Jump to content

satan

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    8486
  • Joined

  • Last visited

  • Days Won

    1

Everything posted by satan

  1. கோத்தாவுக்கு நன்றாகவே தெரியும்; தான் பதவியிலிருந்து இறங்கியதும் மனித உரிமை மீறல் குற்றச்சாடை எதிர்கொள்ள நேரிடும் வெளிநாடுகளில் ஏதாவது ஒன்றுக்கு சென்றாலும் என்பது ஆனாலும் விதி எப்படி ஆளை கிளப்பி பொறி வைத்திருக்கு? ஒருவேளை தப்பி நாடு வந்து சேர்ந்தாலும், இனி இவர் வெளிநாடுகளை எட்டியும் பார்க்க முடியாது, இனி இங்கு வந்து சண்டித்தனமும் காட்ட முடியாது, பல்லுப்பிடுங்கின பாம்புதான்! எங்கோ கேள்விப்பட்ட நினைவு ஒரு நாட்டு அதிபருக்கெதிராக (ஆபிரிக்க நாடொன்றாக இருக்கலாம்) சர்வேதேச பாதுகாப்புச் சபையினால் பிடிவிறாந்து சமர்பிக்கப்பட்டு, ஆனால் அவர் தன் நாட்டு மக்களை கிளப்பி அதற்கு எதிராக போராட வைத்து, தன்னை யாரும் கைது செய்ய முடியாது என்று சவால் விட்டதாக, இப்போ அவர் இறந்திருக்கலாம். கோதாவுக்கு இனி நாட்டில் பெரும் ஆதரவு இருக்காது. நடப்பதெல்லாம் நன்மைக்கே!
  2. அட ...... நானும் கண்டுபிடிச்ச துப்பாக்கியை எண்டெல்லோ நினைச்சேன்! வீரகேசரி பேப்பர் வாங்கி படிக்க வேணும் சாமியாரின் கவிதையை! .
  3. மக்களிடம் பணம் இல்லாமை, முன்னைய முறைக்கு அதாவது விறகு அடுப்புக்கு தங்களை மக்கள் மாற்றிக்கொண்டமையும் காரணமாக இருக்கலாம்! மக்களிடம் பணம் இன்மை, தொழில் இழப்பு, வாகனத்தின் தேவைகளும் குறைந்து வருவதற்கான காரணமாக இருக்கலாம், நிவர்த்தி செய்யப்பட்டுள்ளது என அர்த்தமில்லை.
  4. இவர் இனி எங்கு போனாலும் இதுதான் கதி. ஆகவே ரணிலே கதியென்று கொஞ்சநாளைக்கு கிடப்பார். ரணிலும் லைனை கிளீயர் பண்ணி கொடுத்திருக்கிறார். பிறகு பாருங்கோ ஆட்டத்தை. சொறிஞ்ச கை சும்மா கிடவாது, முதல் ஆப்பு ரணிலுக்குத்தான். அவரின் தந்திரம் அவருக்கு எதிராக திரும்பும். ரணில ஓடித்தப்ப விடாமல் ரவுண்டு கட்டி விழும். கைகொடுக்க யாருமிருக்க மாட்டார்கள் ரணிலாருக்கு அந்த நேரத்தில்!
  5. முடிவு அறிவிக்க முதலே வெடி கொழுத்துகிறவர், இப்பதான் தூக்கத்திலிருந்து எழுந்தாரோ? இவரின் பாராமுகம் கண்டுதான் ஐயாவும் சீனப்பக்கம் திரும்பியிருப்பார்!
  6. களத்தில இப்ப பூகம்பம் வெடிக்கப்போகுது இந்த பெயரைகண்டதும், நான் இந்தப்பக்கம் எட்டியும் பாக்காமல் இருப்பதே இப்போதைக்கு நல்லது!
