Jump to content

satan

கருத்துக்கள உறவுகள்
 • Posts

  5973
 • Joined

 • Last visited

Posts posted by satan

 1. 7 minutes ago, குமாரசாமி said:

  எப்ப சிங்களவன் தமிழரிலை கை வைக்க தொடங்கினானோ அப்ப அழிய வெளிக்கிட்ட நாடுதான் சிறிலங்கா....

   இப்ப தமிழன்தான் கைகொடுத்து கட்டியெழுப்ப வேண்டுமாம், ஏனென்றால் எங்களாலதான் கடன் வேண்டினவையாம்.

 2.    ஐயையோ ....... எல்லாத்தையும் சொல்லிப்புட்டாங்களே, சுமந்திரன் தொலைஞ்சார்ரா.  அவரை தொட்டு உங்கட கையை அழுக்காக்காதீங்கோ! அங்கை வைக்கிற ஓலம் இலங்கையில வந்துதான் நிக்கும்.

 3.   வெட்கங்கெட்டு பகிரங்கமாக சொல்கிறார்கள், நாட்டை கட்டியெழுப்ப வேண்டுமென்பதற்காக புலம்பெயர்ந்த தமிழரின் உதவி வேண்டுமாம், அவர்களுக்கு தடை விதித்துக்கொண்டு அவர்களிடம் இருந்து உதவி பெறமுடியாதாகையால் தடையை நீக்குகிறார்களாம். ஆக தமது பொருளாதாரத்தை கட்டியெழுப்ப மட்டும் தமிழர் தேவை. தேவை முடிந்தவுடன் புலம் பெயர் புலிகள் நாட்டை துண்டாட முயற்சிக்கிறார்கள் என்று மாத்திபோடுவான். இதே தமிழர் போரால் சிதைந்த தம் இனத்தை தூக்கி நிறுத்த முன்வந்ததாலேயே அதை முடக்கும் வகையில் அவர்களுக்கு தடை விதித்தது. இப்போ அவர்களின் முதலீடுகள் அவர்களுக்கு வேண்டும், அங்கேயும் தமிழருக்கு எதுவும் செல்லாமல், தன்னிறைவு அடையாமல் பாத்துக்கொள்வார்கள்.

  • Like 1
 4.    யாராவது இரகசியமாய் அழைத்து, பூட்டிய அறையில் வைத்து போஷிப்பினம் ..... சே.... பேசுவினம். அவர் பிரதம மந்திரி கனவோடு வேலை செய்யிறார்.

 5.          நாட்டை காட்டி ஒவ்வொரு நாட்டிடமும் கையேந்துவது, பிறகு கடனில் இருக்கும் நாட்டிற்கு இறையாண்மை தேடுவது,   இதைத்தான் வரட்டுக்கவுரவம்  என்பது. கடன் குடுக்க வழியில்லை என்று தெரிந்தும் தொடர்ந்து கடன் கேட்டுக்கொண்டே இருப்பது இவர்களின் கொள்கை.

 6. 7 minutes ago, nochchi said:

  சும் யேர்மனியில் நிற்பதாக ஒரு அரசியற் செயற்பாட்டாளர் கூறினார்.

  சாமியார், சிறியர் அறியவில்லையா? கொஞ்சம் கொடுத்து விடுகிறது..... நான் டொலரை சொன்னேன்.

 7. 4 minutes ago, nochchi said:

  கை கொடுக்க வேண்டிய தருணத்தில் கைத்தூக்கி விடும் சமூகமும் கூட என்பதை நிரூபிக்க வேண்டிய நேரம் இது.

  எங்களை விழுத்தி எழுந்திருக்க முடியாமல் மிதித்துக்கொண்டு தங்களை கைதூக்கி விடச்சொல்லி கூவுவது எந்தவகையில் நிஞாயம்? அப்படித்தான் முட்டி முனகி கைகொடுத்தாலும் எழுந்தவுடன் மீண்டும் விழுத்துவது எம்மையே. நாங்கள்  ஒன்றும் அவர்களிடம் பிச்சை கேட்டுக்கொண்டிருக்கவில்லை,  பறித்ததை தா என்றே கேட்க்கிறோம். நாடு என்கிற அடிப்படையா? சிங்கள பவுத்த நாட்டுக்கு எமது உதவி தேவையில்லை. அவர்கள் எங்களது உரிமையை தந்தால் நாடு பற்றி யோசிக்கலாம். இன்னும் எங்கள் பூமி பறிப்பதை நிறுத்தவில்லை,  கேட்டால் கலவரம் வெடிக்கும் என்று பயமுறுத்துகிறார்கள், எதற்கு எங்கள் உதவி? எங்கள் பாரம்பரிய  பூமியில்  எங்களுக்கு சுதந்திரம் இல்லை, நிம்மதியாக வாழ முடியவில்லை, எங்களுக்கு ஏது நாடு?

