-
Posts
9067 -
Joined
-
Last visited
-
Days Won
1
Content Type
Profiles
Forums
Events
Blogs
Gallery
Everything posted by satan
-
அனுபவத்தைப்போல் நல்ல ஆசானில்லை. "வாரம் செய்தறி, வழி நடந்தறி, தோழமை கூடியறி" என்பர் நம் மூத்தோர். மணி புத்திசாலியாக இருந்தால் அவசரப்படாமல், ஆறுதலாக யோசித்து தனது அரசியல் பயணத்தை தொடர்வது நல்லது. குமார் இவரை சேர்க்குமளவுக்கு பெருத்தன்மையானவர் கிடையாது. முதலில் நின்று, நிதானித்து செயற்பட்டிருந்தால் மணி நன்றாக தொடர்ந்து செயற்பட்டிருக்க முடியும். நான் அவர் அந்த முடிவை எடுப்பாரென்றுதான் நினைத்திருந்தேன். ஆனால் இன்னும் ஒன்றும் கெட்டுப்போகவில்லை. அவருக்கு இருக்கும் இளமை, அறிவு, அனுபவம் இன்னும் நல்ல பாதையில் பயணிக்க முடியும். பொறுமை அவசியம்!
-
குத்தியர் மணியை ஆதரித்தது; அவரின் திறமைகளை வைத்து தான் வளர்வது, அவரது புகழில் தனது அழுக்குகளை மறைத்து தன்னை பெரிய கனவானாக்குவது, தனது அழுக்குக்குள் மணியை மூழ்கடிப்பது. தனது கடைசி அறிக்கையில்; தன்னோடு யாரும் பேசவில்லை, கட்சியில் யாரோடும் பேசினார்களோ தெரியவில்லை, பேசினால் பரிசீலிக்கப்படலாம் என்கிற எதிர்பார்போடுதான் இருந்தார். ஆனால் மணி பதவிக்காக காலில விழுவாரென காலை நீட்டிக்கொண்டு இருந்திருப்பார் பாவம், அதுவும் தேர்தல் வாற நேரத்தில் கிடைத்த ஒரு துருப்புசீட்டும் நழுவிவிட்டதே! மணி இந்த முடிவை எடுப்பாரென எதிர்பார்த்திருந்திருக்க மாட்டார். யஸ்ரின்! மணி எதற்காக அடியாட்களோடு வந்து தகராறு செய்தார் எனக் கூறப்பட்ட காரணமும், அதற்காக அவர் நடந்து கொண்ட விதம் எனக் கூறப்பட்டதும், பின்னாளில் மணி பதவிக்காக சேர்ந்த கூட்டமும் அதை உறுதிப்படுத்தின. அதோடு மணிக்கு பழிவாங்கும் உணர்வு அதிகமாகியது அது அவரின் அறிவுக்கண்ணை மறைத்தது. பொறுப்பில் இருக்கும் ஒருவர் முன்னேற விரும்பினால்; பெறும் பாராட்டை விட, தன்னை நோக்கி வரும் விமர்சனங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் அதற்கு பதில்கொடுப்பதைவிட. அப்போதுதான் தன்னை சீர்படுத்திக்கொள்ள முடியும். பாராட்டுவோரும் பாராட்டும் எதிர்பாராவிதத்தில் கைவிட்டுவிடும், கவிட்டு விடும்! நான் உங்கள் போன்று அரசியல் தெரிந்த ஆளுமில்லை, அந்தளவுக்கு அரசியல் அறிவுமில்லை. எனது அனுபவம் தவறாகவுமிருக்கலாம். இங்கேயே விடை இருக்கே!
-
முன்னரா பின்னரா என்று நான் தேடவில்லை. காரணம் கூறப்பட்டது; முக்கிய முடிவு ஒன்று எடுக்கும் கூட்டத்திற்கு அடியாட்களோடு போய், தான்தான் கட்சியின் வெற்றிக்கு அதிகம் உழைத்ததாக தகராறு செய்ததாக அறிந்தேன். நீங்கள் தேடிப்பாத்து காரணம் வேறிருந்தால் அறியத்தாருங்கள்!
