Jump to content

satan

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    8447
  • Joined

  • Last visited

  • Days Won

    1

Posts posted by satan

  1. இதைச்செய்தவர்களும் நிம்மதியாக உறங்குகிறார்கள்தானே! முன்பெல்லாம் எமக்காக குரல் கொடுக்கும் தமிழகம் இப்போ மிகுந்த அமைதி காக்கிறது. எங்களுக்காக நாங்களே போராட வேண்டும் என்பதே வலியுறுத்தப்பட்டுள்ளது.

  2. ஏன்.... இவர்களின் சொந்தக்காணிகளுக்கு என்ன நடந்தது? எதற்காக மாற்றுக்காணிகள் வழங்க வேண்டும்? இதற்கு இவர்கள் சம்மதித்து இருக்க கூடாது. நாங்கள் அவர்களை மீள குடியமர்த்தி விட்டோம் எனும் பிரச்சாரத்தோடு, இவர்களின் சொந்தக்காணிகள் பறிபோகும் ஆபத்துமுள்ளது. எங்களின் உரிமைகளை விட்டுக்கொடுத்து மாற்று நடவடிக்கைக்கு இடம் கொடுத்ததாலேயே நமக்கு இழப்புகள் போராட்டங்கள் பெருகியது.

  3. On 28/8/2023 at 21:28, தமிழ் சிறி said:

    இந்தியாவை நிச்சயமாக உரசிப்பார்ப்பதாகவே இருக்கப்போகின்றது.

    ஹாஹா.....  இந்தியாவை எப்படி உரசினாலும் அதுக்கு ரோசம் வராது. அப்படி ஒன்று அதுக்கு இருந்தாற்தானே வருவதற்கு? நம்பிக்கை துரோகம் என்றால் என்ன, அதன் வலி எவ்வளவு ஆழமானது, அழிவை தரக்கூடியது என இந்தியா உணர ஒரு சந்தர்ப்பம் அளிக்க வேண்டாமா?

    On 28/8/2023 at 21:28, தமிழ் சிறி said:

    கடந்த ஜூன் 10ஆம் திகதி தென்னாபிரிக்காவின் கேப்டவுண் துறைமுகத்துக்குச் சந்தம் சந்ததியின்றிச் சென்றிருந்த ‘ஹாய் ஜங் 24’ என்ற சீனக் கடற்படைக்குச் சொந்தமான கப்பல்

    ??

  4. வெளிநாடுகளில் பக்க சார்பற்ற விசாரணை, நஷ்ட ஈடு, மன்னிப்பு கோரல். இங்குதான் அது இல்லையே, நிஞாயப்படுத்தல் மட்டும்!

    • Like 2
  5. 55 minutes ago, Cruso said:

    அங்கு சிங்களவர்கள் அப்படி பேசினால் பிரச்சினையில்லை. தமிழர்கள் பேசக்கூடாது என்பதுதான் அவர்களது உள் நோக்கம். மற்றப்படி சிங்களவன் எப்படியும் பேசலாம் எப்படியும் மற்றவர்களையும் நிந்திக்கலாம். அதுதான் சிறி லங்கா. 

    தமிழர் பேசினால் அது, பயங்கரவாதம். சிங்களவர் பேசினால் அது, பேச்சுச் சுதந்திரம். ஒரு நாடு, இருவேறு சட்டங்கள். பேசுவது, இது  ஜனநாயகம்!

    • Like 1
  6. 6 hours ago, ஏராளன் said:

    இந்தச் செய்தி நீதி அமைச்சருக்கு தெரியவில்லையோ?!

    உஸ்..... உந்தசெய்தியை சொன்னா, நீதியமைச்சரும் மனநலம் பாதிக்கப்பட்டவர் என அறிக்கை வரும் என்பதால், தணிக்கை! தங்கள் தவறை மற்றவர்மேல் போட்டு தாம் தப்புவதே அவர்களின் பரவணிக்குணம் அதை மாற்ற முடியாதே.     

