-
Posts
6984 -
Joined
-
Last visited
Content Type
Profiles
Forums
Events
Blogs
Gallery
Posts posted by satan
-
-
மருத்துவம், கற்பித்தல் இரண்டுமே புனிதமான பணிகள். உயிரை காப்பதும், வாழ்வை வளம்படுத்தி, சமுதாயத்தை உருவாக்கி உயர்த்தும் பணிகள். என்றொரு நாள் இதற்குள் சுயநலம் புகுந்ததோ அன்றே அந்த சமுதாயத்திற்கு சாவு மணி அடித்தாயிற்று.
-
8 minutes ago, பெருமாள் said:
சிங்களம், தமிழ் ஆகிய அரச கரும மொழிகளில் காட்சிப்படுத்தப்பட்டிருக்க வேண்டும் என்றும்,
தமிழில் பெயர்ப்பலகை காட்சிப்படுத்தியதற்காக ஊழியாட்டம் ஆடிய விமல் வீரவன்ச, தமிழ் புறக்கணிக்கப்படும்போது தடுக்க வக்கில்லாத அரசு, திட்டமிட்டு அந்நாட்டு குடிகளின் தாய்மொழியை அழிக்கும் அரசு; சீனாவின் அதுவும் அதன் தயவில் வாழும் நாடு அதற்கெதிராக நடவடிக்கை எடுப்பதாவது. ஜெனீவாவைச் சாட்டியே சீனா நாட்டை விழுங்கப்போகுது. கேட்டுப்பார்க்கட்டுமேன், அது தனது மொழியில் விசாரணையை இலங்கைக்கு எதிராக தொடங்கும். நக்கிட்டார் நாவிடார்.
-
2
-
-
1 hour ago, குமாரசாமி said:
நான் எனது மண் எனது மக்கள் என்று சொன்னால் இன வெறியாம்.
அவர்கள் சொன்னால் வெற்றிகோஷம், நாங்கள் சொன்னால் இனவாதம், நாடு பிரிந்து விடும். இனத்தையும் நாட்டையும் தாங்களே பிரித்துக்கொண்டு, யுத்தக்குற்ற விசாரணை செய்தால், உரிமைகளை கொடுத்தால் நாடு இரண்டு பட்டுவிடுமாம், இனங்களுக்கிடையில் பிரிவினை வந்து விடுமாம் என்று போடும் வேஷங்களை சரியென்று வெளிநாட்டுத் தூதுவர்களிடம் ஒத்தூதுவதும் நமக்குள் உள்ளவர்களே.
-
1
-
-
ஜெனீவா தீர்மானத்தை முன்னிட்டு முஸ்லிம் நாடுகளின் ஆதரவைப் பெறுவதற்கு, பொறுத்த நேரத்தில் பாகிஸ்தான் பிரதமரை வரவழைத்து போடப்பட்ட நாடகம். அடுத்த கூட்டத்தொடரில் பாராட்டுடன் கால அவகாசம் பெறும் நோக்கில் அரங்கேறும் நாடகம். இவர் நாடகம் எதுவரை ரசிக்கப்படும்? தமிழர் பிரிந்து நின்று முண்டு கொடுக்கும்வரை.
-
இந்தியா முதுகில் குத்திவிட்டதை இன்னும் உணராதவர்கள் சொல்கிறார்கள்.
-
4 hours ago, பிழம்பு said:
அதனை மத தலைவர்களும் வலியுறுத்தியுள்ளனர்.
பழுத்த அரசியல்வாதிகளுக்கு ஒற்றுமை பற்றி வலியுறுத்த மதத் தலைவர்கள் வரவேண்டியுள்ளது. ஒற்றுமை ஏற்பட்டாலும் இவர் இருக்கும்வரை அது நிலைக்காது.
-
கொரோனா கோரத்தாண்டவம் ஆடுது. மக்கள் பயத்திலும், ஏக்கத்திலும் உறைகிறார்கள். விளைவு தெரியாமல் விளையாடும் முட்டாள்கள் என்னடாவென்றால்; ஒரே நாடு, ஒரே சட்டம் என கூப்பாடு போடுகிறார்கள். வெகு விரைவில் கொடுக்கப்பட்ட வளங்களுக்கும், அவகாசத்துக்கும் கணக்கு காட்டும் வேளை நெருங்கப்போகுதோ தெரியவில்லை. சாதாரண நோயால் இறப்பவர்களையும் கொரோனா என்று சொல்லி எரிக்கிறார்கள். பலவந்தமாக கொரோனாவை காரணம் கூறி தங்கள் சட்டங்களையும், கொள்கைகளையும் திணிக்கிறார்கள்.
