Jump to content

satan

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    9067
  • Joined

  • Last visited

  • Days Won

    1

Everything posted by satan

  1. அந்தளவுக்கு மக்களை மூளைச்சலவை செய்கிறார்கள் சிங்களத்தின் முகவர்கள் . ஒரு சரியான தலைவனை இனங்காணும் வரைக்கும் அவர்களுக்கும் வேறு தெரிவில்லை, அப்படி ஒருவர் வந்தாலும் அவரை மக்கள் தெரிவு செய்யுமளவுக்கு விடவும் மாடார்கள். தங்களது பேச்சாற்றல், மொழியாற்றல், திட்டம் போட்டு, சூழ்ச்சி செய்து பொருத்தமானவர்களையும் அவர்களின் செயற்பாடுகளையும் முடக்குவது, மற்றவர் அவரை பின்தொடர்வதை தடுத்து தம்மை முன்னிலைப்படுத்திவிடுவார்கள். மக்களும் கவற்சியையே விரும்புகிறார்கள். ஆணவம் ஆரவாரம் செய்து தன்னை முதன்மைப்படுத்துகிறது. காலங்கடந்தே தாம் ஏமாற்றப்படுவதை அப்பாவிகள் உணர்கிறார்கள்.
  2. இப்படித்தான் கொலைகாரன் தானாக வந்து நான்தான் இந்தக்கொலையை செய்தேன் என சரணடையும் வரை காத்திருப்பீர்களாக்கும்? இத்தனை துப்பு கொடுக்க வேண்டியிருக்கிறது கொலைகாரனை இனங்காண்பதற்கு.
  3. இந்தக்காட்சியும் மாறும். ஆனா தங்களைத்தாங்கள் அறியாமல், சொந்தபுத்தியில்லாமல் பதவிக்காக இழுத்த இழுப்புக்கெல்லாம் இழுபடுபவர்களை நம்ப முடியாது. அவர்கள் எப்போதும் சொல்வோர் சொல்கேட்டு அலைபாய்ந்து கொண்டேயிருப்பார்கள். சுமந்திரன் ஒரு குழப்பி, தன் சுயநலத்திற்காக பொய் கூறி, பதவியாசை காட்டி எல்லோரையும் குழப்பிக்கொண்டிருப்பார். அது அவரின் இயல்பு. தான் மட்டுமே திறமையுள்ள, உத்தமன் என்கிற நினைப்பு அவருக்கு.
  4. கொலைகாரன் தினேஷ் வைத்தியசாலையில் இறக்கும்வரை கூடவே இருந்து தினேஷின் அலைபேசியை கையாளுமளவுக்கு நம்பிக்கைக்கு உரியவனாக இருந்திருக்கிறான். மரணத்தை நிறைவேற்றும் அவசரம், பதட்டம் காரணமாக கிறிக்கெற் பிரபலத்துக்கு செய்தி அனுப்பி அவரை சிக்க வைத்து தான் தப்பிக்கொள்ளும் உத்தியை மறந்திருக்கலாம், அவர் இறந்தபின் நான் உனக்காக காத்திருக்கிறேன் என்கிற செய்தி அனுப்பப்பட்டிருக்கிறது. தினேஷின் மனைவி அவரது இருக்குமிடத்தை இணையவழி தேடி அவரது வாகனம் மயானத்துக்கு போகிறது எனக்கண்டறிந்து ஆளை அனுப்பியதன் காரணம் என்ன? அப்படியென்றால் தினேஷ் தனது