Jump to content

நீர்வேலியான்

கருத்துக்கள பார்வையாளர்கள்
 • Posts

  401
 • Joined

 • Last visited

 • Days Won

  1

Everything posted by நீர்வேலியான்

 1. இது ஓரளவுக்கு ஏற்றுக்கொள்ளதக்கது, நீண்டுகொண்டு போவதால் வரும் பலமான பொருளாதார அடி, இனியொரு யுத்தம் வரும்பொழுது எல்லோரையும் யோசிக்க வைக்கும். இங்கு அமெரிக்காவில், முன்பு இராக் , ஆப்கானிஸ்தான் காலம் போல் இல்லாமல், தற்பொழுது யுத்தத்துக்கு மக்கள் மத்தியில் ஆதரவு குறைந்து கொண்டு வருகிறது
 2. சூப்பர், என்னால் இப்பிடி எழுத முடியவில்லை. இந்த திரி ரஷ்யாவை சார்ந்து போவதால், எனது கருத்து. இந்த புடின் மீதான தனிப்பட்ட காதல், எவ்வளவு யோசித்தாலும் ஏனென்று புரியவில்லை. ரஷ்யாவின் வரலாறே அக்கம் பக்கம் உள்ள தேசிய இனங்களை விழுங்கி ரஸ்சியர்களை முன்னிலைப்படுத்தி இடங்களை பிடித்தல். நமக்கு மணலாறிலும், கிழக்கிலும் நடந்தது போல. புடின் அதிகாரத்ததுக்கு வந்த பின்னர் இது இன்னும் வேகமாக நடைபெறுகிறது. அங்கு நாங்கள் இவ்வளவு அடி வாங்கியபின்னரும், மற்றவனுக்கு நடக்கும்போது எப்பிடி சிரிக்க முடியுது. ரஷ்யாவின் பக்கத்தில் இருக்கும் நாடுகளுக்கு இருப்பது இரு தெரிவுகள்தான், ஒன்று ரஸ்சியாவிற்கு அடங்கி அவர்களின் சுயத்தை இழப்பது, அல்லது எதிர்த்து தங்கள் சுயத்தை பாதுகாப்பது. உக்கிரேன் ரஸ்சியாவிற்கு அடங்கி இருந்திருக்க வேண்டும் என நினைப்பவர்கள், மறைமுகமாக எங்கள் போராட்டம் தவறு, நாங்களும் சிங்களவர்களுக்கு அடங்கி இருந்திருக்க வேண்டும் என்பதை ஆதரிப்பவர்கள். புடினின் மேலுள்ள காதல், உக்கிரைன் ரஸ்சியாவின் ஒரு பகுதி என்று சொல்லுமளவுக்கு வந்துள்ளது, இதை ரசிஷ்யர்களே எதிர்பார்க்க மாட்டார்கள். இந்த நாடுகள் எல்லாம் ஏன் நேட்டோவிற்கு ஓடுகிறார்கள் என்பதை ஊகிக்க ராக்கெட் சயின்ஸ் படித்திருக்க தேவையில்லை, அதேபோல் நேட்டோ ஏன் இவர்களை பாவிக்கிறார்கள் என்பதும் எல்லோருக்கும் தெரியும். ரஷ்யா நினைத்திருந்தால் அக்கம் பக்கத்து நாடுகளின் உரிமையை/சுயத்தை அங்கீகரித்து, அனுசரித்து பெரியண்ணன் ஆக இருந்திருக்கலாம், மேற்கு செய்வது இப்படித்தான், ஆனால் செய்ததோ பழைய ஸ்டைலில் பக்கத்து நாடுகளை பிடித்தல், அவர்களை கொத்திக்கலைத்து மற்றவனிடம் சேர்த்து விடுதல். இன்னுமொரு விளங்காத விஷயம், ரணிலுக்கு வாழ்த்து தெரிவித்ததால் எப்பிடிபுடின் நல்லவராகி விட்டார் என்று புரியவில்லை, யாரவது புரிகிறமாதிரி சொல்லுங்கள். "எமது" ஜனாதிபதியின் மேல் அவ்வளவு பாசமா எங்களுக்கு? பிகு: உங்கள் வசந்தகால விடுமுறை கிளுகிளுப்பாக போக வாழ்த்துக்கள்
 3. உண்மை, மதம் பிடித்து மீண்டு வந்த நாடுகள் தற்போது எதுவுமே இல்லை. மேலை நாடுகள் அரம்பத்திலேயே மதத்தையும் அரசியலையும் கலக்காமல் வேறுபடுத்தியதால் தப்பி விட்டார்கள். அமெரிக்காவில் மீண்டும் மதவாதிகளின் பிடி கொஞ்சம் அதிகரித்து வருகிறது, அல்லது வருவது போன்ற ஒரு தோற்றம் வருகிறது ஆனாலும் ஒரு கட்டத்துக்குமேல் இங்கு போகமுடியாது என்று நினைக்கிறேன். மற்ற மத நாடுகளை விட இந்தியாவில் நடப்பதில் அடிப்படையில் ஒரு வித்தியாசம் உள்ளது, இங்கு மதரீதியான இணைவதுடன், ஒரு குறிப்புட்ட பிரிவினர்களை முன்னிலைப்படுத்தி, அவர்களின் கீழ் மீண்டும் வர்ணாசிரம தர்மத்தை கொண்டுவரும் முயற்சி முழு மூச்சாக நடைபெறுகிறது.