-
16 hours ago, கிருபன் said:
தற்பொழுது அவர் மட்டு மகாஜனா கல்லூரிக்கு இடம்மாற்றப்பட்டிருப்பதாக தெரியவருகின்றது
எந்தப் பாடசாலையும் இவரை ஏற்றுக்கொள்ளக்கூடாது என மாணவர்கள் போராட வேண்டும். நாளைக்கு எந்த மாணவனுக்கும் இந்த நிலை ஏற்படலாம். மிரட்டல் இல்லாமல் நடவடிக்கையே நேரிடலாம். சீ.... ஒரு கிறிஸ்தவ கல்லூரியில் இப்படி தரங்கெட்ட ஆசிரியர்? பாடசாலையின் தரமே கேள்விக்குறியாகியுள்ளது. ஆகவே பாடசாலையும் இதை மூடி மறைக்கும் வேலையில் ஈடுபடலாம் எனும் சந்தேகம் எனக்குள் உண்டு.
வேலைவாய்ப்பு வழங்குவோர் இப்படிப்பட்ட ரவுடிகளுக்கு தான் வழங்குகிறார்களோ? வளரும் சமுதாயத்தை இளமையில் இருந்தே ஒரேயடியாக ரவுடிகளாக மாற்றுவது சுலபமான வழி இது. வளரும் சமுதாயத்தை பாழ் குழியில் தள்ளும் கோடரிக்காம்புகள்.
-
இன்று பல ஆசான்கள் தங்கள் பொறுப்பை மறந்து ரவுடிகள் போல் மாணவரையும், அவர்தம் பெற்றோரையும் அடிமைகள் போலும் நடத்துகிறார்கள். தங்கள் சொந்த பழிவாங்கல்களை பிள்ளைகளில் காட்டுவது, ஒதுக்கி வைப்பது, நிஞாயம் கேட்டால் பழிவாங்குவதால் பெற்றோரும் கண்டுங்காணாமல் விடுவது. இதனால் மாணவர் மனமொடிந்து, கல்வியில் கவனம் இன்றி அதிலிருந்து விலகுவதற்காக வீட்டில் பொய் கூறி, வேறிடங்களுக்கு சென்று தப்பான வேலைகளில் ஈடுபட்டு தம் எதிர்காலத்தை வீணடிக்கிறார்கள். பொறுப்பற்ற, பொருத்தமான கல்வித்தகமையற்ற, அரசியல் செல்வாக்கு, பணம் என்பவற்றின் மூலம் இந்தப் பணிக்குள் நுழைந்து சேவை என்பதைவிட மாணவர்களை மிரட்டல், ஒதுக்கலே நடைபெறுகிறது. இது ஒன்று வெளியில் தொழில் நுட்ப வசதியுள்ளவர்களால் வெளிவந்துள்ளது. ஏழை குடும்பங்கள் சகித்துக்கொண்டும், கல்வியில் இருந்து விலகிக்கொண்டும், சொல்ல முடியாமல் தவிப்பாரும் உண்டு. புனிதமான தொழில் இன்று சுயநலமாகி நம் சமுதாயத்தை கீழ் நிலைக்கு கொண்டு செல்கிறது. ஒரு சிலரால் எல்லோருக்கும் வீணான பெயர். இவர்கள் இடம் மாற்றலால் தீராது, பணியில் இருந்து நீக்க வேண்டும்.
-
2
-
-
ஈழத்தமிழர் இந்தியாவுடன் இணைந்து பொது நலன்களுக்காக செயற்படலாம் என நினைக்கும் எவரும் இந்தியாவை கேட்டுப்பார்க்கலாம். நீங்கள் உட்பட....
-
11 hours ago, உடையார் said:
எல்லா உயிரினங்களும் பாதுகாப்பாக இருக்கட்டும், எல்லா உயிரினங்களும் துன்பத்திலிருந்து விடுபடட்டும்,
எல்லா உயிரினங்களும் நன்றாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கட்டும்.
மகா சங்கத்தினரின் ஆலோசனையுடன் ஐ நாவை எதிர்கொள்வோம்!
