Jump to content
களத்தில் உள்நுழையும் வழிமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலதிக விளக்கங்களிற்கு

கவிப்புயல் இனியவன்

கருத்துக்கள பார்வையாளர்கள்
 • Posts

  2,078
 • Joined

 • Last visited

 • Days Won

  2

Everything posted by கவிப்புயல் இனியவன்

 1. இனிய பொங்கல் வாழ்த்துகள் ....... இனிய உழவர் திரு நாள் வாழ்த்துக்கள் இனிய தமிழர் திரு நாள் வாழ்த்துக்கள் இனிய மகர ஜோதி வாழ்த்துக்கள் இனிய தை திரு நாள் வாழ்த்துக்கள்........!!! இனிக்க இனிக்க பொங்கல் பொங்கி..... இன்னும் பல சுவை பலகாரங்கள் படைத்து... இல்லறத்தில் இறைவன் அருள் பாலிக்க...... இல்லாதருக்கும் அள்ளிக்கொடுத்து...... இல்லறம் நல்லறமாக செழித்திட....... இனியவனின் இனிய வாழ்த்துக்கள்.....!!! இல்லங்களில் பொங்கலை பங்கிட்டு...... இல்லத்தாரோடும் உறவுகலோடும்..... இன்முகத்தோடு பொங்கலை உண்டு..... இன்முகம் முகம் மலர்ந்து சுவைகும்...... இனிய உறவுகளுக்கு இனியவனின்...... இனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......!!! இரவு பகலாய் வயலில் புரண்டு...... இதய மகிழ்ச்சியோடு பயிரை வளர்த்து..... இன் முகத்தோடு அறுவடை செய்து..... இவுலகுக்கே உணவு படைக்கும்..... இறைவனுக்கு ஒப்பான உழவர்களுக்கு..... இனியவனின் இனிய வாழ்த்துக்கள்.....!!! @ கவிப்புயல் இனியவன்
 2. நீ பிரிந்தாய்..... சொறணை கெட்ட... என் இதயம்... நீ வருவாய்யென..... கதவை திறந்துவைத்து... பார்த்துக்கொண்டு இருக்கிறது......! @ கவிப்புயல் இனியவன் அணுக்கவிதை (02) நீ ................ காதலோடு பார்கிறாய்.... என்ன செய்வது எனக்கு...... உன்மேல் காதல் செய்ய.... கடந்த காதல் தந்த காயம்.... தடுக்கிறதே......! @ கவிப்புயல் இனியவன் அணுக்கவிதை(03)
 3. என் அன்புள்ள ரசிகனுக்கு கவிப்புயல் எழுதும் கவிதை --------------------------------------- ஒரு கவிஞன் தன் வலிகளை.... வரிகளாய் எழுதுகிறான் .... ஒரு ரசிகன் அதை ஆத்மா ... உணர்வோடு ரசிக்கிறான் ..... கவிதை அப்போதுதான் ... உயிர் பெறுகிறது .....! # என் உயிரை உருக்கி .... நான் எழுதும் கவிதைகள் என்னை ஊனமாக்கி மனதை ... இருளாக்கி இருந்தாலும் .... கவிதைகள் உலகவலம் வருகிறது ... உலகறிய செய்த ரசிகனே ... உன்னை நான் எழுந்து நின்று .... தலை வணங்குகிறேன் .....! # என்இரவுகளின் வலி...... விழித்திருந்த கண்களுக்கு தெரியும் .... பகலின் வலி அவள் எப்போது .... இரவில் கனவில வருவாள் ....? ஏங்கிக்கொண்டிருக்கும்..... இதயத்துக்கு புரியும் ..... ரசிகனே உனக்குத்தான் புரியும் .... நான் படுகின்ற வலியின் வலி ......! # ஒருதலையாக காதலித்தேன் ... காதலின் இராஜாங்கம் என்னிடம் .... காதலை சொன்னேன் .... என் இராஜாங்கமே சிதைந்தது ..... காதல் ரகசியத்தில் ஒரு துன்பம் .... பரகசியத்தில் இன்னொரு துன்பம் .... காதல் என்றாலே இன்பத்தில் துன்பம் .... கண்டு கொல்லாதே ரசிகனே .....! # என் காதலுக்கு காதலியின் முகவரி ... இன்னும் தெரியவில்லை ... அதனால்தான் இதுவரை ..... என்னவளில் பதில் வரவில்லை ... வெறுத்தவள் மறுத்தவளாகவே.... வாழ்கிறாள் - ரசிகனே உன்னிடம் ... என் கவலையை சொல்லாமல் .... யாரிடம் சொல்வேன் .....? என் வாழ்வில் ரசிகனே நிஜம் ....! # வேதனையில் சாதனை செய்யப்போகிறேன் .... என்னை விட தாங்கும் இதயம் ... இவ்வுலகில் யாரும் இருக்க முடியாது .... வேதனைகள் மணிக்கூட்டு முள் போல் .... என்னையே சுற்றி சுற்றி வருகின்றன ..... அவ்வப்போது ஆறுதல் பெறுவது ..... என் ஆத்மா ரசிகனால் மட்டுமே .....! # என்னை உசிப்பி விட்டு .... வேடிக்கை பார்த்த என் நண்பர்கள் .... என்னை காதல் பைத்தியம் .... வாழதெரியாதவன் ஒன்றில்லாவிட்டால் ... இன்னொன்று தெரிவுசெய்யதெரியாதவன்.... என்றெல்லாம் ஏளனம் செய்கிறார்கள் ....! ரசிகனே என் உடைகள் தான் கிழிந்து ... என்னை பைத்தியம் போல் .... அவர்களுக்கு காட்டுகிறது .... காதல்கிழியாமலே இருக்கிறது .....! # பள்ளி பருவத்தில் மாறு வேடபோட்டியில் ..... பைத்திய காரன் வேஷத்தில் முதலிடம் .... காதலியால் வாழ் நாள் முழுவதும் .... முதலிடம் அருமையான வேஷம்.....! பிடித்தது கிடைக்கவில்லை என்றால் .... கிடைத்ததை பிடித்ததாக வாழ்வோம் ...!!!
 4. சித்தர் அருளின்றி... சிவத்தை அடைய முடியாது.. சித்தர் வாக்கு சிவன் வாக்கு.. சித்தர் நாமம் சிவன் நாமம்... சித்தர்களின் மஹா... சித்தர் அகத்தியமுனியை.. சிரம் தாழ்த்தி... சிந்தை மகிழ வணங்குகிறேன்
 5. அகராதி தமிழ் சொற்கள் கவிதை "ச " வரிகள் ....... சதியை மதியால் வெல்... சங்கடங்களை திறனாய்வு செய்... சகுனம் பார்த்து வீணாகாதே.... சாத்தியம் தவறாமல் வாழ்... சங்கற்பம் கொள் வெற்றி நிச்சயம்.... !!! சத்துருவை நீயே உருவாக்காதே... சந்தர்ப்பங்களை தவறவிடாதே... சந்தேகம் கொண்ட செயல் செய்யாதே... சமூக நோக்குடனும் வாழ்.... சந்ததி வழி நீடுடுடி வாழ்வாய்.... !!! சம்பிரதாய சடங்கில் மூழ்காதே.... சரணடைந்து மானம் இழக்காதே.... சரீரம் கெடும் பொருள் தொடாதே.... சவால்களை எதிர்கொள்... சரித்திரம் படைப்பாய் பாரினில்.... !!! @ கவிநாட்டியரசர், கவிப்புயல் இனியவன் (யாழ்ப்பாணம்)
 6. உன்னில்..... அதிகமாக அன்பு... வைத்தேன்.... அவதிப்படுகிறேன்.... ! அதிகமாக.... நம்பிக்கை வைத்தேன்.... துடிக்கிறேன்..... ! என் தவறு... என்னில் அதிகமான அன்பையும்... நம்பிக்கையும்... வைக்க தவறிவிட்டேன்....! காதல்... காதலிக்க மட்டும்... அல்ல.... வாழ்க்கையையும். கற்றுத்தரும்..... !!! ......... உதிர்ந்து கொண்டிருக்கும் மலர்கள் (01) ..... காதல் கவிதைகள் ..... கவிப்புயல் இனியவன் யாழ்ப்பாணம்
 7. நீ ... ஒருமுறை.... கண் சிமிட்டினால்.... ஓராயிரம் கவிதை.... எழுதுகிறேன்....! ஒரு நொடி ...... பேசாது இருந்தால் ஆயிரம் முறை இறந்து பிறக்கிறேன் ....! உயிரே ...... மௌனத்தால்..... கொல்லாதே ... உன் நினைவால்.... துடிக்கிறேன்.........!
