Jump to content

sathiri

கருத்துக்கள பார்வையாளர்கள்
  • Posts

    5106
  • Joined

  • Last visited

  • Days Won

    53

sathiri last won the day on February 14 2020

sathiri had the most liked content!

About sathiri

  • Birthday 01/10/1967

Contact Methods

  • AIM
    sathiri@hotmail.com
  • MSN
    sathiri@gmail.com
  • ICQ
    0
  • Skype
    gowripal sri

Profile Information

  • Gender
    Male
  • Location
    பிரான்ஸ்
  • Interests
    எதுவும் இல்லை

Recent Profile Visitors

12362 profile views

sathiri's Achievements

Mentor

Mentor (12/14)

  • Very Popular Rare
  • Week One Done
  • One Month Later
  • One Year In
  • First Post

Recent Badges

1.1k

Reputation

  1. இது யாழ் இணையம் சார்பில் பிரபாகரனுக்கு செலுத்தப்பட்ட அஞ்சலி 22.05.2009 அன்று நான் பிரபாகரனுக்கு அஞ்சலி செலுத்தி ஒரு பதிவை யாழ் களத்தில் இட்டிருந்தபோது பெரும்பாலான உறுப்பினர்களால் திட்டி தீர்க்கப்பட்டு யாழ் கள நிருவாககமும் அந்த பதிவை நீக்கி விட்டிருந்தது அத்தோடு தான் எனக்கும் யாழ் களத்துகுமான இடைவெளி ஆரம்பித்து யாழ் கள நிருவாகத்தில் நுனாவிலான் என்னை நீக்கியும் விட்டுந்தார் அது பிரச்சனையில்லை பதினோரு வருடம் கழித்து பிரபாகரனுக்கு அஞ்சலி செலுத்தியது நிச்சயம் ஒரு இனத்துக்காக குடும்பத்தையும் இழந்து போராடிய ஒரு வீரனுக்கு செலுத்தும் மரியாதையே ..அஞ்சலிகள் ..ஒரு கருத்தை உண்மையை ஏற்றுக்கொள்ளவே பதினோரு வருடம் சென்றிருக்கிறது என்கிறபோது இந்த இனம் உருப்படாது என்று மட்டும் தெரிகிறது நன்றி
  2.   படிக்கிறவர்களே எழுத்துப் பிழைகளை திருத்தி படிப்பார்கள் எண்டு எழுதியவர் நினைத்திருக்கலாம்
  3. சொர்ணம்: களத்தில் நின்ற சண்டியன்- 03! 0 BY PAGETAM ON JULY 7, 2014சிறப்புக்கட்டுரைகள் மாத்தையா கைதின் முழுமையான பொறுப்பும் சொர்ணத்திடமே ஒப்படைக்கப்பட்டிருந்தது. ஏற்கனவே பிரபாரன் மீது வைத்திருந்த விசுவாசம், தனது பொறுப்பிலிருந்த பாதுகாப்பு ஏற்பாடுகளை ஊடுருவி மாத்தையாவின் சதிக்கரங்கள் ஊள்நுழைந்ததாக அவர் நம்பியது என இரண்டும் சேர்ந்து அவரை ஒரு வெறி கொண்ட வேங்கையாகத்தான் மாத்தையாவின் முகாமிற்கு கொண்டு சென்றது. தனது வாகனத்திலிருந்த விறுவிறுவென இறங்கிய சொர்ணம், நேராக வாயிலுக்கு சென்றார். அங்கு மாத்தையாவின் அணியின் இரண்டு போராளிகள் காவல்கடமையில் நின்றனர். இதை படிக்கும் உங்களிற்கும், சொர்ணத்தின் அணியிலிருந்தவர்களிற்கும்தான் அந்த சமயத்தில் ஒருவித பதட்டம் நிலவியது என நினைக்கிறேன். வாயில்கடமையில் நின்ற போராளிகளிற்கு