Jump to content

satan

கருத்துக்கள உறவுகள்
 • Posts

  6987
 • Joined

 • Last visited

Posts posted by satan

 1. காலம் போன சரக்குகள், தங்கள் பதவிக்காலத்தில் கடமையை சரிவர செய்ய துப்பில்லாமல், ஓர் இனத்தின் அழிவை எழுதியவர்கள் மீண்டும் ஏதோ நாசகார வேலைக்கு ஒன்று   கூடி ஓட முயற்சிக்கிறார்கள் போலுள்ளது! 

 2. 9 hours ago, goshan_che said:

  கலாநிதி? எப்ப இருந்து?

  ஏதாவது ஒரு துறையில் பாண்டித்தியம் பெற்றவரை அவரது பெயருக்கு முன் கலாநிதி (டாக்ட்டர்) பட்டம் போட்டு அழைப்பது வழக்கம். இவர் ஏதாவது நல்ல துறையில் பாண்டித்தியம் பெற்றிருக்க வாய்ப்பில்லை, இவரது சொல் செயல் அதை நிரூபிக்கவில்லை. கொலை, கொள்ளை, காணி அபகரிப்பு, இனத்துவேஷம், கலவரத்தை ஏற்படுத்தல் போன்றவற்றில் பெற்றிருப்பாரென நினைக்கிறன். இவரது சொல் செயல் அதையே நிரூபிக்கின்றன. இவர் மட்டுமல்ல இலங்கையில் அந்தப்பட்டத்தை இந்தச் செயல்களுக்காக பெற்றவர்கள் கனபேர் இருக்கிறார்கள்.

 3. எங்கள் காணியை விடுகிறதற்கு பாதுகாப்பு தரப்பிடம் ஆலோசனை பெறவேண்டுமாம், அதைவைத்து சரித்திரம் எழுத நினைத்தார்களோ? எங்கே எங்கள் தலைவர்கள்? அவர்களுக்கு இதெல்லாம் கேக்க நேரமில்லை.

 4. போர் வெற்றிக்கதைகளை கேட்டு வாக்கு போட்டு அரசேற்றி மகிழ்ந்த மகிழ்ச்சி பொருளாதார நெருக்கடியில் மறையத் தொடங்கி, மக்கள் சிந்திக்க ஆரம்பித்து விட்டார்கள். இந்த விசரன் தெரிந்து அரற்றுறானோ மஹிந்தவை புனிதனாக்கி மீண்டும் அரசியற் கதிரை ஏற்ற எண்ணியோ அல்லது தான்தான் போர் கதாநாயகனாகி வெற்றியை அடைந்து விடலாம் என்று எண்ணியோ சொல்லுது, மஹிந்தா காட்டுக்குச் சென்று பிரபாகரனுடன் பேசி சமாதானத்தை ஏற்படுத்த முனைந்தாராம், தான் தான் அவரின் மனதை  மாற்றி போர் செய்து வெற்றி பெற வைத்தாராம். நுணலும் தன்வாயாற் கெடும் என்பார்கள். போர் வெற்றி மறையும் போது அதை தூக்கி தன் தோளில் போடும் வீரன், தமிழரை அடக்கினவன் என்றால் வாக்கு விழும் என்று கடந்தகால அனுபவத்திலிருந்து விடுபட முடியவில்லை பலரால். அன்று தமிழரின் வாக்கில்லாமல் பதவியை இழந்தார் நரியார், அதே வாக்குகளால் பதவியேறினார் மஹிந்தா, தமிழரின் வாக்கில்லாமலே வெற்றி பெறமுடியும் என கர்ச்சித்தார் கோத்தா, பதவிக்காலத்தை நிறைவு செய்ய முதலே நாட்டை விட்டு சொல்லாமல் கொள்ளாமல் தப்பியோடினார். இப்போ இவரும் இவர் போன்றோரும்  துடிக்கின்றனர் வெகு விரைவில் கற்றுக்கொள்வார்கள். 