மனைவியிடம் தான் சந்திக்க போகும் நபரை சந்திக்கும் இடம், நேரத்தை அறிவித்து விட்டு சென்றிருக்கவேண்டும். அப்படியானால் அது எந்த இடம் என்ன நேரம்? அத அவர் ஏன் போலீசாரிடம் குறிப்பிடவில்லை? கார் பாதை மாறிப்போகிறது, கணவன் ஆபத்தில் இருக்கிறார், அவருக்கு உதவி தேவையென ஆள் அனுப்பியவர், போலீசாரை அணுகாமல் சம்பந்தப்பட்டவரை தனியாக அனுப்பியதன் நோக்கமென்ன? சும்மா நான் பணத்தை மீளப்பெறப்போகிறேன் என்று சொல்லி, அதுவும் பணிப்பாளருக்கும் அறிவித்து விபரம் தெரிவிக்காமல் செல்வது, மனைவி விபரம் அறியாமல் அனுப்பிவிட்டு அவர் போகும் இடத்தை தேடுவது நம்புவதுபோல் தெரியவில்லை. பெறப்போகும் தொகை சாதாரணமானதல்ல தனிய போய் கையில வாங்கிக்கொண்டு வருவதற்க்கு. அதற்கென்று நடைமுறைகள் உண்டு. அதுவும் நீதிமன்றத்தில் வழக்கு நடக்கும்போது, தன்னிச்சையாக செயற்பட முடியாது. அவரது மனைவி ஒன்றும் நாட்டுக்கட்டையோ, வெகுளியோ கிடையாது இதை புரிந்து கொள்ளாமலிருப்பதற்கு. சாரதி இல்லாமல் அவசர காரணமாக மயானத்திலிருந்த ஒருவரை அழைத்து வர அனுப்பப்படிருக்கலாம். அப்பாவி மனிதன் துரோகத்தால் மாண்டிருக்கிறார். பக்கத்திலிருந்து அவர் எதிர்பாரா விதமாக கழுத்தை நெரித்திருக்கிறான். அவர் தன் கைக்கு எட்டிய வரையில் அவனது தலைமயிரை இழுத்திருக்கிறார். தினேஷ் தான் கிறிக்கெற் பிரபலத்தை சந்திக்க இருந்திருந்தால் தனியாக சந்திக்க வேண்டியதில்லை. இருந்தாலும் அவரை சந்திப்பதற்காக சம்பந்தப்படவருடன் நடத்திய உரையாடலோ, செய்திப்பரிமாற்றமோ அலைபேசியில் கண்டறிந்ததாக விசாரணையில் தெரிவிக்கப்படவில்லை. ஆகவே இது கொலைகாரர் கூறும் காரணமாக இருக்கலாம். தினேஷின் அலைபேசியில் பல சந்தேகங்களுக்கு விடை உண்டு. தினேஷின் மனைவி தினேஷுக்கு உண்மையில் அழைப்பெடுத்தாரா? எப்போ அழைப்பெடுத்தார்? இருப்பிடத்தை கண்டறிந்த பின்னா, முன்னா? இவர் இப்படி கணவர் வெளியில் போன பின் அழைப்பெடுத்து கண்டறியும் பழக்க முன்பு இருந்ததா? பொலிஸாருக்கு இது தெரியாமலில்லை, ஏதோ தடுக்கிறது. இது பணப்பரிமாற்றம் அல்லது கள்ளத்தொடர்பால் ஏற்பட்ட கொலையென என விசாரணையை திசைதிருப்பவும் இடமுண்டு. இங்கு பணம் பாதாளம் மட்டும் பாய்ந்து கொலைகாரரும், காரணங்களும் தப்பித்துக்கொள்ளும் வாய்ப்புமுண்டு.
