Jump to content

sathiri

கருத்துக்கள பார்வையாளர்கள்
 • Posts

  5106
 • Joined

 • Days Won

  53

Everything posted by sathiri

 1. 50 சத குத்தி போட்டு நானும் கதைச்சிருக்கிறேன்
 2. புனிதப்போர்-சிறுகதை-சாத்திரி நடு இணைய இதழுக்காக ஓவியம்: சமித்திரா ஸ்ரீரங்கநாதன் 2005-ம் ஆண்டு யூலை மாதம் 25 நள்ளிரவை தாண்டிய நேரம் பிரான்சின் அதிபருக்கு உளவமைப்பன டி ஜி எஸ் சின் தலைவரிடமிருந்து அவசரமாக சந்திக்கவேண்டும் மற்றும் பாதுகாப்பு துறை அமைச்சரும் உடனிருந்ததால் விரும்பத்தக்கது என்றொரு தகவல் வந்திருந்தது.சிறிது நேரத்தில் அதிபரின் வீட்டிலேயே அந்த இரகசிய சந்திப்பு நடை பெற்றது. ஆப்கானிலிருந்த பிரெஞ்சு இராணுவத் தளத்திலிருந்து சங்கேத மொழியில் புலனாய்வு பிரிவு அனுப்பிய அந்த செய்தியை உளவமைப்பின் தலைவர் விபரமாக சொல்லி முடித்தபின்னர், “எல்லாமே தயார் நிலையிலுள்ளது. திட்டம் கூட வகுத்து விட்டார்கள்.உங்களின் சம்மதம் மட்டுமே போதும். நாளை காலை சூரியன் உதிக்கும்போது உலகம் முழுவதுக்குமே மகிழ்ச்சியான செய்தியை எங்கள் படை வீரர்கள் கொடுப்பார்கள்.” என்று விட்டு அதிபரையே உற்றுப்பார்த்தார். எதுவும் பேசாத அதிபரோ மூன்று சம்பெயின் கிளாஸ்களை எடுத்து மேசையில் வைத்தவிட்டு பிரிஜ்சை திறந்து சம்பெயினை எடுத்து முடிந்தளவு சத்தம் வராமல் திறந்தவர் கிளாசில் ஊற்றி பொங்கும் நுரைகளோடு இருவர் கைகளிலும் கொடுத்து,’இது உங்கள் திட்டம் வெற்றியடைவதுக்காக’ என்று சியஸ் சொல்லி சிரித்தார். 000000000000000000000 அரபிக்கடலில் நங்கூரமிட்டிருந்த மிதக்கும் இராணுவத் தளமான சாள் டி கோல் விமானம் தாங்கி கப்பலில் வரிசையாய் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த குண்டு வீச்சு விமானங்களில் இரண்டு ரஃபேல் எம் மாடல் விமானத்தின் எரிபொருள் மற்றும் பொருத்தப்பட்டிருந்த ஏவு கணைகள் எல்லாம் சரி பார்க்கப் பட்டிருந்தது. சீருடை அணிந்து ஹெல்மெட்டோடு ஜோனும் பிலிப்பும் தயார் நிலையில் நின்றிருந்தனர். ஜோன் முதலாவதாகவும் முப்பது செக்கன் இடைவெளியில் பிலிப் இரண்டாவது விமானத்தையும் கிளப்ப வேண்டும். இருவருமே விமானத்தில் ஏறி அமர்ந்ததும் ஜோன் ஹெல்மெட்டை அணிந்து கொண்டு சட்டைப் பையிலிருந்த படத்தை எடுதுப்பார்தான். மகன் ரயனை அணைத்தபடி காதல் மனைவி சோபி சிரித்துக் கொண்டிருந்தாள். அவன் கிளம்புவதுக்கான சமிக்கை கிடைத்தது. ‘இது என் தேசத்துக்கான யுத்தம் இதில் நான் வெற்றி பெற வேண்டும் என் இலக்கு தவறிப்போய் விடக்கூடாது’ என்று நினைத்தபடி வானத்தை அண்ணாந்து பார்த்து சிலுவை போட்டுக்கொண்டவன், கை கட்டை விரலை உயர்த்திக்கட்டி விட்டு காற்றை கிழித்துக்கொண்டு கப்பலை விட்டு கிளம்பினான். திட்டத்தின் படி இலக்கை முதலில் அவன் தாக்க வேண்டும். இலக்கு தவறினாலோ,ஏதும் பிசகினாலோ, ஏன் அவன் விமானம் சுடப்பட்டலோ அடுத்து வரும் பிலிப் அந்த இலக்கை தாக்க வேண்டும். எது எப்பிடியோ ஜோனுக்கு இதுதான் கடைசி தாக்குதல். புற்று நோயால் அவதிப்படும் தன் மனைவியை அருகிலிருந்து கவனிக்க பதவி விலகல் கடிதத்தை ஏற்கனவே கொடுத்து விட்டான். இந்த தாக்குதலில் தான் கொல்லப்பட்டு விடக்கூடாது என்பதுக்காகவே விமானம் கிளம்பிய பின்னர் இன்னொரு தடவை சிலுவை போட்டுக்கொண்டான். சில நிமிட பறப்பின் பின்னர் ஆப்கானிஸ்தான் பாகிஸ்தான் எல்லையில் நேவ்மலைப்பகுதியில் இருந்த அவன் இலக்கு ராடர் திரையில் மங்கலாக தெரிந்த அதே நேரம் ராணுவ கட்டுப்பாட்டுத் தளத்திலிருந்தும் கட்டளை கிடைத்தது. செங்குத்தாக விமானத்தை கீழிறக்கி இலக்கின் மீது இரண்டு ஏவு கணைகளையும் பாயவிட்டவன் அதே வேகத்தில் மேலே கிளம்பித் தளத்துக்கு திரும்பிக்கொண்டிருக்கும் போதே, இலக்கை அடைந்து விட்டோம். அடுத்த விமானமும் தளம் திரும்புமாறு சங்கேத மொழியில் கட்டளை கிடைத்திருந்தது. தளம் திரும்பியவனை அத்தனை வீரர்களும் சேர்ந்து தோளில் தூக்கி கொண்டாடினார்கள். அவனோ சட்டைப்பையிலிருந்த படத்தை எடுத்து. ‘என் காதல் மனைவியே என் செல்லக் குழந்தையே நான் வெற்றி பெற்று விட்டேன்.இதோ வந்து விடுகிறேன்’. என்றபடி முதமிட்டவனை உயரதிகாரி தன் அலுவலகத்துக்கு அழைத்தார். அவர் முன் சல்யூட் அடித்து நின்றவனின் தோளில் தட்டி பாராட்டியவர் சாட்டிலைட் மூலம் கிடைக்கப்பட்டிருந்த காணொளியை கணனியில் காட்டினார். மலையடிவாரத்திலிருந்த சிறிய கட்டிடமொன்றை ஏவுகணை தாக்கி வெடித்து பந்து போல் கிழம்பிய புகை மண்டலம் ஓய்ந்த பின். கட்டிடம் இருந்த இடத்தில் ஒரு பள்ளம் தெரிந்தது. ஆனால் ஜோன் ஒன்றை கவனித்தான், அவன் ஏவிய ஏவுகணை கட்டிடத்தை தாக்க சில வினாடிக்கு முன் புள்ளியாய் ஒரு உருவம் கட்டிடத்திலிருந்து வெளியேறுவது போலிருந்தது. அதை மீண்டும் மீண்டும் பார்த்தபோது கலவரமாகவும் இருந்தது. சிறிது நேரத்திலேயே உளவுப்பிரிவின் செய்தி வந்துவிடும் என்று அவன் கையை அழுத்திப்பிடித்து அமைதியாக்கினார் அதிகாரி. சிறிது நேரத்திலேயே தாக்குதல் வெற்றி என்கிற என்கிற செய்தி உளவுப்பிரிவிடமிருந்து வந்துவிட்டிருந்தது. 