Jump to content

satan

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    9067
  • Joined

  • Last visited

  • Days Won

    1

Everything posted by satan

  1. இது தண்டிக்கும் விதமல்ல. சிறுவனுக்கு தான் பேசியதின் பொருள் தெரியாது, தான் யாரிடம் இருந்து அந்த வார்த்தையை கற்றுக்கொண்டாரோ அவர் தண்டிக்கப்படாமல் தான் மட்டும் தண்டிக்கப்படுவது அவனை எதிர்காலத்தில் பல சந்தேகங்களுக்கு, அவநம்பிக்கைகளுக்கு, குழப்பங்களுக்கு ஆளாக்கும். அநேகமாக சிறுவர்கள் தாங்கள் அதிகம் நேசிக்கும் நபர்களையே பின்பற்றி பாவனை செய்வதும், பேசுவதும் உண்டு. இந்தப்பராயத்தில் தண்டிப்பதை விடுத்து அன்பாக எடுத்துக்காட்டி அரவணைத்து அவனது சூழலை தக்க அமைக்க உதவ வேண்டும். நான்கு வயது சிறுவனின் ஆரம்ப பாடசாலை அவனது குடும்பமே. ஆகவே குடும்பத்தினரை அழைத்து பேசியிருக்கலாம், ஆனால் வீட்டில் சிறுவன் தண்டிக்கப்பட வாய்ப்பிருக்கு. ஆகவே சமுதாயத்தில் விழிப்புணர்வு, பொறுப்புணர்வு அவசியம்.
  2. இனி இலங்கைக்கு வரும்போது இந்திய பணமாக கொண்டு வாருங்கள்! எதுவும் நடக்கலாம், விசா? அடிக்கடி செய்திகளை ஆராயுங்கள்.
  3. உப்பிடித்தான் பலர் சொல்லி அரசோடு இணைந்து ஜனநாயகத்தை கெடுத்து வயிறு வளர்க்கிறார்கள், இதில இவர்கள் வேறு. ஜனநாயகமே இல்லாத நாட்டில் இணைந்து எதை சாதிப்பது? ஜனநாயகத்துக்கு எதிராக செயற்படத்தான் முடியும். இதுக்குள்ளுமா? உருப்பட்ட மாதிரித்தான்! எனக்கென்னவோ இதில ஏதோ உள்நோக்கம் இருப்பதுபோல் தெரிகிறது, வி. முரளிதரனும் இவர்களோடு இணைந்தால் ஆச்சரியப்படுவதற்கில்லை. அங்காலை சுதந்திர தினத்துக்கு முதல் இனப்பிரச்சனைக்கு தீர்வு என ஒரே ஆரவாரம், இவர்கள் வேறு இல்லாத ஊருக்கு வீதி அமைக்கினம். என்னதான் நடக்கப்போகிறது சுதந்திர தினத்தில்?
  4. அதிலும் பாருங்கள்! குடிபோதையில் வாகனம் செலுத்தி வெளிநாட்டு தூதுக் குழுவின் பயணத்துக்கு தடங்கல் ஏற்படுத்தியமை, பொலிஸாரின் கட்டளையை மீறி வாகனம் செலுத்திச் சென்றமை தொடர்பில் கைது செய்யப்பட்டவரை, சும்மா இருந்த அப்பாவி கோத்தபாயவுடன் கோத்து விடுவதை. தாங்களே கைது செய்து, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து தாங்களே பிணையும் அவசரமாய் கொடுத்து ஆளை வெளியில அனுப்பியாச்சு. காரணம்; விசாரணை தீவிரமாகி அந்த அப்பாவிமனுஷன் உள்ளுக்கை போய்விடாமலிருக்க தீவிரம் காட்டுகினம்.
  5. ஏற்கெனவே பல சிங்கள அரசியல் வாதிகள் குறிப்பிட்டுள்ளனர், நாமும் பலதடவை விவாதித்துள்ளோம். அண்மையில் சரத் வீரசேகரவும் கூறியுள்ளான். தனக்கு வேறொரு நாடு இல்லை என்பதற்காக மற்றவருக்கும் சொந்தமான நாட்டை அவர்களை துரத்தி தனதாக்க முயற்சித்தால் உள்ளதையும் இழந்து அலைய நேரிடலாம்.
