Jump to content
களத்தில் உள்நுழையும் வழிமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலதிக விளக்கங்களிற்கு

நீர்வேலியான்

கருத்துக்கள உறவுகள்
 • Posts

  277
 • Joined

 • Last visited

Profile Information

 • Gender
  Male
 • Location
  United States
 • Interests
  Reading

Recent Profile Visitors

1,575 profile views

நீர்வேலியான்'s Achievements

Collaborator

Collaborator (7/14)

 • Very Popular Rare
 • Reacting Well Rare
 • Dedicated Rare
 • Conversation Starter
 • First Post

Recent Badges

164

Reputation

 1. எனது சிறு வயதில் அப்பாவும் சிங்கள இடத்தில வேலை செய்ததால் இதை அப்பிடியே பொருத்திப்பார்க்க கூடியதாக இருக்கிறது. இவர் 92/93களில் பரியோவான் கல்லூரிக்காக கிரிக்கெட் விளையாடியவரா? இல்லாவிட்டால் வேறு ஒருவரை நினைத்து இவரை குழப்பிக்கொள்கிறேனோ தெரியவில்லை
 2. நானும் கிட்டத்தட்ட இப்பிடித்தான் யோசித்தேன். மிருசுவிலில் பலரை கொலை செய்தவன் இலகுவாக வெளியில் வரும்போது, இதுக்கு ஏன் இவ்வளவு அலப்பறை.
 3. ஆம் பேராதனையில் இருந்த காலங்கள் மறக்கமுடியாதவை, அப்பொழுது தமிழர்களும் நிறைய அங்கு படித்தார்கள்
 4. இந்த நேரத்தில் மிகவும் தேவையான, சிறப்பான பதிவு. இதைவிட மாட்டு முத்திரம், மாட்டு சாணம், ராமதேவ் பாபா வின் Coronil என்று வடஇந்தியா களைகட்டுது. நாங்கள் பேராதனையில் இருந்த காலத்தில், கரடித்தைலம் போட்டால் முடி வளரும் அல்லது கொட்டுவது நின்று விடும் என்று யாரோ ஒருத்தன் புரளியை கிளம்பிவிட, பொலநறுவையில் இருந்து அதை எடுத்து கொண்டு வா என்று அங்கிருந்து வந்த ஒருவனுக்கு நிறைய பிரஷர் போனது.
 5. சிறி, இன்னும் காலம் போகவில்லை தயவு செய்து உங்கள் சபதத்தை மறுபரிசீலனை செய்யுங்கள், உடம்பு தாங்கினாலும் நாடு தாங்காது
 6. எனக்கு இது முதலே தெரிந்தபடியால் ஒரு தகவலுக்காக மாத்திரம் இங்கே பதிகிறேன்: Leon Lederman என்ற விஞ்ஞானி 90களில் தனது புத்தகத்தில் இந்த ஹிக்ஸ் போஸான் (Higgs Boson) துகளுக்கு ஆரம்பத்தில் வைத்த செல்ல பெயர் "God Damn Particle". இந்த துகளை இப்பிடி, இப்பிடி இருக்க வேண்டும் என்று முதலே வரையறை செய்துவிட்டார்கள், ஆனால் இதை தேடுவதில் அல்லது உருவாக்குவதில் உள்ள கஷ்டத்தை கருத்தில் கொண்டு நகைச்சுவையாக அவர் இவ்வாறு "God Damn Particle" என்று பெயர் வைத்தார், இந்த புத்தகத்தை வெளியிட முன்வந்த publisher இந்த பெயரை ஏற்றுக்கொள்ளவில்லை, இந்த பெயர் வாசிப்பவர்களுக்கு நன்றாக இருக்காது என்பதால், இதை "God Particle - கடவுளின் துகள்" என்று மங்களகரமாக மாற்றினார்கள். மற்ற துகள்கள் போன்று இதுவும் ஒரு அடிப்படை துகள், வேறு விசேசம் ஒன்றும் கிடையாது. இது தேவையற்ற குழப்பங்களை ஏற்படுத்தும் என்பதால் பலர் கடவுளின் துகள் (God Particle) என்ற பெயரையும் ஏற்றுக்கொள்ளவில்லை. அவர்கள் சொல்லியது போல் பின்னாளில் இந்த துகள் தேவை அற்ற முறையில் கடவுளுடன் தொடர்புபடுத்தப்படுகிறது
