Jump to content

satan

கருத்துக்கள உறவுகள்
 • Posts

  6987
 • Joined

 • Last visited

Posts posted by satan

 1. இவர் முன்பு இருந்த கட்சி என்ன கட்சி என்றுஞ் சொல்வது. இருந்த கட்சியை விட்டு மகிந்தா கூப்பிட்டவுடன் ஓடிப்போய் காலடியில் விழுந்தவர், அபிவிருத்தியே போதும் என்றவர். இப்போ இப்படி கூறுகிறார்.  நாளைக்கு எப்படிகூறுவாரோ? சீ ....சீ ..... இந்தப்பழம் புளிக்குமென்கிறாரோ, கட்சிகளிர்த்தான் பிழையென்கிறாரோ?

 2. அவருக்கு பல சந்தர்ப்பங்கள், அதிகாரங்கள் கிடைத்திருந்தன. அவற்றையெல்லாம் தமிழரின் முழுமையான ஆதரவோடேயே பெற்றார், இருந்தும் அவர்களை வஞ்சிப்பதிலேயே அவற்றை செலவழித்தார். இப்போ முழுமையான அதிகாரமில்லை, செய்வேன் என்கிறார். காலம் சொல்ல வைக்குதா? அல்லது கிடைத்த அதிகாரத்தை நிரந்தரமாக்குவதற்கு வேஷம் போடுகிறாரா? வெறுங்கை முழமிடுமா என்றும் யோசிக்க வேண்டும்.

 3. 54 minutes ago, வாதவூரான் said:

  இந்தா தொடங்கீட்டாங்கள் பிறகென்ன இனி மகிந்த கோத்தா ரணில் காட்டில் அடைமழை தான்

  உருவாக்கிவிட்டு காத்திருக்கினம் நனைய.

 4. எங்கட சொந்தக்காணியை மீட்க முடியவில்லை இராணுவம் விவசாயம் செய்யுது, இதில  இவை வேற புதுக்கணக்கோட, இடைவெளியில் மடம் கட்ட நிக்கினம். வடக்கும் கிழக்கும் இணைந்தால் இரத்த ஆறு ஓடும் என எச்சரிப்பவர்களிடமும் ஆலோசனை கேட்கலாமெல்லோ? 

  • Like 1
 5. நரியாரும் யாழ்ப்பாணத்தில வந்துதான் அறிவிப்பேன் எண்டார், இவர்களும் யாழ்ப்பாணம் வந்துதான் பதின்மூன்றாம் திருத்தம் தேவை என்கிறார்கள். நன்றாக ஏமாறப்போகிறோமோ என்று பயமாய் கிடக்கு. கடைசியா பதின்மூன்றை யாழ்ப்பாணத்தில கிடங்கு வெட்டி மூடுறதோ தெரியலை. இதுவும் நரியாரின் விளையாட்டில் ஒன்றுதான் என்று நான் நம்புறேன். 

 6. தங்களுக்குள் ஒன்றுபட முடியாதவர்கள், தங்கள் பிழைகளை திருத்திக்கொள்ள முடியாதவர்கள் எப்படி எமக்கான தீர்வை பெற்றுக்கொள்ள போராடுவார்கள்? அதென்னவோ சிங்களத்துக்கு வால் ஆட்டுவதில் மட்டும் எல்லோருக்கும் ஒருமித்த குணம். அது எப்படி சாத்தியம்?

 7. 6 hours ago, ஏராளன் said:

  அதிகார பகிர்வு விவகாரத்தில் தெற்கு அரசியல்வாதிகள் ஒரு இணக்கப்பாட்டுக்கு வருவதற்கு முன்னர் முதலில் தமிழ் தலைமைகள் ஒருமித்த இணக்கப்பாட்டுக்கு வர வேண்டும்.

  இதை மட்டும் நம்மால் ஏற்படுத்தவே முடியாது. தொன்று தொட்டு வரும் பரவணிக்குணம். எவ்வளவோ சாதித்த தலைவராலும் முடியவில்லை இனி யாரால் முடியும்? இவர்களே நம்மை அழித்துவிடுவார்கள்.