 4. ரணில் வருவார், சஜித் உடன் போட்டியாக இருக்கும், டலஸ் இற்கு ஆதரவு கிடைப்பது கடினம் என்று நினைக்கிறேன். சுமந்திரன், சம்பந்தர் போன்றோருக்கு உண்மையிலேயே போட்டி போடும் எண்ணம் உள்ளதா?
 5. எனக்கும் புரியவில்லை, இதைத்தான் நானும் யோசித்துக்கொண்டு இருக்கிறேன், இவ்வளவு தூரம், இவ்வளவு பேரை organize பண்ணி செய்வது என்றால் பின்னணி பெரிதாக இருக்க வேண்டும். ராணுவத்தை, வன்முறையை பாவிக்கக்கூடாது என்று அமெரிக்கத்தூதுவர் போராட்டதுக்கு முன்னமே சொல்லுகிறார், இந்த அளவுக்கு நடக்க போகுதென்று முதலே அவருக்கு தெரிகிறது?
 6. அவரின் பெயர் கடைசியில் ஒரு லிஸ்ட் இல் வந்தது, இங்கும் ஒருவர் முன்பு அந்த லிஸ்டை இணைத்திருந்தார். கோத்தாவின் மனைவி இன்னமும் அமெரிக்க பிரஜை, ஆகவே கோத்தா நேரடியாக அமெரிக்கா போவது கடினமானதல்ல
 7. மதவெறி பற்றி சரியாக சொல்லியுள்ளீர்கள். அரபு நாடுகளின் இப்போதைய ஒன்றுபட்ட எதிர்ப்பிற்கு, வெறும் இந்தக் கருத்து மாத்திரம் காரணமல்ல, பிஜேபி முஸ்லிம்களுக்கு 8 வருடங்களாக செய்வதை பார்த்துக்கொண்டு இருந்து விட்டு தகுந்த சந்தர்ப்பம் கிடைக்கும்போது சேர்ந்து அடிக்கிறார்கள் என்று நினைக்கிறேன். மற்ற விடயங்களில் அரபு நாடுகளினால் சும்மா மூக்கை முடியாது, இது நல்ல சந்தர்ப்பம். காவிகளுக்கு இன பாசம் அதிகம், நாங்கள் என்னதான் இந்துக்கள் என்று கத்தினாலும் ஒன்றும் நடவாது.