 8. மிலேனியதின் 21 வயது விடலையே வருக வருக ................... அழிவை ஏற்படுத்தாமல் அன்பை பெருக்கிடவருக வருக..! ஆக்ரோயத்தை காட்டாமல் ஆனந்தத்தை ஏற்படுத்த வருக வருக ....! இழப்புகளை ஏற்படுத்தாமல் இன்பத்தை தோற்றுவிக்க ..வருக வருக ....!!! ஈனச்செயல் புரியாமல் ஈகையை வளர்த்திட வருக வருக ....!!! உலகை உலுப்பாமல்உள்ளம் மகிழ்ந்திட வருக வருக ....!!! ஊனங்களை ஏற்படுத்தாமல் ஊர் செழிக்க வருக வருக ..!!! எதிரிகளை தோற்றுவிக்காமல் எளிமையை தோற்றிவிக்க ..வருக வருக....!!! ஏமாற்றங்களை ஏற்படுத்தாமல் ஏற்றங்களை தந்திட வருக வருக .....!!! ஐயத்தை தோற்றுவிக்காமல் ஐக்கியத்தை ஏற்படுத்திட ..வருக வருக ....!!! ஒற்றர் வேலைகள் பார்க்காமல் ஒற்றுமையை ஏற்படுத்திட ..வருக வருக ....!!! ஓலமிட மக்களை வைக்காமல் ஓர்மத்தை ஏற்படுத்திட வருக வருக ....!!! ஔடத்தை பாவிக்காமல் ஔவை வாழ்க்கை நெறிப்படி வாழ்ந்திட வருக ஆங்கில புத்தாண்டே வருக....!!! @கவிப்புயல் இனியவன் கவியருவி இனியவன்
 9. அன்புக்கு அடக்கமானவன் நீ ஆசையை அழிப்பவன் நீ இன்பதத்தை தருபவன் நீ ஈகையில் மகிழ்பவன் நீ உலகை ஆழ்பவன் நீ ஊண் கொடுப்பவன் நீ எழுத்து தந்தவன் நீ ஏர் தந்தவன் நீ ஐந்துபொறியும் நீ ஒற்றுமையை கூறுபவன் நீ ஓங்காரம் ஆனவன் நீ ஔடதமானவன் நீ என்னுள் இருக்கும் நீ உயிரே நீ..... !!! & ஆன்மீக கவிதை கவிப்புயல் இனியவன் கவியருவி இனியவன்
 10. வா.... இருவரும் நீண்ட... பயணம் செய்வோம்..... நீ.... இயற்கையை ரசி.. நான் - உன்னை இயற்கையாகவே ரசிக்கிறேன்.... ! பயணம்... உனக்கு சோர்வை... ஏற்படுத்தினால்.. சோக கவிதை புத்தகம் எழுதிவிடுவேன்... ! பயணம் முடியும்... வேளையில்... காதல் அகராதியே.. வரக்கூடும்..... !!! @ கவிதையை காதலிக்கிறேன் கவிப்புயல் இனியவன்
 11. கோமுற்றவரே..... கோ முறைதவறாமல் ஆட்சி செய்வீர்.... கோபம் கொண்டு மக்கள் எழுந்தால்.... கோமணத்தோடு ஓடுவீர்..... !!! கோமகனே.... கோத்துக் கொடுப்பவன் அருகில் இருப்பான்..... கோடரி காம்புகளும் இருக்கும்.... கோட்பாட்டை கூறி... கோட்டையை கவிழ்க்க துடிப்பார்..... !!! கோகயம் போல் இதயத்துடன்..... கோ மகள் போல் சாந்தத்துடன்..... கோடரம் போல் வேகத்துடன்..... கோணாய் போல் புத்தியுடன்..... கோ மகனே ஆட்சி செய்...... !!! @ கவிப்புயல் இனியவன்
 12. என்னை.... காதலித்துப்பார்.... கவிதையால்... திணறவைக்கிறேன்.... ! என்னை..... ஏங்கவைக்க காதல் செய்....... ஏக்கத்தின் சுகத்தை... அனுபவிக்க துடிக்கிறேன்... ! காதல் செய்தபின்.... தினமும் என்னை.... சந்திக்காதே....... கவிதைகள் என்னை... கோபித்துவிடும்.... !!! @ கவிப்புயல் இனியவன் கவிதையை காதலிக்கிறேன் (01)
