Jump to content

Knowthyself

கருத்துக்கள பார்வையாளர்கள்
  • Posts

    528
  • Joined

  • Last visited

Everything posted by Knowthyself

  1. யாழில் சிறுவர்களின் தரமான சம்பவம் ! Comments: Logeswaran Gajendran மிக சிறந்த பதிவு! இன்று பல வழிகளில் நாம் எம் கலாச்சாரத்தை விட்டு விலகி சென்று கொண்டிருக்கின்றோம். இன்று மனிதர்களாகிய நாம் கொள்கையால், இனத்தால், அரசியலால் பிளவு பட்டு ஒருவரை ஒருவர் அழிப்பதற்கு முயற்சித்துக் கொண்டிருக்கின்றோம். எமது கலாச்சாரம் ஆன்மிக வழியில் இப்படி பல கலைகளை அது யோகத்தில் இருந்து பரதநாட்டியம் , வரை எம் சிறுவர்களுக்கு சிறு வயது முதல் உட்புகுத்தியது. ஆனால் இன்று பல அழிந்து வருகின்றது. வீடாகினும், நாடாகினும் ஒற்றுமை என்பது வேண்டும். ஒற்றுமை இல்லையெனில் வீடும், நாடும் சீரழிந்துவிடும். இதன் ஒரு கட்டமே இன்று எம் கலாச்சாரம் மிக துல்லிய திட்டமிடலில் அழிக்கப்பட்டு வருகின்றது. ஆம் மதமாற்ற மூலம் தமிழ் பாரம்பரியம் அழிவுறுகின்றது! மதம் மாறினால் பண்பாடும் மாறும். தமிழ் பேசுவதால் மட்டும் ஒருவரைத் தமிழர் என்று கூற இயலாது. மதம் மாறிய தமிழர் 'சித்திரைப் புத்தாண்டு' கொண்டாட முடியாது காரணம் அது மதத்தின் அடிப்படையில் கொண்டாடப்படுவதாகும். மதம் மாறியோர் நமது கலையைப் பின்பற்ற முடியாது காரணம் அது ஆடல் வல்லான் திருநாமத்தைக் கொண்டு ஆடிப்பழக வேண்டும். யோகத்தைப் பயில முடியாது காரணம் அதில் இந்து பண்பாட்டுக் கூறுகள் அடங்கியுள்ளன. இப்படி தமிழரின் பல பண்பாட்டுக் கூறுகள் மதம் மாறியோரால் பின்பற்ற இயலாது போய் விடுகின்றது. அப்படி இருக்கும் போது மதம் மாறியோர் எப்படி 'தமிழ் இனமாக' வாழ முடியும்? அறியாமை இது தான் இநத கலியுகத்தின் மிகப்பெறிய அவலம். இன்று உலகெங்கும் சுதந்திரமான மக்களாட்சி இருந்தும் ஏன் மக்கள் மத்தியில் விழிப்புணர்ச்சி வருவதில்லை. ஏன் அரசியலை கண்காணிக்கும் பொறுப்புணர்ச்சி இருப்பதில்லை. ஏன் பேரழிவுக்கு எதிராக மக்கள் ஒன்று திரண்டு போராடத் துணிவதில்லை? ஏன் இந்த அலட்சியப்போக்கு, எதனால் இப்படி ஒதுங்கிக்கொள்ளும் மனப்பாண்மை? எல்லாவற்றிற்கும் மூலகாரணம் அறியாமை! கோவிலுக்கு செல்வதில் உள்ள அறிவியலலை கற்று கொடுப்பது எம் கடமை. நான் எந்த நம்பிக்கைக்கும் எதிரானவன் இல்லை! ஆனால் சில அன்னிய சக்திகள் எம் கலாச்சாரத்தை அழிப்பது தவறு! பெண்கள் பூ, பொட்டு, கலாசாரம் அனைத்தையும் அழித்து தமிழ் பெயரை கூட அழித்து தமிழ் வளர்ப்பது சாத்தியமா? நான் சொல்வதை குறித்து வையுங்கள் எம் சைவ கலாச்சாரம் இருக்கும்வரைதான் தமிழ் வாழும்!!!! ஆன்மீகம் ஒரு நோய்அல்ல தொற்றிக்கொள்வதற்கு/பரப்பப்படுவதற்கு. அது இயற்கையோடு சம்மந்தப்பட்டது, தானாக வளரவேண்டும். தேடுதலே ஆன்மீகம். அறிவுபூர்வமானது ஆன்மீகம். அல்லா, சிவன், கடவுள், கர்த்தர் எல்லாம் ஒன்றையே குறிக்கும் சொல். பல மத நம்பிக்கை உள்ள ஒரு நாட்டில் ஒருவர் நம்பிக்கையை ஒருவர்மீது தினிக்காது இருந்தாலே போதும். சாத்தான் அரன் பிசாசின் கொட்டகை என சொல்லும்போது வீண் சண்டை வரத்தான் செய்யும்! அடுத்து நாம் சைவர்கள் தெருவில் நின்று ஆள் பிடிப்பதில்லை. ஆண்கள் ரயிலில் மதப் பிரச்சாரம் செய்து , பெண்கள் சந்தியில் மதப் பிரச்சாரம் செய்வது இது ஆன்மீகம் கிடையாது. தேடுதல் மாத்திரமே ஆன்மீகம். உண்மையான ஆன்மீகத்துக்கு விளம்பரம் தேவை இல்லை! பக்தி காதல் பாசம் அன்பு இவை அனைத்தும் தானாக ஊற்றெடுத்து பெருகி ..