Jump to content

satan

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    8489
  • Joined

  • Last visited

  • Days Won

    1

Posts posted by satan

  1. 6 minutes ago, தமிழ் சிறி said:

    கூட்டமைப்பு… யாருக்கு ஆதரவு கொடுக்கின்றதோ, அவர்கள் தோற்பது உறுதி

    கூட்டமைப்புக்கு யாரோ சூனியம் வைத்து விட்டார்கள். சும்மா இவர்களுடன் டீல் போட்டு, உடன்படிக்கை செய்து, நாடி பிடித்து பார்ப்பது; யார் வெல்வாரென அவ்வளவே. அங்கேயே வெல்பவர் யாரென உறுதி செய்துவிடுவார்கள்.

    • Like 1
  2. 18 hours ago, கிருபன் said:

    எழுத்துமூல உடன்படிக்கையில் ஒப்பமிட்டுள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

    மக்களை பேய்க்காட்ட ஒருவரோடு உடன்படிக்கையில் கையெழுத்திடுவது, மறுகையில் கையூட்டு வாங்கிக்கொண்டு மற்றவருக்கு ஆதரவு கொடுப்பது. எப்படியிருந்தாலும் யாருக்கு வாக்கு போட்டாலும் தமிழருக்கு ஒரு நன்மையையும் ஏற்படப்போவதில்லை, இவர்கள் வற்புறுத்தப்போவதுமில்லை. அப்பப்போ தமிழரை வைத்து அவர்கள் பணம் பார்ப்பார்கள். இதென்ன புதுசா இவர்கள் உடன்படிக்கையில் கையெழுத்து வாங்குவது?

  3. வாக்குபோட்டுத் தெரியாத கைகள், இரத்தம் தோய்ந்த கைகள், ஊழல் செய்த கைகள் மாறுமோ? இந்தக்கைகளில் திறவு கோலா? கள்ளரின் கையில் திறப்பு.  இதுகளை கழுவி சுத்தப்படுத்த முதல் நாடு கடனில மூழ்கி, தேடி எடுக்க முடியா நிலைக்கு போய்விடும்! 

  4. 5 hours ago, பிழம்பு said:

    எம்மை அடித்துவிரட்டி, கைதுசெய்து, சுட்டுப்பொசுக்கி இந்தப் போராட்டத்தை முடிவிற்குக்கொண்டுவரலாமென ரணில் விக்ரமசிங்க நினைக்கக்கூடாது.

     

    5 hours ago, பிழம்பு said:

    மக்களாணையை மீறி செயற்பட்டால் பாராளுமன்றத்தை மக்கள் தீவைத்து எரிக்கும் நிலையேற்படும். அவ்வாறு ஒரு சம்பவம் நடந்தால் அதனை எம்மீது சுமத்தி, எங்களைத்தேடி வரவேண்டாம்.

    இனிமேல் ஒன்றும் செய்ய முடியாதென்று துணிந்துதான் களத்தில் நிக்கிறார்கள். அவர்களுடன் பேசிக்கொண்டே   அவர்களை கைது செய்வார் நரியார்.

    5 hours ago, பிழம்பு said:

    மக்களின் விருப்பத்திற்கு மாறாக அமைக்கப்படும் அரசாங்கத்திற்கு என்ன நடக்கப்போகின்றது என்பது இன்னும் இரண்டு, மூன்று வாரங்களில் தெளிவாகும். எமது போராட்டம் தொடரும் என அவர் தெரிவித்தார்.

    காலக்கெடு வேறை கொடுத்திருக்கிறார்கள். இதைத்தான் சொல்லியடி எண்டு சொல்லுறதோ? 

  5. 13 hours ago, nochchi said:

    உண்மை. இந்த செய்தியை வாசிக்கும்போது யோசித்தேன். அதாவது நாடாளுமன்ற உறுப்பனர்களுக்கே வாக்களிக்கத் தெரியவில்லை என்பதும் சனாதிபதித் தெரிவில் வரலாற்றுப் பதிவாகியிருக்கிறது. இதைவிட வெட்கக்கேடு இருக்கமுடியுமா?

