Jump to content

satan

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    8447
  • Joined

  • Last visited

  • Days Won

    1

Everything posted by satan

  1. தமிழர் வாக்குகள் எமக்கு தேவையில்லை. தனிச் சிங்கள மக்களால் தெரிந்து கொள்ளப்பட்ட தலைவன் நான் என்று சவால் விட்டவர். சிங்கள மக்களால் கைவிடப்பட்ட பின்; தமிழரும் சிங்களவரும் சேர்ந்து சாத்தப்போகிறார்களே ஒன்று சேர விடக்கூடாது என்று மஹிந்த மாத்தையா ஓடோடி வந்து மூக்கினால் சிந்தி ஒத்தடம் கொடுத்து விட்டுப்போனார். ஆனால் அடுத்த சிங்கள கூட்டம் தமிழனிடமே வந்து நிக்குது. எல்லோருமே எங்களை போட்டி போட்டு அழித்து மகிழ்ந்தவர்களே. ஆனால் தாங்கள் விழுந்தவுடன் தம்மை கைதூக்கி விட ஓடோடி வருவதும் நம்மிடமே. தமிழரின் வாக்குகள் இல்லாமலே ஆட்சி செய்துவிடலாம் என்கிற கனவுடன் துட்ட கைமுனுவின் நினைவிடத்தில் பதவிப்பிரமாணம் எடுத்துக்கொண்டவர் பாதியில் தனது அரசியல் பயணம் இப்படி அகாலமாய் மரிக்கும் என்று கனவிலும் நினைத்திருக்க மாட்டார். இனி சிங்களம் நிமிர்வது பகற்கனவே. புலிகளை அழைத்ததன் விளைவை இவர்களும் எண்ணி வருந்தும் காலம் வந்துவிட்டது. ஆமா ... ஹிருணிக்கா இப்படி மாய்கிறாரே மருதருக்கு இது தெரியுமோ?
  2. இல்லையென்றால்; உள்நாட்டு கலவரத்தையடக்க கூட்டம் கூட்டமாக இராணுவ விமானங்களும், பெருந்தொகை இராணுவமும் கூப்பிட்டவுடன் கேட்டுகேள்வியில்லாமல் வந்து இறங்குவினமே? அவையும் ஆயத்தமாகத்தான் சந்தர்பத்துக்காய் காத்திருந்திருக்கிறார்கள் என்றே நான் நினைக்கிறன்.
  3. இவரே அவர்களுக்கு பின்னால் அலைந்தவர் கத மட்டும் பெரிது அதற்க்கு ஏன் சிங்கள கட்சியின் பிரதிநிதியாக போட்டியிட வேணும்? தமிழில் நல்ல பெயர் கிடைக்கேலயோ கட்சிக்கு சூட்ட? வெகு விரைவில் நழுவி விடுவார்.
  4. அவர்களின் கையாலாகாத்தனத்தினாலேயே இவர்கள் வரவழைக்கப்பட்டார்கள் இனி இந்திய இராணுவம்; புலிகளை அழிக்க முடியாது என்று எல்லோரும் நம்பிய போது அவர்களை அடக்கிய இலங்கை இராணுவத்தை நாங்கள் அடக்கினோம் என்று தங்களை புகழ்ந்து கொள்வார்கள். சீனனை தடுக்க இதுதான் தருணம் என்று இந்தியா போர் இல்லாமல் வந்து புகுந்து கொண்டது. சிங்கள மக்கள் வருந்தி வினையை வேண்டினார்கள், வந்த வினையோ வலிய வேதனையை வருவித்துக்கொண்டது. நல்லது! பங்காளிகள் அடிபட்டு சாக, இலங்கை கடன் கொடுக்க வேண்டுமேயென்று முழிக்கத் தேவையில்லை. இலங்கை ஒரு கல்லில் பல மாங்காய்கள் என்கிற திட்டத்தோடதான் இந்திய இராணுவத்தை அழைத்திருக்கு. கதையோட கதை, பஷிலின் மகள் இந்திய றோ தலைவரின் மகனைத்தான் திருமணம் செய்துள்ளாராமே! கேள்விப்பட்டனீங்களோ?