  3 hours ago, alvayan said:

  கக்கிறது முழுக்க இனத்துவேசம்....

  ரோகண விஜயவீர, வாசுதேவ நாணயக்கார, சஜித் போன்றோர் தேர்தலில் நின்ற போது; விஜயவீர தன் தேர்தல் வாக்குறுதியில், தான் வென்றால் இருபத்து நான்கு  மணி நேரத்தில் புலிகளை தூக்கில் போடுவேன் என்றும், வாசு தான் வென்றால் அதே இருபத்துநான்கு மணி நேரத்திற்குள் புலிகளுடன் பேசி தீர்வுக்கு வருவேன் என்றாராம். ஆனால் தோற்றுப்போன வாசு இனவாதியாக மாறினார் என அறிந்தேன். ரோகணவுக்கு நடந்தது உலகமே அறியும். இனவாதம் கக்க விரும்பாத அரசியல் வாதிகளை சிங்கள மக்கள் ஒதுக்கினார்கள், அவர்களும் ஒதுங்கிக்கொண்டார்கள், அரசியலில் அவர்கள் மறங்கடிக்கப் பட்டார்கள். இன்று சிங்கள இனவாதிகள் நமது ஒற்றுமையின்மையை பயன்படுத்திக்கொண்டு பழித்தும் உரைக்கிறார்கள், நமக்கு உறைக்கவேயில்லை.

 8. உண்மை! அதிக இனவாதம் கக்கியவர்களை தங்கள் தலைவனாக சிங்களம் தெரிந்து கொண்டது, இதனால் சிலர் வலிந்து இனவாதத்தை கையிலெடுத்து அரசியல் கதிரையை தக்கவைத்துக்கொண்டார்கள். ஆனால் இனி வருங்காலத்தில் அது பயனளிக்கக்கூடிய வாய்ப்பில்லை என்றே கருதுகிறேன். இனிமேல் தமிழரை அடித்து, கடத்தி கப்பம் பெற முடியாது, கடன் வாங்கவும் இயலாது, இயற்கை அழிவுகள் இப்போ எல்லா நாடுகளிலும் பரந்து ஏற்படுவதால் அதுவும் இனிமேல் கேள்விக்கிடமே. எனது விருப்பம், இனவாதம் பேசுவோரை மக்கள் அடித்துக்கலைக்க வேண்டும். இனி மக்களாலேயே அதை மாற்றியமைக்க  முடியும். 

 9. 4 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

  இப்படியான போராட்டங்களும் பேரணிகளும் நாட்டை வன்முறைக்களமாக்கி மீண்டும் இருண்ட யுகத்துக்கே கொண்டு செல்லும்.

   

  4 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

  அன்றாட கருமங்களில் இருக்கும் மக்களை வலுக்கட்டாயமாக வீதிக்கு அழைத்து வந்தவர்கள் யார்?

  கோத்தாவை, இவ்வளவு காலமாய் மக்களை ஏமாற்றி ஆட்சி செய்தவர்களை, உங்களை நீங்களே கேட்டு பதிலை கண்டுபிடியுங்கள் முடிந்தால். அது உங்களால் முடியாது, உண்மையான வரலாற்றை அழித்து இல்லாததை எழுத முயற்சிக்கிறீர்கள் உங்கள் ஊழல்களை மறைக்க. அதை கிளற வெளிக்கிட்டால் நீங்கள் ஊமையாகிவிடுவீர்கள்.

 10. 1 hour ago, பெருமாள் said:

  இலங்கை மீது உண்மையான பற்று காணப்படுமாயின் கூட்டமைப்பினர் புலம்பெயர் அமைப்புக்களின் முதலீடுகளை தாராளமாக பெற்றுக்கொடுக்க முடியும்.

