E.Thevaguru

கருத்துக்கள உறவுகள்
 • Content Count

  303
 • Joined

 • Last visited

Community Reputation

5 Neutral

About E.Thevaguru

 • Rank
  உறுப்பினர்

Profile Information

 • Gender
  Male
 • Location
  Canada
 • Interests
  Computer
 1. E.Thevaguru

  சைவ உணவு வகைகள்.

  பலாக்காய் என்பதுதான் சரியான சொல். அன்பருக்கு இது தெரியாமல் இருப்பது கவலை அளிக்கிறது. தமிழ் திரிபு பட அநுமதிக்க கூடாது. பிலாக்காயஎன்பது பேச்சு வழக்கில் உள்ள சொல். எழுத்தில் வருவது சரியல்ல.
 2. வல்வை மைந்தன் அவர்களே! பொதுவாகத்தான் எழுதினேன். உங்களை மாத்திரம் நினைவில் நிறுத்தி அல்ல. கவலை வேண்டாம். தொடருங்கள் உங்கள் பணியை. உளம் நன்றாகவே கனிந்த அன்புடன் உங்களை இம்மன்றம் வரவேற்கிறது. நானும் தனிப்பட்ட முறையில் வரவேற்கின்றேன் பண்டிதர் அவர்களே! பல நூற்றுகணக்கான சமஸ்கிருத சொற்கள் தமிழ் மொழியில் ஊடுருவி பல நூற்றாண்டுகளாக நிலைத்து நிற்கிறது. அவைகள் சம்ஸ்கிருத சொற்கள் என தெரியாமலே நாம் அவற்றை பாவித்துக்கொண்டு வருகின்றோம். சமஸ்கிருத சொற்களை தமிழில் இருந்து பிரிக்க முயன்று வெற்றி பெற்றவர் யாருமில்லை. உதாரணம் : கோவில்களில் தமிழில் அர்ச்சனை என்ற இயக்கம் வெற்றியளிக்கவில்லை.பண்டிதர் என்ற சொல்லே சமஸ்கிருத சொல் என நினைக்கின்றேன். சமஸ்கிருதத்தை விட அதிகம் பாதிப்பை தமிழுக்கு அண்மைய மூன்று நூற்றாண்டுகளாக் ஏற்படுத்துவது ஆங்கிலம். எனவே அதன் மேல் தான் முதலில் நமது கவனத்தை செலுத்த வேண்டும் என்பது எனது கருத்தாகும்.
 3. நன்றி என்பதுதான் சரியான பதம். இன்னொரு அங்கத்தவர் கோவம் என்று எழுதியுள்ளார். கோபம் என்பதுதான் சரியான பதம் என்பதை தாழ்மையுடன் குறிப்பிட விரும்புகின்றேன். நிலைபரம் என்ற சொல் பிழையாக ஊடகங்களில் நிலவரம் என்று பாவிக்கப்படுவதை கண்டு வேதனையடைகின்றேன். "நிலவரம்" நிகழ்ச்சி நடத்துபவர்களுக்கு வேண்டுகோள் விடுத்தேன். அவர்கள் மாற்றம் செய்யவில்லை. அவர்களுடன் நேரடி தொடர்பு உள்ளவர்கள். இதை அவர்களுக்கு உணர்த்தவும். கனடிய "TVI" ல் நிலைவரம் என பாவிக்கின்றார்கள் என்பது கவனிக்கத்தக்கத்து. இன்னொரு பிழையாக பாவிக்கப்படும் சொல் கிருஸ்ணன். சரியான பதம் கிருஷ்ணன் என்பதாகும். இலக்கிய புத்தகங்கள் இதற்கு சான்று. அண்மைய சில வருடங்களாக இளைஞர்கள் கிருஸ்ணன் என்று பிழையாக பாவிப்பது வேதனையை அளிக்கிறது. ஊடகம் ஒரு வலிமை மிகு சாதனம். ஊடகவியயாளர்கள் விடும் பிழைகள் பல்லாயிரக்கணக்கானவர்களின் மனதில் பிழையான எண்ணத்தை தோற்றுவித்துவிடும். பிழையான சொற்களை சரியென எண்ண வைக்கும். இங்கு பதிவை இடும் பலர் அவசரத்தில் தட்டச்சில் ஏற்படும் பிழைகளை சரிபார்க்காமல் பதிவை இட்டு விடுகிறார்கள். இதனால் பலரது பதிவுகளில் சொற்பிழைகளும் கருத்து மயக்கமும் ஏற்படுகிறது. எனவே பதிவை இடுமுன் இருமுறையாவது வாசித்து பார்த்து பிழை திருத்தி இடும்படி அன்பாக வேண்டிக்கொள்கின்றேன்.