    எனக்குள்ள சந்தேகமென்னவென்றால்; இவர்களுக்கு வாக்கு போடும்  மக்கள் மட்டும் எப்படி சரியாக, இவர்களை மீண்டும் மீண்டும் சந்தேகமில்லாமல்,  குழப்பமில்லாமல் தெரிவு செய்து அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவார்கள் என்று நம்பி அனுப்புகிறார்கள்? தங்கள் கோரிக்கைகள் நிறைவேறாமைக்குரிய காரணத்தை இப்போ மக்கள் உணர்ந்திருப்பார்கள். எப்படிப்பட்ட அறிவு குறைந்தவர்களை நாங்கள் அனுப்பி விட்டு காத்திருந்து ஏமாந்தோம் என்பதை. 

  6.  இன்னும் ஆட்டம் முடிவடைந்தது என்று முடிவு அறிவிக்கவில்லை, எனவே ஆட்டம் தொடரும்! தட்டிக்கொண்டு கிளம்பி விடாதீங்கோ விசுகர்! இருந்து மிகுதி ஆட்டத்தையும் ரசித்து, முடிவையும் அறிந்து ஆறுதலாய் கிளம்புவோம்.  அவர்கள் சொல்வதிலும் ஒரு நிஞாயம் தெரியுதெல்லோ! ஆனா நம்ம சம்பந்தர் ஐயா, ரணில் வந்தது சரியென்பார். இது வெளிநாடுகளின் கைகளையும் மீறிப்போய்விட்டது போலுள்ளதே! 

  7. 18 hours ago, தமிழ் சிறி said:

    அந்த பொறுப்பை எடுக்க மறுப்பவர்கள் முதுகெலும்பு இல்லாதவர்கள். அந்த பொறுப்பை நான் தனியே சுமக்க நேரிட்டாலும் அதற்கும் நான் தயார். எத்தனை பேருக்கு முதுகெலும்பு இருக்கிறது என்று பார்போம்.“ என அவர் குறிப்பிட்டுள்ளார்.

    தான் சொன்ன சொல்லுக்கே பொறுப்பெடுக்க முதுகெலும்பு இல்லாமல் பத்திரிகைக்காரரை குற்றம் சாட்டியவர் இவர் முதுகெலும்பைப்பற்றி  சொல்கிறார் கேளுங்கள்! முதுகெலும்பு அதிகம் குத்துதோ இவருக்கு?

    7 hours ago, தமிழ் சிறி said:

    உங்களுக்கும், உங்கடை....  ஆபிரகாம்  சுமந்திரனுக்கும் சேர்த்து தான் சொன்னனான். 

    இப்போ பலபேருக்கு வாய் பேசுவதைவிட, உள்மனது குத்துவதை மறைக்க முடிவதில்லை.

  8. 9 hours ago, பிழம்பு said:

    முன்னாள் அமைச்சர் டலஸ் அழகபெருமவை நாங்கள் முன்னிலைப்படுத்தினோம், வாக்களித்தோம் இருப்பினும் போட்டியில் அவர் தோல்வியடைந்து விட்டார்.

    கேட்டுக்கொண்டு சூழ நிக்கிறவர்களாலேயே சிரிப்பை அடக்க முடியவில்லை, இவர் சிரிப்பதை முகக்கவசம் மறைத்தாலும் கண் மலர்ச்சி தெரிவிக்கிறது இவரின் மகிழ்ச்சியை. எப்படி எல்லோரும் பொய்யை அடித்து மெய்யென்கிறார்கள்?

    9 hours ago, பிழம்பு said:

    எந்த அரசாங்கம் தோற்றம் பெற்றாலும் மக்களுக்கு சேவையாற்ற வேண்டும்.

