-
Posts
9067 -
Joined
-
Last visited
-
Days Won
1
Content Type
Profiles
Forums
Events
Blogs
Gallery
Everything posted by satan
-
கடந்த ஆண்டு மது விற்பனை 50 சதவீதம் குறைந்துள்ளது
satan replied to தமிழ் சிறி's topic in ஊர்ப் புதினம்
எல்லோரும் பணக்காரராகி விட்டார்கள், ஒரு கிராம் போதைப்பொருள் எண்பதாயிரமாம். -
தாடி வேஷம் போடுது வாக்குகளுக்காக, ஆனால் அதை நமது தமிழ்கட்சிகள் ஒன்று சேர்ந்து வலுவாக்கினால் இவர் ஒன்றும் செய்ய முடியாது, இது நமது கட்சிகளின் ஒற்றுமையிலும் திறமையான காய் நகர்த்தலிலும் இருக்கு. தாடியர் எந்தப்பக்கம் திரும்பினாலும் அவரை வைத்தே காய் நகர்த்த வேண்டும். ஆப்பிழுத்த குரங்குமாதிரி. அரசு அவரை காட்டி அலுவல் பாக்க அதை நமக்கு சாதகமாய் திருப்ப முயற்சிக்க வேண்டும், இதை செய்யக்கூடிய திறமை நம்மவரில் யாருக்குண்டு? தங்களுக்குள் அடிபடுவதை விட்டு இதில் கவனம் செலுத்த வேண்டும்.
-
சும்மா குழுக்களை அமைச்சு மக்களை பேய்க்காட்டுறது. அரச ஊழியரை வீட்டுக்கு அனுப்பி மூக்குடைபட்டு போயிருக்கிறார். இன்று ஒரு சட்டம் இயற்றல் நாளை அது வாபஸ் பெற்று திருத்தம். ஆட்சி முடியும்வரை மாறி மாறி இயற்றுவதும் திருத்துவதுமாக கழிய வேண்டியது அதுதான் அவர்களின் ஆட்சிக்கால சாதனை. பிறகு தேர்தல் காலங்களில் தமிழரோடு தனகி மக்களை உசுப்புகிறது வாக்கு சேகரிக்க.
-
இந்தபதவி எப்படி இவருக்கு, எதற்காக, யாரால் வழங்கப்பட்டது? இதுகளை காட்டி வாக்குப்பெற்று இவரே தமிழரின் பிரதிநிதி என்கிற மாயையை ஏற்படுத்தி, தமிழர் தேசம் என்பது இல்லாமலாக்கப்பட்டு ஒரு தேசம் அதற்குத்தான் மக்கள் வாக்களித்தார்கள் என்று தம் திட்டத்தை நிறைவேற்ற இந்த கழுதைப்புலியை சிங்களம் தயாரிக்குது. அரசாங்கத்தரப்பில் இவரும் ஒருவராக தமிழ்கட்சிகளோடு பேச சென்றிருக்கிறார், எப்படி தமிழ் அரசியல் கட்சித்தலைவராவார்? தமிழ் பேசும் சிங்களக் கட்சியின் முகவரல்லவா இது?
-
தமிழ் அரசுக் கட்சியின் உப தலைவராகிறார் சாணக்கியன்?
satan replied to தமிழ் சிறி's topic in ஊர்ப் புதினம்
அப்போ..... உங்கள் தெரிவு யார்? சுமந்திரனை தெரிவோமா? சம்பந்தன் தலைவராக இருக்கும்போது இவர் இருந்தால் என்ன உடைந்தா போய் விடும் கதிரை? இவர்கள் என்ன சாதிக்கவா போகிறார்கள், கதிரையில் ஒட்டிக்கொண்டு இருக்கத்தானே போகிறார்கள், கதிரைக்குத்தானே பாரம்? இருந்துவிட்டுப்போகட்டுமேன்? -
இவரை யாரும் நாடை விட்டு துரத்தவில்லை, வெளியேறுமாறு கோரிக்கை வைக்கவுமில்லை ஆனாலும் வெளியேறத் துடிக்கிறார். ஓரிடத்தில் தரித்திருக்க மறுக்கிறார் அல்லது முடியுதில்ல அவரால் காரணம் அவர் செய்த பாவம் அலைக்கழிக்குது. மன உழைச்சல், என்ன முடிவெடுப்பார் என்று அவருக்கே தெரியாது. இப்பிடியே போனால் வெகு சீக்கிரம் ஒரு முடிவு வரும்.