-
நமக்கு நம்மேல் மட்டுமல்ல, நம்ம அயலார்மேலேயும் பொறுப்பு உண்டு. அதை தட்டிக்கழித்து மற்றவரின் எழுச்சியை பொறுக்கமுடியவில்லை, இயலாமையை ஏற்கமுடியவில்லை, அறியாமையை சகிக்க இயலவில்லை, அடுத்தவருக்கு நஷ்டத்தை, களங்கத்தை, கலக்கத்தை உண்டாக்குகிறோம். நல்ல பெயரை நாசமாக்குகிறோம், இப்படி பல. இதுகளை விட்டு ஏறிய, அயலவனை அணைக்க மனமில்லை. இதனால் ஏற்பட பழியை சாமிமேல போட்டு தண்டனை குடுக்க முயற்சிக்கிறோம். அவரேயன்றி நம்மால் இந்தப்பிரச்சினையை தீர்க்க முடியாது. நாமே நம்மை எதிரிக்கு காட்டிக்கொடுத்து, உதவிகொண்டு கடவுளை குற்றம் சாட்டுகிறோம். ஏனென்றால் அவர் நம்மைச் சுட்டிக்காட்மாட்டார் என்கிற துணிவு.
-
மல்கம் கார்டினல் ரஞ்சித் சரண்டர் ஞானசார தேரரிடம்.
-
3 hours ago, பிழம்பு said:
நவம்பர் 2019 இல் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சவிற்கு மக்கள் வழங்கிய ஆணை ஜெனீவா தீர்மானத்தை இலங்கை மக்கள் நிராகரித்ததை தெளிவாக வெளிப்படுத்தியது.
இனவாதம், மதவாதம், புத்த சங்கங்களினூடாக ஒவ்வொரு குடும்பத்துக்கும் வழங்கப்பட்ட பணம், அள்ளி வழங்கிய வாக்குறுதிகளே அவருக்கு ஆணை வழங்கியது.
-
1 minute ago, பெருமாள் said:
எனக்கென்னவோ இந்த நந்தசேன கோத்தா வின் வெள்ளை வான் மீதுதான் டவுட் .
பாவம் அந்த மனுஷன்! தட்டிப்பறிக்கும் தன் தொழிலை சுதந்திரமாக செய்யவும்முடியாமல், போட்ட
வேஷத்தைக் கழட்டவும் முடியாமல், கைகால் உழைவெடுத்து தவிக்குது. நீங்கள் வேறை நகைச்சுவை பண்ணிக்கொண்டு.-
1
-
-
தானே வெளிநாடுகளை தட்டு வைத்து அழைத்துக்கொண்டு, தன் பிழையை மறைக்க, மேல் நாடுகளின்மேலும், பணத்தின் மேலும் குற்றம் சாட்டுவது சுத்த அயோக்கியத்தனம், வங்குரோத்து தனம்.
-
1
-
-
மற்றவர் உரிமைகளை பறித்து தாம் சுகம் காணும் இவனுகளின் பலப்பரீட்ஸை அழிவில் முடியப்போகுதோ என்று சந்தேகமாய் இருக்கு. இவனுகள் பிடுங்குபட வேறொரு நாடு தட்டிக்கொண்டு போனாலும் போகலாம். அறிவற்ற சிங்களவனின் செயலால் பல நாடுகள் அழிவைச் சந்திக்கபோகின்றன.
-
4 hours ago, Kadancha said:
சாணக்கியன். அவர் கூட அமைதியாக இருப்பது.
சுமந்திரனின் மறுவடிவமே சாணக்கியன் என்பதை காலம் தெரிவிக்கும். அதைவிட சாணக்கியனை அரசியலுக்கு கொண்டுவந்ததே சுமந்திரன்தான் என்றொரு கருத்துமுண்டு. சுமந்திரனை இப்போது சாணக்கியன் எதிர்த்தால் சாணக்கியனின் அரசியல் எதிர்காலம் இருண்டுவிடும். அவர் வளர்ந்தாலும் அரசே அவரால் பயனடையும். இலங்கைத் தமிழருக்கு அப்படியொரு எழுதா விதியுண்டு.
-
15 hours ago, பிழம்பு said:
பங்களிப்பை வழங்குவதற்குத் தயாராக இருக்கின்றோம் என்றார்.
அவர்கள் கேட்க்காமலே உங்கள் பங்களிப்பு எப்பவுமே அவர்களுக்கு உண்டு. இதென்ன புதுசா விளம்பரம் பண்ணிக்கொண்டு?
