Jump to content

satan

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    8486
  • Joined

  • Last visited

  • Days Won

    1

Everything posted by satan

  1. இனிமேல் ஒன்றும் செய்ய முடியாதென்று துணிந்துதான் களத்தில் நிக்கிறார்கள். அவர்களுடன் பேசிக்கொண்டே அவர்களை கைது செய்வார் நரியார். காலக்கெடு வேறை கொடுத்திருக்கிறார்கள். இதைத்தான் சொல்லியடி எண்டு சொல்லுறதோ?
  2. எனக்குள்ள சந்தேகமென்னவென்றால்; இவர்களுக்கு வாக்கு போடும் மக்கள் மட்டும் எப்படி சரியாக, இவர்களை மீண்டும் மீண்டும் சந்தேகமில்லாமல், குழப்பமில்லாமல் தெரிவு செய்து அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவார்கள் என்று நம்பி அனுப்புகிறார்கள்? தங்கள் கோரிக்கைகள் நிறைவேறாமைக்குரிய காரணத்தை இப்போ மக்கள் உணர்ந்திருப்பார்கள். எப்படிப்பட்ட அறிவு குறைந்தவர்களை நாங்கள் அனுப்பி விட்டு காத்திருந்து ஏமாந்தோம் என்பதை.
  3. இன்னும் ஆட்டம் முடிவடைந்தது என்று முடிவு அறிவிக்கவில்லை, எனவே ஆட்டம் தொடரும்! தட்டிக்கொண்டு கிளம்பி விடாதீங்கோ விசுகர்! இருந்து மிகுதி ஆட்டத்தையும் ரசித்து, முடிவையும் அறிந்து ஆறுதலாய் கிளம்புவோம். அவர்கள் சொல்வதிலும் ஒரு நிஞாயம் தெரியுதெல்லோ! ஆனா நம்ம சம்பந்தர் ஐயா, ரணில் வந்தது சரியென்பார். இது வெளிநாடுகளின் கைகளையும் மீறிப்போய்விட்டது போலுள்ளதே!
  4. தான் சொன்ன சொல்லுக்கே பொறுப்பெடுக்க முதுகெலும்பு இல்லாமல் பத்திரிகைக்காரரை குற்றம் சாட்டியவர் இவர் முதுகெலும்பைப்பற்றி சொல்கிறார் கேளுங்கள்! முதுகெலும்பு அதிகம் குத்துதோ இவருக்கு? இப்போ பலபேருக்கு வாய் பேசுவதைவிட, உள்மனது குத்துவதை மறைக்க முடிவதில்லை.
  5. கேட்டுக்கொண்டு சூழ நிக்கிறவர்களாலேயே சிரிப்பை அடக்க முடியவில்லை, இவர் சிரிப்பதை முகக்கவசம் மறைத்தாலும் கண் மலர்ச்சி தெரிவிக்கிறது இவரின் மகிழ்ச்சியை. எப்படி எல்லோரும் பொய்யை அடித்து மெய்யென்கிறார்கள்? இவர் சேவையாற்றி களைத்து, இளைத்து விட்டார்,சொல்கிறார் கேளுங்கள். ஆனா அவர் செய்ததுபோல் செய்யாதீர்கள், முடிவு அவருக்கு வந்ததுபோலவே உங்களுக்கும் வரும். காரணம் மக்கள் விழித்து விட்டார்கள்!
  6. ஆமா .....! இதை சொல்லும்போது, எதை வென்றெடுத்தாய் எப்போதும் அரசின் கூலியாய் செயற்பட்டு? என்பதை மக்கள் கேள்வி கேட்க மாட்டார்கள் என்பது அவரது அசையா நம்பிக்கை. அடுத்தமுறை இன்னொரு கட்சி ஆட்சி அமைக்கும்போதும் இந்த வசனநடை மாறாமல் பேசுவார். உள்மனது சொல்லும் உண்மையை அவரால் மறைக்கமுடியவில்லை. இந்திய பத்திரிகையாளர் இவரை பேட்டி கண்டபோது, மறைந்த தனது அரசைபற்றி உளறியதை கொஞ்சம் இணைத்து விடுங்களேன்!அவரும் தான் சொன்னதை நினைவு கூர, அல்லது தான் சொன்னதை பத்திரிகைக்காரர் மாற்றி பதிந்து போட்டார் என்று மறுப்பறிக்கை விட, இல்லை இதுவும் அதே அரசுதான் பொறுத்திருங்கள் முடிவறிய என்று உறுதிப்படுத்த வசதியாக இருக்கும். இனியென்ன? தாடியர் தனது படை பரிவாரங்களையும், ஆயுதங்களையும் தயார்படுத்தி வேட்டைக்கு பயமில்லாமல் புறப்படலாம்!
