-
Posts
6985 -
Joined
-
Last visited
Content Type
Profiles
Forums
Events
Blogs
Gallery
Posts posted by satan
-
-
பட்ட காலே படும் கெட்ட குடியே கெடும்.
-
9 hours ago, குமாரசாமி said:
சிங்கள உடன்பிறப்புகள் இது சிங்கள நாடு என கோபித்து வெகுந்தெழ மாட்டார்களா?
அவர்கள் உற்ற நண்பர்கள் தமிழன்தான் எல்லோருக்கும் எதிரி.
-
-
1 minute ago, குமாரசாமி said:
வாற உதவி நிதியளை வைச்சு ஒருமாதிரி பிரச்சனையளை சமாளிச்சு போடுவினம்.
அந்தப்பணத்தை வைத்து தங்கள் ஊழல்களை மறைக்க தேர்தலில் நின்று வென்று தங்களை புனிதர்களாக்குவர் பின் மிஞ்சியதையும் சூறையாடி வெளிநாடுகளில் பதுக்குவார்கள். எதை நாட்டு மக்களுக்கு பிரயோசனமான வழிகளில் செலவழித்தார்கள்? அபிவிருத்தி செய்தார்கள்? பாதிக்கப்பட்ட மக்களுக்கு வரும் உதவிகளில் ஒரு பருக்கையைத்தானும் அவர்கள் அனுபவிப்பதில்லை.
-
அவர்களுக்கு அதிகாரத்தை கொடுத்து அணைத்துக்கொள்ள விருப்பமில்லை. அடாத்தாக நுழையும் எதுவும் நிலைத்துநிற்காது, எப்பவும் தப்புவதற்கு, உடைப்பதற்கும் சமயம் தேடிக்கொண்டே இருப்பார்கள். நல்ல தலைமை இல்லை. என்னவோ சொல்வார்கள் "அப்பன் இல்லாத பிள்ளையின் தலையில் எல்லோரும் சிரைத்து பழகுவார்களாம்" என்று. அந்தப்பக்கம் இந்தப்பக்கம் காட்டியும் கூட்டியும் கொடுப்பவர்கள், தாங்களும் அதற்குள் உள்ளடங்குவார்கள் என்பதை உணர மறுக்கிறார்கள்.
-
தங்கள் பிரதிநிதிகளாய் வடகிழக்கில் தமிழரை தெரிந்து தேர்தலில் நிறுத்துவார்கள் இப்போதைக்கு, அதன்பிறகு அவர்களையும் அப்புறப்படுத்திவிட்டு தாங்களே நேரடியாகவே இறங்குவார்கள், அதுவரை பேச்சுவார்த்தையும், முகவர்களின் உதவியும் தேவை. அப்புறம் இதெல்லாம் தேவையற்றது. உங்களுக்கு நினைவிருக்குமென்று நினைக்கிறன், தாடியர் கடந்த ஒரு தேர்தலில் தன் சொந்த சின்னத்தில் போட்டியிட முடியாமல் சிங்கள கட்சியின் சின்னத்தில் போட்டியிட்டவர். அது முன்னோட்டம் பின்வரும் நாடகங்களுக்கு.
அங்காலை பாருங்கோ! இலங்கையின் சுதந்திர விழாவுக்கு இந்திய கொடியை வடக்கில் ஏற்றி மகிழ்கிறார்கள், கொண்டாடுகிறார்கள். ஏன் என்று கேட்க ஆளில்லை. தெற்கிலேதான் கொண்டாட்டம் அங்கேயே கொண்டுபோய் ஏத்தலாமே? "நிலைமை கொஞ்சம் இறங்கி வந்தால் நிழலுங்கூட மிதிக்கும் என்பது உண்மைதானே?"
