poet

கருத்துக்கள உறவுகள்
 • Content Count

  1,856
 • Joined

 • Last visited

 • Days Won

  6

poet last won the day on December 6 2013

poet had the most liked content!

Community Reputation

393 ஒளி

About poet

 • Rank
  Advanced Member

Profile Information

 • Gender
  Male
 1. முதல் எதிரியை விழுத்தும் முயற்சியில் ஏனைய எதிரிகளை ஆதரித்தல் என்பது இராச தந்திரத்தின் முதல் பாடம். சில சமயங்களில் முதல் எதிரியை ஏனைய எதிரிகளின் பட்டியலுக்கு இறக்கி விடும் தவறுகள் நடந்துவிடுவதுண்டு. அது நிகழாமல் பார்க்க வேண்டியது அவசியம். யுத்ததின்போது இயக்கம் பிரேமதாசவை ஆதரித்தது பற்றிய விடயம் பிரேமதாச முதல் எதியா இல்லையா என எதிர்கால அரசியல் மாணவர்களின் விவாதப் பொருளாக இருக்கும். மகிந்தவா பொன்சேகாவா முதல் எதிரி என்ற கேழ்வி குழந்தைகளும் பதில் சொல்லக்கூடிய கேழ்வியல்லவா? மேலும் சர்வதேச சமூகத்துக்கு இணங்கி யுத்தத்தில் நசிந்து சிதைந்திருந்த மக்களை ஒரு அணியாக்கி வாக்களிக்க வைத்ததன்மூலம் ’தமிழர் அஞ்சி சரணாகதியாகவில்லை ஓரணியாக கட்டுபட்டு நிற்கிறார்கள்’ என்பதை உலகளாவ உணர்த்தியமை முக்கியமாகும். விவாதம் வேண்டாம். புரிந்துகொள்ள முயற்சிப்போம்
 2. இலங்கை தேர்தல்களும் சம்பந்தரும் - வ.ஐ.ச.ஜெயபாலன் இலங்கையில் யார் அடுத்த ஜனாதிபதி என்கிற விவாதங்கள் சூடுபிடித்திருக்கிறது. இந்த சமயத்தில் சம்பந்தர் டெல்கி வந்துள்ளதாக சொல்லப்படுகிறது. சம்பந்தரை எதிர்க்கிற பலர் தெரிந்தோ தெரியாமலோ தமிழர்களின் வாக்குகளை மகிந்தவுக்கு எதிராக போய்விடாமல் தடுக்கிற பணியையே செய்கின்றனர். அவர்களுள் ஒருவரான முன்னைநாள் வடக்கு முதல் அமைச்சர் விக்னேஸ்வரன் சுதந்திரக் கட்ச்சி தன்னை ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடுமாறு கேட்டுள்ளதாக ஊடகங்களுக்கு தெரிவித்திருக்கிறார். எதிரிகளதும் அதிதீவிர வாதிகளும் சம்பந்தரை விழுத்துவது என்கிற ஒரே நோக்கத்தோடு வேலை செய்கிறார்கள். இந்த தருணத்தில் சம்பந்தரின் டெல்கிப் பயணம் பிரபல விவாதப் பொருளாகியுள்ளது. இன்று இலங்கை தமிழருக்கு அணுக்கக்கூடியதாக இந்தியாவும் அமரிக்க-மேற்க்கு நாடுகள் அணியும் மட்டுமே உள்ளது. ஏனைய உலக சக்திகள் எதிர் நிலையில் உள்ளன. இதுதான் நிலவும் சர்வதேச அரசியல் சூழல். முதல் எதிரியை தவிர்த்து வேறு நிரந்தரமான எதிரிகள் இல்லை. நிரந்தரமானது தமிழரின் நலன்கள் மட்டுமே. என்பதையே என்றும் வலியுறுத்தி வருகிறேன். முதல் எதிரி மகிந்த அணிதான். இன்றைய சூழலில் இது தொடர்பான தெளிவு சம்பந்தருக்கு மட்டுமே இருக்கிறது. இன்று நாம் எதிர் நோக்குவது அரசியல் இராஜதந்திர ம் பற்றிய சிக்கலாகும். வரலாறு முழுவதும் எங்கள் தோல்விகள் இங்கிருந்துதான் ஆரம்பிக்கிறது. இது. 