 13. கொக்கரிப்பவனிடம் வீரமில்லை.....கொச்சைப்படுத்துபவனிடம் பண்பில்லை.....கொடுமைப்படுத்துபவனிடம் மனிதமில்லை.....கொடூரம் கொண்டவனிடம் புத்தியில்லை.....!கொடிவழிவாழ தர்மம் காக்கும்.......கொட்டம்போட்டால் தண்டனைவரும்.......கொண்டாட்டம் கலாச்சாரமாகும்.......கொடுங்கோல் ஆட்சி நாட்டைக்கெடுக்கும்.....!கொப்புபாயும் குரங்கு மன உறுதியானது........கொடும்புலி கொள்கையானது.......கொக்கின் பொறுமை விசித்திரமானது.......கொம்புமானுக்கு அழகு மயக்கத்தக்கது.....!&தமிழோடு விளையாடுகவிப்புயல் இனியவன்யாழ்ப்பாணம்
 14. கையசைத்தேன் கண்ணசைத்தாள்...... கைவிலங்கிட்ட கைதியானேன்........ கைகோர்த்து பேசக்கேட்டேன்........! கையோடு கை இணையக்கேட்டேன்..... கை சாத்திட்டு என் கையைப்பிடி....... கைதியாகிறேன் உனக்காகவென்றாள்.....! கைநழுவி போகாமல் இருக்க........ கைசாத்திட சம்மதித்தேன்........ கைப்பிடி விழாவும் முடிந்தது.........! கைவழி இசைபோல் அவள்பேச....... கைஞ்ஞானமாகியது என் புத்தி....... கையோடு கைசேர்த்தாள் என்னவள்.....! & தமிழோடு விளையாடு கவிப்புயல் இனியவன் யாழ்ப்பாணம்
 15. கேடயம் வாழ்க்கைக்கு ஒழுக்கம் கேடயம் ...கேவலம் பிறரில் சாந்திருப்பது கேவலம் ....கேசவன்(இறைவன் ) நினைவில் வாழ்தல் கேடயம் ....கேள்வன்(கணவன் ) மனைவிக்கு கேடயம் ....கேட்பார் சொல் கேளாதே கேட்டவுடன் எதையும் கொடுக்காதே ....கேள்விக்கு பிழையாய் பதிலளிக்காதே ....கேவலமானவன் என யாரையும் கருதாதே ....!!!கேணியில் குளிப்பது மனதுக்கு உறுதி கேட்டறிதல் அறிவுக்கு உறுதி ....கேசம் வளர்ப்பது அழகுக்கு உறுதி ....கேளார் (பகைவர் ) துறத்தல் வாழ்கைக்கு உறுதி....!!! @ கவிப்புயல் இனியவன்
 16. கெடுதி கொண்ட உணவுகள் வேண்டாம் ....கெடுதி கொண்ட உணர்வுகள் வேண்டாம் ....கெடுதி என தெரிந்த செயல்கள் வேண்டாம் ....கெடுதி கொண்ட எண்ணங்கள் வேண்டாம் ....கெடுதிக்கு கெடு வைக்காமல் வாழ்ந்திடுவோம் .....!!!கெட்ட உணர்வால் கெட்டார் கோவலன் ....கெட்ட எண்ணத்தால் கெட்டனர் கௌரவர் .....கெட்ட செய்யலால் கெட்டார் ராவணன் ....கெட்ட நடத்தையால் கெட்டுப்போகாதே .....கெட்டவன் என்றபெயர் சடுதியில் நீங்காது ....!!!கெச்சைக்கு தேர் கொடுத்தான் பாரி ....கெட்டியாய் வள்ளல் பெயர் பெற்றான் பாரி ....கெம்பி செய்யும் செயல்களால் கெட்டவர் அதிகம் ......கெக்கலித்து சிரிக்கவைக்கும் செயல்வேண்டாம் ....கெடியுடன் கெழி கொண்ட வாழ்க்கை வாழ்வோம்.....!!! @ கவிப்புயல் இனியவன்