சொர்ணம் வந்ததன் காரணமோ, நடந்த, நடக்கவுள்ள விபரீதமோ எதுவும் தெரிந்திருக்கவில்லை. குறைந்தபட்சம் ஒரு மோதலிற்கான ஏற்பாட்டுடன் கூட அவர்கள் நிற்கவில்லை. மாத்தையா விவகாரத்தில் தீராத மர்மத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் விடயங்களில் ஒன்று இது. மாத்தையா விவகாரம் திடீரென ஏற்பட்ட ஒன்றல்ல. தன்மீதான வலை இறுகுவது மாத்தையாவிற்கு ஏற்கனவே தெரிந்ததுதான். அதனால்த்தான் யாழ்ப்பாணம் அரியாலையிலிருந்த அன்ரன் பாலசிங்கம் வீட்டிற்கு சென்று உண்ணாவிரதம் இருந்தார். அந்த சமயத்தில் அன்ரன் பாலசிங்கமும் மாத்தையாவின் சதி பற்றிய தகவல்களை நம்பியிருக்க வேண்டும். அதனால்த்தான் இந்த விடயத்தில் அவர் அக்கறை காட்டவில்லை. தனது வீட்டில் வந்து உண்ணாவிரதம் இருந்த மாத்தையாவை பார்த்து, “எதற்காக இங்கு வந்து உண்ணாவிரதம் இருக்கிறாய்? உனக்கு ஏதாவது பிரச்சனையென்றால் ஏதாவது கோயில்ல போய் இரு. நாலு சனத்திற்காவது விசயம் தெரியவரும்” என கூறி அனுப்பி விட்டார். சொர்ணம் நேராக அந்த காவலர்களிடம் சென்று கேட்டது ஒரேயொரு கேள்விதான். அவர்கள் ஆயுதங்களை கீழே வைத்து விட்டார்கள். “நீங்கள் பிரபாகரனின் இயக்கமா? மாத்தையாவின் இயக்கமா?” இதுதான் சொர்ணம் கேட்ட ஒரே கேள்வி. இதொரு கேள்வியா? அவர்கள் பிரபாகரன் இயக்கம் என்றார்கள். அப்படியாயின் ஆயுதங்களை கீழே வைக்கச் சொன்னார். அவர்கள் வைத்து விட்டார்கள். நேராக சொர்ணம் உள்ளே சென்றார். அவரைத் தொடர்ந்து அணி உள்நுழைந்தது. நல்ல வேளையாக மாத்தையாவின் வலது கரமான ஒற்றைக்கை சுரேஷ் அன்று முகாமில் தங்கியிருக்கில்லை. அவர் நின்றிருந்தால், நிச்சயம் மோதலொன்று வெடித்திருக்கலாம் என நம்பப்படுகின்றது. அல்லது அதுவுமொரு ஊகமோ தெரியவில்லை. முகாமின் மையத்திலிருந்த வீட்டில்த்தான் மாத்தையா தங்கியிருந்தார். சொர்ணம் தலைமையில் அணியொன்று வருவதை கண்டதும் அவர் விபரீதத்தை உணர்ந்து கொண்டிருக்க வேண்டும். முன் விறாந்தையில் உட்கார்ந்திருந்தவர், எழுந்து உள்பக்கமாக ஓடி கழிவறைக்குள் நுழைந்து விட்டார். பின்னாலேயே ஓடிச் சென்ற சொர்ணமும் அணியினரும் அறைக்கதவை உடைத்து திறந்தனர். உள்ளே நுழைந்த சொர்ணம், அதுவரை மிக மரியாதையாக அணுகிவந்த தனது பிரதித்தலைவரை தூசண வார்த்தைகளை உபயோகித்து மிரட்டினார். மாத்தையாவும் எந்த எதிர்ப்பிலும் ஈடுபடவில்லையென்பதுதான் ஆச்சரியமான விடயம். வழக்கமாக எந்த கோபமான சமயத்திலும் இரண்டொரு தூசண வார்த்தைகள் சொர்ணத்தின் நுனி நாக்கில் வந்துவிடும். மிக ஆக்ரோசமாக சமயங்களில் தூசண வார்த்தைகள் உபயோகிப்பது அந்த அமைப்பில் ஆச்சரியமான சங்கதியல்ல. குறிப்பாக மிக இறுக்கமான களங்களில் ரவைகளிற்கு சமமான தூசண வார்த்தைகளும் வரும். இதுவும் அப்படியொரு