  7. நாடு இருக்கும் நிலையில் இப்படி சில வேடிக்கையான கதைகளை சொல்லி மக்களை ஆற்றுப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் அவர். இதுவரை எல்லோரும் சொன்னது பொய்தானே, அவர் என்ன பெரிசா மாற்றி சொல்லிப்போட்டார்? ஆனா யார் இவர் சொல்வதை நம்புவது என்பதுதான் கேள்வி? அவரே தான் சொல்வது பொய் என்று தெரிந்தும் சொல்கிறார்.
  8. காலிமுக திடல் போராட்டம் எங்கே தமிழருக்கு ஆதரவாய் திரும்பி, சரித்திரத்தை மாற்றி விடுமோ என்கிற அங்கலாய்ப்பு பலர், பல நாடுகள் மத்தியில் இருந்தது. அது இப்போ தணிந்திருக்கும். பாப்போம் மிகுதி எப்படி தொடருமென?
  9. தமிழர்களது உணர்வுகளையும், உரிமைகளையும் மதித்து, சரிசமமாக நாட்டை கட்டியெழுப்புவோம் என்று சொல்லவில்லை. சிங்கள, பவுத்தம் இடித்தழித்த நாட்டை கட்டியெழுப்ப தமிழர் கை கோர்க்கவேண்டும், கட்டி எழும்பியதும் கட்டிய கையை வெட்டி எறியவேண்டும். என்ன நாட்டில நடக்காததே நடக்கபோகுது? இந்த நாட்டின் சரித்திரமது.
  10. இதை கூட சரியாக போடத் தெரியாதவர்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள்?
  11. அது உங்களின் கருத்து. காலிமுகத்திடலில் நடக்கும் போராட்டங்களை ஓரளவுக்கேனும் தமக்கு சாதகமாக பயன்படுத்தியவர்களும் கொழும்புவாழ் தமிழர்கள், அதுவும் அரசியல் சாராத சாதாரண மக்கள்.
  12. அதுவல்ல சிறியர் காரணம். அவர்கள் எதிர்பார்ப்பு வேறாக இருக்கலாம்! லட்ஷியம் இல்லாத மனிதர்கள், அவ்வப்போது முடிவை மாற்றுவார்கள்.
  13. உண்மையை ஏற்க மறுபவருக்கு உண்மையை எடுத்துரைப்பதே சம்பந்தப்பட்டவரின் கடமை, பொறுப்பு. பொய்க்கு தாளம் போடுவது உண்மையாகாது எவ்விதத்திலும் பிரச்சனையை தீர்க்காது. அதையே விக்கினேஸ்வரன் செய்கிறார், அது சிலருக்கு வயிற்றில் புளியை கரைக்குது. கண்கொத்திப்பாம்பாய் விமர்சிக்கிறார்கள், அடங்கி விடுவார் என நினைக்கிறார்கள். கை கொடுக்காவிட்டாலும் விலகி இருக்கலாம்!
  14. மக்களின் வாக்குகளால் பதவிபெற்றதும் மக்களை சிந்திப்பவர் யாருமுண்டோ? அப்படி யாரும் முனைந்தாலும் சேறடித்து அவர்களை துரத்தி விடுவார்கள்! இவர்கள் தங்களை விடுவிப்பார்கள் என்று நம்ம உறவுகள் சிறைகளில் காத்திருக்க, தம் உறவுகளுக்கு விடுதலை வேண்டித்தருவார்கள் என்கிற நம்பிக்கையில் மக்கள் வாக்களித்து இவர்களை அனுப்பிவைக்க, அவைகளை எல்லாம் மறந்துவிட்டு, புறந்தள்ளிவிட்டு இந்த மாமனிதனை காப்பாற்ற நீதிமன்றம் அலைந்து, எதிர்கட்சி கதிரையை இழந்ததுதான் மிச்சம்!
  15. அடிப்படை விளக்கமே குளறுபடியாய் இருக்கிறதே! இருவரின் மதமும் ஒன்றுதானே! அப்படியென்றால் ஒருவருக்கு தனது மதம் எதுவென்று தெரியாத குழப்பமாக இருக்கலாம், தந்தையார் சரிவர சொல்லிக்கொடுக்கவில்லை, அங்கேதான் தவறு, உண்மையும் அதுதான். பிள்ளைகளிலில்லை!
