Jump to content

satan

கருத்துக்கள உறவுகள்
 • Posts

  6987
 • Joined

 • Last visited

Posts posted by satan

 1.  எண்ணம் எதுவாக இருந்தாலும் முன்னேற்பாடாக அவர்களுக்கு கூறியிருக்க வேண்டுமல்லவா? இல்லை, அது பத்திரிகைகள் கூறுகின்றன நாங்கள் அப்பிடியில்லை, பத்திரிக்கைகளே அப்படி செய்தி போடாதீர்கள் என்று கண்டித்தாரே, 

  இதுதான் நான் உள்ளூராட்சி தேர்தலில் தனித்து களமிறங்குகிறது தமிழரசுக்கட்சி என்கிற தலைப்பில் பதிந்தேன். 

 2. On 21/1/2023 at 17:50, கிருபன் said:

  தெற்குடனான பேச்சுவார்த்தையின் மூலமாக தீர்வு காண்பதை தமிழர் தரப்பே செய்ய வேண்டும் எனவும் அதில் இந்தியா தலையிட முடியாது எனவும் ஜெய்சங்கர் கூறினார்.

  ம் ...ஹூம், இதை சொல்வதற்குத்தான் இவ்வளவு காலமும் இவர்களை அழைத்து அலைக்கழித்துப் பேசினார்களாக்கும், அதை அவர்களே பாத்துக்கொள்ளட்டும் என்று விட்டிருக்கலாமே, எதற்கு எதற்கெடுத்தாலும் மூக்கை நீட்டினவை?

 3. 3 hours ago, ஈழப்பிரியன் said:

  நீங்கள் தேடுவது இதற்குள் இருக்கும்.

  இது இல்லை. பரபரப்பாக போய்க்கொண்ண்டிருக்கும்போது எழுதிய ஞாபகம். எந்த தலைப்பு என்று மறந்துவிட்டேன். அதாவது இவர்களை அழைத்துப்பேசி த.தே. கூட்டமைப்பின் சின்னத்தை பாவிக்கக்கூடாது என்று போட்ட உத்தரவு தலைப்பில் இருக்குமோ தெரியவில்லை. சரி, அது கிடக்குது. இப்போ எல்லோருக்கும் தெரிந்தாயிற்று அது போதும்.  இருந்தாலும் முயற்சி செய்த உங்களுக்கு நன்றி.

 4. தகுதியற்ற தலைவர்களை ஏன் கட்சியில் மக்களுக்கு அறிமுகப்படுத்துகிறார்கள்? தாம் தகுதியற்றவர்கள் என்று தெரிந்தும் ஏன் போட்டியிட அடம்பிடிக்கிறார்கள், சண்டை பிடிக்கிறார்கள், வாக்குறுதிகளை வழங்குகிறார்கள்? 

  கோத்தா சொன்னார்; தாங்கள் தகுதியற்றவர்கள் என்று விரட்டியடித்து விட்டு மீண்டும் ஏன் தெரிந்தீர்கள் என்று மக்களை கேள்வி கேட்டார். விரட்டியடித்து விட்டார்கள் என்று  தெரிந்து கொண்டும் மீண்டும் குளறு படிகளை செய்து, மக்களுக்கு லஞ்சம் கொடுத்து, ரோஷமில்லாமல் கதிரையில் குந்தியிருந்து மக்களை குற்றம் சொல்பவர்களை என்ன சொல்வது? பல வருடங்களுக்கு முன் இங்கு பதிந்துள்ளேன், இன்னும் சில வருடங்களில் தமிழ்த்தேசியம் அழிந்து  சிங்களம் வலுவாக  தன் கட்சிகளோடு காலூன்றி இந்த அல்லக்கைகள் எல்லாம் மக்களோடு மக்களாக விரிசையில் நின்று சிங்களகட்சிக்கு வாக்குப்போடும் காலம் வரும் அல்லது தேர்தலே இல்லாத நிலையும் தோன்றலாம். அதற்காகவே இவர்கள் உழைக்கிறார்கள். அரசியல் தலைவர்களுக்கே விளங்காத, விளங்கப்படுத்தாத ஒரு முறையை சாதாரண மக்கள் எப்படி கண்டுணர்ந்து இவர்களை தெரிவு செய்ய முடியும் என இவர்கள் எதிர்பார்க்கிறார்கள்? செயற்திறனுமில்லை, சிந்திக்கும் திறனுமில்லை மக்களை குழப்பும் செயலை மட்டும் திறமையாக செய்கிறார்கள்!

