Jump to content

satan

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    9067
  • Joined

  • Last visited

  • Days Won

    1

Everything posted by satan

  1. அவர்கள் இப்போது ஒருவரை இவர்தான் கொலைகாரர் எனத் தெரிவு செய்திருப்பார்கள், சுட்டிக்காட்டுவதற்கு அவர்வரை விசாரணை வரும்வரை புலுடா விட்டு சோடிக்கிறார்கள். அப்படித்தான் எண்ணத் தோன்றுகிறது இவர்கள் சொல்கிற கோணத்தைப்பாத்தா!
  2. ஏன் இப்போ அவர்களை தேடுகிறீர்கள்? கண்ணுக்கு குளிர்ச்சியாய் காட்சிகள் பாக்க முடியலையே என்கிற ஏக்கம் ஐயாவுக்கு! இதுகளுக்கெல்லாம் பிரம்படிதான் அவசியம். தங்களை ஒழுங்கமைக்க முடியல அதுக்குள்ள மக்களுக்கு விடியல் வாங்கித்தரப்போகுதுகள். சிங்களவனும் தெரிந்தே எல்லோரும் சேர்ந்து வாருங்கள் என்று அழைக்கிறான். த. தே. கூட்டமைப்பு மட்டும் தமிழரின் பிரதிநிதிகள் இல்லை என்கிறான் உதயன் கம்மன்பில. சுமந்திரன் தமிழரசுக்கட்சி தனித்து போட்டியிடும் என்கிறார். இதிலிருந்து குடுமி யார் கையில் என்று யோசித்தறிந்து கொள்ளுங்கள்!
  3. ரஷ்யா நேரடியாக கேட்க்காது இந்தியாமூலம் கேட்கவைக்கப்படலாம் தனக்கு வேண்டியதை. சோழியன் குடுமி சும்மா ஆடாது மூன்றாம் உலகப்போர் என்று மூண்டால் மொத்தமாக கேட்கும், அதற்கு அந்த உரிமை இருக்கிறது நீங்கள் சொல்வதை வைத்துப்பாத்தால், கேட்டுக்கேள்வி இல்லாமல் கூப்பிட்ட குரலுக்கு அவர்கள் ஓடி வந்தால் பதிலுக்கு இவர்களும் ஓடிப்போகத்தான் வேண்டும், ஓடுவார்களா இவர்கள்?
  4. ரணிலை திறமையான தலைவர் என்று கோத்தா புகழ்ந்தது; இதுக்குதான் என்று கோத்தா பறந்த பின்தானே தெரிந்தது. நால்லாய் தலையில ஐஸ் வைத்திருக்கிறார்! அவர் அமெரிக்காவுக்கு போகவில்லையென செய்திகள் சொல்கின்றன. இருந்தாலும் இனி அவர் அமெரிக்காவின் பிரச்சனை. அவர் விசாவுக்கு விண்ணப்பித்தபோது மறுத்த அமெரிக்கா, விஸா வழங்குகிறது என்றால் ஏதோ திட்டம் பின்னால் இருக்கும். நாண்டுகொண்டு குடியுரிமையை ரத்துச் செய்தவர் பெற்ற படிப்பினை போதாதென்றா மறுத்த, இழந்த விஷாவை பெறுகிறார் என்றால் எதுக்கும் ஒரு காரணம் பின்னாளில் வருந்துவார் கோத்தா. ஆனா திரும்பி ஓடிவர முடியாது, சுருக்கு கயிறு இறுக்கப்பட்டுவிடும். அண்மையில் ஒரு இராணுவ அதிகாரிக்கு பயணத் தடை போட்டது அமெரிக்கா என்பதும் நினைவிற் கொள்ள வேண்டும். "கனத்தை கனம் பாக்குமாம் வேறு எதையோ எது பாக்குமாம்" என்றொரு பழமொழி உண்டு. நீங்கள் பாத்தது வீட்டுகார அம்மாவுக்கு தெரியுமோ? தெரிந்திருந்தா விளக்குமாத்தால விழுந்திருக்குமே? இல்லை அப்படியொரு ஆசை, நீங்கள் பாத்ததை நாங்கள் பாக்க கிடைக்கேல்லையே என்று. நீங்கள் பாத்தது திரைச்சேலையாய் இருக்கும் சிறியர், எதுக்கும் இன்னொரு தடவை பாத்து உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள் இணைக்கமுன்.