கசிந்து உருகி வரவேண்டும் .. கெஞ்சி கேட்டு வந்தால் அதற்கு பிச்சை என்றே பொருள். எந்த விலைக்கும் உங்கள் கலாச்சாரத்தை இழக்காதீர்கள்.🙏 Senthil Chelliah நல்லது இளம் தமிழ் பிள்ளைகள் நமது தமிழரின் மரபு கலை சிலம்பம் செய்வது கண் கொள்ளா காட்சியாக இருந்தது கராத்தே கூட தமிழரின் கலை தான் அதை இழந்து விட்டோம் தமிழ் குழந்தைகள் ஆனால் ஒருவரை தவிர மற்றவர் எல்லாரும் பெயர்கள் அந்நிய மொழி பெயற்களா இருப்பது வேதனை
  2. இயற்கை முறையில் எரிவாயு, கிருமிநாசினி, உரம் உற்பத்தி செய்யும் விவசாயி
  3. இன்றைய அறிவிப்பாளர்கள் பால், மக்களுக்கு இருக்கும் வெறுப்பு மக்கள் வானொலி கேட்பதை நிறுத்தி, வேறு பக்கம் திசை திருப்ப வைத்தது. உண்மை உரைகல் அறிவிப்பாளர்கள் பால், மக்களுக்கு வளங்கினார்கள் சிலபேர், வேறயிடங்களில் வங்த வீடியோக்களை 75% போட்டு, 25% கதைபார்கள். தடியைபிடிச்சுகொண்டு நடக்கிறமாதிரியிருக்கும்
  4. உக்ரனியே அரசுகளால் இதுவரை பல ஆயிரம் ரஷ்ய மொழி பேசும் மக்கள் கொல்லபட்டு இருக்கிறார்கள். இவர்களுக்கான நீதி நியாயம் இன்று இந்த யாழ் களத்திலும் இறந்தே கிடக்கிறது உக்ரேனிய மக்கள் இறக்கிறார்கள் என்று அமேரிக்க அரச தலைவர் அழுவது என்பது என்ன என்பதை உலகின் வேறு ஒரு இனம் புரிய மறந்தாலும் ........ அலற அலற அடிவாங்கிய ஈழத்தமிழரும் மறந்துதான் ஆகவேண்டுமா?? நாம் மனிதம் பேசுவோம் தவரேல் எதோ ஒரு ஆதிக்க ஆணவ சக்தியை பிடித்து தொங்கிக்கொண்டு நிற்போம் அப்போதே அடிப்படை நீதி நியாயம் இறந்துவிடும். மேற்கொண்டு பந்தி பந்தியாக பெயிண்ட் அடிக்க என்ன இருக்க போகிறது? ரஷ்ய தான் வெல்லவேண்டும் உக்ரைந்தான் வெல்ல வேண்டும் என்ற எண்ணம் நீங்கி பாதிக்க படும் மக்களுக்கு ஒரு துரும்பை என்றாலும் எங்களால் கொடுக்க முடிந்தால் ... அதன் பிரதி பலன் எமது அடுத்த சந்ததிக்கு சென்று சேரலாம் எனும் ஒரு சிறிய நம்பிக்கை மட்டுமே உள்ளது Thanks Annai
  5. சிங்களர்களை வீட்டுக்கு போகவிடாமல் பார்த்துக்கொள்வதர்க்கு றிக்கியா இணையிறமாதிரி இணையவேண்டும், சில உதவிகள் செய்யலாம் பதாதைகள், etc. கன பிரிவுகளை ஏற்படுத்த வேண்டும் அவர்களுக்குள் அரசியல்
  6. https://www.facebook.com/magudeswaran.govindharajan/posts/4478643308840790 கீழடி அகழாய்வின் பலப்பல மட்பொருள்கள் கிடைக்கின்றன. கீழே படத்தில் உள்ளதும் அவ்வாறு கிடைத்த பெருமட்பாண்டம்தான். கையாளத்தக்க அளவில் உள்ள மட்பொருள்களைச் சட்டி, பானை, கலயம் எனலாம். சற்றே பெரிதாக இருப்பதனைத் தாழி எனலாம். அது இறந்தோரை இட்டு மண்ணில் புதைக்கும் கலமாக இருப்பின் ’முதுமக்கள் தாழி’ ஆகிவிடும். சேர்த்து வைக்கப் பயன்படும் பெருமட்பாண்டங்களை என்னென்று அழைப்பது ? அதற்கு ‘மொடா’ என்று ஒரு