-
மன்னாரிலிருந்து போனால் இலங்கையர் யாரும் பாக்க மாட்டாங்கள்? துபாயிலிருந்து போனா வேறு நாட்டுக்காரர் கண்டாலும் பரவாயில்லை எண்டு போயிருப்பார். இத்தனைக்கு பிறகுமா உங்களுக்கு அந்தச் சந்தேகம்? இப்போ நினைப்பார்; அருமந்தாப்போல அமெரிக்கனாயே இருந்திருக்கலாம், இப்போ எல்லாம் போச்சே எண்டு. அதுதான், இங்கே இருந்து அங்கே ஓடினார், அங்கேயிருந்து பறந்து வந்தார், இப்போ போக முடியலையே! மனம் ஒரு குரங்கு!
-
ஒருவேளை ஆட்கடத்தல் காரரை நம்பி போயிருப்பாரோ?
-
என்னடா இது? அதிகாரத்தீர்வு நல்லாட்சி காலத்தில வரைஞ்சாச்சு என்று சுமந்திரன் சொல்லிக்கொண்டிருந்தார், முந்தாநாளும் சொன்னமாதிரியிருக்கு. இவர்களுக்கு இன்னும் கண்ணில காட்டேலையோ? சரி ..... இவர்களாவது தங்கள் பிரச்சனை இது, அதற்கான தீர்வு இது, உங்கள் முடிவு எது? இஸ்ரமென்றால் பேச்சுக்கு கூப்பிடுங்கோ வாறோம், இல்லையென்றால் எங்களை கஷ்ரப்படுத்த வேண்டாமென்று அறிவிக்கலாமெல்லோ? அது ஏது இவ்வளவுகாலமும் அங்க கூப்பிட்டு ரகசியமாகத்தானே பேசியவர்? இப்போ என்ன புதுசா இங்க? ஓ .... அப்போ கையூட்டு குடுக்கத்தேவையில்லை, தேத்தண்ணி செலவு மிச்சம்! நரியார் என்ன கணக்கு போடுறார், என்ன திட்டத்தோட வாறார் எண்டு ஒண்டும் தெரியேல்லையே? இனி தாடியர் கூட்டம் சேக்கிறதில குறியாய் இருப்பார்.
-
இலங்கை ஆட்டத்தை ஆரம்பிக்கவேயில்லை எங்கே முன்னேறுவது? எழுபத்தொன்பது வருஷமா எத்தனையோ பேர் அசைச்சுப் பாத்திட்டினம் அசையேல்லை, திடுதிப்பெண்டு சுதந்திர தினத்துக்கு கொடி ஏத்தலாமெண்டு சுமந்திரன் கனவு கண்டிருக்கலாம் நாங்கள் நினைக்கேலை. கடன் வேண்டுறதுக்கு இவையளை கூட்டிவைச்சு கதைச்சு காலத்தை இழுத்தடித்துக்கொண்டு அறிக்கை விட்டு வாங்கலாமெண்டு நரியார் திட்டம் போட்டிருப்பார், இவையும் போகமுன்னம் அவரை புகழ்ந்து, ரகசியம் பேசி ஒண்டும் ஆகேல்லை, ஆகவும் ஆகாது, எங்கட ஆக்களும் வாங்கிறதுக்கு இன்னும் தயாராகவில்லை. ஒட்டுக்குழு ஓணான்குழுக்கள் கலைக்கப்படவேண்டும், பச்சோந்திகள் விலக்கப்படவேண்டும், இருக்கிறவர்கள் ஒன்று சேரவேண்டும், சிங்களத்துக்கும் போக வழியில்லாமல் இறுகவேண்டும். காலம் அதைச்செய்யும், அதுவரை நாங்கள் பொறுத்துத்தான் ஆகவேண்டும். உலகமும் ஒரு முடிவுக்கு வந்துவிடும்.