  இந்த நாட்டின் குடிமக்களோடு அதிகாரங்களை பகிரமுடியாது, ஏதோ அந்நியர் உரிமை கேட்பதுபோல் திமிர்பேச்சு, இதில் எப்படி பற்று வரும்? நம் நாட்டில் நாங்கள் வியர்வை சிந்தி உழைத்ததையே பிடுங்கிய கூட்டம், மீண்டும் தமிழனிடம் உதவி கேட்டு நிக்கினம். இவர்களுக்கு கடன் கொடுப்பவர்கள் யோசிக்க வேண்டும்! உரிமையை பகிர்ந்து சுதந்திரமாக வாழ அனுமதிக்காத நாடு உருப்படுமா? கொடுக்கும் கடன் திரும்பி வருமா என்று. சொந்த நாட்டில் அந்த மக்களை வாழ விட விருப்பமில்லை நாளைக்கு கடன் கொடுத்த நாடு இவர்களை அடக்கும்போது புரியும் வலி அப்போ  திரும்பி வந்து எதையும் மாற்ற முடியாது. எல்லாம் நன்மைக்கே! இன்னும் கத்துங்கோ, உலக நாணய நிதியத்துக்கும் உங்கள் குரல் கேட்க வாழ்த்துக்கள்! 

  1 hour ago, பெருமாள் said:

  புலம்பெயர் அமைப்புக்களின் முதலீடுகளுக்காக நாட்டை காட்டிக் கொடுக்க ஒருபோதும் இடமளிக்க முடியாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

  நாட்டில என்ன நடக்குதுதென்று தெரியாமல் இருக்கிறார். இவர்களை கத்த விட்டு சாதிக்கலாம் என்று ராஜபக்ச ரணில் கனவு காணலாம். எங்கோ போய் இறுகும்போது புரியும் தப்புக்கணக்கு போட்டோமென்று.

  • Like 2
 11. 19 minutes ago, தமிழ் சிறி said:

   

  ஶ்ரீலங்காவில் ஏற்படும் அழிவுகள் மூலம் கிடைக்கும் நிதியில் இருந்துதான்….
  இது வரை அது… காப்பாற்றப் பட்டுக் கொண்டு வந்துள்ளது.
  சொந்த நாட்டு மக்கள் மேல் நடத்திய போரையும்,  இயற்கை அழிவு கொடுத்த சுனாமியையும் சாட்டி பெற்ற பணம் பல பில்லியன் டொலர்கள்.

  தமிழனுக்கு வந்த அழிவை வைத்து… வயிறு வளர்த்த நாடுதான் ஶ்ரீலங்கா.

  நாட்டில் ஏதாவது ஒரு அழிவு வராதா காசு பாக்க? என்று ஏங்கும் சிங்கள அரசு! தமிழனை அழிக்க உதவிய சர்வதேசம் பிறகு காயப்பட்ட அவனுக்கு மருந்துபோட கொடுத்த பணத்தையும் சுருட்டியது, இழப்பின் விளிம்பில் இருந்தவனிடமிருந்தும் பிடுங்கியது, இப்போ செய்வதறியாமல் திகைக்கிறது. பழைய அழிவுகளை தோண்டி எடுத்து காசு பாக்க முயற்சிக்குது. 

  • Like 2
 12. 3 minutes ago, பெருமாள் said:

  நீலக்கல்  ரத்தினம் போல் இதுவும் ஒரு புளுடா அதென்ன ஆறு பில்லியன் டொலர் கேட்பது  55 பில்லியன் கேட்பதுதானே ?😀😀😀

  பெற்ற கடனை அடைப்பதற்க்கு ஒரு கதவும் திறக்கவில்லை, வேறு வழி தேடி கண்டுபிடித்துள்ளார்கள். நீங்கள் சொன்னமாதிரி 55 பில்லியன் கேட்டால் யாரும் இலகுவாக கண்டுபிடித்துவிடுவார்கள் கடன் அடைப்பதற்குத்தான் கேட்க்கிறார்கள் என்று. இலங்கை பெற்ற கடன் எவ்வளவு என்பது உலகறிந்த விஷயமாச்சே! இப்படிக்கேட்டால் தட்டிக்கழிக்க மாட்டார்கள், கவுரவமான வழியுங்கூட. இவர்களே போர்க்காலத்தில் கடல் வளத்தை எவ்வளவுதூரம் அழித்து மாசு படுத்தினார்கள் அதைப்பற்றி யாரும் கேட்கமாட்டார்கள் என்கிற துணிவு.