 5. 15 hours ago, goshan_che said:

  யாழில் உங்களை தவிர யாரும் பார்த்திருப்பார்கள் என நம்புகிறீர்களா?

  எனது ஒரு பதிவில் நான் குறிப்பிட்டிருந்தேன், அதாவது நோக்கம் சரி தெரிவித்த விதம் பிழை என. அதை  இப்போது தேடுகிறன் கண்டு பிடிக்க முடியவில்லை. இதை அறிந்தே  வாக்குகளை பிரிக்கும் வேலைகளை செய்கிறார்கள் என்று தாடியர் அங்கலாய்க்கிறார் தொடக்கத்திலிருந்து. இவர்களது பிழையான அணுகுமுறை, செயற்திறன் அற்ற அரசியலே இவ்வளவு அந்நிய கட்சிகளையும் உருவாக்கி மக்களை அவர்கள் பின்னால் விரட்டியது. சும்மா அப்படி சொல்லிவிட முடியாது, எஜமான் திட்டத்துக்காய் செயற்படுகிறார்கள், மக்களின் அபிலாசைகளை இல்லாதொழிக்க செயற்படாமல் இருக்கிறார்கள் என்பதே உண்மை. சரியான ஒரு கோடரிக்காம்பை தெரிந்தெடுத்து தமிழருக்குள் செருகியிருக்கிறது சிங்களம்.

 6. 3 hours ago, ஈழப்பிரியன் said:

  இதற்குப் பின்னால் அமெரிக்காவாக இருக்குமோ?

  அப்போ அமெரிக்கா இவர்களுக்கு தடை போட பயந்து, சும்மா இராணுவ அதிகாரிகளுக்கு தடை விதித்துவிட்டு இவர்களை கனடா பக்கம் விட்டதோ?

  2 hours ago, goshan_che said:

  ரஸ்யா என்ன மாரியாம்?

  ரஸ்யா உக்ரேயினில் எப்படி நடந்து கொள்கிறதோ அதற்கு என்ன காரணம் சொல்கிறதோ அது ஏற்கெனவே நம் நாட்டில் நடந்தேறி விட்டதே. இதற்குப்பின் எதற்கு விளக்கம். "உன் நண்பனைக்காட்டு நான் உன்னைப்பற்றி சொல்கிறேன்." என்றொரு பழமொழி உண்டு.  

  • Like 1
 7. இது வேண்டுமென்றே பங்காளிக்கட்சிகளை ஓரங்கட்டும், அவமானப்படுத்தும் செயல். செயற்பட்ட விதம் விளக்கத்திற்கு பதிலாக சொன்ன செய்தி. இப்போ கொஞ்சம் மண்டையில ஏறுது, வினயமாக சிறி நேசன் கோரிக்கை வைக்கிறார். ஒருவேளை.... பங்காளிக்கட்சிகள் வென்று தமிழரசுக்கட்சி அவர்களோடு இணைய வந்தால் சுமந்திரனை வெளியில் தூக்கிப்போட்டு விட்டு இணைத்துக்கொள்ளலாம். இவ்வளவு விரிவாக பொதுவெளியில் சொல்ல முடிந்ததை ஏன் அன்று நான்கு சுவருக்குள் அவர்களுக்கு விளக்க முடியவில்லை? அல்லது அதற்குப்பின்தான் காரணத்தை தேடினார்களோ என்கிற சந்தேகம் எழுகிறது. அவர் சொல்லும்போது சொன்ன ஒரு கருத்து; போன தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழரசுக்கட்சிக்கே அதிக வாக்குகள் விழுந்தன அதாவது தாங்கள் தானே வெல்லப்போகிறோம், இந்த முறை  அதிக அனுகூலமாக தங்கள் பக்கம்  பிரச்சார பீரங்கி இருக்கிறார் முழு வாக்குகளையும் அள்ளுவார்    இவர்கள் அதில் எதற்கு பங்காளிகளாக வைத்திருக்க வேண்டும் என்று நினைத்தார்களோ?  இவர்களுக்கு என்ன விளக்கம் கொடுப்பது நாங்கள், இவ்வளவு உதாசீனம் செய்தும் ஓட்டிக்கொண்டு இருபவர்கள்தானே இருந்துவிட்டுப்போகட்டுமேன் என்கிற தெனாவெட்டா? அவர்கள் கேட்டபோது, பத்திரிகைகள் வெளியிட்ட போதுங்கூட மறுதலிக்க காரணம் என்ன? தங்களுடைய சர்வாதிகாரப்போக்கை தங்களோடல்லவா வைத்திருக்க வேண்டும். அவர்கள்தான் மறுத்துவிட்டார்கள் என்று எப்படி குறை கூற முடியும்? அவர்களுக்கும் தன்மானம் உண்டு, அவர்களும்  மக்களால் தெரிந்தெடுக்கப்பட்டவர்கள்தானே? 

