யாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.
விபரங்களிற்கு

பிரபாதாசன்

கருத்துக்கள உறுப்பினர்கள்
 • Content Count

  888
 • Joined

 • Last visited

 • Days Won

  1

பிரபாதாசன் last won the day on June 9 2015

பிரபாதாசன் had the most liked content!

Community Reputation

143 Excellent

About பிரபாதாசன்

 • Rank
  உறுப்பினர்

Profile Information

 • Gender
  Male
 • Location
  ஈழம்

Recent Profile Visitors

1,356 profile views
 1. இந்த குண்டு வெடிப்பு சில அரசியல் நோக்கங்களுக்கு சிலரால் செய்யப்பட்ட்து ....இது அரசாங்கத்துக்கு தெரியும் .....
 2. அதென்ன தமிழ் இடத்தில் மட்டுமே இந்த உலக பயங்கரவாதிகள் இலக்கு வைப்பார்கள் ...சிங்கள அரசாங்கத்தின் நாச வேலை இது.
 3. அதென்ன தமிழ் இடத்தில் மட்டுமே இந்த உலக பயங்கரவாதிகள் இலக்கு வைப்பார்கள் ...சிங்கள அரசாங்கத்தின் நாச வேலை இது.
 4. இங்கே பயங்கரவாதிகள் இலங்கை அரசாங்கமும் அவர்கள் வளர்த்த இந்த அமைப்பும் தான் .
 5. மக்கள் வாக்கு அளித்தது தமிழ் தேசியம் , வடகிழக்கு இணைப்பு , சுயாட்சி . ஆனால் சுமந்திரனால் கூட்டமைப்பு டக்கிளஸ் இனை காட்டிலும் மோசமான எலும்பு பொறுக்கிகள் ஆகி விட்டார்கள் ... இனி இவர்களும் டக்கிலஸும் ஒன்றுதான் .....துரோகிகள்
 6. யாரின் சாபமோ தெரியவில்லை தமிழருக்கு , தற்போது சம்பந்தன் சுமந்திரன் என்கின்ற நபர்களால் நாம் சிதைவடைகின்றோம் .....அனுபவிப்பார்கள்
 7. ஐ.நா மனித உரிமைகள் ஆணையம் விதித்த நிபந்தனைகளை இலங்கை அரசு நிறைவேற்றுவதற்கு மேலும் இரண்டு ஆண்டுகள் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இந்தக் கால அவகாசம் என்ற சொற்பதம் இலங்கை அரசுக்கும் ஐ.நா மனித உரிமை ஆணையத்துக்கும் பொருந்துவதாகும். இதே கால அவகாசம் என்பதைக் கூட்டமைப்பின் மொழியில் கூறுவதாயின், இலங்கை மீதான ஐ.நாவின் மேற்பார்வை என்றும் அது மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு நீடிக்கப் பட்டுள்ளது என்றே கூறவேண்டும். ஆக, இலங்கை அரசுக்குக் கால அவகாசமாக இருப்பது கூட்டமைப்புக்கு ஐ.நாவின் மேற்பார்வையாக இருக்கிறது. இங்கு ஒரு சொல் இரு வகையாகக் கையாளப்படுகின்றதேயன்றி, இரு வகைச் சொற்பதத்தினதும் பொருள் ஒன்றுதான் என்பது புரிதற்குரியது. அதாவது இலங்கை அரசும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் தமிழ் மக்களை ஏமாற்று வதற்குப் பயன்டுத்துகின்ற சொற்பதமே கால அவகாசம் என்பதும் மேற்பார்வை என்பது மாகும். இதை நாம் கூறும்போது, கால அவகாசத்தை கூட்டமைப்பு ஐ.நாவின் மேற்பார்வை என்கிறதே! ஐ.