  7. புதைகுழியில் தோட்டாக்கள்  கண்டுபிடிக்கவில்லை, ஆகவே இராணுவத்தை குற்றம்  சாட்ட முடியாது என்று நழுவிய இராணுவ அதிகாரி ஒருவர், இது  மனித எச்சங்கள்தானா என்பதை தெளிவு படுத்த வேண்டும் என்கிறார் இராணுவ ஊடகப்பேச்சாளர். இப்போ துப்பாக்கி தோட்டாக்கள் வெளிவந்திருக்கின்றன, இது விலங்கின் எச்சமல்ல விடுதலை கேட்டு போராடிய  போராளிகளின் உடல்கள் என நிரூபிக்கப்பட்டிருக்கின்றன. இராணுவத்தின் மனித உரிமை மீறல் என பொறுப்பெடுக்குமா இராணுவம்? இதிலிருந்து விளங்குவது என்ன? நீதிமன்றம், புத்திஜீவிகள், நீர்ப்பாசன திணைக்களம் என்பன சேர்ந்து அகழ்வுப்பணியை மேற்கொள்கின்றன, உறவுகள் இது தங்களது உறவுகளாக இருக்குமோ என அங்கலாய்க்கின்றன, இவர்களது  பேச்சு இவர்களின் பொறுப்பற்ற தன்மையை விளக்குவதோடு கேள்விகளை எழுப்புகின்றன. மனித புதைகுழிக்கும் விலங்குகளுக்கும் வித்தியாசம் தெரியாதவர்களா சம்பந்தப்பட்டவர்கள்? அல்லது அவை விலங்குகளின் புதைகுழிகள் என நிறுவப்பார்க்கிறார்களா இவர்கள்? எப்படி இத்தனை விலங்குகளின் எச்சங்கள் ஒரே புதை குழியில் வந்திருக்கும்? ஏன் அந்தபுதைகுழியில் விலங்குகளின் எச்சங்களை எதிர்பார்க்கிறார்கள் இவர்கள்? கிரிஷாந்தி புதைகுழியில் விலங்குகளின் எச்சங்களை புதைத்து  சாதித்த அனுபவம் அவர்களை இப்படி எதிர்பார்க்கவும் சாதிக்கவும் வைக்கிறது. இவர்களின் வாயே இவர்களை காட்டிக்கொடுக்கவும் மேலும் விசாரணைகளை மேற்கொள்ளவும் செய்கிறது. "மூடர் தம்வாயாலேயே மாட்டுவர்."

    • Sad 1
  8. 10 minutes ago, Kandiah57 said:

    ரணிலும் மோடியை  வீழ்த்த விரும்புகிறார.?? காரணம் என்ன?? 

    ஓ ....!  இந்தியாவில் தனக்கேற்ற ஆட்சியை ஏற்படுத்த முனைகிறாரா? எதற்கும் மோடிக்கு ஒரு எச்சரிக்கை கொடுத்து வைப்போம், ரணில் செய்தாலும் செய்வார். இலங்கையில் நடந்தது இனப்படுகொலை என இந்தியாவிலிருந்து வெளிவந்திருக்கு. இந்தச்செய்தி ஐ. நாவுக்கு போகாமல் தடுத்து நிறுத்த நினைத்து கதை விட்டிருப்பாரோ?

    • Like 1
  9. On 9/9/2023 at 14:18, ஏராளன் said:

    அத்துடன், துப்பாக்கித் தோட்டாக்கள் என சந்தேகிக்கப்படும் உலோக பொருட்களையும் இன்றைய தினம் மீட்டுள்ளனர்.

    சில நாட்களுக்கு முன்பு, ஒரு இராணுவ அதிகாரியிடம் இது பற்றி கேள்வி கேட்கப்பட்டபோது, துப்பாக்கி ரவைகள் ஏதும் கண்டுபிடிக்கப்படவில்லை என்று கூறினார். துப்பாக்கி ரவைகள் இல்லையாயின் அது இராணுவம் செய்யவில்லை என்று அர்த்தமா? அப்படியெனில், இராணுவ கட்டுப்பாட்டில் இருந்த பகுதியில் எப்படி யாரால் இது நிகழ்த்தப்பட்டிருக்கும்? பெரிய குழிதோண்டும் வாகனங்களை பயன்படுத்தி கொலை செய்யப்பட்ட போராளிகள் பொதுமக்களின் உடல்களை இராணுவம் புதைத்ததாகவும், பெரும் நெருப்புச் சுவாலை எழுந்ததாகவும்  இறுதி யுத்தத்தில் வன்னியில் இருந்து வந்த மக்கள் அறிவித்தனர். அப்போ, யாரும் அதை கணக்கிலெடுக்கவில்லை. இது மட்டுமல்ல இன்னும் நிறைய துயரங்கள் மண்ணிலே புதையுண்டு வெளிவர துடித்துக்கொண்டிருக்கின்றன.   