  6. வாத்தியின் சந்தகேம் சந்தகேம் தீர்ந்திருக்கும். குழந்தைகள் தாங்களாக கெட்ட வார்த்தை பேசுவதில்லை, தாங்கள் கேட்டதையே அர்த்தம் புரியாமல் பேசுவார்கள். ஒருதடவை ஒரு சிறுவன் தகாத வார்த்தை பேசி நீர் இறைக்கும் இயந்திரத்தை இயக்குவது போல் பாசாங்கு செய்து விளையாடிக்கொண்டிருந்தானாம். இதை கேட்டுக்கொண்டிருந்தவர் தம்பி! அப்படியென்றால் என்ன என்று கேட்டாராம், அப்படியென்றார்த்தான் மிசின் இறைக்கும் என்றானாம். அப்படி யார் சொன்னார்? என்று அவர் திருப்பி கேட்டாராம், அதற்கு அந்தச் சிறுவன் சொன்னானாம், மிசின் இறைக்காவிட்டால் அப்பா இதை சொல்லித்தான் கயிறு சுற்றி இழுப்பார் என்றானாம். இதைகேட்டவர் அப்பாவைத் தேடினாராம் தனது சந்தேகத்தை உறுதி செய்துகொள்ள. அப்பா என்ன சொல்லியிருப்பார்? இப்போ யாரும் தண்ணி இறைக்கும் இயந்திரம் பாவிப்பதில்லை.
  7. எப்பவோ தெரிஞ்சு, ஒவ்வொரு பதிவிலும் தேடினேன். அகபட்டியள், இப்பதான் நெஞ்ச்சுக்கு ஆறுதலாயிருக்கு!
  8. திட்ட வரைபு போட்டாச்சு, இப்போ கட்டி எழுப்பப்போகிறார்கள் நம்ப வைக்க முயற்சிக்கும் நம்ம தலைமை! தேர்தல் கவனம். அப்பிடியே புட்டு புட்டு வைச்சிட்டா, இனி நாம் என்னத்தை மறுக்கிறது?ஆமோதிக்க வேண்டியான். ஆனாலும் தமிழருக்கு உந்த சந்தேகப்புத்தி கூடாது.
  9. ஓ .... குருந்தூர் விடயத்தை நீதிமன்றத்துக்கு போனது மாத்தையாவுக்கு தெரியவில்லை, யாரும் தெரியப்படுத்தவுமில்லை. வெளிநாடுகளிலுள்ளவர்களுக்கு தீர்வு வரப்போகுது. இது எப்போ? ஒருவேளை சம்பந்தரிடம் கொடுத்தார்களோ? முஸ்ஹலீம்களை குழப்பி விட்டு சிங்கள இனவாதிகள் குதிக்க தூண்டி ஒட்டுக்குழுக்கள் புகுத்தி விளையாட எல்லாம் சுபமே! சுதந்திர தினத்துக்கு முதல் இதெல்லாம் நடக்குமென்றால் இவ்வளவு காலம் எதற்கு கடத்தினார்கள்? இத்தனை உயிர்களை ஏன் காவு கொண்டார்கள்? பாதிக்கப்படட சிறுபான்மை இன மக்களுக்கு தீர்வு வழங்கப்பட வேண்டும் என்று முன்னாள் ஜனாதிபதியாக இருந்த மஹிந்தவிடம் கேட்கப்பட்டபோது, அதை செய்வதற்கு நான் தயாராகவே இருக்கிறேன் ஆனால் எனக்கு நாடாளுமன்றத்தில் பெருபான்மை இல்லை என்று ஒரு போலி வருத்தம் தெரிவித்தார். இரண்டாந்தடவை பெரும்பான்மையோடு சென்றபோது அதே கேள்வி கேட்கப்பட்டது. இப்போதும் நான் தயாராகவே இருக்கிறேன் ஆனால் எனக்கு வாக்களித்த மக்கள் அதை விரும்பவில்லை, அதை மீறி நான் செயற்பட்டால் நாட்டில் முறுகல் ஏற்பட்டு இனநல்லிணக்கம் கெட்டுவிடும் என்றார். அப்போ ஏன் முன்னர் அப்படி கூறினீர்கள் என்று யாரும் கேட்கவில்லை, அவர் என்ன சொல்லி வாக்கு கேட்டார் என்றும் சொல்லவில்லை. இதுதான் இவர்களது அரசியல். காலம் இவர்களை திணித்தால் ஒழிய எதுவும் நடைபெறாது. தமிழரை சேர்த்து வைத்திருந்தால் நாம் அழிவது தடுக்கமுடியாது என்பதை அனுபவித்த பின்னே அது நிறைவேறும்.
