Jump to content

poet

கருத்துக்கள பார்வையாளர்கள்
 • Posts

  2116
 • Joined

 • Last visited

 • Days Won

  7

Everything posted by poet

 1. வண்ணத்துப் பூச்சிகளின் இறக்கைகளை அவன் மீண்டும் முறிக்கும் போது அவனை அவர்கள் மீண்டும் அரசனாக்குவர்
 2. இலங்கையின் பொருளாதார நெருக்கடியும் இனவாதமும். IBC TAMIL INTERVIEW PART 1
 3. ஐ.பி.சி பேட்டி April, 6 ,2022 பகுதி 2 நான் நினைக்கிறேன் அமரிக்கா இலங்கையின் அன்னிய செலாவணி நெருக்கடியில் ரணிலை அரசுக்குள் கொண்டுவந்து சர்வதேச நிதி நிறுவனத்தினூடாக தீர்வுகாண தீர்மானித்துவிட்டது.
 4. SRI LANKAN COW AND THE CHINESE MILKMAN STORIES. இலங்கை பசுவும் சீன பால்காரனும் கதைகள் * Chinese Milkman -Stop, Stop.... ..Don't touch my grass. Go to the next fam to Eate grass. I need only milk, Come back for milking. * சீன பால்காரன் - நிறுத்து..நிறுத்து. எனது பண்ணை புல்லை தொடாதே. புல் மேய பக்கத்து பண்ணைக்குப் போ. பால் கறக்க மட்டும் இங்கு வந்துவிடு.
 5. இந்திய இராசதந்திர சங்கடமும் உக்ரைன் போரும். (Opinion பக்கத்தில் The Hindu வெளியிட்ட எனது கருத்து ) * இந்திய இராசதந்திரம் தனது கோட்டைகளை அணிசேரா நாடுகள் என்கிற கற்பனையில் கட்டுகிறது. அதானால் இலங்கையோ அல்லது உக்ரைனோ எங்கானாலும் இந்தியா தனது எதிரிகளின் - சீனாவின் நிலைபாட்டையா எடுக்கிறது. அதனால் தனது உண்மை நண்பர்களை இழக்கிறது. அதனால் இந்திய இராசதந்திரம் தொடர்பாக விஞான பூர்வமான மீழாய்வு அவசியம். - .V.I.S.JAYAPALAN POET AND ACTOR * MY COMMENTS ON THE DILEMMA OF INDIAN DIPLOMACY (The Hindu - Opinion) Discussion Jaya Palan2d Indian diplomacy building its castles in an imaginary non aligned world. So whether in Sri Lanka or In Ukraine India always take the Chinese line and loose its friends. Indian diplomacy needs scientific review.
 6. நnன்றி விசுகு, நன்றி புரட்சிகர தமிழ் தேசியன். உடல் நலம் தேறி வருகின்றேன். உங்கள் தோழமை உற்சாகம் த்ருகிறது.
 7. கொண்டாட்டமே வாழ்வு. - ஜெயபாலன் * பருதியோடு எழுகவென பாடி பல்லுயிர்கள் கொண்டாடும் அதிகாலை. பூப்படைகிற முல்லை என் படுக்கை அறையுள் நுழைகிறாளா?. * எல்லோரும் வாழ்வோம் என்றபடி சன்னலைத் திறந்தேன். கரு முகில் அபாயா அணிந்த நம் முழுநிலவின் புன்சிரிப்பில் விடிகிறது வாழ்வு * என் சின்ன வயசு முழுவதும் முக்காடிட்ட சோனக மாமிகள் தந்த அறியப்படாத சிற்றுண்டிகளின் தேன் கமழ்ந்தது. * வளர் இளம் பருவத்தில் அபாயா அணிந்த அன்னை மேரியும் அம்மனும் ஒன்றென நம்பினேன். வாழ்வு பலவண்ன உறவுகளின் வானவில் என்பதை எப்படி மறந்தோம்? * மா முனிவன் ராமானுஜன் அபாயாவுடன் துலுக்க நாச்சியாரை போற்றிப் பணிந்த மண்ணே வாழிய. * வண்ண வண்ண கியாப் அணிந்து காடு வளர்க்கும் பறவைகளால் உயிர்த்திருக்கிறது நம் உலகு. * நம் மணல்கடிகை ஓயாமல் ஒழுகுகிறது. மதுக்கடை அடைக்கப்போகிறார்கள் என யாரோ பாரசீக மொழியில் பாடுகிறார்கள். பூசலற்ற நிகழ்காலம் மட்டுமே நமது. வருக கொண்டாட்டத்தை ஆரம்பிப்போம்.
