Jump to content

satan

கருத்துக்கள உறவுகள்
 • Posts

  6987
 • Joined

 • Last visited

Posts posted by satan

 1. 45 minutes ago, குமாரசாமி said:

  என்னத்திலை  இவையளுக்கு சுதந்திரம் இருக்குமெண்டு நினைக்கிறியள்? 

  கஞ்சா, வாள்வெட்டு, மண் கடத்தல், பாலியல் வன்புணர்வு, களவு, கொலை, அச்சுறுத்தல், கலாச்சார சீரழிவு இப்போ தட்டிகேட்பார் இல்லை, தடிக்கப்படுவோம் என்கிற பயமில்லை. கூலிப்படைக்கு கூலி வேலை செய்பவர்கள் கொண்டாடுகிறார்கள்.

  • Sad 1
 2. On 3/2/2023 at 17:20, கிருபன் said:

  மத்திய செயற்குழுவில் கட்சியிலே பொருத்தமற்ற வார்த்தை பிரயோகங்கள் பிரித்து விடும். பிளவுகளை ஏற்படுத்துவதற்கு பின்னணியில் ஈடுபடுபவர்களுக்கு தேர்தல் காலத்திலும் நாங்கள் அந்த விடயங்களை அவதானிக்காமல் விட்டால் அவர்கள் இனத்தை பிளவுபடுத்துவதற்கும் அரசியல் தீர்வு பெறுவதற்கான நடவடிக்கைகளை குழப்புவதற்கும் மக்கள் மத்தியில் எவ்வளவு ஏற்படுத்துவதற்கு நாங்கள் அனுமதித்ததாக இருக்கும்.

  சுடலை ஞானம். கொஞ்சம் விபரம் புரியத்தொடங்குது இந்த வசனமும் தேர்தலை முன்னிறுத்தியே. தேர்தல் முடிய பழையபடி வேதாளம் முருங்கை மரத்தில் ஏறி தலைகீழாய்த்தொங்கும்!

  On 30/1/2023 at 16:50, ஏராளன் said:

  அச்சிடுவதற்காக இதுவரை அச்சக கூட்டுத்தாபனத்துக்கு அனுப்பப்படவில்லை என குறிப்பிட்டப்பட்டுள்ளது

   

  On 30/1/2023 at 16:50, ஏராளன் said:

  உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நடவடிக்கைக்கு தேவையான வாக்குச் சீட்டு அச்சிடும் நடவடிக்கை ஆரம்பித்திருப்பதாக அரசாங்க அச்சக கூட்டுத்தாபனத்தின் பிரதானி தெரிவித்துள்ளார்.

  நாட்டில இருந்த கடதாசியெல்லாம் போலி நாணயம் அச்சடிச்சு தள்ளியாச்சு, இதுகளுக்கு எங்கிருந்து வந்தது கடதாசி?

 3. 17 hours ago, ஏராளன் said:

  .13 ஆவது திருத்தம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட்டால் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் சாதிய அடிப்படையில் தமிழ் மக்கள் மத்தியில் முரண்பாடுகள் தோற்றம் பெறும்.

  எப்படியெல்லாம் தமிழரை பிரித்து அடிபட விட்டார்கள் என்பதற்கு இவரின் கூற்று நல்ல சான்று. இனி வெளிப்படையாக சாதி, சமயம், பிரதேசம், தமிழன், முஸ்லிம் என்று களை கட்டி பதின்மூன்றை இவர்களை வைத்தே இல்லாமற் செய்யப்போகிறார்கள்.

  17 hours ago, ஏராளன் said:

  வடக்கு மற்றும் கிழக்கில் வெள்ளாளர் சாதியினர் பொலிஸ் அதிகாரத்தை முழுமையாக ஆக்கிரமித்து கீழ் சாதியினரை அடிமைபோல் செயற்படுத்துவார்கள்.