  10. சிறுவன் தானாக பேசவில்லை, வீட்டில் கேட்டதை பேசியிருக்கிறான். தண்டிக்கப்படவேண்டியவன் சிறுவனல்ல, இது கூட புரியாத ஆசிரியர்.
  11. நாமல் பொடி மாத்தையாவுக்கு மாரடைப்பு வரப்போகிறது இந்த செய்தியை கேட்டதும். அடிச்சுப்பிடிச்சு அரசியல் கதிரை ஏறிவிட துடியாய்த் துடிக்கிறார் அவரின் கனவும் தள்ளிப்போகிறதே. ஊழல் வழக்குகள் தூசு தட்டி எடுக்கும்போது கொள்ளையடிச்சதை அள்ளி இறைத்து கதிரையில் ஏறி எல்லாவற்றையும் மூடி, புனிதர்களாகிய பரம்பரை. மீண்டும் அது தூசு தட்டமுதல் கதிரை ஏறிவிட்டால் தப்பி விடலாமென நினைக்கிறார் இந்தமுறை அவரது திட்டம் கண்டத்தை தாண்டாது.
  12. இவரது காய் நகர்த்தல் வேறு, பொறுங்கள்! சிலர் வேஷம் போடுகிறார்கள் கனகாலம் தாக்குபிடிக்காது. இவர்களின் வேஷம் கலையும்போது விமல் வீரவன்ஷா போன்றவர்கள் இவர்களின் பாத்திரத்தை ஏற்று நாடகம் தொடரும். நேற்றுவரை இவர் இப்படி பேசவில்லையே? இப்போ தேவை ஏற்பட்டிருக்கு. பொருளாதார நெருக்கடி வரும்வரை இவர் வாயே திறக்கவில்லை, அதற்கப்புறம் தமிழ் மக்களையும் அணைத்துக்கொண்டே நான் பயணிப்பேன் என்றார். காரணம் தமிழ் மக்களை புறந்தள்ளியதாலேயே நாடு படுகுழியில் விழுந்தது என்பதை ஏற்றுக்கொண்டார் அவர்கள் இல்லாமல் நாடு மீண்டெழ வாய்ப்பில்லை என்பதை உணர்ந்து காய் நகர்த்துகிறார்.
  13. நீங்கள் பிடிப்பதெல்லாம் சண்டையா? செல்லக்கோவம் போட்டுகொண்டு போவியள், இருக்க முடியாது, மீண்டும் திரும்புவியள் என்று நம் எல்லோருக்கும் தெரியுமே.
  14. இது எப்போ நடந்தது? இனிமேற்தானா? இவர் எடுத்து விடுறதெல்லாம் மற்றவர்கள் நம்புவார்கள் என்று நினைக்கிறாரா? அப்போ...... பெரும்பான்மையோடு இணையிறது, யார் இவர்களை இழுத்து பிடிச்சது? பொறுங்கோ! பொறுத்த நேரம் கக்கீம் இழுப்பார் கயிறு, அப்போ தலைகீழாய் வீழ்வது சம்பந்தரும், சுமந்திரனும், சாணக்கியனும் விழுகிற அதிர்வில இருந்து சம்பந்தர் மீண்டும் எழுந்திருக்கப்போவதில்லை.
  15. ஏன் கமல் குணரத்ன இவ்வளவு சோகமாக இந்திய கடற்படை தளபதியை நேருக்கு நேர் பார்க்க பயப்படுகிறார்?