000000000000000000000 கடந்த காலங்களில் ஆபிரிக்க அரபு நாடுகளில் அவன் நடத்திய தாக்குதல்களுக்காக பாராட்டி கொடுக்கப்பட்டிருந்த கேடயங்கள் பதக்கங்களோடு புதிதாக இன்னொரு பதக்கமும் அந்த வரவேற்பறையை வடிவாக்கிக்கொண்டிருக்க, அவனது சீருடையும் அங்கேயே தொங்கிக்கொண்டிருந்தது. ‘அல்கெய்தாவின் முக்கிய தளபதியான ஓமர் அப்துல்லா விமான தாக்குதலில் கொல்லப்பட்டான். அவனது மனைவி குழந்தைகளும் கொல்லப்பட்டிருக்கலாமென நம்பப்படுகின்றது.’’என்கிற செய்தி உலகம் முழுதும் அலறிக்கொண்டிருக்கும் போது, மகன் ரயனை ஒருபக்கமும் மெலிந்து போய் முடியெல்லாம் உதிர்ந்த தலையில் துணியொன்றை கட்டியிருந்த மனைவி சோபியை மறுபக்கமும் அணைத்தபடி செய்தியை பார்த்துக்கொண்டிருந்தான் ஜோன். அப்போ அவன் பக்கம் திரும்பியவள், “ஜோன் எனக்கொரு சத்தியம் செய்து கொடுப்பாயா..?” “உனக்காக என்ன வேணுமானாலும் செய்வேன். என் காதலே .. சொல்.” “ஒரு வேளை நான் இறந்துபோனால் நீ இன்னொரு துணையை தேடிக்கொள். அடுத்து மகன் ரயனை ஒரு போதும் உன்னைப்போல் ஒரு ஆள்கொல்லி விமானியாக்கி விடாதே. யுத்தம் பற்றிய செய்திகளைப் பார்க்கும் போதெல்லாம் நான் படும் வேதனைகளை உனக்கு சொல்லிப் புரிய வைக்க முடியாது. அதன் விளைவுதான் எனக்கு இந்த நோயாக மாறியிருக்கக் கூடும்.” சொல்லும் போதே வார்த்தைகள் அடைத்து கலங்கியவளை இழுத்து நெற்றியில் முதமிட்டவன், “சே .. என்ன இது. நானிருக்கிறேன். உனக்கு ஒன்றும் நடக்காது. ரயனை நிச்சயமாக விமானியாக்க மாட்டேன். பிரிவின் வேதனை எனக்கு நன்றாகவே தெரியும்.” என்றபடி அவள் கண்களை துடைத்து விட்டான் . உலகின் சிறந்த ஆள்கொல்லி விமானி இப்போ சிறந்த சமையல்காரனாகி விட்டி ருந்தான். அவனின் அன்பு அரவணைப்பு அத்தனையும் இருந்தாலும் சோபியை காப்பாற்ற முயுடியவிலை. சோபியின் மரணம் ஜோனை வெகுவாகவே பாதித்திருந்தாலும், ரயனை கவனித்துக்கொள்ள அதிலிருந்து மீண்டு வரப் பெருமுயற்சி எடுக்கவேண்டியிருந்தது. இப்போதெல்லாம் அவனின் அன்றாட கடமையாக காலை எழுந்து சமையல் செய்து ரயனை தயார்ப்படுத்தி பாடசாலையில் கொண்டுபோய் விட்டு விட்டு, வழியில் உள்ள பூக்கடையில் வெள்ளை ரோஜா மலர்க் கொத்தொன்றை வாங்கிக் கொண்டு சோபியின் கல்லறைக்கு சென்று அதை வைத்துச் சில நிமிடங்கள் அங்கேயே அமர்ந்து விட்டு நேராக விசா வழங்கும் அலுவலகத்துக்கு வந்து விடுவான். இங்குதான் எனக்கு ஜோன் அறிமுகமாகியிருந்தான். கடந்த காலங்களில் ஆபிரிக்கா அரபு நாடுகளில் பணியாற்றியதால் அரபியை சரளமாக கதைக்கவும் கொஞ்சம் எழுதவும் கற்றுக்கொண்டிருந்தான். தன் தேசத்துக்கென நடத்திய குண்டுத் தாக்குதலில் எத்தனை பேர் கொல்லப் பட்டார்கள் அதிலெத்தனை அப்பாவிகள் குழந்தைகள் என்கிற கணக்கெல்லாம் அவனுக்குத்தெரியாது. யுத்தகளதில் உயிர்கள் என்பது வெறும் இலக்கங்களே. அந்த இலக்கங்களின் பின்னால் உயிரோடு கலந்த உணர்வுகளும் உறவுகளும் இருந்திருக்கும் என்பதை சோபியின் இழப்பின் போதுதான் உணர்ந்திருந்தான். அவற்றுக்கெல்லாம் ஏதாவது கைமாறு செய்ய நினைத்தவன், யுத்தம் நடக்கும் ஆபிரிக்க அரபு நாடுகளிலிருந்து அகதிகளாக வருபவர்களுக்கு வதிவிட உரிமை வாங்கிக் கொடுக்க மொழிபெயர்ப்பு வேலைகளை இலவசமாகவே செய்யத் தொடங்கியிருந்தான். அது அவன் மனதுக்கும் பிடிதிருந்தது. அந்த இடதில் உனக்கென்ன வேலையென நீங்கள் யோசிக்கலாம். ஜோனைப்போலத்தான் சம்பளமில்லாத உத்தியோகம். என் நகரதில் வசிக்கும் எம்மவார்களுக்காக மொழிபெயர்ப்புக்கு செல்வேன். அப்படியான நேரதில் வேறு வேலைகள் ஏதுமிருப்பின் கூட்டிச்சென்ற நபரை அறிமுகப்படுத்தி விபரத்தை சொல்லி விட்டு சென்றால் ஜோன் எல்லாமே செய்து கொடுப்பான். மற்றும்படி யுத்தம் பற்றிய கதைகளை தவிர்த்து மிகுதி எல்லாமே கதைப்போம். காலம் எல்லாவற்றையும் விழுங்கியபடி தன்பாட்டில் ஓடிக்கொண்டிருந்தது. இலங்கையில் யுத்தம் முடிவுக்கு வந்து விட்டதால் அகதிகளாக எம்மவர்கள் வருவதும் குறைந்துவிட, நானும் விசா அலுவலகம் போகும் தேவையில்லாததால் ஜோனை சந்திப்பதும் குறைந்து போய் விட்டிருந்தது. இந்த வருட ஆரம்பத்தில் கையில் மலர்க்கொத்தோடு சோபியின் கல்லறைக்கு சென்றுகொண்டிருந்த வழியில் சந்தித்தவன், ‘ ரயன் காவல்துறையில் சேர்ந்து பயிற்சிக்காக சென்றிருப்பதாகவும் அவன் விமானப் படையில் சேராதது சோபிக்கு மகிழச்சியாக இருக்கும்’ என்று சொல்லி சிரித்துச்சென்றான். 000000000000000000000 அன்றும் வாழமை போல விசா அலுவலகம் சென்றிருந்தவனை நோக்கி, ‘அஸ்சலாமு அலைக்கும்’ என்றபடி முன்னால் வந்து நின்றவனை பார்த்தான். பரட்டைத் தலை, இஸ்லாமியர்களின் பாரம்பரிய உடை அழுக்காகி கசங்கிப்போயிருந்தது. இருபது மதிக்கத்தக்க களைத்துப் போயிருந்த முகம். “நான் ‘மசூத்’ ஆப்கானிஸ்தானிலிருந்து வருகிறேன்.” என்றான். ஆப்கான் என்றதுமே ஜோனுக்கு அவன்மீது ஒரு அக்கறை அவனையறியாமலேயே வந்திருந்தது. கடவுச்சீட்டை வாங்கி அகதி விண்ணப்ப படிவத்தில் பெயர் விபரம். அகதிக்கோரிக்கைக்கான விபரங்களை எழுதி அவனிடம் கையெழுத்து வாங்கியவன், அவனின் படத்தையும் இணைத்து அலுவலகத்தில் கொடுத்து தற்காலிக விசா ஒன்றை வாங்கிக்கொடுத்தான். மறுநாள் அவனை வரச்சொல்லி மகன் ரயனின் அதிகம் பாவிக்கப்படாத உடைகளையும் எடுத்துப்போய் கொடுதிருந்தான். பின்னர், மசூத்தை சந்திக்கும் போதெல்லாம் அக்கறையோடு விசாரித்து