Jump to content

satan

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    8487
  • Joined

  • Last visited

  • Days Won

    1

Everything posted by satan

  1. ஏற்கெனவே அந்தபதவியிலிருந்து துரத்தியவர்கள், அங்கிருந்து களவாக ஓடிவந்தவர் இப்போ விருந்தாளியாக அழைப்பட்டுள்ளார்.
  2. இதுவே இவரின் யோக்கியதை என்னவென்று உணர்த்துகிறது இன்னும் புரியவில்லை என்றால் யாரும் ஒன்றும் செய்ய முடியாது. இருந்தும் மக்கள் இவரை வெறுப்பதன் காரணத்தை கண்டறிந்து திருத்திக்கொள்ள முடியவில்லை. மக்கள் இவரையும் இவரது ஏஜமானர்களையும் அருவெறுக்கிறார்கள்.
  3. இல்லாவிட்டால் சல்லிக்காசு கிடைக்காது. இந்தவேளையில் நம்மவர் அதற்காய் உழைக்க வேண்டும். "காற்றுள்ள போதே தூற்றிக்கொள்." எதிரி களைத்து தடுமாறும்போது அடிக்க தெரிய வேண்டும். எப்போ, எங்கே அடித்தால் எதிரி விழுவான் என்பதை தெரியாதவர்களுக்கு காலம் கற்றுக் கொடுத்துள்ளது.
  4. கோத்தா இதை விரும்புவாரா? ஏற்கெனவே சுவிஸுக்கு தப்பியோடியவர் பல விடயங்களை கோத்தாவுக்கு எதிராக கக்கியிருக்கிறார். அதனாலேயே மற்றொருவரை சிறையில் அடைத்து வைத்திருக்கிறார்கள். நிலைமை இப்படியிருக்க; ஷவேந்திரா அமெரிக்கா போனால் என்ன நடக்குமென்று எல்லோரும் அறிந்த விடயம் ஆனால் இப்போ விடயம் கைமீறிப்போய்விட்டது. அவரை தடுக்கவும் முடியாது, அடக்கவும் முடியாது. அதனால் வேறொரு பதவி கொடுத்து அமுக்க பார்ப்பார். என்ன இருந்தாலும் சேர்ந்து விளையாடியவர்கள் விலகி காட்டிக்கொடுக்க ஆரம்பித்து விட்டார்கள். பிழையான வழியில் விளையாடிவிட்டு ஆட்ட முடிவில் மற்றவரை குறை சொல்லக்கூடாது.
  5. கோத்தாவுக்கு காலம் சரியில்லை கயிறு இறுகுது. அல்லது ஷவேந்திராவுக்கா?
  6. நம் நாட்டு அரசியல்வாதிகளில் பாதிப்பேருக்குமேல் இப்படிப்பட்ட குற்றங்களில் நேரடியாகவோ மறைமுகமாகவோ சம்பந்தப்பட்டவர்களே. வெளிநாட்டுத் தூதுவர்களாக இருந்த பல இராணுவ அதிகாரிகள் அப்பட்டமாக இந்தக்குற்றங்களில் ஈடுபட்டவர்கள். அதற்காக அவர்கள் வெட்கமோ, துக்கமோ படவில்லை மாறாக பெருமையும், பதவிகளும் அடைகிறார்கள், போற்றவும்படுகிறார்கள்.
  7. முஸ்லீம் நாடுகளை வளைத்துப்போட இந்த தடை தளர்வு, விடுதலைகள் பயன்படுமோ? நஸீர் சொல்லியிருப்பாரோ?
  8. நாட்டில் சட்டம், ஒழுங்கை நிலைநாட்ட வேண்டியவர்கள் செய்யும் வேலையா இது? இவர்களின் பதவி காலத்தில் இவர்கள் நீதிமன்றத்தை தங்கள் தேவைக்கு ஏற்ப பயன்படுத்தினார்கள், ஆகவே அவர்களுக்கு தெரியும் நீதிமன்றத்தினால் தம்மை ஒன்றும் செய்ய முடியாது, ஆனால் தங்களால் நீதிமன்றத்தை, நீதியை விலைக்கு வாங்கமுடியுமென்று. ஆஹா..... மக்களால் தெரிந்தெடுக்கப்பட்ட மக்கள் சேவகர், திருடரைப்போல் மறைந்து வாழும் அவலம்..