  அது நாசமாய்ப் போகட்டும்!

 8. அப்போ! இந்தமுறை ஜெனிவாவில் இலங்கைக்கு எதிரான குரல்கள் ஒலிக்காது என்கிறீர்கள். அதுதான் புலம்பெயர்ந்தோரை வளைத்து பிடித்தாச்சே, நரிபுத்தி! கோத்தபாய மனித உரிமைகளின் பிதா என்று நிறுவுவார் நரியார் ஜெனிவாவில். மீண்டும் மீண்டும் ஏமாறும் முட்டாள்கூட்டம். சுமந்திரன் இருக்கும்வரை சிங்களம் எல்லாவற்றையும் வெடியாளும். பிரதம மந்திரி பதவி பேரம்பேசப்படலாம். 

 9. 7 hours ago, பகிடி said:

  ஏன் இலங்கையில் கோழி முட்டை போடாதா? இல்லாட்டி இலங்கை சேவல்களுக்கு ஆண்மை குறைந்து விட்டதா? 

  நாட்டின் நிலை புரியாமல் ஐயா எங்கிருந்து பேசுகிறீர்கள்? வாருங்கள்!  வந்து எங்கள் கோழிகளுக்கு என்ன குறை என்று சோதிச்சு சொல்லுங்கள். 

 10. 11 hours ago, nedukkalapoovan said:

  தீவகத்தில் அமைக்கலாம்.. அப்படி அமைந்தால்.. தீவக கடற்கரைகளை அழகுபடுத்தி.. தீவக இயற்கை வளத்தை பாதுகாத்து.. உல்லாசப் பயணத்துறையையும் விரிவாக்கலாம். பிந்தங்கிய இடமாக இருக்கும் தீவகம் முன்னேற வாய்ப்புருவாகும்.

  ஐயோ ....  நெடுந்தீவை சிங்கப்பூர் ஆக்கப்போகிறேன் என்றவர், இதைக்கேட்டால், வழக்கு தொடரப்போகிறார். 

 11. இவ்வளவு நாளும் எல்லாம் இருந்தது, இப்போ அவர்களுக்கு ஏற்ற சூழ்நிலை மாறிவிட்டது என்பது தங்களிற்கு தெரியாததேனோ?

  மனிதர்களுக்கும் பொருந்தும். நீங்கள் கோழியில் மட்டும்  கவனம் செலுத்துகிறீர்கள்!

 12. ம்........! ஹம்பாந்தோட்டையில் வட்டமிட்ட சீனக்கப்பலுக்கு அனுமதி வழங்கி அது உள் நுழைந்து விட்டது என்பது இங்கு யாருக்கும் தெரியுமோ என்னோ? இல்லை ..... இன்னும் இங்கு வட்டமடிக்கிறீர்களே என்பதால் கேட்கிறேன்!

 13. சீனாவின் கைதான் ஓங்கும். இலங்கை அதன் புகுந்த வீடு! இவை குரைச்சுப்போட்டு, திரும்பி ஊழையிட்டு கொண்டு போகவேண்டியது. 

 14. எத்தனை பொய் சொன்னாலும் ஒரு மெய்யை மறைக்கேலாது. மாறி மாறி சொல்லி தங்களை தாங்களே ஏமாற்றிக்கொள்ள வேண்டியது. சிங்கப்பூர் மருத்துவம் சரியில்லையென்று தாய்லாந்துக்கு போயிருக்கிறார். ஆனால் அங்கு சரிவராது, தங்கி வேறுநாட்டுக்கு போக இருக்கிறார். ஒருநாட்டிலும் இவர் நோய்க்கு மருந்தில்லை என்று நாடுகள் கைவிரித்து விட்டன. இனி என்ன? ஆள் குளோஸ். 