    இவர் சேவையாற்றி களைத்து, இளைத்து விட்டார்,சொல்கிறார் கேளுங்கள். ஆனா அவர் செய்ததுபோல் செய்யாதீர்கள், முடிவு அவருக்கு வந்ததுபோலவே உங்களுக்கும் வரும். காரணம் மக்கள் விழித்து விட்டார்கள்! 

  9. 8 hours ago, பிழம்பு said:

    ஆனாலும் நாம் எப்போதும் தீர்க்கதரிசனமான தீர்மானங்களையே எடுத்திருக்கின்றோம். எமது தேசிய நல்லிணக்க அரசியல் முன்னெடுப்புக்களானது தமிழ் மக்களின் சமத்துவமான எதிர்காலத்தை வென்றெடுப்பதற்கும், தமிழ் மக்கள் எதிர்கொண்டுள்ள அனைத்துவகை பிரச்சனைகளுக்கும்  தீர்வுகளைப் பெற்றுக் கொடுப்பதற்கும்  வழியேற்படுத்தும் என்பதே எமது அரசியல் தீர்மானங்களின் அடிப்படையாகும்.

    ஆமா .....! இதை சொல்லும்போது, எதை வென்றெடுத்தாய் எப்போதும் அரசின் கூலியாய் செயற்பட்டு? என்பதை மக்கள் கேள்வி கேட்க மாட்டார்கள் என்பது அவரது அசையா நம்பிக்கை. அடுத்தமுறை இன்னொரு கட்சி ஆட்சி அமைக்கும்போதும் இந்த வசனநடை மாறாமல் பேசுவார். 

    9 hours ago, பிழம்பு said:

    வெல்லுகின்ற பக்கத்தில் அணி சேர்வது அரசியல் சாணக்கியமல்ல. நாம் தீர்மானித்த பக்கத்தை வெல்லச் செய்வதே அரசியல் சாணக்கியமாகும்.

    உள்மனது சொல்லும் உண்மையை அவரால் மறைக்கமுடியவில்லை. இந்திய பத்திரிகையாளர் இவரை பேட்டி கண்டபோது, மறைந்த தனது அரசைபற்றி உளறியதை கொஞ்சம் இணைத்து விடுங்களேன்!அவரும் தான் சொன்னதை நினைவு கூர, அல்லது தான் சொன்னதை பத்திரிகைக்காரர் மாற்றி பதிந்து போட்டார் என்று மறுப்பறிக்கை விட, இல்லை இதுவும் அதே அரசுதான் பொறுத்திருங்கள் முடிவறிய என்று உறுதிப்படுத்த வசதியாக இருக்கும். 

    இனியென்ன? தாடியர் தனது படை பரிவாரங்களையும், ஆயுதங்களையும்  தயார்படுத்தி வேட்டைக்கு பயமில்லாமல் புறப்படலாம்! 

  10. நாடு இருக்கும் நிலையில் இப்படி சில வேடிக்கையான கதைகளை சொல்லி மக்களை ஆற்றுப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் அவர். இதுவரை எல்லோரும் சொன்னது பொய்தானே, அவர் என்ன பெரிசா மாற்றி சொல்லிப்போட்டார்? ஆனா யார் இவர் சொல்வதை நம்புவது என்பதுதான் கேள்வி? அவரே தான் சொல்வது பொய் என்று தெரிந்தும் சொல்கிறார்.

  11. காலிமுக திடல் போராட்டம் எங்கே தமிழருக்கு ஆதரவாய் திரும்பி, சரித்திரத்தை மாற்றி விடுமோ என்கிற அங்கலாய்ப்பு பலர், பல நாடுகள் மத்தியில் இருந்தது. அது இப்போ தணிந்திருக்கும். பாப்போம் மிகுதி எப்படி தொடருமென?

  12. 5 hours ago, ஏராளன் said:

    .தமிழ் கட்சிகளையும் தம்முடன் கைக்கோர்த்து, நாட்டை கட்டியெழுப்புவதற்கு ஒத்துழைப்புக்களை வழங்குமாறும் அவர் கோரிக்கை விடுத்தார்.