 13. சில்லறைக்கடன்காரனுக்குத்தான் எவ்வளவு தாராள மனம். இருந்தாலும் எவ்வளவு கால அவகாசம் கொடுத்தாலும் கடலில போட்டதாக எண்ணி விடுங்கள், அது திரும்ப கிடைக்கப்போவதில்லை. மீண்டும் கடன் கேளாமல் இருந்தாலே போதும் என்று இருந்து நிம்மதியடையுங்கள்.

 14. 15 hours ago, கிருபன் said:

  “அரசியல் தீர்வு ஏற்படாவிட்டால் எங்களுடைய தாயகம் – சரித்திர ரீதியாக எமது தமிழ் மக்கள் வாழ்ந்து வந்த பிரதேசங்கள் படிப்படியாக அபகரிக்கப்பட்டு விடும்.

  அப்படியேதும் மிச்சம் மீதியிருந்தாற்தானே பறிபோவதற்கு? ஒருவேளை தன்ர வீடடைக்குறித்து சொல்லுகிறாரோ? எல்லாம் முடிவடைகிற நேரம் நித்திரையால எழும்பி உளறுகிறார்.

  • Haha 1
 15. இந்தியாவுக்கும் சர்வதேசத்துக்கும் தெரிந்தது; யோசனை வைப்பது, அழுத்தம் கொடுப்பது, பாராட்டு தெரிவிப்பது. அதை அப்பப்போ சமயம் கிடைக்கும் போதெல்லாம் ஒழுங்காக செய்கிறார்கள். செயலைப்பாத்து பாராட்டுவதில்லை, ஏதாவது செய்யப்போகிறோம் என்று அசுமாத்தம் காட்டினாலே போதும் மிச்சம் மீதியில்லாமல் பாராட்டித்தள்ளி விடுவார்கள். அதனோடு அவனும் எல்லாவற்றையும் கிடப்பில் போட்டுவிட்டு சுரண்ட வெளிக்கிட்டு விடுவான், பழையது மறந்து புதியது பாராட்டப்படும்.

 16. இவர் ஒரு சந்தர்ப்பவாதி. இப்போதும் போயிருப்பார், ஒன்று தேர்தல் நெருங்குகிறது, அடுத்தது தமிழர் ஒன்று சேர்ந்து கரிநாள் என்று பகிஸ்கரிக்கும்போது தான் மட்டும் கொண்டாடினால் தான் யார் என்பது மக்களுக்கு புரிந்து... அது ஒன்றும் பிரச்சனையில்லை, சர்வதேசம் தன்னை அடையாளம் கண்டு இரகசிய பேச்சுவார்த்தைக்கு ஆபத்தாகிவிடும் என்று நினைத்தாரோ? ஆனாலும் பாருங்கோ! "இருள் சூழ்ந்த சுதந்திரம்." என்று பிரகடனப்படுத்தி விட்டு, யாரைத்தாக்குகிறார் என்று. இவரது அரைகுறை அறிவு. சிங்களத்தை கோவிக்க பயமா அல்லது அதன்மீதுள்ள பாசமா?

 17. சனக்கூட்டம், பத்திரிகையாளர் கூட்டம், ஒலிவாங்கி கிடைத்தால் போதும், சந்தர்ப்பம், தான் யார், என்ன பேசுறேன் எண்டதையே மறந்து ஆள் குஷியாகிவிடுவார். பிறகு தான் பேசாததை பத்திரிகையாளர் எழுதிவிட்டனர் என்று பாய்வார். ஆனால் அவர்கள் எழுதியது தவறு என  சட்ட நடவடிக்கை எடுக்க தயங்குவார். கடைசியில் அவர் சொன்னதும் அவர்கள் எழுதியதும் ஒன்று என நிரூபணமாகும். இதெல்லாம் ஒரு ராஜதந்திரி!

 18.  இலங்கையின் சுதந்திர தினத்தை பகிஸ்கரிப்பதே இன்றைய ஒன்றுகூடலின் நோக்கம். அதற்கும் இவரது இந்த பேச்சுக்கும் என்ன சம்பந்தம்? எப்போதும் தவறான இடத்தில பொருத்தமற்றதை பேசி மாட்டுப்படுவதும் அதை சமாளிக்க வேறொன்றை சொல்லி அசடு வழிவதும் இவரது பிழைப்பாய்ப்போச்சு. த. தே. கூட்டணியை கலைத்து தமிழரசுக்கட்சிக்கே வேட்டு வைக்கிறார். இவருக்கு இவரது நாக்குதான் சகுனப்பிழை.

