Jump to content

satan

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    8493
  • Joined

  • Last visited

  • Days Won

    1

Posts posted by satan

  1. On 9/9/2023 at 14:18, ஏராளன் said:

    அத்துடன், துப்பாக்கித் தோட்டாக்கள் என சந்தேகிக்கப்படும் உலோக பொருட்களையும் இன்றைய தினம் மீட்டுள்ளனர்.

    சில நாட்களுக்கு முன்பு, ஒரு இராணுவ அதிகாரியிடம் இது பற்றி கேள்வி கேட்கப்பட்டபோது, துப்பாக்கி ரவைகள் ஏதும் கண்டுபிடிக்கப்படவில்லை என்று கூறினார். துப்பாக்கி ரவைகள் இல்லையாயின் அது இராணுவம் செய்யவில்லை என்று அர்த்தமா? அப்படியெனில், இராணுவ கட்டுப்பாட்டில் இருந்த பகுதியில் எப்படி யாரால் இது நிகழ்த்தப்பட்டிருக்கும்? பெரிய குழிதோண்டும் வாகனங்களை பயன்படுத்தி கொலை செய்யப்பட்ட போராளிகள் பொதுமக்களின் உடல்களை இராணுவம் புதைத்ததாகவும், பெரும் நெருப்புச் சுவாலை எழுந்ததாகவும்  இறுதி யுத்தத்தில் வன்னியில் இருந்து வந்த மக்கள் அறிவித்தனர். அப்போ, யாரும் அதை கணக்கிலெடுக்கவில்லை. இது மட்டுமல்ல இன்னும் நிறைய துயரங்கள் மண்ணிலே புதையுண்டு வெளிவர துடித்துக்கொண்டிருக்கின்றன.   

  2. மூஞ்சூறு தான் போக வழியை காணேல்ல, அதில விளக்குமாத்தையும் கொண்டோடிச்சாம்!

    7 hours ago, பிழம்பு said:

    இலங்கை ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்க என்னை துபாய் விமானநிலையத்தில் சந்தித்தார்,என்னை சிறிய உரையாடலிற்கு அழைத்தார்

    அந்த சிறு இடைவெளியையும் வீணாக்காமல் பக்கத்து நாட்டைப்பற்றிய வம்பு. மெல்ல கதையை ஆரம்பித்து கடன் கேட்க நினைத்திருப்பாரோ என்னவோ? மம்தா பானர்ஜி அதை தனக்கு சாதகமாக்கி விட்டார்! எந்த நாடாக இருந்தாலும் அரசியல்வாதிகளின் மூளை, தமது அரசியல் பற்றியே தம்மை சுற்றியே சிந்திக்கும்.                           

  3. அது ஏன் இந்தப்பெண் அவர் நாட்டில் இருக்கும்போது முறையிடவில்லை? அவருக்கு பயந்து இருந்தாரா அல்லது இந்தப்பெண்ணுக்கு பயந்து அவர் அரசியல் தஞ்சம் கோரினர் என்று நிறுவுவதற்காகவா? ஒரு தவறிலிருந்து தப்ப பல தவறுகளை செய்தாலும் சிக்கல் பெருகுமே ஒழிய விலகாது, இன்னும் இவர்களுக்கு எதிரான சான்று பலமாகும். நாட்டின் நீதி பரிபாலன சபையின் நம்பகத்தன்மைமேல் கேள்விகள் எழும். அசாத் மௌலானா சட்டத்துக்கு அச்சுறுத்தலாக இருந்துள்ளார் என்பதை இவர்கள் ஏற்றுக்கொள்ளவேண்டும்.

  4. 5 hours ago, பிழம்பு said:

    இந்த நாட்டில் மக்களாக இருக்க கூடிய ஒன்றரை லட்சம் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டமைக்கும் ஒரு சர்வதேச விசாரணை வேண்டும் என்பதனையும் நீங்கள் வலியுறுத்த வேண்டும்.

    வெகு விரைவில் அது நிறைவேறும்! இவர்களையும் அறியாமல் அதற்க்குள் இழுத்துச்செல்லப்படும், சிங்கள மக்கள் அதை கேட்பார்கள். எங்களுக்காகவல்ல தங்களுக்காக கோரும்போது அது இங்கு நோக்கி நகர்த்தும் ஆதாரத்துக்காக.

  5. அறிக்கை, ஆராய்வு, கலந்துரையாடல், தரவு  தீர்மானம் எடுப்பு,  எஜமானரிடம் கையளிப்பு. செயல் ...... பூச்சியம்.  அவர்கள் ஐ. நாவை ஏமாற்றுவது, இவர் மக்களை ஏமாற்றுவது.