2ம் உலக யுத்தத்தின்பின் தம்மை அழித்த நாடு என அமரிக்காவை ஜப்பானும் ஜெர்மனியும் புறக்கணிக்காமைக்கு என்ன காரணம்? ஜெர்மனிக்கும் ஜப்பானுக்கும் தெரிவு அமரிக்காவா சோவியத் யூனியனா என்றே அமைந்தது. தங்கள் முதலாளித்துவ ஜனநாயக அமைப்பை காபாற்றுவது முக்கியமாக இருந்தது. மேலதிகமாக உலக யுத்ததின்போது ஜெர்மனி மற்றும் ஜப்பானின் பிரதேசங்களை சோவியத யூனியன் கைப்பற்றியிருந்தது. எதிர்விமர்சனங்கள் இருந்தும் தமது அமைப்பைக் காப்பாற்றி யுத்த அழிவுகளில் இருந்து மேம்படுவதற்க்கு இருந்த சாத்தியமான தெரிவு அமரிக்காவே என்கிற முடிவை மேற்படி நாடுகள் எடுத்தன. இத்தகைய இஅசதந்திர சிக்கல்களை உலக நாடுகள் அடிக்கடி எதிர்கொள்ளவே செய்கின்றன. வரலாற்றில் இத்தகைய இராஜதந்திரச் சிக்கல்கள் ஏற்பட்ட சந்தர்பங்களில் எடுக்கப்பட்ட பிழையான முடிவுகளே பெரும் தோல்விகளுக்கு வழிவகுத்துள்ளது. இன்று நாம் மீண்டும் இராஜதந்திர சிக்கல் ஒன்றுக்கு முகம் கொடுக்க நேர்ந்துள்ளது. . நமது அணி இந்தியா அமரிக்கா மேற்குலகமென சம்பந்தர் தெரிவு செய்தமைக்கும் அதுதான் காரணம். அவர் அத்தகைய ஒரு முடிவை எடுத்தமை சர்யானதே. இல்லாவிட்டால் வடகிழக்கு இன்னும் இராணுவ சப்பாத்துக்களின்கீழ் சோமாலியாவாகி இருக்கும். இன்று பிரச்சினை சம்பந்தர் இந்திய மேற்க்குலக முகாம்களை தெரிவு செய்தமையல்ல. பிரச்சினை இலங்கை அரசியலில் தொடர்பாக இந்தியா அமரிக்கா நட்ப்பு அணிக்குள் இடம்பெறும் பனிப்போர்தான். இரு அணிகளையும் ஆதரிக்கும் நாம் இரு அணிகளின் பனிபோருக்குள் அகப்படாமல் தப்பிப்பது எப்படி? இந்திய அமரிக்க அணிகள் எங்களுக்கும் வாய்ப்புள்ள ஒரு பொது முடிவுக்கு வருவதை உறுதிப்படுத்துவது அவசியமாகும். அந்த முதிற்சி குறைந்த பட்ச்சமாவது சம்பந்தருக்கு உள்ளது என்று நம்புகிறேன்.
 3. விக்னேஸ்வரன் ஐயாவில் இருந்து கஜேந்திரகுமார் வரைக்கும் ஜனாதிபதி தேர்தலில் பங்குபற்றுதல் அல்லது பகிஸ்கரித்தல் என முழங்கப்போகிறார்கள் என நெடுங்காலமாக தெரிவித்து வருகிறேன். கடந்த ஜூலை யாழ் இணையத்தில் கருத்து பக்கத்தில் ஏற்கனவே பின்வருமாறு எழுதியிருந்தேன். அதனால் புதிதாக எழுதத் தோன்றவில்லை. . Posted July 18 (edited) ஜனாதிபதி தேர்தலில் தமிழருக்கு உள்ள தெரிவு இனகொலை மகிந்தவை தோற்கடிப்பதா அல்லது நேரடி மறைமுக செயல்பாடுகளால் மகிந்தவை வெற்றி பெற வைப்பதா என்பதுதான், இந்த சதுரங்கத்தில் மகிந்தவை தமிழ் இனத்தின் முதல் சத்துராதியென சரியாகவே தெரிவு செய்து சபந்தர் மகிழ்ந்தவை விழுத்தக்கூடியவர்களை 2வது எதிரியாக காய்நகர்த்தி தொடர்ச்சியாக மகிந்த அணியை தோற்கடித்து வருகிறார். 