 19. காரணம் இந்த சிங்கள பிரதிநிதியின் பொய்களை நம்பியுள்ளனர். அதனாலேயே கொழும்பில் குண்டுவெடிப்பில் இறந்த மக்களுக்கு சிறு தொகையாயினும் இழப்பீடு கொடுக்கப்பட்டது ஆனால் வடக்கில் இறந்தவர்களுக்கு எதுவுமில்லை. காரணம் கர்தினாலின் சந்தர்ப்பவாத குரல்! அதனாலேயே தங்கள் இழப்புகளை வெளிப்படுத்த தமிழ் ஆயர்கள் தங்களுக்கென ஒரு பிரதிநிதியை தெரிவு செய்ய வேண்டுமென்று கேட்க்கிறார்கள். இதுவும் தமிழருக்கு பதின்மூன்றை கொடுப்பதுபோல் சிங்களம் கூவும்.

 20. 29 minutes ago, குமாரசாமி said:

  சாதீய தொல்லையால் யேசுவின் கிறிஸ்தவத்திற்கு மதம் மாறிய தமிழர்களும்  இனக்கலவரங்களிலும், இனவாத குண்டு வெடிப்புகளிலும் பலியானார்கள்.

   

  உண்மையான கிறிஸ்தவ வாழ்வு என்பது இதுதான் சாமியார்! அதை அவர்கள் யாரையும் குறை கூறாமல்,  விட்டோடாமல்  தாங்குகிறார்கள். 

  36 minutes ago, குமாரசாமி said:

  உலக கிறிஸ்தவர்கள் யாராவது குரல் கொடுத்தார்களா?

  பெயர்க் கிறிஸ்தவர்களுக்கும் அதாவது போதனைக்கும் வாழ்வுக்கும் இடையில் நிறைய வித்தியாசமுண்டு. போதனையை வாழ்வாக்குவதே உண்மையான சாதனை!

  38 minutes ago, குமாரசாமி said:

  உயிர்ப்புடன் இருக்கும் வத்திக்கானாவது வந்து பதில் சொல்லுமா?

  மனித நேயம் என்று கூவும் தாபனங்கள் தங்கள் கடமையைச் செய்கின்றனவா? பிறகு எதற்கு வீணான  விளம்பரம் இவர்களுக்கு?

  9 minutes ago, குமாரசாமி said:

  ஓ....மதத்திலும் இனவாதம் மிஞ்சி நிற்கின்றதோ?

  ஓம்! இல்லையென்றால் தமிழர்கள் கொத்துக்கொத்தாக மத ஆலயங்களில் கொன்று குவிக்கப்படும்போது ஏன் அது மவுனம் காத்தது? எப்போதாவது தனது பிரதிநிதியை அழைத்து விளக்கம் கேட்டதா? அறிக்கை விட்டதா? பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் சொன்னதா?  இன்று தமிழ் ஆயர்கள் தங்களுக்கு தனியொரு பிரதிநிதியை நியமிக்குமாறு கேட்க்கிறார்கள். அவர்கள் கேட்பதற்கு முன்னால் பாப்பாண்டவர் அதை செய்திருக்க வேண்டும், ஏன் செய்யவில்லை? சிங்கள படுகொலையாளர் அவரை சந்திக்க சென்றபோது மறுப்பாவது தெரிவித்தாரா? முன்னாள் பாப்பானவர் ஒருவர் மறுத்ததாக அறிந்தேன் உண்மை தெரியவில்லை.