  5. எனக்கென்னவோ; இந்த கிரிக்கெட் வர்ணனையாளரை கொலையாளிகள் தமது கொலைக்கு சாதகமாய் பயன்படுத்தியிருக்கிறார்கள் போலிருக்கிறது. இருவர் மட்டுமே அவர் கிரிக்கெட் வர்ணனையாளரை சந்திக்க சென்றது, தனது பணத்தை மீளப்பெறுவதற்காக எனத் தெரிவித்திருக்கிறார்கள். நீதிமன்றத்தில் வழக்கு இருக்கும்போது எப்படி தனியாக சென்று பணம் பெற நினைத்திருப்பார்? போனவருக்கு அவரது மனைவி ஏன் அவர் வருவரை காத்திராமல், அல்லது கணவனிடமிருந்து அழைப்பு வராமல் அழைப்பெடுத்தார்? இது அவரது சாதாரண வழமையான பழக்கமா? அதாவது கணவர் வெளியில் போனால் அழைப்பெடுப்பது. அல்லது கணவர் சொல்லிச்சென்றாரா என்னிடமிருந்து அழைப்பு வராவிடில் தேடுங்கள் என்று, அப்படியென்றால் அவருக்கு ஏதும் ஆபத்து ஏற்படும் என மனைவி எண்ணினாரா?அப்படி ஒரு சந்தேகமிருந்திருந்தால் அவர் போகும்போதே ஏதாவது முன்னேற்பாடுகளை செய்திருக்கலாம் அல்லது கார் மயானத்திற்கு போவதை கண்டுபிடித்தவுடன் பொலிசாருக்கல்லவா அறிவித்திருக்க வேண்டும்? கொலைக்கு திட்டமிட்டவர் அவரை வேறொரு காரணத்தை சொல்லி மயானத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டிருக்கலாம், வரவழைத்திருக்கலாம். தான் சந்திக்கப்போகும் நபருக்கு அந்த வேளையில் உணவு தேவையென கருதி தினேஷ் சிற்றுண்டிகளை வாங்கிச் சென்றிருக்கலாம். கொலையாளி (சம்பந்தப்பட்டவர்) சாவகாசமாய் பக்கத்து ஆசனத்திலிருந்தபடியே இருந்து சாப்பிட்டுவிட்டு வயரை அவரது கழுத்தில் போட்டு இறுக்கியிருக்கலாம், மயானத்திற்கு அனுப்பிவைத்துவிட்டு அவர் அங்கு போய்ச்சேர்ந்ததை உறுதிசெய்தபின் கொலையை உறுதி செய்வதற்காக அல்லது கொலைசெய்வதற்காக ஆள் அனுப்பப்பட்டிருக்கலாம், அவரே கிறிக்கெற் வர்ணனையாளர்க்கு செய்தி அனுப்பியிருக்கலாம். ஆனால் வர்ணனையாளர் தான் சந்திக்கும் நோக்கமில்லை என என பதில் அனுப்பியிருக்கிறார் என விசாரணை அறிவிக்கிறது. அப்போ அவரது மரணத்தை நடத்தியவர், உறுதி செய்தவரே அந்த செய்தியை அனுப்பியிருக்க வாய்ப்பிருக்கு. அவரது தொலைபேசி காணாமற் போகவில்லை தினேஷின் தொலைபேசியில் தான் கிறிக்கெற் வர்ணனையாளரை சந்திப்பதற்கான எந்தச்செய்தியுமில்லை. அப்படியிருக்க உனக்காக காத்திருக்கிறேன் என எப்படி இறந்தபின் செய்தி அனுப்ப முடிந்திருக்கும்? ஆகவே கொலைகாரன் இறுதிவரை அவரோடே இருந்திருந்திருக்கிறார். அவர் யார்?
  6. அங்கஜனை செய்த பூஜைஜை சுட்டிக்காட்டுகிறாரோ சஜித்?
  7. ம்ம்........ம், அதுவும் நல்லது. சாப்பாட்டுத்தட்டில் சுத்தம் செய்வதற்கு இலகுவாக பொலித்தீன் சுற்றியிருக்கிறார்கள், அதை தவிர்த்து வேறு வழியில் (கழுவி) சுத்தம் செய்தால் சூழல் பாதுகாக்கப்படும். மாணவர்களின் படிப்பு நேரம் போதாமை உண்டு ஆனாலும் நேர அட்டவணை முறைப்படி செய்யலாம்.
  8. தமிழ்பெண்களை கற்பழிக்க கொடுத்த பயிற்சி மாறி வேலை செய்யுதோ? இது சிங்களத்தின் கலாச்சாரம். கடடாக்காலி நாய்களை கொல்லக்கூடாது என்று சட்டம் போட்டவர்கள் இதற்குத்தானா? முன்பொருதடவை வட இந்தியாவில் மாட்டுடன் ஒருவர் தகாத உறவு கொண்டதாக செய்தி வந்தது. மாட்டிறைச்சி சாப்பிட்டால் பசு வதை ஆனால் இது இதில் சேர்ப்பது?