-
கூட்டமொன்றுக்கு அடியாட்களோடு போய் சண்டித்தனம் காட்டியிருக்கிறார். (எதற்காக என்பதை தேடினால் காரணம் புரியும்). அத முதலில நான் நம்பேல, கூடிய கூட்டைபாக்கும்போது நம்பாமல் இருக்க முடியவில்லை.
-
தன்னலத்திற்காக சேரக்கூடாதாரோடு சேர்ந்தால், பாதியிலே சரிந்து வேதனையும், அவமானமும், நம்பிக்கை இழப்பும் அடைவது நிஜம் என்பதற்கு இது ஓர் எடுத்துக்காட்டு. என்று தாடியோடு சேர்ந்து பதவியமைத்தாரோ, அன்றே இவர் மீது இருந்த நம்பிக்கை போய் இவர்மேல் சந்தேகமே எழுந்தது. இருந்தாலும் இதோடு தப்பிவிட்டார், இனி சரிசெய்ய முயற்சிப்பார். ஆனால் இங்கு தோற்றது கழுதைப்புலி. அது நினைத்தது மணி தன்ர காலில விழுந்து கெஞ்சுவார் என்று. அது நடந்திருந்தால் தாம் தூம் என்று குதித்திருக்கும். தீர்வு விடயத்திலும் இந்தக் கழுதைப்புலியை தள்ளிவைப்பதே நல்லது. அதுக்குதானே இன்னொன்று முதலிலேயே போய் குந்தியிருந்து குசுகுசுக்குது.
-
கடத்தப்பட்ட பிரபல தமிழ் வர்த்தகர் உயிரிழப்பு – விசாரணைகள் ஆரம்பம்!
satan replied to தமிழ் சிறி's topic in ஊர்ப் புதினம்
எதுக்கு இந்தக்கொலை வெறி? தடுமாறினவர்களுக்கு துப்புக்கொடுத்தது தவறாய் போச்சுது. நாங்கள் துப்புக்கொடுத்த படியாற்தானே விசாரணை சரியான ஒருவழிக்கு திரும்பியிருக்கு. இலங்கையில் எத்தனை மெலிந்த உயரமான மனிதர்கள் இருக்கிறார்கள்? அதுவும் தற்போதைய பொருளாதார நிலையில் பெரும்பாலானோர் அந்த நிலைக்கு வந்துவிட்டார்கள், யாரை என்று கண்டுபிடிப்பார்கள்? ஆமா! சன்மானம் வாங்க கூட்டுத்தேவை, காட்டிக்கொடுக்கிறதென்றா சாத்தான் தான். நல்ல கூட்டாளிகள்! உங்களது உயரம் எல்லாம் நீங்களே ஒப்புதல் வாக்குமூலம் எழுத்துமூலம் கொடுத்துவிட்டு, இப்போ சாத்தானை மாட்டிவிடுகிற வேலையெல்லாம் வேலைக்காகாது. நீங்கள் பதிந்த உயரத்தை கையில வைச்சுக்கொண்டுதானாம் சந்தேக நபரை தேடுகிறார்களாம். இலங்கை எம்பசி பக்கம் போய்விடாதீர்கள். -
இதைத்தான் நானும் நினைத்தேன். கிழக்கிலும் இந்தப்போராட்டம் நடந்ததாக நினைவு. "ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிகளுக்கு கொண்டாட்டம்." கடற்தொழிலாளரை பிளவுபடுத்தி குளிர் காய நினைக்கிறார் போலுள்ளது! இது எல்லாத் துறைகளிலும் பரவும் அபாயமுள்ளது. அதற்காகவே பல தரகர்மார் மும்முரமாக இயங்குகிறார்கள். எப்போதும் தன் இயக்க ஆர்ப்பாட்டக்காரரை படம் எடுத்து தலைகீழாக காட்டுவார், இந்தமுறை சிக்கவில்லையோ வெறும் செய்திதானா?