 21. அப்பிடியென்ன அபிவிருத்தியை செய்து போட்டார் இவர், அவற்றையும் சேர்த்து சொன்னாற்தானே கேட்கிறவர்களுக்கும் புரியும். பேச, வாழ உரிமையில்லையாம் அபிவிருத்தியை மட்டும் விடுவார்களாம்! இனமுரண்பாடு தோன்றி படுகொலையாகி இன்று இந்த நிலையில் வந்து நிற்பதே  தமிழனின் அபிவிருத்தியை காண பொறுக்காமாற்த்தான் என்பது, இந்தக்கூலிக்கு எங்கே புரியப்போகிறது? அங்கே கேட்டதை இங்கே வந்து கக்குகிறார். முதலில் நாசமாக்கப்பட்டு எரிந்ததெல்லாம் தமிழன்  வியர்வை,  குருதி சிந்தி ஏற்படுத்திய அபிவிருத்தியைத்தானே? அகதியாக சொந்தநாட்டில் அனைத்தையுமிழந்து தன் பிரதேசத்தில்  கால் வைத்தான், உரிமை கேட்கவில்லை. விட்டானா? உங்கள் இடத்துக்கு போ எனக்கலைத்தவன் அங்கேயும் வந்து, தன்இடம் என்று கொன்று குவித்தான். இப்போ நமக்கென்று எதுவுமில்லையாம். இவருக்கு இதிலிருந்து என்ன புரிகிறது? எங்கள் மண்ணில் சிங்களம் விவசாயம் செய்யுது எங்களை விரட்டிவிட்டு, எங்கள் கடற்பிராந்தியத்தில் சிங்கள மீனவர், எங்கள் படித்த பட்டதாரிகள் தெருவில் சிங்கள உத்தியோகத்தர்கள் எங்கள் பிரதேசங்களில், எங்கள் மொழியில் எங்கள் முறைப்பாடுகளை செய்ய முடியவில்லை. சரி..... ...நாங்கள் அபிவிருத்தி செய்து சுயமாக வாழ முடியுமென்றால் சிங்கள அராஜகப்படை ஏன் இன்னும் எங்கள் மண்ணை அடைத்துக்கொண்டிருக்கு என்பதற்கு இவரிடம் பதிலுண்டா? இது எல்லோருக்கும் பொதுவான நாடு என்கிறார்கள் ஏன் எங்களை அடித்து விரட்டினார்கள்? ஏன் எங்கள் கோவில்களை ஆக்கிரமிக்கிறார்கள்? அதுக்காவது பதிலுண்டா இவரிடம்?  நாங்கள் சுதந்திரம் பெற்றதிலிருந்து உழைத்து சாப்பிடவில்லை, கடன்வாங்கியே சாப்பிட்டோம் என அவர்களே ஒத்துக்கொள்கிறார்கள். அத்தோடு அடித்து, விரட்டி, பிடுங்கி சாப்பிட்டோம் என்பதை இன்னொருநாளில் சுடுகாட்டிலிருந்து ஒத்துக்கொள்வர்.  

 22. இனமுரண்பாடு, இனக்கலவரம், இனப்படுகொலை, இரத்த ஆறு, என்கிற எச்சரிக்கை சுருதி மாறி  சாதிய முரண்பாடு, சமயமுரண்பாடு, பிரதேசவாத முரண்பாடுகளைத் தோற்றுவிக்கும் என்று இழுப்பார்கள் அவர்கள், அதற்கு நம்மவர் சிலரும் ஒத்தூதுவார்கள். நரியார் பதவிக்கு வந்ததும் வராததுமாக அவசர அவசரமாக தட்டு வைத்து அழைத்தவர்களைப்பார்க்க அது புரிகிறது. தான் போடுற திட்டத்தை இம்மியளவேனும் பிசகாமல் நிறைவேற்றுபவர்களை சிங்களம் நன்றாகவே அறிந்து தக்க நேரத்தில் கையாளுகிறது.

 23. அவர்களுக்குள்ளும் இருக்கு, நம்மைப்போல் தீவிரமில்லை. இல்லாதிருந்தால் இவ்வளவு யதார்த்தமாக தக்க சமயத்தில் தங்களது அடக்குமுறைக்கு நிகராக  இவரால் இந்த காரணத்தை கையிலெடுக்க முடிந்திருக்காது. ஆனால் சமகால களநிலை அவர்சொல்வதுபோல் இல்லை நம்மிடை.

×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.