 8. கோஷன், எங்களது நிலையை இதைவிட சிறப்பாக சொல்ல முடியாது, நன்றாக தொகுத்துள்ளீர்கள். நாட்டை அரசு நாசமாக்கியதுக்கு, அங்கிருக்கும் நமது மக்களை குறை சொல்ல முடியாது. இப்பிடியான இயந்திரங்கள், automation என்பது தவிர்க்க முடியாது. நாங்கள் இங்கு அதை அனுபவித்துக்கொண்டு, அவர்கள் அங்கே பழைய முறைகளை backup ஆக, உடனடியாக பாவிக்கும் நிலையில் வைத்திருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது, பொருளாதார நிலையில் சாத்தியமில்லாதது. மாடுகளை வைத்து உழுவது நான் அங்கிருக்கும் காலத்திலேயே ஏறக்குறைய வழக்கொழிந்து போயிட்டது, திடீரென மாடுகளை இதற்கென வளர்த்து, பழக்கி, பெரிய அளவில் தோட்டம் செய்து, விளைச்சலை பெருக்குவதென்பது உடனடியாக சாத்தியமில்லாதது. இப்போதைக்கு செய்யக்கூடியது அவரவர் வீடுகளில் சிறு தோட்டங்கள் செய்து, ஓரளவுக்கு சமாளிப்பது. நாட்டின் பொருளாதாரம் மீண்டால் ஒழிய, கஷ்டம்தான். நீங்கள் சொன்ன ஆட்கள் பற்றாக்குறையென்பது, 2019இல் போனபோது நான் நேர பார்த்திருக்கிறேன். சாதிய அடிப்படையில் வேலை செய்பவர்களுக்குத்தான் அதிக பற்றாக்குறை. அவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக சாதிய அடிப்படையில் தங்களுக்கு விதிக்கப்பட்ட தொழில்களை விட்டுவிட்டு, படித்த, எமது சமூகத்தின் பார்வையில் கவுரவமான வேலைகளை தேடிப்போகிறார்கள். மா இடிப்பவர்களும், தோட்டம் கொடுப்பவர்களும், விட்டு வேலை செய்பவர்களுக்கும்தான் தேவை அதிகம், ஆனால் அதை நாங்களும் செய்யமாட்டோம், அதிக சம்பளமும் கொடுக்க தயாரில்லை.
 9. அதிமுக செய்தது அடிமை வாழ்க்கை, எல்லாத்துக்கும் தலையை ஆட்டிக்கொண்டு இருப்பது, அது தமிழ் நாட்டுக்கும் தமிழர்களுக்கும் நல்லதல்ல, ஜெயலலிதா இருந்திருந்தால் நிலைமை வேறுமாதிரி இருந்திருக்கும், ஜெயலலிதா இருந்தவரைக்கும் நன்றாக இருந்த நிதி நிலைமையையும், பிறகு மிக மோசமானது.
 10. சரியான நேரத்தில் சரியான இடத்தில செய்த ஒரு முயற்சி, இது எவ்வளவுதூரம் போகும் என்று ஒருவருக்கும் தெரியாது, ஆனால் சந்தர்ப்பங்கள் கிடைக்கும்போது செய்யும் இப்பிடியான நிகழ்வுகள், புரிந்து கொள்ளக்கூடிய சிங்கள மக்கள் சிலருக்காவது ஓரளவுக்கு உண்மையான நிலைமையை தெளிவுபடுத்தலாம். முழுமையான நம்பிக்கை இல்லாவிட்டாலும், இப்பிடி எங்களுக்கு சாதகமான நிலைமைகள் வரும் பொழுது, இனி என்ன ஏமாற்றங்கள் வரப்போகின்றதோ, அல்லது என்ன நடக்கபோகிறதோ என்று ஒருவித uneasiness வருவதையும் தடுக்க முடியவில்லை
 11. உங்கள் முயற்சி ஒரு மலைப்பூட்டும் விடயம், நீங்கள் தொடர்ந்து தளராது இப்பிடியான விடயங்களை ஆவணப்படுத்துகிறீர்கள், வாழ்த்துகள். வேறு எந்த நாட்டு விடுதலை இயக்கங்களும் செய்திராத, பாரிய ஒரு கட்டமைப்பை உருவாக்கியிருந்தார்கள், எல்லாம் போய்விட்டது
 12. ஊரில் பல தமிழ் பேக்கறிகளிலும் இப்பிடித்தான், காலால்தான் குழைப்பார்கள், நேர பார்த்திருக்கிறேன்
 13. இப்ப கோத்தா இருக்கும் நிலையில், அவர் நல்ல முடிவு எடுத்துள்ளார், அவரின் பதவியையும் தக்க வைக்கலாம், கொஞ்ச காலம் மக்களின் வாயை அடக்கலாம், என்று நினைத்துள்ளார். அவர்தான் அந்த குடும்பத்தில் அதிகாரத்தில் இருக்கும் ஒரே ஆள், பதவி இறங்கினால், அந்த குடும்பம் எல்லாரையும் முடித்து விடுவார்கள். பொருளாதார பிரச்சனையின் ஆழத்தை பார்க்கும் பொது, ரணிலால் பெரிதாக ஒன்றும் செய்ய முடியாது, அதுவும் கோதாவுக்கு கீழே இருக்கும்போது இன்னும் கடினம். பிரச்னை எனவோ இப்போதைக்கு தீரப்போவதில்லை. உங்கள் கவலை புரியுது, அதே கவலைதான் எனக்கும்
 14. இவர் ஜேவிபி யை சேர்ந்தவர் என்று நினைத்தேன், இவர் ஜேவிபி பிரச்னை காலத்தில் வெளிநாடு தப்பி ஓடி , பிறகு சந்திரிக்கா காலத்தில் திரும்பி வந்தவர். இவ்வாறு மக்களை சேர்த்து போராட்டம் நடத்தும் அளவுக்கு இவருக்கு செல்வாக்கு உள்ளதா? இவரை எப்பிடி கோத்தா போராட்டம் தொடங்கியபோது விட்டு வைத்தார்?