-
-
இனிமேற்காலங்களில் பேச்சுக்கே இடமிருக்காது போலிருக்கிறது. ரணில் எடுத்தவுடன் பேசுகிறேன் எல்லோரும் ஒற்றுமையா வாங்கோ என்றார், பின் முகவரை தனியாக சந்தித்து பேசினார். "சும்மா கிடந்த சங்கை ஊதிக்கெடுத்தானாம் ஆண்டி." என்பதுபோல ஏற்கெனவே பத்துக்கட்சி இப்போ அது பிரிந்து பலபிரிவுகளாய் நிக்கினம். இனி யாரோட யார் பேசுறது? தாடியர் அரச பக்கம், அப்படி ஏதாவது தப்பிப்பிழைத்தாலும் தட்டிப்பறித்து சிங்களத்தின் காலடியில் காணிக்கை ஆக்கிவிடுவார். இனிமேல் பேச்சுவார்த்தை தீர்வு வெறுங்கனவுதான்!
-
கடன் வாங்கின சந்தோஷத்தில சாதனை வெற்றிப்பேச்சுக்களிலும், களியாட்டங்களிலும், தூக்கத்திலும் காலத்தை செலவழித்து விட்டு இரண்டு வருடம் முடிய சீனா வந்து கதவைத் தட்டாது உள் நுழைந்து விடும். கடன் வாங்கவதே இவர்களின் சாதனை. சொந்த குடி மக்களோடு உரிமையை பகிர்ந்துகொள்ள மனமில்லாமல் முப்பத்தைந்து வருடங்களாக கடன் வாங்கி போர் செய்து சாதனை படைத்தவையை என்னத்தை சொல்ல.
-
1
-
1
-
-
4 hours ago, தமிழ் சிறி said:
பிரச்சார கூட்டங்களில்… கல்லெறி, செருப்பு வீச்சு, முட்டை அடி… போன்றவை இன்னும் நடக்க தொடங்கவில்லையா. 🤣
இதுகள்… இல்லாமல், தேர்தல் களை கட்டாதேநீங்கள் யாழ் களத்தை சூடேற்றுகிறீர்கள். மக்களால் தெரிந்தெடுக்கப்பட்ட, தெரிந்தெடுக்கப்படப்போகிற தலைவர்களை பொதுவெளியில் மரியாதையாக விளிக்க, நடத்த பழகிக்கொள்ளுங்கள். பாடம் எடுக்க வருவார்கள் பெரியவர்கள்!
-
2 hours ago, Nathamuni said:
இவைகளை புரிந்து, வெட்டி ஆடாமல், நமது அரசியல்வாதிகள் இந்தியா மத்தியஸ்தத்துக்கு வரவேண்டும் என்பது குழந்தைத்தனமானது.
ஒரு உள்ளூராட்சித் தேர்தலை சரியான ஆலோசனை, வழிநடத்தலில் ஒற்றுமையாக சந்திக்க முடியாமல் ஏழு பிரிவாய் நிக்கும் இவர்கள்? விளங்கின மாதிரித்தான்!
-
3 hours ago, ஏராளன் said:
இந்தியாவின் ஆதரவு இல்லாவிட்டால் 26 வருடங்களாக எங்கள் நாட்டிற்கு பெரும்பாதிப்பை ஏற்படுத்தி வந்த பயங்கரவாத அமைப்பை நாங்கள் தோற்கடித்திருக்க மாட்டோம்,
இந்தியாவை தேவையில்லாமல் இலங்கையில் மூக்கை நுழைக்க விடாமல் இருந்திருந்தால்; அடிக்கடி சொல்லும் சிங்கப்பூராய் மாறி எல்லோரும் ஓரளவுக்காகவாவது சமாதானத்தை அனுபவித்து, இவ்வளவு நெருக்கடியில்லாத நிலைக்கு இலங்கை மாறியிருக்கும். இந்தியா இலங்கையின் காலைச்சுற்றின பாம்பு.
3 hours ago, ஏராளன் said:இலங்கையை பொறுத்தவரை இந்தியாவுடனான உறவே மிகமுக்கியமானது.
சொல்லிக்கொண்டே ஆப்பு இறுக்கப்போகிறார்கள்.