களஇறுக்கத்திற்கு சமமான நிலைதானே. மாத்தையா அந்த சமயத்தில் செய்வதற்கு எதுவுமிருக்கவில்லை. அவர் பேயறைந்தவர் போல நின்றார். தூசண வார்த்தைகள் மற்றும் தனது ஆளுமையினால் சூழலை கட்டுப்பாட்டில் கொண்டு வந்த சொர்ணம், அப்படியே துரிதமாக செயற்பட்டு, மாத்தையாவின் கையை மடக்கி பின்னால் கொண்டு வந்து கைதியாக்கினார். பின்னாளில் மிகப்பெரும் ஆவலைத் தூண்டும் விடயமாக மாறிய, மாத்தையா விவகாரத்தில் நேரயாக பங்குபற்றி அவரை கைதியாக்கியவர் சொர்ணம். மாத்தையாவை கைது செய்ததன் மூலம், தனது தலைவரை பாதுகாத்துக் கொண்டு விட்டேன் என உணர்ந்ததன் பின்னர்தான் அவர் நிம்மதியடைந்தார். இந்த சமயத்தில் அவர் வெளிப்படுத்திய உணர்ச்சிபூர்வமான விசுவாசமும், இயக்கம் மீதான பற்றும் பிரபாகரனை நிச்சயம் மனம் நெகிழச் செய்திருக்கும் என நினைக்கிறேன். நீண்ட காலமாக அவர், தனது தலைவரை பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டிருந்தமையினால் பிரபாகரன் குடும்பத்திலும் அவர் ஒரு அங்கத்தவராக இருந்தார். பிரபாகரன் மீது அவர் கொண்டிருந்த கேள்விக்கிடமற்ற விசுவாசமும், பற்றுதலும் இது போன்ற எண்ணற்ற சம்பவங்களை இயக்க வரலாறு முழுவதும் எழுதிச் சென்றுள்ளது. இதனாலேயே இறுதிநாட்கள் வரை பிரபாகரனின் முதலாவது நம்பிக்கைக்குரிய விசுவாசியாக அவரிருந்தார். அவரது திருமண விவகாரத்தில், அவர் எவ்வளவு விசுவாசியாகவும், இயக்கத்திற்கு அப்பால் எதனையும் சிந்திக்காதவராகவும் இருந்தார் என்பதும் வெளிப்பட்டது. அவரை திருமணம் செய்யுமாறு பிரபாகரன் கூறிவிட்டார். அவர் இந்த விடயத்தை பிரபாகரனின் மனைவி மதிவதனியடம் சொல்லியிருக்கிறார். பிரபாகரனிடம் நேரடியாக தொடர்பு கொள்ளவல்ல, மற்றும் அவரை சூழ்ந்திருக்கும் படையணியினர் எல்லோருக்கும் ஒரு தாயாராக மதிவதனி இருந்தார். சிலரைவிட ஓரிரு வயதுகள் மூத்தவராக இருந்தார். பலருக்கு தாயாரின் வயதில் இருந்தார். எனினும், அனைவரிற்கும் தாயாராக இருக்கும் பக்குவம் அவரிடமிருந்தது. சொர்ணம் வந்து விடயத்தை சொன்னபோது, அந்த பொறுப்பை மதிவதனியே எடுத்துக் கொண்டு விட்டார். அப்பொழுது மகளிர்படையணி தளபதிகள் ஒருவராக ஜனனி இருந்தார். 1993 இல் புலிகள் நடத்திய ஒப்ரேசன் தவளை நடவடிக்கையின் கட்டளைத்தளபதிகளில் ஒருவராக சொர்ணம் இருந்தார். அவரின் கீழ் செயற்பட்ட அணிகளில், மகளிர்படையணியும் ஒன்று. தவளை நடவடிக்கையில் ஈடுபட்ட மகளிர்படையணியின் பிரிவொன்றை ஜனனி வழிநடத்தினார். அந்த சமயத்தில் இரண்டு பேரிற்குமிடையில் ஒருவித அந்நியோன்யம் இருந்ததாக அப்பொழுதே களத்தில் நின்ற போராளிகள் பேசிக் கொண்டனர். அல்லது அவர்கள் பேசும் விதத்தில் அந்த அந்நியோன்யம் இருந்தது. ஏற்கனவே