 15. சும்மா இப்பிடி இழுக்காமல், முழுமையாக, சரியாக தெரிந்தால் என்னவென்று இங்கு சொல்லுங்கள். எல்லோருக்கும் ஒவ்வொரு டவுட் இருக்கு
 16. எல்லாம் மஹிந்தவை சுற்றி நடக்குது. நாமல் என்ன செய்கிறார், எங்கே இருக்கிறார், ஏன் அவரை ஒருவரும் கவனிக்கவில்லை என்று புரியவில்லை, அதேபோல் கோத்தாவையும் ஒருவரும் சீண்டவில்லை. இராணுவம் போலீஸ் எல்லாம் பார்த்துக்கொண்டு இருக்க, சாதாரணமாக மக்கள் ஏர்போர்ட் இல் வைத்து வாகனங்களை எல்லாம் செக் பண்ணி அனுப்புகிறார்கள். இராணுவத்தின் நிலைப்பாடு என்ன?உண்மையில் இதன் பின்புலம் என்ன, ஒரு அரசியல் பின்புலம் இல்லாமல் சிங்கள மக்களின் எழுச்சியா? சரியாக ஆட்களை குறி வைக்கிறார்கள். இரண்டு விதமாகவும் யோசிக்கலாம், மக்களின் கோபத்தை தாங்க முடியாத கை மீறிய நிலையில் இருக்கிறார்கள், அல்லது ஒரு குரூப் பின்புலமாக இருந்து, சேர்ந்து விளையாடுகிறார்கள்.
 17. விதம் விதமாக கதைகள் வருகிறது, ஏது உண்மை என்று தெரியவில்லை. கோத்தா மஹிந்தவை போடும் அளவுக்கு வருமா? அவர்களின் ஆதரவு தளத்தை முற்றிலும் இழந்து விடுவார்கள்
 18. நன்றி, இவர்கள் போட்ட திட்டமா, அல்லது ஆர்வத்தில் ஆதரவாளர் குரூப் செய்த வேலையா? ராணுவத்தின் நிலை என்ன? இனி என்ன நடக்கும் என்று யோசிக்கிறேன்
 19. உண்மைதான், இவர்களுக்கே இந்த அடி விழுந்தால்! பட்டினியில் இருப்பவனிடம் தேவையில்லாமல் கையை வைத்து விட்டார்கள். இப்போது நடப்பதை பார்த்து சந்தோசப்பட்டு திருப்தி அடைவோம். இப்பிடி ஏதாவது நடந்தால்லதான் எங்களுக்கு ஏதாவது பிற்காலத்தில் கிடைக்கலாம்
 20. சுவி, முட்டை எல்லா பிரியாணிக்கும் வைக்கலாம், பசியில் இருந்ததால் முட்டையை, முதலாவது செய்த பிரியாணியுடன் சாப்பிட்டு விட்டேன்! இந்தியர்கள் போல், நெய் நான் நிறைய போடுவதில்லை, பார்த்தால் நிறைய போட்டது போல் உள்ளதா? உங்கள் கருத்துகள், திருத்தங்களை எப்போதுமே வரவேற்கிறேன், நீங்கள் சொன்ன புரோக்ராம் கேள்விப்பட்டிருக்கிறேன், பார்த்ததில்லை. சிறப்பானதா?