  9. ஆஹா..... அங்காலை ஒருத்தர் ரகசியமாக ரணிலை சந்தித்து வளைப்பதில் தீவிரமாக இருக்குபோது சஜித் வந்தது தெரியாமல் போய் விட்டதோ? கூட்டமைப்பின் நகைச்சுவைகள். இன்னும் என்னென்ன அலங்கோலங்கள் அரங்கேறப்போகுதோ ஐயப்பனே! சாணக்கியனின் இந்தப்பேச்சு தீர்வை தர இருக்கும் ரணிலை குழப்பிவிடப்போகிறது. சின்னப்பொடியன் தெரியாமல் பேசுறான் நீங்கள் தாறதை தாங்க மாத்தையா!
  10. இரகசியமாக ரொக்கம் வாங்க நினைத்திருப்பார், வெட்கங்கெட்ட மனிதன்! இரகசியமாக சந்திப்புகளை ஏற்படுத்தி கட்டுக்கதைகளை உருவாக்குவது, போட்டுக்கொடுப்பது, தன்னை மாத்திரம் முன்னிலைப்படுத்துவது, தமிழர் பிரச்சனையை மலினப்படுத்துவது இதையெல்லாம் உள்வாங்கிய சம்பந்தர் தனது அயோக்யத்தனங்களை இதற்குப்பின்னால் மறைத்துக்கொள்கிறார். கட்சிக்குள் பேசி ஒத்துப்போக முடியவில்லை, அதற்குள் நடக்கும் சர்வாதிகாரம் தெரியவில்லை, தடுக்க முடியவில்லை தமிழருக்கு தீர்வு வாங்கித்தரப்போகிறார், காத்திருங்கள்!
  11. எதுக்கு சீனாவை பின்தொடரவோ? இலங்கை இராணுவப்படை குறைப்பு என்று சொல்லி போலீஸ் படையை பலப்படுத்துகிறது. கொழுக்கட்டை கடையை மூடி மோதகக்கடை திறக்கிறது. பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்கி அதற்கு பதிலாக இன்னொரு சட்டத்தை உருவாக்க திட்டம், ஆக்கிரமித்திருக்கும் நிலங்களை விடுவித்து இந்து ஆலயங்களை இடித்து விகாரைகள் அமைக்கும் திட்டம் ஆலோசனையில். நாட்டில் எது நடந்தாலும், நாடே அழிந்தாலும் தமிழருக்கு சகுனப்பிழையாக அமைய வேண்டுமென்று உழைக்கும் சிங்களம், அதுக்கு உதவி வழங்கும் இந்தியா கடைசியில் அடையப்போகும் இலாபம் என்ன?
  12. போடுற பீடிகையை பாத்தா, பெரிய தலையாய் இருக்கும்போல!
  13. அவசரமாக வாசித்து ஒரு வினாடி பயத்தில உறைஞ்சு போனேன், ஒருவாறு தேற்றிக்கொண்டு ஆறுதலாக வாசித்ததில் கருத்து புரிஞ்சுது.
  14. ஒரு அரசியல்வாதியும் தெரிவு செய்யப்பட வாய்ப்பில்லை.
  15. வாய்வீச்சு என்றொரு சொற்தொடர் தமிழில் இருக்கு தெரியுமோ? அது வாள்வீச்சை விட வீரியமானது என்று சிலர் நினைக்கிறார்கள் போலுள்ளது!
  16. எதற்கு சொல்லிக்கொடுத்துக்கொண்டு ? ஆசிரியர்களே தாமதமாக வந்து முன்னுதாரணமாகிறார்கள் மாணவர்களுக்கு. பாராளுமன்றத்துக்கு ஜனாதிபதி, பிரதம மந்திரி கூட்டத்தை அறிவிப்பார்கள் ஒருநேரத்திற்கு, வருவதோ அவர்களுக்கு வேண்டிய நேரத்திற்கு, அதிலும் பாதியில் கிளம்பிவிடுவார்கள், இருக்கிற நேரத்திலும் அடிதடி. இது தெரியாமல், நேரத்தின் அருமை, பொறுப்பு கூறல் என்பது கிடையாத நாட்டில் வந்து, கூட்டத்தை கூட்டியது தூதுக்குழுவின் தவறு. அமைச்சர் பாவம்! தன் பழக்கத்தை திடீரென இவருக்காக மாற்ற முடியுமோ? ஒன்று செய்யலாம்; வழங்கும் உதவியில் இவற்றை போதிக்க ஆசியர்களையும் சேர்த்து வழங்கலாம்.