  10. மூஞ்சூறு தான் போக வழியை காணேல்ல, அதில விளக்குமாத்தையும் கொண்டோடிச்சாம்!

    7 hours ago, பிழம்பு said:

    இலங்கை ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்க என்னை துபாய் விமானநிலையத்தில் சந்தித்தார்,என்னை சிறிய உரையாடலிற்கு அழைத்தார்

    அந்த சிறு இடைவெளியையும் வீணாக்காமல் பக்கத்து நாட்டைப்பற்றிய வம்பு. மெல்ல கதையை ஆரம்பித்து கடன் கேட்க நினைத்திருப்பாரோ என்னவோ? மம்தா பானர்ஜி அதை தனக்கு சாதகமாக்கி விட்டார்! எந்த நாடாக இருந்தாலும் அரசியல்வாதிகளின் மூளை, தமது அரசியல் பற்றியே தம்மை சுற்றியே சிந்திக்கும்.                           

  11. அது ஏன் இந்தப்பெண் அவர் நாட்டில் இருக்கும்போது முறையிடவில்லை? அவருக்கு பயந்து இருந்தாரா அல்லது இந்தப்பெண்ணுக்கு பயந்து அவர் அரசியல் தஞ்சம் கோரினர் என்று நிறுவுவதற்காகவா? ஒரு தவறிலிருந்து தப்ப பல தவறுகளை செய்தாலும் சிக்கல் பெருகுமே ஒழிய விலகாது, இன்னும் இவர்களுக்கு எதிரான சான்று பலமாகும். நாட்டின் நீதி பரிபாலன சபையின் நம்பகத்தன்மைமேல் கேள்விகள் எழும். அசாத் மௌலானா சட்டத்துக்கு அச்சுறுத்தலாக இருந்துள்ளார் என்பதை இவர்கள் ஏற்றுக்கொள்ளவேண்டும்.

  12. 5 hours ago, பிழம்பு said:

    இந்த நாட்டில் மக்களாக இருக்க கூடிய ஒன்றரை லட்சம் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டமைக்கும் ஒரு சர்வதேச விசாரணை வேண்டும் என்பதனையும் நீங்கள் வலியுறுத்த வேண்டும்.

    வெகு விரைவில் அது நிறைவேறும்! இவர்களையும் அறியாமல் அதற்க்குள் இழுத்துச்செல்லப்படும், சிங்கள மக்கள் அதை கேட்பார்கள். எங்களுக்காகவல்ல தங்களுக்காக கோரும்போது அது இங்கு நோக்கி நகர்த்தும் ஆதாரத்துக்காக.

  13. அறிக்கை, ஆராய்வு, கலந்துரையாடல், தரவு  தீர்மானம் எடுப்பு,  எஜமானரிடம் கையளிப்பு. செயல் ...... பூச்சியம்.  அவர்கள் ஐ. நாவை ஏமாற்றுவது, இவர் மக்களை ஏமாற்றுவது.

  14. 7 hours ago, ஏராளன் said:

    மாவட்ட மற்றும் பிரதேச செயலகங்கள் உட்பட உள்நாட்டலுவல்கள் அரச அமைச்சின் ஏனைய அனைத்து நிறுவனங்களிலும் பணிபுரியும் அதிகாரிகள்குறித்த முறைப்பாடுகளை 1905 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு முறைப்பாடு செய்ய முடியும் என இராஜாங்க அமைச்சர் அசோக பிரியந்த தெரிவித்துள்ளார்.

     

    7 hours ago, ஏராளன் said:

    இந்த எண்ணுக்கு வரும் புகார்கள் மீது உரிய விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

    போர்க்குற்றம் புரிந்தவர்கள், ஈஸ்ரர் குண்டுத்தாக்குதலுக்கு எதிராக விசாரணை நடத்தினீர்களா? என்ன நடவடிக்கை எடுத்தீர்கள்? அதை சொல்லுங்கள் முதலில்.....! 