    தமிழர்களது உணர்வுகளையும், உரிமைகளையும் மதித்து, சரிசமமாக நாட்டை கட்டியெழுப்புவோம் என்று சொல்லவில்லை. சிங்கள, பவுத்தம் இடித்தழித்த நாட்டை கட்டியெழுப்ப தமிழர் கை கோர்க்கவேண்டும், கட்டி எழும்பியதும் கட்டிய கையை வெட்டி எறியவேண்டும். என்ன நாட்டில நடக்காததே நடக்கபோகுது? இந்த நாட்டின் சரித்திரமது.

  13. 21 minutes ago, nochchi said:

    இதேவேளை செலுத்தப்பட்ட 223 வாக்குகளில் 4 வாக்குகள் செல்லுபடியற்றது என அறிவிக்கபட்டது.

    இதை கூட சரியாக போடத்  தெரியாதவர்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள்?

    • Like 1
    • Haha 3
  14. அது உங்களின் கருத்து. 

    காலிமுகத்திடலில் நடக்கும் போராட்டங்களை ஓரளவுக்கேனும்  தமக்கு சாதகமாக பயன்படுத்தியவர்களும் கொழும்புவாழ் தமிழர்கள், அதுவும் அரசியல் சாராத சாதாரண மக்கள்.  

  15. 25 minutes ago, தமிழ் சிறி said:

    சம்பந்தனின் எதிர்கட்சி தலைவர் பதவி பறி போன வெறி…. இங்கு வேலை செய்யுது.

     அதுவல்ல சிறியர் காரணம். அவர்கள் எதிர்பார்ப்பு வேறாக இருக்கலாம்! லட்ஷியம் இல்லாத மனிதர்கள், அவ்வப்போது முடிவை மாற்றுவார்கள்.

  16. 1 hour ago, Kapithan said:

     இருவரது மனமும் புண்படாத வகையில் நடந்துகொள்ள வேண்டும் என்பதுதானே உண்மை. 

    உண்மையை ஏற்க மறுபவருக்கு  உண்மையை எடுத்துரைப்பதே சம்பந்தப்பட்டவரின் கடமை, பொறுப்பு. பொய்க்கு தாளம் போடுவது உண்மையாகாது  எவ்விதத்திலும் பிரச்சனையை தீர்க்காது. அதையே விக்கினேஸ்வரன் செய்கிறார், அது சிலருக்கு வயிற்றில் புளியை கரைக்குது. கண்கொத்திப்பாம்பாய் விமர்சிக்கிறார்கள், அடங்கி விடுவார் என நினைக்கிறார்கள். கை கொடுக்காவிட்டாலும் விலகி இருக்கலாம்!  

  17. 14 hours ago, nochchi said:

    இவர்களது அரசியலால் மக்களது எதிர்காலம் பாழாவதை ஏன் சிந்திக்க மறுக்கிறார்கள்

    மக்களின் வாக்குகளால் பதவிபெற்றதும் மக்களை சிந்திப்பவர் யாருமுண்டோ? அப்படி யாரும் முனைந்தாலும் சேறடித்து அவர்களை துரத்தி விடுவார்கள்!

    10 hours ago, குமாரசாமி said:

    . தமிழர்களை சகுனி வேடம் போட்டு சூறையாடிய ஜென்மம். விடுதலைப்போராட்டத்தை பிளவுபடுத்தி சாதுர்யமாக அழிக்க உதவிய வேடதாரி

     இவர்கள்  தங்களை விடுவிப்பார்கள் என்று நம்ம உறவுகள் சிறைகளில் காத்திருக்க, தம் உறவுகளுக்கு விடுதலை வேண்டித்தருவார்கள் என்கிற நம்பிக்கையில் மக்கள்  வாக்களித்து  இவர்களை  அனுப்பிவைக்க, அவைகளை எல்லாம் மறந்துவிட்டு, புறந்தள்ளிவிட்டு இந்த மாமனிதனை காப்பாற்ற நீதிமன்றம் அலைந்து, எதிர்கட்சி கதிரையை இழந்ததுதான் மிச்சம்! 