நாவின் மேற்பார்வை தமிழ் மக்களுக்கு உரிமையைப் பெற்றுத்தருமா என்ற கேள்வி உங்களிடம் ஏற்படவே செய்யும். அப்படியயாரு கேள்வி ஏற்பட்டால் அது தேவையற்ற கேள்வி எனலாம். ஆம், ஈழத் தமிழினத்தை தமிழ் அரசியல் தலைமை விற்றுவிட்டது. இனி கால அவகாச மும் இல்லை. ஒரு மண்ணாங்கட்டியும் இல்லை. 2021ஆம் ஆண்டு வழமைபோல் ஐ.நா மனித உரிமை ஆணையத்தின் கூட்டத் தொடர் ஜெனிவாவில் ஆரம்பமாகும். அப்போதும் இலங்கை அரசு எந்த நிபந்தனைகளையும் நிறைவேற்றியிராது. அதேநேரம் இலங்கை அரசு கால அவகாசமும் கேட்காது. மாறாக இணை அனுசரணையில் இருந்து இலங்கை விலகுவதாக அறிவிக்கும். கூடவே, எங்கள் நாட்டு நீதிபதிகள் மூலம் விசாரணை நடத்திவிட்டோம். போர்க்குற்றம் எதுவும் நடைபெறவில்லை. இலங்கைப் படையினர் தேசத்தைக் காப்பாற்றியுள்ளனர் என இறுமாப்புடன் இலங்கை ஆட்சியாளர்கள் கூறுவர். இது நிச்சயம் நடக்கும். ஆக, கால அவகாசம் என்பது தமிழ் மக்களை ஏமாற்றுவதற்கான ஒரு செப்படி வித்தை மட்டுமே. என்ன செய்வது எங்கள் இளைஞர்கள் தங்கள் உயிரைத் தியாகம் செய்து ஒரு சிலருக்குக் கோடி உழைத்துக் கொடுத்துள்ளனர். கோடி பெற்றவர்கள் இறந்த தமிழ் உறவுகளுக்கு மட்டுமல்ல, உயிரோடு இருக்கின்ற தமிழ்மக்களுக்கும் சேர்த்து மண் போட்டுள்ளனர். ஓ! தமிழினமே இன்னமும் நீ அவர்களை நம்பியிருந்தால், அது நீ செய்த ஊழ்வினைப் பயனேயன்றி வேறில்லை. http://www.valampurii.lk/valampurii/content.php?id=18070&ctype=news
 8. இணை அனுசரணைக்கு இணங்கி இலங்கை அரசு கையயாப்பமிட்டால், அது கலப்பு நீதிமன்றை ஏற்றுக்கொள்வதாகவே பொருள்படுமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் பாராளுமன்றத்தில் வைத்துக் கூறியுள்ளார். கலப்பு நீதிமன்றுக்கு உடன்பட மறுத்தால், பன்னாட்டு நீதிமன்றுக்கு எடுத்துச் செல்வோம் என்றும் அவர் எச்சரித்துள்ளார். நல்லது. தமிழனத்தின் அழிப்பை; வன்னிப் பெருநிலப்பரப்பில் தமிழ் மக்கள் கொல்லப்பட்டதை; ஆயிரக்கணக்கானவர்கள் காணாமல் போனதை; போர்க்குற்றம் நடந்ததை பன்னாட்டு குற்றவியல் நீதிமன்றுக்குக் கூட்டமைப்பு எடுத்துச் சென்றால் அது வரவேற்கத்தக்கது. ஆனால் அது நடக்குமா? உங்களால் அது முடியுமா? என்பதுதான் நம் கேள்வி. இலங்கையில் நடந்த போர்க்குற்றத்தை சர்வதேச குற்றவியல் நீதிமன்றுக்கு எடுத்துச் செல்வோம் என்று இப்போது கூட்டமைப்பினர் மார்தட்டுகின்றனர். இலங்கை அரசுக்கு மேலும் இரண்டு வருட கால அவகாசம் வழங்குவதற்கு மறைமுகமாக உதவி செய்துவிட்டு, பாராளுமன்றத்தில் வைத்து அப்படிச் செய்வோம். இப்படிச் செய்வோம் என வீராப்புப் பேசுவது உங்கள் மனச்சாட்சிக்கு ஏற்புடையதா? என்பதை