  6. 7 hours ago, ஏராளன் said:

    மாவட்ட மற்றும் பிரதேச செயலகங்கள் உட்பட உள்நாட்டலுவல்கள் அரச அமைச்சின் ஏனைய அனைத்து நிறுவனங்களிலும் பணிபுரியும் அதிகாரிகள்குறித்த முறைப்பாடுகளை 1905 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு முறைப்பாடு செய்ய முடியும் என இராஜாங்க அமைச்சர் அசோக பிரியந்த தெரிவித்துள்ளார்.

     

    7 hours ago, ஏராளன் said:

    இந்த எண்ணுக்கு வரும் புகார்கள் மீது உரிய விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

    போர்க்குற்றம் புரிந்தவர்கள், ஈஸ்ரர் குண்டுத்தாக்குதலுக்கு எதிராக விசாரணை நடத்தினீர்களா? என்ன நடவடிக்கை எடுத்தீர்கள்? அதை சொல்லுங்கள் முதலில்.....! 

  7. 17 hours ago, ஏராளன் said:

    குறித்த பொலிஸ் பரிசோதகர் ஏற்கனவே தங்க நகையை கொள்ளையடித்த குற்றச்சாட்டு மற்றும் இதுபோன்று  7 குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் 7 முறை  பணி இடை நிறுத்தப்பட்டு மீண்டும் சேவையில்  இணைக்கப்பட்டுள்ளார் என பொலிசாரின் ஆரம்பகட்ட விசாரணையில் இருந்து தெரியவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

    இங்கு யார் குற்றவாளி? அந்த திணைக்களமே திருட்டு திணைக்களம் என்பது புலனாகிறது. இவர்கள் சமூகத்தில் சேவையாற்ற தகுதியுள்ளவர்களா?

  8. சம்பிக்க, புலம்பெயர்ஸ் பணத்துக்காகவும் சர்வதேசத்தின் சூழ்ச்சியிலும் நமது  நாட்டையும் படையினரையும் காட்டிக்கொடுக்கும் கேள்விகளை கேட்கிறார். ஆனால் நேற்றுவரை இவையெல்லாம் நடந்தேறும்போது யாரும் தட்டிக்கேட்கவில்லை, கூடவே இருந்து  தட்டிக்கொடுத்து வேடிக்கை பார்த்தார்களே!  அது ஏன் என்று புரியவில்லை?  அப்போ கேட்கத்தோன்றவில்லை. அவர்களுக்கும் என்ன பிரச்சனையோ அன்றைய மௌனத்திற்கும் இன்றைய கேள்விக்கும்? இவர் தமிழரை அணைத்து தேர்தலில் வெல்வதற்கு முயற்சி எடுத்தவர் இன்று கேள்வி கேட்டுவிட்டார், இவர்தான் உண்மையான அரசியல்வாதி, தமிழர் இவரைதான் தெரிந்தெடுக்க வேண்டும்!  

  9. 15 hours ago, Nathamuni said:

    ஓணாண்டியார் வாயை கிண்டிணால் கொட்டுவர்

    பாவம் அவர்! அவரை ஏன் இதுக்கை இழுத்துவிடுறியள்? லைக்காவுக்கு முதலே அவர் தன் பாட்டில் நாட்டுக்கு வந்து விட்டார். 

  10. On 27/8/2023 at 15:33, ஏராளன் said:

    அதேநேரம், உள்நாட்டில் இலங்கை அரசாங்கம் எட்டியுள்ள முன்னேற்றங்கள் தொடர்பில் தெளிவுபடுத்தப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

    நீங்கள் தெளிவு படுத்துங்கள், அதை ஏற்று நாங்கள் உறுதிப்படுத்தி உங்களுக்கு பாராட்டு பெற்றுத்தருவோம். "யாம் இருக்கபயமேன்?"

    5 hours ago, ஏராளன் said:

    இலங்கையின் நல்லிணக்க பொறிமுறைகளை கருத்தில் எடுத்துள்ளதாக ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது.

    இவர் எதைக்குறிப்பிடுகிறார்? பாதிக்கப்பட்ட மக்களின் காணிகளில் அடாவடியாக விகாரைகளை கட்டி விட்டு சண்டைக்கிழுப்பதையும் தெருக்களில் நின்று ஊழையிடுவதையுமா?

    On 27/8/2023 at 15:33, ஏராளன் said:

    , இலங்கையின் சார்பிலான பதிலளிப்புக்களையும் வழங்கவுள்ளார் என்றும் அவர் தெரிவித்தார்.