பணஉதவிகள் கூட அவ்வப்போது செய்திருக்கிறான். இன்று ஜோனுக்கு முக்கியமான நாள். வழமையை விட நேரத்துக்கே எழுந்து பரபரப்பாகவே இருந்தான். காரணம், காவல்துறை பயிற்சியை முடித்து வந்திருந்த ரயன் இன்று கடமையை பொறுபேற்கப் போகும் நாள். சீருடை அணிந்தபடி கம்பீரமாக முன்னே வந்து நின்றவனை கட்டியணைத்து முத்தமிட்டான். “வா முதலில் உன் அம்மாவிடம் போய் ஆசிகள் வாங்கிக்கொண்டு அப்படியே தேவாலயத்திற்கும் சென்று வணங்கிவிட்டு நீ உன் பணிக்காக செல்… நான் விசா அலுவலகம் செல்கிறேன்.” என்றவன், போகிற வழியிலேயே வழமைபோல் பூக் கடைக்குச் சென்று வழமையை விட அதிகமான மலர்களால் செய்த பூங்கொத்து ஒன்றை வாங்கிக்கொண்டு சவக்காலைக்கு சென்று சோபியின் கல்லறையில் காய்ந்து கிடந்த மலர்களை சுத்தம் செய்து புதிய மலர்க்கொத்தை வைத்து மண்டியிட்டான். கண்மூடி தலை குனிந்து, ‘என் காதல் மனைவியே எங்கள் காதலின் அடையாளம் ரயன் இதோ நிற்கிறான். உனக்கு வாக்கு கொடுதபடியே அவனை இராணுவதில் இணைக்காமல் காவல்துறை அதிகாரியாக்கி என் கடமையை சரியாக செய்திருக்கிறேன் என நினைக்கிறேன். இனி உன்னோடு வந்து சேரும் காலத்தை நாட்களாக எண்ணிக் கடப்பதைத் தவிர எனக்கு வேறு பணிகள் ஏதுமில்லை. என்று சிலுவை போட்டுக் கொண்டு கண்களில் வழிந்த நீரை ரயனுக்குக்கு காட்டிக் கொள்ளாமல் துடைத்துக்கொண்டவன் அடுத்ததாக ரயனோடு தேவாலயதிநூள் நுழைந்திருந்தான். தேவாலயத்துக்கேயுரிய நிசப்தத்தில் பத்துப் பேரளவில் பிரார்த்தனையில் இருந்தனர். அவர்கள் ஏற்றி வைத்த மெழுகு வர்த்திகளின் ஒளியில் என்னால் எதுவுமே முடியாதென கையை விரித்தபடி சிலுவையிலறையப்பட்ட ஏசுநாதர் மங்கலாகத் தெரிந்தார். வரிசையாக அடுக்கப் பட்டிருந்த வாங்குகளின் கடைசி வரிசையில் ரயன் நின்று கொள்ள. மெழுகு வர்திகளை ஏற்றுவதுக்காக ஜோன் முன்னே சென்றிருந்தான். அப்போ பின் பக்கமிருந்து சலசலப்பு சத்தம் கேட்டு திரும்பிய ஜோன் திடுக்கிட்டு நின்றான். ரயனின் கழுதில் கத்தியை ஒரு கை அழுத்திப் பிடித்திருக்க மறு கை அவனின் தலை முடியை கொத்தாக பிடித்து பின்பக்கமாக இழுத்து அண்ணாந்த நிலையில் வைத்த படி மசூத், ‘யாரும் வெளியே போகக்கூடாதென’ அரபியிலும் அரை குறை பிரெஞ்சிலும் கத்திக்கொண்டிருந்தான். கையிலிருந்த மெழுகு வர்த்திகளை எறிந்துவிட்டு முன்னே சென்ற ஜோன், “மசூத் இங்கே என்ன செய்கிறாய்..? உன் மூளையை தவறவிட்டு விட்டாயா? என்று கத்தினான். மசூத்தும் ஜோனை அங்கு எதிர்பார்திருக்கவில்லை. “நீ இங்கே என்ன செய்கிறாய்? இது எனக்கு கணக்கு தீர்ப்பதுக்கான நேரம்.” “மசூத் உன் பிடியிலிருப்பது என் மகன். அவனை விட்டுவிடு. கத்தியை கீழே போடு.” “இல்லை எனக்குத் தெரியும். நீ மிக நல்லவன், இவனைக் காப்பாற்ற பொய் சொல்கிறாய்.” “அவன் என் மகன் தான். இதோ இங்கிருக்கும் கர்த்தர் மீது சத்தியமாக சொல்கிறேன் என்னை நம்பு.” லேசாக புன்னகைத்தபடியே, “அது கடவுளல்ல, சாத்தான். அது வெறும் சிலை, ஹராம். அல்லாஹ் ஒருவனே இறைவன். இறுதியாக ஒரு சந்தர்ப்பம் தருகிறேன், வெளியே போய் விடு.” “அவசரப்படாதே மசூத் நீ வாழ வேண்டிய இளைஞன், அதுக்கான வழிகள் ஏராளம் இங்கு நிறைந்து கிடக்கிறது. உனக்கு நானே உதவுகிறேன். தயவு செய்து சொல்வதைக்கேள்.” “இங்கு நடப்பது புனிதப் போர் ஜோன். உனக்கது புரியாது. நான் வாழ்வதுக்காக இங்கு வரவில்லை. நான், என் நாட்டில் ஒரு குண்டு வீச்சில் எப்போதோ கொல்லப்பட்டிருக்க வேண்டியவன். என் குடும்பதில் அத்தனை பேரும் கொல்லப் பட்டபோது ‘அல்லாஹ்’ என்னை மட்டும் காப்பாற்றியிருக்கிறானென்றால் ஏதோ காரியம் அவனுக்கு நடக்க வேண்டியிருந்திருக்கிறது, அது தான் இது.” “யுத்தத்தில் புனிதமென்று ஏதுவுமில்லை, சிலரின் சுயநலனே உள்ளது. அதுக்கான பலியாடுகள் நாங்கள்.” என்றபடி ஜோன் மசூத்தை நோக்கி முன்னேறினான். வெளியே காவல்துறை வாகனத்தின் சைரன் ஒலி கேட்கத்தொடங்கியிறருந்தது. “ஜோன் உனக்கான நேரம் மட்டுமல்ல இங்குள்ள அனைவரோடும் சேர்த்து எனக்கான நேரமும் முடிந்து விட்டது என்னை மன்னித்துக் கொள்.” என்றபடி வியர்த்து வழிந்துகொண்டிருந்த ரயனின் கழுதில் இருந்த கத்தியை மேலும் ஆழமாக அழுத்தி ‘சரக்’ என்று இழுத்தவன் ‘அல்லாகு அக்பர்…….’ என்று கத்தினான். பெரும் வெடியோசை சத்தத்தால் அந்தப் பகுதி மட்டுமல்ல கை விரித்து நின்ற கர்த்தரும் அதிர்ந்து போனார். ஜோனின் உடலையும் குண்டுச்சிதறல்கள் துளைத்துச்செல்ல மயங்கிச் சரிந்தவனின் கண்ணில் மங்கலாக நேவ் மலைப் பகுதியிலிருந்த கட்டிடதிலிருந்து புள்ளியாய் ஒரு உருவம் வெளியேறிக்கொண்டிருந்தது. பிற் குறிப்பு : 29.10.2020 அன்று நான் வசிக்கும் நீஸ் நகர தேவாலயதில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவதை வைத்து இக்கதை எழுதப்பட்டது .
 3. ஒ வரதன் ஐயர் குடும்பமா சரி நன்றி 1)நான் செய்ய முடியாதவற்றை என் நாயகிகளை வைத்து செய்கிறேன் 2)நான் அவர்களோடு அன்பாக இருப்பதால்..3) நாயகியை வைத்து அவர்களை உடைத்து விடுவேன் .. என் நகரத்தில் நடந்த சம்பவத்தின் பத்திரிகை செய்தி மட்டுமே என் கதையின் கரு மிகுதி கற்பனை
 4. நன்றி கிருபன் மிக்க நன்றி
 5. கருத்துக்கு நன்றி அவனை அடிச்சா .எனக்கு வேலை கிழிஞ்சிடும் ..