-
அப்புறம் எதற்கு இங்கே மினக்கெடுகிறீர்கள்? மற்றவர்களின் அபிப்பிராயம் கேட்டுத்தான் நல்லது செய்வேன் என்று நீங்கள் அடம்பிடித்தால்; உங்கள் வாழ்நாளில் ஒன்றுமே செய்ய முடியாது. ஒரு முடிவெடுத்தால் அதை யாருக்காகவும் காத்திராதீர்கள், பிற்போடாதீர்கள், மாற்றாதீர்கள். சட்டுப்புட்டென்று காரியத்தை முடித்து விடுங்கள், அதை யாராலும் தடுக்க முடியாது. ஆறப்போட்டீர்களென்றால் உங்கள் மனமே மாற இடமுண்டு.
-
தேர்தல் வரப்போகுது, தன்னை சேர்க்கும்படி குரல் கொடுத்து யாரும் காதில் வாங்கவில்லை, தான் பெரிய ஆள் மாதிரி அறிக்கை விட்டும் பலனில்லை, இதெல்லாம் பழைய நாடகந்தான். ஆட்களை பொய் சொல்லி திரட்டி வெய்யிலில் காயவைத்து தலைகீழாய் சுலோகங்களை பிடிக்கவைத்து படம்பிடித்து சித்து விளையாட்டு காட்டுவது இந்த எத்தனுக்கு புதிதல்லவே! மக்கள் தன்பக்கம், தான் நல்லது செய்கிறேன் என்று மற்றவர்களை கவருகிறாராம். உதில நிக்கிறவையை இரண்டு குடுத்து, அல்லது அவருக்கு மேலால கொடுத்து அவருக்கு எதிரா கோஷம் எழுப்புங்கோ என்றாலும் எழுப்புவார்கள் நாடககோஷ்டி!
-
ஐயா! வடக்கு கிழக்கிற்கு உதவ நீங்கள் விரும்பினால் தாராளமாக செய்யலாம். யாரும் உங்களை தடுக்கப்போவதில்லை. துரோகி பட்டம் கொடுத்துவிடுவார்கள் என்று பயமிருந்தால் செய்யாதீர்கள், அப்போதும் யாருமுங்களை வற்புறுத்தப்போவதில்லை. நல்லது செய்ய நினைப்பவர் அவர் என்ன சொல்வார், இவர் என்ன சொல்வார்? என்று எதிர்பாத்து செய்வதில்லை. நீங்கள் முன்பு மற்றவர்களை முதலிட இங்கு கருத்தெழுதி வாக்குவாதம் செய்தீர்கள். சிங்களம் தடங்கல் ஏற்படுத்தாமல் இருந்தால் சரி. ஆனால் சிங்களம் தலையீட்டுடன் செய்வது நமது மக்களுக்கு நன்மை பயக்காது என்பதே பலரின் வாதமாகவும், அவர்கள் தேவையானபோது அழைப்பதும், தேவையற்றபோது தடைசெய்வதும், அலைக்கழிப்பதும் கட்டுப்பாடுகள் போடுவதுமே நமது விசனத்துக்கு காரணம். நல்லது செய்ய நினைக்கும் நீங்கள் மற்றவரின் அபிப்பிராயத்துக்காக காத்திருக்கத் தேவையுமில்லை மற்றவர்களுக்கு சொல்லிக்கொண்டு இருக்கத்தேவையுமில்லை.