    இவர் பொய் புழுகு மூட்டைகளை அவிழ்ப்பதற்கு முன் நடைமுறை தரவுகளை காட்டும்படி கேட்கவேண்டும். சும்மா வழமைபோல் ஆள் மாறி ஆள் புழுகுவதும், பிறகு வேறொன்றை செய்வதும் காலத்தை இழுத்தடித்து காரியம் இல்லாமல் செய்யும் வேலை. அவர்கள் சொல்வதை செய்திருந்தால் இன்னும் ஏன் இந்த கூட்டம் தொடர்கிறது? சொல்வதை கேட்டு பாராட்டுவதற்கா? கேள்வி கேட்பதில்லை, வந்து பார்ப்பத்தில்லை என்ன சாதிக்கப்போகிறார்கள்? 

  11. 9 hours ago, ஏராளன் said:

    இந்த காணொளியை நூற்றுக்கு நூறு வீதம் உண்மை என கூறவும் முடியாது. எனினும் சனல் 4 வெளியிட்டுள்ள காணொளி தொடர்பில் சுயாதீனமான, சர்வதேச விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும். 

    இதுவே போர்க்குற்ற விசாரணை என்று கேட்டால், போர்க்கொடி தூக்கியிருப்பார், இப்போ தன்னை சுத்தப்படுத்தவும் நஷ்ட்ட ஈட்டு கொடுப்பனவிலிருந்து தப்பித்துக்கொள்ளவும் ஆமோதிக்கிறார். அவருக்கு நன்றாகவே தெரியும், சிங்களம் ஒருபோதும் சர்வதேச விசாரணையை அனுமதிக்காது என்கிற நம்பிக்கையில் இப்படி சொல்கிறார். 

  12. 13 hours ago, nunavilan said:

    எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாச சர்வதேச விசாரணையைக் கோரியுள்ளார். அதற்கு அரசாங்கமும் தயார் என்று அறிவித்திருக்கின்றது. இந்தச் செயற்பாடு படைவீரர்களை காட்டிக்கொடுக்கும் முயற்சியாகும். 

    எங்கப்பன் குத்திருக்குள்ள இல்லை!!! உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் பற்றி விசாரிக்க, இவர்கள் ஏன் குதிக்க வேண்டும்? ஏன் படையினரை காட்டிக்கொடுக்கும் வேலை என முடிச்சுப்போட வேண்டும்? அப்போ..... இது படையினர் வேலைதானோ? ஆகா .... இன்னும்சொல்லுங்கோ கேட்ப்போம்!

    13 hours ago, nunavilan said:

    அவர்வெளியிடுகின்ற பொய்களை சனல்-4 நிறுவனம் ஆராயாது வெளியிட்டுக் கொண்டிருக்கின்றது.

    உங்களுடன் இணைந்து பணியாற்றும்போது, உங்கள் படையினர். காட்டிக்கொடுத்தவுடன் அவர் முஸ்லிம், தமிழர் என்று மாற்றியமைப்பது. இதை முஸ்லிம்களும், ஏவல் புரியும் தமிழரும் உணர்ந்து கொள்ள வேண்டும். இவரது வார்த்தையே இவருக்கு எதிராக திரும்பப்போகிறது. அவர் இராணுவத்தில் பணியாற்றியிருக்கிறார், அதை எல்லோரும் ஏற்றுக்கொள்கிறார்கள். அவர் கூற்று பிழையானது என்றால் அவர் ஆற்றிய பணி பிழையானது, இராணுவத்தினர் செய்தது தவறு என நீங்களே ஒத்துக்கொள்கிறீர்கள். அது இருக்க .... இன்னும் பல சிங்கள புலனாய்வாளர்களும் சாட்சியமளித்துள்ளனரே. இதுக்கே இப்பிடியென்றால், இன்னும்  பல திடுக்கிடும் சாட்சியங்கள் வர இருக்கின்றன, இப்பவே மறுப்புரைகளை தயாரியுங்கள்.  சணல் நான்கிற்கு உங்கள் இராணுவம் பொய் சொல்லுகிறதா நீங்கள் பொய் சொல்லுகிறீர்களா என்பது தெரியாது, எல்லாவற்றையும் மறுக்கிறீர்கள், ஆனால் விசாரணை செய்கிறோம் என்கிறீர்கள், முடிவை மறைக்கிறீர்கள். ஆகவே அவர் சொல்வது பொய்தான் என நிரூபிக்க சர்வதேசத்துக்கு ஒரு சந்தர்ப்பம் கொடுத்து உங்களை நிஞாயப்படுத்த ஏன் தயங்கவேண்டும்? கோபப்படவேண்டும்? அவர்களை குற்றம் சொல்ல வேண்டும்? சில நாட்களுக்கு முன் வெளிநாட்டில் குண்டு வெடித்தபோது நீங்கள் அறிக்கை விட்டீர்களே, அப்போ உங்களை யாரும் குறை சொல்லவில்லையே. 