  5. போற இடமெல்லாம் சாத்தானையும் கட்டியிழுக்கிறதென்று நீங்கள் முடிவெடுத்துவிட்டால், நான் என்ன செய்யிறது? இழுபடவேண்டியான். ஒருவரின் கருத்து மேல் நம்பிக்கை வைத்து பதில் கருத்து எழுதியது தப்பா மை லோர்ட்? அவரின் பிற்குறிப்பை பாக்கத் தவறியது என் தப்புத்தான். அவ்வளவு அந்தக் கருத்து தந்த உணர்ச்சி எனது அறிவை மறைத்து விட்டது. அந்தச் செய்தி என் வாழ்வை புரட்டிபோட்ட நாட்டைகுறித்தது. எனக்கு இது பற்றி நிறைய ஊகங்கள் எழுவதை கட்டுப்படுத்த முடியவில்லை. இந்தச் செய்தியை பாத்ததும் பொத்திக்கொண்டு விட்டேன். ஆனாலும் ஒரு கேள்வி, ஏன் கோஸான்?, இந்த தினேஷ் தற்கொலை செய்வது என்று முடிவெடுத்திருந்தால்; அதை இந்தச் சாவுக்கு யாரும் காரணமில்லை எனது கடன், அல்லது பிரையன் தோமஸ் அல்லது நான்தான் காரணம் என்று எழுதிப்போட்டு வீட்டில் அமைதியான ஒரு சாவைத் தெரித்தெடுத்திருக்கலாமே, எதுக்கு ..... இப்பிடி ....? தினேஷ் அங்காலை போனபின்தான் பிரையன் தோமஷின் நினைவு வந்திருக்கும் அவருக்கு, பின் செய்தியை அனுப்பியிருப்பார். தினேஷ் தன்ர கையை கட்டிப்போட்டு கழுத்தை இறுக்கியிருப்பாரா? அல்லது கழுத்தை இறுக்கிப்போட்டு கையை கட்டியிருப்பாரா? எது முதலில் நடந்திருக்கும்? ஒருவேளை ..... இப்பிடியிருக்குமோ ....? சீச்.....சீ அப்பிடியிருக்காது. தினேஷின் சாவு ஈடு செய்ய முடியாதது, தடுத்திருக்க கூடியது. அதைவைத்து கருத்து எழுதுவது எனது நோக்கமல்ல, ஆனால் இந்த போலீசார் விடுகிற நகைச்சுவை தாங்க முடியவில்லை. ஏதோ தாங்கள் ஜேம்ஸ் பாண்ட் என்கிற நினைப்பில் கருத்துக்களை வெளியிடுவதும் பிறகு மறுப்பதும் எரிச்சலை கிளப்புது. சாத்தியமான வழிகளில் விசாரிக்கிறார்களா? நமக்கெதுக்கு வம்பு தினெஸே கடைசியாக இப்படியொரு நல்ல மகளை பெற்றுத்தந்ததற்கு நன்றியென சிறப்புச்சான்றிதழ் கொடுத்துச் சென்ற பிறகு? இல்லை ...! இந்த சான்றிதழையாவது சாவதற்கு முன் கொடுத்தாரா? என்கிற எனது இறுதிகேள்வியோடு முடிப்போம். உங்களுக்கும் இப்பிடி இடக்கு முடக்காய் ஏதாவது கேள்வி எழுந்தால் தயங்காமல் எழுதுங்கள் கோஷான். எனக்கும் பேச்சுத்துணைக்கு ..... இரண்டுபேரும் சேர்ந்து துலக்கிடுவோம். சிறியர் ரொம்பப் பயப்படுறார், அவரை விட்டுவிடுவோம். பாவம் அவர்!
  6. ஐரோப்பிய நாடொன்றுக்கு குடும்பத்தோடு விடுமுறைக்காக சென்றுள்ளதாக செய்திகள் கூறுகின்றன.