  15. 17 hours ago, ஏராளன் said:

    குறித்த பொலிஸ் பரிசோதகர் ஏற்கனவே தங்க நகையை கொள்ளையடித்த குற்றச்சாட்டு மற்றும் இதுபோன்று  7 குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் 7 முறை  பணி இடை நிறுத்தப்பட்டு மீண்டும் சேவையில்  இணைக்கப்பட்டுள்ளார் என பொலிசாரின் ஆரம்பகட்ட விசாரணையில் இருந்து தெரியவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

    இங்கு யார் குற்றவாளி? அந்த திணைக்களமே திருட்டு திணைக்களம் என்பது புலனாகிறது. இவர்கள் சமூகத்தில் சேவையாற்ற தகுதியுள்ளவர்களா?

  16. சம்பிக்க, புலம்பெயர்ஸ் பணத்துக்காகவும் சர்வதேசத்தின் சூழ்ச்சியிலும் நமது  நாட்டையும் படையினரையும் காட்டிக்கொடுக்கும் கேள்விகளை கேட்கிறார். ஆனால் நேற்றுவரை இவையெல்லாம் நடந்தேறும்போது யாரும் தட்டிக்கேட்கவில்லை, கூடவே இருந்து  தட்டிக்கொடுத்து வேடிக்கை பார்த்தார்களே!  அது ஏன் என்று புரியவில்லை?  அப்போ கேட்கத்தோன்றவில்லை. அவர்களுக்கும் என்ன பிரச்சனையோ அன்றைய மௌனத்திற்கும் இன்றைய கேள்விக்கும்? இவர் தமிழரை அணைத்து தேர்தலில் வெல்வதற்கு முயற்சி எடுத்தவர் இன்று கேள்வி கேட்டுவிட்டார், இவர்தான் உண்மையான அரசியல்வாதி, தமிழர் இவரைதான் தெரிந்தெடுக்க வேண்டும்!  

  17. 15 hours ago, Nathamuni said:

    ஓணாண்டியார் வாயை கிண்டிணால் கொட்டுவர்

    பாவம் அவர்! அவரை ஏன் இதுக்கை இழுத்துவிடுறியள்? லைக்காவுக்கு முதலே அவர் தன் பாட்டில் நாட்டுக்கு வந்து விட்டார். 

  18. On 27/8/2023 at 15:33, ஏராளன் said:

    அதேநேரம், உள்நாட்டில் இலங்கை அரசாங்கம் எட்டியுள்ள முன்னேற்றங்கள் தொடர்பில் தெளிவுபடுத்தப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

    நீங்கள் தெளிவு படுத்துங்கள், அதை ஏற்று நாங்கள் உறுதிப்படுத்தி உங்களுக்கு பாராட்டு பெற்றுத்தருவோம். "யாம் இருக்கபயமேன்?"

    5 hours ago, ஏராளன் said:

    இலங்கையின் நல்லிணக்க பொறிமுறைகளை கருத்தில் எடுத்துள்ளதாக ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது.

    இவர் எதைக்குறிப்பிடுகிறார்? பாதிக்கப்பட்ட மக்களின் காணிகளில் அடாவடியாக விகாரைகளை கட்டி விட்டு சண்டைக்கிழுப்பதையும் தெருக்களில் நின்று ஊழையிடுவதையுமா?

    On 27/8/2023 at 15:33, ஏராளன் said:

    , இலங்கையின் சார்பிலான பதிலளிப்புக்களையும் வழங்கவுள்ளார் என்றும் அவர் தெரிவித்தார்.

    இவர் பொய் புழுகு மூட்டைகளை அவிழ்ப்பதற்கு முன் நடைமுறை தரவுகளை காட்டும்படி கேட்கவேண்டும். சும்மா வழமைபோல் ஆள் மாறி ஆள் புழுகுவதும், பிறகு வேறொன்றை செய்வதும் காலத்தை இழுத்தடித்து காரியம் இல்லாமல் செய்யும் வேலை. அவர்கள் சொல்வதை செய்திருந்தால் இன்னும் ஏன் இந்த கூட்டம் தொடர்கிறது? சொல்வதை கேட்டு பாராட்டுவதற்கா? கேள்வி கேட்பதில்லை, வந்து பார்ப்பத்தில்லை என்ன சாதிக்கப்போகிறார்கள்? 