    • Like 2
  13. கிணறு வெட்ட வெளிக்கிட்டு, இப்போ அதிலிருந்து பூதம் கிளம்பி வெட்டிய எல்லோரையும் விழுங்கப்போகுதென்று ஊளையிடுகிறார் இவர் . சர்வதேச விசாரணையை சொன்னேன்! 

  14. ரணிலின் அரசியலை குழப்பும் ராஜகபக்ஸாக்களை தூர வைப்பதற்காக, தான், பிரதம மந்திரியாக இருக்கும்போது அவர்கள் மீது ஊழல் மோசடி விசாரணைகளை ஆரம்பித்தார். ஆனால் மக்களின் எதிர்ப்பால் அதை கொண்டுசெல்ல முடியவில்லை, அது தனது அரசியலுக்கு சவாலாகிவிடுமென பயந்தார். காவற்துறையோ இராணுவமோ ஒத்துழைக்கவுமில்லை. அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி, தமது ஊழல்கள் வெளிவருமுன் அப்பாவிகளை பலியெடுத்து அரசியல் கதிரைகளை காத்துக்கொண்டனர். அப்போதே சர்வதேசம் விசாரணை செய்ய முன்வந்தது, அதை கோத்தா தடுத்தார், ரணில் அதை எதிர்த்து அவர்களை அழைக்காதது ஏன்? அதே பாணியில், மீண்டும் அரசியலை பிடித்து விட இன, மத முறுகல் ஏற்படுத்தப்பட்டது. அதை தடுக்கவோ, ஊக்கப்படுத்தவோ ரணிலால் முடியவில்லை. ஆனால் இதை வளரவிட்டால் தான் தோற்பதும் உண்மை என்பதையும் தெரிந்து வைத்துக்கொண்டார். சணல் முதலாம் பாகத்தை இலங்கையில் தடை செய்தவர்கள் இதை எவ்வாறு அனுமதித்தனர் என்கிற கேள்வி எழுகிறது. ஆகவே ரணில் இதை இலங்கையில் அனுமதித்து ராஜபக்சாக்களை தூரத்தில் வைக்க நினைத்திருக்கலாம். ஆனால் சர்வதேச விசாரணையை அனுமதிப்பாரா என்பது கேள்விக்குறியே. ஏனெனில் ராஜபக்க்ஷாக்களை சர்வதேசத்தின் மின்சாரக்கதிரையில் இருந்து காப்பாற்றியது தாமே என்று அவரே பகிரங்கமாக கடந்த காலத்தில் கூறியிருக்கிறார். அப்படி அவர்கள் உள்நுழைந்தால் அது தானாகவே போர்க்குற்ற விசாணைக்குள் இழுத்துச்செல்லும், அப்படி சென்றால் இராணுவத்தினர் மாட்டுப்படுவர், அவர்களுக்கு கட்டளை பிறப்பித்தவர்கள் மாட்டுப்படுவர் தொடர்ந்து ஆட்சியாளர்கள் மாட்டுவர். இது ஒரு சங்கிலியாக தொடரும். அதை இலங்கையில் உள்ள யாரும் விரும்ப மாட்டார்கள் ஆகவே இது ரணில் கொடுக்கும் ஒரு எச்சரிக்கை வைத்தியமாகவே நோக்க வேண்டியுள்ளது. அதே நேரம் இராணுவம், இனி ராஜபக்ஸாக்களுக்கு கட்டுப்படுவார்களோ என்பதும் கேள்விக்குறியே. எல்லா திணைக்களங்களுக்குள்ளும் இராணுவத்தை புகுத்தி தன் இருப்பை உறுதிப்படுத்திய கோத்தாவை பாதுகாக்காது கைகளை கட்டி, அவர் தப்பியோடுவதை வேடிக்கை பார்த்த இராணுவம் ஒத்துழைப்பார்களா என்பதும் கேள்விக்குறியே. அவர்கள் முன்னெடுத்த மத கலவரமும் பிசுபிசுத்துப்போனது மக்கள் ஆதரவின்றி. இனவாதத்தை கக்கியவர்களும் வீதிக்கு இறங்க பயந்து பதுங்கிக்கொண்டனர். சந்திரகாந்தன் தான் ஏதாவது செய்து அவர்களை காக்கவேண்டும், இல்லையேல் மாட்ட வேண்டும், அரசியல் கதிரை ஆசையை துறக்க வேண்டும். என்ன நடக்கிறது என்பதை தொடர்ந்து அவதானிப்போம்! 