1995ல் ஒருநாடு என்னூடாக தேர்தல் பகிஸ்கரிப்பினூடாக மகிந்த வெற்றிக்கு உதவினால் உதவுவோம் என செய்தி அனுப்பியது. செய்தியை சேர்த போதும் மகிந்த வெற்றிபெறுவது பேரழிவுகளின் ஆரம்பம் என்கிற என்கருத்தையும் பதிவு செய்தேன். பாலகுமாரனும் அதே நிலைபாட்டில் உறுதியாக இருந்தார். ஆனால் கொழும்பைச் சேர்ந்த தமிழ் அரசியல் பிரமுகர் ஓரிருவர் அந்த சமயத்தில் மகிந்த குடும்பத்துக்கு ஆதரவாக இருந்தனர். அதே அதிதீவிர வாத அறிக்கை வீரர்களான தமிழ் தலைவர் சிலர் மீண்டும் பகிஸ்கரிப்பு அல்லது தமிழ் வேட்பாளர் என மகிந்தவின் வெற்றிக்கு வழிவகுக்க காய் நகர்த்துகின்றப்னர். பேசுகின்றனர். ஆதரித்தோ, பகிஸ்கரித்தோ அல்லது போட்டியிட்டு வாக்குகளைப் பிரித்தோ மகிந்தவை வெற்றி பெறும் சூழலை உருவாக்குவது இன துரோகம் மட்டுமன்றி முள்ளிவாய்க்கால் தியாகிகளுக்கு செய்யும் துரோகமுமாகும்
 4. நன்றி suvy . எது குற்றம்? அன்புசெய்தல் மனிதமல்லவா?
 5. (உன் கணவன்) ”காட்டான்தான். என்றாலும் எம்முன்னே, நட்போடு அவனுதிர்த்த பூமுறுவல்கள் இன்றும் கமழும். ஜனநாயகமே கற்பென்றிருந்த அவன் காதலின் முன் இந்த ஞாலம் கடுகு” . . மூன்றாவது மனிதனின் கவிதை. - வ.ஐ.ச.ஜெயபாலன். . என்றோ ஆழ்மனதுள் தைத்து இன்ன்னும் சிப்பிச் சிறு மணலாய் நெருடும் காலமுகமான ஒரு கவிதையடி நீ. தொடுவான் எரிய மணல் ஊருகி அலை புரளும் பாலையிலே ஈடன் பூந்தோட்டத்து வழி தவற ஓயாமல் சபிக்குமொரு ஒட்டகத்தைப் புணர்ந்தவன் நான். . ஏவாள் நீ இன்றெங்கே. உந்தன் உடற் தணலின் முலைச் சுவாலை இதழ் பொசுங்கத் தின்று உயிர் எரிந்த காலத்தே நீ இச்சித்தும் நான் தவிர்த்த அந்த விலக்கப் பட்டகனி இன்னும் இருக்கிறதா. உன்னிடத்தே வளைய வளைய வந்து எனைக் கண்டால் நச்சுப் பொறாமை வழியச் சிரித்திடுமே அந்த அருவருத்த பாம்பு அது எங்கே. உன் பிள்ளை ஒன்றுக்குப் பாம்புக் கழுத்து மற்றதற்ககுப் பாம்புக் கண் என்ற ஊர்வாய் மொழியைஒப்பவில்ல்லை என் மனசு. . இருள் கலைய முன்னெழுந்து காடு செலல் நள்ளிரவிற் சுமையோடு வீடடைதல் இரவெல்லாம் பதனிடுதல் என்றிருக்கும் ஆதாம் சுகமா. காட்டான்தான் என்றாலும் எம்முன்னே நட்போடு அவனுதிர்த்த பூமுறுவல்கள் இன்றும் கமழும். ஜனநாயகமே கற்பென்றிருந்த அவன் காதலின் முன் இந்த ஞாலம் கடுகு. . இது யாருடைய வாழ்வு. யார் பட்டி மந்தைகள் நாம். கூடல் கழிதல் பெருகல் பிரிதலென்று நம் இருப்பு யாருடைய கணித விழையாட்டு. எது பகடை எவர் காய்கள் இது எவருடைய சதுரங்கம். . - 1995
 6. கிருபன் நான் யாழில் ஆரம்பகாலங்களில் பதிவேற்றிய கவிதைகள் கிடைக்கவில்லை. உதவ முடியுமா
 7. மிகவும் நன்றி தோழமைக்குரிய புங்கையூரன், nunavilan and இணையவன். உங்களைப்போன்றவர்களின் ஆதரவுதான் என்னை தலைபணியாமல் எழுத வைக்கிறது
 8. நன்றி சுவே, மோசமான கவிதைகள் எழுதியுள்ளேன்ஆனால் எப்போதும் வாழ்ந்தேன் நல்ல கவிதையாய்.
