி (ஈ.பி.டி.பி) ஆதரவாளரான பருத்தித்துறை, ஒடக்கரையைச் சேர்ந்த இளம் யுவதியான நாராயணமூர்த்தி யசோதினி (வயது 25) என அடையாளம் காணப்பட்டுள்ளார். பருத்தித்துறை (மந்திகை) ஆதார வைத்தியசாலையில் தொண்டராகக் கடமை புரிந்து விட்டு வீடு திரும்பிக் கொண்டிருக்கையில் மோட்டார் சைக்கிளில் வந்த புலிகள் இவ்யுவதியைச் சுட்டுக் கொன்றுள்ளனர். இவரது படுகொலைக்கு புலிகள், எல்லாளன் படை எனும் பெயரில் உரிமை கோரியுள்ளனர். இவரது சடலம் பருத்தித்துறை (மந்திகை) ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. இக்கொலை தொடர்பாக பருத்தித்துறைப் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதேவேளை டெனிஷ் கண்ணிவெடி அகற்றும் பிரிவில் பணியாற்றிய இவரது சகோதரர் ஒருவரும் மைத்துனரும் கடந்த மே மாதம் ஹைஸ் வானில் வந்த புலிகளால் கடத்தப்பட்டனர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. http://www.epdpnews.com
 8. உலகம் சமநிலை பெறவேண்டும் உயர்வு தாழ்விலா நிலைவேண்டும் http://www.ekincaglar.com/coin/flash.html
 9. நாளை 27-04-2006 பிரான்சு பத்திரிகையில் பதிவாகும் தகவல் http://www.lemonde.fr/web/article/0,1-0@2-...1-760396,0.html http://www.lemonde.fr/web/module_chrono/0,...1-760396,0.html
 10. அமரர் தோழர் புஸ்பராஜா எம் பா(வ)ச புூமியாம் ஈழ தேசத்தை நீங்கள் நேசித்தது உங்கள் தப்பு !!! 1980 களில் பிடியாணை, கண்டவுடன் சுடும் உத்தரவுகளுடன் அலைந்த இலங்கைப் படைக்கு பயந்து மேற்குலகில் உண்மையான அகதியாக வந்தது தப்பு !!!! நீங்கள் செய்த மகா பெரிய தப்பு "திரு திருமதி பாலசிங்கம் எழுதிய தமிழ் ஈழ விடுதலைப் போராட்ட வரலாற்றுப் பதிவுகளில் ஈழப்போராட்டத்தை அறிந்த எமக்கு உங்கள் புத்தகம் ஊடாக தேச விடுதலையின் ஆரம்பம் மற்றும் மாறுபட்ட தகவல்களை பதிவு செய்து, ஈழவிடுதலை வரலாற்றினை அறிமுகப்படுத்தியது " உங்கள் ஆத்மா சாந்தியடையட்டும் உங்கள் கனவு நனவாகட்டும்
 11. பேராசான் அமரர் திரு க.சிவராமலிங்கம் அவர்களுக்கு கனடாவில் நினைவஞ்சலி விபரங்களுக்கு http://jaffnahindu.org/php/forum/viewtopic.php?t=108
 12. வெளிநாடு வாழ் தமிழ்ச் சங்க நிர்வாகிகளுக்கு ஒரு வேண்டுகோள் உலகம் முழுவதும் உள்ள தமிழர்களின் இணைப்பு பாலமாக தினமலர் வெப்சைட் விளங்கி வருவதை நீங்கள் அறிந்திருப்பீர்கள். அதை மேலும் வலுப்படுத்தும் வகையில் வெளிநாடுகளில் உள்ள அனைத்து தமிழ்ச்சங்கங்கள் தொடர்பான தகவல்களையும் இந்த பகுதியில் தர விரும்புகிறோம். அதற்கு உங்களுடைய முழு ஒத்துழைப்பு தேவை. நீங்கள் உங்கள் பகுதியில் உள்ள தமிழ்ச் சங்கங்களின் பெயர்கள்இ அதன் நிர்வாகிகள்இ அவர்களுடன் தொடர்பு கொள்வதற்கான டெலிபோன் எண் மற்றும் இமெயில் முகவரி ஆகியவற்றை எங்களுக்கு அனுப்பி வைத்தால் அவை இந்த பகுதியில் நிரந்தரமாக இடம் பெறச்செய்கிறோம். அதன் மூலம் மற்றவர்கள் உங்களுடன் தொடர்பு கொள்ளவும் உங்கள் பணி மேலும் சிறக்கவும் உதவும். மேலும் உங்கள் சங்கங்கள் சார்பில் நடத்தப்படும் விழாக்கள்இ கூட்டங்கள் மற்றும் இதர தகவல்களை போட்டோக்களுடன் அனுப்பி வைத்தால் அவற்றை வெளியிடத் தயாராக இருக்கிறோம். தினமலர் வெப்சைட்டின் முதல் பக்கத்தில் குறிப்பிட்டுள்ள முகவரிக்கு அனுப்புங்கள். அவற்றை உலகத் தமிழர்கள் செய்தி பக்கத்தில் வெளியிடுகிறோம். http://www.dinamalar.com VERNON
 13. ஒரு கொடியில் இருமலர்கள் http://img49.imageshack.us/img49/484/03112...180070012wq.jpg நன்றி தினமலர 03-11-2005
 14. வினாக்களை தொடுப்பதற்கும் விடைகளை பகர்வதற்கும் உதவிபுரியும் இணையம் http://www.tamilcinema.com/permanent/default.asp
 15. மேலதிக தகவல்களை அறிந்து தெளிவு பெறுவோம் http://www.dinakaran.com/spiritual/hindu/a...Oct/21/deep.htm