  நீங்கள் அதிகாரத்தை வைத்து தமிழரை எப்படி நடத்தினீர்கள்? அது நமது பிரச்சனை, அதைப்பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டாம். ஆடு நனையுதென்று அழுததாம் ஓநாயொன்று. இந்த கள்ளனுக்கு கொஞ்சம் புத்தி வேலை செய்யுது. இனக்கலவரம், இரத்த ஆறு என்று எச்சரித்து மாட்டுப்படாமல் மாத்தி வாசிக்கிறான். 

 4. யாழ் புனித யாகப்பர் ஆலயம், மடுமாதா ஆலயம் இப்படி இவர்களால் குண்டு வீசி அழிக்கப்பட்ட தேவாலயங்கள், அடைக்கலம் புகுந்து, வழிபட சென்று கொல்லப்பட்டவர்கள் இவர்களைப்பற்றி வாயே திறக்கவில்லை கர்தினால், போப்பும் கேள்வி கேட்கவில்லை, மனவருத்தம் தெரிவிக்கவுமில்லை, அந்த மக்களுக்கு ஆறுதல் சொல்லவுமில்லை. நொந்த பிள்ளையை தாயும் பாரமென்று நினைத்து கைவிட்டாளோ? மந்தையை மறந்த ஆயர்கள். என்னோடு என் சிலுவையை சுமந்துகொண்டு என்பின்னே வாருங்கள் என்று அந்த கிறிஸ்து அழைத்தாரோ தமிழரை?

 5. நடவடிக்கை அறிக்கையோடு நின்றுவிடும். சுமந்திரன்மேல் நடவடிக்கை என்று கேள்விப்பட்டால் சிங்களம் வெகுண்டெழும், அதற்காகவே அவருக்கு பாதுகாப்பு அளிக்கப்பட்டது என்பதை நினைவில் வைத்திருக்கவும். 

 6. 10 hours ago, ஏராளன் said:

  யிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் கத்தோலிக்க தேவாலயத்திடம் மன்னிப்பு  கேட்கவில்லை. கடவுளிடமே மன்னிப்பு கோரினேன்

  தன்னால் பாதிக்கப்பட்ட, கண்முன்னே இருக்கும்  மக்களிடம் மன்னிப்பு கேளாதவர், காணாத கடவுளிடம் மன்னிப்பு கேட்டாராம். கடவுள் என்ன பதில் சொல்லியிருப்பார் என்பது எதிர்வரும் காலத்தில் தெரிய வரும். மன்னிப்புகேட்பதிலேயே இத்தனை மாறுபாடு, இதிலிருந்து இவரது தாக்குதல் உள்நோக்கம் புரியுது.

 7. சிங்கம் ஒன்று புறப்படுது, இனி எல்லாரையும் துவம்ஷம் செய்யாமல் குகை திரும்பாது. சுமந்திரனுக்குப்பின்னால வாலை குழைச்சுக்கொண்டு திரிந்து இந்தளவுக்கு வளர்த்துவிட்டவரே இவர்தானே. இனி நடவடிக்கை எடுக்கப்போனால் நடடிக்கை எடுபவருக்கே சேதாரம் அதிகம்.

  5 hours ago, ஈழப்பிரியன் said:

  முதல் நடவடிக்கை மகனுக்கு எதிராகவே எடுக்க வேண்டும்.

  என்ன நீங்கள் பாசக்கயிறை எறிஞ்சு அவரின் கையைக் கட்டப்பாக்கிறீர்கள்? 

 8. நாங்கள் வீட்டுக்குள் இருந்து குரைத்தால் அதனால் தெருவில் போவோருக்கு எந்த பாதிப்புமில்லை. குரைக்கும் நமக்குத்தான் வாய்வலிக்கும். வீதியில்  இறங்கிக்குரைக்க வேண்டும், போவோரை திரும்பிபாக்க வைக்கவேண்டும்.

