Jump to content
களத்தில் உள்நுழையும் வழிமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலதிக விளக்கங்களிற்கு

தமிழ்நிலா

கருத்துக்கள பார்வையாளர்கள்
 • Posts

  86
 • Joined

 • Last visited

Everything posted by தமிழ்நிலா

 1. விடிகின்ற விடியலிலே விரைவு வேண்டும் நமது வீதியிலே சுதந்திரமாய் தலை நிமிர்த்தித் திரிய வேண்டும் பறி போகின்ற நிலத்தினையும் காக்க வேண்டும் இப் பாரினிலே தமிழன் புகழ் ஓங்க வேண்டும் இழுக்கல்ல போராட்டம் தெளிதல் வேண்டும் இகல்வெல்ல ஒன்றிணைந்தே முயல வேண்டும் விழுகின்ற தலைமுறையும் வாழ வேண்டும் விடியலிலே புதுதேசம் மலர வேண்டும் சொந்தத்தில் அறிவுடைமை வளர வேண்டும் சோம்பலுற்ற அடிமை நிலை மாற்ற வேண்டும் சொந்தங்கள் தமிழ்மக்கள் எனும் எண்ணம் வேண்டும் சோர்வின்றி இனங்காக்க துடிக்க வேண்டும் வந்தேறிக் கூட்டங்கள் ஓட வேண்டும் வக்கற்ற ஆட்சியினை மாற்ற வேண்டும் குத்தகங்கள் செய்வோரை களைதல் வேண்டும் கூத்தாடிக் கூட்டங்கள் மாய வேண்டும். அறிவிழந்த மனிதரென்றே எம்மை எண்ணி நிற்கும் அகந்தை பிடித்தோர் வழி காட்டி நிற்கும் தறிகெட்டோரின் தகைமை கெட்ட ஆட்சியினிலே தம்மக்கள் தம்நிலமென்ற எண்ண மின்றி நம்கழுத்தை முறிக்கின்ற மூடர் தனை ஒழிக்க வேண்டும் மாற்றத்தை செய்ய நன்றே முயல வேண்டும் மாண்பு மிகு ஆட்சி தனை அமைக்க வேண்டும் திக்கெட்டும் நம் தமிழர் புகழ் திகழ வேண்டும் துவளமெங்கும் திகட்டாத தீந்தமிழ் இனிமை திகட்டிப் பரவ வேண்டும்! -தமிழ்நிலா.
 2. மிரட்டுகின்ற மிடியனைத்தும் மிரண்டு ஓட மிடிமையிலும் மிடுக்குடனே ஒற்றுமையைப் பேண வேண்டும் அறத்தின் நெறி காக்கின்ற செயலைச் செய்து மனிதர் நாம் மனிதத்துடன் வாழ வேண்டும்! அருமை பெருமையுடன் தாய்மொழியைப் பேண வேண்டும் அரும் பெரும் புகழை எமதாக்கிக் கொள்ள வேண்டும் இருள் சூழ்ந்த நிலை போக்கி என்றும் வாழ்வில் இழப்பின்றி எம்மவர்கள் எழுச்சியுடன் ஆள வேண்டும்! கருமமே கண்ணாகக் கொள்ள வேண்டும் களவின்றிப் பொய்யின்றி வாழ்தல் வேண்டும் இளகாதோர் மனமிளகச் செய்ய வேண்டும் இளமையிலே உரிமை தனை வெல்ல வேண்டும்! அரும்பாடு பட்டேனும் அறவோர் நாளும் அறிவுக்கண் திறக்க வழி செய்ய வேண்டும் அறமில்லாச் செயலுக்கு முற்றுப் புள்ளி அறிவு கொண்டே எவருமிங்கு வைக்க வேண்டும்! நடையிலும் உடையிலும் நமது பண்பை நாட்டமுடன் காத்து நிதம் செல்ல வேண்டும் மடை திறந்த வெள்ளமென மாட்சி பொங்க மனமொத்து மகிழ்வுடன் பணி செய்ய வேண்டும்! எதிர்பார்த்த இலட்சியத்தை அடைய வேண்டும் எதுவுமில்லா அடிமையென்ற சொல் மறையச் செய்ய வேண்டும் தடையெல்லாம் உடைத்தெறிந்து தளர்ந்திடாது தரணியிலே புதுப் பரணி எழுத வேண்டும்! -தமிழ்நிலா.