  18. 31 minutes ago, Kapithan said:

    உங்கள் வீட்டுப் பிள்ளைகளில் ஒருவர் வேறு சமயம் மாறி திருமணம் செய்துகொண்டார்.

     

    31 minutes ago, Kapithan said:

    இரு பிள்ளைகளும் தங்கள் சமயத்தின் அருமை பெருமைகளை வெழுத்து வாங்குகிறார்கள். 

     

    35 minutes ago, Kapithan said:

    இதில் நீங்கள் யாருக்குச் சார்பாகக் கதைப்பீர்கள்? 

     

    35 minutes ago, Kapithan said:

    உங்களுக்கு தனிப்பட்ட விருப்பு வெறுப்புக்கள் இருக்கலாம், ஆனாலும்  இருவரது மனமும் புண்படாத வகையில் நடந்துகொள்ள வேண்டும் என்பதுதானே உண்மை. 

    அடிப்படை விளக்கமே குளறுபடியாய் இருக்கிறதே! இருவரின் மதமும் ஒன்றுதானே! அப்படியென்றால் ஒருவருக்கு தனது மதம் எதுவென்று தெரியாத குழப்பமாக இருக்கலாம், தந்தையார் சரிவர சொல்லிக்கொடுக்கவில்லை, அங்கேதான் தவறு, உண்மையும் அதுதான்.  பிள்ளைகளிலில்லை!  

  19. ஒருவரை மட்டும் குத்திக்காட்டுவதன் நோக்கம் என்னவோ? சரி பிழையாகாது, பிழை சரியாகாது. எந்த விட்டுக்கொடுப்பும் இனியில்லை, கொடுத்ததே அதிகம் என்கிறார், பேராசையை தட்டிகேட்க்கிறார்!   

  20. On 18/7/2022 at 19:39, தமிழ் சிறி said:

    பதில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் ஈ.பி.டி.பி. கட்சியின் தலைவரும் கடற்றொழில் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தாவுக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

    எதுவும் மாறாது விட்ட இடத்திலிருந்து தொடரும் எனும் செய்தி!

  21. 38 minutes ago, ரஞ்சித் said:

    "நாம் ஒப்பந்தம் போட்டுத்தான் ஆதரவு வழங்கினோம், அவர்கள் ஏமாற்றுவார்கள் என்று எமக்குத் தெரியாது"

    பட்டறிவு, பகுத்தறிவு என்று ஒன்று இருக்குதெல்லோ!

  22. 20 minutes ago, ரஞ்சித் said:

    ரணிலுக்கும் அமெரிக்காவுக்கும் பாடம் படிப்பிக்க எண்ணி இறுதியில் மகிந்த எனும் கொலைகாரனை அரியணையில் ஏற்றி ஒரு முற்றான இனக்கொலையினை எம்மீது நாமே திணித்துக்கொண்ட காலம்

     நரியார் புலிகளுடன் பேசிக்கொண்டே, புலிகளுக்கெதிராக சர்வதேச வலை விரித்தததை தாமே ராஜதந்திரிகள் ஆர்வ மிகுதியாலோ, தாம் தாம் வெற்றிபெறப்போகிறோம் என்கிற திமிரிலோ, தேர்தல் காலத்தில் மிலிந்த மொரகொடவும், நவீன் திஷ நாயக்கவும் போட்டுடைத்ததே தலைவர் தனது முடிவை மாற்ற காரணமாகியது. அவரை ஆதரித்திருந்தாலும் நமது தலைவிதி இதுதான், ஆனால் சிங்கள இராணுவம் தப்பி அமெரிக்க, இந்திய இராணுவம் முடித்திருக்கும். ஆனாலும் தலைவர் ராஜபக்ஸ்ஷாக்களின் குணாதிசயத்தையும், அதன் பலனையும் எதிர்வு கூறியிருந்தார்!