  15.  அசாத் மௌலானா பாதுகாப்பான இடத்தில இருந்து வாக்குமூலம் அளிக்கிறார், இருந்தாலும் அவரது பேச்சில் ஏன் இந்தளவு பதட்டம், அவசரம்? அவரது உடல்மொழி அவர் எதையோ மறைப்பதுபோல் தெரிகிறதே. சந்தரகாந்தனின் மொழிபெயர்ப்பாளர் ஆன இவர் தனது காரியங்களை நிறைவேற்ற சந்திரகாந்தனையும் இவரை சந்திரகாந்தனும் இவர்களை சிங்களமும் பயன்படுத்தியிருக்கின்றனர். ஐ.எஸ்.ஐ. எஸ்.அமைப்பை இந்தமௌலானாவே சந்திரகாந்தனோடு சேர்ந்து கையாண்டிருக்கலாம். சந்திரகாந்தன் மூளையாகவும் மௌலானா செயற்பாட்டாளராகவும் இந்த குண்டுத்தாக்குதலை நடத்தியிருக்க வாய்ப்புண்டு. பெரும்பாலும் அரசியலில் முறையற்ற வகையில் பணம் சேகரிப்போர் பாதுகாப்பிற்காக தமது தூரத்து உறவுகள், நண்பர்கள், உத்தியோக உதவியாளர்கள், கார்சாரதிகள் போன்றோரின் வங்கி வைப்புகளில் வைப்பதுண்டு. இவ்வாறு வைப்பிலிட்டவர்கள் அகால மரணமெய்தினால், சம்பந்தப்பட்டவரின் உறவுகள் அந்த  பணத்தை மீளப்பெற கேட்கும்போது, சம்பந்தப்பட்டவர் உயிரோடு இருக்கும்போது பணத்தை பெற்றுவிட்டார் என்று கூறி வைப்புச்செய்த பணத்தை தாம்  சுருட்டுவதும். இல்லை, சம்பந்தப்பட்டவரே கேட்கும்போது அப்படி ஏதும் பணம் அவர் பெறவில்லை என கையை விரிப்பதும், அதற்கு எதிராக முறைப்பாடு செய்யவோ சட்ட நடவடிக்கையோ எடுக்க முடியாதாகையால் தனது அரசியல் செல்வாக்கைபயன்படுத்தி பழிவாங்குவதும் அல்லது இவர் அவரை மாட்டி விடுவதுமுண்டு. அந்த கோணத்தில் தான் செய்த தவறுகளையும் சந்திரகாந்தன்மேல் போட்டு தான் தப்பும் செயலாகவும் இருக்கலாம். ஆனால் இந்த மௌலானா, சுரேஷ் அலி போன்றோர் தமது இனத்தை, மதத்தை சேர்ந்தவர்களை பலிகொடுத்து, அப்பாவிகளை பலி எடுத்தது தமது தமது பதவிகளை தக்க வைப்பதற்காக, மனித குலத்துக்கே எதிரானது. அதுமட்டுமல்ல அந்த இனத்தின் பொருளாதாரம் நொறுக்கப்பட்டது, குண்டுதாரிகளின் மனைவிமார் குழந்தைகளும் பலி எடுக்கப்பட்டனர். இவர்கள் தங்கள் மதத்தையோ இனத்தையோ மதிக்கவுமில்லை பாதுக்காகவுமில்லை அவர்களைப்பற்றி சிந்திக்கவுமில்லை. இனம் இனத்தோடு சேரும் என்பது இவர்களால் நிரூபிக்கப்பட்டுள்ளது. இங்கு, அப்பாவிகளை கொன்று சுகம் அனுபவித்து, அதை சாட்சியாக உபயோகித்து தஞ்சம் பெற்று சுகமாக வாழ்வதும் ஏற்றுக்கொள்ள முடியாது. அவர் பெயரில் இருக்கும் பணத்தை தடுப்பு செய்து (முடக்கி) ஏழைமக்களுக்கு, குண்டுவெடிப்பில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்க வேண்டும். 