  7. அப்படி என்னதான் பேசியிருப்பார்? இவர் பெரிய கொல்லிமலை இரகசியக்காரன் என்றுதானே வெளிநாட்டுத் தூதுவர்கள் தனியே அழைத்து பேசினர். அதற்கிடையில் என்ன நடந்தது இவருக்கு? ஒருவேளை அமெரிக்காவுக்கு எதிரா ஏதும் சொன்னாரோ? ஆனால் அமெரிக்காதான் ரணிலை கொண்டுவந்தது என்றும் தாங்கள் இந்தியாவின் சொல்லுக்கிணங்க ரணிலுக்கு கூட்டாக வாக்களிக்கவில்லை என்றும் சொல்கிறார். ஒருவேளை ஏதும் மாறாட்டம் வந்திருக்குமோ? என்னதான் நடக்குது நம்ம நாட்டில ஒன்றும் புரியல?
  8. அரசாங்கத்திடம் அதற்கான வக்கில்லை அதாவது புலம்பெயர்ந்தோரிடம் இருந்து வரும் உதவிகளுக்கு தடை, கட்டுப்பாடு, ஏற்படுத்தாமல் அவ்வுதவிகளை தாமே கையாளுவதற்கு, அதற்கான அனுமதியை பெறுவதற்கு முயற்சி எடுக்க யோசித்திருக்கலாம்.
  9. கோத்தாவை விரட்டவேண்டும் என்று எண்ணியவர்களுக்கு அவரின் பினாமி வந்தது, அதே அடக்குமுறையை கையாண்டது ஏமாற்றத்தையும், பயத்தையும், வெறுப்பையும் அளித்திருக்கலாம். அதனால் எதுக்கு வம்பு என்று கையை கட்டியிருப்பினம்.
  10. ரணில் வந்தால் வெளிநாட்டு பணம் கொட்டும் என்று ஆரூடம் சொன்னார்கள், அவரும் அவற்றை நம்பி கதிரை ஏறி, சண்டித்தனமும் காட்டி, இருக்கிறவர்களின் ஆத்திரத்தையும் கிளறி விட்டுள்ளார் இனித்தான் தெரியும் ஆட்டம். ஆப்பிழுத்த குரங்குமாதிரி முழிக்கப்போறார்!
  11. இவர் வாழ்த்துச் சொன்ன சந்தோஷத்தில சீனப்பயணத்துக்கு அடுத்து ரஷ்யாவிலே போய் இறங்கப்போறார் உதவி கேட்டு ஆமா..... பக்கத்து வீட்டு அண்ணா வாழ்த்துச் சொன்னவரோ இவருக்கு?
  12. ஏதோ அமெரிக்க அம்மையாரின் ஆசியோடுதான் ரணில் அரியணை ஏறினார் என்று கதை அடிபட்டுது, அப்பிடியென்றால் சீனாவிடம் கையேந்த விட்டிருப்பாவோ என்றொரு சந்தேகம்?
  13. ஆனால் பாருங்கோ! நம்ம இனவாதிகள் இனவழிப்பின் போது சொன்ன காரணங்களும், போர் செய்த முறைகளும், ஏற்படுத்திய அழிவுகளும் புடீன் உக்கிரேனில் செய்யும் போர், காரண முறைகளோடு ஒத்துப்போகின்றன. நீ உன் நண்பனைக்காட்டு எனக்கு , நான் உன்னைப்பற்றி சொல்கிறேன் என்றொரு பழமொழி உண்டு. சரிதானே.
  14. எழுபது வருடமாக கவ்வி பிடித்தும் வாய் வலிக்கவில்லை, கை விறைக்கவில்லை என்றால் பாருங்கோவேன் எத்தனை பலசாலிகளென்று!
