Jump to content

satan

கருத்துக்கள உறவுகள்
 • Posts

  6984
 • Joined

 • Last visited

Posts posted by satan

 1. 1 hour ago, goshan_che said:

  தமிழரசு, கூட்டணி என்ன சொன்னது, என்ன செய்கிறது என்பதை பார்த்தே வாக்களிதார்கள்.

  என்னது ...... கூட்டணி, தமிழரசு செய்கிறது என்பதை பாத்தா? அப்படி என்னத்தை பாத்தார்கள்? வெறும் பெயரையும், உணர்ச்சியையும் வைத்து அரசியல் செய்கிறது. இல்லையென்றால் எழுபத்தொன்பது வருடங்களாக தீர்வேதுமில்லாமல் தீய்ந்துபோய்க்கிடக்குது. சும்மா பகிடி விடாதீங்கோ!  அவர்கள் சொன்னதை செய்திருந்தால் எப்படி பெரும்பான்மை கட்சியின் பிரதிநிதிகள் நுழைந்தார்கள்? வென்றார்கள்? மக்கள் இவர்களை நம்பி இனி பயனில்லையென அபிவிருத்தியென விரிக்கும் வலைக்கு பின்னால் இழுபடுகிறார்கள்! 

 2. சிங்கள அரசியலுக்கு தமிழரை பலிகொடுத்து, பலியெடுத்தாற்த்தான் கதிரை கிட்டும். அதற்கு வேண்டியது தமிழரின் குருதி. எவ்வளவு இலகுவாக தமிழர் என்கிற பதத்தை மறைத்து கத்தோலிக்கர் என்று விளித்து தமிழரின் வாக்குக்கு சுழி போட்டிருக்கிறார். அவரை கதிரைக்கு அனுப்பியது, சிங்கள கத்தோலிக்க, தமிழ் வாக்குகளே. அதில் எல்லா மதமும் அடங்கும்.

 3. இன்று நம்ம தலைவர்கள், அரசியலில் மக்களுக்காக பேசப்படும் அளவில் எதுவும் செய்வதில்லை, அவர்கள் பிடிக்கும் குடுமிச் சண்டைகளையும், தெருக்கூத்துகளையுந்தான் மக்கள் பேசிக்கொள்கிறார்கள். 

 4. தலை இருப்பதாற்த்தான் வாலாடுகிறது. தலை அடங்கிவிட்டால் வால் தானாக முடங்கிவிடும். ஆனால் எல்லோரும் சிங்களத்தின் தாளத்திற்கு ஆடுகிறார்கள். அசைய முடியா நிலையில் நோயில் படுத்திருக்கும் ஒரு ஜீவன் தன் எஜமானைக்கண்டதும் தலையைத் தூக்க முடியாவிட்டாலும் வாலை மெதுவாக அசைக்க முற்படும்.

 5. 6 minutes ago, goshan_che said:

  ஓம்…தவறுதான்…மன்னிச்சு கொள்ளுங்கோ.

  அடுத்த முறை கருத்து எழுத முன் யார் யாரை கட்டியுள்ளார்கள், யார் யாரை வைத்துள்ளார்கள் போன்ற முக்கிய தரவுகளை அறிந்து எழுத முயல்கிறேன்🤣.

  ஆமாம், தற்போது அதுதான் முக்கியம். ஆழம் அறியாமல் காலை விட்டிட்டு பிறகு காலை இழக்கவேண்டியும் வரலாம். 

 6. 12 minutes ago, தமிழ் சிறி said:

  எனக்கு…. இந்த உள்ளூராட்சி தேர்தல் முடிவுகளை பார்க்க மிகவும் ஆவலாக உள்ளது.
  தாயக மக்கள் என்ன தீர்ப்பை கொடுக்கிறார்கள் என பார்ப்போம்.

  மக்கள் தீர்ப்பு கொடுத்தாலும், தில்லு முல்லு பண்ணி 
  வெக்கம் இல்லாமல்  மாத்தியமைச்சுப்போடுவதில் வல்லவர்கள். வேப்பிலை அடிச்சுத்தான் இவர்களை கலைக்கவேணும். இவர்களது பங்காளிகள் இவர்களது குரைப்புக்கு பதில், விளக்கம் கொடுக்காமல் கடுமையாக, உண்மையாக உழைக்கவேண்டும்!

  2 minutes ago, goshan_che said:

  ஓம்…மாவையின் மகன் ரவிராஜின் மருமகன் என்பது உண்மையா ?