கூட்டமைப்பே தீர்மானிக்க வேண்டும். வெளிநாட்டு நீதிபதிகளும் பங்கேற்கக் கூடியதான கலப்பு நீதிமன்றை இலங்கை அரசு நிராகரித்தால், பன்னாட்டு குற்றவியல் நீதிமன்றுக்குக் குறித்த விவகாரத்தைக் கொண்டு செல்வோம் என்று கூறுகின்ற கூட்டமைப்பினர், இதுவரைக்கும் அப்படியாரு முடிவை எடுக்காததற்குக் காரணம், வன்னியில் கொன்றொழிக்கப்பட்ட தமிழர்களின் எண்ணிக்கை காணாதா? அல்லது காணாமல்போனவர் களின் எண்ணிக்கை போதாதா? அல்லது தமிழ் அரசியல் கைதிகளுக்கு விடுதலைகிடைத்துவிட்டதா என்ன? செய்ய வேண்டியதை செய்யாமல், கிடைத்த சந்தர்ப்பங்களைப் பயன்படுத்தாமல் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் அரசுடன் சேர்ந்து தமிழ் மக்களுக்குஈனம் செய்து விட்டு, இப்போது அரசாங்கத்தை எச்சரிப்பதென்பது நகைப்புக்குரியது. அன்புக்குரிய கூட்டமைப்பினரே! கலப்பு நீதிமன்றை நிராகரிக்கிறோம் என்று இலங்கையின் வெளியுறவு அமைச்சர் திலக் மாரப்பன ஐ.நா மனித உரிமை ஆணையத்தின் கூட்டத்தொடரில், பன்னாட்டுப் பிரதிநிதிகள் முன்னிலையில் கூறியுள்ளார். ஆக, திலக் மாரப்பன கூறியதை மறுக்க வேண்டிய பொறுப்பு ஐ.நா ஆணையர் அல்லது வெளிநாட்டுப் பிரதிநிதிகளுடையதாகும். ஆனால் அவர்கள் திலக் மாரப்பனவின் உரையை நிராகரிக்கவில்லை. நிலைமை இதுவாக இருக்கையில், கலப்பு நீதிமன்றை நிராகரிப்பதாக திலக் மாரப்பன இலங்கையில் கூறியதுபோல கூட்டமைப்புக் கருத்துக்கூறுவது எந்த வகையிலும் பொருத்தமற்றதும் தமிழ் மக்களை ஏமாற்றுவதுமான செயலாகும். http://www.valampurii.lk/valampurii/content.php?id=18076&ctype=news
 9. இலங்கைத் தமிழரசுக் கட்சியினருக்கு அன்பு வணக்கம். நீண்ட நெடுநாளாய் உங்களுக்குக் கடிதம் எழுதுவதை தவிர்த்து வந்தோம். காரணம் எழுதுகின்ற கடிதங்களுக்கு எந்தப் பதிலும் இல்லை எந்தப் பலனும் இல்லை. இருந்தும் ஐ.நா மனித உரிமைகள் ஆணையத்தின் கூட்டத்தொடரில் இலங்கை. விவகாரம் கையாளப்பட்ட விதம் கண்டு அடைந்த வேதனையின் பாற்பட்டு இக்கடிதம் எழுதுகின்றோம். இந்தக் கடிதம் ஏதேனும் பயனுடையதாக இருக்குமா என்பதை நாமறியோம். இருந்தும் எழுதுகின்ற இக்கடிதத்தால் நாமும் எம்போன்ற மனநிலையில் இருப்பவர்களும் ஆற்றுப்பட வாய்ப்புண்டு. இப்போதிருக்கின்ற நிலைமையில் ஆற்றுப்படுத்தல் அவசியமாகின்றது. அந்தவகையில்தான் இக்கடிதம் எழுதப்படுகிறது. இருந்தும் தமிழரசுக் கட்சி உறுப்பினர்கள் இருக்கிறார்களா? என்பது கூடத் தெரியாத அளவில் ஒரு பெரும் கட்சி ஒரு சிலரிடம் மாட்டுப்பட்டு தன்னிலை இழந்து நிற்பது தெரிகிறது. என்ன செய்வது அடுத்த தேர்தலில் கதிரை தேவை என்றிருந்தால், மெளனம் காப்பது