Jump to content

satan

கருத்துக்கள உறவுகள்
 • Posts

  5655
 • Joined

 • Last visited

Everything posted by satan

 1. இது ஒரு வெத்து வேட்டு. சிங்கள மக்களின் பொறுமையை சீண்டி விட்டு, பதில் கொடுக்க முடியாமல் அமைதியாய் இருக்கு. இதுக்கு மேலும் வாயைத்திறந்தால் உண்டு, இல்லை. அவ்வளவுதான்! தமிழரருக்கெதிரா வைச்ச நெருப்பு அவர்மேல் பத்திடுச்சு. அரோகரா!
 2. எவ்வளவுதான் எடுத்துச் சொன்னாலும் வயதுக்கோளாறு கேளாது, காதலுக்கு கண்ணில்லை. வேலியே பயிரை மேய்ந்த கதைதான்
 3. புலிக்கு பிறந்தது பூனையாகாது. இதுகள் செய்த ஊழல்கள் விலாவாரியாக வெளிவந்தன. உறவுக்கார பாட்டியை கூட்டிவந்து அவவுக்கு எல்லாம் மறந்துவிட்டது என்று மழுப்பினார்கள். மக்களை ஏமாற்றி விசாரணைக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்யவைத்தார்கள். றக்பி வீரரை கொலை செய்தார்கள். ஏன் நாமல் சிறையிலும் வசதிகளை அனுபவித்துக்கொண்டு இருந்தவர்தான். தங்கள் ஊழல்கள் வெளிவந்து மக்களால் விரட்டப்படுவோம் என்கிற பயத்தினால் நாட்டில் குழப்பம் ஏற்படுத்தி, குண்டு வெடிக்கவைத்து ஆட்சியை கைப்பற்றினார்கள். ஆனால் தர்மம் கூடவே இருந்து தண்டிக்கிறது. சட்டம் ஏமாந்தாலும் தர்மம் கண்டிப்பாக இவர்களை பழிவாங்கியே தீரும்.
 4. தங்கள் அரசியலுக்காக பொய்கதைகளை கூறி, காலத்துக்கு காலம் நீரூற்றி கருகி விடாமல் வளர்த்த விருட்ஷமது. அது இலகுவில் சரியாது, விடவும் மாட்டார்கள். இந்த நிலையிலும் தமிழரை இரத்தம் சிந்த வைத்து அதில் தமது தோல்விகளை மறைக்க முயற்சிகள் எடுக்கப்படுகின்றன.
 5. தங்கள் சுயநலத்திற்காக மக்களை இப்படி காத்திருக்கவும், கையேந்தவும் வைத்துவிட்டார்களே!
 6. இருக்கலாம், பெற்றவர்கள் பட்ட கடன் பிள்ளைகளை சேருமென்று நம் முன்னோர்கள் சொல்லிச் சென்றுள்ளார்கள். பாப்போம் நாம் இருக்கும்வரை உண்மைதானோ என்று?
 7. தவறியும், தமிழருக்கு இழைக்கப்பட்ட அநீதி, அவர்களை அடக்கியொடுக்க பெற்ற கடனே, இந்த நிலைக்கு காரணம் என்று ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.
 8. சொந்தபுத்தி இல்லை பிதற்றுத்துகள். அதுகளுக்கே தாம் என்ன கதைக்கிறோம் என்பது புரியவில்லை.
 9. கப்புட்டாஸ் தனது அமெரிக்க குடியுரிமையை ரத்துச் செய்யவுள்ளதாக செய்திகள் கூறுகின்றன. அவர்களுக்கு இதைவிட பாதுகாப்பு இல்லை. நாட்டில் எது நடந்தாலும் அவர்கள் பதவியிலிருந்து விலக மாட்டார்கள். அவர்களுக்கு நன்றாகவே தெரியும் தாங்கள் செய்த ஊழலுக்கு மக்கள் என்ன தண்டனை அளிப்பார்கள் என்பது. ஆகவே இந்த பாதுகாப்பை இழக்க விரும்ப மாட்டார்கள், மக்கள் உடப்புகுந்து கழுத்தை பிடித்து வெளியே தள்ளும்வரை.
 10. கொஞ்சம் பொறுங்கள்! இந்தக்குடும்பம் வழிச்சு துடைச்சு எடுக்கப்படும். சும்மா அங்கும் இங்கும் போக்கு காட்டி தப்பித்து விடலாம் என கனவு காண்கிறார்கள். போராடும் மக்கள் இன்னும் வீரியம் காட்ட தொடங்கவில்லை, தொடங்கும்போது இவர்கள் காணாமற் போய்விடுவார்கள். மெல்லெனப் பாயும் தண்ணீர் கல்லையும் உருக்கிப்பாயும்.
 11. அட, அதற்கிடையில் எல்லாத்தையும் பொதுக்கிப்போட்டு படம் காட்டுறானுகள். புலிகளை பிடித்துவிட்டோம் ஆயுதங்களை பறித்துவிட்டோம் என்று முன்பு அடிக்கடி றீல் விட்டவை, அந்தப்பழக்கத்தில வெளியிட்டிருக்கினமோ? மக்களை பிரச்சனைகளிலிருந்து திசை திருப்புவதற்கு உப்பிடி எத்தினை வித்தை காட்டுவினம்! உண்மையென்றால், அந்தப்புள்ளியை சட்டத்திற்கு முன் நிறுத்திக்காட்டட்டும்.