  23. 7 hours ago, பிழம்பு said:

    ஈற்றில் டலஸ் அழகப்பெருமவை ஆதரிப்பதாக இருந்தால் அவரிடத்தில் எழுத்துமூலமான உறுதிப்பாடு பெறப்பட வேண்டும் என்று கூட்டத்தி;ல் பங்கேற்ற  பல பிரதிநிதிகளால் வலியுறுத்தப்பட்டதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

    அவையும் வெல்லுற அவசரத்தில எழுதிக்குடுத்துப்போட்டு நாளைக்கு மறுப்பறிக்கையோ? வாங்கி கிழித்து குப்பைக்கூடைக்குள் போடுறதோ? அல்லது விட்டிட்டு கலைப்படுகிறதோ? "உறுதிப்பாடு" இவர்களே மக்களுக்கு கொடுத்த உறுதிப்பாட்டை தூக்கி கடாசிப்போட்டினம்,   

    இதுக்குள்ள டிலான் பெரேராவின் முகமும் தெரியுது. தேர்தல் என்றால்; நடக்காததும் நடக்கும், பல புதுமைகளைச்சொன்னேன்.

     

    5 hours ago, ஈழப்பிரியன் said:

    இந்த கூட்டத்துக்கை பீரிஸ் என்ற நரியும் நிற்குது.

    சிங்களத்துக்குள் ஒரு டக்கிளஸ் தேவானந்தா இவர், கொப்பு விட்டு கொப்பு தாவுவதில் வல்லவர். எல்லோருந்தான் இவர்கள் ஒருபடி மேல். ஒருவேளை கூட்டமைப்பினரின் முடிவு  அறிய அனுப்பப்பட்டாரா?     

  24. தொல்லியல் திணைக்களம் பிடிக்கும் காணிகளில் விகாரைகள் எழும்பும் என அர்த்தம்,  இனி முழு மூச்சாக தொல்லியல் திணைக்களம் காணி பிடிக்கும், மறுநாளே விகாரை எழும்பும், முழுக்கு விழா நடைபெறும், தமிழர் போராடிக்கொண்டே இருக்கணும் என்கிறது நம்ம நீதிமன்றம் என நினைக்கிறன். கை வாங்கப்படுகிறது என்றால்; குறித்த முன் கட்டளையிலிருந்து   பின்வாங்கப்படுகிறது என நினைக்கிறன்.

  25. 10 hours ago, nochchi said:

    அதைவிட சிங்கள எசமான விசுவாசம் கரணியமாக 'தமிழினப் படுகொலை' தீர்மானத்தை நிறைவேற்றியதும் முக்கிய கரணியாமாக இருந்தது.