 15. ஏற்கெனவே சுமந்திரன் உந்த புலம்பெயர்ந்தோரை வளைத்துப்போட ஓடுப்பட்டு திரிஞ்சவர் கண்டியளோ! யாராவது வந்தால் சுரேந்திரனையும் சேர்த்து இழுத்து வரலாம் என்று, ஒருவரும் மாட்டுப்படேல்லை, காத்திருந்து வேறு வழியில்லாமல் இப்போ சுரேந்திரன் தலைமை எடுக்குது, தன்னை பாத்து யாராவது தொடருவினை என்று. சர்வதேசமே ஒதுங்கும்போது இவர்கள் வந்து முறியப்போகினம். 

 16. உதவி தேடி தட்டிய கதவுகள் திறக்க மறுத்துவிட்டன, வேறு வழியில்லை நரியாருக்கு, புலம்பெயர்ந்தோர் கதவை தட்ட வேண்டிய கட்டாயம் வேறொன்றுமில்லை. விட்டில் பூச்சிகள் வந்து விழும்!

  • Like 1
 17. 16 hours ago, தமிழ் சிறி said:

  முன்னாள் ஜனாதிபதிக்கு இலங்கையில் வாழ்வதற்கு எந்தவித பாதுகாப்பு அச்சுறுத்தலும் இல்லை என பாதுகாப்பு தரப்பினர் உறுதிப்படுத்தியுள்ளனர்.

  நீங்கள் வெளிபாதுகாப்பு கொடுக்கலாம், ஆனால் அவரை அவருக்குள்ளேயே இருந்து துரத்தும் எதிரியிடம் இருந்து எப்படி பாதுகாப்பீர்கள்? அந்த எதிரி  அவர் இறக்கும்வரை துரத்தும். அவர் சர்வகட்சி அரசை உருவாக்கவே ராஜினாமா செய்தார் என்று நாமல் மாத்தையா சொல்லுறார், மருத்துவத்துக்காக சென்றார் என மஹிந்தா ஐயே சொல்லுறார், அவர் தஞ்சஸம் தேடுறார் என்று தாய்லாந்து ஜனாதிபதி சொல்லுறார், அவருக்கு பாதுகாப்பு சிறப்புரிமை உண்டு என்று ரணில் சொல்லுறார், அவரை யாரும் நாட்டிலிருந்து துரத்தவில்லை  இருந்தும் இவர் ஏன் தப்பி ஓடினார்? தொடர்ந்து நாடு நாடாய் பதில் சொல்லாமல் ஓடுறார்?

  பைத்தியம் பிடித்திருக்குமோ> வழிபாட்டுத்தலங்களை தரிசிக்க வேண்டுமாம்! சாமியாராக போறாரோ?

  • Haha 1
 18. 4 hours ago, ஏராளன் said:

  குறிப்பிட்ட நாட்களுக்கு எரிபொருள் நிரப்பும் பயன்பாட்டுக்காக கப்பல் வருகை தருவது

  ஆமா ..... நாட்டு மக்கள் எரிபொருளுக்காக வரிசையில் காத்திருக்கும்போது,  சீனக்கப்பலுக்கு நிரப்புவதற்கு மட்டும்  எரிபொருள் எங்கிருந்து வந்தது?

  4 hours ago, ஏராளன் said:

  சீன கப்பல் இலங்கையின் ஹம்பாந்தோட்டை துறைமுகத்துக்கு வரும்போது அதற்கு சில நிபந்தனைகளை விதிக்கும்படி இலங்கை பாதுகாப்புத்துறை கூறியது. அதன்படி, இலங்கை பிரத்யேக பொருளாதார மண்டலத்துக்குள் கப்பல் இருக்கும்போது அதன் தானியங்கி அடையாள அமைப்பு இயக்கப்பட்டிருக்க வேண்டும்; இலங்கை கடல் பகுதிக்குள் எவ்வித அறிவியல் ஆராய்ச்சிப் பணிகளும் செய்யக் கூடாது என்று இலங்கை பாதுகாப்புத்துறை கேட்டுக் கொண்டிருந்தது.