 4. ஓர் இடத்தில் இப்படி:- அயம் என்றால் இரும்பு. இரும்பை நெருப்பில் வேக வைத்து, "அய காந்த செந்தூரம்" போன்ற செந்தூரங்களைச் செய்து உட்கொள்வார்கள். வேக வைத்த இரும்பு = வெந்த அயம் =செந்தூரம் இன்னோர் இடத்தில் :- திருவண்ணாமலையில் இறைவன் செந்தூரம் பூசிய திருமேனியுடன் காட்சியளிக்கின்றார். இன்னோர் இடத்தில்:- செந்தூரப்பூவே என்று தொடங்கும் பாடல் மற்றோரிடத்தில்:- Red Sulphide of Mercury செந்தூரம் எனப்படும். பிறிதோரிடத்தில்:- குழந்தைகளுக்கு எம்மூரில் செந்தூரம் கோரோசனை உரைத்து கொடுப்பது பராம்பரியம் Saffron எனப்படுவது குங்குமப்பூ வைத்தான் என நினைக்கின்றேன் செந்தூரம் என்பதன் ஆங்கில பதம் என்னவென்று தெரியவில்லை. அல்லது இரண்டும் ஒன்றா?
 5. இணையத்தளங்களில் காணப்படும் சமையல் மருத்துவ குறிப்புகளில் பொருட்களின் பெயர்களை சரியான ஆங்கிலப் பெயர் தெரியாததினால் சில வேளைகளில் தமது பாசைகளிலேயே (ஹிந்தி, குஜராத்தி, மலையாள)எழுதிவிடுகின்றனர். இதன் தமிழ் அல்லது ஆங்கில பெயர்களை தேடவேண்டி நிர்ப்பந்தம் சிலவேளைகளில் எமக்கு ஏற்படுகிறது. அப்படி தேடியதன் பட்டியலை கிழே தருகின்றேன். தவறிருப்பின் திருத்தவும். Cumin Seed - நற்சீரகம் Fennel Seed -பெருஞ்சீரகம் Fenugreek - வெந்தயம் Cardamon - ஏலக்காய் Cloves - கராம்பு Asafoetida - பெருங்காயம் Mustard - கடுகு Nutmeg - சாதிக்காய் Tumeric - மஞ்சள் Garlic - உள்ளி Ginger - வேர்க்கம்பு Cinnamon - கறுவா Urid dhall - உளுந்து Chana dhall - கடலைப்பருப்பு (Bengal Gram) Thaniya - கொத்தமல்லி Saffron - செந்தூரம் Vermicelli - சேமியா Jeera - Cumin Seed, நற்சீரகம் அறுசுவை Sweet - இனிப்பு Sour - புளிப்பு Salty - கைப்பு Spicy - உறைப்பு Bitter - கசப்பு Astringent - துவர்ப்பு
 6. தேனும் கறுவாத்தூளும் - கோப்பன்ஹேயன் சர்வகலாசாலையின் ஆராய்ச்சி 1.தேனும் கறுவாத்தூளும் வெவ்வேறு விகிதாசாரங்களில் கலந்து உண்பது பல நோய்களை குணப்படுத்தும் என கண்டறியப்பட்டுள்ளது. 2. தேன் எந்த பக்க விளைவுகளையும் தரமாட்டாது. நீரிழிவு நோயாளர்களும் சரியான அளவிகளில் மருந்தாக உண்டால் கெடுதல் வராது. 3. கனடாவில் Weekly World News என்னும் சஞ்சிகை 15 ஜனவரி 1995 ந் திகதில் தேனும் கறுவாத்தூளும் கலந்து உண்பதால் குணமாகும் நோய்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. 4. கோப்பன்ஹேயன் சர்வகலாசாலையின் ஆராய்ச்சியாளர்கள் ஒரு மேசைக்கரண்டி தேனையும் அரைக்தேக்கரண்டி கறுவாத்தூளையும் கலந்து நடமாட கஷ்டப்பட்ட மூட்டுவாத நோயாளர்களுக்கு கொடுத்து பரீட்சித்ததில் 200 ல் 73 பேர் நோவிலிருந்து விடுபட்டு நடமாட முடிந்த்தை கண்டுள்ளார்கள். மேலதிக பெறுமதியான தகவல்களை Power Point Slideshow மூலம் அறிய கீழ்க்காணும் Link ஐ சொடுக்கவும். http://uploadaz.com/uploadaz/I03/1175293545.pps