  இதுவரையில் தேடியறியாமலே இருக்கிறீர்களா? இல்லை பரிசோதிக்கிறீர்களா?

 7. 1 minute ago, தமிழ் சிறி said:

  மைத்திரி, மன்னிப்பு… என்றஒரு வார்த்தையை கூற,
  தேர்தல் என்ற ஒன்று வரவேண்டி உள்ளது.
  அரசியல்வாதிகள் எல்லோரும், கடைந்தெடுத்த சந்தர்ப்பவாதிகள்.

  அதே! ஆனால் மன்னிப்பு என்று கூறி விட்டு கொடுக்கப்பட்ட விளக்கம் அவரது உண்மைநிலையை எடுத்துக்காட்டியுள்ளது. அந்த மன்னிப்புக்குப்பின்னால் வைக்கப்படும் கோரிக்கை, ஒன்று பாதிக்கப்பட்டவர்கள் நஷ்ட ஈடு வேண்டாம் என்று சொல்வதை எதிர் பார்ப்பதோடு தேர்தலில் என்னைத் தெரிந்தெடுங்கள் என்பதாகும். முன்னே தான் யாரென்பதை காட்டிவிட்டார். இவர் மக்களை காப்பாற்றவல்ல சுயநல அரசியல் செய்யப்போகிறார் என்பதே காட்டிய உதாரணங்கள் விளக்குகின்றன. உண்மையாக மன்னிப்பு கோரினால் இனியொரு அழிவுக்கு நான் காரணமாக மாட்டேனென அரசியலிலிருந்து ஒதுங்கிப்போவார்.

 8. 6 minutes ago, தமிழ் சிறி said:

  @ஈழப்பிரியன், @goshan_che கவனித்தீர்களா….
  மீண்டும், மாவையின் மகனின் கோபத்திற்கு…. சுமந்திரன் தான் காரணம். 🤣

  எங்கிருந்து ஆரம்பிக்கிறதோ அங்கு முடியும் முடிவுதான் சரியானது.

 9. 3 hours ago, ஏராளன் said:

  இந்த நஷ்ட ஈட்டை செலுத்துவதற்கான பொருளாதார வசதிகள் எனக்கு இல்லை என்பதால் , இயன்றவர்களை உதவுமாறு கோருகின்றேன் என்றார்.

  இவ்வளவு உள்குத்து, வெளிக்குத்து, ஆலாபனை எல்லாம் பிச்சை எடுப்பதற்கே என்று கடைசியில் முடித்து விட்டார். மீண்டும் எதற்கு அரசியல்? இழந்ததை மீட்கவா அன்றி இன்னும் தொடரவா? தனக்கு விதிக்கப்பட்ட நஷ்ட ஈட்டை செலுத்த வக்கில்லாதவர் ஏற்கெனவே பிச்சை எடுக்கும் நாட்டை எப்படி மீட்கப்போறாராம்? உலக நாடுகளிடம் கேக்கிற கடனோடு இதையும் சேர்த்து கொள்ளலாம்.

  4 hours ago, ஏராளன் said:

  யுத்த காலத்தில் இடம்பெற்ற தாக்குதல்கள் தொடர்பில் எவருக்கும் தண்டனை வழங்கப்படாத நிலையில் , உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுக்கு மாத்திரம் எவ்வாறு நான் பொறுப்பு கூற வேண்டியவனாகின்றேன்

  அந்தத் துணிவுதான் உங்களை இப்படி நடக்கத்தூண்டியதோ? அதே போல் உங்களை மீண்டும் அரியணை ஏற்றுவார்கள் என நினைக்கிறீர்கள் போலுள்ளது. தமிழரின் வாக்கினால் தப்பினீர்கள் முன், அதற்கு கைம்மாறு பதவி இறங்குமுன்னே கையோடு அவர்களுக்கு கொடுத்துள்ளீர்கள். நீங்கள் நன்றி மறவாதவர்!

 10. 6 hours ago, ஈழப்பிரியன் said:

  முந்திரிகொட்டை வந்த வேலை முடிஞ்சுதா சார்?

  கெதியில முடிந்துவிடும்போல் இருக்கிறது எல்லோரின் மவுனத்தையும் பாக்கும்போது.