  16. ஒருவரை மட்டும் குத்திக்காட்டுவதன் நோக்கம் என்னவோ? சரி பிழையாகாது, பிழை சரியாகாது. எந்த விட்டுக்கொடுப்பும் இனியில்லை, கொடுத்ததே அதிகம் என்கிறார், பேராசையை தட்டிகேட்க்கிறார்!
  17. எதுவும் மாறாது விட்ட இடத்திலிருந்து தொடரும் எனும் செய்தி!
  18. நரியார் புலிகளுடன் பேசிக்கொண்டே, புலிகளுக்கெதிராக சர்வதேச வலை விரித்தததை தாமே ராஜதந்திரிகள் ஆர்வ மிகுதியாலோ, தாம் தாம் வெற்றிபெறப்போகிறோம் என்கிற திமிரிலோ, தேர்தல் காலத்தில் மிலிந்த மொரகொடவும், நவீன் திஷ நாயக்கவும் போட்டுடைத்ததே தலைவர் தனது முடிவை மாற்ற காரணமாகியது. அவரை ஆதரித்திருந்தாலும் நமது தலைவிதி இதுதான், ஆனால் சிங்கள இராணுவம் தப்பி அமெரிக்க, இந்திய இராணுவம் முடித்திருக்கும். ஆனாலும் தலைவர் ராஜபக்ஸ்ஷாக்களின் குணாதிசயத்தையும், அதன் பலனையும் எதிர்வு கூறியிருந்தார்!
  19. அவையும் வெல்லுற அவசரத்தில எழுதிக்குடுத்துப்போட்டு நாளைக்கு மறுப்பறிக்கையோ? வாங்கி கிழித்து குப்பைக்கூடைக்குள் போடுறதோ? அல்லது விட்டிட்டு கலைப்படுகிறதோ? "உறுதிப்பாடு" இவர்களே மக்களுக்கு கொடுத்த உறுதிப்பாட்டை தூக்கி கடாசிப்போட்டினம், இதுக்குள்ள டிலான் பெரேராவின் முகமும் தெரியுது. தேர்தல் என்றால்; நடக்காததும் நடக்கும், பல புதுமைகளைச்சொன்னேன். சிங்களத்துக்குள் ஒரு டக்கிளஸ் தேவானந்தா இவர், கொப்பு விட்டு கொப்பு தாவுவதில் வல்லவர். எல்லோருந்தான் இவர்கள் ஒருபடி மேல். ஒருவேளை கூட்டமைப்பினரின் முடிவு அறிய அனுப்பப்பட்டாரா?
  20. தொல்லியல் திணைக்களம் பிடிக்கும் காணிகளில் விகாரைகள் எழும்பும் என அர்த்தம், இனி முழு மூச்சாக தொல்லியல் திணைக்களம் காணி பிடிக்கும், மறுநாளே விகாரை எழும்பும், முழுக்கு விழா நடைபெறும், தமிழர் போராடிக்கொண்டே இருக்கணும் என்கிறது நம்ம நீதிமன்றம் என நினைக்கிறன். கை வாங்கப்படுகிறது என்றால்; குறித்த முன் கட்டளையிலிருந்து பின்வாங்கப்படுகிறது என நினைக்கிறன்.