 3. நீளங் கொண்ட வானத்தில் பறக்கும் நேசங் கொண்ட பறவைகளே என் தேசங் கொண்ட நிலையென்ன திரும்ப வந்தால் கூறுங்கள்! வாசங் கொண்ட மலரங்கே வண்ண இதழ்கள் விரிப்பதில்லை பேசுங்கிளியும் கிள்ளை மொழி பேசாதிருக்கு என்கிறார்கள்! வீசும் தென்றல் உடன் சேர்ந்த மாமரத்து விளையாட்டும் வேப்ப மரத்துக் குயிற்பாட்டும் நேசமுடன் நினைவிருக்கும் நாசம் எல்லை மீறியதாம் நாட்டில் காணா வாழ்வோடு! கூசும் கொலைகள் கொள்ளைகளும் குழவி மேனி கூடக் கலைத்தாடும் நீசம் எல்லை மீறுவதாய் நேரக் கேட்டே மனமும் துடிக்கிறதே! மாசும் கொண்டோர் மனமெல்லாம் மருகிப் பிறழ்வாய் மனத் தாகம் பூசும் முகங் கொள் வேடங்கள் புரிவோர் மலியப் பொருளுண்டோ! காசுக் கடிமையாய் போகும் கயவர் கைக் காணும் பொம்மை போற் சிலரும் நேசம் கொள்ளும் மனமின்றி இருக்கும் இடமும் மாறியதென்ன? தேசங் கெட்டே கயவர்கள் திக்கில் எங்கும் திகழுங்கால் மாசற்றோர் எங்கும் தம் இருப்பை வெட்கி மறைத்தே வாழ்கின்றார்! வேசம் மாற்றி வெறியோடு விலங்காய் திரியும் கயவர் கைகால் தனை முறித்து வீர நடை போட்டு விண்ணில் மீன்களாய் ஒளிரும் தேச மீட்பர்கள் தனைக் காண்பீரோ? தேசம் மீட்ட எம்மவரெல்லாம் திங்களொளியில் கை கோர்த்து பேசும் போது அச்சமின்றி பக்கம் இருத்தல் எக்காலம் தேச மீட்பர்கள் காதினிலே கேட்டு வந்து பதில் தன்னை பாங்காய் எனக்குக் கூறுங்கள்! -தமிழ்நிலா.
 4. தடையெனவே இருந்தவைகள் எல்லாமே தளரட்டும் உடையட்டும் ஒழியட்டும் வாழ்விற்கு வளம் கொழிக்கும் எல்லாமே வளரட்டும் படரட்டும் செழிக்கட்டும்! சுமையெனவே துயர் தந்த எல்லாமே நகரட்டும் விலகட்டும் மறையட்டும் நல்லோர்க்கு நலம் சேர்க்கும் எல்லாமே பரவட்டும் தொடரட்டும் பலம் பெறட்டும்! பொய்மைக்கு துணை போன எல்லாமே உடையட்டும் நொறுங்கட்டும் சிதறட்டும் உண்மைக்கு வலுச் சேர்க்கும் எல்லாமே நிறையட்டும் நிமிரட்டும் வலுக்கட்டும்! கீழ்மைக்குத் துதி பாடும் எல்லாமே கிழியட்டும் எரியட்டும் அழியட்டும் மேன்மைக்கு எழில் கூட்டும் எல்லாமே வளரட்டும் உயரட்டும் நிலைக்கட்டும்! எழில் கொண்டு எழில் கண்ட பொழில் கொள் இப்பூவுலகிலே எழில் உளங்கொண்டு வாழும் நல்மாந்தர் எல்லாமே வாழட்டும் ஆளட்டும் சிறக்கட்டும்! -தமிழ்நிலா.