 8. சம்பந்தன் ஐயா, வணக்கம். நீங்கள் ஓய்வெடுக்கும் வயசில் பிரித்தானியாவிடம் முன் வைத்த கோட்பாட்டு ரீதியான கோரிக்கையில் உறுதியாக இருங்கள். மாவை மற்றும் சாணாக்கியன் போன்ற சகல வடகிழக்கு தோழர்களை முன்னிலைப் படுத்தி மக்கள் போராட்டமாக வளர்த்தெடுங்கள்.. விமர்சனங்களை பின்ன்நகர்த்தி உங்களோடு மக்கள் நிற்பார்கள். கோட்பாட்டு ரீதியான கோரிக்கையுடன் எஞ்சியுள்ள அரசியல் கைதிகள் விடுதலை மறுப்பு போன்ற மறைமுகமாக தொடரும் போரை நிறுத்துவதும் முக்கியம். சகல இயக்க போராளிகளுக்கும் போரால் பாதிக்கபட்ட வறுமைக் கோட்டுக்கு கீழ்வாழும் ஈழம்வாழ் வாழ் மலையக தமிழர். வடபகுதி முஸ்லிம்கள், கிழக்கு முஸ்லிம்கள், . சாதிவாரியாக ஒடுக்கப்பட்ட தமிழ் மக்கள் அனைவருக்கும் இதுவரை மறுக்கபட்ட புனர் வாழ்வும் புனர் நிர்மாணமும் போன்ற இலகுவான அவசரக் கோரிக்கைகளையும் உலகின்முன் வையுங்கள். இவற்றை உங்கள் எதிர்கால கோரிக்கைகளோடு இணைக்க மறக்க வேண்டாம். அமைப்புச் சாரா நிறுவனங்கள் குறிப்பாக போர்களில் நாம்மோடு நின்ற திருச்சபை போன்ற மத நிறுவனங்களின் ஆதரவும் உங்களுக்குக் கிடைக்கும் என்பதில் ஐயமில்லை. மத நிறுவனங்கள. மக்களை அரசியல் மயப்படுத்தி வீதிக்கு இறக்கினால் வராலாறு உள்ளளவும் வாழ்வ்வீர்கள் ஐயா அரசியல் போர்க்களத்தில் உங்கள் உறுதியோடு சேர்ந்து மக்கள் ஆதரவும் என்போன்ற கலைஞர்கள் ஆதரவும் நிச்சயம். உயரும்
 9. வாழ்த்துக்கள் சுமந்திரன். இப்ப நீங்கள் சொல்வது உண்மைதான். ஆனால் ரணில் ஆட்சியை தாங்கிப்பிடித்து ரணிலுக்காக அப்போதைய ஜனாதிபதி சிறிசேனாவையே மிரட்டியபோது உங்களுக்கு வழங்கபட்ட மக்கள் ஆணையின் இலகுவில் பெறக்கூடிய சின்ன விடயமான “தமிழ் அரசியல் கைதிகள் விடுதலையை” கூட மறந்துவிட்டீங்களே. இது என்ன “திண்ணை” ஞானமா?