சொர்ணத்தின் யுத்த முறை பற்றி குறிப்பிட்டிருக்கிறேன். யுத்தகளங்களில் அவர் கட்டளை வழங்கினால் பத்து சொல்லில் இரண்டு சொல்தான் யுத்தகள கட்டளைகள். மிகுதி எட்டும் முரட்டுத்தனமான வார்த்தைகள் (அவற்றில் தூசணங்களும் அடக்கம்). இதுதான் அவர் சூழலை கட்டுக்குள் கொண்டுவரும் விதம். ஆனால் ஜனனி விடயத்தில் அவரால் அப்படி நடந்து கொள்ள முடியவில்லை. அது பொதுவான மனித இயல்புதான். காதலியுடன் பேச நிறைய தயார்படுத்தல்களுடன் போவதும், அவளுடன் பேசும்போது தடுமாறுவதும் பற்றித்தானே முழு தென்னிந்திய திரைப்படங்களும் வருகின்றன. பாடல்களும் வருகின்றன. சிகண்டியின் முன்னால் நின்ற பீஷ்மரைப்போலத்தான், அவர் சமயங்களில் ஜனனியின் முன்னால் நின்றார். ஆனாலும், அந்த சூழ்நிலையை காதலாக அல்லது மனதிற்கு நெருக்கமான உரையாடல் பொழுதாக மாற்றும் கலை அவரிடம் இருக்கவில்லை. அவர்தான் மிகத்தீவிரமான இராணுவ வீரனாயிற்றே. அல்லது அதற்கான பொழுதிருக்கவில்லை. பூநகரி களத்திற்கு விடுதலைப்புலிகளின் அனைத்து பிரிவுகளிலிருந்தும் ஆட்கள் சென்றனர். பிரபாகரனின் மெய்ப்பாதுகாவலர் அணியான இம்ரான் பாண்டியன் படையணியிலிருந்தும் போராளிகள் சென்றிருந்தனர். அந்த அணியிலிருந்த போராளியொருவன், நிலவரத்தை அவதானித்திருக்கிறான். பின்னர், அந்த சண்டை முடிந்து போராளிகள் முகாம் திரும்பி விட்டனர். கள விடயங்கள் பற்றி மதிவதனி போராளிகளுடன் பேசிய சமயத்தில், அவர்கள் இந்த விடயத்தை சொல்லிவிட்டனர். இதேபோல, பெண்கள் அணியிலும் இது அவதானிக்கப்பட்டிருந்தது. அது மகளிர் தளபதிகளில் ஒருவரான ஜெயாவின் காதுகளிற்கும் சென்றிருந்தது. அவர் ஒருநாள் விடயத்தை அடேல் பாலசிங்கத்தின் காதில் போட்டிருக்கிறார். அடேல் அதனை எடுத்தக் கொண்டு மதிவதனியிடம் வந்தார். அடேல் ஆச்சரியப்படும் விதத்தில் மதிவதனி ஏற்கனவே அந்த தகவலை வைத்திருக்கிறார். அதன் பின்னர் ஜனனியுடனும் பேசி அந்த திருமணத்தை மதிவதனி முடித்து வைத்தார். திருமணத்தின் பின்னரும், அந்த குடும்பங்கள் மிக நெருக்கமாக இருந்தன. விடுமுறைகளில், அல்லது குறிப்பிட்ட காலஇடைவெளிக்கொருமுறை இரண்டு குடும்பத்தினரும் ஒன்றாக பொழுதைக் கழித்து கொண்டார்கள். துவாராகாவை விடவும், வயதில் மிக இளையவராக இருந்தபோதும், சொரண்ணத்தின் மகளும் துவாரகாவும் மிக நெருங்கிய நண்பிகளாக இருந்தனர். யுத்தம் முடிவதற்கு முந்தைய சில வருடங்களில், இருவரும் சகோதரிகளைப் போலவே ஒட்டித் திரிந்தனர். வாகனம் ஓடப்பழகுகிறோம் பேர்வழி என இருவரும் ரக்ரரில் ஏறி புதுக்குடியிருப்பின் ஒதுக்குப்புற தெருக்களை அதகளப்படுத்திக் கொண்டிருந்தார்கள். அல்லது பரதநாட்டியம் பழக கிளிநொச்சிக்கு போய் வந்து கொண்டிருந்தார்கள். மாத்தையாவின் விவகாரத்தின் பின்னர், பல