  9. நாமல் பிரதமராகும்வரை (அதிஷ்டம் இருந்தால்) அவருக்கு எதிரான வழக்குகள் எல்லாம் ஒத்திவைப்பு, தவணை என்று இழுபடும். அவர் பதவிக்கு வந்தவுடன்; அவர் நிரபராதி என நீதிமன்றம் தீர்ப்பளித்து, அத்தனை வழக்குகளும் இழுத்து மூடப்படும். இதென்ன இலங்கை வரலாற்றில் நடவாததா? அப்பன், சித்தப்பன் எல்லாம் இந்த வழியை கடந்து வந்தவர்கள் தானே!
  10. இன்னும் ஏறுமா? ஏக்கப்பார்வை. இறங்காவிட்டாலும் பரவாயில்லை இதற்கு மேல் ஏற்றாமல் நிறுத்தமுடியாதா விலைவாசியை? ஏதிலிகளால் என்ன செய்ய முடியும்? புது மனிதர் பழைய செயற்பாடு.
  11. ரணில் வந்தவுடன் பாலும் தேனும் ஓடும் என்றார்கள் .... ஏற்கெனவே தாங்கமுடியாத விலைவாசியை சுமக்கும் மக்களை, நாளுக்குநாள் இன்னும் விலைவாசியால் துரத்துகிறாரே. இதை அறிவிப்பதற்குத்தான் இவரை வரவழைத்தார்களோ?
  12. இதுதான் சிங்கள நாகரீகம், நாளைக்கு புலம்பெயர்ந்தோர் செய்யும் உதவிகளும் இவ்வாறே உச்சரிக்கப்படும்.
  13. அந்தக்காலத்தில் தயாரித்த கள்ளக்காணி ஆவணங்களே அவர் தூக்கி வந்து குற்றச்சாட்டு வைத்தவை. அந்த குற்றச்சாட்டுக்களை ஏன் நீங்கள் முதலமைச்சராய் இருந்த காலத்தில் தீர்க்கவில்லை, தீர்க்க முயற்சி எடுக்கவில்லை? என்கிற கேள்விக்கு, ஒருவருடன்தானே முதலமைச்சராக இருந்தேன் என்று முடித்தார். அவ்வளவும் கள்ள ஆவணங்கள் தயாரிப்பதிலேயே கழித்திருக்கிறா.ர் இதுதான் இந்த நாட்டின் பண்பாடு. சுற்றாடல் துறை அமைச்சர் பெற்றோலியம் பற்றி கதைக்கிறார். ஒருவனும் தன் பொறுப்பை, கடமையை பற்றி பேசுவதில்லை மற்றைய அமைச்சுகளுக்குள் மூக்கை நுழைப்பது.
  14. தமிழ்மக்களை அவர்களது சொந்த நிலத்திலிருந்து விரட்டியடித்து, ஏதிலிகளாக்கி, பயங்கரவாதிகள் என நேற்றுவரை முத்திரை குத்தி விட்டு இன்று உங்களுக்கு பிரச்சினை என்றவுடன் அழைக்க வெட்கமில்லை. முதலில் எங்கள் பிரச்சனைகளை தீருங்கள், எங்கள் நிலங்களை விடுவியுங்கள், விகாரைகள் அமைப்பதை நிறுத்துங்கள், எங்கள் பிரசனைகளை தீர்த்து சரிசமமாக நடத்துங்கள், அதுவரை உதவி என்கிற வார்த்தைக்கே இடமில்லை, தமிழர் என்ன கேணையர் என்று நினைத்தீர்களா? எங்கள் மக்களுக்கு வந்த, எமது உறவுகளின் உணவு கப்பலை திருப்பி அனுப்பும்போது இவரும் பாராளுமன்றில் வீற்றிருந்தார்தானே! ஏன் அதற்க்கு எதிராக குரல் கொடுக்கவில்லை? தமிழர் அழிவில் அவ்வளவு மகிழ்ச்சி அப்போது, இப்போது உதவி வேண்டும் அவர்களிடமிருந்து. நாக்கை பிடுங்கிறமாதிரி கேள்வி கேட்கவேண்டும் புலம்பெயர்ந்த தமிழர். அப்பாவாவது புத்தி வருமா என்று பாப்போம். பிரச்சனை தீர்ந்தவுடன் பழையபடி இனவாத குரங்கு மரத்துக்கு மேல தாவும், உப்பிடி எத்தினை அனுபவங்களை கண்டவர்கள் நாங்கள். விழுந்த நேரமெல்லாம் உயர்த்திவிட்டு, இன்றுவரை சிங்களவரை கோபப்படுத்தக்கூடாது, அவர்கள் விரும்பாத தீர்வு எங்களுக்கு வேண்டாம் என்று அடம்பிடிக்கும் எமது தலைமை, இருந்தும் வாழவிடுவதில்லை என்கிற பிடிவாதம் பிடித்தவர்களுக்கு உதவுவதால் அது நமக்கே ஆப்பாக மாறும்.
