Jump to content

satan

கருத்துக்கள உறவுகள்
 • Content Count

  3,207
 • Joined

 • Last visited

Community Reputation

603 பிரகாசம்

About satan

 • Rank
  Advanced Member

Profile Information

 • Gender
  Not Telling

Recent Profile Visitors

3,182 profile views
 1. இந்தியாவும் உங்களது மனித உரிமை மீறலில் பங்காளி என்பதை யாம் அறிவோம் அமைச்சரே! இவன் ஒருத்தன் பேசிப்பேசியே கழுத்தறுக்கிறான். முந்தி பிளாட் பாரத்தில கடை வைச்சிருந்திருப்பானோ?
 2. ஜனாதிபதிக்கு அடிக்கடி மறதி நோய் வந்து துலைக்கிறதோ, அல்லது மற்றவர்கள் மறந்திருப்பார்கள் என்று நினைக்கிறாரோ சொல்லத் தெரியவில்லை? நீதிமன்றத்தால் மரணதண்டனை தீர்ப்பளித்த கொலைக்குற்றவாளிகளை தான் விடுவித்ததை, தமக்கு சார்பாய் தீர்ப்பளிக்காத நீதிபதிகளை பதவியிலிருந்து விலக்கியதை, தமது கொள்ளைகளுக்கு, கொள்கைகளுக்கு அடிபணியாதவர்களை போட்டுத் தள்ளியதை, நீதியான விசாரணை செய்த அதிகாரிகளை பொய்குற்றம் சாட்டி சிறையில் அடைத்ததை வசதியாய் மறைத்துவிட்டாரா? அல்லது வேஷம் போடுகிறாரா?
 3. கொழும்பை நெளிய, வைத்துள்ள கடிதம். கொழும்பை மட்டுமல்ல, கொழும்புக்கு முட்டு கொடுக்கும் நம்மில் சிலரையும் நெளிய வைத்திருக்கும்.
 4. இலங்கை; தான் அதிபுத்திசாலி என நிறுவ வெளிக்கிட்டு படு முட்டாள்ளென நிரூபித்துக்கொண்டு இருக்கிறது. தன் இனவாத போரை பயங்கரவாதமாக்கி உதவி பெற்றவர் தான் ஒரு நல்லிணக்க அரசு என்பதை நிரூபிப்பதற்கு பதிலாக இன முரண்பாட்டை வளர்த்து, சர்வதேச சமூகத்தை குற்றஞ்சாட்டி தன்னை நியாயவாதியாக காண்பிக்க வெளிக்கிட்டு மூக்குடைபட்டு நிற்பதுமல்லாமல், என்ன காரணத்தை கூறி ஜனாஸாக்களை எரிக்க வெளிக்கிட்டுதோ அதே காரணமான இடத்தில புதைக்க சொல்லுது. இதைத்தான் சொல்லுறது துப்புக்கெட்டவனுக்கு மூன்று இடத்தில என்று.
 5. வி. முரளிதரன், சி. சந்த்திரகாந்தன், வியாழேந்திரன், இத்தியாதி குழுக்களெல்லாம் அபிவிருத்தி செய்யப்போய்; அதை சனம் புரியாமல் காணி அபகரிப்பு என்று மாறி விளங்கிகொண்டுதுகள் கண்டியளோ! கொஞ்சம் பொறுங்கோ, எல்லாம் முடிய சனமும் ஊமையாய் ஆக்கப்பட்டு தானாகவே அடங்கி விடும்.
 6. இது சுத்த விதண்டாவாதம். இறந்தவரின் உடலை அடக்கம் செய்வது குறித்த மதக்கொள்கை. அதை மதிக்க வேண்டியது அரசின் கடமை. அதை வைத்து விதண்டாவாதம் செய்வதும், அரசியல் செய்வதும், தமது சட்டங்களை திணிப்பதுவும் அரசு. மற்றவரின் பறிக்கப்படும் உரிமைகளுக்காக குரல் கொடுப்பது நம் ஒவ்வொருவரின் கடமை. அதை வைத்து காரியம் சாதிப்பதும், காய் நகர்த்துவதும், தள்ளி நிற்பதும் சுயநலம். தொடரும் காலங்களில் தமிழரும் முஸ்லிம்களும் ஒன்று சேர்வதை தடுக்கும் யுக்தி கையாளப்படுகிறது.