 17. கூடு துறந்து போனால் .....கூச்சலிட்டு பயனில்லை ....கூட்டுறவு வாழ்கை முறையில் ....கூச்சலிடல் தவிர்க்க முடியாது ....!!!கூடா ஒழுக்கம் வாழ்க்கைக்கு கேடு .....கூட்டு குடும்பம் வாழ்கைக்கு பலம் .....கூடி பேசுதல் சச்சரவை கொண்டுவரும் .....கூடி பேசினால் மனக்குழப்பம் தீரும் .....!!!கூத்தாடி பிழைப்பது குற்றமில்லை .....கூத்தாடியே ஊர் சுற்றுவது கேவலம் .....கூத்து தமிழனின் பாரம்பரியம் .....கூட்டத்தோடு கூத்தை ஆதரிப்போம் ....!!!கூக்குரல் கூட்டத்தில் எழுந்தே தீரும் .....கூனல் முதுமையில் வந்தே தீரும் .....கூந்தல் என்றால் உதிர்ந்தே தீரும் .....கூட்டம் என்றால் குழப்பம் இருந்தே தீரும்...! @ கவிப்புயல் இனியவன்
 18. குப்பையில் போட்டாலும் ....குண்டுமணி மங்காது .....குடிசையில் வாழ்ந்தாலும் ....குடிகள் போற்றும்படி வாழ்.....!!!குடி குடியை கெடுக்கும் ....குணம் கெட்டாலும் குடி கெடும் .....குப்பை கூடினாலும் குடி கெடும் ....குருவோடு பகைக்கின் குடி கெடும் ....!!!கும்பிடு பெற்றோரை கும்பிடு .....குரல் கொடு அநீதிக்கு குரல் கொடு ....குறிப்பெடு படிப்பில் குறிப்பெடு.....குறள் வழிவாழ் குறிக்கோளோடு வாழ் ....!!!குற்றம் செய்யாதே தலை குனியாதே ....குன்னம் (அவமானம்) படாதே அவதி படாதே ....குறிக்கோள் ஒன்றில்லாமல் வாழ்ந்து பழகாதே ....குருவின் துணையிலாமல் வித்தை பழகாதே.....!!! @ கவிப்புயல் இனியவன்
 19. சரவோட்டம் இதுதான் .......... சூரிய உதயத்திலிருந்து.. ஒரு நாழிகை தின ஒட்டம். இந்த ஒழுங்கில் ஓடணும்.. திங்கள் இடது சுவாசம்...! செவ்வாய் வலது சுவாசம்....! புதன் இடது சுவாசம்...! வளர்பிறை வியாழன் இடது சுவாசம்.... ! தேய்பிறை வியாழன் வலது சுவாசம்.....! வெள்ளி இடது சுவாசம்....! சனிக்கிழமை வலது சுவாசம்..... ! ஞாயிறு வலது சுவாசம்...! எதிராக ஓடினால்.... எதிரிகள் துன்பம்.... ! எதிர்பாப்புகள் தோல்வி..! எதிலும் போராட்டம்.... எல்லாம் தவிர்க்க... சாரத்தை மாற்று....... !!! @ கவிப்புயல் இனியவன்
 20. கீரியும் பாம்பும் போல் வாழாதே .....கீதமும் ஓசையும் போல் வாழ்.....கீழ்மரம்(அச்சு) போல் எதையும் தாங்கு ....கீர்த்தியுடனும் ஆயுளுடனும் வாழ்வாய் ....!!!கீர்த்தனை மனதுக்கு நன்று .....கீரை கண்ணுக்கு நன்று ....கீரம்(பால்) ஆரோக்கியத்துக்கு நன்று ....கீழ் கிழங்கு உணவை தவிர்ப்பது நன்று ...!!!கீழ்பால் என்று யாரும் இல்லை ....கீழ்நிலை என்று எவரையும் எண்ணாதே .....கீறல் இல்லாமல் வாழ்கை வாழ்ந்திடு ......கீழ்மை(பண்பு) கொண்டு வாழ்ந்திட பழகு ....!!!கீர்(சொல்) உறுதி வேண்டும் ....கீளுடையில் சுத்தம் வேண்டும் ....கீறலிலும் தெளிவுவேண்டும் ....கீதை நெறி வாழவேண்டும்....!!! @ கவிப்புயல் இனியவன்