 8.  எழுபத்தொன்பது வருடம் அரசியல் செய்த, தமிழ்மக்களின் ஏகோபித்த கட்சி இப்பதான் உண்மையை புரிந்ததாம், அதுவும் முஸ்லிம் கட்சிகளிடமிருந்து. ராஜதந்திரம் என்கிற பெருமை வேற! 

  On 15/1/2023 at 08:02, ஈழப்பிரியன் said:

  முக்கியமாக ஏன் சுயேட்சைக் குழுவாக கேட்கிறார்கள் என்று தெரியாமல் இருந்துது.

  இருந்தபடியே கூட்டாக தேர்தலில் போட்டியிட்டுக்கொண்டு சுயேட்க்ஷையாகவும் இறங்கியிருந்தால் இவ்வளவு குழப்பம், வெறுப்பு வந்திருக்காதே!

  • Haha 1
 9. தமிழ்த்தேசியம் உடைந்து தமிழரசுக்கட்சி துடைத்தெறியப்பட்டு சிங்கள பேரினவாதக்கட்சிகள் காலூன்றி அந்தக்கட்சிகள் மக்கள் மத்தியில் செல்வாக்கு செலுத்தும் நேரம் நெருங்குகிறது. அதன்பின் மக்களின் அரசியல் அபிலாசைகள் அழிந்து, அன்றாட வாழ்வுபோராட்டமாக மாறிவிடும் தமிழர் வாழ்வு. இதற்குத்தான் குறிக்கோளற்ற சம்பந்தன் எங்கோ கிடந்ததை கூட்டி வந்து தன் நாட்டாமையை காட்டி மக்களை நடுத்தெருவில் விட்டு பெருமையை தேடிக்கொள்ளட்டும். கொஞ்சமாவது குற்ற உணர்ச்சி இருக்குதா அந்த மனிதனுக்கு? வாறதை கொட்டி விடுவேன் பிறகு நிர்வாகத்தை குற்றஞ்சொல்வார்கள். "தேரையனார் இளநி உண்ணார் பழி சுமப்பார்." என்கிற கதையாய் விடும். எனக்கு பாடம் எடுக்க வரிசையில் வருவார்கள் உணர்ச்சியற்றவர்கள்.