-
8 hours ago, தமிழ் சிறி said:
உண்மைதான்…. படித்தவர்கள் என்று சொல்லிக் கொள்பவர்கள்,
நிர்க்கதியாக நிற்கும் தன் இனத்தைப் பற்றியும், இதனால் ஏற்படும்
எதிர்கால பாதகங்களைப் பற்றியும் சித்திக்காமல்,
அப்பட்டமான, சுயநல… கதிரை அரசியல் செய்வதைப் பார்க்க… கோபம் வருகின்றது.அத்தனையும் சுயநலம். இப்போ கலந்தும் விட்டினம், எல்லா இனமும் ஒன்றுதானே அவர்களுக்கு. யார் அழிந்தாலென்ன நிர்க்கதியாக நின்றால் என்ன?
-
9 hours ago, தமிழ் சிறி said:
முழங்காலுக்கும், மொட்டந் தலைக்கும் முடிச்சு போடுவதில்... நம்ம ஆக்கள் விண்ணர்கள். 🙂
இரண்டு நாடுகளும் தாங்கள் செய்யும் போர் முறைகளும், அதற்கு சொல்லப்படும் காரணங்களும் ஒன்றுக்கொன்று ஒத்துவருகிறது என சொல்லவந்தோம், வேறொன்றுமில்லை...... இதை போர் என்று சொல்ல முடியாது. தங்கள் சுயநலத்திற்காக மக்களை கொடூரமாக கொன்று அடிபணிய வைக்கும் செயல்.
-
1
-
-
5 hours ago, ஈழப்பிரியன் said:
இவருக்கு இன்னமும் அலுவலகம் இருக்கிறதா?
ஆம் என்றால் ஏன்?
அவருக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை மறுத்து அறிக்கை விட!
-
3 minutes ago, goshan_che said:
நிராகரிக்க பட்ட பட்டியலில் தமிழரசின் பெயர் இல்லை.
சுமன் ஆள் போர்ம் நிரப்பிரதுல கெட்டிகாரன்🤣
அதுதான் அவருக்கு ஏற்ற தொழில். தெரியாத வேலைக்கு வந்து தேவையற்ற பிரச்சனைகளை உருவாக்குகிறார்.
-
அவ்வாறே பங்காளிக்கட்சிகளையும் கலந்து பேசி, வழிகாட்டி, சுமுகமாக செய்திருக்கலாம். ஏன் இரகசியமாக இறுதி வரை காத்திருந்து, எந்தவித விளக்கம், முன் ஆயத்தம் இல்லாமல், தமிழரசுக்கட்சி தனித்து போட்டியிடும் நீங்கள் தனித்து போட்டியிடுங்கள், தேர்தலுக்குப்பின் சந்திப்போம் என்று மொட்டையாய் கூறி, கட்சிச் சின்னத்தை பாவிக்கப்படாது என்று கட்டளை இட்டு, மக்களை குழப்பி, பங்காளிகளை அவமானப்படுத்தி, இது சாதாரணமான செயலென கருதுகிறீர்களா?
-
6 hours ago, தமிழ் சிறி said:
கிளிநொச்சி… விடயம், தமிழரசு கட்சி தமக்குள் பேசி… பிரிந்து இருப்பார்கள் என்றே நினைக்கின்றேன்.
அப்படியானால் பிரச்சார வேளைகளில் ஒருவரை ஒருவர் தாக்காமல் சேறடிக்காமல் குற்றஞ்சாட்டாமல் கண்ணியமாக நடப்பார்கள் என்று எதிர்பார்க்கலாமா?
-
17 hours ago, ஈழப்பிரியன் said:
சிலர் வேறு மாதிரியும் சிந்திக்கலாம் தானே.
வாள்வெட்டுக்குழுக்களை எல்லாம் தேர்தல் வேட்பாளர்கள் வேலைக்கு அமர்த்தியிருக்கினமாம், சொல்லக்கேள்வி!
-
11 hours ago, தமிழ் சிறி said:
வேட்பு மனுவை... ஒழுங்காக நிரப்பத் தெரியாதவன் எல்லாம்,
என்ன இழவுக்கு அரசியலுக்கு வாறாங்கள். 😎
எல்லாம் வாக்குப்போடும் மக்கள் மேல் உள்ள நம்பிக்கையிற்தான். இவர் பிள்ளைகள் படித்து படிவம் நிரப்பும்போது வாக்குபோடுபவர்களும் விபரம் தெரிந்து போட வெளிக்கிட்டு விடுவார்களே.