  தொல்லியல் அகழ்வாராய்ச்சி, வனவளா பாதுகாப்பு என்று ஒவ்வொன்றை வைத்துக்கொண்டு தமிழரின் பூர்வீக நிலங்களை, வழிபாட்டுத்தலங்களை சுரண்டும் ஜனநாயகர்கள் சொல்கிறார்கள், சீனா அப்படியே கடைப்பிடிக்கும் என்று எப்படி நம்புவார்கள்? தான் செய்வது அடாவடி, மற்றவர் மட்டும் சொல்படி நடக்க வேண்டும் என்கிற எதிர்பார்ப்பு.

  4 hours ago, ஏராளன் said:

  "இலங்கை இறையாண்மை மிக்க நாடு. அது தமது சொந்த முடிவுகளை சுயமாக எடுக்கும். அந்நாட்டுக்கு இந்தியா அழுத்தம் தருவதாக வெளிவரும் கூற்றை நிராகரிக்கிறோம். இலங்கைக்கு அசாதாரமான வகையில் 3.8 பில்லியன் டாலர்கள் அளவுக்கு இந்தியா பொருளாதார ரீதியாக நிதியுதவி செய்துள்ளது. ஒவ்வொரு நாட்டுக்கும் சுயமாக முடிவெடுக்கக் கூடிய உரிமைகள் உண்டு. பரஸ்பர மரியாதை, நலன்கள், உணர்வுகள், எல்லை பாதுகாப்பு போன்றவை மீது அந்தந்த நாடுகள் அவற்றின் வளர்ச்சியின் அடிப்படையில் முடிவு எடுக்கும்.

   கை மீறிப்போய்விட்டது. விழுந்தவன் மீசையில மண் ஒட்டவில்லை என்று துடைத்துக்கொண்டு  சீனக்கப்பல் போகும்வரை கண்வெட்டாமல் பாத்துக்கொண்டு இருக்க வேண்டியதுதான். 

 19. 10 hours ago, குமாரசாமி said:

  சீனாவும் இந்தியாவும் எங்களுக்கு இரண்டு கண்கள் எண்டு சிங்களம் கதை விட்டால் என்ன செய்யிறது? 😁

  இந்தியா, கண் தப்பினால் போதும் என்று கண்ணைப் பொத்திக்கொண்டு திரும்பிப்பாக்காமல் ஓடுவதே சிறந்தது, அல்லது சீனாவோடு ஒத்துப்போவதை தவிர வேறு வழியில்லை அதற்கு. இருந்த ஒரு சிறந்த வழியையம் அதே அடைத்து தனக்கு வினையை தானே தேடிக்கொண்டது. சிங்களத்தை விட தமிழரை அழிப்பதில் தீவிரம் காட்டியது இந்தியாவே, இலங்கை வெறும் கருவியே. பொன்சேகா கூறியது "எங்களது புலிகளுக்கெதிரான  தாக்குதலை கிளிநொச்சியோடு நிறுத்திக்கொள்ள தீர்மானித்தோம், ஆனால் இந்தியாவே எங்களை மேற்கொண்டு போரை தொடர வற்புறுத்தியது." மஹிந்தா சொன்னது  "புலிகளுக்கெதிரான இந்தியாவின் போரையே நாங்கள் செய்தோம், நாங்கள் கேட்க்காமலேயே எல்லா உதவிகளையும் எங்களுக்கு அளித்து, போரை முடித்துவைக்க இந்தியா உதவியது." பேராசிரியர் பத்திரன சொன்னது "அதிகார பரவலாக்கல் வரைபை வகுக்கும்படி மஹிந்தா தன்னை பணித்து, தான் அதில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது, இந்தியா தன்னை அழைத்து, அதெல்லாம் செய்ய வேண்டாம், உங்கள் முயற்சியை நிறுத்திக்கொள்ளுங்கள் என்று தடுத்தது." எரிக் சொல்ஹெய்ம் என்ன சொன்னார், ஏன் ஒவ்வொருதடவையும் இலங்கைக்கு விஜயம் செய்து விட்டு நாடு திரும்பும் போதெல்லாம் இந்தியாவுக்கு சென்றார் என்பதை அவரே விளக்கியிருந்தார். இத்தனை உயிரை பலி எடுத்து தனக்குத்தானே ஆபத்தை தேடி அழைத்துக்கொண்டது. இந்தியாவுக்கு தான் சவால் விடுமளவுக்கு தன்னில் நம்பிக்கையில்லை. எதை கண்டாலும் பயம், அதனாலேயே வலிய போய் முட்டி மண்டையை உடைத்துக்கொள்கிறது. வெகுவிரைவில் அதன் பலனை அனுபவிக்கும்.  