 5. உண்மை தான்...பொதுவாக விருப்பம் "ஆம்" என்று சொல்ல வேண்டிய இடத்தில் "இல்லை"என்று சொல்லும் போதும்...விருப்பம் இல்லாத இடத்தில் "இல்லை"என்று சொல்ல வேண்டிய இடத்தில் "ஆம்"என்று சொல்லும் போதும் மிகவும் கடினமாக இருக்கும்
 6. பதில் கருத்து எழுதுவதற்கு என்னை மன்னித்துக் கொள்ளுங்கள் சகோதரனே! அதே மாதிரி தானே "ஆம்" என்ற சொல்லுக்கும்...? எப்போது ஆம் என்று சொல்ல வேண்டும் என்று உய்த்துணர்ந்து கொண்டு சொல்ல வேண்டும் மற்றது அதை வெளியே சொல்லக்கூடிய தைரியத்தை வரவழைத்துக் கொண்டு "ஆம் " என்ற உண்மையை சொல்லியும் விடுவது...
 7. இது புதுக்கவிதை...இப்படி வசன நடையில் தான் எழுத முடியும்..."நிராகரிப்பின்மை ஒரு மனிதனை அடிமையாக்கி விடும்" இந்த வரி என்னுடைய வரிகளிலே நான் குறிப்பிடவில்லையே...நீங்கள் முதலில கவிதையை வடிவாக வாசியுங்கோ அண்ணா/ஐயா(நகைச்சுவைக்கு சொல்கிறேன் கோவிக்காதையுங்கோ)
 8. மிக்க நன்றிகள் தேவையான சந்தர்ப்பங்களில் ஆம் என்று தான் சொல்ல வேணும்...தேவையில்லாத சந்தர்ப்பங்களில் தான் இல்லை என்று சொல்ல வேணும்..இது தான் வாழ்வின் வெற்றியைத் தீர்மானிக்கும் என்று நான் நினைக்கின்றேன்
 9. உண்மை தான்...மிக்க நன்றிகள் அக்கா
 10. நிராகரிப்பு என்பது வேதனைக்கு உரியது ஆனால் நிராகரிப்பினால் ஏற்படும் அனுபவம் வலிமையானது பல நிராகரிப்புகளில் ஏற்படும் அனுபவங்கள் கற்றலுக்கான வாய்ப்பாகிறது முகிலின் நிராகரிப்பால் மழை உருவாகிறது மழையின் நிராகரிப்பால் மண் ஈரமாகிறது விதை நிராகரிக்கப்படுவதால் நிழல் கொடுக்கும் பெரு விருட்சமாகிறது நிராகரிப்பு என்பது தோல்வியின் கடைசி ஆயுதம் நிராகரிப்பு என்பது உடைந்து போன பின்னும் எழத் துடிப்பது நிராகரிப்பு என்பது உடைந்து போகாமல் இருக்க உள்ளூர எழுந்து மறையும் ஓராயுதத் தோற்றங்களில் ஒன்று யாரோ ஒருவரின் நிராகரிப்பு இன்னொருவரால் நேசிக்கப்படுகின்றது யாரோ ஒருவரின் நிராகரிப்பால் நிராகரிக்கப்பட்டவரின் திறமை உயர் கணிப்புக்குள்ளாகிறது நிராகரிக்கப்பட்டவர் என்றோ ஒருநாள் வான் முட்டும் பெரு விருட்சமாக ஆவார்! -தமிழ்நிலா.
 11. அற நனைந்தவனுக்கு குளிரென்ன கூதல் என்ன?பழகீட்டுது...சுரம் வராது அண்ணா
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.