யாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.
விபரங்களிற்கு

மாறன்

கருத்துக்கள உறவுகள்
 • Content Count

  63
 • Joined

 • Last visited

Community Reputation

62 Good

About மாறன்

 • Rank
  புதிய உறுப்பினர்
 • Birthday October 28

Profile Information

 • Gender
  Male
 • Location
  சென்னை

Recent Profile Visitors

1,589 profile views
 1. தோழி ரதி... நான் தங்களையோ இல்லை தங்கள் கருத்துக்களையோ, நேரடியாகவோ இல்லை மறைமுகமாகவோ விமர்சிக்கவில்லை. விமர்சன பதிவும் அது அல்ல. பலதும், பத்தில் என் கருத்தில் ஒன்றை பதிவிட்டேன் அவ்வளவே... என் இருப்பை நிலைப்படுத்திக்கொள்ளவே பிதற்றிக் கொண்டிருக்கிறேன். தங்கள் மனநிலையை ஏதேனும் ஒரு விதத்தில் காயப்படுத்தியிருந்தால் மன்னித்து கொள்ளுங்கள். சிறுவன் நான்... இனி இவ்விழையில் பதிவிடுவதை நான் நிறுத்தி விடுகிறேன். நம்பிக்கை பொய்த்தபின், விளக்கங்கள் வெறும் வார்த்தைகளே! என்பதை நானறிவேன். இருந்தாலும் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். தனிநபர் எதிர்ப்பு குறுகிய காலத்திலேயே நீர்த்துப்போகும்... காரணத்தை முன்னிறுத்திய எதிர்ப்புகள் மட்டுமே இங்கு நீடித்து நிலைக்குமென்பது வரலாறு.
 2. கூகிள் இருக்கும் தைரியத்தில் நாம் எதையும் நினைவில் வைத்துக் கொள்ள முயற்சிப்பதே இல்லை. நமக்கு ஒரு விஷயத்தைப் பற்றி நன்றாகத் தெரியும் என்று நினைத்துக் கொண்டிருப்போம்... ஆனால், அதைப் பற்றிப் பேசச் சொன்னால் ஒரு நாலு வரிக்கு மேல் நாக்கு படுத்து விடும்.
 3. பழங்கால ரிகர்ஸிவ் குட்டிக் கதை ஒரு ஊரில் ஒரு குருவி இருந்தது. காலையில் குப்பையைக் கிளறியதில் குருவிக்கு ஒரணா கிடைத்தது. எடுத்துக் கொண்டு ஊர் சுற்றியதில், ராஜா அரண்மனையில் பல் தேய்த்துக் கொண்டிருந்தார். மரத்தில் வந்தமர்ந்து "ராஜாகிட்ட பணமில்லே... என்கிட்டதான் பணமிருக்கு! ராஜாகிட்ட பணமில்லே... என்கிட்டதான் பணமிருக்கு!" என்று கத்தியது. கடுப்பான ராஜா, ஏவலாள்களை விட்டு குருவியின் ஓரணாவைப் பிடுங்கச் செய்தார். இப்போ குருவி, "என்னை விட கேடுகெட்ட ராஜா, என் காசைப் பிடுங்கறார்" என்று கூவியது. வெறுப்பான ராஜா, ஓரணாவை, குருவிகிட்டயே விட்டெறிஞ்சார். குருவி விடாமல், "என்னைப் பார்த்து பயந்து போன ராஜா, என் காசை திரும்பக் கொடுக்கிறார்", என்று தொடர்ந்தது.
 4. மிகவும் சிறந்த ஆக்கம், அனைத்துமே அர்த்தம் பொதிந்த வரிகளின் அழகான அணிவகுப்பு! ஆயிரம் வார்த்தைகள் சொல்லாத கருத்தை உங்களின் சிறந்த வரிகள் சில வரிகள் சொல்லிவிடுகிறது பாராட்டுகள். தொடர்ந்து பதிவிடுங்கள் கவிஞரே... உங்கள் கவிதையின் ரசிகன் நான்! தொடர்ந்து ரசிக்க காத்திருக்கிறேன்.
 5. பேச்சு இன்று உற்பத்தி செய்து பரப்பப்படும் ஒரு பொருளாக மாறிவிட்டது. எல்லாவற்றிற்கும் மேலாகப் பேச்சை பேசுவதற்குப் பதில் அதை வேடிக்கை பார்ப்பது, ஒரு சமூகம் தன்னுடைய பேச்சை இழப்பதாகவே அர்த்தம் பெறுகிறது.
 6. உடைவதும் தெறிப்பதும் கரைவதும் ஓடுவதுமான.... ஒத்திகையில்லா வாழ்க்கை ஒத்திகையில்லா மரணம் நடுவே ஒத்திகையில்லாக் கனவுகள்.
 7. மிக அருமையான வரிகள், வார்த்தையின் வளமை அழகூட்டுகிறது கவிக்கு. எனது வாழ்த்துக்கள் கவிஞரே.
 8. சொல்லின் சப்தத்திலும் சொற்பிரயோகத்திலும் வரிகளுக்கு மட்டுமல்ல வாசகர்களுக்கும் இனிமை சேர்க்கிறது தங்களின் படைப்பு அற்புதம்.
 9. சின்ன சின்ன வரிகளில் செதுக்கியுள்ளார் கவிதையை கவிஞர் மு.மேத்தா ஐயா அவர்கள்! கவிதையை எங்களுக்கு வாசிக்க, ரசிக்க பகிர்ந்து கொண்டதிற்கு மிக்க நன்றி நவீனன் நண்பா.
 10. வேண்டியவருக்கு வேண்டியத செய்ய முடியாத நாம வேண்டாதவங்களுக்கு வேணும்னே கெட்டத எதையாவது செய்ய ஆசபடறோம்.

 11. தனிமை ஒன்றே தன்னை யார் என்று உணர்த்தும்..! நினைவுகள் ஒன்றே நம்மோடு பயணிக்கும்..!

 12. நண்பா seyon yazhvaendhan... ரசித்துக் கருத்திட்ட உங்களுக்கு என் உளம்கனிந்த நன்றி! மிக்க மகிழ்ச்சி நண்பா suvy... கவிதையை ரசித்து கருத்திட்ட உங்களுக்கு மனமகிழ்வுடன் என் நன்றி.
 13. மிக்க மகிழ்ச்சி நண்பரே... வாய்ப்பளித்தமைக்கு நன்றி...
 14. உட்காரப் புல்வெளி. எதிரே நீர்வெளி. நீர்மேல் எண்ணெயாய் சூரியன் . பால் சொட்டுகளாய் பறவைகள் . முட்டாமல் மோதாமல் இணக்கமாய் காற்று . தூரத் தூர ரயிலோசைக்கும் செவிக் கூசும் நிசப்தம் . ....................................... .......................... எல்லாம் தவிர்த்து கவனமாய் காத்திருக்கிறான் கரையில் ஒருவன் . தொண்டையை கிழித்து கண்ணைத் துளைத்த தூண்டில் முள்ளுடன் துடிக்கும் ஒரு மீனைக் காணும் ஆவலுடன் .