 6. நீண்ட நாளின் பின்னர் .. நன்றி அண்ணா கிளாசுக்கு பணம் வாங்க முடியாது .கருத்துக்கு நன்றி .யாரந்த ஐயர்
 7. அந்தப் படம் நானும் பார்த்தேன் ..நன்றி
 8. சபீதா-சிறுகதை-சாத்திரி இம்மாத நடு இணைய சஞ்சிகையில் . இப்போதெல்லாம் வரும் தமிழ்ப்படங்களையோ செய்தி சனல்களையோ பார்ப்பதை விட நசினல் ஜியோ கிராபி சனலை பார்க்கலாம். அதை பதிவுசெய்யும் கமராமேன்களுக்குத்தான் உண்மையில் அவார்டு கொடுக்கவேண்டும். காலை எழுந்ததுமே தேநீரோடு கொஞ்சநேரம் ஜெயோ கிராபி சனலை பார்க்கத் தொடங்கி விடுவேன். அதுவும் சிறுத்தை ஒரு மிருகத்தை வேட்டையாட பதுங்கியபடி நடக்கும்போதே ஒரு அழகியின் நடையை பின்னிருந்து இரசிப்பது போல அதன் அசைவுகளை அங்கம் அங்கமாக இரசிக்கத் தொடக்கி விடுவேன். குறி தவறாமல் அது தன் இலக்கின் கழுத்தை பாய்ந்து கவ்வும்போதே நானும் பாய்ந்து டிவியை கவ்வாதகுறையே தவிர அந்த சிறுத்தையாகவே மாறி விட்டிருப்பேன். பொதுவாகவே பெரும்பாலானவர்களின் மனதில் இருக்கும் குரூரம் இது போன்றவற்றை இரசிக்கத் தோன்றும் என்றும் உளவியல் சொல்கிறது. எனக்கு அது பற்றியெல்லாம் ஆழமாகத் தெரியாது. உணவுச் சங்கிலி இப்படிதான் உலகம் இயங்குகின்றது என்றது மட்டும் தெரியும். அன்றும் சிறுத்தையொன்று மானை துரத்தத் தொடங்கியிருந்தது. ஆனால், மான் எப்படியோ உச்சிவிட்டு ஓடிவிட ஏமாற்றத்தோடு சிறுத்தை என்னையே பார்ப்பதுபோலவிருக்க, ‘ச்சே ..மான் தப்பிவிட்டது’ என்று வலக்கை முஸ்டியை இறுக்கிப் பொத்தி இடக்கையில் குத்தி விட்டு வேலைக்கு கிளம்பி விட்டிருந்தேன். கடையத் திறந்து கதிரைகளை வெளியே அடிக்கிக் கொண்டிருக்கும்போதே வழமைபோல முதுகில் புத்தக சுமையோடு ஓடி வந்த ஜோய் லேசாய் மூச்சு வாங்க வணக்கம் சொல்லி விட்டு நிற்க. சிறிது தூரத்திலேயே புன்னகைத்தபடி சபீதா வந்துகொண்டிருந்தாள். பூவைப்போல வட்ட வடிவில் செருகி வைக்கப்பட்டிருந்த லாலிபாப் ஒன்றை எடுத்து அவன் கையில் கொடுத்ததும் நன்றி சொல்லிவிட்டு குனிந்து நின்ற என்கன்னத்தில் ஒருமுத்தம் கொடுத்துவிட்டு அதைப்பிரித்து வாயில் வைக்க, அப்போதான் அருகில் வந்து சேர்ந்த சபீதா வணக்கம் சொல்லிவிட்டு ‘வேலைக்கு நேரமாகி விட்டது போகிறேன்’ என்றபடி ஜோயை இழுத்துக்கொண்டு நடக்கத் தொடங்கியிருந்தாள். கொரோனா வந்ததால் சபீதாவைப்போலவே நிறைய தோழிகளின் கன்னத்தோடு கன்னம் வைத்து முத்தத்தோடு சொல்லும் வணக்கத்தை இழந்து விட்டிருந்தது பெரும் கவலை. அப்போதான் நகர சபையில் வீதி துப்பரவு வேலை செய்யும் ராபிக் வந்துகொண்டிருந்தான். என் காலை வாடிக்கையாளர்களில் முக்கியமானவன். என்ன வேண்டுமென்று கேட்கத்தேவையில்லை. கிளாசை எடுத்துக் குழாயை திறந்து நுரை ததும்பும் பியரை நிரப்பி மேசையில் வைத்து விடுவேன். அதை உறுஞ்சிய படியே ஜோயை இழுத்தபடி போய்க்கொண்டிருந்த சபீதாவையே பார்த்துக்கொண்டிருந்தவன், ‘ அவளின் உடையும் நடையும் ‘ .. என்றவன் அரபியில் சில கெட்ட வார்த்தைகளைத் துப்பிவிட்டு மீண்டும் பியரை உறுஞ்சினான். அரபியில் கெட்ட வார்த்தைகள் எனக்கும் புரியும் என்பதால், “அவளை ஏன் எப்போதும் வெறுப்பாகவே பார்க்கிறாய் ?” என்றதும், “அவளைப்பார். பர்தா தான் போடவில்லை, இந்தளவு குட்டைப்பாவாடை தேவையா? இதெல்லாம் மார்க்கத்துக்கு விரோதமானது, உனக்குத் தெரியுமா?” என்றவனிடம், “நீ பியர் குடிப்பது கூட மார்க்கத்துக்கு விரோதமானது தான், அதுவும் காலங்காத்தாலேயே…” நான் சொல்லி முடிக்க முதலே, “எனக்குத் தெரியும். அவள் கணவனும் இறந்து விட்டான். உன்னோடுதான் நல்ல நெருக்கமாக இருக்கிறாள்.” என்றபடி பியரை உறுஞ்சினான். முட்டாள்களின் கடைசி ஆயுதம் அவதூறு என்பதால் அவர்களோடு விவாதம் செய்வதை எப்போதுமே நான் விரும்பியதில்லை. லேசாய் புன்னகைத்தபடியே என் வேலையை தொடர்ந்தேன். சபீதாவை எனக்கு பல வருடங்களாகவே தெரியும்,நல்ல நண்பியும் கூட. மருத்துவ தாதி. அல்ஜீரிய தம்பதிகளுக்கு பிறந்த பிரெஞ்சுக்காரி. அவள் தோலின் பழுப்பு நிறத்திலும் பெயரிலும் மட்டுமே இன்னமும் அல்ஜீரியாவின் மிச்சம் சொச்சமாகவுள்ளது. ஒரு போத்துக்கல் நாட்டவனை திருமணம் செய்திருந்தாள். அவனும் நல்லவன்தான். ஆனால் போதைக்கு அடிமையாகி விட்டிருந்தான். போதையின் பழக்கத்தால் அவன் செய்து கொண்டிருந்த நோயாளர் காவுவண்டி ஓட்டும் வேலை பறிபோனது மட்டுமல்லாமல் சாரதி அனுமதிப்பத்திர உரிமையும் பறி போனதால் வேறு எந்த வேலைகளும் செய்ய முடியாமல் போதையின் பாதையிலேயே போய்க்கொண்டிருந்தான். வீட்டில் தொடங்கிய அவர்களுக்குள்ளான சண்டை வீதிகளிலும் தொடரச் செய்தது. போதைப்பொருள் வாங்கப் பணம் கேட்டு கெஞ்சியபடியே, அவனும் திட்டிய படியே அவளும் போகும் காட்சிகளை அவ்வப்போது பார்க்கலாம். சில நேரம் கோபத்தில் பணத்தை எடுத்து வீதியில் எறிந்து விட்டு அழுதபடி அவள் போய்க்கொண்டிருக்க, அவனோ சிரித்தபடி அதை பொறுக்கிக்கொண்டு போவான். போதையேறியதும் கடற்கரையிலுள்ள அந்தோனியார் கோவில் வாசல் தான் அவனது இருப்பிடம். அங்கே வந்து படுத்துக் கொள்வான். அவள் வேலை முடிந்து போகும்போது அவனை அடித்து இழுத்துக்கொண்டு போவாள். ‘எதுக்கு இவனோடு கிடந்தது மாரடிக்கிறாய் பேசாமல் துரத்தி விடேன்’ என்று நானே ஒரு தடவை அவளிடம் சொல்லியிருக்கிறேன். “உனக்குத் தெரியுமா, அவனிடமிருக்கும் இந்தப்பழக்கத்தை தவிர மிக நல்லவன். ஜோய் மீதும் மிக அன்பாக இருக்கிறான். இன்னமும் அவனை காதலிக்கிறேன்.” என்று கண்கள் கலங்க அவள் சொன்னபோது, ’என்ன காதலோ… எனக்கு விளங்கவில்லை. சரி எதோ செய்’ என்று சொல்லி விட்டிருந்தேன். அதன் பிறகு அவனைப்பற்றி பேச்செடுப்பதில்லை. ஜோய்க்கு ஒவ்வொரு