-
Posts
9067 -
Joined
-
Last visited
-
Days Won
1
Content Type
Profiles
Forums
Events
Blogs
Gallery
Everything posted by satan
-
எங்களுக்குத்தான் சொல்வதற்கு கூச்சம், அவர்கள் அதெல்லாம் கடந்தவர்கள், எதுவும் நடவாதது போல் இயல்பாக உலாவுவார்கள்.
-
அதிகளவில் ஓய்வு பெற்றுள்ள ஊழியர்கள் – புகையிரத சேவைகள் இரத்து!
satan replied to தமிழ் சிறி's topic in ஊர்ப் புதினம்
அறுபது வயதில் ஓய்வு என்று அறிக்கை விட முன், அவர்கள் பணியை பொறுப்பேற்க ஆட்கள் சேர்க்கப்பட்டு பயிற்சி அளிக்கப்பட்டதா என்பதை யோசிக்கத்தெரியாத முட்டாள்கள் தான் தமிழர் இல்லாமல் நாடு முன்னேறும் என்று அழித்தார்கள், இன்று நாடு எப்படி இருக்கு? இன்னும் வீரப்பேச்சுக்கு குறையில்லை. அடித்து விரட்டியவர் அலைகிறார். கம்மன் பில, சரத் வீரசேகர எப்போ பயணப்பெட்டி தூக்கிறது? தோற்க வைத்தவர்கள் தோற்று விட்டார்கள் அவனிடம், அதனால் அவனும் தோற்றுவிட்டான். -
ஒரு சுவார்ஷ்யமான செய்தி படித்தேன். கோத்தா நாடில்லாமல் அந்தரிக்கிறாராம் அமெரிக்கா கருணை காட்டவேண்டுமாம்! பிறந்த நாடு, ஆண்டு அதிகாரம் செலுத்திய நாடு, சொத்து சுகம் உறவுகள் சூழ உள்ள நாடு, யாரும் அவரை விரட்டவில்லை, தானே முடிவெடுத்து வெளியேறினார். பாருங்கள் காலம் எங்கே கொண்டுவந்து விட்டிருக்கு! பாரம்பரியமாக வாழ்ந்த மக்களை அதிகார செருக்கினால் நாட்டை விட்டு விரட்டினார், அது அவர்களுக்கு சொந்தமானதில்லை என்று முழங்கினார். இன்று அந்நிய நாட்டிடம் தங்க இடம் கேட்டு காத்திருக்கிறார். விடுமுறையில் சென்றார் என்கிறது ஒரு செய்தி, நாடில்லாமல் அந்தரிக்கிறார் என்கிறது வேறொரு செய்தி. இவருக்கு அமெரிக்கா விஷா கொடுத்தாலும் நிம்மதியாக இருப்பாரா என்பது அடுத்த கேள்வி. இருப்பதெல்லாம் இழந்து, இன்று நம் பெற்றோர் தெருவில் நிற்பது போல் நிலையும் வரலாம் யார் கண்டா விதியின் விளையாட்டை? "முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்."
-
விடையை தெரிந்து வைத்துக்கொண்டே தொடர் கேள்வியால் எங்களை சுற்றி சுற்றி சொறிய வைத்துவிட்டீர்களே.
-
அங்கேயும் ஏதாவது மாஃபியா வேலைதான் செய்யினமா சார்? இல்ல, செய்த கை சும்மா இராது அரிக்குமில்லே.