  16. நாங்களே தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகள் என்று மார்பு தட்டுபவர், அந்த மக்கள் வகை தொகையின்றி கொல்லப்படும்போது அந்த மக்களின் துன்பங்களில் கூட இல்லை, பங்கெடுக்கவும் இல்லை, அவர்களின் உடைந்த மனதுக்கு ஆறுதல் சொல்லவில்லை, தங்கள் உறவுகளை தேடி தெருத் தெருவாய் அலைபவர்களை கண்டு கொள்ளவுமில்லை, தான் தோன்றித்தனமாய் முடிவெடுக்க போய்விட்டார். கடமை செய்யாதவருக்கு அந்த மக்கள் சார்பாக முடிவெடுக்கும் உரிமையை யார் கொடுத்தது? பெரும்பான்மை மக்களால் தெரிந்தெடுக்கப்பட்டவன் நான் என்று கர்சித்தவர், அந்த மக்களின் குரலுக்கு செவி கொடுக்காமல் அவர்களாலேயே அவரை வீட்டுக்கு போகும்படி போராடும்போதும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவன் நான் என்று அரைப்பைத்தியம்போல் உளறிவிட்டு தெரிந்தெடுத்த மக்களுக்கு தெரியாமலேயே நாட்டை விட்டோடியதை இவர் காதில் ஒருவரும் சொல்லவில்லையோ அன்றி சொன்னது இவர் காதில் சரியாக விழவில்லையோ? கெதியில் இவருக்கு அது நடந்தேறும் இவரால் ஓட முடியாது இறுக்கி மூடிக்கொண்டு இருக்க வேண்டியான்.
  17. இந்தா .... தொடங்கிற்றான் அடுத்த பைத்தியம் அலட்ட! இனி முழு பைத்தியமும் வரிசையில் வரப்போகுது வாந்தியெடுக்க. அதுதானே! தமிழருக்கு தீர்வு ஒன்று வேண்டுமென்று நம்ம தலைமைகளோ, சிங்களமோ நினைத்திருந்தால் அறுபத்தைந்து வருடங்கள் எதற்கு? நடக்காத ஒன்றுக்காக ஏன் காலத்தை இழுத்தடித்து, மக்களை ஏமாற்ற வேண்டும்? விடுங்கள் ... நாடு தானாகவே நம் கைக்கு வரும். ஆனால் தமிழர், சிங்களவரை பார்த்து பயப்படுகிறார்கள், சிங்களவரை நம்பத்தயாரில்லை, சிங்களவரை குற்றஞ்சாட்டுகிறார்கள், நம்ம தலைமைகள் தீர்வை பெற்று விடப்போகிறார்கள் என்பவர்கள், என்ன சொல்லப்போகிறார்கள் இதற்கு?
  18. ஈழத் தமிழனால் விமானம் ஓட்டமுடியாது, ஓட்டமாடான் என்றுமில்லை, விமான கம்பனி நடத்த இயலாது என்றுமில்லை, அவனால் எல்லாம் முடியும். ஆனால் அவன் தொடங்கினால்; காட்டிக் கொடுக்கவும், முட்டுக்கட்டை போட்டு தடுக்கவும், அழிக்கவும் பலபேர் போட்டி போட்டுகொண்டு வருவார்கள். கறையான் புத்தெடுக்க கருநாகம் குடி இருக்கும். எதுக்கு வம்பு? அது அதுக்கு தெரிந்ததைத்தானே அதனால் செய்யமுடியும்.
  19. காகிதம், மை தட்டுப்பாடு? பிரதி எடுக்கத் தெரியவில்லை? இன்று பலர் கைலஞ்சம் மூலம் தொழில் வாய்ப்பைப் பெற்றிருக்கிறார்கள், தொழில் அனுபவமில்லை, அல்லது தெரியாது, இல்லையேல் சோம்பல். தமிழிற்தானே உரையாடியிருந்திருப்பார்கள், விளங்கவில்லையா?