நாளும் லாலிபாப் கொடுத்து முத்தம் வாங்குவதோடு சரி. அது எப்படி தொடங்கியது என்றும் சொல்லி விடுகிறேன். அன்று அவன் பாடசாலை முதல் நாள் போகும் வழியில் சபீதா என்னோடு கதைத்துக்கொண்டிருக்கும் போதே, அவன் அடுக்கி வைக்கப்பட்டிருந்த லாலிபாப்பை கண்கள் விரிய பார்த்துக்கொண்டிருப்பதை கவனித்த நான், ஒன்றையெடுத்து அவன் கையில் கொடுக்கவும் அம்மாவை அண்ணாந்து பார்த்தான். ‘வாங்கிக்கொள்’ என்று அவளின் சம்மதம் கிடைத்ததுமே குனிந்து நீட்டிய என் கன்னத்தில் ஒரு முத்தம் கொடுத்தபடி வாங்கிக் கொண்டான். அவள் நீட்டிய அதுக்கான பணத்தை நான் வாங்கவில்லை. அன்றிலிருந்து இந்தப்பழக்கம் தொடங்கியது, நான் பணம் வாங்குவதில்லை என்பதால் வாரச்சந்தையில் ஏதாவது வாங்கி ஜோயின் கைகளில் கொடுத்து என்னிடம் சேர்ப்பித்து அவளும் கணக்கை தீர்த்துக்கொண்டிருந்தாள். அப்படியான குளிர்கால இரவொன்றில் வேலை முடிந்து ஜோயையும் அழைத்துக்கொண்டு போய் அந்தோனியார் கோவில் வாசலில் படுத்திருந்த கணவனை கோபமாய் அடித்து எழுப்பியிருக்கிறாள் அவன் அசையவில்லை. அவளின் அலறல் கேட்டு நானும் ஓடிப்போய் பார்த்தேன். அவன் அசையவேயில்லை. நோயாளர் காவு வண்டியொன்றில் அவனை ஏற்றி அனுப்பி விட்டிருந்தேன். அவன் இறந்துபோனது அவளுக்கு கவலையும் மகிழ்ச்சியுமில்லா ஒரு வெறுமைமையை கொடுத்திருந்தது. மனக்காயங்களுக்கு காலமே மிகப்பெரிய மருந்து என்பதில் எனக்கு அசைக்க முடியாத நம்பிக்கை. அதே போல ஒரு வருடம் ஓடியிருக்கும், சபீதாவையும் காலம் மாற்றி விட்டிருந்தது. வழமையான காலைப்பொழுதொன்றில் பியரை ராபிக் உறிஞ்சிக்கொண்டிருக்க, ஓடி வந்த ஜோய்க்கு லாலிபொப்பை எடுத்துக் கொடுத்து அவனின் முத்தத்தை வாங்கிவிட்டு நிமிர்ந்தேன். பின்னால் இன்னொருவனோடு வந்துகொண்டிருந்த சபீதா, அருகில் வந்ததும் ‘இவன் பெயர் அலெக்ஸ். என் காதலன்’ என்று வெட்கம் கலந்த புன்னகையோடு அறிமுகப் அறிமுகப் படுத்தியதும் கிளாஸ் உடைந்த சத்தம் கேட்டு திரும்பிப் பார்த்தேன். ராபீக்கின் பியர் கிளாஸ் உடைந்து கிடக்க, ‘கை தவறி விட்டது மன்னித்துக்கொள்.என்றான்’. சபீதாவின் புதிய காதல் கேள்விப்பட்ட கோபத்தில் உடைத்திருப்பானென்று எனக்குத் தெரியும். ‘சரி பரவாயில்லை என்றபடி’, அலெக்சிடம் என்னை சபீதா அறிமுகம் செய்ததும் ஒரு புன்னைகையோடு வணக்கம் சொல்லி விட்டு, உடைந்த கிளாஸ் துண்டுகளை ஒரு தட்டில் துணியால் வழித்துப்போட்டுக் கொண்டிருக்கும் போதே, லாலிபாப்பை வாயில் வைத்திருந்த ஜோயின் தலையை தடவியபடி, ‘உனக்கு மிகவும் பிடிக்குமா?’ என்று சிரித்தபடியே அலெக்ஸ் பணத்தை எடுத்து நீட்டினான். அந்தச் சிரிப்பும் பணத்தை நீட்டிய விதமும் எனக்கு எதோ உறுத்தலாகவே இருக்க சபீதாவை பார்த்தேன். அவள் சங்கடத்தால் நெளிந்தபடியே, “இல்லை…… அவன்பணமெல்லாம் வாங்க மாட்டான்” என்றாள். “இதுவரை எப்படியோ ஆனால் இனிமேல் பணம் கொடுத்து விடு.” என்றபடியே மேசையில் பணத்தை வைத்து விட்டு, இன்னொரு லாலிபாப்பை எடுத்து உரித்து தன் வாயில் வைத்தவன், ‘போகாலாம்’ என்றான். முதல் சந்திப்பே அவனோடு எனக்கு ஒட்டவில்லை .போய்க் கொண்டிருந்தவர்களையே பார்த்துக் கொண்டிருந்தேன் சிறிது தூரம் போயிருந்த சபீதாதிரும்பிப் பார்த்தாள். அவள் கண்ணில் கெஞ்சல் தெரிந்தது. வழித்தெடுத்த கிளாஸ் துண்டுகளை குப்பையில் போட்டு விட்டு இன்னொரு பியரை கொண்டுபோய் ரபீக்கின் முன்னால் வைத்ததும், “பார்த்தியா ..பார்த்தியா……..முதல்ல போத்துக்கல் காரன், இப்போ பிரெஞ்சுக் காரன். அதுவும் திமிர் பிடிச்சவன். இப்போ கூட அவளுக்கு என்னை கண்ணுல தெரியேல்லை, ஒரு வணக்கம் கூட இல்லை”. என்று பியரை உறுஞ்சினான் ராபிக். “உனக்குத்தான் ஊரில் மனைவி பிள்ளைகள் இருக்கிறார்களே! பிறகெதுக்கு புலம்புறாய் ..?” “அது ஊரில ..இங்க நான் தனியாத்தானே இருக்கிறேன். இரண்டாவது சந்தர்ப்பத்தை எனக்குத் தந்திருக்கலாமே….? “உன்னை மாதிரி சந்தர்ப்பத்துக்கு அலையிறவனுகள் தான் கலாசார காவலர்கள்” என்று விட்டு என் வேலையை கவனிக்கத் தொடங்கி விட்டிருந்தேன் . அதன் பின்னர் ஓடி வரும் ஜோய்க்கு லாலிபாப் கொடுக்கும்போதெல்லாம் பின்னல் சபீதாவோடு வரும் அலெக்ஸ் பணம் கொடுப்பதும் அவன் முகத்தைப் பார்க்கவே பிடிக்காமல் அதை நான் வாங்குவதும் ராபிக் கிளாசை உடைப்பதுமாக போய்க்கொண்டிருந்தது. நீண்ட காலத்துக்கு பின் சபீதா மகிழ்ச்சியாக இருக்கிறாள் என்பது மட்டும் தெரிந்தது. வழமை போல அன்று வந்தவள், ‘வேலையிடத்தில் ஒரு பயிற்சி முகாமுக்காக வேறொரு நகரத்துக்கு மூன்று நாட்கள் போகவேண்டியிருக்கு. ஜோய் வழமை போல அலெக்ஸ்சோடு வருவான்’ என்கிற தகவலை சொன்னதும் கூடவேயிருந்து என்னைப் பார்த்து சிரித்த அலெக்சின் மூஞ்சையில் குத்த வேணும் போலவேயிருந்தது ஆனாலும் அடக்கிக் கொண்டேன். கிளாஸ் உடையும் சத்தம் கேட்டது. அடுத்த நாள் நகரின் மத்தியூடாக சென்று கொண்டிருந்தபோது புகையிரத நிலையத்துக்கு முன்னாலிருந்த பாலியல் பொருட்கள் விற்கும் sex shop னுள் அலெக்ஸ் நுழைவதை கவனித்தேன். சாபீதா ஊரில் இல்லை இவன் எதுக்கு இங்கே போறான் என்று யோசித்தாலும் சரி எனக்கெதுக்கு தேவையில்லாத ஆராய்ச்சி என்று கடந்து போய் விட்டிருந்தேன். இரண்டு நாட்கள் ஓடி விட்டிருந்தது. அன்று காலையும் வழமை போல தேநீரை எடுத்துக்கொண்டு வந்து டி வியை போட்டேன். பரந்து கிடந்த புல் வெளியில் மான் கூட்டமொன்று மேய்ந்து கொண்டிருக்க, கூட்டத்தில் மேய்ந்து கொண்டிருந்த மானொன்றில் குட்டியொன்று பால் குடித்துக்கொண்டிருந்தது. அடுத்த கோணத்தில் மரத்தில் சில குரங்குகள் காய், பழம் என்று சப்பித் துப்பிக் கொண்டிருக்க, அப்பிடியே கமெரா வேறு பக்கம் திரும்பியது. உற்றுப் பார்த்தபோதுதான் ஒரு சிறுத்தை தரையோடு தரையாக பதுங்கியிருந்தது தெரிந்தது. நான் உசாராகி விட்டிருந்தேன். அது பதுங்கி அடியெடுத்து வைக்கத் தொடங்கியதுமே என் இதயத் துடிப்பும் லேசாக அதிகரிக்கத் தொடக்கி விட்டிருந்தது. அது பால் கொடுத்துக்கொண்டிருந்த மானை நெருங்கி விட்டது. இனி ஒரே பாச்சல் தான். என் மனம் ‘பாய் ..