 9. பாவம் சுமந்திரனைப்பாக்க பாவமாக இருக்கிறது. தமிழருக்கு நடந்தது இனப்படுகொலையென நிரூபிக்க ஆதாரம் காணாது என்று புலம்பியவருக்கு தகுந்த ஆதாரம் சிங்களமே அடிக்கடி கொடுத்துக்கொண்டு இருக்கிறது. நடந்தது இனக்கலவரம், முள்ளிவாய்க்காலில் ஓடியது இரத்த ஆறு, இன்னும் செய்வோம் என்று வேறு கூறுகிறார்கள். கொலையாளியே ஆதாரத்தை அளிக்கிறான். தாங்கள் காலங்காலமாய் என்ன செய்தோம் தமிழருக்கு, இனியும் தொடருவோம் என்கிறார்கள். இவர் இல்லை என்று ஆதாரத்தை அழிக்கிறார். பாவம் சுமந்திரன்! இவர் எல்லாம் பெரிய வக்கீல், ராஜதந்திரி.

 10. இனக்கலவரம் என்பதெல்லாம் வெறும் பயமுறுத்தல். நாடு இன்று இருக்கிறநிலையில் பொல்லைகொடுத்து அடிவாங்க நினைக்குமா சிங்களம்? இனப்படுகொலை நடக்கவேயில்லை என்று சிங்களவரும் எம்மவரும் அடித்துச்சொல்லிக்கொண்டு, நடந்தது என்றும் தமிழரை உரிமைகளற்ற அடிமைகளாகவே வைத்திருப்போம் என்றும் மகாநாயக்கர்கள் தொடங்கி, இராணுவம், அரசியல் வாதிகள் வரை ஆதாரத்தையும் வழங்கிக்கொண்டே இருக்கிறார்கள் தங்களையறியாமல். மாப்புளிப்பது அப்பத்துக்கு நல்லது என்பார்கள். இவர்கள் குரைப்பதற்கு கோல் போட்டுக்கொண்டே இருக்க வேண்டும். சர்வதேசத்துக்கு எச்சரிக்கை விட்டு சமாதான நடவடிக்கைகளை கிடப்பில் போட வைக்கலாம் என முட்டாள்கள் நினைக்கலாம் ஆனால் கயிறு இறுக்கிக்கொண்டு போகிறது என்பதை அறிய அவர்களது கடந்த கால அனுபவம் தடுக்கிறது. எல்லார்க்கும் பதில் தன்னிடம் உண்டு என்ற நரியார் பேசாமல் கடிதத்தை வாங்கிக்கொண்டு, கொழுத்திப்போட்டுவிட்டேன் இனி அது தானாக எரிந்து சாம்பலாக்கும் பதின்மூன்றை என்று சிரித்துக்கொண்டு திரும்புவார்.                          

 11. 3 hours ago, கிருபன் said:

  அமைதியான முறையில் போராட்டம் நடத்த அனைத்து பிரஜைகளுக்கும் உள்ள உரிமையை இலங்கை அங்கீகரித்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

  இன்னும் இரண்டுநாளில் தெரிந்துவிடும் கெட்டிக்காரன் புளுகு. 

 12. சுதந்திர தினத்தை சர்வதேச விருந்தாளிகளை அழைத்து வெகு விமரிசையாக கொண்டாட ஆண்டி நரி திட்டம். மறுபுறம் குடிக்க கஞ்சியில்லாமல் போராட்டம், அதைக்கலைக்க அதிரடிப்படை களமிறக்கம்.  சும்மா கலாய்க்கப்போகுது சுதந்திர தின விழா. எங்கோ இருந்து பாத்து அறிக்கை விட்டவர்கள், நேரடியாக கண்டு களிக்கப்போகிறார்கள் இலங்கையின் சுதந்திரத்தை! சில ராஜதந்திரிகள் தங்கள் வருகையை ரத்தும் செய்யலாம், பல போராட்ட ஏற்பாட்டாளர்கள் கைதும் செய்யப்படலாம். சுதந்திர தினம் கலக தினமாகலாம். இறப்புகள்.....?

 13. 18 hours ago, கிருபன் said:

  கம்பரெலியா திட்டம் வேறு பல திட்டங்களை செயற்படுத்தி யாழ் நகரத்தினை பல வேலை திட்டங்களை செயற்படுத்தி இருக்கின்றோம்.