  20. விடுங்கோ சாமியார்! நாட்டை விட்டு ஓடும்போது ஒரு காரணம், மீண்டும் ஓய்வெடுக்க நாட்டுக்கு திரும்பும்போது வேறொரு காரணம். அதுக்குள்ள மற்றவர்களை வசதியாய் வம்புக்கு இழுத்து தங்கள் காரணத்தை போத்து மூடுவது. இதென்ன புதுசா எங்களுக்கு? சம்பிக்க ரணவக்க "தமிழரை புறந்தள்ளியமையால் படுகுழியில் நாடு வீழ்ந்துள்ளது." உதயன் கம்மன்பில "நாங்கள் உழைத்துச்சாப்பிடவில்லை 1950ல்இருந்து கடன் வாங்கியே வாழ்ந்தோம்." மைத்திரி "நிரந்தர பகிர்வு பொறிமுறையை நடைமுறைப்படுத்த இலங்கை தவறிவிட்டது." மஹிந்தா "நாட்டில் பிரச்சனையை தீர்க்க நான் தயாராகவே உள்ளேன் ஆனால் எனக்கு வாக்களித்த மக்கள் அதற்காக எனக்கு வாக்களிக்கவில்லை, நான் பிரச்சனையை தீர்க்க முயற்சித்தால் நாட்டில் வன்முறை ஏற்பட்டு இனங்களுக்கிடையில் (இல்லாத) நல்லிணக்கம் கெட்டுவிடுமாம்." என்று பகிடி விடுகிறார். தன் பங்குக்கு நேற்று முழைச்ச நாமல் உதிர்த்தது "தமிழ் மக்களுக்கு தீர்வை வழங்க ராஜபக்சக்கள் தயாராக இருந்தனர், கூட்டமைப்பினரே பின்னடித்தனர், சுயலாப அரசியலே அவர்களின் இலக்கு." இவர்கள் யாரும் சாதாரண குடிமக்கள் கிடையாது, அரசியல் கதிரையில் இருந்து சுகம் அனுபவித்தவர்கள், நாடு அழிவதற்கு காரணம் தெரிந்தும் அழித்தவர்கள். இன்று இவர்கள் பேசும் வேதாந்தம் தீர்வு என்று வரும்போது எப்படி கையாள்வார்கள் என்று கடந்தது போக இன்னும் சிலநாளில் வெளிவரும். இதை துரும்புசீட்டாக வைத்தே அடுத்தமுறை தேர்தலில் பக்சக்கள் வெல்லலாம், தமிழரின் உரிமைகளை மறுப்பதற்காக ரணிலே அவர்களை ஊக்குவிக்கலாம். இழிச்ச வாயன் தமிழன், அவன்மேல் எல்லா பழியையும் போட்டு அமைதியாகி விடுவோம். கொழும்பில் இருந்து துரத்தியடித்தான், வந்து எம்பாட்டில் இருந்த எம்மை தேடி வந்து அழித்து விட்டு இப்போ நாட்டை கட்டியெழுப்ப அவன்தான் வரவேணும். அதற்காக அப்பப்போ ஏற்றும் நாடகம்! பேச்சுவார்த்தை, காலத்தை இழுத்தடித்து, உடன்படிக்கையை கிழித்தெறிந்து, அடித்துக்கலைப்பு அதற்கே வெளிநாட்டுதலையீடு வேண்டாமாம்!
  21. ஐயாவின் பதவிக்கு உலை வந்துவிட்டது துள்ளி குதிக்கிறார் அவ்வளவுதான் அடங்கிவிடும் வந்த வேகத்தில்.
  22. எங்கள் முன்னோர் களைகளை பயிர் என வளர்த்து எங்களுக்கும் போதித்து விட்டுச் சென்றுள்ளனர், அதன் பயனை நாங்கள் அனுபவிக்கிறோம், இதை எமது சந்ததிக்கு கடத்தாமல் வேரோடு பிடுங்கி குப்பையிலே போட்டுத் தீவைத்தாலே எதிர்கால அழிவிலிருந்து நமது சந்ததியை காத்தவராவோம்.
  23. எங்கள் முன்னோர் எதை விதைத்தார்கள், அறுவடை செய்வதற்கு? கஞ்சா விதைத்ததாக அறியவில்லை!
  24. ஒரு வியாபாரம், வேண்டத் தகுதியுள்ளோரிடமே நடத்தப்படும். இங்கு மாணவர்கள் நலிந்தவர்கள், தங்கள் தேவைகளுக்கு பெற்றோரிடத்தில் தங்கியுள்ளவர்கள், அவர்களை இலக்கு வைத்து வியாபாரம் செய்வது யார்? இதானால் அவர்களின் எதிர்பார்ப்பு என்ன? என்பது எல்லோருக்கும் புரியும். கல்வியில், பொருளாதாரத்தில், உழைப்பில், பண்பாட்டில் உயர்ந்து நின்ற சமுதாயத்தை வேரோடு சாய்க்கும் வேலை. அவர்களது நிலங்களை பறித்து,கல்வியை சிதைத்து, தொழிலை முடக்கி, பண்பாடடை சீரழித்து கையேந்த வைக்கும் சூழ்நிலை. தன் இனம் சீரழியுது அதுபற்றி கவலையில்லை, தங்க விருது வேண்டிக்கிடக்கு தலைவருக்கு!
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.