 20. 19 minutes ago, குமாரசாமி said:

  இந்தியா தானும் பருத்தித்துறை பக்கம் ஒரு கப்பலை ஏன் விடக்கூடாது?

  "சூடு கண்ட பூனை அடுப்பங்கரையை நாடாது." என்று சின்ன வயதில் படித்திருப்பீர்கள். ஏற்கெனவே புலிகளிடம் வாங்கிக்கட்டிய அனுபவம், அதிலும் வந்திருக்கிறது ஏவுகணை தாங்கிய போர்க்கப்பல்கள், இலங்கை வேண்டுமென்றே வரவழைத்திருப்பதுபோல் தெரிகிறது. சும்மா எச்சரித்துக்கொண்டு காலத்தை கழிப்பவரை  சுத்தி வளைச்சு அடிச்சால் தப்பி ஓடவும் வழியிருக்க வேணுமே. இலங்கையோ இந்தியாவுக்கும் பெப்பே, சீனாவுக்கும் பெப்பே காட்டி விளையாடுது.

 21. 2 hours ago, தமிழ் சிறி said:

  அதன் பேச்சாளர் சுரேன்சுரேந்திரன் மீதான தடைகளை இலங்கை அரசாங்கம் நீக்கியுள்ளது.

  ஏன் இவரை மட்டும் தனியாக பெயரிடுகிறார்கள்? சுமந்திரன் சொல்லியிருப்பாரோ?

 22. 17 hours ago, தமிழ் சிறி said:

  மாவையருக்கு... கழுத்திலை, சுளுக்கு போலை..
  என்ன, ஏதெண்டு...  திரும்பி பார்க்க முடியாமல், கஸ்ரப்படுகிறார். 

   திரும்பிப்பாத்தால், தானும் அழுதுடுவேனோ என்று மனதை கல்லாக்கிக்கொண்டு இருக்கிறார் பாவம் அவர்!

  17 hours ago, குமாரசாமி said:

  ஐயா  இப்பதானே  சரியான கதிரையில வந்து குந்தியிருக்கிறார். இனி எல்லாமே சுபமே ....

  Bild

  குந்தியவர், அதில்  எப்படி நிரந்தரமாக இருப்பது என்றே யோசிப்பார்.

 23. On 11/8/2022 at 22:25, தமிழ் சிறி said:

  சிங்கப்பூர் சட்டமா அதிபர் அவருக்கு எதிரான போர்க் குற்றச்சாட்டு தொடர்பாக நடவடிக்கை எடுக்கவிருந்த நிலையில் அவர் அங்கிருந்து வெளியேறியதாக தெரிவிக்கப்படுகின்றது.

  வழமையான நடைமுறைக்கு மேலும் இரண்டு வார விஸா வழங்கிவிட்டு, ஆளை கிளப்புறத்துக்கு போர்க்குற்றச்சாட்டை ஆயுதமாக எடுத்தாரா சிங்கப்பூர் சட்டமா அதிபர்? அல்லது வைத்திருந்து பாதுகாப்பாய் அனுப்பிவிட்டு எல்லோர் காதிலும் பூச்சுற்றுகிறாரா? நடவடிக்கை எடுப்பதாயிருந்தால், அவர் சிங்கப்பூரில் தங்கியிருந்தபோதே எடுத்திருக்கலாம், மேலதிகமாக விஸா நீடிப்பு செய்யாமல் இருந்திருக்கலாம். அதுதானே அவர்களுக்கு என்ன இழப்பு? உல்லாசப்பயணி கோத்தா, வருவாய் நாட்டுக்கு தேவை.

   

  9 hours ago, நிலாமதி said:

    சகிப்புத்தன்மை உள்ளவர்கள் மட்டும்  பார்க்கவும்.   குமட்டினால் நான் பொறுப்பில்லை .

  நடு முறி எனக்கு என்று வாங்கி சாப்பிடுவாரா கோத்தா!

×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.