  அந்த வேலைத்திட்டங்கள் என்னவென்பதையும் தெரிவிக்கிறது. சும்மா பலவேலைத்திட்டங்கள் என மொட்டையாய்ச் சொன்னால் எப்படி? 

  18 hours ago, கிருபன் said:

  அவர்கள் கல்வெட்டுக்களில் பெயர்போட்ட திட்டங்கள் எல்லாமே எனது காலத்தில் கொண்டு வந்த திட்டங்கள்.

  ஆமா.... அங்கஜனும் திட்டங்கள் போட்டவர், தாடியரும் போட்டவர், நீங்களும் சளைத்தவர்களல்லர் திட்டங்களை காட்டி மக்களை ஏமாற்றுவதில். திட்டங்களை நீங்கள் போட்டீர்கள் என்பதற்காக  மாற்றாமல் அதை அப்படியே  நிறைவேற்றுவதே சாதனை!

  18 hours ago, கிருபன் said:

  2023 ம் ஆண்டு பாதீடு தோற்கடிக்கப்பட்டதுஇரண்டாம் தடவை பாதீட்டினை சமர்ப்பிக்க வக்கில்லாத முன்னாள் முதல்வர் மணிவண்ணன் பத்திரிகையாளர்களை கூப்பிட்டு பொய் உரைக்கிறார் வெட்கம் இல்லையா?

  உங்களின் கடந்த காலத்தையும் கொஞ்சம் நினைத்துப்பார்த்து கருத்து தெரிவித்தால் பின்னர் வரும் விமர்சனங்களை தவிர்க்கலாம்.

 14. சரத் வீரசேகர என்கிற விசரன் இன்று தெரிவித்த கருத்து. புலம்பெயர் தமிழரின் முதலீடுகளுக்காக நாட்டை காட்டிக்கொடுக்க முடியாதாம். முதலீடு செய்யுங்கள் என்று வலிந்திழுத்த ஒருவரை தேடுகிறேன். இலங்கை மீது உண்மையான பற்று இருந்தால் முதலீடுகளை செய்யலாம் ஆனால் அதிகாரங்களை தரமுடியாது.  அதிகாரமற்ற அடிமைகள் நாட்டை முன்னேற்ற வேண்டும் என்று கேட்க இதுக்கு வெட்கம் இல்லையா? சிங்கள பவுத்தநாடு என முரசு கொட்டுபவர்கள் முன்னேற்றி பாக்கட்டும். சுற்றவர கைநீட்டி, பிச்சை  யார் போடுவாரென காத்திருக்கிறார்கள் அதற்குள் திமிர்பேச்சு வேறு. போடுகிறவனையும் கடுப்பேத்தி அல்லாடப்போகிறார்கள். உண்மையிலேயே பதின்மூன்றை எதுவும் குறைபடாமல் நிறைவேற்றுபவர் ரணிலாக இருந்தால்; இந்த விசரை பிடிச்சு பத்துநாள் உள்ளே போடட்டும் பாப்போம்! நிஞாயத்தை கேட்ட மாணவரை உள்ளே போட முடியுமென்றால், ஏன் இது முடியாது? குறைந்தது மனநல காப்பகத்துக்கு என்றாலும் அனுப்பி பாக்கட்டும்! எல்லா இனவாதியையும் குரைக்க விட்டிட்டு, பதின்மூன்றை இல்லாதொழிக்கிற ஆலோசனையையும் சொல்லி ஒரு குறைப்பிரசவம் நடந்தேறப்போகிறது. அதற்கு இவ்வளவு ஆலாபனை, நிபந்தனை. வெளிநாடுகள் பங்குபற்றினால் ஒன்றும் வெருட்டல்,  உருட்டல், ஏமாற்றல் செய்ய முடியாது. சுதந்திர தினத்துக்கு இந்த ஏமாந்ததுகளை அழைத்து, சர்வதேசத்துக்கு படம் காட்டி, நாங்கள் எல்லோரும் ஒன்று பிச்சை போடுங்கோ என்று தட்டு நீட்ட எண்ணிவிட்டார் போலும்.                                                 

  • Like 1
 15. 5 hours ago, ஏராளன் said:

  அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தம் முழுமையாக அமுல்படுத்தப்பட்டால் நாட்டில் சிங்கள- தமிழ் இனக்கலவரம் மீண்டும் தோற்றம் பெறும்.