  19. 9 hours ago, ஏராளன் said:

    இந்த காணொளியை நூற்றுக்கு நூறு வீதம் உண்மை என கூறவும் முடியாது. எனினும் சனல் 4 வெளியிட்டுள்ள காணொளி தொடர்பில் சுயாதீனமான, சர்வதேச விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும். 

    இதுவே போர்க்குற்ற விசாரணை என்று கேட்டால், போர்க்கொடி தூக்கியிருப்பார், இப்போ தன்னை சுத்தப்படுத்தவும் நஷ்ட்ட ஈட்டு கொடுப்பனவிலிருந்து தப்பித்துக்கொள்ளவும் ஆமோதிக்கிறார். அவருக்கு நன்றாகவே தெரியும், சிங்களம் ஒருபோதும் சர்வதேச விசாரணையை அனுமதிக்காது என்கிற நம்பிக்கையில் இப்படி சொல்கிறார். 

  20. 13 hours ago, nunavilan said:

    எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாச சர்வதேச விசாரணையைக் கோரியுள்ளார். அதற்கு அரசாங்கமும் தயார் என்று அறிவித்திருக்கின்றது. இந்தச் செயற்பாடு படைவீரர்களை காட்டிக்கொடுக்கும் முயற்சியாகும். 

    எங்கப்பன் குத்திருக்குள்ள இல்லை!!! உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் பற்றி விசாரிக்க, இவர்கள் ஏன் குதிக்க வேண்டும்? ஏன் படையினரை காட்டிக்கொடுக்கும் வேலை என முடிச்சுப்போட வேண்டும்? அப்போ..... இது படையினர் வேலைதானோ? ஆகா .... இன்னும்சொல்லுங்கோ கேட்ப்போம்!

    13 hours ago, nunavilan said:

    அவர்வெளியிடுகின்ற பொய்களை சனல்-4 நிறுவனம் ஆராயாது வெளியிட்டுக் கொண்டிருக்கின்றது.

    உங்களுடன் இணைந்து பணியாற்றும்போது, உங்கள் படையினர். காட்டிக்கொடுத்தவுடன் அவர் முஸ்லிம், தமிழர் என்று மாற்றியமைப்பது. இதை முஸ்லிம்களும், ஏவல் புரியும் தமிழரும் உணர்ந்து கொள்ள வேண்டும். இவரது வார்த்தையே இவருக்கு எதிராக திரும்பப்போகிறது. அவர் இராணுவத்தில் பணியாற்றியிருக்கிறார், அதை எல்லோரும் ஏற்றுக்கொள்கிறார்கள். அவர் கூற்று பிழையானது என்றால் அவர் ஆற்றிய பணி பிழையானது, இராணுவத்தினர் செய்தது தவறு என நீங்களே ஒத்துக்கொள்கிறீர்கள். அது இருக்க .... இன்னும் பல சிங்கள புலனாய்வாளர்களும் சாட்சியமளித்துள்ளனரே. இதுக்கே இப்பிடியென்றால், இன்னும்  பல திடுக்கிடும் சாட்சியங்கள் வர இருக்கின்றன, இப்பவே மறுப்புரைகளை தயாரியுங்கள்.  சணல் நான்கிற்கு உங்கள் இராணுவம் பொய் சொல்லுகிறதா நீங்கள் பொய் சொல்லுகிறீர்களா என்பது தெரியாது, எல்லாவற்றையும் மறுக்கிறீர்கள், ஆனால் விசாரணை செய்கிறோம் என்கிறீர்கள், முடிவை மறைக்கிறீர்கள். ஆகவே அவர் சொல்வது பொய்தான் என நிரூபிக்க சர்வதேசத்துக்கு ஒரு சந்தர்ப்பம் கொடுத்து உங்களை நிஞாயப்படுத்த ஏன் தயங்கவேண்டும்? கோபப்படவேண்டும்? அவர்களை குற்றம் சொல்ல வேண்டும்? சில நாட்களுக்கு முன் வெளிநாட்டில் குண்டு வெடித்தபோது நீங்கள் அறிக்கை விட்டீர்களே, அப்போ உங்களை யாரும் குறை சொல்லவில்லையே. 