 10. பொங்கல் வாத்துக்கள். HAPPY PONGAL - ஜெயபாலன் * பொங்கல் வாழ்த்துக்கள் (பாடல்) - ஜெயபாலன் * வெண்பனி மீது பொன்மலர் சூடும் செங்கதிரோனை வாழ்த்துகிறோம் கண்பனி சூடி எம் நினைவோடு ஏங்கும் எம் தேசத்தை வாழ்த்துகிறோம் பொங்கல் வாழ்த்துக்கள் தோழர்களே பொங்கல் வாழ்த்துக்கள் தோழியரே பனை நிழல் வீழும் முற்றத்தில் நின்று பாசத்தில் வாடும் நெஞ்சங்களே பனியையும் மீறி பசுமையில் நிமிரும் பைன்மரம் போன்ற சிங்கங்களே பொங்கல் வாழ்த்துக்கள் தோழர்களே பொங்கல் வாழ்த்துக்கள் தோழியரே பூமியில் என்றும் அகதிகள் என்று புழுதி மண் போல சுழலுவதோ தாயகம் மீண்டு துயர்களை வென்று தலைநிமிர்ந்தே நாம் வாழுவதோ பொங்கல் வாழ்த்துக்கள் தோழர்களே பொங்கல் வாழ்த்துக்கள் தோழியரே ********************************************************************************************************** பொங்கல் வாழ்த்துப் பாட:ல் :சில ஆண்டுகளுக்கு முன்னம் எழுதி 2008ல் சென்னையில் ஒலிப்பதிவானது. சென்னை பல்கலைக்கழக இலக்கிய துறையின் ஏற்ப்பாட்டில் 2008 ஆகஸ்ட் 4ம் திகதி நண்பன் கலைஞன் அமரர் பாலு மகேந்திராவால் வெளியிடப்பட்டது. * முகப்பு படம்: எனது கவிதைகளின் முதல் இரசிகன் நண்பர் கலைஞன் அமரர் பாலுமகேந்திரா எடுத்த படம். எடுத்த வருடம் 2007 ஆக இருக்கக்கூடும்.
 11. நன்றி கிருபன். நம்மவர்கள் இன்னமும் கண்டுகொள்ளத் தயங்கும் மலையக தமிழர் பற்றிய செய்திக்கு நன்றி. தொடர்ந்து மலையகத் தமிழர்கள். கிழக்கு மாகாண தமிழர்கள் தமிழ்பேசும் முஸ்லிம்கள் பற்றிய சேதிகளை ஆய்வுரைகளை தேடி வெளியிடுங்கள்.
 12. முள்ளிவாய்காலில் சர்வதேச பிரிவினர் ஆவணங்களை புதைத்ததாக கேழ்விப்பட்டேன். கப்பல் வரவில்லை. ஆனால் கஸ்றோவைவிட முக்கியமான பொறுப்பில் இருந்த பொட்டம்மான் இறுதித் தருணத்தில் ஆவணங்கள் தொடர்பாக இராணுவ கட்டுப்பாட்டுடன் நடந்துகொண்டாராம். அவர், போரில் தப்பிய போராளிகளின் ஆதரவாளர்களின் எதிர்காலம் பற்றிய மிகுந்த பொறுப்புணர்வுடன் தனது கட்டுப்பாடில் இருந்த ஏனைய அனைத்து ஆவணங்களையும் அழிக்க உத்தரவு பிறப்பித்ததாகவும் கேழ்விப்பட்டேன். போர் முடிந்ததுமே சில தொகுதி ஆவண புதையல்களை இராணுவம் கைபற்றியது. எஞ்சியவற்றுள் சில இப்ப கைபற்றபட்டிருக்கலாம். 2014ல் நான் கைது செய்யப்பட்டபோது பயங்கரவாதத் தடைப்பிர் கையில் புதைத்த தரப்பினர் என்னை எதிரியாக சித்தரித்த பதிவுகள் வெளிநாட்டில் இருந்துவந்த அத்தகைய சிடிக்கள் என்பவையே கிடைத்திருக்கிறது என்பதை உணர்ந்தேன். கைப்பற்றப்பட்ட புதிய ஆவணங்களில் ஆசியா மற்றும் மேற்க்குநாட்டு கிளைகளின் வர்த்தகர்கள் பிரமுகர்களுடனான கொடுக்கல் வாங்கல் கணக்கு வளக்குகள் செயற்பாடுகள் பற்றிய சில ஆவணங்கள் இருக்க வாய்ப்புண்டு.