 7. கை மருந்து. வீட்டு வைத்தியம், இயற்கை வைத்தியம் ஆகிய மூன்றும் ஒன்றைதான் குறிக்கிறது. நிற்க! என்னிடம் தேனும் கறுவா பட்டைத்தூளும் கலந்த ஒரு வைத்தியம் சம்பந்தமான .PPS file இருக்கிறது. அதை எப்படி இவ் இழைத்தில் (thread) தரவேற்றுவது என யாராலும் சொல்ல முடியுமா? நன்றிகள்
 8. யாழ்கள நீதிமன்றம்---30.3.2007 இம்மன்றத்தில் "தாயகத் தமிழீழத்தில் மக்கள் படும் அவலங்களிற்கு, தமிழீழ தாயகத்திற்கு தேவையான தமது கடமைகளைச் செய்யாத உலகத்தமிழர்களின் அசமந்தபோக்கும் காரணமாக அமைகின்றதா?" எனவே குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்படும் பட்சத்தில் உலகத் தமிழர்கள் சுத்தவாளிகளா அல்லது குற்றவாளிகளா என்னும் வழக்கில், இம்மன்றத்தின் முன் வைக்கப்பட்ட வாதங்களை முழுமையாக படித்து ஆராய்ந்து இரண்டாயிரத்தி ஏழாம் ஆண்டு பங்குனி மாதம் முப்பதாம் திகதி இம்மன்றம் தனது தீர்ப்பை அளிக்கிறது தீர்ப்பு :- உலகத்தமிழினம் என்னும்போது கடந்த நூற்றாண்டில் புலம்பெயர்ந்த மலேசிய, தென்னாபிரிக்க, மொறிசியஸ் ஆகிய மற்றும் தமிழ் நாடு அத்தோடு 1983 களின் பின் இடம்பெயர்ந்து வெளிநாடுகளில் வாழும் ஈழத்தமிழர்களை உள்ளடக்கியதாகும். ஆனால் குற்றவாளிகள் ஆக நிறுத்தப்படவேண்டியவர்கள் 1983 ஆண்டின் பின் ஈழத்தில் இருந்து இடம்பெயர்ந்து பிற நாடுகளில் வாழும் முதற்பரம்பரையினர். இவர்களை இப்படியாக வகைப்படுத்தலாம். 1. தமது பணம் நேரம் ஆகியவற்றை அதிகளவு அர்ப்பணித்து தொண்டாற்றுபவர்கள். இவர்கள் மிக குறைந்த தொகையினர் 2. வேண்டப்படும்போது மாத்திரம் உதவி செய்பவர்கள். இவர்கள் பெரும்பான்மையினர் 3. கேட்கப்படும்போதும் உதவி செய்யாதவர்கள். இவர்களும் பெரும்பான்மையினர்தான் 4. எதிராக செயற்படுபவர்கள். இவர்கள் மிகவும் சொற்பமானவர்கள். ஒரு வீட்டை கட்ட பல மாதங்கள் பிடிக்கும். அதை தகர்க்க ஒரு விநாடி போதுமானது. ஒருவன் தன்னை கெட்டவன் என பெயர் எடுக்க ஒரு நாள் போதுமானது. நல்லவன் என பெயர் எடுக்க பல ஆண்டுகள் பிடிக்கும். தேசத்தின் குரலின் இறுதி நிகழ்வின்போது தமிழர்கள் பல நாடுகளில் இருந்தும் பறந்து வந்து அந்த புகழ்பெற்ற மாளிகையில் நடத்திய அந்த இறுதி நிகழ்வு அந்த ராஜ ஊர்வலம் ஒன்றே போதும் ஈழத்தமிழ்ர்களின் ஒற்றுமையையும், ஆர்வத்தையும் உலகத்திற்கு காட்டுவதற்க்கு. இந்நிகழ்வு காட்டுவது அசமந்த போக்கையல்ல அக்கறையை. மலேசியத்தமிழர்கள் ஈழம் என்றால் வாத்தியமா? என கேட்கிறார்களெனில் கடந்த நூற்றாண்டில் இடம்பெயர்ந்து பெயரளவில் தமிழர்களாக வாழ்ந்துகொண்டிருக்கிற தென்னாபிரிக்க