    • Like 2
  21. கிணறு வெட்ட வெளிக்கிட்டு, இப்போ அதிலிருந்து பூதம் கிளம்பி வெட்டிய எல்லோரையும் விழுங்கப்போகுதென்று ஊளையிடுகிறார் இவர் . சர்வதேச விசாரணையை சொன்னேன்! 

  22. ரணிலின் அரசியலை குழப்பும் ராஜகபக்ஸாக்களை தூர வைப்பதற்காக, தான், பிரதம மந்திரியாக இருக்கும்போது அவர்கள் மீது ஊழல் மோசடி விசாரணைகளை ஆரம்பித்தார். ஆனால் மக்களின் எதிர்ப்பால் அதை கொண்டுசெல்ல முடியவில்லை, அது தனது அரசியலுக்கு சவாலாகிவிடுமென பயந்தார். காவற்துறையோ இராணுவமோ ஒத்துழைக்கவுமில்லை. அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி, தமது ஊழல்கள் வெளிவருமுன் அப்பாவிகளை பலியெடுத்து அரசியல் கதிரைகளை காத்துக்கொண்டனர். அப்போதே சர்வதேசம் விசாரணை செய்ய முன்வந்தது, அதை கோத்தா தடுத்தார், ரணில் அதை எதிர்த்து அவர்களை அழைக்காதது ஏன்? அதே பாணியில், மீண்டும் அரசியலை பிடித்து விட இன, மத முறுகல் ஏற்படுத்தப்பட்டது. அதை தடுக்கவோ, ஊக்கப்படுத்தவோ ரணிலால் முடியவில்லை. ஆனால் இதை வளரவிட்டால் தான் தோற்பதும் உண்மை என்பதையும் தெரிந்து வைத்துக்கொண்டார். சணல் முதலாம் பாகத்தை இலங்கையில் தடை செய்தவர்கள் இதை எவ்வாறு அனுமதித்தனர் என்கிற கேள்வி எழுகிறது. ஆகவே ரணில் இதை இலங்கையில் அனுமதித்து ராஜபக்சாக்களை தூரத்தில் வைக்க நினைத்திருக்கலாம். ஆனால் சர்வதேச விசாரணையை அனுமதிப்பாரா என்பது கேள்விக்குறியே. ஏனெனில் ராஜபக்க்ஷாக்களை சர்வதேசத்தின் மின்சாரக்கதிரையில் இருந்து காப்பாற்றியது தாமே என்று அவரே பகிரங்கமாக கடந்த காலத்தில் கூறியிருக்கிறார். அப்படி அவர்கள் உள்நுழைந்தால் அது தானாகவே போர்க்குற்ற விசாணைக்குள் இழுத்துச்செல்லும், அப்படி சென்றால் இராணுவத்தினர் மாட்டுப்படுவர், அவர்களுக்கு கட்டளை பிறப்பித்தவர்கள் மாட்டுப்படுவர் தொடர்ந்து ஆட்சியாளர்கள் மாட்டுவர். இது ஒரு சங்கிலியாக தொடரும். அதை இலங்கையில் உள்ள யாரும் விரும்ப மாட்டார்கள் ஆகவே இது ரணில் கொடுக்கும் ஒரு எச்சரிக்கை வைத்தியமாகவே நோக்க வேண்டியுள்ளது. அதே நேரம் இராணுவம், இனி ராஜபக்ஸாக்களுக்கு கட்டுப்படுவார்களோ என்பதும் கேள்விக்குறியே. எல்லா திணைக்களங்களுக்குள்ளும் இராணுவத்தை புகுத்தி தன் இருப்பை உறுதிப்படுத்திய கோத்தாவை பாதுகாக்காது கைகளை கட்டி, அவர் தப்பியோடுவதை வேடிக்கை பார்த்த இராணுவம் ஒத்துழைப்பார்களா என்பதும் கேள்விக்குறியே. அவர்கள் முன்னெடுத்த மத கலவரமும் பிசுபிசுத்துப்போனது மக்கள் ஆதரவின்றி. இனவாதத்தை கக்கியவர்களும் வீதிக்கு இறங்க பயந்து பதுங்கிக்கொண்டனர். சந்திரகாந்தன் தான் ஏதாவது செய்து அவர்களை காக்கவேண்டும், இல்லையேல் மாட்ட வேண்டும், அரசியல் கதிரை ஆசையை துறக்க வேண்டும். என்ன நடக்கிறது என்பதை தொடர்ந்து அவதானிப்போம்! 