  16. சந்திரகாந்தன் ஒளித்து வைத்துள்ள ஆயுதங்கள், இடங்கள் போன்ற விபரங்களை இன்னொரு சகா வெளியிட்டிருக்கிறாராமே? தொடர்ந்து வரும்போலிருக்கிறதே இவரின் வண்டவாளம். ஒன்று சந்திரகாந்தன் ஒப்புதல் சாட்சியாக மாறி வாக்குமூலம் அளிக்க வேண்டும் தைரியமிருந்தால், இல்லையென்றால் சுரேஷ் அலியோ மற்றவர்களோ சந்திர காந்தன் தலையில் கட்டி தாம் தப்பி விட வாய்ப்புண்டு. யாரிடம் வாக்குமூலம் அளிப்பது? தப்பியோடுவதை தவிர வேறுவழியில்லை. ஆனால் இவர் இப்போ கண்காணிப்பு வலயத்தில் இருப்பார். இவரே நினைத்தாலும் முடியாது. ஒன்று, சூடுபட்டு சாகவேண்டும், தற்கொலை செய்யவேண்டும், குற்றத்தை ஒப்புக்கொள்ளவேண்டும். தற்கொலை செய்வதற்கு தைரியமிருந்திருந்தால்; காட்டிக்கொடுக்க வேண்டிய தேவை வந்திருக்காதே இவருக்கு. எஜமானருக்காக கொலைகள் செய்திருக்க வாய்ப்புமில்லை. எதற்கு பயந்து அடிமை வேலை செய்தாரோ அதுவே நிகழப்போகுது. எத்தனையோ உயிர்களை அலாக்காக பறித்தவர், தனது உயிருக்காக மன்றாடப்போகிறார். இவரைப்போன்றோர் தமது நேரத்துக்கு தங்களை தயார்ப்படுத்திக்கொள்ளட்டும். தமிழரை படுகொலை செய்து அழித்த இராணுவம், ஏன் இவர் போன்றோரை பயன்படுத்தவேண்டும் என்கிற கேள்விக்கு இவர்களின் மரணத்தின் பின்னால், அல்லது தண்டனையின் பின்னால் பதில் தெரிய வரும்.    

  17. 28 minutes ago, கிருபன் said:

    அப்படியான வாடகை பராமரிப்பார்களின் முகவர் நிறுவனங்களின் விபரங்களை தாதிகளே உங்களுக்கு தருவார்கள்

    அவர்களுக்கென்றொரு யூனியனும் இருக்குது பாருங்கோ! அவையள் யாருமில்லாத நோயாளிகளின் உடைமை, உணவுகளை கையாடல் செய்வதுமுண்டு.

     

    32 minutes ago, கிருபன் said:

    மருத்துவர்களும் தாதிகளும் இப்போ மாபியாக்களைப்போலத்தான் தமிழ்ப்பகுதிகளில் இருக்கிறார்கள்.

    நோயாளிகளால் கடவுளாக கையடுத்து கும்பிடப்பட வேண்டியவர்கள், அவர்களின் இயலாமையை தங்களின் வாய்ப்பாக பயன்படுத்துகின்றனர். மகப்பேற்று தாதியர் மிகவும் கீழ்த்தரமான வார்த்தைகளை பிரயோகிப்பதும், சில குழந்தைகளின் இறப்பிற்கும் காரணமாய் இருந்ததோடு, தம் குழந்தைகளை இழந்த தாய்மாருக்கு அனுதாபம் கூட தெரிவிக்காமல் தங்கள் சேவை நேரத்தில் வம்பளப்பதில் செலவிட்டதையும் கண்டிருக்கிறேன். பணம் ஒன்றே கடவுள். அது இல்லாதவனெல்லாம் பிணம் என்று நினைக்கிறார்கள், நடத்துகிறார்கள். 

  18. எல்லா குற்றச்சாட்டுக்களையும் மறுக்கலாம் மறைக்கலாம் கூறுவோரை அச்சுறுத்தலாம் ஆனால் தொடர்ந்து வெளிவரப்போகும் ஆதாரங்களையும் வாக்குமூலங்களையும் மறுக்க முடியுமா? முடிந்தால்; தங்களையே மறுப்பது போலவும் ஏமாற்றுவது போலவும் ஆகும்.  அமெரிக்கா போர்க்குற்ற ஆதாரங்களை சற்றலைட் மூலம் வைத்திருக்கிறது என்று சொல்கிறார்கள், அது உண்மையானால்; ஈராக்கில் ஆதாரமற்ற குற்றச்சாட்டை கொண்டு உள்நுழைந்தது, ஆப்கானிஸ்தானில், லிபியாவில் நடந்ததுபோல் இங்கும் வந்து இவர்களை இழுத்துக்கொண்டு போக முடியும். 