 13. மகிழ்ச்சி தோழரே. ஏழை என்னிடம் இருப்பது நினைவுகள் மட்டும்தான்.
 14. வாழ ஆசை LUST FOR LIFE * பதின்ம வயசில் சாதி ஒருக்குதலுக்கு எதிரான வன்முறையில் ஈடுபட்டதால் சின்ன வயசிலேயே ஆயுத தாக்குதல் அபாயமும் உயிர்காக்கும் அதிஸ்ட்டமும் என்னை தொடர ஆரம்பித்துவிட்டது. உயர் சாதிக் கொடுமை எதிர்ப்பினால் வீட்டைவிட்டும் வெளியேற்றப்பட்டேன். அதனால் அப்பா நெடும்பயணம் செல்லும் சமயங்களில்தான் எங்கள் வடகாட்டு பண்ணைவீட்டில் தங்குவேன். 1971 சிங்கள இளைஞர்களின் கிளற்ச்சியின் ஓராண்டு நிறைவு நாளில் பொலிசாருக்கு விசேட அதிகாரம் கொடுக்கப்பட்டது. அதைப் பயன்படுத்தி 1972 ஏப்பிரல் 4 நள்ளிரவு என்னை சுட பொலிசார் என் வீட்டுக்குள் பாய்ந்தனர். அதிஸ்ட்டவசமாக அந்த இரவில் விவசாய கிழற்சியாளர்கள் பற்றி ஆய்வு செய்யும் அமரிக்க பத்திரிகையாளர் ஒருவர் என்னோடு பேசிக்கொண்டிருந்தார். அதனால் எனக்கு வாய்திறக்க சந்தர்ப்பம் கிடைத்தது. “இங்ஸ்ஸ்பெக்டர் நான் இலகையன் தமிழன். எங்களை நீ நாய்போல சுடலாம். இவர் அமரிக்க பத்திரிகையாளர். அவருக்கு mechine gun நீட்டுகிறாய்,. நீ அவரை சுடமுடியாது” என கர்ச்சித்தேன். யந்திர துப்பாக்கியை நீட்டிய இங்ஸ்பெக்டரின் கை நடுங்கியது. . இப்படி வாழ்நாள் முழுவதும் புரிந்துகொள்ள முடியாத அதிஸ்ட்டம் என்னை காப்பாற்றியபடி தொடருகிறது. 2014ல் அம்மாவின் சமாதியை தரிசிக்க இலங்கை சென்றேன். தமிழ் சிங்கள் பத்திரிகைச் சந்திப்புகளில் அரசை காரசாரமாக விமர்சித்தேன். கோத்தபாய அவர்கள் என்னை இரகசியமாக கைது செய்ய உத்தரவிட்டார். அதனால் இராணுவ அதிகாரிகள் யாழ்ப்பாணத்தில் இருந்து அம்மாவின் சமாதிக்கு நான் சென்ற வழியில் இருந்த காட்டுக்குள் மறைந்திருந்தார்கள். கார் காட்டுக்குள் நுழைந்த போது காரைத் திருப்பு என சொன்னேன். நேரமாகிவிட்டது என மறுத்த சாரதியிடம் “அம்மாவிம் வாழ்நாள் வேண்டுகோளான வன்னிவிழாங்குழம் அம்மன் கோவிலுக்கு விளக்கு வைக்க வேண்டும் திருப்பு” என கத்தினேன். அதனால் என்னை இரகசியமாக கைது செய்யும் வாய்ப்பை இராணுவம் இழந்தது. துரத்தி வந்த இராணுவம் எங்களை கோவிலுக்குமுன் மடக்கியது. மக்கள் கூடட்டும் என்பதால் இராணுவத்துடன் கர்ச்சித்து வாய்ச் சண்டை போட்டேன். எதிர்பார்த்தபடியே வீட்டு வேலிகளுள் மக்கள் கூடிவிட்டார்கள். வன்னிவிளான்குழத்திலிருந்து நோர்வே சுந்தரலிங்கம் லண்டன் பத்திரிகையாளர் குருபரன் போன்றோருக்கு கைபேசி சேதிகள் போனது. (வாற்ஸப் செயலிக்கு நன்றி.) இராணுவ தலைமையகத்தில் இருந்து என்ன நடக்குதுCNN, BBC டிவி யெல்லாம் வரிச்சேதி