-
தான் உத்தமர் போன்று இவர் இங்கு யாரை குறிப்பிடுகின்றார் என்று யாருக்காவது தெரியுமா? மணிவண்ணனின் மேயர் பதவி; சுமந்திரன் பாதி, தாடியர் பாதி சேர்ந்து செய்த கலவை. சுயநலம், ஒருவரை ஒருவர் பழிவாங்குந்தன்மை, பாதிக்கப்படுவது இவர்களை நம்பியிருக்கும் அப்பாவி தமிழ் மக்கள். இதற்குத்தான் அன்றொரு பாட்டி சொல்லிச்சென்றா "வஞ்சனை செய்வாரோடிணங்க வேண்டாம்." என்று. யார் கேக்கிறா அதையெல்லாம்? எப்படியாகிலும் நான் பதவி பெற்று, பழிவாங்க வேண்டும் என்கிற வெறி,தானும் அழிந்து தன்னைச் சார்ந்தவர்களையும் அழிக்கும்! "இனம் இனத்தோடுதான் சேருமய்யா." இவர் சேருறாரோ, அவர்கள் அழைக்கிறார்களோ செய்யுந்தொழிலைப் பொறுத்திருக்கு. ஒருவரை அழிக்க நினைப்பவர் முதலில் கொலை செய்வதற்கு தகுதியானவரை தேடுவார், ஒரு வீட்டில் இழவு விழுந்தால் அந்த உடலை அப்புறப்படுத்தும் பணியாளரை அழைப்பார். சிங்களத்துக்கு எந்தக்கட்சி ஆட்சிக்கு வந்தாலும் அத்தகையோர் பணியே முதன்மையாக்கப்படுகிறது. இவர் ரணிலின் கட்சியை சேர்ந்தவரல்லர், ஆனால் பதவியேற்றவுடன் முதலில் அழைக்கப்பட்ட ......? இந்த விடுவெளியில் எதுவேண்டுமானாலும் சேர்த்து வாசியுங்கள். அவரது திட்டம், தமிழரை பேச்சுவார்த்தைக்கு அழைத்து ஒன்றுமில்லாமல் பண்ணுவது, அதற்கு யார் தேவையோ? அதற்கு தகுதியானவர்கள் இணைய முன்வந்தார்கள், இணைத்தும் கொள்ளப்பட்டார்கள். ஆனந்த சங்கரியின் நோய் பரவுகிறது. மக்கள் நலனல்ல இங்கு முன்னிற்பது, "நான்."
-
அதுசரி! இவரின் தோளில் ஏறி ஆடவேண்டும் என்று யார் இப்போ அடம்பிடிப்பது? அவர் உயிர்பிழைத்திருப்பதே தமிழ் இளைஞரின் உயிரை குடித்து, வாழ்ந்தது இராணுவத்தின் கோட்டையில், செய்தது அடிமை வேலை. கொலை, கொள்ளை. இவரை சுற்றி இருந்தது மனித உரிமையை நசுக்கிய கூட்டம். கொடுக்கும் பதவி சகுனிப்பதவியை மந்திரிப்பதவி என்று நினைத்து தாம் தூம் என்று குதிப்பதோடு கற்பனை வேறு! விடுதலைப்போர் முறியடிக்கப்பட்ட ஆரம்பத்தில் கர்த்தால் என்று இவர் ஒன்றை தொடங்க ஆமிக்காரன் வந்து விரட்டியடிக்க தவறான கருத்து பரிமாற்றம் என்று வெக்கினேன் விடிஞ்சேன் என்று கதை முடிஞ்சுது. அவ்வளவும் ஏன்? தன் சொந்தக் கட்சி சின்னத்தில் போட்டியிட முடியாமல் நாவடங்கி சுருட்டிக்கொண்டு இருந்தவர், தான் யார் என்று அறியாமல் அறிக்கை விடும் வீரன்! பிழைப்பது இனத்தின் உரிமையை விற்று கதைப்பது கட்டப்பொம்மன் கணக்கு. இவருடன் பழகியவர்களை மனித உரிமை செயற்பாட்டாளர் என்று சொன்னால் அது அந்த மனித உரிமைக்கே வெட்கக்கேடு. தங்கள் உயிருக்காக இந்த மிருகத்திடம் எத்தனை அப்பாவிகள் கெஞ்சியிருப்பார்கள். கிழட்டு அரசியல் செய்ய மாட்டேன் பதவி விலகிவிடுவேன் என்று கதை விட்டவர், எப்போ எங்கே பாத்தாலும் மக்கள் என்னை தெரியவில்லை இல்லையென்றால் அதை செய்திருப்பேன் இதை சாதித்திருப்பேன் என்று வாய்வீச்சும் புலம்பலும் பிச்சைக்காரன் போல். போட்ட டீல் பிழைச்சுப்போச்சாம்!
-
சுற்றுலாப்பயணிகள் கூடும் இடம்போலுள்ளது. கோஷான், வன்னியருக்கு ஒருவேளை தெரிந்திருக்கும். அண்மையில் அமெரிக்காவில் பனிப்புயல் என்று அறிந்தேன், ஆனால் இந்தப்படத்திலுள்ளவர்கள் கோடைகால உடையோடு காணப்படுகிறார்கள் சிறி. அவர்கள் எங்கேயிருந்தாலும் கண்டம் ஒன்று எங்களைவிட்டு கடந்துபோனதில் சந்தோஷமே!