  21. விக்கினேஸ்வரன் இலங்கையில் தமிழருக்கு நடந்தது இனவழிப்பே என்று கூற, அதற்கு ஆதாரம் இல்லை என அதிமேதாவி சுமந்திரன் வாதாட, கிளம்பியது பூதம் விக்கினேஸ்வரனுக்கு எதிராக! கூட்டமைப்பை பொறுத்த மட்டில், சுமந்திரன் ஒரு மணி கட்டின மாடு! விக்கினேஸ்வரன் வேண்டாத பெண்டாட்டி. தானே விக்கினேஸ்வரனை அரசியலுக்கு கொண்டவந்ததாகவும் அவர் தனது முதுகில் குத்திவிட்டார் என்றும் புலம்பி அவருக்கு எதிராக மாவையரை கொம்பு சீவினார். (சிங்களத்தை குற்றவாளியாக்கியதே முதுகில் குத்தியது என்பதன் விளக்கம்) கட்சியை விட்டு வெளியேறி தேர்தலில் நின்று வென்று காட்டட்டும் என்று துரத்தினார், அவர் வென்றதும் கட்சியை உடைத்து விட்டார் என்று புலம்பினார். அவர் வெளியேறியதும் தன்னை அரசியலுக்கு கொண்டுவந்த மாவையரில் வாய் வைத்தார். இவரின் அடுத்த பகிடி, உட்கட்சி பூசலை உள்ளுக்குள் பேசி தீர்க்க முடியாமல் வெளிநாடுகளில் அறைகூவல் விட்டவரிடம், ஒரு கேள்வி கேட்கப்பட்டது. அது, ஏன் வெளிநாட்டுத் தூதுவர்கள் உங்களை மட்டும் பேச்சுக்கு அழைக்கிறார்கள்? என அதற்கு இவர் அழித்த பதில் மிகவும் பரிகாசத்துக்குரியது. அதாவது அவர்கள் சில இரகசிய பேச்சுக்களை மேற்கொண்டார்களாம், அது இரகசியமாக இருப்பதற்காக தன்னை அழைக்கிறார்களாம், ஆனால் தான் வந்து பேசப்பட்ட விடயங்களை கூட்டத்தில் உறுப்பினர்களுடன் பகிர்ந்து கொள்கிறாராம். இதில் எங்கே இரகசியம்? ஏன் இவர் மட்டும்? என்பதை இவர்தான் விளக்க வேண்டும். இதுமட்டுமல்ல ஒருதடவை விக்கினேஸ்வரன் ஒரு அறிக்கை விட்டார், அதாவது தமிழருக்கு நடந்த அனிஞாயங்களை சர்வதேச பாதுகாப்பு கவுன்சிலுக்கு பாரப்படுத்த வேண்டுமென்று. அதற்கு நேற்று பெய்த மழையில் இன்று முளைச்ச காளான், சாணக்கியன், சொன்ன பதிலை தேடிப்பாருங்கள்., சாணக்கியனின் சிங்கள விசுவாசம் தெரியும். தங்களது சிங்கள விசுவாசத்தை மறைக்க, சிங்கள சம்பந்தி என இலகுவாக முத்திரை குத்தி விடுகிறார்கள். தங்களை, தங்களது பின்புலத்தை யாரும் கவனிக்க மாட்டார்கள் என்பது அவர்களது எண்ணம். எப்போவெல்லாம் விக்கினேஸ்வரன் சிங்களத்தால் தமிழருக்கு எதிராக நடாத்தப்பட்ட கொடூரங்களை வெளிப்படுத்துகிறாரோ, அப்போவெல்லாம் இந்த; சிங்கள சம்பந்தி, கொழும்புவாசி, சிங்களவரை கோபப்படுத்துகிறார் என்று சிங்கள விசுவாசிகள் கொடி தூக்க தொடங்கிவிடுவார்கள். சிங்கள கட்சியில் ஒட்டியிருந்துவிட்டு, சரிந்து போன தன் அரசியலை உயர்த்துவதற்காக இங்கு வந்து ஒட்டிக்கொண்டு போடும் நாடகம், பேசும் பேச்சு கொஞ்சநாளில் வெளுக்கும். அவரின் தனிப்பட்ட வாழ்வையும் அறிவோம். அதிலும் குருந்தூர் விகாரை விவகாரத்தில் பிக்குகளோடு மல்லுக்கட்டி, போராடி, போலீசாருடன் மோதுப்பட்டவர்கள் யாரோ, பெயர் இவர்களுக்கு. பொத்துவில் தொடங்கி பொலிகண்டிவரை போராட்டத்தை ஏற்பாடு செய்தவர்கள் யாரோ, பெயரை தட்டிக்கொண்டவர்கள் இவர்கள். சில வருடங்களுக்கு முன் ஒரு போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது, மக்கள் பேரணி என்று நினைக்கிறன். ஆனால் அதற்கு தாம் ஆதரவு வழங்கப்போவதில்லை என்று பகிரங்கமாக அறிவித்தார் சுமந்திரன். ஏன்? தனக்கு முன்னுரிமை வழங்கப்படாது என்பதால். இப்படி தங்களை முன்னிலைப்படுத்தவே அவர்கள் அரசியலுக்கு வந்தவர்கள், யாரையும் முன்னுக்கு வர இவர்கள் விட மாட்டார்கள்.