  15. சிலர் தமிழ் ஆதரவு பேசி அரசியலுக்கு வரும்போது கிடைக்கும் அனுபவம், மீண்டும் அரசியலில் நிலைத்து நிற்கவேண்டுமானால் தமிழர் எதிர்ப்பு எடுத்தாலே நிலைத்து நிற்கலாம் என்பது இந்த நாட்டின் நியதி. இதற்கு ஆரம்பத்தில் சிங்களம் மட்டுமே அரசமொழி என சட்டம் கொண்டுவந்த பண்டாரநாயக்க, வாசுதேவா இன்னும் பலரின் ஆரம்ப அரசியல் வாக்குறுதிகள் சான்று. விக்கிரமநாயக்கா அதே காரணத்துக்காகவே அரசியலில் இருந்து தூக்கி வீசப்பட்டா. ஆனால் அவர் அரசியலுக்காக தன் கொள்கையை மாற்றி பேசவில்லை, உண்மையை மீண்டும் மீண்டும் சொல்லிக்கொண்டு இருக்கிறார். பிரபுத்த தனுஷ்க இந்த இளைஞர் சொல்வதை சிங்களம் ஏற்றுக்கொண்டு, மாற்றம் வருமாக இருந்தால்; விக்கிரம நாயக்கா போன்றவர்களை சிங்களம் தேர்ந்தெடுக்கும், அது நிலைத்து நிற்கும்!
  16. அவர் தனித்து விடப்படுள்ளார், இவர் தனித்து ஆட்சியை கைப்பற்றியுளார். வாழ்த்து தெரிவித்து ஆதரவை பரிமாறிக்கொள்ளட்டுமேன்!
  17. ஆர்பாட்டமில்லாமல், முகந்தெரியாமல், விளம்பரமில்லாமல் இந்த மாற்றத்திற்கு உழைத்த அனைத்து உங்களுக்கும் எனது பாராட்டுக்களும் நன்றிகளும்! நாட்டை கொள்ளையடித்து, வளங்களை வெளிநாடுகளுக்கு விற்று, மக்களை ஏதிலிகளாக்கியவர்கள் மட்டும் தியாகிகள். இவர்களும் துடைத்தெறியப்படுவர்!
  18. காலி முகத்திடலில் ஆர்ப்பாட்டக்காரர்கள் தாக்கப்பட்டமை தொடர்பாகவும் நாட்டின் தற்போதைய நிலைமை விவாதிக்கவும் இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி நாளை 25 ஆம் திகதி நாடாளுமன்றத்தை கூட்ட வேண்டும் என எதிர்க்கட்சிகள் அழைப்பு விடுத்துள்ளதாக அறிக்கை ஒன்றினை வெளியிட்டு ஐக்கிய மக்கள் சக்தி கேட்டுக்கொண்டுள்ளது.
  19. இவர்கள்தான் அந்த செல்லாத வாக்கு போட்ட கறுப்பாடுகளாயிருக்கும். திட்டப்படி! வாக்குச்சீட்டினை பழுதாக்கினத்துக்கு விருந்து!
  20. அவர்களின் நீண்டநாள் கனவை நனவாக்க இந்தபொம்மைதான் சரியென்று தீர்மானித்து தேர்ந்தெடுத்துள்ளார்கள். இவரின் அரசியலும் பாதி பக்ஸ்ஷாக்களின் நாமல் கனவும் பாதியில் கலைந்து விடுகிறது. நாமலை ஜனாதிபதியாக்க ஜோசியர் கூற்றுப்படி தேர்தலை குறிப்பிட்ட காலத்திற்கு முன் அறிவித்து பதவியிழந்தார் மஹிந்தா, அதை தொடர்ந்து கோத்தாவும் பாதியில் ஓடிவிட்டார். இப்போ கரை சேரா ஓடத்தில் ஏறி காத்திருக்கினம்.
  21. இந்த ஒன்று போதும், நாளைக்கு பாராளுமன்றத்தில் கேள்வி கேட்க்கிறவர்கள் மேல் தாக்குதல் நடத்த. காசு தருவினமெல்லெ.
  22. நாடாளுமன்றத்தை சுற்றி இரும்பு வேலிகள் அமைத்து நாளைக்கு இவர்களும் தாக்கப்படலாம் கேள்வி கேட்டால்.
  23. ரணிலை அடிச்சு விரட்டினா, இந்த அமைச்சர்களும் விரட்டப்படுவார்கள் அல்லவா? அற்ப ஆயுசு இந்த அமைச்சு பதவிகளுக்கு.
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.