ஓடுது என பதட்டத்துடன் வாக்கி ரோக்கியில் கத்தினார்கள். இப்படித்தான் இப்படித்தான் லட்சக் கணக்கான உறவுகள் கொல்லபட்ட மண்ணில் நான் உயிர் தப்பி வாழ்கிறேன். இயக்கத் தலைவர் ஒருவர் “ஜெயபாலனை சுடுவதானால் வாய்திறக்குமுன் சுட்டால்தான் உண்டு” என கிண்டலாக சொல்வாராம். உண்மையாக இருக்கலாம். வாழுமாசையால் கவிதை என் வாழ்வின் கவிதையாகும். * வாழும் ஆசையால் - வ.ஐ.ச.ஜெயபாலன். ---- ஒளியும் இருளும் உருள உருள காலத்தேரின் கூரைப் பல்லியாய் தசாப்தம் எழு தாண்டிவிட்டேன். விடிந்தால் தாமரை பொழுதுபட்டால் முல்லையென வழியெங்கும் தேன்சிந்துமே வாழ்வு. இதுதான் என் ஞானம் தோழதோழியரே. இது முது கடலின் இளமைமறாத அலை. வாழும் ஆசையால் கல் வெடிப்பிலும் வேரோடி மலர்கிறதே சிறு புல். * 1965ல் ஒருநாள். யாழ்ப்பாணத்து ராசவீதிகள் அதிர ”பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” என கர்சனையோடு செங்கொடிகள் உயர்ந்தது. அதுவரை கண்டது கல்யாண ஊர்வலம் மட்டுமே. வியர்வையும் மண்ணும் கந்தலுமாக ”நீயும் வாழ் எம்மையும் வாழவிடு” என மண் தோய்ந்த மேனியராய் மானுடம் எழுந்ததை அன்றுதான் கண்டேன். சூரியனும் நிலவும் மறுக்கப்பட்ட இருவேறு உலகமா? பதின்மவயசில் என் ஆன்மா அதிர்ந்தது. * அந்த அறியப்படாத யாழ்ப்பாணத்தில் மாணவப் பருவத்தை பறிகொடுத்து உயிர்த்த செம்மண் சேற்றுச் சிலைகளாய் கழை பறிக்கும் சிறார்களைக் கண்டு நானும் கொதித்தேன். சாதிவெறி பிடித்த தமிழருக்கெதிராய் மீசை முளைக்கயில் ஆயுதம் தாங்கினேன். * பின்னர் ஓர் இரவில் எம் விடுதலைக் கனவின் கருவறையான யாழ் நூலகத்தை சிங்கள பெளத்த வெறிக்கூச்சலுடன் படைகள் எரித்தன. கவிஞன் ஒருவன் “புத்தகத்தோடு புத்தகமாக புத்தனை எரித்தனர்” என்று வெகுண்டான். * கோடைக் காற்று கோடான கோடி கனலும் புத்தக கங்குகளோடு ”விரித்த கருங்குழலும் கையில் சிலம்பும் கண்ணீருமாய்” மதுரையை உலுப்பிய கண்ணகியாக யாழ்பாணத்து தெருக்களில் அலைந்தது. உளதோ உளதோ ”அல்லற்பட்டு ஆற்றாது அழுத” மக்களின் ஓர்மத்தை விடவுமோர் வலிய ஆயுதம் * கொடுங்கோல் வீழ்திய உலகப் புரட்சிகள் நூலகங்களிலிருந்தே ஆரம்பமானது. நாமோ நூலகச் சாம்பர் மேட்டில் இருந்து விடுதலைக்காக ஆயுதம் தாங்கினோம். * மீண்டும் மீண்டும் சர்வதேச மாநுட அரங்கில் சரிநிகராக வாழும் ஆசையால்தானே ஆயுதம் தாங்கினோம். ஆலயம் மசூதி மட்டுமன்றி தேயிலை மலைகளில் எல்லைப் புறத்து விகாரையில்கூட எல்லோரும் இன்புற்றிருக்கவே எழுந்தோம். * இபடித்தான் தோழ தோழியரே கல்லில் வளர்ந்த புல் பூத்ததுபோல என் காதலும் வீரமும் கவிதையானது. 2021.