 7. இப்பிடித்தான் நானும் யோசித்தேன், ஏதாவது ஒருவகையில் வரலாற்றை மாற்றி எழுத முனைகிறார்கள், முக்கியமாக சிங்களவர்களுக்கு ஊட்ட நினைக்கிறார்கள், இது அவ்வளவு இலகுவாக இருக்காது, இது ஒரு கற்னை கதை என்பது நிரூபிப்பது கஷ்டமல்ல, அதை நாங்கள் செய்வதே எங்கள் எதிர்காலத்துக்கு சரியாக இருக்கும், பத்தாதுக்கு நாங்களும் எங்கள் மண்ணுக்கு சம்பந்தமே இல்லாமல் புதுசு புதுசாக ராமர்/லக்ஷ்மிநாராயணன்/ஆஞ்சநேயர் கோவில் என்று இலங்கையில் புது புதுசாக வட இந்தியாவில் இருந்து இறக்கிக்கொண்டு இருக்கிறோம். வட இந்திய அடையாளத்துக்கு மாறிக்கொண்டு இருக்கிறோம். இது எப்பிடி முடியும் என்றால் நாங்கள் வந்தேறிகளாகவும், அவர்கள் ராவணனின் வழி வந்த மண்ணின் மகிந்தர்களாகவும் அடையாளப்படுத்துவதிலேயே முடியும். நாங்கள் எவ்வளவுதான் காலை சுத்தி வந்தாலும் இந்த மோடி குரூப் எங்களை ஒருபோதும் ஆதரிக்க போவதில்லை. காலம் காலமாக ஆரியர்களின் வழி வந்தவர்கள் தங்களுக்கு ஏற்ற மாதிரி வரலாற்றை மாற்றி எழுதுவதில் உள்ள திறமை உண்மையிலேயே ஆச்சரியப்படுத்தும் விடயம்
 8. இவர்களின் சில வீடியோகள் முன்பு பார்த்துளேன், இவர்கள் பொதுவாக RSS ஐ target பண்ணுபவர்கள், முன்பு RSS இல் இருந்து வெளியேறியவர்களை பேட்டி கண்டு வெளியிட்ட வீடியோ ஒன்று சிறப்பாக இருந்தது. திராவிட இயக்கங்களுடன் முக்கியமாக திமுக தொடர்பில் உள்ளார்கள் என்று தெரிகிறது. சில காலங்களுக்கு முன்பு வந்த இந்த விடியோவை வைத்து இப்போது பிரச்னை கிளப்புவதில் இருந்து இதன் பின்புலம் சந்தேகமாக உள்ளது. இதை சங்கிகள் எதிர்ப்பதை புரிந்துகொள்ளக்கூடியதாக உள்ளது, ஆனால் இந்த ஒரு விடீயோவை வைத்து சங்கிகளின் குயுக்திக்கு தமிழ் இயக்கங்களும் சேர்ந்து தாளம் போடுவது சகிக்க முடியாமல் உள்ளது. எங்கே என்று பார்த்துக்கொண்டு இருந்திருக்கிறார்கள், அதற்கு நாங்களும் சேர்ந்து துணை போகிறோம். தமிழ் இயக்கங்கள் பிஜேபி ஆதரவு இயக்கங்களாக வளர்ந்து வருவது எங்களுக்கு நல்லதல்ல.
 9. இவர்களின் தளத்தை அறிமுகப்படுத்தியத்துக்கு நன்றி, இவர்கள் வேறு வேறு விடயங்களில் இன்னும் பல விடீயோக்களும் வைத்திருக்கிறார்கள், தமிழில் பார்க்கும்போது மிகவும் நனறாக உள்ளது.
 10. உடையார், உண்மையில் ரசித்து பார்த்தேன், நன்றாக இருந்தது, தொடர்ந்து இணையுங்கள்
 11. இவரது வாழை தோட்டதையும், செம்பாட்டு மண்ணையும் பார்க்க ஊர் ஞாபகம் வருகிறது, இவர் எந்த ஊர் என்று தெரியவில்லை
 12. சிறி, வீட்டில் தேங்காய் எப்பவுமே துருவி பிரிட்ஜ்ல் இருக்கும், ஆனாலும் அதை பால் புழிந்து வேஸ்ட் ஆக்க விரும்பவில்லை, எனவே டின் இல் உள்ள தேங்காய் பால் தான் பாவித்தேன், இரண்டாம் பாலுக்கு சிறிது தண்ணீர் அதிகமாகவும், முதலாம் பாலுக்கு தண்ணீர் குறைவாகவும் சேர்த்தேன். நீங்கள் படத்தில் போட்ட நீங்கள் சொல்வது போல் அரிசி களைய பயன்படுத்துவது என்று நினைக்கிறன், இவர் சமைத்த பாத்திரம் இரும்புச்சட்டி போல் இருந்தது, கைபிடிதான் கொஞ்சம் வித்தியாசமாக இருந்தது.
 13. சுவி, நாங்கள் வெளிநாட்டுக்கு வந்தபின் ஆட்டிறைச்சி சமையல் முறை மாறிவிட்டது. ஊரில் முன்பு இப்படி நாங்கள் எல்லாம் சமைத்து சாப்பிட்டதுதான். நீண்ட காலத்துக்கு பிறகு இன்று வித்தியாசமாக இப்பிடி சமைத்து பார்த்தேன், உண்மையிலேயே நன்றாக இருந்தது, பழைய நினைவுகளும் அத்தோடு வந்தது. காணொளிக்கு நன்றி
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.