  19. 50 minutes ago, ஏராளன் said:

    இது மனித எலும்பு எச்சங்களா என்பதைத் தெளிவுப்படுத்திக் கொள்ள வேண்டும். விசாரணைகளுக்குப் பிறகே சரியான தீர்மானத்திற்கு வர முடியும்," எனவும் அவர் கூறியுள்ளார்.

    ஆமா  இலங்கையில் சிங்கங்கள் ஆடை உடுத்திக்கொண்டன என மகாவம்ஷம் கூறுகிறது. இவர்கள் கூறும் பதில்களை பாத்து இவர்களின் அறிவை வியக்காமல் இருக்க முடியவில்லை. வர வர நகைச்சுவையாளர்களாக மாறி வருகிறார்கள்.

  20. மற்றவர்களை எச்சரிப்பதையும் குற்றச்சாட்டுகளை நிராகரிப்பதையும் விடுத்து விசாரணையின் முடிவுகளை வெளிப்படுத்துங்கள். ஒத்தூதும் கருதினாலே சர்வதேச விசாரணையை கோருகிறார். 

    30 minutes ago, ஏராளன் said:

    குண்டுவெடிப்பு சம்பவங்களை அடுத்து, அரசாங்கம், சட்ட அமலாக்க அமைப்புகள், பாதுகாப்புப் படைகள் மற்றும் சர்வதேச புலனாய்வு அமைப்புகள் விரிவான விசாரணைகளை மேற்கொண்டதாக அமைச்சு தெரிவித்துள்ளது.

    அதை எங்கே ஒளித்து வைத்திருக்கிறீர்கள்? எடுத்துக்காட்டுங்கள் பாப்போம்! கருதினாலும் கேட்டு கேட்டு களைத்துப்போய் சர்வதேசத்தை கூப்பிடுகிறார்.

  21. 22 minutes ago, ஏராளன் said:

    ஆதாரமற்ற தீங்கிழைக்கும் மற்றும் ஆவணப்படத்தில் கூறப்பட்ட மோசமான ஆதாரபூர்வமற்ற கூற்றுக்களால் ஏற்படும் விளைவுகளிற்கு சனல்4 பொறுப்பேற்கவேண்டும் எனவும் தெரிவித்துள்ளது.

    நாட்டிலே தீங்கொன்றும் நிகழவில்லை, சணல் நான்காற்தான் நிகழப்போகுது. தமிழருக்கு உரிமை வழங்கினால் கலவரம் வெடிக்கும், தனியார் காணிகளில் விகாரை கட்டுவதை தடுத்தால் இரத்த ஆறு ஓடும், தமிழருக்கு ஏதாவது வழங்கினால் நாட்டை கொழுத்துதல் இப்படியே உருவான, பழக்கப்பட்ட இனம். இதுகளை மாற்ற முடியாது. நன்மைகளை சிந்திப்பதுமில்லை, செய்வதுமில்லை. துறவிகளில் இருந்து அரசியல்வாதிகள், குடிமக்கள்,  பாதுகாப்பு அமைச்சு வரை முன்னேறவில்லை,  அழிவையே சிந்திப்பது. இனி நாட்டில் ஒரு அழிவு ஏற்பட்டால்; அதற்கு தங்கள் பொறுப்பை தட்டிக்கழித்து மற்றவர்களை அச்சுறுத்தும்இலங்கை பாதுகாப்பு அமைச்சே பொறுப்பேற்க வேண்டும்! 

  22. ஆமா... எச்சரிக்கை கொடுத்தும் அப்பாவிமக்களை பலிகொடுத்த அமைச்சு, அதுக்கு பாதுகாப்பு என்று பெயர். குற்றவாளிகளை பாதுகாக்கும் அமைச்சு, இவர்களின் அச்சுறுத்தலுக்கு ஒன்றும் குறைவில்லை. தெருவிலே நின்று ஊளையிடும் பிக்குகளை அடக்கத்தெரியவில்லை, உண்மைகளை வெளிபடுத்துவோருக்கு அச்சுறுத்தல் விட மட்டும் தெரியும். நிஞாயத்தை கேட்போரை அழிப்பது, அச்சுறுத்தல் விடுவது, காணலாலாக்குவது இந்த நாட்டின் அரசியலின் பாரம்பரியம். அதை இன்று உலகமே அனுபவிக்கிறது. நல்ல வேளை..... இந்த அமளியில் குமார் கஜேந்திரன் தப்பினார்.