பாய் …’ என்று சொல்லிக் கொண்டிருக்க, மரத்திலிருந்த குரங்குகள் சிறுத்தையை கவனித்து விட்டு சத்தம் போட்ட படி பாய்ந்து ஓடத் தொடங்க, மான் கூட்டமும் சிதறி ஓடத் தொடங்கியது. ‘ச்சே ..சனியன் பிடிச்ச குரங்கு.’ மேசையில் ஓங்கியடித்து விட்டு தொடர்ந்து கவனித்தேன். குட்டி மான் ஓடாமல் அங்கேயே நின்றபடி சுற்றிவர பார்த்துக் கொண்டு நின்றது. துரத்தில் நின்று தாய் மான் குட்டியை பார்த்து தவித்துக்கொண்டிருந்தது. இப்போ கமெரா சிறுத்தை, மான் குட்டி, தாய் மான் என்று மூன்றையும் மாறி மாறி காட்டிக்கொண்டிருந்தது. இப்போ எனக்குள் இருந்த வெறி அடங்கி குட்டி மான் மீது பரிதாபம் வரத் தொடங்கியிருந்தது. எப்படியும் சிறுத்தை அதைக் கொன்று விடும் என்று நினைத்து அதை பார்க்க விருப்பமில்லாமல் டிவியை நிறுத்த ரிமோட்டை எடுத்தேன். குட்டியருகே போன சிறுத்தை, அதை ஒரு வலம் வந்து விட்டு மணந்து பார்த்து அதன் நெற்றியில் ஒரு தடவை நக்கி விட்டு வந்த வழியே போய்க்கொண்டிருந்தது. மிருகத்துக்குள்ளும் இரக்கம் இருக்குமா என்று எனக்குள் ஒரே ஆச்சரியம். வேலைக்கு கிளம்பி விட்டிருந்தேன், சபீதா வீட்டை கடக்கும் போது வரிசையாக காவல்துறை வாகனமும் தீயணைப்பு வண்டிகளும் நின்றிருக்க வண்டியை ஓரம் கட்டினேன். அருகில் போக முடியாதவாறு போலீசார் தடுப்பு போட்டிருந்தார்கள். பிணப்பையில் பொதி செய்யப்பட்ட உடலொன்றை காவுவண்டியில் ஏற்றிக்கொண்டிருந்தார்கள். அவசரமாக சபீதாவின் போனுக்கு அழைத்தேன். நிறுத்தி வைக்கப் பட்டிருந்தது. அங்கிருந்த போலிஸ்காரரிடம், ‘என்னாச்சு’ என்றதும், விறைப்பாக ‘ஒரு வன்முறை இடத்தை விட்டு நகருங்கள்’ என்றார். அதுவரை அங்கு நின்றிருந்த ஒரு பெண்மணி மெதுவான குரலில் இந்த குடியிருப்பில் ஒரு நர்ஸ் இருக்கிறாள். எங்கேயோ போய் விட்டு இன்று காலையில் தான் வந்தவள். தன் காதலனை கொலை செய்து விட்டாளாம். ஏனென்று தெரியவில்லை என்றாள். அப்போ விலங்கிடப்பட்ட நிலையில் வெளியே அழைத்துவரப்பட்ட சபீதா என்னை கவனித்திருக்க வேண்டும். தலையை குனிந்த நிலையிலேயே காவல்துறை வாகனத்தில் ஏறிக்கொள்ள, பின்னாலேயே பெண் போலிஸ் ஒருவர் ஜோயை அணைத்தபடி அழைத்துக்கொண்டு வந்து இன்னொரு வாகனத்தில் ஏற்றினார். அவன் வாயில் லாலி பாப் …….
 9. இது யாழ் இணையம் சார்பில் பிரபாகரனுக்கு செலுத்தப்பட்ட அஞ்சலி 22.05.2009 அன்று நான் பிரபாகரனுக்கு அஞ்சலி செலுத்தி ஒரு பதிவை யாழ் களத்தில் இட்டிருந்தபோது பெரும்பாலான உறுப்பினர்களால் திட்டி தீர்க்கப்பட்டு யாழ் கள நிருவாககமும் அந்த பதிவை நீக்கி விட்டிருந்தது அத்தோடு தான் எனக்கும் யாழ் களத்துகுமான இடைவெளி ஆரம்பித்து யாழ் கள நிருவாகத்தில் நுனாவிலான் என்னை நீக்கியும் விட்டுந்தார் அது பிரச்சனையில்லை பதினோரு வருடம் கழித்து பிரபாகரனுக்கு அஞ்சலி செலுத்தியது நிச்சயம் ஒரு இனத்துக்காக குடும்பத்தையும் இழந்து போராடிய ஒரு வீரனுக்கு செலுத்தும் மரியாதையே ..அஞ்சலிகள் ..ஒரு கருத்தை உண்மையை ஏற்றுக்கொள்ளவே பதினோரு வருடம் சென்றிருக்கிறது என்கிறபோது இந்த இனம் உருப்படாது என்று மட்டும் தெரிகிறது நன்றி
 10. நன்றி அதை விடுவேனா நன்றி நான் ரெடி
 11. நன்றி அண்ணே கருத்துக்கு நன்றி சுவியண்ணா
 12. நானும்அவனும் …................................. ஜீவநதிக்காக .எதோ ஒரு கதை.. சாத்திரி …. இரவு பன்னிரண்டை தாண்டிக்கொண்டிருந்தது வெளியே இடி மின்னலோடு பெரு மழை நீ சாப்பிட்டால் சாப்பிடு இல்லாட்டி பட்டினியா படு ,என்று சொல்லிவிட்டு உணவை ஒரு தட்டில் போட்டு மைக்கிரோவானில் வைத்து விட்டு மனைவி படுக்கைக்கு போய்விட்டார் . இன்னொரு கிளாஸ் குடித்து விட்டு சாப்பிடலாமென நினைத்து படுக்கையறை கதவு சாத்தும் சத்தம் கேட்டதும் .மெதுவாக போத்தலை திறந்து கொஞ்சம் விஸ்கியை கிளாசில் ஊற்றி விட்டு காஸ் வெளியேறும் சத்தம் கேட்காமல் சோடாவை திறப்பதெப்படி என யோசித்துக்கொண்டிருக்கும் போதே இடி இடித்த சத்தத்தில்சட்டென்று சோடாவை திறந்து கிளாசில் ஊற்றி ஒரு இழுவை இழுத்து விட்டு கணணியை திறந்தேன் ஏனென்றால் இப்பிடியான சந்தர்ப்பங்களில் தான் எனக்கு கற்பனை தானாக வந்து கொட்டி ஏதாவது எழுதத் தோன்றும்.. அபோதான் கண்களை கூச வைக்கும் ஒரு பெரு மின்னல்.. சாத்தியிருந்த யன்னலையும் ஊடறுத்து அறை முழுவதையும் பகலாக்கி செல்ல .மழையின் கோரம் அதிகரித்திருந்தது அடுப்படியில் திறந்திருந்த கதவு காற்றுக்கு அடிக்கும் சத்தம் கேட்டு அதை சாத்தி விட்டு வரலாமென எழுந்து போயிருந்தேன். ஏனெனில் அது பின்னால் உள்ள சிறிய தோட்டத்துக்கு செல்லும் பாதை . மழையின் கோரத்தால் எலியோ பூச்சிகளோ அதுவழியாக உள்ளே வந்துவிடும் . கதவை சாத்திக் கொண்டிருக்கும்போது இதுவரை நான் கேட்டிராத பெரும் இடியோசை .சின்ன வயதில் நான் சொன்ன அருச்சுனா (ஆ)பத்து நினைவுக்கு வருமளவு சத்தம் அதே நேரம் மின்சாரமும் போய்விட மீண்டுமொரு மின்னல் அப்போதான் அந்த உருவத்தை தோட்டத்தில் பார்த்தேன் . கொஞ்சம் திகைத்துப் போயிருந்தாலும் . கடவுளையோ பேயையோ நம்புகிறவனில்லை என்பதால் யாரோ கள்ளன் தான் வந்திருக்கிறான் என நினைத்து இருட்டில் தட்டித் தடவி வந்து என் போனை எடுத்து அதிலிருந்த டோச் வெளிச்சத்தை அடித்தபடி. கள்ளன் வந்தால் தாக்குவதுக்காக கதவுக்கு பின்னாலேயே மறைத்து வைத்திருந்த கொட்டானை எடுத்துக்கொண்டு டோச் வெளிச்சத்தில் தோட்டத்தை பார்த்தேன் . கொட்டும் மழையில் நெடிய, கறுத்த, ஆடைகளேதுமற்ற அம்மணமான அந்த உருவம் நின்றிருந்தது .