 10. பேரினவாத கட்சிகளை வட கிழக்கில் அனுமதித்தது செயற்திறனற்ற தமிழரசுக்கட்சியே. இப்போ தமிழ்த்தேசியம் என்பதை உடைத்து பேரினவாத கட்சிகளின் காலடியில் விழ வைப்பதும் தமிழரசுக்கட்சியே. முன்னைய சுமந்திரனின் பேச்சுக்களை கேட்டால் புரியும் அதாவது தமிழரசு, தமிழ்த்தேசியம் என்று சொன்னால் சிங்களவர் பயப்படுகிறார்களாம் அதை வெறுக்கிறார்களாம். அதற்காகவே இந்த சிங்கள கட்சிகளை வட கிழக்கில் திட்டமிட்டு உள்நுழைய விடுகிறார்கள் போலுள்ளது. தமிழ்த் தேசியக்கட்சிகள்  பிரிந்து நின்று போட்டியிடுவதால் ஏற்படும் நன்மைகளை போன தேர்தலில் தாம் உணர்ந்து கொண்டதாக ஒத்துக்கொள்ளும் இவர்கள் அன்றிலிருந்து இன்றுவரை தூங்கிவிட்டு தேர்தல் நெருங்கும்போது பங்காளிக்கட்சிகளை வெளியேற்றுவதும் த. தே. கூட்டமைப்பின் சின்னத்தை பாவிக்கக்கூடாது என்று  தடுப்பதும் அவர்களை அரசியல் அனாதைகளாக்குவதுபோல் தெரியவில்லையா? பத்திரிகைகளில் செய்தி வந்த போதும் இல்லவே இல்லை என்று ஏன் சாதித்தார்கள்? இது ஒரு திட்டமிட்டு அவர்களை ஓரங்கட்டும் செயல். அதாவது தமிழ்த்தேசியத்தின் மேல் மக்கள் விருப்பு வைத்திருக்கிறார்கள் ஆகவே அதை அவர்களிடம் இருந்து தடுத்து தமிழரசுக்கட்சிக்கு விழும் வாக்குகளை அதிகப்படுத்தி தமது சர்வாதிகாரத்தை பலப்படுத்தும் உள்நோக்கம் கொண்டது. உண்மையிலேயே இவர்களது திட்டம் வாக்கை தக்க வைப்பதாயிருந்தால் பங்காளிக்கட்சிகளோடு பேசி, தெளிவுபடுத்தி, ஆயத்தப்படுத்தி சேர்ந்து தேர்தலை சந்தித்திருக்கலாம். ஒரு பக்கம் தாடியர் தனக்கு விழும் வாக்குகளில் தாக்கத்தை ஏற்படுத்தும் இந்த தேசியக்கூட்டணி என்று பயப்படுகிறார். ஆனால் மக்கள் இங்கே கட்சியின் சின்னத்தில், கூட்டணியில் குறுகிய காலத்தில் புரிதல் இல்லாமல் தடுமாறி தமிழரசுக்கட்சியில் உள்ள வெறுப்பில் பேரினவாதக்காட்சிக்கு வாக்களிக்கும் நிலையை உருவாக்கி தமிழ்த்தேசியத்தை உடைத்த பெருமையை தமிழரசுக்கட்சியின் சிலர் செய்திருப்பதோடு அதை நிஞாயப்படுத்தவும் முயற்சிக்கிறார்கள். ஏற்கெனவே பங்காளிக்கட்சிகளை போடுதடியாக நடத்தியவர்கள் இனிமேல் காலில் போட்டு மிதிப்பதற்காக செய்யப்பட்ட சதிவேலை இது! தங்கள் சதிவேலையை நிறைவேற்றுவதற்காக, சரியான காரணத்தை காலந்தாழ்த்தி அறிவித்து சாதித்திருக்கிறார்கள். இன்று சொல்லி மற்றவர்களை குற்றம் சாட்டுபவர்கள் இதுவரை எங்கே போயிருந்தார்கள் உரிய தரப்பினருடன் ஆலோசிக்காமல். இதெல்லாம் குறுக்கால பாய்ந்து எதிரிக்கு வழிவிடும்  சாணக்கியம். 

 11. தெரிவித்தவை நடைபெறுமா என்பது அடுத்த கேள்வி. பேசுவோம் .... பேசுவோம் என்று நாட்களை கடத்திய நரியாரை தட்டியெழுப்பிய சக்தி என்ன? அதுவும் இவ்வளவு அவசரமாக. ஏதோ செய்வது போல் அவசரம் காட்டுவதற்கு ஒரு காரணமிருக்கும் அது என்ன? ஏன்?

 12. செய்தி ஒன்று கேள்விப்பட்டியளோ! தமிழரசுக்கட்சி புறக்கணித்த ஜெய் சங்கர் சந்திப்பு  ஏதோ ஆப்பு இறுக்கிப்போட்டார்கள் போலிருக்கிறது. அவசரஅவசரமாக நரியார் சுமந்திரன் சம்பந்தன் இத்யாதிகளை அழைத்து சட்டுபுட்டென்று அவசர முடிவொன்றை வெளியிட்டிருக்கிறார். அவர்கள் கழன்ற பின் பிடித்திருந்த சனியன் விலகுதோ என எண்ணத்தோன்றுகிறது.

 13. நந்தவனத்தில் ஒரு ஆண்டி .......... போட்டுடைத்தானாம். பிறருக்கு வெட்டிய பள்ளம் தான் விழும் குழியாயிற்று!

  • Haha 1
 14. 12 hours ago, ஏராளன் said:

  சீனா மற்றும் இந்தியா ஆகிய நாடுகளிடமிருந்து இலங்கை பெற்றுக்கொண்ட கடனை மறுசீரமைப்பு தொடர்பிலான இணக்கத்தைப் பெற்றுக் கொள்ளும் முயற்சிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வந்த நிலையில், இந்தியா அதற்கான இணக்கத்தைத் தெரிவித்துள்ளது.

   

  12 hours ago, ஏராளன் said:

  கடன் மறுசீரமைப்பு தொடர்பில் சீனா இதுவரை தமது இணக்கத்தை வெளியிடவில்லை.

