பொருள் விசையும் போலத்தான்
மனிதரும் காதலும்❤❤❤
இரு பொருட்களாகிய ஆணும் பெண்ணும்
ஒரு நேர்கோட்டில்
சீரான வாழ்க்கை முறையில் வாழ்ந்து கொண்டிருக்கும் போது
விசையாகிய காதல்
பொருட்களாகிய ஆணையும் பெண்ணையும்
அவர்களது சீரான வாழ்க்கை முறையிலிருந்து
மாற்ற முயற்சிக்கும்
தள்ளும்,இழுக்கும்,வீழ்த்தும்
அதுவே காதல்🤣
எந்த ஒரு விசையாகிய காதலுக்கும் சமமான எதிர் விசையாகிய காதல் உண்டானாலே அது வெற்றியளிக்கும்
ஆணாகிய பொருளுக்கும் பெண்ணாகிய பொருளுக்கும்
சமமான எதிர் விசையாகிய காதல் உருவாகினாலே அது நிலைக்கும்
இல்லையெனின்
ஆணோ பெண்ணோ
ஏதோ ஒரு பொருளை
விசை எனும் காதல் ஒருதலைக் காதல் எனும் கவலைக் கிடங்கில் இழுத்து வீழ்த்தும்,தள்ளும்🙄
நிறைகளை மட்டுமே கண்டு ஈர்ப்படைந்து காதல் உருவாகி
பின் குறைகளைக் கண்டு மறைவாகும் காதலான ஈர்ப்பியல் விசையாகிய காதல் மிகவும் வலிமை குன்றிய காதல்...நிலைக்காது...🙄
திடீரென்று கண்டவுடன் மின்னல் மாதிரி வந்து காந்தம் மாதிரி ஒட்டிக் கொள்ளும் காதலான மின்காந்த விசையாகிய காதல்
இலகுவில் பிரியாது
கடுமையாக இழுத்துப் பிரித்தால் தான் விலகும்
ஈர்ப்பியல் விசையாகிய காதலை விட இது கொஞ்சம் வலிமை கூடிய காதல்...ஓரளவுக்கு நிலைக்கும்...😊
இரண்டு வலிமை மிக்க விசைகளாகிய காதலினை உடைய இதயங்களைக் கொண்ட பொருட்களான ஆணும் பெண்ணும் இணைந்து கொண்ட மிகப் புரிதலுடன் கூடிய விசையாகிய காதலாகிய வலிமை மிக்க அணுக்கருவிசைக் காதலானது
சாதி மத நிற பண அழகு பேதமற்று
இன்னார்க்கு இன்னார் என்று இறைவன் எழுதி வைத்தான் அன்று
என வரும் காதல்...என்றும் அழியாது...இறப்பிலும் தொடரும்...💪
ஆரம்பத்தில் உறுதியாக உருவாகி
பின்பு நீண்ட காலம் இழுபட்டு பின்பு போதிய புரிதல் இல்லாமையினால் சிதைவடைந்து பிரிவடையும் காதல்... வலிமை குன்றிய அணுக்கருவிசைக் காதல்...
ஈர்ப்புவிசையாகிய காதலளவுக்கு வலிமை குன்றிய காதல் அல்ல...😐
ஆனால் சில விதிவிலக்கான மனிதர்களாகிய பொருட்கள் மட்டும் எந்த வித புறவிசையாகிய காதலும் இல்லாமல் தன்னிச்சையாக தானே நிலையை மாற்றிக் கொள்ளாமல் மாட்டுப்படாமல் நிலைமமாக இருப்பார்கள்...இவர்கள் சுயநலவாதிகளா?பொறுப்பற்றவர்களா?
பற்றற்றவர்களா?🤔🤔🤔
-தமிழ்நிலா.