உயர்மட்ட தலைகள் உருண்டன. சில திரும்பி வந்தன. சில வரவில்லை. பிரபாகரனின் மெய்ப்பாதுகாவலர் அணியிலிருந்தும் பலர் தூக்கப்பட்டனர். இதனால் மெய்ப்பாதுகாவலர் அணி ஆட்டம் கண்டது. இந்த சமயத்தில் சொர்ணம் ஒரு வித்தியாசமான முடிவு எடுத்தார். தான் இல்லாத ஒரு மெய்ப்பாதுகாவலர் அணியை உருவாக்குவது பற்றி பிரபாகரனிடம் கூறினார். அவர் இயக்கத்தில் சேர்ந்த இரண்டாவது வருடத்தில் இருந்து, இந்த சம்பவம் நடக்கும் 1994 வரையும் பிரபாகரனின் நிழலாக இருந்தார். விடுதலைப்புலிகளின் மிகத்தீர்க்கமான இந்த காலகட்டத்தில் அவர் இல்லாத பிரபாகரனை காண்பது அரிதான சம்பவமாக இருந்தது. இப்டியொரு சூழலிலத்தான் அவர் பிரபாகரனின் மெய்ப்பாதுகாவலர் பொறுப்பை இன்னொருவரிடம் ஒப்படைக்க முடிவு செய்தார். இதனை பிரபாகரனும் ஏற்றுக் கொண்டார். சொர்ணம் இல்லாவிட்டால் யார் என்ற சிக்கல்கள் எதுவும் படையணிக்குள் இருக்கவில்லை. விடுதலைப்புலிகளின் படையணிகளிற்குள்ளேயே இம்ரான் பாண்டியன் படையணிதான் ஒரு விசித்திரமான சிக்கலை எதிர்கொண்டபடியிருந்தது. மற்றைய படையணிகளில் உள்ள ஒருவரிற்கு படிமுறையான வளர்ச்சி இருந்து கொண்டேயிருக்கும். அங்கு தொடர்ந்து வெற்றிடங்கள் உருவாகிக் கொண்டேயிருக்கும். ஏனெனில், அது தொடரந்து களத்தில் நிற்கும் படையணிகள். மரணம் நிகழ்ந்து கொண்டேயிருக்கும். இது தவிர, ஒருபடையணியில் உள்ளவர், உள் முரண்பாடு காரணமாகவோ அல்லது, தேவை நிமித்தமாகவோ வேறு ஒரு பிரிவிற்கு செல்ல முடிந்தது. இந்த இடமாற்றம் இம்ரான் பாண்டியன் படையணியில் கிடையவே கிடையாது. பாதுகாப்பு கடமைகளில் உள்ளவர்கள் வெளியில் சென்றால், இரகசிய கசிவு ஏற்படலாம் என்பதால் அந்த ஏற்பாடு. தவிரவும், அந்த படையணி தொடர்ந்தும் யுத்தகளத்தில் நிற்கும் படையணியல்ல. அதனால் ஒப்பீட்டளவில் உயிரிழப்பு வீதம் குறைவானது. இதனால், இரண்டாம் மட்டதளபதிகள் அந்த படையணியில் ஏராளமாக இருந்தார்கள். அதனால் சொர்ணத்தின் மாற்றத்தில் சிக்கல்கள் இருக்கவில்லை. அற்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தன. அவரது விசுவாசத்தை நிரூபிக்கவோ என்னவோ அவர் பாதுகாப்புடன் சம்பந்தப்பட்டிருந்த சமயங்களில்த்தான், மிக ஆபத்தான நெருக்கடிகளை பிரபாகரன் எதிர்கொண்டார். இப்படித்தான், அடுத்தவரிடம் பொறுப்பை ஒப்படைக்கலாம் என தயாரானபோது, இன்னொரு பெரிய நெருக்கடி ஏற்பட்டது. ஏற்கனவே நடந்த மாத்தையா விவகாரத்தைவிட மிகத் தீவிரமானதாக இது அப்பொழுது நோக்கப்பட்டது. மாத்தையா விவகாரம் வெளித்தெரிந்த ஆபத்து. இது மிக நுணுக்கமாக, திட்டமிடப்பட்ட ரீதியில் நடந்தது. ஒருநாள் பிரபாகரன் குடிக்கும் நீரில் சயனைட் கலக்கப்பட்டிருந்தது.