தமிழர்கள் செய்யும் இலை மறை காயான உதவி போற்றுதற்குரியது. பொங்குதமிழ், உரிமைக்குரல் நிகழ்ச்சிகளை நாடுகள் தோறும் நேரம் பணம் ஆகியவற்றை செலவழித்தும் மழையிலும் கொட்டும் பனியிலும் தங்கள் பிள்ளைகுட்டிகளை சுமந்தவாறு பங்குபற்றியது தமிழர்கள் குற்றவாளிகள் அல்ல என்பதை காட்டி நிற்கிறது. களத்தில் வாழ்ந்த போது பணமாகவும் நகையாகவும் கொடுத்தார்கள். புலம்பெயர்ந்து அந்நாடுகளின் சட்டதிட்டத்தை அனுசரித்து டொலராக கொடுக்கிறார்கள். சுனாமி ஏற்பட்டபோது உலகம் வாழ் தமிழர்கள் ரீ ஆற் ஓ முலமாகவும், வேறு அமைப்புகள் மூலமாகவும், தாங்களாகவே காவிச்சென்று கொடுத்த பணமும் பொருளும் கோடி பெறும் Ttn, tvi, ctr. இன்பத்தமிழ் வானொலி, Ibc போன்ற ஊடகங்கள் ஆற்றும் தொண்டு கவனத்தில் கொள்ளப்பட வேண்டியவையாகும். அதே நேரத்தில் சுயநல பத்திரிகைகளும் இல்லாமல் இல்லை அமைதியாக, ஆர்ப்பரிக்காது தாம் கற்ற தொழிற்நுட்பத்தை பகிர்ந்து கொண்டும், நாடு கிடைத்தவுடன் அதை வளப்படுத்துவதற்கான திட்டத்துடன் அங்கு செல்ல காத்திருக்கும் அறிஞர்களை என்னென்று கூறுவது. இவையெல்லாம் தமிழினத்தை சுற்றவாளியாக்கும் காரணிகள். இருந்தபோதும்: நிதி கேட்டு போகும்போது வசதி இருந்தும் முகம் சுழிப்பது பரவலாக காணப்படுகிற ஒரு காரணியாகும். இது பரம்பரையாக வழிவந்த பணத்தை பொத்தி பிடிக்கும் சுயநலத்தின் அடிப்படையில் தோன்றிய ஒரு காரணியாகும். இருந்தும் நட்சத்திர இரவுகளுக்கு பணத்தை செலவழிப்பது பணத்தை பொத்திப்பிடிக்கும் அதே ஆட்களா அல்லது வசதி படைத்த வேறு ஆட்களா என்பது நிரூபிக்கபடவில்லை. எனவே ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்ற வாதம் இவ்விடயத்தில் பொருந்தாது. ஊர்வலங்களுக்கும், கூட்டங்களுக்கும் போதியளவு சனம் வருவதில்லை என்பது உண்மைதான். விடுப்பு கிடைக்காமை, போக்குவரத்து வசதியின்மை, காலநிலை, சம்பளத்தில் வெட்டு என்பனவற்றை கருத்தில் கொண்டு பார்த்தாலும், கூட்டங்களுக்கு குறைந்தளவு சனம் பங்குபற்றுவது, வர வசதி இருந்தோரும் வரவிலை என்பதை காட்டி நிற்கிறது. எனவே இது அசமந்த போக்குத்தான். சிட்னியிலிருந்து பாதகமான அறிக்கைகள் பல யாழ் களத்தில் காணப்படுகின்றன. அங்கு இரு இனங்களும் ஏறக்குறைய சம பலத்தில் இருப்பதினாலோ அல்லது மற்ற நாடுகளுடன் ஒப்பீட்டளவில் கற்றோர் அதிகம் குடியேறி இருப்பதினால் அவர்கள் இங்கிதமாக நடப்பதாக எண்ணி உணர்வுகளை வெளிக்காட்ட தவறுவதனாலாகவோ இருக்கலாம். எனவே எதிர்காலத்தில் அவர்கள் அக்கறையுடன் கூடிய பங்களிப்பு செய்யவேண்டும் என இம்மன்றம் கருதுகிறது நூற்றுக்கு எழுபத்தைந்து வீதமான இடம்பெயர்ந்தோரிடம் ஆங்கில புலமையின்மை காணப்படுகிறது. இது பல நேரங்களில் அவர்களுக்கு பின்னடைவை கொடுக்கின்றது. அவர்களிடம் வரையறுக்கப்பட்ட உதவியை எதிர் பார்க்கலாமே அன்றி பரப்புரை