அண்ணாந்து பார்த்தேன். மழைத்துளிகள் என் கண்ணில் வீழ்த்து மங்கலாக தெரிந்த அந்த உருவத்தை எங்கேயோ பார்த்த மாதிரியிருந்தது .."என்னடா நலமா".. என்று என்னைப் பார்த்து அது கேட்ட அதே நேரம் அதன் பின்னாலிருந்து வெளிவந்த சிவந்த கண்களையுடைய பெரிய கறுத்த நாயொன்று என் மீது பாய்ந்து அதன் கால்களை என் மார்பில் வைத்து முகத்தை நக்க தொடங்க.. அது வரை என் பின்னாலேயே பதுங்கியிருந்த என் பூனை மீனு பயத்தில் மழையென்றும் பாராமல் தோட்டத்தில் பாய்ந்து பின் மதிலையும் தாண்டி ஓடி விட்டிருந்தது . இப்போ எனக்கு நினைவுக்கு வந்து விட்டிருந்தது "ஓ நீயா ..எத்தனை வருடங்களாகி விட்டது என்ன இப்பிடி திடீரெண்டு சரி உள்ளே வா" ..என்றதும் அவன் வாசலால் குனிந்து உள்ளே வர நாயும் பின்னாலேயே உள்ளே வந்தது ..அதுக்கிடையில் நான் ஓடிப்போய் படுக்கையறை கதவு சாதியிருக்கிறதா என்று சரி பார்த்து விட்டு வந்தேன்.நனைந்து போயிருப்பாய் என்றபடி துவாயை எடுத்து நீட்டியபோது அவன் உடல் காய்ந்து விட்டிருந்தது நாய் மட்டும் உடலை ஒரு உதறு உதறி விட்டு படுத்துக் கொண்டது ..சோபாவில் சரிந்திருந்தவனின் இடுப்பில் துவாயை போட்டு விட்டு .எத்தனை வருசமாச்சு எப்படி என்னை தேடி வந்தாய் என்றேன். இத்தனை வருசமாச்சு என்னை நீ தேடி வந்தாயா. முறைத்தான் . எனக்கு ஊருக்கு வர முடியாது ஆனா உன்னைப்பற்றி அடிக்கடி அம்மாவிடம் விசாரிப்பேன் ,. என்ன சொல்லு வா .. புளிய மரத்தடியில வெறும் சூலமா ஒரு கொட்டிலுக்கு கீழ இருந்த உனக்கு இப்ப வசதி வாய்ப்பு எல்லாம் வந்திட்டுதாம். கோயில் கட்டி கும்பாபிசேகம் செய்து ஐயர் வந்து பூசை செய்யுறாராம் எண்டு சொன்னா.. வேற என்ன சொன்னவா .. சின்னதா ஒரு தேரும் செய்து கொண்டிருக்கினமாம் .. அதுவும் உண்மை தான் .அதை விட வேற ஒண்டும் சொல்லேல்லையோ .. இல்லையே .. நான் குடியிருந்த புளிய மரத்தையே தறிச்சுப் போட்டாங்கள் அட நாசமறுப்பு.. என்னத்துக்கு தறிச்சவங்கள் .. எனக்கு கோயில் கட்ட தான் .. அந்தப்பெரிய மரத்தை எப்பிடி தறிச்சவங்கள் .. மிசின் வைச்சு அரிஞ்சு தள்ளிட்டான்கள் .. அட கடவுளே …. ஓம் கூப்பிட்டனியே … இல்ல ....ஓம்... நீ கடவுள் எண்டதை ஒரு செக்கன் மறந்து போனன் .மிச்சத்தை சொல்லு .. நான் செவிடு எண்டு நினைச்சு ஒவ்வொரு நாளும் சவுண்ட் பொக்ஸ் வைச்சு பாட்டு போடுறாங்கள் .விளங்காத சமஸ்கிருதத்தில பூசை வேறை ஏன் உனக்கு சமஸ்கிரதம் விளங்காதோ .. அடேய் நான் தமிழ்க்கடவுளடா எனக்கெதுக்கு சில்லெடுத்த சமஸ்கிருதம்.அதுவும் அவன் எனக்கு கணபதி கோமத்தை சொல்லிக்கொண்டு இடைக்கிடை வைரவராய நமகா ..எண்டு அடிச்சு விட. விசர் சனமும் அது வைரவர் மந்திரமெண்டு நினைச்சு கும்புடுதுகள் . அதைவிட மோசம் இப்போவெல்லாம் பச்சையரிசி பொங்கல் அவல் மோதகம் . எனக்கே சுகர் வந்திடும் போலவிருக்கு வடை எப்போவாவது ஒருதரம் கண்ணுல காட்டுறாங்கள் அதையும் படைசுப்போட்டு தொட்டால் சுடுவேன் எண்டு ஐயர் தீபத்தை முகத்துக்கு முன்னாலேயே காட்டுறான் . சரி .உலகம் முழுக்க சுத்தி நாய் களைச்சுப் போய் விட்டுது அதுக்கு கொஞ்சம் தண்ணி வைக்கிறாயா.. என்றதும் நான் ஓடிப்போய் பூனையின் கிண்ணத்தை கழுவி தண்ணீரைஅதில் வைத்ததும் நாய் லபக் லபக்கென்று குடிதுக்கொண்டிருக்கும்போதே வேறொரு லபக் லபக் சத்தம் கேட்டது திரும்பிப் பார்த்தேன் .மேசையிலிருந்த விக்கியை போத்தலோடு எடுத்து அண்ணாந்து விழுங்கிக்கொண்டிருந்தான். "வைரவா நீயா" ..என்றதும் பெரிய மீசையை வருடி விட்டு "என்ன நீயா நானா" எண்டு. உன் பாட்டன் எனக்கு தினமும் சிரட்டையில் கள்ளும் நண்டு மீன் பொரியல் என படைத்தது விட்டுதான் அவனே சாப்பிடுவான் விசேட நாளில ஆட்டுக்கறியும் கிடைக்கும் ம்.. அதெல்லாம் ஒரு காலம் ..பெருமூச்சொன்றை விட்டான் .. ஒரு உடுப்பு கூட போடாமல் இவ்வளவு தூரம் வந்திருக்கிறியே வெட்கமாயில்ல.. இல்ல...ஏனென்டால் பட்டுத் துணியில எனக்கு கோவணம் வேற கட்டி விடுறாங்கள்.அதுதான் எனக்கு வெட்கமாயிருக்கு குளிரேல்லையோ எண்டு கேட்டலும் இடக்கு முடக்கா ஏதும் பதில்தான்வரும் ..சரி இவ்வளவு தூரம் என்னை எதுக்கு தேடி வந்தனி ?.. எனக்கு நீயொரு கோயில் கட்டவேணும்... நான் அதிர்ந்துபோய் "வைரவா என்ன விளையாடுறியா" நானிருக்கிறதே வாடகை வீடு .கனடாப்பக்கம் போய்ப்பார் ..அங்கைதான் ஐயப்பன் தொடக்கம் அம்மா பகவான்னெண்டு ஊர் பேர் தெரியாதவனுக்கெல்லாம் கோயில் கட்டி வைசிருகிறான்கள் .கட்டாயம் உனக்குமொரு கோயில் யாராவது கட்டியிருப்பான்கள் .. இப்பதானே சொன்னான் உலகம் முழுக்க சுத்தி வாறனெண்டு .அவுஸ்திரேலியா தொடக்கம் கனடா வரை ஒரு வைரவர் கோயில் கூட இல்லை . என்னட்டை அவளவு வசதியில்லையே வைரவா .. நீ நினைக்கிற மாதிரி பெரிய கோயில் எல்லாம் வேண்டாம் எதோ ஒரு மரத்துக்கு கீழை ஒரு சூலம் மட்டும் போதும். எந்த சத்தம் சந்தடியுமில்லாமல் இருந்தாலே போதும் நீ விரும்பினா விஸ்கியோ வோட்காவோ அப்பப்போ ஒரு வடை மாலை அது போதும் .மொத்தத்தில என்னை நிம்மதியா இருக்க விட்டாலே போதும். உனக்கொரு ஐடியா சொல்லவா .. ம் சொல்லு … எதுக்கு.. கோயில் குளமெண்டு அலையாமல் பேசாமல் பேஸ் புக்கில ஒரு அக்கவுண்ட் திறந்து அதிலையே குடியிருக்லாமே .. வைரவர் விழுந்து விழுந்து சிரிக்க நாய் வேற அவ்.... என்று உளையிட்டது .. எதுக்கு இப்ப சிரிக்கிறாய் .. அடேய் நான் பேஸ் புக்கில் குடியிருக்க தொடங்கினால் ஒவ்வொரு நாளும் ஒரு செல்பியாவது போடுவேன் அப்போ உங்கள் பிழைப்பு என்னாவது …... அதுவும் உண்மைதான் வைரவா உன் உயரத்துக்கும் கலருக்கும்.. அதுக்கும் ..