 15. வீரப்பனின் காடுபற்றிய அறிவுவு நாட்டுக்குத் தேவை என்கிற குரல் வீரப்பனுக்கு நேரெதிரான கர்நாடக சூழலியலாளர்களிடமிருந்தும் வன படப்பிடிபாளர்களிடமிருந்தும் பலமாக எழுந்தது. என் நினைவுக்கு எட்டியவரை வீரப்பனும் புலிகளும் தொலைத்தொடர்பு வைத்திருந்ததாக இந்திய உளவுத் துறை ஒருபோதும் அறிவிக்கவில்லை. வீரப்பனுக்கு பொறிவைக்க தமிழக கர்நாடக உளவுத்துறைகள் கட்டுக் கதைகளை உருவாக்கினார்கள். வன்னித் தலமை வீரப்பனை வரவேற்பதான சேதிகளை போலியாக இட்டுக்கட்டி பயன்படுத்தினாகள். சீனா பேச்சுக்கு அழைத்தபோதே மறுத்த புலிகள் இந்தியாவுக்கு பின்வரும் சேதியை அனுப்பினார்கள். “இந்தியா எங்கள் கப்பல்களை தாக்க இலங்கைக்கு உதவுகிறது. இந்தியா இலங்கைக்கு எங்களை தக்கி அழிக்க தகவலும் தாய்க் கப்பலும் வளங்குகிறது. அதற்க்கு நம்மிடம் ஆதாரம் உள்ளது. இருந்தும் நாம் இந்திய நட்ப்பை வேண்டி சீனாவின் சிங்கபூர் பேச்சுவார்த்தை அழைப்பை நிராகரித்தோம்” எனஇந்தியாவுக்கு புலிகள் இரகசியமாக அறிவித்தார்கள். சீன உறவையே நிராகரித்த பின்னணியில் வீரப்பன் விடயத்தில் இந்தியாவுடன் பகைவளர்க்க ஒருபோதும் முற்பட்டிருக்க மாட்டார்கள். 1995 - 2006 காலக்கட்டத்தில் புலிகளுடனான உரையாடல்களில் இந்திய தரப்பு ஒருபோதும் வீரப்பன் தொடர்பாக குறிபிடவோ குற்றம் சாட்டவோ இல்லை. வன்னிக்கு ரூர் போய்வந்த புலம்பெயர்ந்த தமிழர்களுள் ஒரு சிலர் தமிழக பிரபலங்களோடு தாம் புலிகளுக்கு நெருக்கமென அறிமுகம் செய்து மிகையாக உரையாடி இருக்கிறார்கள். அதுதான் புதிது புதிதாக கிழம்பும் கதைகளின் பின்னணி என நினைக்கிறேன் .