   

  5 hours ago, ஏராளன் said:

  நாட்டில் தேவையில்லாத பிரச்சினைகளை ஏற்படுத்தும் 13 ஆவது திருத்தத்திற்கு ஒருபோதும் இடமளிக்க முடியாது என மகாசங்கத்தினர் குறிப்பிட்டனர்.

  ஏற்கெனவே இனக்கலவரம் நடந்ததை ஏற்றுக்கொள்கிறார், பிறகு ஏதோ இதனாற்தான் இனமுரண்பாடு ஏற்படப்போகிறது என்பதுபோல் எச்சரிக்கை வேறு. இது பதின்மூன்று நடைமுறைப்படுத்தப்பட்டால் தங்கள் ஆட்டம் ஆட முடியாதென பயப்படுகிறார்கள் போலுள்ளது, ஏன் வீணாக அவர்களை பயப்படுத்திக்கொண்டு? அதை விட்டிட்டு சுயாட்சியை கேளுங்கள்! புண்ணில் புளி பட்டதுபோல குதிக்கட்டும்.

  5 hours ago, ஏராளன் said:

  ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு மக்களாணை கிடையாது.அவர் 134 பாராளுமன்ற உறுப்பினர்களின் பிரதிநிதியாக தெரிவு செய்யப்பட்டார்.

  அப்போ 134 பாராளுமன்ற உறுப்பினர்களும் மக்களால் தெரிவு செய்யப்படவில்லையா?

  5 hours ago, ஏராளன் said:

  அஸ்கிரிய பீடம்,மல்வத்து பீடம்,ஸ்ரீ லங்கா ராமன்ய நிகாய மற்றும் ஸ்ரீ லங்கா அமரபுரம் ஆகிய பீடங்களின் மகாநாயக்க தேரர்களை சந்தித்து அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தம் தொடர்பில் கலந்துரையாடினர்.

  இனக்கலவரத்தின் மூலங்கள் இவர்கள்தான்!

  5 hours ago, ஏராளன் said:

  அரசியலமைப்பை திருத்தம் செய்யவோ,13ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தவோ ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு மக்களாணை கிடையாது.

   

  5 hours ago, ஏராளன் said:

  1987 ஆம் ஆண்டு நாட்டில் அமைதியற்ற தன்மை காணப்பட்ட போது ஊரடங்கு சட்டம் விதிக்கப்பட்டு,பாராளுமன்ற உறுப்பினர்கள் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்ட நிலையில் இந்தியாவினால் பலவந்தமான முறையில் 13 ஆவது திருத்தம் நிறைவேற்றப்பட்டது.

  ஒரு இறையாண்மை உள்ள நாட்டில் இந்தியா நிறைவேற்றியிருக்கு! அப்போ இவர் எங்கே போனார்? அப்போ .... ஜே. ஆருக்கு எங்கிருந்து ஆணை கிடைத்தது?

  5 hours ago, ஏராளன் said:

  1987 ஆம் ஆண்டு முதல் 2022 ஆம் ஆண்டு வரை ஆட்சியில் இருந்த அரச தலைவர்கள் அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த முயற்சிக்கவில்லை,

   

  5 hours ago, ஏராளன் said:

  நாடு பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ள பின்னணி

   நாட்டில் பொருளாதார நெருக்கடி ஏற்பட காரணம் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. ஆமா .... பதின்மூன்றாம் அரசியலமைப்பை வாசித்துப் பாக்கும்படி ரணில் ஆலோசனை கூறினாரே, வாசிக்கத்தெரியவில்லையோ இவருக்கு? வாசித்துப்பாத்திருப்பார், விளங்குதலில் குறைபாடாக இருக்கும். எங்கேயோ சரியான இடத்திற்குத்தான் தமிழரை தள்ளுகிறார் போலுள்ளது!