 21. கிழக்கில் இருந்து ஆதவன் .... கிழந்தெழும்பும் போதே .... கிழம்பிவிடு... போராடு .... கிழக்கின் ஆதவன் நீதான் ....!!! கிரகதோசத்தை காரணம் காட்டி .... கிடைக்க பெறும் வாய்பை இழக்காதே ... கிடைத்த சந்தர்பத்தை பயன்படுத்து ..... கிரகபதி என்றும் நீதான் .....!!! கிரகித்தல் திறனை வளர்த்துக்கொள் ..... கிராமமாக அறிவை பெற்றுக்கொள் .... கிலியை முற்றாக அறுத்து எறி ...... கிருபாகரனின் கிருபை கிடைக்கும் ....!!! கிறுக்கன் என்று பெயர் எடுக்காதே .... கிரக சித்திரம் நிம்மதியை கெடுக்கும் ..... கிரக பெயர்ச்சி வானில் ஏற்படும் நிகழ்வு ...... கிரகப்பேர்ச்சியை சாட்டி வாழாதே..... !!! @ கவிப்புயல் இனியவன்
 22. காற்றை போல் பலமாய் இரு .... காற்றை போல் மறைமுகமாய் இரு .... காற்றை அசுத்தபடுத்தாதே ..... காற்று போனால் பேச்சு போகிடும் ....!!! காடுகளை அழிக்காதீர் .... காடு மிருகங்களின் வீடு ...... காடுகளை போணுவோம் ..... காடு சமூகத்தில் பொதுச்சொத்து .......!! காக்கை போல் ஒன்று கூடி வாழ்வோம் .... காக்கை போல் கற்புடன் வாழ்வோம் .... காக்கைக்கு கண்மணி ஒன்று பார்வை தெளிவு ...... காக்கை போல் சூழலை பாதுகாப்போம் ........!!! காதல் என்பது இருபால் கவர்சியல்ல ..... காதல் எல்லாவற்றிலும் அன்பு செலுத்துவது .... காதல் செய்யுங்கள் இயற்கைமீது .... காதலோடு காலமெல்லாம் வாழ்ந்திடுவோம் ....!!! + இயற்கை மேல் அன்பு செலுத்துவோம் இயற்கை கவிதை
 23. சரயோகம்.... உடலுக்கு ஆலய... தரிசனத்துக்கு.... நிகரானது....... !!! உயிருக்கு இறை தரிசனத்துக்கு..... நிகரானது....... !!! @ கவிப்புயல் இனியவன்
 24. கண்ணில் காந்த சக்தியுடன் ....கடமையை மூச்சாய் கொண்டு....கதிரவன் முக மலர்வுடன் ஆசியுடன் ...கண்ணியத்துடன் பணிகளை தொடர்வோம் ....!!!கட்டளை செய்துவிட்டு நீ மட்டும் ....கடப்பாட்டில் இருந்து விலக்கிவிடாதே .....கண்டதே காட்சி கொண்டதே கோலமாகிவிடதே ....கண்ணால் கண்டதும் கேட்டதும் பொய் .....!!!கரும்புபோல் பேச்சில் இனிமையும் .......கதிரவன் போல் மனதில் ஒளிமையும் .........கற்பூரம் போல்சிந்தனையில் விரைவும் .......கல்வியும் உடையவனே மாமனிதன் .......!!!கம்பீரம் என்பது உடல் அல்ல ,செயல் .....கண்ணியம் என்பது பேச்சல்ல ,நடத்தை ....கருணை என்பது உதவியல்ல ,அன்பு ......கடவுள் இருப்பது வெளியே இல்லை ,உள்ளே........!!! @ கவிப்புயல் இனியவன்
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.