  சீனா இணக்கம் தெரிவிக்காவிட்டால் இந்தியா அதன் கடனை அடைத்து சீனாவின் பிடியிலிருந்து இலங்கையை விடுவிக்க முயலும், ஆனால் அதை சீனா முறியடிக்கும். இந்தியாவின் திட்டம் சீனா அறியாததல்ல ஏதோ மவுனம் காப்பதற்கு பின்னால் பெரிய திட்டம் வைத்திருக்கும் சீனா, அது இந்தியாவுக்கு ஆபத்தாகவும் மாறலாம்.

  12 hours ago, ஏராளன் said:

  'ஏனையோர் செய்வார்கள் எனக் காத்திருப்பதைத் தவிர்த்து, நாங்கள் சரியானது என நம்புவதை செய்தோம்," என எஸ்.ஜெய்சங்கர் கூறியுள்ளார்

   

  12 hours ago, ஏராளன் said:

  ஏனைய கடனாளிகளும் அவ்வாறே செய்வார்கள் என எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

   

 15. 27 minutes ago, nochchi said:

  முறையான ஆய்வுகளோடு சிங்கள மக்களின் ஏற்றத் தாழ்வுகளையும் சுட்டி அரசியல் திட்டமொன்றை தமிழர்தரப்பு வைத்திருந்தால் 100 ஆண்டுகளில் கணிசமான சிங்கள மக்களின் சிந்தனைக்காவது சென்றிருக்கும்.

  அவர்களிடம் ஒரு திட்டம், நோக்கம், பொறுப்பு இருக்கு என்று நம்புகிறீர்களா? இதோ எங்களது திட்டம் அதன் நிஞாயம், சாத்தியம் போன்றவற்றை சுட்டிக்காட்டி செய்து முடி அல்லது எங்களோடு பேச்சு என்ற சொல்லுக்கே இடமில்லை என்று அடித்துக்கூற முடியுதா இவர்களால்? பிச்சைக்காரர் போல் யார் கூப்பிட்டாலும் அடித்து விழுந்து போகிறார்கள் அழைத்தவர்களின் கையை நம்பி. உங்கள் திட்டம் என்னவென்றால்; திட்டம் நல்லாட்சி காலத்தில் வரைந்தாயிற்று, விவாதித்து நடைமுறை படுத்துவார்கள் என்கிறார் ஒருவர். அவரோ இனிமேற்தான் சந்திப்புகளை உருவாக்கி ஆலோசனை கேட்கப்போகிறாராம். மக்களுக்கு  என்ன பிரச்சனை என்று தெரியாதவர்கள் என்னத்தை பேசப்போகிறார்கள்? தங்களை மக்கள் எதற்காக தெரிந்தெடுத்தார்கள் என்றே புரியாமல் தங்களுக்குள் அடிபடுகிறார்கள், பிரிகிறார்கள், குற்றஞ் சாட்டுகிறார்கள். குதிரைக்கு கொம்பு முளைச்ச கதை மாதிரித்தான் இவர்கள் எங்களுக்கு தீர்வு பெற்றுத்தருவது.

 16. 8 hours ago, ஏராளன் said:

  கிறிஸ்தவ சகோதரர்களுக்கு இன்று நீதிக் கிடைத்துக்கொண்டிருக்கின்றது. உயர்நீதிமன்றம் ஏற்றுக்கொள்ளக்கூடிய அழகான தீர்ப்பொன்றை அவர்களுக்கு வழங்கியுள்ளது.

  அப்படியா..? கொல்லப்பட்ட உறவுகளுக்கு மீள உயிர் கொடுத்துவிட்டார்களா? அது எப்படி? நஷ்ட ஈடு கொடுக்க வழியில்லை என்று பிச்சை எடுக்கிறார் என்றல்லவா நான் கேள்விப்பட்டேன்! 

  காலங்காலமாய் அழிக்கப்பட்டுக்கொண்டிருக்கும் உறவுகளுக்கு நீதி கிடைக்கவில்லை என பொருமிக்கொண்டிருக்கிறார்கள். ஏதோ கண்துடைப்புக்கு ஒரு தீர்ப்பு வந்தவுடன் பொறாமையோடு கிளம்பிவிட்டார்கள். உங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு நிஞாயம் கேளுங்கள் அதுக்கு உங்களுக்கு உரிமை இருக்கிறது ஆனா இல்லாத ஒன்றை சொல்லி வயிறு எரியாதீர்கள். நீங்கள் உயிர் வாழ முடியவில்லை என்கிறீர்கள், அவர்களோ உயிர் வாழ மறுக்கப்பட்டு பறித்தெறியப்பட்டவர்கள்.