  7. அதெல்லாம் மனச்சாட்சி, வெக்கம், சூடு சொரணையுள்ளவர்களுக்கு வேலை செய்யும். இவர்களுக்கு பகுத்தறிவுமில்லை, பட்டறிவுமில்லை. கடைசித்தமிழன் உள்ளவரை அவர்களையும் அவர்களது அபிலாஷைகளையும் வைத்து சூதாடுங்கள். இத்தனையாண்டுகளாய் இந்த இனத்துக்கு தானே தலைவன் என்று மார்தட்டிக்கொண்டு முதுமை வரை சென்றுவிட்டார். எதையாவது சாதித்ததுண்டா? இருந்ததையும் இழந்து, திறந்த கதவுகளையும் ஓடியோடி மூடியதே சாதித்தவை. மற்றைய நாடுகளில், இனங்களில் எத்தனை புதிய புதிய தலைவர்கள் வந்து சிறப்பாக சிந்தித்து செயலாற்றி மக்கள் பிரச்சனைகளை தீர்த்து அபிவிருத்திகளை அடைந்திருக்கிறார்கள். இவர்கள் அடுத்தவரின் நலன் காக்கும் தலைவர்கள்! முட்டாள்களுக்கும் சுயநலவாதிகளுக்கும் யார் என்ன சொன்னாலும் அது அவர்கள் மொழியில் தவறாகத்தான் புரியும். தமிழனின் தலைவிதி இவ்வளவு நீண்டதாக இருக்கிறதே என்று வருத்தப்படுவதை வேறொன்றும் தெரியவில்லை. இவர்களின் பாத்துப்பாத்து புளித்துப்போன முகத்தை பாத்தாலே வெளிநாட்டு அரசியல்வாதிகள் முகம் சுளிப்பார்கள். இத்தனை காலமாய் ஒரே முகம், இதுவரை பிரச்சனையை தீர்க்க முடியாதவர்கள் என்ன மாற்றம் வரப்போகிறது என்று? அதனாலோ என்னவோ சிங்களத்தோடேயே பேசுவதும் முண்டுகொடுப்பதும் என்று முடங்கியிருக்கிறார்கள். வெளியில் முகம் காட்டத்துணிவில்லாமல்.
  8. அட... சிறியர் ஒரு துணிஞ்ச கட்டை என்றல்லவா இவ்வளவுநாளும் நான் நினைத்திருந்தேன்!
  9. முந்தி ஒருவர் இருந்தார் களத்தில், பொருத்தமான கேலிச்சித்திரம் வரைபவர் பெயரை மறந்து விட்டேன். அவர் ஏன் இப்போது வருவதில்லை? பாஞ்சும் வந்தால் நல்லது. இவர்கள் எல்லாம் எங்கே போய் மறைந்திருக்கிறார்கள்?
  10. நான் வரேல்லை உந்த சன்மானத்திற்கு. வேண்டுமென்றால் சிறியரை கேட்டுப்பாருங்கள். இருந்தாலும் சொல்லுறேன் 4ம் மாடிக்கு சன்மானம் கேட்டுப்போனால்; வெகு விரைவில் தினேஷிடமே யார் கொலையாளிகள் என்று நேரடியாக கேட்டு அறிந்து விடலாம்.
  11. கோஸான், சிறி! சந்தேகமேயில்லை, இலங்கை போலீஸ் குற்றபுலனாய்வாளர் எங்கள் செய்திகளை வாசிக்கிறார்கள் என்பது இதிலிருந்து தெரிகிறது. சந்தேகத்துக்கிடமான ஒருவரை பின்தொடர்கிறது குற்றப்புலனாய்வு, விசாரணை தீர்க்கமான கட்டத்தை நெருங்கி விட்டது என்று அறிக்கை விட்டவர்கள் மீண்டும் விசாரணை அவரின் மனைவியின் பக்கம் திரும்பியுள்ளது. நாங்கள் கொடுத்த துப்பு வேலை செய்கிறது!
  12. ஈடு செய்ய முடியாது. வருவது பத்து, விழுங்குவது நூறு. எப்படி நாடு உருப்படும்? மின்சார, ஏனைய அறவிடப்படாத கட்டணங்களை நீதிமன்றத்துக்கு கொண்டுபோனால் பாராளுமன்றத்தில் ஒருவர் கூட மிஞ்ச மாட்டார்கள். இதில ஏழைமக்களுக்கு விடுதலை வேண்டிதரப்போகிறார்களாம். ஒவ்வொரு கட்சியும் பதவி ஏறும்போதும் மாறி மாறி பதவிக்காக அலைபவர்கள், தங்கள் ஊழல்களிலும், நிலுவைகளிலும் இருந்து தப்பிப்பதற்காகவே! வடக்கின் வசந்தம் உட்பட.