  15. இன்னும் கொஞ்சம் கூட கோப்புகளை காவிக்கொண்டு வருவார் அடுத்தமுறை சந்தர்ப்பம் கிடைத்தால். நாடு எப்படிப்போனால் என்ன? இவர்களுக்கு பதவிதான் முக்கியம். பல்லை இளிச்சுக்கொண்டு அலைவார்கள். கையில பணம் இல்லை, வெற்று பதவியை வைத்து என்ன செய்ய போகிறார்கள்?
  16. எப்படி? முழுநாட்டையும் வெளிநாடு ஒன்றுக்கு அடகு வைத்து.? ஏற்கெனவே அடகு வைத்தவை ஏலத்தில் போகப்போகுது இவர் அறியவில்லைப்போலும். இருக்கிறவன் வாழ வழியில்லாமல் நடுத்தெருவில் அலைந்து சாகிறான் இதில வெளிநாட்டு பயணிகள் சுற்றுலா வந்து காய விரும்புவார்களா? கொஞ்சம் யதார்த்தமாய் சிந்திப்பவர் யாருமில்லாததே நாட்டிலுள்ள பிரச்சனை.
  17. மெல்ல மெல்ல ஒரு முள்ளிவாய்க்கால் பேரவலம் நாடு முழுக்க திணிக்கப்படுகிறது. பாப்போம் சிங்களமக்கள் அதை எப்படி எதிர்கொள்ளப்போகிறார்கள் என்று?
  18. நாட்டை கொள்ளையடிச்ச அதே பெருச்சாளிகூட்டம், மீண்டும் தங்கள் பதவிகளை அதே தலைச்சன் பெருச்சாளி முன் புதுப்பித்துக்கொள்கிறார்கள். ரணில் தான் பெரிய ராஜதந்திரி, மக்கள் முட்டாள்கள் என்று நினைக்கிறார். இதை மக்கள் ஏற்றுக்கொள்ளாவிட்டால் தன் சுய முகத்தை காட்ட வெளிக்கிட்டு மூக்குடைபடுவது நிட்சயம். அதனாற்தான் தனித்தவரை அரியணை ஏற்றி அலுவல் பார்க்குது ராஜபக்ச கொம்பனி. மைத்திரியில் இருந்து பாடம் படிக்காத ரணில், இதெல்லாம் பிரதம மந்திரி! ஆசைக்கு கொஞ்ச நாள் இருந்து அனுபவிக்கட்டும். கலைபட்டு ஓடப்போறவர்தானே. அதற்குமுதல் சில வெளிநாடுகளையும் பாத்திட்டு வரலாம் ஓசிப்பணத்தில்.
  19. மஹிந்தா ஜனாதிபதியாக இருந்தபோது, தேவையற்று தனது பரிவாரங்கள் சூழ வெளிநாடுகளுக்கு உல்லாசப்பயணம் செய்து, தேவையில்லாமல் விடுதிகளுக்கு அள்ளி செலவழித்த காசு, தனி, சொகுசு விமான செலவு காசே போதும் வெளிநாட்டுக்கடனை அடைக்க. கடன் வாங்கி, வீண் செலவு, செய்து பந்தா காட்டியதே இத்தனைக்கும் காரணம். எந்த சுகமும் அநுபவியாத அப்பாவி மக்களே அதன் சுமையால் வருந்துவது.
  20. உந்த இரட்டைகுடியுரிமையை வைச்சுக்கொண்டு போட்ட ஆட்டம் போதும், அடங்குங்கோ ஓரிடத்தில. மூஞ்சூறு மாதிரி இங்கு சுரண்டிக்கொண்டு போய் அங்கு பதுக்குவது, பிறகு கையை வீசிக்கொண்டு வந்து அதிகாரம் செலுத்துவது எல்லாம் அடங்கிச்சு.
  21. இப்போ இருக்கிற நிலையில் தட்டில சில்லறைக்காசு விட்டெறிஞ்சாலும் பொறுக்கி எடுப்பான்கள் போலுள்ளது.
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.