 12. அதற்கு, ஏதிலிகளாய் அலையும் மக்கள் டொலருக்கு எங்கே போவார்கள்? எனக்கெதற்கு வம்பு? தட்டு வைத்து அழைத்தவர்கள் முடிவு எடுக்கட்டும்.
 13. மத்திய வங்கியிலிருந்த தங்க நகைகள் காணாமற் போயுள்ளதாகவும், உடனடி விசாரணை வேண்டும் என்றும் கோருகிறார்கள். இவர் இங்கு மக்களின் சொந்த பணத்துக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படுமாம். தன் முதுகைப் பாராமல் பிறர் முதுகு சொறிவது என்பது இதுதான்.
 14. இது காணாதென்று, ராஜபக்சக்களின் அடுத்த வலதுகை, இவரை கழுத்தைப்பிடித்து வெளியே தள்ளவேண்டும் என்கிறார். வரப்போகும் காலம் கோத்தாவுக்கு நெருக்கடியானதாக இருக்கும். நாட்டை விட்டு தப்பியோடும் காலம் வரும்போல் தெரிகிறது!
 15. போலிக்கு கவர்ச்சி அதிகம், மக்கள் கவர்ச்சியைத்தான் விரும்புகிறார்கள். சாயம் வெளுக்கும்போது தெருவுக்கு வந்து என்ன பலன்? எல்லாம் இழந்தபின்!
 16. தமிழரெல்லாரும் வெளிநாடு போனால் சிங்களம் மூச்சு விடமுடியாமல் நாண்டுகொண்டு சாகும்.
 17. எங்களிடம் இருந்து பறித்ததெல்லாம் திருப்பித்தரவேண்டும், எங்கள் நிலத்தை ஆக்கிரமித்துள்ள சிங்களப்படை வெளியேறவேண்டும், எங்கள் நிலங்களில் முளைத்துள்ள விகாரைகள் அகற்றப்படவேண்டும், சிறைகளில் காரணமின்றி தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழர் விடுவிக்கப்படவேண்டும், எங்களை நாங்களே ஆளும் சம உரிமை வேண்டும், எங்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளுக்கு மன்னிப்பு கேட்கப்படவேண்டும், இன்னொரு தடவை இவ்வாறு நடவாதென உறுதி தந்து யாப்பாக்க வேண்டும். தயாரா? எந்த இணக்கமும் இல்லாம மந்திரத்தால் மாங்காய் பிடுங்க புலம்பெயர் தமிழர் இணங்கக்கூடாது.நிபந்தையை முதலிடுவோர் வைத்து தங்கள் பாதுகாப்பை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும்.
 18. ஆடாத ஆட்டமெல்லாம் ஆடி, செய்யாத வித்தையெல்லாம் செய்து காட்டியும் புலம்பெயர் தமிழர் மசியவில்லை. இப்போ இவர்கள் சம்பளத்தில் கைவைத்தால் இவர்களாகவே கூப்பிடுவார்கள் என்று நினைத்ததோ சிங்களம்?
 19. என்னது! முழு நாடும் புலம்பெயர் தமிழர்களதா? நம்பவே முடியவில்லை. இதே தமிழர் வறிய மக்களுக்கு உதவிக்கரம் நீட்டியபொழுது தடைசெய்யப்பட்ட அமைப்பாக அறிவித்தது, இப்போ தனக்கு பசி எடுத்தவுடன் முழுநாட்டுக்கும் அழைப்பு. பறித்தவற்றை திருப்பி தர முடியாது, அழைப்பு விடுத்துக்கொண்டே, தமிழர் நிலங்களில் அடாவடி பண்ணிக்கொண்டு, அதை நிஞாயப்படுத்திக்கொண்டு, உதவுங்கள் என்று கேட்பதில் இருந்து தெரிவது என்னவென்றால்; மீண்டும் தமிழரின் முதுகில் சவாரி செய்யா தயார். அவ்வளவும் திமிர். வயிறு காய அடங்குமது.
 20. சிறு திருத்தம்! தர்மத்தைவிட அதர்மமே மேலோங்கியுள்ளது எங்கும், அதிலும் வக்கீல், நீதித்துறை அதிஉச்சம். குற்றம் சாட்டப்பட்டவரையல்ல, பட்டப்பகலில், நாலுபேர்நடுவில் குற்றமிழைத்தவரை சுற்றவாளியாக்கி, மீண்டும் அவரை குற்றமிழைக்கவும், அப்பாவிகளை அச்சுறுத்தவும் இந்த வக்கீல்களும், நீதிமன்றங்களும் அங்கீகாரம் அளிக்கின்றன. இதனாலேயே நாட்டில் இன்று கொலை கலாச்சாரம் நிறைந்து காணப்படுகிறது. அப்பாவிகள் பணமில்லாததால்; "நிரபராதி வெகுசன விரோதியாக்கப்படுகின்றனர்."
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.