-
ஒழுங்காக நிரப்பதெரிந்தவனெல்லாம் நேர்மையாக வேலை செய்கிறார்களா? எல்லாம் ஒருவரை ஒருவர் பாத்துத்தான்.
32 minutes ago, தமிழ் சிறி said:வேட்பு மனுவை... ஒழுங்காக நிரப்பத் தெரியாதவன் எல்லாம்,
என்ன இழவுக்கு அரசியலுக்கு வாறாங்கள். 😎
போய்.... பிள்ளை குட்டியளை படிக்க வைத்து,
அதுகளை கொண்டு, அடுத்த முறை வேட்பு மனுவை நிரப்புங்கப்பா... 😂 🤣 -
33 minutes ago, கிருபன் said:
எனினும், எங்களுடைய தந்திரமான நடவடிக்கை காரணமாக இம்முறை எந்தவொரு ஒட்டுக்குழுவின் ஆதரவும் இல்லாமல் ஆட்சியமைக்கக் கூடிய சூழல் உருவாகியுள்ளது.
வேட்பு மனு தாக்கல் செய்யும் போது வெற்றிக்கதைகளை பேசாதீர்கள், வெற்றி பெற்று அதிகாரத்தை ஏற்கும் போது பேசுங்கள் அதுதான் பொருத்தமாக இருக்கும்.
36 minutes ago, கிருபன் said:ஒற்றுமையுடன் செயற்பட்டால் மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிக வட்டாரங்களை கைப்பற்ற முடியும்
ஒன்றாய் இருந்தவர்களை கடைசி நேரம் அந்தர வழியில் கைவிட்டிட்டு ஒற்றுமை பற்றி பேசுற ஆளைப்பாருங்கோ! இவர்கள் தோத்தா ஒன்றும் குறைய மாட்டார்கள் சிங்களத்திடம் போய் ஒதுங்குவார்கள், அவர்கள் எங்கே போவார்கள்?
-
எண்ணம் எதுவாக இருந்தாலும் முன்னேற்பாடாக அவர்களுக்கு கூறியிருக்க வேண்டுமல்லவா? இல்லை, அது பத்திரிகைகள் கூறுகின்றன நாங்கள் அப்பிடியில்லை, பத்திரிக்கைகளே அப்படி செய்தி போடாதீர்கள் என்று கண்டித்தாரே,
இதுதான் நான் உள்ளூராட்சி தேர்தலில் தனித்து களமிறங்குகிறது தமிழரசுக்கட்சி என்கிற தலைப்பில் பதிந்தேன்.
-
On 21/1/2023 at 17:50, கிருபன் said:
தெற்குடனான பேச்சுவார்த்தையின் மூலமாக தீர்வு காண்பதை தமிழர் தரப்பே செய்ய வேண்டும் எனவும் அதில் இந்தியா தலையிட முடியாது எனவும் ஜெய்சங்கர் கூறினார்.
ம் ...ஹூம், இதை சொல்வதற்குத்தான் இவ்வளவு காலமும் இவர்களை அழைத்து அலைக்கழித்துப் பேசினார்களாக்கும், அதை அவர்களே பாத்துக்கொள்ளட்டும் என்று விட்டிருக்கலாமே, எதற்கு எதற்கெடுத்தாலும் மூக்கை நீட்டினவை?
முஸ்லிம் தலைமைகள் விலகி நிற்கக்கூடாது
in ஊர்ப் புதினம்
Posted
அவர்களுக்கு அவர்கள்தான் பிரச்சனை. தாங்கள் தமிழரா முஸ்லிம்களா என்று தெரியாமல் தடுமாறுகிறார்கள். தமிழர் என்றால் முஸ்லீம்கள் என்கிறார்கள், முஸ்லீம்கள் என்றால் தமிழர் என்கிறார்கள். இது நம்மால் தீர்க்கமுடியாத பிரச்சனை.