  5. இப்போதும் இந்த சாத்தான் அரசுக்குத்தான் வக்காலத்து வாங்கும். ஆளான ஆளெல்லாம் செத்த மாட்டிலிருந்து உண்ணி இறங்கியதுபோல் இறங்கி கண்டிக்கிறார்கள். ஞான சார தேரர், மேவின் சில்வா, கூடவிருந்த அமைச்சர்கள். இது ஒரு முட்டாள்! ஆமா.... நம்ம வடக்கின் வசந்தம், கிழக்கின் விடிவெள்ளிகள், வியாழேந்திரன் சத்தத்தையே காணோம். பாவம். இனி எந்தக்கொப்புக்கு தாவுவார்கள்?
  6. இந்தச் சட்டத்தினால் தமிழர் வகை தொகையின்றி கைது செய்யப்பட்டு சித்திரவதை செய்யப்படும்போது இந்த இலங்கை மனித உரிமை ஆணைக்குழு எங்கே போனது? அதுவும் இன பேதம் பார்த்து மவுனம் காத்தது. பாதிக்கப்பட்டவர்களாக இதை ரசிக்க முடியவில்லை. பசியால் மக்கள் அலைவதையும், தண்டிக்கப்படுவதையும். ஆனால் இது அவர்களாகவே தட்டு வைத்து தேடிக்கொண்டதே நாம் என்ன செய்யலாம்? நாம் செய்ய முடியாததை அவர்கள் செய்ய முடிந்ததே என்று ஆறுதலடைய வேண்டியதுதான்.
  7. இனி பழைய பல்லவி, கதையை திரித்து, மாற்றி சிறுபான்மை இனத்தின் மீது ஏவி விட்டு, தப்பி விடலாமென நினைக்கிறார்கள் போலுள்ளது.
  8. அடுத்தது வெள்ளை வான் வரும், அதோடு ஆர்ப்பாட்டக்காரர்கள் காணாமல் போய்விடுவார்கள். அல்லது ஆர்ப்பாட்டம் இன்னும் வீறு கொள்ளும்!
  9. உண்மை நிலவரம் அறிந்தாயிற்று, இனி பொருட்களெல்லாம் இறக்குமதியாம்.
  10. போர்க்குற்ற விசாரணையை மேற்பார்வை செய்ய, அல்லது நல்லெண்ண செயற்படுகளை கண்காணிக்க ஓரிருவர் வந்தாலே நாட்டின் இறையாண்மைக்கு இழுக்கு என்று மூச்சுக்கு முன்னூறு தடவை முக்கினவை, அதற்கெதிராக ஆர்ப்பாட்டங்களும் அறிக்கைகளும் விட்டவை, இந்தியா தமிழருக்கு ஈழம் பெற்றுக்கொடுத்துவிடும் என்று அப்பாவி சிங்களவர் பயப்படுகிறார்கள் என்று இங்க கூட சிலர் மூக்காலை அழுதவை. இப்ப என்னடாவென்றால் ஒரு இரவில் ஆறாயிரம் இராணுவம், இன்னும் போர்க்கப்பல்கள் விரைந்து வந்துகொண்டிருக்காம். நாட்டில் என்ன நடக்கிறது? தங்கள் பிழைகளை மறைக்க உடனே போரை ஆரம்பிக்கிறது. சிங்கள மக்கள் உணரும் காலமிது. இந்த நன்னாளுக்காவே நான் காத்திருந்தேன், இவ்வளவு விரைவாக வரும் என்று நான் நினைத்திருக்கவில்லை. இனவாதம் பேசி வாக்கு கேட்ப்பவர்களை செருப்பாலடித்து வீட்டுக்கனுப்பவேண்டும்! தங்கள் சுகபோகத்துக்காக மக்களை ஏமாற்றி, உசுப்பேற்றி வாக்கு வாங்கி, கதிரை ஏறிய பின் அந்த மக்களை நடுவீதியில் அலையவிட்டு, அதை அடக்குவதற்கு அயல்நாட்டு இராணுவம் வருவிப்பு. இந்த முட்டாளுகள் கூப்பிட்ட உடனே அவையும் தாரை தம்பட்டையோடே வருகினமாம், எல்லாம் பழக்கதோஷம். அந்த முட்டாளுக்கு அறிவு வேண்டாம்? சர்வதேசமே விடுதலைப்புலிகளை