சொல் இருக்கிறது. அளவிற்பெரிய, அடுக்கத்தக்க, மட்பானையைத்தான் மொடா என்பார்கள். இது ‘மொடு’ என்ற சொல்லிலிருந்து பெறப்படுவது. ‘மொடு’ என்பதற்குப் பருமை, மிகுதி என்னும் பொருள்கள் உள்ளன. முகிழ்த்து முனைகுவிந்து பருக்கும் மலர்ப்பொருள் ‘மொட்டு’ எனப்படுவதும் இவ்வாறே. மொடாப் பானையின் வடிவமும் மொட்டு வடிவில் வாய் குவிந்திருப்பதைக் காண்க. தாழிக்கும் மொடாவுக்கும் உள்ள வேறுபாடு இது. இரண்டும் பேரளவுப் பொருள் இட்டு வைக்கும் கலன்கள் என்றாலும் தாழி வாயகன்றது. மொடா வாய்குவிந்தது. வாயகன்று இருப்பதால்தான் தாழியை ஆடு மாடுகட்குத் தண்ணீர் காட்டப் பயன்படுத்துவார்கள். ‘மொடா’ என்ற சொல்லை மக்கள் எப்போதும் பயன்படுத்தினார்கள். மொடாக்களை அடுக்கி வைக்கும் பழக்கம் இருந்தது. அடுக்கிலுள்ள கீழ் மொடா அளவிற் பெரிது. அதன்மேல் வைக்கப்படும் மொடா ஒப்பீட்டில் சற்றே சிறிது. அந்த அடுக்கம் கூம்பு வடிவில் மேலேறிச் செல்லும். அதற்கு ‘அடுக்கு மொடா’ என்று பெயர். “அந்த அடுக்கு மொடாகிட்ட வெச்சிருக்கேன் பாரு” என்று சொல்வார்கள். கள்ளு வடித்துச் சேர்க்கவும் சாராயம் ஊறவைக்கவும்கூடப் பயன்படுத்தப்பட்டது மொடா. அதனால்தான் பெரிய குடிகாரர்களை ‘மொடாக்குடியன்’ என்றார்கள். ஒரு மொடா அளவிற்குக் கள்ளூற்றி வைத்திருந்தாலும் குடித்துவிடுபவர்கள். “ஒரு சட்டி சோறும் ஒரு மொடாக் கள்ளும்” நன்கு உண்டு திளைப்பவர்களின் தேவையாக இருந்தவை. “கிடா கிடாக் கறி அடுப்பில கிடக்கு, மொடா மொடாக் கள்ளு ஊத்து” என்ற திரைப்பாடலும் உண்டு. அதனால் பெரும்பானைகளைக் குறிப்பிடுவதற்கு ‘மொடா’ என்ற சொல்லைத் தவறாமல் பயன்படுத்துங்கள். அடிப்பாகம் தரைப்பொருத்தமாய் உள்ளதால் சமதரையில் ஒரு மொடா எப்படிச் சாயாமல் நிற்கும் ? தஞ்சாவூர் பொம்மையைப்போல் ஆடுமே. அப்படிச் சாயாமல் ஆடாமல் அடிப்பகுதியில் நிறுத்துதற்கு ஒரு பொருள் உண்டு. அதற்குப் ’புரிமணை’ என்று பெயர். பேச்சு வழக்கில் சிலர் ‘பிரிமணை’ என்பார்கள். வைக்கோலையோ அல்லது வேறு நார்க்கொடிகளையோ புரிபுரியாய்ச் சேர்த்து வட்டமாய்ப் பின்னுவதால் கிடப்பது புரிமணை. புரிகள் சேர்த்து மணையிடப் பயன்படுவது. ஆண்பாவம் படத்தில் தம்மிரண்டு பிள்ளைகளும் பெண்டாட்டிக்கு அடிபணிந்து வாழ்வார்கள் என்பதை உணர்ந்து வி. கே. இராமசாமி தம் தாயாரிடம் ஒன்றைச் சொல்வாரே, நினைவிருக்கிறதா ? “மருமக வந்தவுடனே அவதான் சாணி தெளிச்சு கோலம் போடுவான்னு நீ நினைக்கறியா ? அவளுக்கு இவனுகதான் எல்லா வேலையும் செய்யப் போறானுக. வேண்ணா பாரு, பொண்டாட்டிக்குச் சரியான பிரிமணையா இருக்கப் போறானுக.” புரிமணை எப்படிப் பயன்பட்டிருக்கிறது, பாருங்கள் ! - கவிஞர் மகுடேசுவரன் https://www.facebook.com/magudeswaran.govindharajan/posts/4478643308840790
  7. மலரே மௌனமா | Karnaa | nadaswaram | Malare Mounama | kp kumaran nadhaswaram | spb song The link could not be embedded because www.youtube.com does not allow embedding of that video. https://www.youtube.com/watch?v=lr0jAZvan8s
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.