     விக்கினேஸ்வரன் இலங்கையில் தமிழருக்கு நடந்தது இனவழிப்பே என்று கூற, அதற்கு ஆதாரம் இல்லை என  அதிமேதாவி சுமந்திரன் வாதாட, கிளம்பியது பூதம் விக்கினேஸ்வரனுக்கு எதிராக! கூட்டமைப்பை பொறுத்த மட்டில், சுமந்திரன் ஒரு மணி கட்டின மாடு! விக்கினேஸ்வரன் வேண்டாத பெண்டாட்டி. தானே விக்கினேஸ்வரனை அரசியலுக்கு கொண்டவந்ததாகவும் அவர் தனது முதுகில் குத்திவிட்டார் என்றும் புலம்பி அவருக்கு எதிராக மாவையரை கொம்பு சீவினார்.  (சிங்களத்தை குற்றவாளியாக்கியதே முதுகில் குத்தியது என்பதன் விளக்கம்) கட்சியை விட்டு வெளியேறி தேர்தலில் நின்று வென்று காட்டட்டும் என்று துரத்தினார், அவர் வென்றதும் கட்சியை உடைத்து விட்டார் என்று புலம்பினார். அவர் வெளியேறியதும் தன்னை அரசியலுக்கு கொண்டுவந்த மாவையரில் வாய் வைத்தார். இவரின் அடுத்த பகிடி, உட்கட்சி பூசலை உள்ளுக்குள் பேசி தீர்க்க முடியாமல் வெளிநாடுகளில் அறைகூவல் விட்டவரிடம், ஒரு கேள்வி கேட்கப்பட்டது. அது, ஏன் வெளிநாட்டுத் தூதுவர்கள் உங்களை மட்டும் பேச்சுக்கு அழைக்கிறார்கள்? என அதற்கு இவர் அழித்த பதில் மிகவும் பரிகாசத்துக்குரியது. அதாவது அவர்கள் சில இரகசிய பேச்சுக்களை மேற்கொண்டார்களாம், அது இரகசியமாக இருப்பதற்காக தன்னை அழைக்கிறார்களாம், ஆனால் தான் வந்து பேசப்பட்ட விடயங்களை கூட்டத்தில் உறுப்பினர்களுடன் பகிர்ந்து கொள்கிறாராம். இதில் எங்கே இரகசியம்? ஏன் இவர் மட்டும்? என்பதை இவர்தான் விளக்க வேண்டும். இதுமட்டுமல்ல ஒருதடவை விக்கினேஸ்வரன் ஒரு அறிக்கை விட்டார், அதாவது தமிழருக்கு நடந்த அனிஞாயங்களை சர்வதேச பாதுகாப்பு கவுன்சிலுக்கு பாரப்படுத்த வேண்டுமென்று. அதற்கு நேற்று பெய்த மழையில் இன்று முளைச்ச காளான், சாணக்கியன், சொன்ன பதிலை தேடிப்பாருங்கள்., சாணக்கியனின் சிங்கள விசுவாசம் தெரியும். தங்களது சிங்கள விசுவாசத்தை மறைக்க, சிங்கள சம்பந்தி என இலகுவாக முத்திரை குத்தி விடுகிறார்கள். தங்களை, தங்களது பின்புலத்தை யாரும் கவனிக்க மாட்டார்கள் என்பது அவர்களது எண்ணம். எப்போவெல்லாம்  விக்கினேஸ்வரன் சிங்களத்தால்  தமிழருக்கு எதிராக நடாத்தப்பட்ட கொடூரங்களை வெளிப்படுத்துகிறாரோ, அப்போவெல்லாம் இந்த; சிங்கள சம்பந்தி, கொழும்புவாசி, சிங்களவரை கோபப்படுத்துகிறார் என்று சிங்கள விசுவாசிகள் கொடி தூக்க தொடங்கிவிடுவார்கள். சிங்கள கட்சியில் ஒட்டியிருந்துவிட்டு, சரிந்து போன தன் அரசியலை உயர்த்துவதற்காக இங்கு வந்து ஒட்டிக்கொண்டு போடும் நாடகம், பேசும் பேச்சு கொஞ்சநாளில் வெளுக்கும். அவரின் தனிப்பட்ட வாழ்வையும் அறிவோம். அதிலும் குருந்தூர் விகாரை விவகாரத்தில் பிக்குகளோடு மல்லுக்கட்டி, போராடி, போலீசாருடன் மோதுப்பட்டவர்கள் யாரோ, பெயர் இவர்களுக்கு. பொத்துவில் தொடங்கி பொலிகண்டிவரை போராட்டத்தை ஏற்பாடு செய்தவர்கள் யாரோ, பெயரை தட்டிக்கொண்டவர்கள் இவர்கள். சில வருடங்களுக்கு முன் ஒரு போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது, மக்கள் பேரணி என்று நினைக்கிறன். ஆனால் அதற்கு தாம் ஆதரவு வழங்கப்போவதில்லை என்று பகிரங்கமாக அறிவித்தார் சுமந்திரன். ஏன்? தனக்கு முன்னுரிமை வழங்கப்படாது என்பதால்.  இப்படி தங்களை முன்னிலைப்படுத்தவே அவர்கள் அரசியலுக்கு வந்தவர்கள், யாரையும் முன்னுக்கு வர இவர்கள் விட மாட்டார்கள்.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.