-
1
-
-
16 hours ago, பிழம்பு said:
இந்த யுத்தத்தில் மூன்று இலட்சம் பொதுமக்களை மீட்டுள்ளோம்.
போர் நடக்கும்போது வெறும் எழுபதினாயிரம் மக்களே உள்ளனர் என்று அறிக்கை விட்டவர்கள், எங்கிருந்து மூன்று லட்ஷம் பேரை மீட்டனர்? சொல்வதெல்லாம் பொய்யும், புளுகும். இவர் தன்வாயாலேயே மாட்டப்போறார்.
-
1 hour ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:
இந்தியா இலங்கையின் உள்ளக விவகாரங்களில் தலையிட முயற்சிகள் எடுத்தால் அதுவே உறவை முறிக்கவும் காரணமாக அமைந்துவிடும்.
அத்துடன் இலங்கை – இந்திய உறவு 13 ஆம் திருத்தத்தில் தங்கியிருக்கவில்லை என்பதை இந்தியா நினைவில் வைத்துக்கொள வேண்டும்.
அங்காலை மகிந்தா கெஞ்சுறார், இவர் வெட்டிவீறாப்பு பேசுறார். மூடரின் கையில் நாட்டைகொடுத்து கேலிக்கூத்தாடுதுகள். உவன் அலட்டிக்கொண்டே இருப்பான் போலுள்ளதே. தமிழருக்கு உரிமை அளித்தால், நாட்டில் பிரச்சனை ஏற்படும் என்று காட்ட உதுகளை உளற விட்டிருக்கிறார் இதுகளின் தலைவர்.
-
பொல்லைகொடுத்து அடிவாங்கப்போறான் சிங்களவன். இனி தமிழர் சர்வதேசத்தின் உதவியுடன் தொல்பொருள் ஆராய்ச்சியை தொடரணும், வந்தேறு குடிகள் யார் என்று நிரூபிக்கணும். உண்மைகளை குழி தோண்டி புதைக்க முடியாது, எங்கு குழி தோண்டினாலும் உண்மைகள் வெளிவரணும், குழி பறிக்கிறவை அதை பாத்து முழிக்கணும்.
-
12 hours ago, கிருபன் said:
.தனி ஈழ கொள்கையினை கொண்ட தமிழ் அரசியல்வாதிகள் ஒற்றையாட்சி முறைமைக்கு முரணான கருத்துக்களை குறிப்பிட்டு இளைஞர்கள் மத்தியில் பிரிவினைவாதத்தை ஏற்படுத்த முயற்சிக்கிறார்கள்
உங்கள் அரசியல் தளம்பாமல், சுமுகமாக போகவேண்டுமானால்; நாட்டில் இனப்பிரச்சனை அணையாது, கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிருக்கவேண்டும், அதற்கு நீங்கள் எண்ணெய் ஊற்றிக்கொண்டிருக்க வேண்டும். செய்யுங்கள். ஆனால் எவ்வளவு காலம் அது நிலைக்கும்? சிங்கள மக்கள் உங்களைத் திருப்பி தாக்கும் வரை தொடருங்கள்.
-
பிரச்சனையை திசை திருப்பி, தானும் பாதிக்கபட்ட மக்களின் பக்கத்தில் இருப்பதுபோல் ஒரு பிம்பம் ஏற்படுத்த முயற்சிக்கிறார். இவர் உண்மையானவரென்றால்: தமிழ் மக்கள் வகை தொகையின்றி அழிக்கப்படும்போது, தேவாலயங்கள் மீது குண்டுமழை பொழியும்போது தூங்கியிருக்கமாட்டார். போடுவது எல்லாம் வேஷம்.
மட்டக்களப்பில் பிரபல பாடசாலையொன்றின் மாணவனை கடத்துவதாக மிரட்டிய ஆசிரியை மீது விசாரணை
in ஊர்ப் புதினம்
Posted
கண்டிப்பாக இவரது கணவரையும் விசாரணை செய்ய வேண்டும், குறித்த மாணவனுக்கும், குடும்பத்துக்கும் பாதுகாப்பு வழங்கப்படவேண்டும், ஒட்டுக்குழுக்களின் கடத்தல், காணாமல் போகச் செய்தல் விடயங்களை ஐ. நாவரை கொண்டு செல்ல வேண்டும். என்னதான் அரசியல் செல்வாக்கு இருந்தாலும், குப்பையில் போட்டாலும் குண்டுமணி மங்காது. ஆசிரியத் தொழிலுக்கே இழுக்கு.