-
துபாய் என்று சொல்கிறார்கள். துபாய், அமெரிக்கா வாழும் நம் கள உறவுகள் உறுதிப்படுத்தலாம். அமெரிக்காவில் இப்போ குளிரா? கோத்தா உடுத்தியிருக்கும் உடைகளை பொறுத்து உறுதிப்படுத்தி கொள்ளலாம்!
-
யாழில் போதைக்கு அடிமையானவர்களை புனர்வாழ்வளிப்பதற்கு நடவடிக்கை!
satan replied to தமிழ் சிறி's topic in ஊர்ப் புதினம்
கத்தியில்லாமல், சத்தமில்லாமல், ரத்தம் சிந்தாமல், குற்றச்சாட்டு இல்லாமல், விசாரணையில்லாமல் இலகுவான இனவழிப்பு! எதிரி சாமர்த்தியமாய் காய் நகர்த்துகிறான் அதை தடுக்க ஒரு நல்ல தலைவன் இல்லை நமக்கு. எதிரியின் கையை பலப்படுத்த, திட்டத்தை நிறைவேற்ற ஓடித்திரிகிறார்கள். -
சீன தூதரகத்தின் பிரதிநிதிகள் குழு யாழ் கோட்டைக்கு விஜயம்
satan replied to ஏராளன்'s topic in ஊர்ப் புதினம்
அவர்களும் இந்தியாவின் புகையும் நெருப்பில் எண்ணெய் ஊத்துறதெண்ட முடிவோடேயே அடிக்கடி வந்து வேலை செய்கிறார்கள். ஏதோ ஒன்றுக்கு கட்டியம் கூறுவதுபோல் தெரிகிறது. அவர்களது போட்டியிலையாவது எங்களுக்கு நல்லது நடக்கட்டும். இனிமேல் போராட எங்களுக்கு வலுவுமில்லை, வழிகாட்டியுமில்லை பரிதாபமான நிலையிலுள்ளோம். எல்லாம் நலிந்த எங்களை விழுங்கி ஏப்பமிட நிக்குதுகள்! -
சொந்த நாட்டில் வாழ முடியாத சூழ்நிலையிலேயே தமது உடமைகளை விற்று பாதுகாப்பான நாட்டை நோக்கி நகருகிறார்கள் என்பது வெளிப்படை. வசதியுள்ளோர், நடைமுறை தெரிந்தோர் சரியான முறையில் போகிறார்கள். இவர்கள் பாவம்! ஏமாற்றுபவர்கள் கையில் அகப்பட்டு எல்லாவற்றையும் இழந்து நிர்க்கதியாக உள்ளார்கள். இவர்களிடம் குற்றபுலனாய்வாளர் விசாரிக்க என்ன உண்டு? இவர்களின் இந்தச்செயலால் மீதமிருப்போரும் நாட்டுக்கு திரும்ப மறுத்து விபரீதமான முடிவுகளை எடுக்கக்கூடிய சாத்தியமுண்டு. அவர்களுக்கு இப்போது உளவியல் ஆதரவும், நம்பிக்கையும் வழங்க வேண்டுமேயொழிய விசாரணையெல்லாம் தேவையற்றது. இனி இவர்களை பயங்கரவாதிகள் போல் சித்திரிப்பதும், நீதிமன்றங்கள் முன் நிறுத்துவதும் நிறுத்தப்பட வேண்டும்.