  • Like 1
 17. இப்போவெல்லாம் பிச்சைக்காரர் தங்கள் படுக்கையின் கீழே பிச்சையெடுத்த, கொள்ளையடித்த பணத்தை பதுக்குகின்றனர். கோத்தாவின் படுக்கையறையில் போராட்டக்காரர் எடுத்த பணம் நினைவுக்கு வரலாம் எல்லோருக்கும்.

  • Like 1
 18. எல்லா சிங்களத் தலைவர்களும் தமிழர்களை பிரித்தாள்வதில் வல்லவர்கள் என்றால், நம்மவர் சோரம் போவதில் வல்லவர். இதில் யாரை நல்லவர் என்பது?

 19. 1 hour ago, கிருபன் said:

  அனைவருக்கும் வெவ்வேறு பிரச்சினைகள் உள்ளன. ஆகவே எல்லாவற்றையும் ஒன்றாக ஒரே இடத்தில் பேச முடியாது. ஒன்றுடன் ஒன்று சிக்கி சிக்கலை ஏற்படுத்தும். ஆகவே வெவ்வேறு இனங்களை பிரதிநிதித்துவம் செய்யும் கட்சிகளுடன் வெவ்வேறாக பேச முடிவு செய்துள்ளேன்.

  ஆளுக்கொரு பேச்சு,  இடத்துக்கொரு பேச்சு, நேரத்துக்கொரு பேச்சு, மேடைக்கொரு பேச்சு எதுவும் நிறைவேற்றாது பேசிப்பேசியே காலத்தை கழியுங்கோ, எல்லாம் வெற்று உறுதிதான், போகும் போது அடுத்தமுறை என்னைத் தேர்ந்தெடுங்கள் தீர்க்கிறேன் பிரச்சனையை என்று தொடருங்கள் உங்கள் நீத்துப்போன அரசியலை! உங்களுக்கு சளைக்காமல் ஓத்தூதவும் இருக்கிறார்கள் சபையில். 

  உங்களுக்கு அதிகாரமேயில்லை என்கிறார்கள், நீங்களோ உறுதியளிக்கிறீர்கள்.

 20. 1 hour ago, கிருபன் said:

  யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்த ரணில் விக்கிரமசிங்க கோடிக்கணக்கில் பணத்தினை செலவழித்திருக்கின்றார்

  எதுக்கு? யாருக்கு? பெட்டி ஏதும் கைமாறிச்சோ தேர்தலை முன்னிட்டு?

  1 hour ago, கிருபன் said:

  சுதந்திரம் இல்லாத நாட்டில் எதற்காக கோடிக்கணக்கில் செலவழித்து சுதந்திர தினம் கொண்டாட வேண்டும்

  தங்களுக்கு கீழும் அடிமைகள் இருக்கிறபடியால் அடக்குகிறவர்கள் அடிமைகளின் முதுகில் நின்று கொண்டாடுகிறார்கள். 

 21. என்னத்தை புதுசாய் கதைக்கப்போகினம்? எப்படி தமிழரை நம்ப வைத்து கழுத்தறுப்பது, சீனாவுடன் உள்ள தொடர்பு குறித்து கவலை தெரிவிப்பது, நாங்கள் இருக்கிறோம் என்று உறுதி வழங்குவது, வழிவதை விட வேறென்ன அடிக்கடி சந்தித்து பேச இருக்குது?

 22. On 19/1/2023 at 02:09, ஏராளன் said:

  இவ்வாறான விடயங்களை அரசியல் ரீதியாக பார்க்க வேண்டாம். சுதந்திரம் கிடைத்து 75 வருடங்களை, சாதாரண நிகழ்வுகளுக்கு அப்பாற் சென்று, பிரமாண்டமாக கொண்டாட வேண்டும்" என பந்துல குணவர்தன தெரிவிக்கின்றார்.

  ஆமாம்..... எழுபத்தைந்து ஆண்டுகளாய் நீங்கள்  சுதந்திரத்தை அனுபவித்துக்கொண்டு, இன்னொரு இனத்தை அதுவும் சுதந்திரத்திற்காக உழைத்தவர்களை ஏமாற்றி அடிமையாக்கிய நாளை கட்டாயம் நீங்கள் கொண்டாட வேண்டும். வருகிற வருடமோ அல்லது நூறாவது வருடத்தை நீங்கள் மட்டும் கொண்டாட காலம் விடுமோ தெரியாது ஆகவே கிடைத்த இந்த வருடத்தை நன்றாக கொண்டாடுங்கள்!

×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.