போன்ற விடயங்களில் அவர்களிடம் இயலாமையை நாம் எதிர்பார்க்கவேண்டும். புலம்பெயர்ந்தவர்களின் இரண்டாம் தலைமுறையினரிடம் காணப்படும் தமிழ்மொழியாற்றலின்மை, ஈழநாட்டுப்பற்றின்மை போன்றவற்றிக்கு அவர்களை அந்த வழியில் ஊக்குவிக்காத முதற்தலை முறையினர் தான் பொறுப்பேற்கவேண்டும். சில கோவில்கள் தமது வருவாயில் ஒரு பங்கினை ஈழநாட்ட்டின் வளர்ச்சிக்கு திருப்பிவிட்டாலும் பல அப்படி செய்வதில்லை. காரணம் பல கோவில்கள் தனியாருக்கு உரித்துடையதாக இருப்பதால். பொதுக்கோவில்களை வளர்ககாதது எமது மக்களின் குறைபாடுதான். பொது நிர்வாகத்தின் கீழ் உள்ள கோவில்களை வளர்த்து அதனூடாக ஈழவளர்ச்சியை ஊக்குவிக்கலாம். சரியான தருணத்தில் பொருத்தமான வழிகாட்டல் அல்லது தலைமைத்துவம் புலம்பெயர்ந்த நாடுகளில் குறைவாக உள்ளதும் தமிழர்கள் ஒன்று திரளாததற்கு ஒரு காரணமாகும்.கனடாவில் அண்மையில்தான் இருவர் அரசியலில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்
 9. வடிவேலுவின் மொழி [கல்லானாலும் காதலன் Full ஆனாலும் புருசன்.] பழமொழியல்ல; புதுமொழி. 1. கழுதைக்கு தெரியுமா கற்பூரவாசனை. 2. எள் எண்ணைக்கு காயுதாம் எலிப்புழுக்கை சேர்ந்த குற்றத்திற்கு காயுதாம் வேறு சில... குலைநடுக்கம் என்பது தவறு. கொலை நடுக்கம் என்பதே சரி.அதே போல நிலவரம் என்பது தவறு. நிலைபரம் என்பதே சரி.
 10. இப்பக்கங்களில் ஒருவரின் பதிவிற்கு கீழே உள்ள "Add replay" பட்டனை கிளிக் பண்ணவரும் பெட்டியின் கீழே Attachments என ஒரு பகுதி இருக்கின்றது. அதன் வலது பக்கத்தில் Browse என்றும் அதன் பக்கத்தில் பச்சை பின்னணியில் Upload என்றும் இருக்கிறது. இதை எதற்கு எங்கே பாவிக்கவேண்டும். upload பண்ணினால் எங்கே அந்த பையில் எங்கே தென்படும். யாராவது விளக்குவீர்களா? நன்றி
 11. அங்கத்தவர்களை தரம் பிரித்தல் தொடர்பாக எனது அபிப்பிராயம். பொதுவாக ஒரு ஸ்தாபனத்தில் Founder member, Junior member, Senior member, most Senior Member, special Guest or member, Patron என்று தரம் பிரிப்பார்களே தவிர Advanced member என்று யாரையும் கூறப்படுவதை நான் கேட்டதில்லை. Advance என்ற சொல்லுக்கு அர்த்தம் - Go or Bring forward; Propose; lend; இன்கே Advanced member எனப்படுவதன் அர்த்தம் மூத்தவர்கள் அல்லது விஷேச உரிமை பெற்றவர்கள் என்பதாகும். எனவே அவர்களை Senior Members என அழைப்பது பொருத்தமாகும் என்பது எனது கருத்தாகும். இது சரி என ஏற்றுக்கொண்ட்டல் அதன்படி பெயர் மாற்றம் செய்வது நன்று.
 12. ஆம் தமிழ் சொல்தான். அரிசி ஐ ஆங்கிலத்தில் எழுதினால் Arice ஆகிறது. அதில் A ஐ எடுத்து விட்டால் றைஸ் (Rice). தமிழில் இருந்து ஆங்கிலத்திற்கு போன 3 தமிழ் சொற்களை தருகின்றேன். அவையாவன: Catamaran Avatar Guru Curry
 13. E.Thevaguru