  17. எங்கேயும் எதிலும் தமிழருக்கும் சிங்களவருக்கும் இடையிலான பிரச்சனையில் தோள்கொடுத்து காப்பது லாபமடைவது அவர்களே. சிங்களத்தின் முகவர்கள். அதற்கு கிடைக்கும் சன்மானம், அதுவே அவர்களுக்கு வேண்டியது! நஷ்ட ஈடு கைகூடினால் அதில் எவ்வளவு இவர் பொக்கற்றுக்குள் போகும்? அதுவே முக்கியம். சோனியின் குடுமி சும்மா ஆடாது!
  18. இது ஒன்றே தமிழரின் பிரச்சனை, அவர்களை விடுவித்தவுடன் தமிழர் பிரச்சனை தீர்க்கப்பட்டுவிட்டது நாட்டில் தமிழருக்கென்று பிரச்சனையில்லை, இப்போது கடன் கொடுங்கள் என்று நம்ம தலைவர்களும், சிங்களமும் சேர்ந்து கை நீட்டப்போகினம் பாருங்கோ! இதற்காகவே சில பிரச்சனைகளை தீர்க்காமல் இழுத்துப்பிடிக்கிறது சிங்களம். அப்பப்போ இதுகளை விடுவித்து சர்வதேசத்தை ஏமாற்றி தப்பிக்கொள்வதற்காக. மக்களை ஏமாற்ற எங்கள் தலை ஆட்டிகள் பக்கத்துணை. கைதிகள் விடுவிப்பு, காணி விடுவிப்பு இராணுவ வெளியேற்றம், பதின்மூன்றாம் சட்டத்திருத்தம், விகாரை அமைப்பு எல்லாவற்றையும்ஒரே முறையில் தீருங்கள் என்று இறுக்கவேண்டும்.
  19. தென்கொரிய அதிகாரி இலங்கையில் அரசியல், அரசியல்வாதிகளின் மனோபாவம் பற்றி கூறியது முற்றிலும் உண்மை, அதைஅவர்கள் ஏற்று விளங்கிக்கொள்ளும் மனநிலையைவிட சொன்னவரில் குறை காண்பதிலும், கடன் பெறுவதிலுமே குறியாய் இருப்பார்கள், அது நிற்க; முன்னாள் ஐ. நாடுகள் சபை தலைவர் என்கிற பெரும் பதவியில் இருந்தவர், அவருக்கு பெரும் மனிதாபிமான பெரும் பொறுப்பு இருந்ததே, அவரும் உங்கள் நாட்டைச் சேர்ந்தவர், அதை அவர் நீதியாகவும் நேர்மையாகவும் செய்தாரா? அவர் அதை செய்திருந்தால் இன்று நீங்கள் உபதேசிக்க நேர்ந்திராது இந்த மரமண்டைகளுக்கு. போதனையை விட சாதனையே சிறந்தது!
  20. அதுதானே! இத்தனைபேர் இருக்க எழிலனை மட்டும் ஏன் இப்போ அவசரமாகத் தேடுகிறார்? இப்போதான் பின்புத்தி வேலை செய்யுதோ தலைவருக்கு? உதுமட்டும் போதாது, அனந்தியுடன் உத்தியோக பூர்வமாக பேசி, நடந்ததுக்கு மன்னிப்பு கோரவேண்டும். சுமந்திரன் என்கிற கோடரிக்காம்பு இருக்கிறவரை அது நடவாது. தான் என்கிற அகந்தை ஒழிய வேண்டும் கூட்டமைப்புக்குள் இருந்து அதுவரை இது தேறாது. வேண்டுமென்றால் தலையில வைத்து கூத்தாடுவினம், வேண்டாமென்றால் போட்டு மிதிப்பினம். உதாரணம் விக்கினேஸ்வரன் ஐயா, அனந்தி, ரவிராஜின் மனைவி. தட்டோடை வீடுதேடி போய் பொட்டு வைத்து அழைப்பினம், காரியம் முடிந்தவுடன் அவர்கள் பெயர்க்கு சேறடிப்பு. இது த. தே. கூட்டமைப்பின் சாதுரியம், ராஜ தந்திரம் என்று எது வேண்டுமானாலும் சொல்லி தட்டிக்கொள்ளட்டும். அதுவே மக்களை அவர்களிடம் இருந்து விலகிச்செல்லவும், எதிரிகள் வாக்கை தட்டிச்செல்லவும் காரணம் என்பதை அவர்கள் விளங்கிக்கொள்வதாயில்லை. தங்களை தாங்களே பாராட்டிக்கொள்கிறார்கள்.