 5. 1 hour ago, குமாரசாமி said:

  இந்தியாவை மீறி யார் மத்தியஸ்துக்கு வருவார்கள்?

  விடுதலைப்புலிகள் இருக்கும் போதும் எரிக் சொல்கையும் ஒவ்வொரு  விடுதலைப்புலிகள்- சிங்கள தரப்பு பேச்சுவார்த்தையின் பெறுபேறுகளை/ முடிவுகளை இந்திய அரசுக்கு நேரடியாக சென்று அறிவிப்பது வழக்கம்.

  எரிக்சொல்ஹெய்ம் சமாதான தூதுவர் வேலை செய்ய வரவில்லை, கொண்டோடி வேலையே செய்தவர். இப்போ குழப்பி வேலை செய்கிறார்.   எல்லா நாடுகளும் எங்களை வைத்துப் பரிசோதனை நடத்துகின்றன. 

  முடிந்தால்; இந்தியா தமிழருக்கு செய்யும் சகுனி வேலையை அதன் பக்கம் திருப்பி அதை தலை புழுத்த நாய் போல ஓட வைத்தால்தானுண்டு!

 6. 51 minutes ago, பெருமாள் said:

  அங்கு பணியாற்றிய அதிகாரி ஒருவர் கையாடிச் சென்றதன் காரணமாகத் தமது நகைகளை மீட்க முடியாமல் பாதிக்கப்பட்டிருக்கும் வாடிக்கையாளர்களுக்கு மிக விரைவில் உரிய தீர்வு பெற்றுத் தரப்படும்

  ஏன் அந்த அதிகாரியை இத்தனை ஆண்டுகளாக கைது செய்து நீதிமன்றின் முன் நிறுத்த முடியவில்லை? இந்த மாதிரியான செயல் இனி வருங்காலத்திலும் தொடர தூண்டுதலாய் அமைந்து விடப்போகிறது இப்படியான சமரச பேச்சுவார்த்தை.

  • Like 1
 7. அரச வாழ்க்கையை துறந்து துறவறம் பூண்ட புத்தனுக்கு அரச இராணுவ பாதுகாப்பு தேவைப்படுகிறது. இது ஆக்கிரமிக்கும் மதம் பிடித்த மதம்.

 8. மீற்றர் வட்டிக்கு கொடுப்பதற்கு அவனிடம் பணம் எப்படி வந்தது என ஆராய்ந்தால் வரும் விஷயம். தகுதியற்றவரிடம் கடன், உதவி வாங்குவதும் தவறு, தகுதியற்றவர்களுக்கு கொடுப்பதும் தவறு. கண்டிப்பாக இவனது பின்னணி ஆராயப்படவேண்டும், அதற்கு யாராலும் முடியுமா?

  • Thanks 1
 9. எந்த ஒரு  சமூக சீர்கேட்டுக்குபின்னால் இருப்பதும் சிங்கள கூலிப்படைகளே. இதை அழிக்க நம்ம தலைவர் வெளிக்கிட்டது முறையே. அதை விரும்பாதோர் கூடியழித்தனர் தம்மைக்காப்பாற்ற.