 16. பாதிக்கப்பட்ட மக்களுக்கு நஷ்ட ஈடு கொடுக்க வக்கில்லை, ஜனாதிபதியாக்கி அழகு பாத்த மக்களை காக்க துப்பில்லை, தீர்ப்பை வாசித்து விளங்க அறிவில்லை, குற்றத்தை ஏற்க தென்பில்லை, மன்னிப்புக்கேட்க மனமில்லை, அதிலை மீண்டும் ஜனாதிபதியாகும் கனவு இவருக்கு ஒரு கேடு. மொத்தத்தில் சாதாரண கிராம சேவகர் பதவிக்கே லாயக்கற்றவர் இவர். மக்கள் என்ன முட்டாள்களா மீண்டும் இவரை தெரிவு செய்து தங்களுக்கு கிடங்கு வெட்ட?

  9 hours ago, குமாரசாமி said:

  இதை தமிழர் பிரச்சனை ஆக்கி விட்டிருந்தால் ஆள் தப்பியிருக்கலாம் :face_with_tears_of_joy:

  தமிழரின் வாக்குப்பலம் தெரிந்தவர் அப்படிச் சொல்வாரா? கிறிஸ்தவர்களை விட்டாலும் மற்றவர்களின் வாக்கை இழக்க விரும்பாமல் இருந்திருக்கலாம். 

 17. வாக்குப்போட்ட மக்களுக்கே அதிர்ச்சி வைத்தியம் பார்க்கவேண்டியும் வரலாம். எல்லாவறையும் மக்கள் தலையிலேயே கட்டி தப்பி விடுவது அரசியல் வியாதிகளின் பழக்கம். கெஞ்சி கூத்தாடி, லஞ்சம் கொடுத்து வெற்றி பெறுவது, பிறகு தாங்கள் அடிக்கிற  கூத்துகளுக்கு மக்கள் தான் எங்களை தெரிந்தார்கள், ஆணை தந்தார்கள் என்று குற்றம் சுமத்துவது. 

 18. தமிழ்த்தேசியம், தமிழரசு இந்த பெயர்களை இழக்கவோ அல்லது யாருக்கும் விட்டுகொடுக்கவோ விரும்பாமல் அதை வைத்து மக்களின் உணர்ச்சிகளை தூண்டி அரசியல் செய்கிறார்கள். அதனாற்தான் சுமந்திரன் விக்கினேஸ்வரனுக்கு சவால் விட்டார். "முடிந்தால் த. தே. கூட்டமைப்பை விட்டு வெளியேறி தேர்தலில் வேறொரு கட்சியில் நின்று வென்று காட்டட்டும்" என்றார். நின்றார் வென்றார். தற்போது கூட பங்காளிக்கட்சிகளை விரட்டிவிட்டு போட்ட தடை த.தே. கூட்டமைப்பின் தேர்தல் சின்னத்தை பயன்படுத்தக்கூடாது என்பதே. அதாவது தேசியப்பெயர், சின்னம் எல்லாம் தாங்கள் பாவித்து மக்களை முட்டாளாக்கி அதன்மூலம் வெற்றி பெற்று அதை இல்லாமல் அழித்து பேரினவாத கட்சியின் பிரதிநிதிகளை களமிறக்கி இறுதியில் பேரினவாதத்தின் கையில் ஒப்படைப்பது. தமிழரசுக்கட்சி இளைஞரை உசுப்பேத்தி அழித்து முடிந்தது, இருப்பவர்களையும் அடிமைகளாக விற்று விட்டு, அவர்கள் சிங்கள இனத்தோடு கலந்து அவர்களோடு வாழ்வது எமது அதிஷ்டம் என்று அறிக்கை விட்டு தப்பிவிடுவார்கள். இழப்பு, அடிமை வாழ்வு எல்லாம் இந்த போக்கத்ததுகளை நம்பியவர்களுக்கே.