  13. இந்தியா என்கிற சகுனியை அழைக்காவிட்டாலும் அது சும்மா இராது. பூகோள பிராந்திய நலன் என்று பூந்து குடைச்சல் கொடுத்துக் கொண்டே இருக்கும். சர்வதேசமும் இந்தியாவை மீறி ஒன்றும் செய்யாது, அது அவர்களை கட்டுப்படுத்தும். இந்த பேச்சுவாத்தை என்ற செய்தி வெளிவந்தவுடன் எத்தனை மனிதர்கள் இரகசியப்பயணம் வந்து சென்றிருக்கிறார்கள் இந்தியாவிலிருந்து. இந்தியா இதிலிருந்து விலகி இருக்க வேண்டுமென்றால் இலங்கையைப்போல் ஒரு சூழ்நிலை இந்தியாவுக்கு வரவேண்டும், இல்லையேல் அதை அணைப்பதுபோல் அணைத்து எங்களின் கட்டுப்பாட்டுக்குள் முடக்கவேண்டும். முடியுமா? அப்படியென்றால் அது யாரால்?
  14. இவர்கள் எங்கே போய் ஒளிந்தாலும் இனி இவர்கள் விதியின் கையில், அது பாத்துக்கொள்ளும்.
  15. இன்னும் பலர் குற்றபுலனாய்வாளர் பட்டியலில் உள்ளார்களாம். சிறி! நீங்கள் இரகசியமாக திரி மாறி தகவல் தந்தாலும் கவனிப்படுமாம்.
  16. ஓ ....ஓ கூடி வருவதற்க்குத்தான் ஓடி மறைகிறனீர்களோ? இது எனக்குத் தெரியாமற் போச்சே போஸ்!
  17. சாத்தான் தலைமறைவு! விசாரணையை திசைதிருப்பிய கோஸானை தேடி போலீசார் வலைவீச்சு! புதுசா வாலி; சம்பந்தட்டவர்களின் தொடர்பு பட்டியலில் இருப்பதால், சந்தேகத்தின் பேரில் வாலியை புலனாய்வாளர் பின் தொடர்நது கவனிப்பு. சிறி! இப்போ, யார் மாட்டுவார் பொலிஸிடம்? குற்றவாளிகளைப்பற்றி துல்லியமான துப்புத் தருபவர்களுக்கு சன்மானம் அறிவிப்பதே போலீசாரின் பணி.
  18. அவர்களுக்கு புரியாமலில்லை அவர்களும் சேர்ந்த கேம் விளையாடுகிறார்கள். ஒருநாளும் இல்லாதவாறு மக்கள் விரும்பாத தீர்வை ஏற்கமாட்டோம் என்று சம்பந்தர் அறிக்கை விடும்போதே தெரியும், மக்களை கடைசியாய் மீண்டு ஏழாத்தவாறு கவிழ்க்கப்போறார் என்று. அங்கை பாக்கேல்லையே சுமந்திரன், எல்லோரும் வாங்கோ சேந்துபோய் பேசுவோம் என்று கூப்பிட்டிட்டு, தான் மட்டும் தனிய போயிருந்து கதைக்குது. அது ஒருநாளும் ஒரு கோப்புக்குள்ள வராது. இவருக்கு என்ன அவசரமெண்டு தனியாப்போனவர்? வாங்குகிறது குறைஞ்சு போயிடும் சேந்து போனால் என்றோ?