உங்களால் அழிக்க முடியாது என்று சொன்னபோதும் எமது இராணுவம் அவர்களை இலகுவாக வெற்றிகண்டார்கள் என்று வருடாவருடம் விழா எடுத்து கொண்டாட, சொந்த இன மக்களை அடக்க ஏன் எங்களை அழைக்க வேண்டும் என்று யோசிக்க வேண்டாம்? தன் இராணுவத்தையும், தன்னையும் பாதுகாத்து இந்தியாவை சிங்கள இனவாதப்போரில் மாட்டிவிட்டு தான் தப்பும் நோக்கமாக இருக்கலாம், இந்தியா தானாக வராமல் இதே சாட்டோடு இங்கு வந்து குந்துற நோக்கமாக இருக்கலாம், ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு நோக்கம் இருக்கலாம். ஆனால் சேர்ந்து அழித்தவர்கள் சேர்ந்தே அனுபவிக்கவும் வேண்டும் என்று விதி நினைத்ததோ யார் கண்டா? முள்ளிவாய்க்கால் போரில் என்ன நடந்திருக்கும் என்று சிங்கள மக்களும் உணரவேண்டும், தமது அரசின், இராணுவத்தின் யோக்கியதை தெரிய வேண்டும். வாக்கு போட்ட எங்களை அடக்க அயல் நாட்டு இராணுவத்தை அழைக்கும் இவர்கள், பாதைகளை அடைத்து எங்களை எப்படி சித்திரவதை செய்துஇருக்கும் என்பதை யோசித்து பார்க்கட்டும். சணல் நான்கின் படம் இருந்தால் சிங்களவரின் முகநூலில் இணைத்து விடுங்கள் பார்த்து உணரட்டும்.
  11. அசாதாரண வேகமேயில்லாதவர்களிடம் எங்கிருந்து அசுர வேகம் வருமாம்? அதையும் சொல்லிவிட வேண்டியது!
  12. சந்தர்ப்பத்தை பார்த்துத்தானே ரஷ்யா ஆட்டத்தை தொடங்கியது. சும்மா உக்ரேனை உசுப்பி உசுப்பி அழிவு பாதைக்கு வழிகாட்டியது தான் மிச்சம். நினைத்திருந்தால்; ரஷ்யாவை அடக்கியிருக்கலாம். எல்லாம் பெலயீனமான ஏழை நாடுகளிடம் அவர்களை சுரண்டுவதற்காகத்தான் இவர்களின் வீரம், வெறுட்டல் எல்லாம்.
  13. அன்று மக்களை திசை திருப்ப கிறிக்கெற் விளையாடி, மறுபக்கம் தமிழரை அழித்தபோது இந்த மக்கள் தெருவில் இறங்கி தம் எதிர்ப்பை தெரிவித்திருந்தால்; நாடு இன்று இந்த நிலைக்கு வந்திருக்காது. எத்தனை படையைக்குவித்தாலும் அவர்கள் வேடிக்கை மட்டுமே பார்க்க முடியும் திருப்பி தாக்கினா, ராஜபக்க்ஷ குடும்ப கதை கந்தல், இலங்கை இராணுவத்தின் அராஜகம் நிரூபிக்கப்படும். பலர் சர்வதேச பயண தடையை எதிர் கொள்ள நேரிடும். ஆர்பாட்டக்காரரை இரகசியமாக காணாமற்போகச் செய்யலாம்.
  14. இனவாத குதிரையை உசுப்பி மாறி மாறி ஆட்சியை கைப்பற்றி குட்டிசுவராக்கி, அந்த உண்மையை ஏற்றுக்கொள்ளாமல் அமெரிக்க முகவர் பசில், என பூசி மீண்டும் இனவாத குதிரையில் ஏறி அந்த வேகத்திலேயே சறுக்கி விழ கம்மன் பில, விமல் வீரவன்ஷா இன்னும் பலர் வரிசையில் காத்திருகிறார்கள். இப்போ இனவாதம் கடந்து சர்வதேச அளவில் நாடு பங்கு போடுமளவுக்கு நிலைமை. அதை புரிந்து கொள்ளாத கிணற்றுத் தவளைகளின் கனவு!