  23.  அசாத் மௌலானா பாதுகாப்பான இடத்தில இருந்து வாக்குமூலம் அளிக்கிறார், இருந்தாலும் அவரது பேச்சில் ஏன் இந்தளவு பதட்டம், அவசரம்? அவரது உடல்மொழி அவர் எதையோ மறைப்பதுபோல் தெரிகிறதே. சந்தரகாந்தனின் மொழிபெயர்ப்பாளர் ஆன இவர் தனது காரியங்களை நிறைவேற்ற சந்திரகாந்தனையும் இவரை சந்திரகாந்தனும் இவர்களை சிங்களமும் பயன்படுத்தியிருக்கின்றனர். ஐ.எஸ்.ஐ. எஸ்.அமைப்பை இந்தமௌலானாவே சந்திரகாந்தனோடு சேர்ந்து கையாண்டிருக்கலாம். சந்திரகாந்தன் மூளையாகவும் மௌலானா செயற்பாட்டாளராகவும் இந்த குண்டுத்தாக்குதலை நடத்தியிருக்க வாய்ப்புண்டு. பெரும்பாலும் அரசியலில் முறையற்ற வகையில் பணம் சேகரிப்போர் பாதுகாப்பிற்காக தமது தூரத்து உறவுகள், நண்பர்கள், உத்தியோக உதவியாளர்கள், கார்சாரதிகள் போன்றோரின் வங்கி வைப்புகளில் வைப்பதுண்டு. இவ்வாறு வைப்பிலிட்டவர்கள் அகால மரணமெய்தினால், சம்பந்தப்பட்டவரின் உறவுகள் அந்த  பணத்தை மீளப்பெற கேட்கும்போது, சம்பந்தப்பட்டவர் உயிரோடு இருக்கும்போது பணத்தை பெற்றுவிட்டார் என்று கூறி வைப்புச்செய்த பணத்தை தாம்  சுருட்டுவதும். இல்லை, சம்பந்தப்பட்டவரே கேட்கும்போது அப்படி ஏதும் பணம் அவர் பெறவில்லை என கையை விரிப்பதும், அதற்கு எதிராக முறைப்பாடு செய்யவோ சட்ட நடவடிக்கையோ எடுக்க முடியாதாகையால் தனது அரசியல் செல்வாக்கைபயன்படுத்தி பழிவாங்குவதும் அல்லது இவர் அவரை மாட்டி விடுவதுமுண்டு. அந்த கோணத்தில் தான் செய்த தவறுகளையும் சந்திரகாந்தன்மேல் போட்டு தான் தப்பும் செயலாகவும் இருக்கலாம். ஆனால் இந்த மௌலானா, சுரேஷ் அலி போன்றோர் தமது இனத்தை, மதத்தை சேர்ந்தவர்களை பலிகொடுத்து, அப்பாவிகளை பலி எடுத்தது தமது தமது பதவிகளை தக்க வைப்பதற்காக, மனித குலத்துக்கே எதிரானது. அதுமட்டுமல்ல அந்த இனத்தின் பொருளாதாரம் நொறுக்கப்பட்டது, குண்டுதாரிகளின் மனைவிமார் குழந்தைகளும் பலி எடுக்கப்பட்டனர். இவர்கள் தங்கள் மதத்தையோ இனத்தையோ மதிக்கவுமில்லை பாதுக்காகவுமில்லை அவர்களைப்பற்றி சிந்திக்கவுமில்லை. இனம் இனத்தோடு சேரும் என்பது இவர்களால் நிரூபிக்கப்பட்டுள்ளது. இங்கு, அப்பாவிகளை கொன்று சுகம் அனுபவித்து, அதை சாட்சியாக உபயோகித்து தஞ்சம் பெற்று சுகமாக வாழ்வதும் ஏற்றுக்கொள்ள முடியாது. அவர் பெயரில் இருக்கும் பணத்தை தடுப்பு செய்து (முடக்கி) ஏழைமக்களுக்கு, குண்டுவெடிப்பில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்க வேண்டும். 