-
யாழில் போதைக்கு அடிமையானவர்களை புனர்வாழ்வளிப்பதற்கு நடவடிக்கை!
satan replied to தமிழ் சிறி's topic in ஊர்ப் புதினம்
கொத்துக்கொத்தாக கைது செய்கிறார்கள், பல கிலோ கணக்கில் கைப்பற்றுகிறார்கள், சோதனைச்சாவடிகள் அமைக்கிறார்கள் இவ்வளவையுந்தாண்டி எப்படி மீண்டும் வருகிறது? இவர்களே விநியோகித்து விட்டு மீண்டும் மீண்டும் சுழற்சி முறையில் செயற்படுகிறார்களோ? இவர்களை வெளியேற்றினால் உண்மை வெளிவரும். -
அந்தராசி ஒருநாள் இவரை சிங்களத்திடம் மாட்டிவிட்டு வேடிக்கை பாக்காமலா போய்விடும்? உங்களுக்கு நினைவிருக்கோ என்னோ? முஸ்லீம்களுக்கு வக்காலத்து வாங்கப்போய், அவர்களுக்கு நடந்தது இனச்சுத்திகரிப்பு என்று அலம்பித்திரியேக்கை, அவர்களும் ஆகா.... ஓகோ.... என்று இவரை புகழ்ந்து கொண்டாடும்போது, இவர் தெரியாத்தனமாக அவர்களுடைய சமயத்தைப்பற்றி கருத்துச் சொல்லப்போய் வாங்கிக் கட்டினார். அதன்பிறகு அவர்கள் விடயத்தில் கொஞ்சம் அடக்கம். இப்போ சாணக்ஸ் தொடங்கியிருக்கிறார் முதலமைச்சர் கனவில, வெகு சீக்கிரம் குப்புற விழுவார் பாருங்கோ! எல்லாரும் ஏறி விழுந்த குதிரையில சக்கடத்தாரும் ஏறி சறுக்கி விழுந்தாராம் என்கிற கதைபோல.
-
சுமந்திரன் முக்கியமான இடங்களுக்கு (சம்பந்தரை) பிடித்துச் செல்வதால், அவருக்கு குனியிறார் தலைவர். அதை சாதகமாக வைத்து சுமந்திரன் சட்டாம்பி வேலை பாக்குது மற்ற கட்சிகளுக்கும் அங்கத்தவர்களுக்கும். சம்பந்தனின் வயதுக்கு மரியாதை கொடுத்து மற்றவர்கள் அமைதியாக இருக்கிறார்கள். இதனால் சுமந்திரன் எளிதாக கட்சியை கூறு போடுது. இத்தனை வயதாகியும் சபைப்பண்பு தெரியவில்லை, பெரும்பாலானவரின் கருத்துக்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டுமென்று தெரியவில்லை, சர்வாதிகாரிபோல செயற்படுகிறார். குருட்டு வழிகாட்டிக்கு பின்னால போய் மாழுறோம் என்று நிக்கிறார்கள். அவரோ இறுதியில் இருக்கிறார், இழப்பு ஒன்றுமில்லை, வேண்டியமட்டும் அனுபவித்து விட்டார். மற்றவர்களையும் வாழ விடவேண்டும் என்கிற எண்ணமில்லை, ஒரு குழப்பியை கொண்டுவந்து குழப்பிக்கொண்டு இருக்கிறார். போ என்றாலும் போகாதாம் அது. அதாலை இதாலை எண்டு பூந்திடுது.
-
இருவருக்கும், தாங்களாகவே எழுந்து நின்று தங்கள் அன்றாட கடமைகளை நிறைவேற்ற முடியவில்லை, அதில யார் தலைமை தாங்குகிறது என்கிற பிரச்சனை வேறு. தமிழன் எந்தக்காலத்திலும் தலை நிமிரக்கூடாது என்பதிலேயே குறியாக இருக்கிறார்கள். பிரச்சனையை தீர்க்கப்போவதில்லை என்று தெளிவாகத் தெரிந்தும், தன்னோடு ஆலோசிக்கவில்லை என்று ஆத்திரப்படுகிற முதல் ஆள் இவராகத்தான் இருக்கும்!
-
சீன தூதரகத்தின் பிரதிநிதிகள் குழு யாழ் கோட்டைக்கு விஜயம்
satan replied to ஏராளன்'s topic in ஊர்ப் புதினம்
தான் கூட்டி வந்தவர்களோடு கூட நின்று இடம் காட்டுறதா? அல்லது அவர்களை விட்டிட்டு போறதா என்கிறார். என்னவோ நாங்கள் கேட்டு அவர்களை தான் கூட்டிவந்த மாதிரியல்லோ இருக்கு இவரின் கேள்வி?