-
அரசியலமைப்பு பேரவைக்கு தமிழ் எம்.பியை நியமிப்பதில் இழுபறி!
satan replied to கிருபன்'s topic in ஊர்ப் புதினம்
தமிழருக்கு தீர்வு கிடைச்சிடுமில்லே சுதந்திர தினத்துக்கு முதல்? இல்லை நாளைக்கு இவர் பதவி விலகி போகேக்கை நான் தீர்வு கொடுக்க தயாராய் இருந்தேன் அவர்கள் அரசியலமைப்பு பேரவையில் பங்கு பற்றேல்லை என்று சொல்லவிடக்கூடாது. ஆட்டிவிட்டால் ஆடாதார் யார் உண்டு? -
ஏன் தேர்தல் வென்ற உடனேயே பொன்னம்பலத்தார் மணியை வெட்டினவராம்? இதை நீக்கக் காரணமாக கஜே குழு சொன்னதாக எனக்கு நினைவில்லை! இது நீக்கப் பட்ட பிறகா அல்லது முன்னரா? நீங்கள் தேடிப்பாத்து காரணம் வேறிருந்தால் அறியத்தாருங்கள்! உறவே, எனக்கு உண்மைக் காரணம் தெரிந்தால் நான் ஏன் எழுஞாயிறிடம் கேட்கிறேன்? உங்கள் கதை பாபநாசம் திரை வசனம் போலல்லவா இருக்குது? யஸ்ரின் சார்! எதுக்கு இவ்வளவு சுத்து? மேலே இருக்கு பதில். நாங்கள் உங்களுக்கு என்ன துரோகம் பண்ணினோம்? எங்களுக்கு தெரிஞ்சதைத்தானே சொன்னோம். பாபாநாச கதையென்று எங்களை போட்டு சுத்து சுத்து என்று சுத்தினீங்களே? அறியத்தாருங்கள்! என்று கேட்டேன் தெரிஞ்சு வைச்சுக்கொண்டே ஒண்டும் தெரியாதமாதிரி குடைஞ்செடுத்தீங்களே, இதை முதலிலேயே சொல்லியிருக்கக்கூடாதா? இத்தனை பக்கங்கள் ஓடியிருக்காதே இந்தக் கதை. நாங்கள் இங்கு கஜே சரியானவர் என்று சத்தியம் செய்யவில்லை. மணியின் செயற்திறன், அவசரம், அவர் சேர்ந்த கூட்டு பற்றியே கருத்தாடினோம். வீணாய் எங்கள்மேல் பழியைப்போட்டு இப்படி வதைத்து போட்டீர்களே! சரி.... இப்போ பாபநாச கதையைச் சொல்லுங்கள் அதையாவது கேட்போம்!
-
என்னத்தை மாத்தியென்ன? ஒண்டுக்கும் மண்டேக்கை சரக்கில்லை!
-
அதிகளவில் ஓய்வு பெற்றுள்ள ஊழியர்கள் – புகையிரத சேவைகள் இரத்து!
satan replied to தமிழ் சிறி's topic in ஊர்ப் புதினம்
முன்னேற்பாடில்லாத திட்டங்களும், அமுல்படுத்தல்களும், புத்திசாலிகள் நாட்டை கட்டியெழுப்புகிறோம் என்கிற நினைப்பு உள்ளதையும் கெடுத்தானாம் கொள்ளிக்கள்ளன் என்கிற மாதிரி நாட்டின் பொருளாதாரத்தை இன்னும் அதலபாதாளத்திற்கு கொண்டுபோவதோடு, மக்களை இன்னும் சிரமத்திற்கு ஆளாக்குமென்பதை அறியாத அமைச்சரவை, வழிநடத்தல்கள். திறமையானவர்கள் என்று தங்களைத்தாங்களே தட்டிக்கொடுக்க வேண்டியதுதான். வற்புறுத்தி ஓய்வில் அனுப்பியவர்கள், தாங்கள் சேவை செய்ய மாட்டோம், மீள பழையபடி இணைக்காவிட்டால் என்று ஊழியர் பேரம்பேசினால் என்ன ஆகும்? அடுத்தநாள் திட்டம் என்ன, யார் ரயிலை இயக்குவது என்று யோசிக்கவேயில்லையா இவர்கள்? ரயில் திணைக்களம் இதை முதலில் அறிவித்திருக்க வேண்டாமோ?முட்டாள் பயலுக இன்னும் என்னென்ன மூடப்படப்போகுதோ? -
புட்டோடை தேங்காய்ப்பூ சேராமல், துணிந்து வெட்டிப்போட்டு நடக்க வெளிக்கிடும்வரை வெருட்டல் நாடகம் தொடர்ந்து கொண்டே இருக்கும்.