  24. சந்திரகாந்தன் ஒளித்து வைத்துள்ள ஆயுதங்கள், இடங்கள் போன்ற விபரங்களை இன்னொரு சகா வெளியிட்டிருக்கிறாராமே? தொடர்ந்து வரும்போலிருக்கிறதே இவரின் வண்டவாளம். ஒன்று சந்திரகாந்தன் ஒப்புதல் சாட்சியாக மாறி வாக்குமூலம் அளிக்க வேண்டும் தைரியமிருந்தால், இல்லையென்றால் சுரேஷ் அலியோ மற்றவர்களோ சந்திர காந்தன் தலையில் கட்டி தாம் தப்பி விட வாய்ப்புண்டு. யாரிடம் வாக்குமூலம் அளிப்பது? தப்பியோடுவதை தவிர வேறுவழியில்லை. ஆனால் இவர் இப்போ கண்காணிப்பு வலயத்தில் இருப்பார். இவரே நினைத்தாலும் முடியாது. ஒன்று, சூடுபட்டு சாகவேண்டும், தற்கொலை செய்யவேண்டும், குற்றத்தை ஒப்புக்கொள்ளவேண்டும். தற்கொலை செய்வதற்கு தைரியமிருந்திருந்தால்; காட்டிக்கொடுக்க வேண்டிய தேவை வந்திருக்காதே இவருக்கு. எஜமானருக்காக கொலைகள் செய்திருக்க வாய்ப்புமில்லை. எதற்கு பயந்து அடிமை வேலை செய்தாரோ அதுவே நிகழப்போகுது. எத்தனையோ உயிர்களை அலாக்காக பறித்தவர், தனது உயிருக்காக மன்றாடப்போகிறார். இவரைப்போன்றோர் தமது நேரத்துக்கு தங்களை தயார்ப்படுத்திக்கொள்ளட்டும். தமிழரை படுகொலை செய்து அழித்த இராணுவம், ஏன் இவர் போன்றோரை பயன்படுத்தவேண்டும் என்கிற கேள்விக்கு இவர்களின் மரணத்தின் பின்னால், அல்லது தண்டனையின் பின்னால் பதில் தெரிய வரும்.    

  25. 28 minutes ago, கிருபன் said:

    அப்படியான வாடகை பராமரிப்பார்களின் முகவர் நிறுவனங்களின் விபரங்களை தாதிகளே உங்களுக்கு தருவார்கள்

    அவர்களுக்கென்றொரு யூனியனும் இருக்குது பாருங்கோ! அவையள் யாருமில்லாத நோயாளிகளின் உடைமை, உணவுகளை கையாடல் செய்வதுமுண்டு.

     

    32 minutes ago, கிருபன் said:

    மருத்துவர்களும் தாதிகளும் இப்போ மாபியாக்களைப்போலத்தான் தமிழ்ப்பகுதிகளில் இருக்கிறார்கள்.

    நோயாளிகளால் கடவுளாக கையடுத்து கும்பிடப்பட வேண்டியவர்கள், அவர்களின் இயலாமையை தங்களின் வாய்ப்பாக பயன்படுத்துகின்றனர். மகப்பேற்று தாதியர் மிகவும் கீழ்த்தரமான வார்த்தைகளை பிரயோகிப்பதும், சில குழந்தைகளின் இறப்பிற்கும் காரணமாய் இருந்ததோடு, தம் குழந்தைகளை இழந்த தாய்மாருக்கு அனுதாபம் கூட தெரிவிக்காமல் தங்கள் சேவை நேரத்தில் வம்பளப்பதில் செலவிட்டதையும் கண்டிருக்கிறேன். பணம் ஒன்றே கடவுள். அது இல்லாதவனெல்லாம் பிணம் என்று நினைக்கிறார்கள், நடத்துகிறார்கள். 

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.