 16. காட்டை குறை சொல்லாதீர்கள். நான் காட்டை நம்பினேன். காடு கைவிடவில்லை. காட்டைவிட்டு நம்மை வெளியே வரச்செய்ய சிலநாடுகள் (கெரிலா யுத்தபயிற்ச்சிகளுக்குப்பதிலாக ) நேரடி யுத்தப் பயிற்ச்சி தந்தார்கள். பாரிய ஆயுதங்கள் கிடைக்கச் செய்தார்கள். காட்டைவிட்டு வெளியே வந்தோம். காட்டுக்குள் எதிரி வந்தான். முழுமையாக காட்டை விட்டால் முழுமையாக வெளிநாடுகளுக்கு பின்னே நிற்க்கவேணும் இல்லையென்றால் காட்டையும் (கெரிலா மூல உபாயம் Strategy ) வெளிநாட்டை சார்தலையும் (நேரடி இராணுவ தந்திரோபாயம் Tactics) உகந்த வீதத்தில் கலக்கவேண்டும். (என என்னால் உயிரை பணயம் வைக்கவும் கத்தவும் மட்டுமே முடியும்). 1987 - 1990 காலக்கட்டத்தில் (காடு+ கொழும்பு) இந்த கலவைதான் காப்பாற்றியது. 2006-2009 காலக்கட்டத்தில் நாம் கெரிலா வல்லமையை துறந்து முழுமையாக நேரடி இராணுவத்தை தெரிவுசெய்யும்வரை ஆயுதக் கப்பல்களை அனுமதித்தார்கள். கெரிலா போரை நாம் முற்றாக கைவிட்டதும் எஞ்சிய நேரடி இராணுவ வல்லமையை வெட்ட ஆயுத கப்பல்களை அழித்தார்கள், பணியாத வீரம் சுத்த தங்கம் மாதிரி. காடும் வெளிநாட்டு உறவும் கலக்காமல் சுத்த தங்கத்தில் எது செய்தாலும் நிலைக்காது. என் பிள்ளைகளுக்கு நான் விட்டுச் செல்லும் வார்த்தைகள் இவைதான். .
 17. காலச்சுவடு -2 KALACHUVDU - 2 * நம்பிக்கை கவிதையை 1968ம் ஆண்டில் எழுதி வெளியிட்டேன். இக்கவிதையும் பொதுவுடமை புரட்சிவரபோகிறது என நம்பிய என் இளமையில் எழுதியதாகும். நம்பிக்கை புரட்சிக்காக இராணுவப் புவியியலை அறிந்துகொள்ள வன்னிக் காடுகளில் திரிந்த காலத்தில் உருவானதாகும். . இக்கவிதையிலும் தமிழ் பாட்டாளிகளின் எழுச்சியின் முதல் குரல் வன்னியில் எழும் என்கிற நம்பிகையையே பாடினேன். * நம்பிக்கை.. வ.ஐ.ச.ஜெயபாலன். . காலச்சுவடு -2 KALACHUVDU - 2 * நம்பிக்கை கவிதையை 1968ம் ஆண்டில் எழுதி வெளியிட்டேன். இக்கவிதையும் பொதுவுடமை புரட்சிவரபோகிறது என நம்பிய என் இளமையில் எழுதியதாகும். நம்பிக்கை புரட்சிக்காக இராணுவப் புவியியலை அறிந்துகொள்ள வன்னிக் காடுகளில் திரிந்த காலத்தில் உருவானதாகும். . இக்கவிதையிலும் தமிழ் பாட்டாளிகளின் எழுச்சியின் முதல் குரல் வன்னியில் எழும் என்கிற நம்பிகையையே பாடினேன். * நம்பிக்கை.. வ.ஐ.ச.ஜெயபாலன். . துணை பிரிந்த குயில் ஒன்றின் சோகம்போல் மெல்ல மெல்லக் கசிகிறது ஆற்று வெள்ளம். காற்றாடும் நாணலிடை மூச்சுத் திணறி முக்குளிக்கும் வரால் மீன்கள். ஒரு கோடை காலத்து மாலைப் பொழுது அது. . என்னருகே வெம் மணலில் ஆலம் பழக் கோதும் ஐந்தாறு சிறு வித்தும் காய்ந்து கிடக்கக் காண்கின்றேன். என்றாலும் எங்கோ வெகு தொலைவில் இனிய குரல் எடுத்து மாரிதனைப் பாடுகிறான் வன்னிச் சிறான் ஒருவன். . 1968 (வன்னி.இலங்கை)