 21. ஓணாண்டி, நீங்கள் செய்யும் முறையை பார்க்க ஆவலாக உள்ளேன், செய்துவிட்டு படங்கள், செய்முறையுடன் போடுங்கள், நாங்களும் செய்து பார்க்கலாம். இதைவிட வேறு வகை புரியாணிகளும் செய்துள்ளேன், அடிக்கடி செய்வதில்லை. சீராக சம்பா அரிசி சுவை கொஞ்சம் வித்தியாசமானது
 22. 2020 இல் இந்த pandemic துவங்கியபோது, நிறைய நேரம் சும்மா இருந்தது. அப்பொழுது பிரியாணி செய்து பாப்போம் என்று விதம் விதமான ரெஸிபிகள், YouTube விடீயோகள் நிறைய பார்த்து செய்வது. ஆரம்பத்தில் ஒன்றுமே சரியாக வராது, தண்ணி அளவு பிழைக்கும், அல்லது அடிப்பிடிக்கும், சரியான ingredients இருக்காது, தம் சரியாக வைக்க வராது. அப்பிடி இருந்து படிப்படியாக இப்பொழுது, விருப்பமான சுவையில், உறைப்பில் செய்யும் அளவுக்கு வந்துவிட்டேன். ஒரே குறை, பிரியாணி செய்வது கொஞ்சம் நேரம் எடுக்கும் வேலை இதில் ஹைதராபாதி சிக்கன் பிரியாணி , எனது மகன்களில் ஒருவருக்கு பிடிக்கும் என்பதால் ஒவ்வொரு கிழமையும் அவருக்காகவே செய்வேன், நாங்களும் சாப்பிடுவோம். இந்த பிரியாணி மற்றைய வகைகளை விட கொஞ்சம் இலகுவானது, தண்ணி அளவு அவ்வளவு முக்கியமில்லை. இதற்கு நூற்று கணக்கில் விடியோக்கள் உள்ளது, நான் எனக்கென்று ஒரு அளவு, ingredients, செய்முறை வைத்து செய்வேன். எங்கள் மிளகாய்த்தூள் கூட கொஞ்சம் போடுவதுண்டு. தலப்பாக்கட்டி பிரியாணியும், வெவ்வேறு விடியோக்கள் பார்த்து பல தடவை செய்திருக்கிறேன், சில வேளைகளில் சரி வரும், சில வேளைகளில் பிழைக்கும். இந்த வகை பிரியாணிக்காக முன்பு வாங்கிவைத்த சீரக சம்பா அரிசி மூட்டை சும்மா இருந்ததால், கிட்டடியில் வேறு ஒரு நல்ல விடியோவை பார்த்து கடந்த இரண்டு தடவை செய்தது மிகவும் சுவையாகவே வந்தது. இப்பொழுது இது எப்பிடி சரியாக செய்வது என்று கொஞ்சம் பிடிபட்டு விட்டது. ஒரு கிழமைக்கு முன், முழுநாள் ஓய்வு கிடைத்தபோது இரண்டுவகை பிரியாணிகளையும் ஒரே நாளில், நேரம் எடுத்து செய்தேன். நான் இப்பிடியெல்லாம் செய்தேன், எனக்கு இப்பிடியெல்லாம் செய்யத்தெரியும் என்று வேறெங்கே படம் காட்டுவது? அதனால் கொஞ்ச படங்கள் கீழே: ஹைதராபாதி சிக்கன் பிரியாணி திண்டுக்கல் தலப்பாக்கட்டி சிக்கன் பிரியாணி தலப்பாக்கட்டி பிரியாணி செய்யும் முறை கீழே, இதில் இவர் போடும் காரம், தண்ணி அளவைவிட எனக்கு கொஞ்சம் கூட போட வேண்டி இருந்தது:
 23. உக்ரைன், ரஷ்யா, மற்ற எல்லை நாடுகளுடனான ரஷ்யாவின் உறவுகள் பற்றி கொஞ்சம் முன்பு வாசித்துள்ளேன், இதைப்பற்றி அறியவும் ஆர்வம் அதிகம். உங்களது நேரடி அனுப்பவம் சுவையாகவும் விளக்கமாகவும் இருந்தது. தொடர்ந்து உங்கள் அனுபவங்களை பதியவும், வாசிப்பதுக்கு ஆர்வமாக உள்ளோம். தமிழர்களில் இந்தமாதிரி, இப்பிடியான இடங்களில் நேரடி அனுபவங்கள் பெற்றவர்கள் மிகக்குறைவாகவே இருப்பார்கள்
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.