தான் ஒரே வழி என்று நீங்கள் நினைத்திருக்கலாம். ஆனாலும் வடக்கு மாகாண சபையில் முதலமைச்சர் விக்னேஸ்வரனை இயங்கவிடாமல் தடுப்பதில் ஊன் உறக்கம் மறந்திருந்த தமிழரசுக் கட்சியின் முக்கிய உறுப்பினர்கள் இப்போது எதுவும் கதைப்பதாகத் தெரியவில்லை. என்ன செய்வது முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை இயங்கவிடக்கூடாது. அவருக்கு எதிராக நீங்கள் சபையில் செயற்பட வேண்டும் என்ற கட்சியின் தலைமையிட்ட கட்டளையை நீங்கள் செய்யாவிட்டால் உங்கள் கதிரைகளும் அவுட்டாகியிருக்கும். ஆகையால் கூலிக்கு மாரடித்தீர்கள். பரவாயில்லை. இப்போது நீங்கள் ஆதரித்த - நீங்கள் காப்பாற்றிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கலப்பு நீதிமன்றம் என்ற பேச்சுக்கே இடமில்லை என்று கூறியிருக்கிறார். நீங்கள் ஆதரித்த பிரதமர் இவ்வாறு கூறியிருப்பது பற்றி நீங்கள் பேசாமல் இருந்தால், அதன் பொருள் அவரின் கருத்துக்கு நீங்களும் ஆதரவு என்றாகிவிடும். தவிர, தொடர்ந்தும் பிரதமர் ரணிலின் அரசை ஆதரித்தால், வரவு செலவுத் திட்டத்துக்கு ஆதரவாக உங்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள் கையுயர்த்தினால், பிரதமர் ரணில் விக்கிரம சிங்கவின் நிலைப்பாட்டை நீங்கள் ஆதரிப்பதாகவே பொருள்படும். ஆகையால் இதுவிடயத்திலேனும் தமிழரசுக் கட்சியினராகிய நீங்கள் குரல் கொடுக்க வேண்டும் என்பதுதான் இக்கடிதம் எழுதுவதன் முக்கிய நோக்கமாகும். தவிர, ஜனாதிபதி மைத்திரியோடும் நீங்கள் சமச்சீரான உறவு நிலையைப் பேணியிருந்தால் இன்று அரசியலில் ஏற்பட்டிருக்கின்ற மிகப்பெரும் மாற்றம் தவிர்க்கப்பட்டிருக்கும். அதுவும் உங்களால் முடியவில்லை. வரவு செலவுத் திட்ட வாக்கெடுப்பிலாவது ஒரு நிறுதிட்டமான முடிவை எடுங்கள் http://www.valampurii.lk/valampurii/content.php?id=18088&ctype=news
 10. ஏமாற்றாதே ஏமாறாதே... என்பது மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். நடித்த அடிமைப் பெண் என்ற சினிமாப் படத்தில் வரும் பாடல் வரிகளாகும். நம்ப நட, நம்பி நடவாதே என்ற பழமொழியைப் புதுப்பித்து கவிஞர் வாலி கொடுத்த புதுவடிவமே மேற்போந்த பாடலாகும். ஏமாற்றுதல் மிக மோசமான கொடுஞ்செயல். அதிலும் நம்ப வைத்து ஏமாற்றுதல் என்பது நம்பிக்கைத் துரோகம் என்பதன் பாற்பட்டதாகும். நம்பிக்கைத் துரோகம் செய்பவர்கள் ஏழு பிறப்புக்கும் தங்கள் பாவத்தை கழுவாய் செய்ய மாட்டார்கள் என்று சமயதத்துவங்கள் கூறிநின்றாலும் இன்னமும் நம்பவைத்து ஏமாற்றுகின்ற நாடகங்கள் மனித சமூகத்தில் நடக்கவே செய்கிறது. அதிலும் ஏமாற்றுகின்ற வடிவங்கள் வேறுபட்டவையாக