 9. உங்கள் அன்புக்கு நன்றி சுவே.
 10. நன்றி கிருபன். பெயர் ஒற்றுமையை பார்த்துவிட்டு கிருபனும் கிரிதரனும் ஒருவர் என நினைத்துவிட்டேன். 78 அல்லது 79ல் யாழ்பாண கட்டிட தொன்மங்களை பாதுகாக்கும் ஆர்வத்துடன் இளம் ஆய்வாளராக வ.ந.கிரிதரன் எனக்கு அறிமுகமானார். போராலும் புலப்பெயர்வினாலும் ஈழம் இழந்த ஆற்றல்களுள் வ.ந.கிரிதரனும் ஒருவர். மீண்டும் கிரிதரன் ஈழத்தில் செயல்பட புலம்பெயர்ந்த தமிழர்கள் உதவ வேண்டும். நானே மறந்துபோன என் கவிதை பற்றி எழுதிய வ.ந.கிரிதரனுக்கும் அதனைப் பதிவேற்றிய கிருபனுக்கும் பாதுகாத்த யாழ் இணையத்துக்கும் நன்றிகள். பதிவுக்கு நன்றி கிருபன். திருத்த வாய்ப்பில்லை. ஏனெனில் எடிட் மூடபட்டுவிட்டது நண்பா. திறக்க முடியுமா?
 11. ”முரட்டு மேதை என்பர் மேலோர்'இங்கிதம் அறியான் அறியான்' என்பர்கபடம் நிறைந்த இளம் சீமாட்டிகள்.” . . இது என் சுய தரிசனக் கவிதை. யாழ் பல்கலைக் கழகத்தில் மாணவர் தலைவனாக செயல்பட்ட நாட்க்களில் எழுதியது. ஒரு போராட்டத்தின்போது பல்கலைக்கழக தலைவராக இருந்த பேராசிரியர் கைலாசபதி என்னை intellectual and Thug என திட்டினார். அவருக்கு பதிலாக எழுதி பல்கலைகழக மாணவர் மன்ற அறிவுப்பு பலகையில் ஒட்டிய கவிதை. தற்செயலாக யாழ் இணையத்தில் தேடியபோது கிருபன் என்னைபற்றிய குறிப்புகளோடு பதிவிட்டிருந்தார். யாழ் இணையத்துக்கும் கிருபனுக்கும் நன்றிகள். என் இளமைக் காலம்பற்றி கிருபன் எழுதிய குறிப்பின் இணைப்பு கீழே இணைக்கபட்டுள்ளது. .கள்ளிப் பலகையும் கண்ணீர்த் துளிகளும்- வ.ஐ.ச.ஜெயபாலன் -.முரட்டு மேதை என்பர் மேலோர்'இங்கிதம் அறியான் அறியான்' என்பர்கபடம் நிறைந்த இளம் சீமாட்டிகள்..ஓயாது துரத்தும் சவக்குழி விழுங்குமுன்ஒரேஒரு முறையே வாழுமிவ் வாழ்வில்கையா லாகாத கோழையைப் போலகொடுமையும் சூதும் நிறைந்த உலகைசகித்தும் ரசிக்கும் பாவனை செய்தும்சான்றோன் என்று மாலைகள் சூடநானும் எனது நண்பரும் விரும்போம்..வீணையோடும் தூரிகையோடும்மூலைமட்டம் ஸ்டெதஸ்கோப் அரிவாள்சம்மட்டி போன்றவை பழகிப் போனகைகளை உயர்த்தி நெஞ்சுகள் நிமிர்த்திஎனது தோழர் புடை சூழ்வார்கள்..பொன்னாய் அழகு பொலியினும் விலங்கைஅப்பிய மலமாய் அருவருத் துதறுவோம்.வெடி மருந்துகள் தோய்ந்த எம்நாவுஓய்ந்திருக்காது.தடைகள் சீனப் பெரு மதிலாயினும்தகர்க்கும் பணியினைப் பேனைக் குச்சியால்அங்குரார்ப்பணம் செய்வேன்.தடைகளை தகர்த்தும் விலகியும் தொடர்ந்துஅதிமானிடராய் முன் சென்றிடுவோம்.விழுமிடத் தெமக்கோர் நடுகல் நிமிர்த்திஎமது பிள்ளைகள் பெண்டுகள் தொடர்வார்..கடலின் மணலை எண்ணித் தீர்ப்பினும்மானிடர் எமது வம்சக் கொடியைசவக்குழி விழுங்கித் தீர்த்திடல் முடியுமோ?