-
கூட்டமைப்பு தனித்தனியாக போட்டியிடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது – செல்வம்
satan replied to தமிழ் சிறி's topic in ஊர்ப் புதினம்
விக்கினேஸ்வரன் வேறு கட்சியில் போட்டியிட எத்தனித்த போது; அவருக்கு வேறு தெரிவு இருக்கவில்லை. சும்மா இருந்தவரை இழுத்துவந்து இணைத்துவிட்டு, அவரது பெயருக்கு சேறடிப்பதும் நாறடிப்பதும் அவரது முயற்சிகளுக்கு முட்டுக்கட்டை போடுவதும் முடிந்தால் வேறொரு கட்சியை ஆரம்பித்து வெண்டுகாட்டட்டும் என்கிற சவாலுமாக இருந்தபோது சித்தார்த்தனை விக்கினேஸ்வரனுடன் இணையும்படி ஒரு ஆலோசனை வைக்கப்பட்டபோது வெற்றியடைய முடியுமா என்கிற சந்தேகத்தில் மறுத்துவிட்டார், (இது நானறிந்த செய்தி) அதன்பிறகு வந்த தேர்தலில் த. தே. கூட்டமைப்பு வாங்கிய அடியைப்பார்த்து தனது முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டிய நிலைக்கு சித்தார்த்தனோடு செல்வம் அடைக்கலமும் தள்ளப்பட்டனர். ஒரு பேட்டியில் சித்தார்த்தன் இதை குறிப்பிட்டிருந்தார். அதாவது கூட்டமைப்புக்குள் சுமந்திரனின் அடாவடியும் சம்பந்தனின் தட்டிக்கேட்க முடியாமையும் தெரிந்திருந்தும் சம்பந்தனை எதிர்க்க முடியாத நிலை அதாவது அவரது வயதுக்கு அவர்கள் கொடுக்கும் மரியாதையை அவர் தவறாக கணக்குப்போட்டு கட்சியை தவறான பாதையில் வழிநடத்தியிருக்கிறார். இந்த நிலை தொடர்ந்ததால் அவர்கள் தேர்தல் வெற்றியை எண்ணி வேறொரு முடிவை எடுக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டனர். சம்பந்தனின் எதிர்நோக்கற்ற சுயநல அரசியல், கட்சி உடைவதற்கு காரணமாகிறது. அண்மையில் ஜனாவின் நேர்காணலில் கூட இதே காரணம் எதிரொலித்தது. சம்பந்தன் தனது முடிவை பரிசீலிக்காவிட்டால் சித்தார்த்தன், அடைக்கல நாதன் விக்கினேஸ்வரனுடன் இணைவார்கள். எந்த விக்கினேஸ்வரனை ஓடஓட விரட்டினார்களோ அவரின் கையை பலப்படுத்துகிறார்கள் தங்கள் பிடிவாதத்தால். ஆனால் விக்கினேஸ்வரன் கட்சியை உடைக்காமல் இவர்களோடு சேர்ந்து பயணிப்பதையே விரும்புகிறார் போலத் தெரிகிறது. -
அவர்களது குறைகளை என்னெவென்று கேட்க விரும்பாதவர் தனக்கு புகலிடம் தரும்படி நாடுநாடாய் அலைகிறார். இப்பதான் ஆரம்பித்திருக்கு இன்னும் நிறைய இருக்கு!
-
சுற்றித் திரிந்தாரா, புகலிடம் தேடி அலைந்து திரிந்தாரா? அன்று வெற்றிக்கதைகளை பேசினார், சுற்றியிருந்து கைதட்டிக்கேட்டார்கள், அவரது துயரக்கதையை கேட்க சுற்றமும் இல்லை, தூர விலகிவிட்டார்கள் இன்று. அன்று எல்லாவற்றையும் துறந்து பறந்து வந்தார் நாட்டுக்கு, இன்று எல்லாவற்றயும் இழந்து அலைந்து திரிகிறார் கவலையோடு நாட்டை விட்டோட. இது தான் வாழ்க்கை! புத்தமதம் இதை நிறைய போதிக்கிறது ஆனால் இவர்கள் அந்த மதத்தின் பேரால் எதையோ சாதிக்க துடிக்கிறார்கள்.
-
அனைத்து தமிழ் கட்சிகளையும் ஒன்றிணையுமாறு கோரி மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டம்
satan replied to கிருபன்'s topic in ஊர்ப் புதினம்
இந்த ஒட்டுக்குழு, ஓணான்குழு யாரின் பிரதிநிதிகள்? இவர்கள் அரசின் முகவர்களல்லவா? அவர்கள் யாருக்காக பேசுவார்கள்? அவர்கள் மக்களுக்காக செய்தது என்ன? ஒருபுறம் முஸ்லீம்கள், மறுபுறம் சிங்களம், இடையில விலாங்கு கூட்டம். இதை எப்படி கையாளுவது? இறக்கிறதுகள் பிரிஞ்சு போராடுதுகள், இதுக்குள்ள தீர்வு என்பது தண்ணீருக்குள்ளால நெருப்பை கொண்டு போறமாதிரி! -
அனைத்து தமிழ் கட்சிகளையும் ஒன்றிணையுமாறு கோரி மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டம்
satan replied to கிருபன்'s topic in ஊர்ப் புதினம்
ஐயையோ....! அனைத்து தமிழ்கட்சிகள் என்று இவர்கள் யாரை சொல்கிறார்கள்? ஒட்டுக்குழு, ஓணான்குழு! போச்சுடா போச்சு, பிறகு குத்துது குடையுது என்று இடைநடுவில் அவிட்டெறியக்கூடாது. -
ஆளை அவசரமாய் தேடினீங்களே! வந்துட்டாராம். சந்திக்கேல்லையே?