இருப்பதுதான் விசித்திரம். இப் போதெல்லாம் ஏமாற்றுகின்றவர்கள் தொலைபேசி, மின்னஞ்சல் உள்ளிட்ட தகவல் தொடர்பாடல் முறைகளினூடு ஏமாற்றுகின்றனர். உங்களுக்கு ஐந்து இலட்சம் ரூபாய் பணம் அதிர்ஷ்டத்தின் மூலம் கிடைத்திருக்கிறது. அதைப் பெற்றுக் கொள்வதற்கு முன்னதாக ஐம்பதாயிரம் ரூபாயை எமக்கு அனுப்பி வையுங்கள் என்றவாறான ஏமாற்றுத்தனங்களுக்குக் குறைவே இல்லை. என்ன செய்வது ஏமாறுபவர்கள் நம் மத்தியில் இருக்கும்வரை ஏமாற்றுபவர்களும் நம்மோடு இருக்கவே செய்வர். இது ஒரு கதை. ஒரு நாட்டு மன்னனை ஒருவன் சந்தித்தான். மன்னா நான் அயல் நாட்டில் வசிக்கும் நெசவாளி. மிகத்தரமான ஆடைகளை நெய்யும் திறன் என்னிடம் இருக்கிறது. நீங்கள் அனுமதித்தால், உங்களுக்கு மிகவுயர்ந்த தரத்தில் ஆடை நெய்து தருவேன் என்றான். நெசவாளியை நம்பிய மன்னன் ஆடை தயாரிப்புக்காகப் பெருந்தொகைப் பணத்தைக் கொடுத்தான். சில மாதங்கள் ஆகிய பின்பு மீண்டும் அந்த நெசவாளி மன்னனிடம் வருகிறான். வரும் போது கையில் எதையோ ஏந்தி வைத்திருப்பது போன்ற பாவனையில் கையை வைத்திருந்தான். மன்னா உங்களுக்கான ஆடை தயாராகி விட்டது. இதில் நவரத்தினங்கள் பதிக்கப்பட் டுள்ளன. ஆனால் ஒரு முக்கிய விடயம் உண்டு. இந்த ஆடையானது அறிவாளிகளுக்கும் நல்லவர்களுக்கும் மட்டுமே தெரியும் என்றான். நெசவாளி கூறிய அந்த விடயத்தை மன் னர் சபையில் இருந்த மந்திரி பிரதானிகளும் செவிமடுத்தனர். என் கையில் வைத்திருக்கும் இந்த மிக உயர்ந்த பெறுமதியான ஆடை எப்படியிருக்கிறது மன்னா என்று கேட்டான் நெசவாளி. மன்னனுக்கு ஆடை தெரியவே இல்லை. இருந்தும் நல்லவர்களுக்கும் அறிவாளிகளுக்கும் மட்டுமே அந்த ஆடை தெரியும் என்று ஏலவே நெசவாளி கூறியதால், ஆடை பிர மாதம் என்றான் மன்னன். மன்னனைப் போலவே அமைச்சர்களுக்கும் அந்த ஆடை கண்ணுக்குத் தெரியவில்லை யானினும் அவர்களும் மிகச் சிறந்த ஆடை எனக் கூறினர். இப்போது மன்னனுக்கு ஆடை அணிவிக் கப்படுகிறது. அந்தோ! ஆடையின்றி மன்னன் நிர்வாணமாகக் காட்சி தருகிறான். அனைவருக்கும் மன்னன் நிர்வாணமாக நிற்பது தெரிகிறது. இருந்தும் ஆடை தெரியா விட்டால், அறிவற்றவர் என்றும் நல்லவர் அல்ல என்றும் ஆகி விடும் என்பதால் எல்லோரும் ஆடை பிரமாதம் என்று கூறினர். மன்னனை வீதி உலா கொண்டு செல்கின்றனர். அந்த வீதியில் ஆடு மேய்த்துக் கொண்டு நின்ற சிறுவன் ஒருவன் மன்னனைப் பார்த்து விட்டு, இங்கே பாருங்கள் மன்னர் நிர்வாணமாகப் போகிறார் என்றான். அப்போதுதான் நிலைமை புரிந்தது. இதுதான் எங்கள் தமிழ் அரசியலில் இப்போது நடக்கிறது. http://www.valampurii.lk/valampurii/content.php?id=18134&ctype=news