விலங்கும் சிறையும் வளைத்திடல் கூடுமோ?.விடுதலை பெற்ற தோழியரோடுகட்டாந் தரையின் வாழ்வே உவப்பு.பெரிய இடத்துச் சீமை நாய்களாய்கார்ப்பவனி வரும் இல்லறக் கனவில்எமது தோழர் தோழியர் தேயார்..கொடிய உலகம் சான்றோன் என்னவும்இளம் சீமாட்டிகள் இனியவன் என்னவும்குனிந்து நடக்கும் கூழங்கையர்கள்பெறுமதி கூடிய காலணி இலங்கும்கால்களைத் தேடியே முத்தம் கொடுப்பர்.பொன்முலா மிட்ட சவப்பெட்டிப் பரிசால்உலகம் அவர்களைக் கெளரவம் செய்க..வெளிப் பூச்சற்ற கள்ளிப் பலகையும்வெம்மை நிறைந்த கண்ணீர்த் துளிகளும்எங்களுக்காக இருக்கவே செய்யும்..- 1979யாழிணையத்தில் கிருபன் எழுதிய குறிப்பு.https://yarl.com/…/162206-%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%…/…
 12. ஆண் பெண்ணுக்கிடையில்ஒரு கண்ணுக்குத் தெரியாத சதுரங்கப் பலகைஎப்போதும் விரிகிறது. . சதுரங்கம்- வ.ஐ.ச.ஜெயபாலன்..சிருஸ்ட்டி வேட்கையில்ஆனைமலைக் காடுகள் பாடுகிறஅந்தி மாலை.அங்கு உயிர்க்கிற மந்திரக் கம்பளத்தில்உன்னையே சுற்றுதடி மனசு..இது தீராத காதலடிநீதான் கண்டு கொள்ளவில்லை.அதோ புல்லின்கீழ் கட்டெறும்பாய்தொலை கீழ் மூங்கிற் காடுகளுள் ஊரும்யானைபோலஉண்மையில் என் காதலும் பெரியதடி.,காமத்தில் சூரியன்பொன்சிந்த இறங்கி வர.நாணிப் புவிமகள்முந்தானையாக முகிலை இழுக்கின்றாள்..ஆகா அப்பன் குதிருக்குள் இல்லை என்கின்றஉனது நாடகம் அல்லவா இது.,ஆண் பெண்ணுக்கிடையிலஒரு கண்ணுக்குத் தெரியாத சதுரங்கப் பலகைஎப்போதும் விரிகிறது. .என்னோடு இன்னும் சிலரைபந்துகளாய் எறிந்து ஏந்தி ஆடும்வித்தைக்காரியில்தான் காதலானேன்.அதனால் என்ன.கீழே காட்டில் .ஒரு மூங்கில் புதரை மட்டுமே மேய்ந்தயானையும் இல்லைஒரு யானை மட்டுமே மேய்ந்தமூங்கில் புதரும் இல்லை..எதுவும் செய்..ஆனால்இறுதியில் நாம் மட்டுமே மிஞ்சவேண்டும்.நம் மரபணுக்களில் கவிதை கோர்க்க.
 13. ”நமது அன்றாட மறதிக்குப் பரிசுதானே இந்த நட்பும் வாழ்வும்.” * . இல்லறம் - வ.ஐ.ச.ஜெயபாலன் . ஆற்றங்கரையில் இன்னமும் தோற்றுப் போகாத மரம் நன். . இன்று தெளிந்து போய் புல்லும் சிலம்பாமல் நடக்கிறது காட்டாறு. விடியலில் இருந்தே ஒளியைக் கசக்கி ஹோலிப் பண்டிகைக் குறும்போடு வண்ணங்கள் வீசி தொட்டு தொட்டுச் செல்கிறது அது நேற்று வெறி கொண்டாடியது தானல்ல என்பதுபோல. . எனது கன்றுகள் முளைத்தெழுகிற நாள்வரையேனும் கைவிட்டகலும் வேர்மண் பற்றி பிழைத்திருக்கிற போராட்டத்தில் நேற்று அடைந்த விரக்தியை மறந்தேன் அது நானல்ல என்பது போல. . நேற்றைய துன்பமும் உண்மை. நாளைய பயமோ அதனினும் உண்மை எனினும் இன்றில் மொட்டவிழ்கிறதே வாழ்வு சிறகசைக்கிறதே வண்ணத்துப் பூச்சிகள் துள்ளி மகிழுதே பொன்மீன்கள் . நமது அன்றாட மறதிக்குப் பரிசுதானே இந்த நட்பும் வாழ்வும். - 1997