 11. மக்களா சிங்களமா என முடிவெடுக்கும் சந்தர்பங்களிலெல்லாம்  ஐயா வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுவது வழமை, இது ஒன்றும் புதிதல்ல. என்ன.... முந்தி இந்திய தைத்தியசாலையில் போய் படுப்பவர் இப்போ அதுக்கு முடியாமல் இருக்கிறார். கருணாநிதியாரும் அவரது கடைசி அரசியற்காலத்தில், இதுதான் நான் தேர்தலில் நிற்கும் கடைசித்தருணம் என்று மக்களிடையே அனுதாப அலையை உருவாக்கி வென்றவர் கண்டியளோ. ஆடி ஓடி திரியும் காலத்திலேயே சாதிக்காதவர் இனிமேற்தான் சாதிக்கப்போறார் என காத்துக்கிடக்குது தமிழினம். 

 12. இவ்வளவு காலமும் சேர்ந்து இயங்கும் போது இது தெரியவில்லை, இப்போ தெரியுதாக்கும். இவர் போராட்டத்தைப்பற்றி அறிந்தபடியாற்தான் அதைப்பற்றி விமர்சித்தார் ஒரு இடத்தில், வேறோர் இடத்தில் போற்றினார். இவர் சிங்களத்தோடு சேர்ந்திருந்து நமது போராட்டத்தையும், நிஞாயங்களையும் காட்டிக்கொடுத்துக்கொண்டிருக்கிறார் இப்போதும் அது புரியவில்லை, சேறடித்து வென்று விடுவேனென எதிர்பார்க்கிறார். வேண்டுமென்றே பங்காளிக்கட்சிகளை துரத்தி, மக்களை ஏமாற்றி, சிங்களத்தின் காலடியில் தேசியத்தை பணிய வைக்கும் செயலை செய்கிறார். தேர்தலின் பின் சேர்வோம் என்பவர் பேசும் பேச்சா இது? மக்கள் கொல்லப்படும்போது இவர்கள் எங்கே இருந்தார்கள் என்பதையும் சொல்வது? மக்களின் ஏகோபித்த கட்சி நாங்கள் என்று நாக்கூசாமல் சொல்பவர்கள், மக்களோடு அவர்களது இழப்பில் கூட இருந்தார்களா? கூடி கொண்டாடினார்களா?             

 13. On 29/1/2023 at 20:41, தமிழ் சிறி said:

  75வது சுதந்திர தினத்தை ஜனாதிபதி கொண்டாட விரும்புவதை அடியோடு நிராகரிப்பதாகவும் தெரிவித்தார்.

   

  On 29/1/2023 at 20:41, தமிழ் சிறி said:

  சுதந்திர தின நாள் தமிழர்களின் வாழ்வில் கரிநாள்

   

  On 29/1/2023 at 20:41, தமிழ் சிறி said:

  சுதந்திரம் கிடைத்தும் 75 ஆண்டுகளாக தமிழர்களுக்கு சுந்தந்திரம் கிடைக்கவில்லை

  அப்போ ....கடந்த வருடங்களில் கொண்டாடும்போது சுதந்திரம் இருந்தது தமிழருக்கு நாட்டில், இந்தவருடம் மட்டும் அது பறிபோய் கரிநாளாய் மாறி கடுப்பேத்தி விட்டதோ? என்னமா கதை அளக்கிறார் எல்லாம் தேர்தல் படுத்தும் பாடு, உள்ளூர ஜனாதிபதிக்கு பக்கத்தில நின்று படம் பிடிக்க முடியவில்லையே என்று கவலையாக இருக்கும். அதெல்லாம் இரகசியமாக கொண்டாடுவார்கள் கவலை வேண்டாம். மக்களை உசுப்பேத்தி அதிலும் சிங்களத்துக்குத்தான் நன்மை செய்வார்.

 14. ஏன் இந்தமுறை இவர்களுக்கு சுதந்திரதின விழாவில் பங்கேற்பதற்கு அழைப்பு வரவில்லையோ? ஓ ..... தேர்தல் வருகிறபடியால் நிராகரிப்பு! மக்களுக்கு முன்னுரிமை! கொடிபிடித்து ஆட்டின கையை அனிஞாயமாய் தேர்தல் வந்து                                                      கட்டிப்போட்டுவிட்டதே. வருடா வருடம் வரும் சுதந்திர தினந்தானே, அடுத்தமுறை இதையும் சேர்த்து கொண்டாடிவிட்டால்ப் போச்சு. தேர்தல், வாக்கு முக்கியம் இப்போது!

 15. 2 hours ago, கிருபன் said:

  அருகில் உள்ள பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்.

  முறைப்பாடு செய்யச்சென்றவர்களை பொலிஸ் அதிகாரியே திருப்பி அனுப்பிவிடுகிறார்களே, அவர்களுக்கு எதிராகவும் சமகாலத்தில் நடவடிக்கை எடுங்கள், குற்றங்கள் குறையும்.