  23. 2009 ம் ஆண்டு நடந்த போர்க்குற்றங்களுக்கு நடவடிக்கை எடுத்து சம்பந்தப்பட்டவர்கள் தண்டிக்கப்பட்டிருந்தால் 2019 ம் ஆண்டு  உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதலை  தவிர்த்திருக்கலாம். இவர்களின் அறிக்கைகளும் அழுத்தங்களும் பாராட்டுகளும் உதவிகளும் இன்னும் வன்முறைகளும் அழிவுகளும் ஏற்பட காரணமாகுமேயொழிய பாதிக்கப்பட்ட மக்களுக்கு எதையும் பெற்றுத்தரப்போவதில்லை. அவர்களும் கூடிக் கதைக்க ஏதாவதுவிஷயம் இருக்க வேண்டுமே.

  24. On 8/9/2023 at 01:28, ஏராளன் said:

    2005 ஆம் ஆண்டு முதலே ராஜபக்ஷ பாரம்பரியத்தை இருட்டடிப்பு செய்யும் நோக்கில் Channel 4 செயற்பட்டு வருவதாகவும் முன்னாள் ஜனாதிபதி தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

    ஏன் அப்படி? ராஜபக்ச பாரம்பரியத்துக்கும் சணல் 4 குமிடையில் அப்படி என்ன கொடுக்கல் வாங்கல் பிணக்கு?

    On 8/9/2023 at 01:47, ஏராளன் said:

    இலங்கையில் கடந்த 2019ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாத தற்கொலை குண்டு தாக்குதல்கள் தொடர்பில் செனல் 4 வெளியிட்டுள்ள காணொளி அடிப்படையற்றது என்றும், விசாரணைகள் இன்றி போலியான தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டு

    சரி... அவர்களுடையது போலியானவை. உங்கள் விசாரணைகளின் அடிப்படைத்தன்மையை வெளிப்படுத்துங்கள் முதலில் பார்க்கலாம்? அவற்றின் மூலம் சணல் நான்கு போலியானது என்பதை நிரூபித்து அதை தடை செய்யுங்கள் பார்க்கலாம் முடிந்தால்!         

    On 8/9/2023 at 01:47, ஏராளன் said:

    சனல் 4 செய்தி சேவையால் வெளியிடப்பட்டுள்ள காணொளியின் ஊடாக இலங்கை புலனாய்வுப்பிரிவை இலக்கு வைத்து போலியான தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

    எச்சரிக்கை கொடுத்தும் தடுக்க முடியாத, நான்கு ஆண்டுகள் கடந்தும் குற்றவாளிகளை கண்டுபிடித்து தண்டிக்க முடியாத இலங்கை புலனாய்வுப் பிரிவை குறி வைப்பதால் யாருக்கு என்ன நன்மை? 

    • Like 1
  25. On 7/9/2023 at 01:08, ஏராளன் said:

    ஏப்ரல் 21 குண்டுத்தாக்குதலை பொதுஜன பெரமுன தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டது என்று குறிப்பிடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. ஏனெனில் 2019ஆம் ஆண்டுக்கு முன்னர் 2018ஆம் ஆண்டு இடம்பெற்ற உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் பொதுஜன பெரமுன அமோக வெற்றி பெற்றது

    ஆனால் உங்கள் மீது குற்றச்சாட்டு வந்திருக்கிறது, உங்கள் கூற்றை நாங்கள் நம்ப வேண்டுமானால் இந்த குற்றச்சாட்டிலிருந்து உங்களை விடுவிக்க வேண்டும். அதற்கு ஒரே வழி.... சர்வதேச விசாரணையை ஏற்று உங்கள் கூற்றை, வெற்றியை நிரூபியுங்கள். இல்லையேல்.... குற்றச்சாட்டு உண்மையானது என உறுதிப்படுத்தப்படும்.

    On 7/9/2023 at 01:08, ஏராளன் said:

    முன்னாள் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷவுக்காகவே ஏப்ரல் 21 குண்டுத்தாக்குதல் நடத்தப்பட்டது என்ற தவறானதொரு நிலைப்பாட்டை தோற்றுவிக்க ஒரு தரப்பினர் முயற்சிக்கிறார்கள்.

    அதுதான் சொல்கிறோம்.... அவர்களின் முயற்சியை முறியடிக்க வேண்டுமானால் சர்வதேச விசாரணையை ஏற்க தாங்கள் முன்வரவேண்டும். இல்லையென்றாலும் தாங்கள் விட்ட பெருந்தவறோ அன்றி ஒப்படைக்கப்பட்ட தரகர் விட்ட தவறோ.... சுற்றுலா விடுதிமேல் தாக்குதல் நடத்தியது. நீங்கள் மறுத்தாலும் அந்த மக்களின் அரசாங்கங்கள் சும்மா விடப்போவதில்லை உங்களை.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.