  15. அமெரிக்கா தரத்திற்கு ஊடக அறை கட்டினார் என்றால் பாருங்கோவேன்! ஒரே பாராட்டுமழையில நனைஞ்சசவர், இப்போ வரும் அர்ச்சனையை தாங்க முடியவிலைபோலும்.
  16. இதற்கும் புலம்பெயர் தமிழருக்கும் என்ன சம்பந்தம்? என்று யாராவது தெரிந்தவர்கள் விளக்கம் தரவும்! ஏதாவது கையொப்பம் பற்றியதாய் இருக்குமோ? அதாவது புலம்பெயர்ந்தோர் பிணை, அனுசரணை கொடுக்க வேண்டியிருக்குமோ?
  17. இவர்கள் வீட்டில் எந்த பொருளாதார தட்டுப்பாடும் இல்லையோ? இருந்தால்; இவர்களும் வெகுவிரைவில் அரசாங்கத்துக்கு எதிராக கிளம்புவார்கள். ஒரு காலத்தில் தமிழர் பிரதேசங்களில் செயற்கை பொருளாதார தட்டுப்பாடுகளை உருவாக்கி, எம்மை அடக்கி, எமது உடமைகளையும், கலை வரலாற்று களஞ்சியங்களையும் பத்தியெரிய விட்டு வேடிக்கை பார்த்து மகிழ்ந்தார்கள்.அந்த நெருப்பு இன்று வைத்தவர்கள் பக்கம் திரும்பி எரியுது. "மண்வெட்டி கையிலெடுப்பார் சிலபேர், மற்றவர்க்கு குழி பறிப்பார், அது தன் பக்கம் பார்த்திருக்கும் என்பதை தானறிய மறந்திருப்பார்."
  18. என்தலைவன் ஒரு தீர்க்கதரிசி என்று நான் சொன்னால் அது பலருக்கு கசப்பாக இருக்கும். ஆனால் அதுதான் உண்மை. இந்த ராஜபக்சக்களின் ஆட்சிக்காலத்திலேயே தமிழருக்கு ஒரு தீர்வு உண்டு என அவர் சொன்னார், நம்பினார். தங்கள் பதவிக்காக, பெயருக்காக, ஏகபோக வாழ்வுக்காக எது வேண்டுமானாலும் செய்து நாட்டை குட்டிச் சுவராக்கி தானாகவே ஒரு விடிவு பிறக்கும் நிலைக்கு கொண்டுவந்துவிடுவார்கள் என எண்ணினாரோ என்னவோ? அன்று போரினால் களைத்து, எல்லாவற்றையும் இழந்து, உயிர் தப்பியவர்கள் வெறும் வயிற்றோடு காத்திருந்தபோது, பாற்சோறு உண்டவன், நம் புலம்பெயர்ந்தோர் தம் பணத்தை செலவழித்து, உணவு கொண்டு வந்தபோது அவர்களை நடுக்கடலில் காத்திருக்க விட்டு, வேடிக்கை பார்த்து, திருப்பி அனுப்பி எக்காளமிட்டு மகிழ்ந்தவன். இன்று வெட்கங்கெட்டு அவனே வருந்தி அழைக்கிறான் என்றால் தலைவர் சொன்னது நிகழ்கிறது. என்று மக்களால் வாக்கு அளித்து ஏற்றுகொண்டாடப்பட்ட ஒருவர் அதே மக்களால் துரத்தப்படுகிறாரோ அன்றே அவர் தோற்றுவிட்டார்.
  19. இவரின் வண்டவாளமெல்லாம் தண்டவாளத்திலேறிவிடும் மற்றவர்கள் கதைக்கவெளிக்கிட்டால் என்பது இவருக்கு நன்றாகவே தெரியும்.