-
அது நாளைக்கு ஏற்படும் கிராக்கி பொருளைப்பொறுத்தது. அது பனங்காயாகவும் இருக்கலாம்.
-
பிரபல பாதாள உலகத் தலைவன் கஞ்சிப்பானை இம்ரான் பிணையில் விடுவிப்பு
satan replied to ஏராளன்'s topic in ஊர்ப் புதினம்
இவர்கள் ஏதோ திட்டம் போட்டே விடுவித்திருப்பார்களோ என் எண்ணத்தோன்றுகிறது. பிணையில் விடுதலை செய்யப்படுபவரை போலீசார் கண்காணிப்பது வழமை! இதன் அர்த்தம் என்ன? இவர்கள்தான் அவர் தப்பித்து செல்லாமல் இருப்பதற்கும், தொடர்ந்து நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்குவதற்கும் உறுதியளித்தனர். சட்டப்படி இவர்களை கைது செய்து கேள்வி கேட்க இடமுண்டு என நினைக்கிறன். -
நாங்கள் சிறுவர்களாக இருந்தபோது, இடப்பெயர்வுகளுக்குமுன் சிலவேளைகளில் பெற்றோர் நம்மை கடலுக்கு அழைத்துச்செல்வார்கள். ஓரளவு ஆழத்திற்கு அப்பாவின் கையை பிடித்துக்கொண்டு கடலில் நடக்கும்போது காலில் நழுக்கென்று ஏதோ மிதிபடும் அந்த உணர்ச்சி காலில் கூச்சத்தை உண்டாக்கும், குனிந்து பாத்தால் கறுப்பாக தரையில் நாம் காணும் பேனா அட்டை வடிவில் தடித்த கொழுத்த உருவில் கிடக்கும், அப்போ அப்பா சொன்னார் அது கடல் அட்டையென்று, அது சரியாக இருக்கலாம் இல்லாமலும் இருக்கலாம். ஆனால் அப்போது யாரும் கடலட்டை பற்றி அறிந்திருக்கவில்லை, பேசவில்லை. மீண்டும் நாம் சொந்த இடத்திற்கு வந்தபோது தென்னிலங்கையர் இந்த தொழிலில் நம்ம கடற்பிராந்தியத்தில் ஈடுபடுவதாகவும், நம்ம கடற்தொழிலாளரே அவற்றை அவர்களுக்கு அறிமுகம் செய்து, பயிற்றுவித்ததாகவும் அதைத்தொடர்ந்து அவர்கள் கடலோரங்களை சுற்றி குடியேறியதும் அதற்கு எதிராக போராட்டங்களும் தொடர்கின்றன. சீனரின் வருகையால் இது பிரபல்யம் அடைந்திருக்கலாம். இதை ஏன் சொல்கிறேனென்றால்; எங்கள் பிரதேசங்களில் எத்தனையோ இயற்கை வளங்கள் கவனிப்பாரற்று, ஊக்குவிக்கப்படாமல், அறியாமல், அறிமுகப்படுத்தாமல், இனங்காணாமல் கொட்டிக்கிடந்தன, கிடக்கின்றன ஆனால்அவற்றை தென்னிலங்கையும் அந்நிய நாட்டினரும் உதவி, அபிவிருத்தி என்கிற பெயரில் வந்து இனங்கண்டு சுரண்டிக்கொண்டு போகிறார்கள். நாங்கள் இன்னும் அரசியல்வாதிகள் ஊழல் செய்வதற்கும், அவர்களின் தரகுப்பணத்திற்கும் தெருக்களில் நின்று கூக்குரலிட்டு கொண்டிருக்கிறோம்.