எல்லா லைக்கும் உனக்குத்தான் விழும் ..அதை விட உலகத்தில் உள்ள எல்லா வடையும் மாலையா வந்து உன் கழுத்தில தான் விழும் .. வைரவர் மீண்டும் சிரித்தார் ... சரி வைரவா உனக்கு வீட்டு தோட்டத்திலேயே நான் கோயில். ச்சே .. ஒரு சூலம் நடுகிறேன் கவலைப்படாதே என்றதும் எழும்பி மீண்டும் விஸ்கி போத்தலை வாயில் வைத்து உறிஞ்சி விட்டு வெளியே போக . நாயும் பின்னல் ஓடவே மீண்டும் ஒரு பெரும் மின்னல் தோன்றி மறைய அதன் வெளிச்சத்தில் கண்ணை மூடி திறந்து பார்த்தேன். வைரவரையும் அவரின் வாகனத்தையும் காணவில்லை வைரவ ராசாவே உன் அற்புதமே அற்புதம். உன் நாமத்தின் பெயராலே.உன் வார்த்தையின் பெயராலே . சாத்தான்கள் விலகியோடட்டும்உனக்காக நாளை சூலம் நடுகிறேன் . என்று வாய் முணு முணுக்க தொடங்க .. வைரவர் வீட்டுக்கு வந்திட்டுப்போனதை இப்பவே உடனே ஓடிப்போய் மனிசியை தட்டியெழுப்பி சொல்லமா எண்டு யோசித்தாலும். "ச்சே சும்மா தண்ணியை போட்டிட்டு புலம்பாதை" .. எண்டு எட்டி உதை விழும்.நாளைக்கு பக்குவமா எடுத்துச் சொல்லலாமெண்டு என்று நினைத்து பேசாமல் படுத்து விட்டேன் .. ஆனாலும் நித்திரை வரவில்லை . வைரவருக்கு சூலம் நடுறதெண்டால் அவருக்கு பிடிச்சது பொதுவா புளிய மரம்தான் .இந்த ஊரில.. இந்த நாட்டிலையே புளிய மரமில்லை .வீட்டு தோட்டத்தில நிக்கிறது ஒரு வாழை மரம் . அடுத்தது தோடை மரம் .வாழை மரத்துக்கு கீழை சூலத்தை நட முடியாது ஏனென்டால் குளில் காலத்தில அது பட்டுப்போகும். அப்பிடி நிண்டு பிடிச்சாலும் குலை போட்டதும் வாழையை வெட்டும் போது வைரவருக்கும் வெட்டு விழும் . அதால தோடை மரத்துக்கு கீழயே நடலாம் அதுவும் புளித்தோடை தான். புளிக்கு புளி வைரவருக்கும் லொக்கேசன் செட்டாகும் .சூலத்துக்கும் சிரமப்பட தேவையில்லை கன காலமா கார் கராச்சுக்குள்ள நீள இரும்புக் கம்பியொண்டு கிடக்கு அதை இரண்டா வெட்டி ஒண்டை வளைச்சு மற்றதை நிமித்தி நடுவிலை ஒட்டி விட்டா போதும் வைரவர் ரெடி என்று நினைக்கும் போதே அந்த மகிழ்ச்சியில் நித்திரையாகிப் போனேன் . காலை கண்விழித்தபோது மனிசி குளியலறையில் பல் தீட்டிக்கொண்டிருந்த நேரம் வைரவர் வந்ததை சொல்லாமா என்று யோசித்தேன் . வேண்டாம் எல்லா கடவுளையும் கிண்டலடிக்கிறதா எனக்கு மேல ஒரு குற்றச்சாட்டு இருக்கு அதால சூலத்தை தோடை மரத்துக்கு கீழ நட்டு .வடை மாலை போடும்வரை சஸ்பென்சாக வைத்து விட்டு சொல்லாமென நினைத்து ..அவரிடம் போய் "என்னப்பா எனக்கு கொஞ்ச நாளாவே வடை சாப்பிட வேணும் போலவிருக்கு" .. எண்டதும் வாயிலிருந்த பிரஸ்சை எடுத்து விட்டு தொட்டியில் துப்பியவர் ..."உனக்கு எப்ப பாத்தாலும் இதே நினைப்பு அதுவும் காலங் காத்தாலை" .. என்று அக்கிளில் ஒரு குத்து விழுந்தது .. மீண்டும் பல்லு தீட்ட தொடங்கியவரிடம் .."இல்லை உண்மையாவே உளுந்து வடை சாப்பிட வேணும் போலவிருக்கு வேலை முடிஞ்சு வந்ததும் பத்து வடையாவது சுட்டு வைக்கேலுமோ" என்றதும் .மீண்டும் பிரஸ்ஸை வாயிலிருந்து எடுத்து தொட்டியில் துப்பியதுமே . குத்து விழலாமென நினைத்து சட்டென்று இரண்டடி பாய்ந்து நின்று கொண்டேன் .."சரி சரி போ" ...என்றார் .தோட்டத்தில் வந்து நின்று தோடை மரத்துக்கடியில் எந்த பக்கமாக வைரவரை நடலாமென யோசித்தாலும் நம்ம வைரவருக்குத்தான் வாஸ்து ஆகமம் எல்லாம் கிடையாதே எதோ ஒரு பக்கம் ஊன்றி விட்டா போதும் .மரத்தடியை கொஞ்சம் சுத்தம் செய்து விட்டு வேலைக்கு கிளம்பி விட்டிருந்தேன் .மனம் முழுதும் வைரவர் நினைப்பிலேயே நிரம்பியிருந்தது போகும் வழியில் இருந்த தேவாலயத்தின் உச்சியில் இருந்த சிலுவை கூட சூலம் போலவே தெரிந்தது பிதா, சுதன், பரிசுத்த வைரவரின் பெயராலே ஆமென் என்று சூலம் போட்டுக் கொண்டேன் .. வேலை முடிந்து வீடு வந்ததுமே வடை வாசம் மூக்கை துளைத்தது.வண்டியை விட்டிறங்கி கராச்சுக்குள் புகுந்து இரும்பை தேடத் தொடங்கியிருந்தேன் காணவில்லை .தேடிக்கொண்டிருக்கும்போதே அங்கு வந்த மனைவி .. என்ன வேலையால வந்ததும் கராச்சுக்குள்ள நோன்டிக்கொண்டிருக்கிறியள் .. இங்கின ஒரு இரும்புக்கம்பி கிடந்தது அதை தான் தேடுறன் .. அதுவா கன காலமா கிடந்தது கறள் பிடிச்சுப்போய் கிடக்கெண்டு பழைய சமான் லொறி வரேக்குள்ள எடுத்து போட்டிடேன் .. எனக்கு நேற்றிரவு விழுந்த இடிச்சத்தம் இப்போ காதில் கேட்டது ..வைரவா ஏனிந்த சோதனை இருந்த ஒரேயொரு இரும்புக்கம்பியையும் மனிசி தூக்கி எறிந்சிட்டுது நான் என்ன செய்வேன் . புதுசா கம்பி வாங்கி உனக்கு சூலம் செய்து கோயில் வைக்கிற அளவுக்கு என்னட்ட வசதியில்லை என்னை மன்னிசுக் கொள் என்று வேண்டி விட்டு சுட்ட வடை வீணாகிப் போக கூடாது தானே என்பதுக்காக அதை துக்கிக் கொண்டு போய் தோட்டத்தில் உள்ள மேசையில் வைத்துவிட்டு சாப்பிட கதிரையில் அமர்ந்ததும் எங்கேயோ இருந்த தேனீ ஓன்று விர் என்று வடையில் வந்து குந்த .. "கன காலத்துக்கு பிறகு நானே இப்பதான் வடை சாப்பிட போறேன் .ச்சே ..போ" ..என்று நான் கையால் விசுக்கி கலைக்க..வேகமாகமேலே எழும்பி ஒரு சுற்று சுற்றி விட்டு என்னை நோக்கி வந்தது .. ஐயோ ..சாமி கண்ணை குத்திட்டுது என்று கண்களை பொத்தியபடி கத்தினேன் …..
 13. மிக்க நன்றி மிக்க நன்றி நன்றி கிருபன்
 14. என்னாலும் தான் நம்ப முடியவில்லை .. நன்றி நன்றி அண்ணா
 15. மிக்க நன்றி கருத்துக்கு நன்றி
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.