  20. எல்லாம் சந்தர்ப்பவாதம். நானே அனுசரணை வழங்க தயார். அதாவது அரசாங்கத்துக்கும் புலம்பெயர்ந்தோர்க்கும் இடையில் தரகர் வேலை பார்க்க தயார் என்றவர், நல்லாய் எங்கேயோ, யாரிடமோ வாங்கிக்கட்டிக்கொண்டார் போலுள்ளது! அல்லது சிங்களம் தமிழரிடத்தில் இறங்கி வருவதை இவர் விரும்பாமலிருக்கலாம். இவரே புலம்பெயர்ந்தோரை விட்டு வெளிநாடுகளிலிருந்து முதலீட்டாளர்களை கொண்டுவந்து செத்துவிடுவார் போலுள்ளது. பெரிய நகைச்சுவை. நமது நாட்டில் முதலிட இன்னொருவர் கூட வரவேண்டுமாம், அப்போ பிரச்சனை இருக்காதா? அதெப்படி?
  21. யாரோ சொன்னமாதிரி இருக்கு, இந்தியாவுக்கும் சுமந்திரனுக்கும் எட்டாப்பொருத்தம் என்று. இங்கு நல்ல ராசியாயிருக்கு. இங்குதான் இவர்களின் ராஜதந்திரம் (அது அவர்களிடம் இருந்தால்) அழுத்தம் இருக்க வேண்டும். அதைவிட்டு இந்தியாவை முதலிட அழைப்பது எம்மவரை முழுமையாக புறந்தள்ளுவதாகும். இந்தியாவுக்கும், சீனாவுக்கும், அமெரிக்காவுக்கும் நாட்டின் இறையாண்மை எல்லாற்றையும் விட்டுக்கொடுத்து முதலிட, நூறு வருட குத்தகைக்கு அழைக்கிறார்கள் ஆனால் எங்கள் நாட்டில் எங்களுக்கு எங்களது உரிமையை தர விரும்பாமல் எங்கெங்கோ கையேந்தி விக்கிறார்கள், அதற்கு இவர்களும் வழி சமைத்து கொடுக்கிறார்கள். எல்லாம் இலாபந்தேடி ஓடுகினம். விலாங்குத்தனம்!
  22. அடி வாங்கி விரட்டப்படவேண்டும் என்கிற விதி இருந்தால் யாரால் அதை தடுக்க முடியும்? தர்மமும் அதுதானே! இவர்கள் எங்களுக்கு இழைத்த கொடுமைகளுக்கு சாதாரணமாக அரசியலில் இருந்து வெளியேறக்கூடாது, தக்க படிப்பினையை பெற்று வெளியேறவேண்டும். குடியுரிமையை பறித்தாலும் தகும்!
  23. அவர்கள் தூங்க போகும்போது; எழுந்தவுடன் கடன் வாங்கும் எண்ணத்துடனேயே போவார்கள் போலுள்ளது.
  24. புலம்பெயர்ந்ததோர் உண்மையிலேயே தம் இனத்தை நேசித்தால், நம் மக்கள் துன்பத்திலிருந்து மீள வேண்டும் என்று நினைத்தால் இந்த சந்தர்ப்பத்தை சரியாக பயன்படுத்த வேண்டும். நாம் நாட்டை விட்டு வெளியேற ஏதுவான காரணங்கள் எதுவும் தீர்க்கப்படாமல் இருக்கும்போது எவ்வாறு நாம் நம்பி முதலிட முடியும்? முதலில் பிரச்சனைகளை தீர்த்து சுமூகமான சூழ்நிலையை உருவாக்குங்கள் அத்தபிற்பாடே சந்தேகமில்லாமல் நாம் முதலிட முடியும் என வற்புறுத்த வேண்டும். ஐ. நாவுக்கு கொடுத்த வாக்குறுதியை காற்றில் பறக்கவிடடவர்கள் இங்கு எந்த வாக்குறுதியும் கொடுக்கவில்லை, சும்மா வாயால பிதற்றுகிறார்கள். எந்த நிபந்தனையும் இல்லாமல் முதலிட வந்தால் இன்னும் இழப்புகளையே சந்திக்க நேரிடும்.
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.