  12 minutes ago, goshan_che said:

  @satan@குமாரசாமி இப்போ நீங்கள் இலங்கையில் இருந்தால் யாருக்கு வாக்கு போடுவீர்கள்?

  உள்ளதில் ஓரளவு தமிழ் தேசிய கொள்கைகை முன் எடுப்போர் என நீங்கள் நினைக்கும், கஜேஸ், விக்கி அல்லது dTNA? 


  சரிதானே? மக்களின் நிலையும் இப்படித்தான்.

  தமிழ் தேசியத்தை சுமக்க ஒரு குதிரையும் இல்லை என்ற போது, அதை கழுதைகளை வைத்தாவது சுமக்ககலாமா என பார்கிறார்கள்.

  தொடர்ந்து தமிழரசுக்கு போடுவோர் கூட ஏனைய கழுதைகளை விட அந்த கழுதைகள் பராவாயில்லை என நினைத்தே போடுவார்கள்.

  நாளைக்கே ஒரு குதிரை வருமாயின் எல்லா கழுதைகளையும் துரத்திவிட்டு குதிரைக்கு போடுவார்கள்.

  ஆனால் நோக்கு ஒன்றுதான் தமிழ் தேசியம் என்ற பொதியை சுமத்தல். குதிரை, கழுதைகளின் பெயர், நிறம், யாரோடு சினை பிடித்ததன என்பதெல்லாம் கருது பொருட்கள் அல்ல.

  இதுவரை இதுதான் எம் மக்களின் அரசியல் போக்கு. இனி மாறலாம்.

  திரைபடம், சாதி, சமயம் என பலதில் இந்தியாவை கொப்பி அடிக்கும் மக்கள் - இனி அரசியலிலும் அதே பாணியை எடுக்கலாம்.

  கொஞ்சம் பொறுங்கள் மக்களின் தீர்ப்பு கிடைக்கும்வரை! ஆனால் சுமந்திரன் போடுற ஆட்டதைப்பாத்தால் போன முறை தேர்தலில் நடந்த குளறுபடிகள் நடக்க வாய்ப்பிருக்கு. இப்பிடியொரு இளிச்சவாயன் சிங்களத்துக்கு கிடைக்குமா?

 19. 2 hours ago, கிருபன் said:

  இந்த முடிவுகளிலிருந்து தமிழரசுக் கட்சி தனித்து கேட்க வேண்டும் என வகுத்த திட்டம் சரியானது எனும் உண்மை அனைவருக்கும் வெளிப்படும்” என தெரிவித்தார்.

  எங்கே மனச்சாட்சியை தொட்டுச் சொல்லுங்கள்! நீங்கள் திறந்த மனதுடன் பங்காளிக்கட்சிகளுடன் உரையாடினீர்களா என்று. அவர்களை அழைத்து நான்கு சுவருக்குள் உரையாடி, ஆலோசனை வழங்கி,  வழிநடத்தி சென்றிருந்தால் இவ்வளவு விபரீதம் நடந்திருக்குமா? குருட்டு வழிகாட்டிக்கு பின்னால தலையாட்டும் பொம்மைகள், இப்போ எல்லா பக்கமும் கண்டனங்கள் எழுவதால் பூசி மெழுகுகிறீர்கள். இப்போ பொது வெளியில் சொல்வதை, அப்போது முடிவெடுத்தவுடன் ஏன் அவர்களுடன் உரையாடவில்லை? எல்லாம் இரகசியமாக வைத்திருந்து, அதிகாரமாய், எந்தவொரு விளக்கமும் இல்லாமல் நாங்கள் தனித்து போட்டியிடுகிறோம், நீங்கள் தனித்தோ சேர்ந்தோ போட்டியிடலாம். த. தே. கூட்டமைப்பின் சின்னத்தை பாவிக்கக்கூடாது என மொட்டையாய் அதிகாரம் பண்ணி விரட்டிவிட்டு சோடிக்கிறீர்கள். நீங்கள் எல்லாம் தலைவர்கள் என்று உங்களை நீங்களே அழைத்துக்கொள்ளுங்கள் ஈனப்பிறவிகள்.            

×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.