  21. அண்மையில் பாகிஸ்தான் அமைச்சரோ, தூதுவரோ, எவரோ ஒருவர் வடக்கு கிழக்கு என்று சுத்தியடிச்சாரே இதுதான் காரணமோ?
  22. இவர்களுக்கு வாக்கு போட்ட மக்கள் கேக்க நாதியில்லாமல் தெருவில அலைகிறார்கள், இவர்களோ அவர்கள் தலையில் மிளகாய் அரைத்து மகிழ்ந்து கொண்டாடுகிறார்கள். சிங்கள மக்களுடன் வாழ்வது தனது அதிஷ்டம் என்றவர் ஏன் இப்போது தமிழ் மக்களுக்கு தீர்வு வேண்டுமென்று ஆசைப்படுகிறார்? சிங்களவரோடு வாழ்வதற்கும் தமிழ் மக்களின் வாக்கே தேவை என்பதை உணர்ந்திருப்பாரோ?
  23. சுதந்திர தினத்துக்கு முன்னால் தீர்வு எட்டப்படுமா என்று எல்லோர் மனதிலும் சந்தேகம். இதில அதிரடியாய் பொங்கலுக்கு முன்பு தீர்வு என்று ஒரு அரை அவியல் வைக்க வேண்டிய கட்டாயம் (அவசியம்) கூடிப்பேசுவோர்களைப் பார்த்தாலே புரியும். இதுக்கு தேர்தல் வந்தால் மக்கள் பாசம் வரும், இல்லையெனில் சிங்களத்தை எப்படி காப்பது, வக்காலத்து வாங்குவது என்பதே இலக்கு.
  24. இல்லை, அவருக்கு எச்சரிக்கை இல்லை தண்டனை காத்திருக்கு. தப்பித்தவறியும் அவர் அந்தப்பக்கம் போகாமல் இருப்பது நல்லது. அவருக்கும் தெரியும் தான் போகப்போவதில்லை என்பது, நடமாடும்போதே மக்களை சந்திக்க விரும்பாதவர், இப்போ தன் தேவைகளுக்கே மற்றவர்களில் தங்கியிருப்பவர் முடியுமா? அறிக்கை கந்தன்தான். மூடிய அறைக்குள் இருந்து அறிக்கை பறக்குது.
  25. அதுதானே, படுத்திருந்தவர் எழுந்திருந்து எச்சரிக்கிறார், இடித்துரைக்கிறார், கண்டிக்கிறார், என்னமா பாசம் பொங்கி வழியுது. ஆனால் அவரது பாசத்தை ஏற்றுக்கொள்ளும் மனநிலையில் (நம்பும்) யாரும் இல்லை. தேர்தல் வந்தால் ஐயாவுக்கு வீரமும் வரும், கூடவே மக்கள் மீது பாசமும் வரும். இவர்களுக்குள் ஒரு உடன்பாடு உண்டு; அதாவது தேர்தல் காலங்களில் வடக்கு அரசியல்வாதிகள் தெற்கு அரசியல்வாதிகளை குற்றம் சாட்டுவதும், தெற்கு அரசியல் வாதிகள் வடக்கு அரசியல்வாதிகளை திட்டுவதும் பின்னர் மக்களை முட்டாளாகியதை விருந்து கொண்டாடி மகிழ்வதும். இது அரசியல் கலாச்சாரம்.
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.