  19. தினேஷின், அவர் சம்பந்தப்பட்டவர்களின் தொலைபேசி அழைப்புகள், உரையாடல்கள் ஆராயப்பட்டுள்ளன, குற்றவாளியை நெருங்கி விட்டோம், கைது செய்யத் தயங்கமாட்டோம் என்றெல்லாம் விறுவிறுப்பை ஏத்திப்போட்டு, இப்போ; மாமிக்கு செய்தி அனுப்பினார், தற்கொலை செய்தார் என்று புதுப்புது செய்திகளை வெளியிட்டு முக்கோணத்தில, ஐங்கோணத்தில விசாரிக்கினமாம். இவர்கள் வேண்டுமென்றே குற்றவாளியை காப்பாற்றுகிறார்கள் காரணம் பணம். இத்தனை கொலைகளை செய்தவர்களுக்கு விடுதலை, மரியாதை, பதவி கொடுத்து மகிழ்பவர்களுக்கு இது என்ன பெரிய கொலை என்று அவசரங்காட்டுவதற்கு? நாளாந்தம் அரசியல் கொலைகள், பழிவாங்கல்கள் நடக்கிற நாட்டில் இதெல்லாம் சாதாரணம். இதனாலல்லவோ எல்லோரும் உங்கள் கடைக்கண் தங்கள் மேல் விழாதா என்று அழைக்கிறார்கள். நீங்கள்தான் அப்பப்போ ஓடி மறைந்து விடுவீர்கள்!
  20. அதை இந்த மூன்றாந்தரப்பு மூஞ்சூறு சொல்லக்கூடாது. காலநிலை ஆலோசகருக்கு ஏன் இந்தவேலை? யாரும் தங்களுக்குரிய வேலையை செய்கிறானுகளில்லை. இதுதான் சம்பந்தர், சுமந்திரனோடு ஆலோசிச்சவரா? இதில சுமந்திரன் வேறு மூடுமந்திரம் பேசுறார். இருக்கிறவர்களையும் பாடையில கட்டப்போறார்.
  21. ஆமா .... தனது தலைமுடியை தானே பிச்சுக்கொண்டார், பத்தாததுக்கு செத்த பிறகு கிரிகெற்க்காரனுக்கு செய்தி வேற அனுப்பியிருக்கிறாரு. இப்பிடி எத்தனையை போலீசு மாறி மாறி சோடிக்கும். களவு எடுக்குது, கஞ்சா கடத்துது, மதுபானம் கடனுக்கு கேட்டு கடைக்காரனை அடிக்குது போலீசு. இதையும் செய்துபோட்டு பழிப்போட ஆள்தேடுதாம். அட ... இவன்கள்தானே இத்தனை செய்தியையும் போட்டு குழப்பினவங்கள். கொலைகாரனை பிடிக்க முடியாவிட்டால் தற்கொலை என்று கதையை முடிச்சுவிடுவான்கள்.
  22. ஏன் சார், இலங்கை போலீஸ் இலாகா இந்த திரியை வாசிக்காதில்ல? நீங்கள் சொல்லி வைச்சிடாதீங்கோ. ஒரு பல்லியை கொல்லவே மனம் வராத ஆள் நான். அவ்வளவு பீச்சல் பயம் எனக்கு. நீங்கள் வேறை கொலை, அது இதென்று பீதியை கிளப்ப, வகையற்ற போலீசு வாசலில வந்து தட்ட எதுக்கு இந்த வில்லங்கத்தை? அரைச்ச மாவையே அரைச்சு விறு விறுப்பை ஏற்படுத்த முயற்சிக்குது போலீசு, கணவன் மனைவி இருவரில் ஒருவரின் இங்கிலாந்து பயணத்தை தடுப்பதற்காக கொலை நடந்திருக்கோ? ஒருவேளை தினேஷ் இங்கிலாந்தில் குடியேற திட்டமிட்டிருக்கலாம் என எண்ணத்தோன்றுகிறது. நாங்களும் எங்கள் பங்குக்கு போலீசுக்கு துப்பு கொடுப்போம்!
  23. இதை வாசித்தபின் சில சமயங்களில் விதி எழுதும் கதை விசித்திரமானது என்றே எண்ணத்தோன்றுகிறது. பணத்தாசை, தானும் வாழ்ந்து மற்றவர்களையும் வாழ விடுவதில்லை. ஒரு பழமொழி "பாத்திரமறிந்து பிச்சையிடு, கோத்திரமறிந்து பெண் கொடு (எடு)." பொய்யல்ல.
  24. இல்லை, நான் அறியவில்லை. திறமையும், கடின உழைப்பும் கொண்ட அநேகர் தங்களைச்சுற்றியுள்ள நயவஞ்சகர்களை இனங்காண தவறுவதோடு, அவர்களையே கண்மூடித்தனமாக நம்பியும் விடுவது அவர்களின் துர்ப்பாக்கியம்!
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.