  • Like 1
 16. என்ன இவர் கொண்டாட்டத்தில் பிடிவாதமாக இருக்கிறார். அவர்கள் வெற்றிக்கொண்டாட்டங்களில் ஈடுபட்டு தங்கள் செல்வாக்கை காத்தனர்.  இவரோ நாடு வங்குரோத்தில் இருக்கும்போது சுதந்திர தினத்தை  கொண்டாடவேண்டுமென ஒற்றைக்காலில் நிக்கிறார். ஒவ்வொருவரும் வெவ்வேறு விதத்தில் செல்வாக்கை உயர்த்த முயற்சிக்கின்றனர். மக்களோ நடுத்தெருவில் போராடுகின்றனர். அவர்களையும், உணர்வுகளையும் அடக்கி அதன்மேல் நின்று கொண்டு சுதந்திர தினக்கொண்டாட்டமாம். முட்டாள்கள்!

 17. கடவுசீட்டு பெறுபவர் ஒருவரின் வங்கியில் இரண்டு லட்ஷம் வைப்பிலிருக்க வேண்டுமென்கிற செய்தி ஒன்று அடிபடுகிறது உண்மையாயிருக்குமோ?

 18. வெடிக்கும் வெடிக்கும் என்கிறார்கள் ஒன்றையும் வெடிக்க காணேல்லை. எத்தினை அரசாங்கங்கள்  மாறினாலும்  பொருளாதார நெருக்கடியை தீர்க்க முடியாது. முதலில் உங்கள் எண்ணங்கள் மாறவேண்டும்.

 19. ஆமா ....... முப்பத்தேழு வருடங்களாக நொந்து நூலாகி இழுபடுகுது இனிமேற்தான் நடக்கபோகுது. சும்மா போங்கையா தமாசு விடாமல். நீதிமன்றம் போனபின் எல்லோரும் அமைதி.  

 20. 6 minutes ago, alvayan said:

  எங்கைய்யா போயிட்டாரு நம்ம மறவன்புலவு சச்சிதானந்தம்...

  அவர் சிலுவையை கண்டாற்தான் ஓடி வருவார்!

  • Like 1
 21. பேச்சுவார்த்தை என அதிரடி ஒருபக்கம், இவர்களின் சம்பந்தமில்லாத திடீர் வருகை மறுபக்கம், ஏதோ பீதியை கிளப்புது. விட்டுவைச்ச மிச்சம் மீதியையும் இல்லாமற் செய்யவோ கூட்டி அழைக்கிறார் நரியார்.

 22. காலம் போன சரக்குகள், தங்கள் பதவிக்காலத்தில் கடமையை சரிவர செய்ய துப்பில்லாமல், ஓர் இனத்தின் அழிவை எழுதியவர்கள் மீண்டும் ஏதோ நாசகார வேலைக்கு ஒன்று   கூடி ஓட முயற்சிக்கிறார்கள் போலுள்ளது! 

 23. 9 hours ago, goshan_che said:

  கலாநிதி? எப்ப இருந்து?

  ஏதாவது ஒரு துறையில் பாண்டித்தியம் பெற்றவரை அவரது பெயருக்கு முன் கலாநிதி (டாக்ட்டர்) பட்டம் போட்டு அழைப்பது வழக்கம். இவர் ஏதாவது நல்ல துறையில் பாண்டித்தியம் பெற்றிருக்க வாய்ப்பில்லை, இவரது சொல் செயல் அதை நிரூபிக்கவில்லை. கொலை, கொள்ளை, காணி அபகரிப்பு, இனத்துவேஷம், கலவரத்தை ஏற்படுத்தல் போன்றவற்றில் பெற்றிருப்பாரென நினைக்கிறன். இவரது சொல் செயல் அதையே நிரூபிக்கின்றன. இவர் மட்டுமல்ல இலங்கையில் அந்தப்பட்டத்தை இந்தச் செயல்களுக்காக பெற்றவர்கள் கனபேர் இருக்கிறார்கள்.

 24. எங்கள் காணியை விடுகிறதற்கு பாதுகாப்பு தரப்பிடம் ஆலோசனை பெறவேண்டுமாம், அதைவைத்து சரித்திரம் எழுத நினைத்தார்களோ? எங்கே எங்கள் தலைவர்கள்? அவர்களுக்கு இதெல்லாம் கேக்க நேரமில்லை.

×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.