-
தேவையென்றால்; கூட்டமைப்பை கூட்டியணைப்பது, தேவை முடிந்தால் மாட்டிவிடுவது. அதெப்படி .... சேர்ந்து விளையாடியவர்களை விட்டிட்டு தான் மட்டும் தோல்வியில் பங்கெடுப்பது, பழிசுமப்பது அதுதர்மமாகாது! நாங்கள் மக்களை நம்பி களமிறக்கினோம், அவர்கள் விளையாடிவிட்டு இவர்களுக்கு களமே இல்லாமல் செய்கிறார்கள், அரசியல் தர்மம்!
-
மொழி புரிதலில் ஏற்பட்ட தவறாய் இருக்குமோ? செய்தி சேகரித்தவருக்கு!
-
தமிழ் மக்களுக்கு அறணைப்புத்தி என்று எல்லோருக்கும் தெரியும். விடுதலைப்புலிகளை அழித்துவிட்டோம், அவர்களுக்கு அரசியல் தீர்வு என்கிற பேச்சுக்கே இடமில்லை, விரும்பினால் இந்தநாட்டில் அவர்கள் இருக்கலாம் அரசியல் தீர்வென்று கேட்கமுடியாது என்று சொன்ன வாய் எந்த வாய்? ராஜ பக்ஸ குடும்பத்திலுள்ள ஒவ்வொருவரும் நாமல் உட்பட பதவியிழந்த பின் வைக்கும் குற்றச்சாட்டு; தமிழ் மக்களுக்கு தீர்வை வழங்க தாம் (ராஜ பக்ஷக்கள்) தயாராக இருந்ததாகவும் கூட்டமைப்பினரே பின்னடித்ததாகவும், வேறு சிங்கள அரசியல்வாதிகளும் இதையே கூறுகின்றனர் அதாவது "த. தே. கூட்டணி சரியான அரசுக்கு அழுத்தத்தை கொடுக்கவில்லை, தமிழ் மக்களுடைய பிரச்சனையைப்பற்றி அவர்களுக்கு உண்மையான அக்கறையில்லை, அவர்கள் சுய அரசியல் லாபம் தேடுகின்றனர்." இவர்களோ மௌனம் சாதிக்கிறார்கள்.
-
முந்தியென்றால் மக்கள் வரிப்பணத்தில், கொள்ளையடிச்ச பணத்தில கேள்வியே கேக்காமல் அள்ளி வீசிவிட்டு போயிருப்பார். அதெல்லாத்தையும் பயத்தில, அவசரத்தில விட்டிட்டு இவர் ஓட, போராட்டக்காரர் கைப்பற்றி நீதிமன்றத்திடம் கையளிச்சாச்சு. இனி எங்கிருந்து வரும் பணம்? அரசியல்வாதிகளின் தனிச் சிறப்புச் சலுகையும் கிடையாது ராஜினாமா செய்திட்டார். "கேடுவரும் பின்னால் மதிகெட்டு வரும் முன்னால்" பிறந்த நாட்டில் பதவியிழந்து அந்நியர் போல வாழப்பிடிக்கேல, அரசியலை நம்பி குடியுரிமை கொடுத்த நாட்டையும் துறந்து இப்போ போக முடியேல. இப்போ சொந்தப்பணமுமில்லை, அரசியல் சொகுசுமில்லை. பேசிய பேச்சென்ன, விட்ட சவாலென்ன, கட்டிய அறைகளென்ன, கூடிய கூட்டமென்ன, முறுக்கிய முஸ்டியென்ன? அத்தனையும் கைவிட்டு நிக்கதியில். இனிவருங்காலங்களில் சொந்தநாட்டிலேயோ, வெளிநாட்டிலேயோ கைதும் செய்யப்படலாம்.