 10. ஜனாதிபதிக்கு எந்தவொரு அதிகாரமுமில்லை என்கிறார்கள் ஆனால் கூட்டத்தில் கலந்துகொண்டு எதிர்ப்பு தெரிவிகின்றனர். அவரோ செய்வேன் என்கிறார், சொன்னதை செயலில் காட்டி நிரூபிக்க  பின்னடிக்கிறார். செய்வேன் என்பவர் நீக்குங்கள் என்பது பற்றி ஆலோசனை வழங்குகிறார். வடக்கு கிழக்கு இணைப்பு பிரிவு பற்றி பேசினார்கள் ஒருகாலத்தில், நீதிமன்றம் போய் பிரித்துக்கொண்டார்கள். அதிலிருந்து மீள முனைப்பு காட்டவில்லை அடங்கி விட்டார்கள் நம்மவர்.  இருந்ததை பிரிக்கும் போது எழாத எதிர்ப்பு, பிரித்ததை இணையுங்கள் என்று கேட்கும்போது இரத்த ஆறு ஓடுமென எச்சரிக்கிறார்கள். இன்று பதின்மூன்றும் அதே நிலையிலிருக்கிறது. மொத்தத்தில் இதுவும் வெகு சீக்கிரம் நீதிமன்றம் போய் இல்லாமல் விடைபெற்றுவிடும். ஆக நாட்டிலுள்ள சிறுபான்மையினரின் பிரச்சனைகளை தீர்க்க நாட்டில் சட்டங்களும் இல்லை, நீதிமன்றங்களும் பிரிப்பதற்கே உதவுகின்றன. இனப்பிரச்சினையை தீர்ப்பதில் உண்மையில் நம்மவர்க்கோ, பெரும்பான்மையினர்க்கோ, சர்வதேசத்துக்கோ விருப்பமில்லை. இதை வைத்து ஆதாயம் தேடுவதையும், பிச்சையெடுப்பதையும், மூக்கை நுழைக்கவுமே விரும்புகின்றனர். நம்ம தலைமை உண்மையாக, திறமையாக செயற்பட்டிருந்தால் இந்தளவுக்கு நிலைமை சிக்கலாகி வெளியார் தலையீடு வந்திருக்காது. இவர்களே சிங்களத்துக்கு வழியும் சொல்லி, வழி விட்டும் கொடுத்துவிட்டு இந்தியாவையும் அழைத்து வந்து செருகி விட்டதும் இவர்களே. கரையில் இருக்கும் போது காப்பாற்ற முடியாதவர்கள் நடுக்கடலில் போன பின் காப்பாற்ற முடியுமா? காகித கப்பல்களை நம்பி  கரை சேர துடிக்குமினம் நாம்!  சாகிறோம் காப்பாற்றுங்கள் என்று கையெடுத்துக்கும்பிட்டோம் மனித நேயத்துக்காக உழைக்கிறோம் எனக்காட்டி கொள்ளும் அமைப்புகளிடம், என்ன நடந்தது? கைகழுவி விட்டு சென்று வேடிக்கை பாத்து அறிக்கை விட்டு கூடியிருந்து பேசுகிறார்கள். காப்பாற்ற முடிந்ததா இல்லை அதற்கு முடிவு விடிவு வைக்கத்தான் முடிந்ததா இவர்களால்? எதுவும் முடியாது, தடுத்துப்பாத்தோம், தட்டிப்பாத்தோம், இடித்துப்பாத்தோம் ஒன்றும் நடக்கேல்லையே எங்களையே கெடுத்துக்கொண்டோமே. இனி என்ன செய்வது? எங்களை அழிப்பதற்காக தூங்காது திட்டம் தீட்டுபவனிடம் அடைக்கலம் கேட்டு காத்திருக்கிறோம்.  

 11. சத்தமில்லாமல், ஆர்ப்பாட்டமில்லாமல் காணி சுவீகரிப்பு. நம்ம தலைவர்கள் குடுமிப்பிடி சண்டையில் அதிக கவனம் செலுத்துவதால் இதுகளுக்கெல்லாம் நேரமில்லை அவர்களுக்கு.