  22. தொலைபேசியில் சம்பந்தனை அழைத்த ரணில்! வீடு தேடிச் சென்ற சஜித் சம்பந்தர் ஐயா ஏதும் சொல்லிகொடுத்திருப்பாரோ? மக்கள் விடுதலை முன்னணியும் பின்வாங்குது, இதோ தமிழரை அரவணைத்து அரசியல் செய்யப்போகிறேன் என்று அறிக்கை விட்டவர் அமைதியாகி விட்டார், ஏதோ நடக்குது, என்ன என்றுதான் தெரியேல்ல. எதுக்கோ பயப்படுகிறார்களா? தேறாது, கதிரை ஏறின உடனேயே இறங்கி விடுவோமென என்று பின்வாங்குகிறார்களா?
  23. தென்பகுதியில் கோத்தா கோ கம, ரணில் கோ கம கொந்தளிப்பை பொலிஸார் திசைதிருப்பி இனங்களுக்கிடையில் முரண்பாட்டை உருவாக்க முனைகிறார்கள் என்கிற குற்றச்சாட்டை போலீசார் மேல் சுமத்த வேண்டும். ஆதாரமாக போராட்டக்காரர் கூற்று "அரசாங்கமே இன, மத, மொழி முரண்பாட்டை வளர்த்து இனங்களை பிரித்து வைத்ததாக போராட்டக்காரர் கூறியிருக்கிறார்கள். அதோடு அத்தகைய முரண்பாடுகளுக்கு தாம் இனிமேல் இடமளிக்கப்போவதில்லை என்றும் கூறியிருக்கிறார்கள். பொலிஸார் பொய்யான குற்றச்சாட்டை வைப்பதாக அறிவுறுத்த வேண்டும். தமிழர் பிரதேசத்தில் விகாரை கட்டினால் தென்பகுதி கொந்தளிக்குதாம், வடக்கில் தங்கள் நிலத்தில், தங்கள் வழிபாட்டுத் தலத்தை அழித்து, வழிபட விடாமல் தடுத்தால் அவர்கள் கொந்தளிக்க மாட்டார்களா? எது நீதி? இதை, விகாரையை அழித்து தமிழர் ஆலயம் அமைத்தால் தென்பகுதி சும்மா இருக்குமா? தென்பகுதி நீதிமன்றங்கள் என்ன தீர்ப்பு கொடுக்கும்? அடுத்தமுறை இத்தனைக்கும் விடையோடு வாருங்கள் என்று பொலீசாரை திருப்பி அனுப்பிவிட வேண்டும்.
  24. வெளிநாடெல்லாம் போய் விக்கியர் பதவி விலக வேண்டும் என்று சிறுபிள்ளைத்தனமாய் உளறிக்கொண்டு திரிந்த சுமந்திரன், அனந்தி மீதும் பிற உறுப்பினர்கள் மீதும் நடவடிக்கை எடுத்த சம்பந்தர் இந்த விடயத்தில் வாயை அடக்கிக்கொண்டிருந்த நடுவுநிலைமையும், முடிந்தால் கட்சியை விட்டு வெளியேறி தேர்தலில் நின்று வென்று காட்டட்டும் என்று சவால் விட்ட சுமந்திரன், அத்தனையையும் அமைதியாக, பண்பாக ஏற்று, வென்று காட்டியுள்ளார். சிலர் விக்கியரை விமர்சிப்பதால் தங்களை பிறர் விமர்சிப்பதை தவிர்க்கும் தற்காப்பாய் நினைக்கிறார்களோ? அல்லது தங்களை அதன்பின்னால் மறைப்பார்க்கிறார்களோ தெரியவில்லை? ஆனால் விமர்சிக்கப்படுபவரை விட ,விமர்சிக்கிறவர்களின் பின்புலத்தை ஆராய்ந்தால் உண்மைக் காரணி புரியும்! சுமந்திரனைவிட வேறு யாருமில்லை என்று பலர் இங்கு வந்து கதை அளப்பது உண்டு. உண்மையில் இல்லை என்பதில்லை, யாரும் முன்வரமாட்டார்கள். காரணம் முன்னேற விடமாட்டார்கள், மாறாக நாறடித்து விடுவார்கள். காரணம் தாங்கள் செய்யாததை வேறு யாரும் செய்து மக்களிடம் நன்மதிப்பு பெறக்கூடாது, தங்களை விட யாரும் மேல் வரக்கூடாது என்கிற சுயநலம். அதற்காக மக்கள் இவர்களை தெரிந்தெடுத்து கதிரையில் உக்காத்திவிட்டு அவஸ்த்தை படவேணும்.
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.