  4. யாழ் இணையத்திலை இன்னமும் உலக அரசியல் தெரியாத றெம்ப அப்பாவிகள் இருக்கிறாங்கள். :lol:
  5. கடந்த ஞாயிறு யாழ்கள முகத்தாருடன் கதைத்திருந்தேன். கடந்த இலங்கை சுதந்திர தினத்தையடுத்து மீண்டும் யாழ் களம் இலங்கையில் தடை செய்யப் பட்டிருப்பதாகவும் அதனால் புறொக்சி மூலமாக பார்க்க மட்டுமே முடிகிறது கருத்தெழுவது சிரமமாக இருப்தால் எதுவும் எழுதுவதில்லை யென்று தெரிவித்திருந்தார். அதே நேரம் அதைப்போன்றதொரு நாடகத்தை எழுத முயற்சித்த சுமேக்கு பாராட்டுக்கள்.ஆனால் நாடகத்தில் என்னத்தை சொல்ல வந்தீர்கள் என்கிற அந்த செய்தி தெளிவில்லாமல் இருக்கின்றது. தொடரும் என்று போட்டிருப்பதால் சொல்ல வரும் செய்தியை பலரும் எதிர்பார்ப்பதால் கருத்துக்களை வைக்கமல் இருந்திருக்கலாம்.
  6. எனது பிறந்த நாளிற்கு வாழ்த்திய அனைத்து அன்பு உள்ளங்களிற்கும் நன்றி. விஸ்கிக்கு பருத்தித் துறை வடை நல்லாயிருக்கு merci thanks
  7. அப்ப ஜி ரி வி தமிழ் தேசிய ஊடகம் இல்லையா? அட கடவுளே அடுத்தது தீபம் அதுதானா தமிழ் தேசிய ஊடகம்..?? எது தான் தமிழ் தேசியத்தை வளக்கிற ஊடகம் எதாவது ஒரு முடிவுக்கு வாங்கப்பா எக்சல் மண்டபத்திலை நடந்ததை விட மற்ற இடங்களிலை நடந்தது மாவீரருக்கான வணக்கம் இல்லையா?? அதை யார் முடிவு செய்யிறது அவங்கள் வணக்கம் செலுத்தக்கூடாதா ?? எதாவது புரியும் படியா சொல்லுங்கோ...
  8. தமிழ் சிறி என்பது மொழி வெறியை தூண்டுகிறது எனவே பெயரை மாத்தவும்
  9. புதிதாக அதுவும் வரும் போதே மட்டுவாக வந்திருக்கிறீர்கள். நான் நினைக்கிறன் யாழ்கள வராலாற்றிலையே இதுதான் முதல் தடைவை இப்படி ஒரு மட்டுறுத்தனர் வானத்தில் இருந்து குதிப்பது. எனவே கருத்தாளர்களின் கண்கள் உங்களை ஒரு மட்டுறுத்தினராக பாக்காமல் எப்பொழுதும் ஒரு சந்தேகத்தோடையே பார்க்கும் என்பது உறுதி. இப்படித்தான் யாழில் யாழினி என்றொரு மட்டு சில கருத்துக்கள் எழுதி விட்டு மட்டிறுத்துனர் ஆகியிருந்தார். அவர் கனகாலம் தனது பணியை செய்யமுடியாமல் போனதற்கு இதுவும் ஒரு காரணம். ஆனாலும் நல்வரவாகுக
  10. நுணாவிலானிற்கு பராட்டுக்கள்(இப்பவே பந்தம் பிடிச்சு வைப்பம் ) யாரது நியானி சயந்தனின் மகளாயிருக்குமோ???
  11. இந்த மாதம் பிறந்தநாளை கொண்டாடிய அனைத்து யாழ்கள உறவுகளிற்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
  12. இதுக்குத்தான் சொல்லுறது எப்பவுமே பெண்களோடை கவனமாய் இருக்கவேணுமெண்டு சாத்துவை மாதிரி வரவேற்பு பக்கமே தலை வைச்சு படுக்காமல் இருக்கிறது நல்லது காரணம் பல வருசத்துக்கு முன்னர் நடந்த அனுபவம் அப்பாவித்தனமாய் வரவேற்கப்போய் இப்பவும் முதுகிலை நிக்கிது :lol:
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.