 12. இங்கு இருக்கும் அமைச்சர்கள்  தங்களுக்கு பொருத்தமில்லாத துறையில் பதவி  வகிப்பதால்  வருகிறவர்களும் அவர்களை கையாளக்கூடிய  வகையில் அனுப்புகிறார்கள். இல்லை பொருளாதார வல்லுநர் வந்தாலும் அவர்கள் சொல்வதை இவர்களால் விளங்கிக்கொள்ள முடியுமா? முடிந்தாலும் அவர்கள் சொல்லும் எதையாவது இவர்களால் மறுக்கவோ கேள்வி கேட்கவோ  மாற்றவோ திருத்தவோ முடியுமா? பூம் பூம் மாடுமாதிரி தலையாட்டுபவர்களுக்கு வல்லுநர் வந்தாலென்ன, விளையாட்டுக்காரன் வந்தாலென்ன?அவ்வளவு அறிவு உள்ளதுகள் இருந்திருந்தால் நாடு இன்று எல்லா நாடுகளையும் கெஞ்சும் நிலையில் வந்து நிற்குமா? இனப்பிரச்சினையை வைத்து எல்லாவற்றையும் சமாளித்துவிடலாமென எண்ணி எங்கும் எதிலும் இனவாத பூதத்தை ஊதிக்கொண்டல்லவா இருந்தார்கள்.  எந்த அமைச்சருக்கு அவர் வகிக்கும் துறையில் அறிவு  திறமை இருக்கு?

 13. உலகம் போற போக்கு எதையோ சொல்கிறது. தந்தை மகளை பாலியல் துஷ்பிரயோகம், சகோதரன் சகோதரிக்கு போதைப்பொருளை கொடுத்து பலாத்காரத்துக்கு சம்மதித்தல், தாய் மகளை பாலியல் தொழிலுக்கு அனுப்புதல், குழந்தையின் வயிற்றில் போதைப்பொருள் கடத்தல்  இதெல்லாம் எங்கே இருந்து வந்தது? அருவெறுப்பாக இருக்கிறது.

  • Sad 1
 14. தனக்கும் ஆனோல்ட்டின் நியமனத்துக்கும் தொடர்பில்லை என்றார் முதலில், நீதிமன்றம் போக பயப்படுகிறாரோ ஆளுநர்.

 15. இதுவும் ஒரு நிலைமை! என்ன பொதுப்பணத்தை பாதுகாத்தார் இது ஒரு குற்றமா? நீதிமன்றத்தில் பாதுகாப்புக்கு இருந்த பொருட்கள், வங்கியில் இருந்த நகைகள் மாயம். அவர் வீட்டிலிருந்த பணம் பாதுகாப்பாக இருந்ததல்லவா போராட்டக்காரர் கைப்பற்றும்வரை. இப்படியும் வாதாடலாம்!

 16. கஷ்ரப்படுகிறவரை தூக்கி வெளியில் போட்டுவிட்டு இணைய முடிந்தால் இணையலாம் ஆனால் சம்பந்தரை தாங்கி பிடித்து வருவது யார்?

 17. சும்மா கேட்டுப் பாத்தேன் யாருக்காவது தைரியம் இருக்கா என்று? நீங்கள் சொன்னதுதான் சரி. அவருக்கு புனர்வாழ்வு கொடுக்கப்போய் சம்பந்தர் போய்சேந்துவிடுவார் பிறகு சாமியாருக்கு புனர்வாழ்வு  கொடுக்கவேண்டும். யாரும் போக வேண்டாம் அவரே போற நேரம் கதிரை காலியாகுந்தானே அப்போ பாத்துக்கொள்வோம். பிறகு கனவிலே வந்து தன்ர கதிரைக்கு சண்டை பிடிப்பார் கண்டியளோ! 

  • Haha 1
 18. 4 hours ago, குமாரசாமி said:


  அவர் ஒரு ஈழத்து கட்டுமரம் 😎

  கதிரைக்கு அடிமையாக்கிவிட்டார், அதை ஏற்றுக்கொள்ளும் மனநிலையில் அவர் இல்லை, மோசமான நிலை. யாராவது புனர்வாழ்வு, அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தாலுண்டு. யாருக்கந்த தைரியமுண்டு சாமியாரை அனுப்புவோமா?

×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.