 7. அவனை காப்பதற்கு இருக்கிறார்கள் தமிழ் அரசியல் தரகர்கள். இவனது இந்த தெனாவெட்டுக்கு ஐ. நா. இலங்கை மீது நடவடிக்கை எடுக்க காட்டிய கால தாமதம், நம்ம அரசியல் தரகர்களின் முண்டு கொடுப்பே காரணம். அவனுக்கு குளிர் விட்டுப்போச்சு இந்த முடிவை வைத்துக்கொண்டு குழு அமைக்கிறேன், விசாரணை செய்கிறேன், நல்லிணக்கத்தை உருவாக்குகிறேன் என்று காலத்தை இழுத்தடித்து, எல்லோரையும் ஏமாற்றியது தான் கண்ட பலன். நம்ம அரசியற் தலைவர்கள் ஓடியோடி வெளிநாட்டுத்தூதுவர்களை சந்தித்து, சிங்களத்துக்கு வக்காலத்து வாங்கியும், சில முடிவுகள் அவர்களையும் மீறி ஐ. நாவில் எடுக்கப்பட்டு விட்டதால், இப்போ தாங்கள் நல்ல பிள்ளைக்கு நடிக்க, ஒப்புக
 8. நீங்கள் என்னதான் நெருக்கடி தந்தாலும், நாம் நல்லிணக்கம் ஏற்படுத்தப் போவதில்லை என்கிறார்.
 9. ஹிந்தியன் தலைகீழா நின்றாலும் இலங்கை ஹிந்தியை வரவிடமாட்டான், பலாத்காரமாக புகுந்தாலொழிய. அதற்கும் சீனா இருக்கிறது தடுப்பதற்கு.
 10. இவனுகள் அடக்கம் பண்ணுவதா எரிப்பதா என்கிற முடிவுக்கு வரமுதல் கொரோனா தன் அடுத்த கட்டத்திற்கு போய்விடும். அரசாங்கம் நல்ல பிள்ளைக்கு சம்மதம் தெரிவித்து விட்டு, நாட்டுமக்களையும், புத்த பிக்குகளை உசுப்பி விட்டு, கலகம் செய்து கையை விரிக்கும். இது இந்த நாட்டின் காரியம் சாதிக்கும் தந்திரம்.
 11. தலைக்கு மேல் வெள்ளம் போன பின் சாண் ஏறினாலென்ன, முழம் ஏறினாலென்ன? எமக்கு இல்லை என்கிற நாட்டில் சீனம் வந்தாலென்ன, ஹிந்தி வந்தாலென்ன, சிங்களம் போனால்தான் நமக்கென்ன? இதில் கருத்துச் சொல்லவோ குத்தி முறியவோ என்ன இருக்கிறது நமக்கு? அது சிங்களவனே பிரச்சனையில்லை என்கிறான். அவன் கண்ணுக்கு ஒவ்வாதது எல்லாம் தமிழ். அதில் அவன் கவனமாயிருக்கிறான்.
 12. அணை கட்டாவிடில் மடை திறந்த வெள்ளம்போல் ஒருவரொருவர் மேல் வெறுப்பை கொட்ட வேண்டிவரும்.
 13. கண்டிப்பாக இவரது கணவரையும் விசாரணை செய்ய வேண்டும், குறித்த மாணவனுக்கும், குடும்பத்துக்கும் பாதுகாப்பு வழங்கப்படவேண்டும், ஒட்டுக்குழுக்களின் கடத்தல், காணாமல் போகச் செய்தல் விடயங்களை ஐ. நாவரை கொண்டு செல்ல வேண்டும். என்னதான் அரசியல் செல்வாக்கு இருந்தாலும், குப்பையில் போட்டாலும் குண்டுமணி மங்காது. ஆசிரியத் தொழிலுக்கே இழுக்கு.
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.