  அறிவித்தல்

  எனக்கு யாழ் இணைத்திலிருந்து ஒரு இ-மெயில் வந்துள்ளது. எனது பதிவுகள் சிலவற்றை Archive இலிருந்து எடுத்து MIME Encoding செய்து அனுப்பப்பட்டிருக்கிறது. இதை Decoding செய்து வாசிப்பது அல்லது ஹாட்டிஸ்க்கு கொப்பி பண்ணுவது எப்படி என தெரியவில்லை. இணையத்தில் தேடினேன். விஞ்ஞான விளக்கங்கள் தான் காணப்படுகிறது. சுருக்க வழி முறை எதுவும் கிடைக்கவில்லை. சுருக்க வழி இருந்தால் கூறுங்கள். நான் IE ver 6 பாவிக்கின்றேன். எனது Mail Carrier YAHOO வாகும் Header ம் செய்தியின் முதல் 4 வரிகளின் மாத்திரம் பிரதி பண்ணியுள்ளேன். இச்செய்தியை Word க்கு நேரடியாக கொப்பி பண்ணமுடியாமலிருந்தது. பின் NotePad க்கு கொப்பி பண்ணி பின் அதிலிருந்து Word க்கு கொப்பி பண்ணினேன். அங்கு வைத்து முழுமையாக்கி, அதை கொப்பி பண்ணி கருத்துக்களத்தில் Paste பண்ணுகின்றேன். நான் ஆங்கில Type Writer ல் Keyman மென்பொருள் மற்றும் TSCu Pranar Font உதவியுடன் Word ல் தட்டச்சு செய்து, பின் அதை பிரதி பண்ணி கருத்துக்களத்தில் Paste பண்ணுவதுதான் வழமை. இது தான் செய்தியின் மேற்பகுதி. This email has been sent from http://www.yarl.com/forum3/index.php. Your archived messages have been compiled into a single file and has been attached to this message. Regards, The கரà¯à®¤à¯à®¤à¯à®•à¯à®•à®³à®®à¯