 18. தனித்து மட்டகளப்பு மாவட்டத்தையோ அம்பாறை மாவட்டத்தையோ அல்லது திருகோண மலை மாவட்டத்தையோ எடுத்து தமிழ் முஸ்லிம் இனங்களின் காணிப் பகிர்வு பிரச்சினையை ஆராய்வது குருடர்கள் யானை பார்த்த கதையாகவே முடியும். மட்டக்களப்பில் முஸ்லிம்களும் அம்பாறையில் தமிழர்களும் எதிரும் புதிருமாக ஒரே மாதிரியான குற்றச்சாட்டுக்களை முன் வைக்கிறார்கள். திருமலையில் இரண்டு தரப்புக்கும் பரஸ்பரம் அச்சமும் கோரிக்கைகளும் உள்ளது. அதனால் கிழக்கின் மூன்று மாவட்ட பிரச்சினைகளையும் ஒன்றாக அமர்ந்து பேசினால் மட்டும்தான் தெளிவும் நீதியும்கிட்டும். அல்லது வீண ஒரு இனமுறுகலை தூண்டிவிடுகிற முயற்ச்சியாகவே முடியும். இந்தியாவ்வும் அமரிக்காவும் மேற்க்கு நாடுகளும் சீனாவின் வடகிழக்கு நகர்வு தொடர்பாக கவலையை வெளிப்படுத்தியுள்ளனர். இலங்கை அரசுக்கு தீர்வு தொடர்பான அழுத்தம் மீண்டும் அதிகரிக்கும் சூழல் உள்ளது. அதனைக் குழப்ப அரசு தரப்பு எடுக்கும் முயற்ச்சிகளுக்கு பலியாகிவிடக்கூடாது. குறிப்பாக தமிழர் தரப்பு மிகவும் நிதானமாகவும் பொறுப்புணர்வுடனும் நடக்க வேண்டிய தருணமிது. தமிழ் முஸ்லிம் ஐக்கியம் ஏற்படாவிட்டால் இணைப்பை கைவிடுதல் அல்லது கிழக்கின் நிலத்தொடர்பற்ற தமிழ் அலகுகள் வடக்குடன் இணைதல் என்கிற நடைமுறைச் சிக்கலான சூழலே உருவாகும். எனவே எதிர்காலத்தில் ஒட்டுமொத்த கிழக்கு மாகாணம் பற்றிய பேச்சுவார்த்தைகளில் மட்டுமோ தமிழரும் முஸ்லிம்களும் கலந்துகொள்ள வேண்டும்.
 19. 1970 ம்ஆண்டு வசந்த காலத்தில் எழுதிய கவிதை. அது புரட்ச்சி வரபோகிறது என்கிற நம்பிக்கையுடன் இலங்கையின் இராணுவப் புவியியலைப் படிக்க நான் காடு காடாக அலைந்த காலம். 1970 பதுகளில் வடகிழக்கு மாகாணத்தில் புரட்ச்சியின் மையம் வன்னி என உணர்ந்தேன். அதனை பிரகடனப் படுத்தும் வகையில் ”பாலி ஆறு நகர்கிறது” ”நம்பிக்கை” என்ன சில கவிதைகள் எழுதினேன். இது வன்னிக் காட்டுப்புற விவசாயிகளின் வாழ்வியல் பற்றிய கவிதை. எழுதிய கவிதைகளில் ஒன்று. இக் கவிதையில் வரும் ”காலச்சுவடு” என்கிற படிமம் அப்பவே பிரபலமானது. சுரா தான் வாசித்தவற்றுள் நீங்க உருவாக்கிய காலசுவடு சிறப்பான படிமம் என்று பாராட்டினார். லவினர்கள் சொற்களை செல்வம் செல்வாக்குள்ளவர்கள் பதிவுசெய்து தனி உடமையாக்க உருவாக்குவதில்லை. தமிழுக்காகவே உருவாக்குகிறோம். அதுதான் காலத் துயர். * இளவேனிலும்உழவனும். - வ.ஐ.ச.ஜெயபாலன் . காட்டைவகிடுபிரிக்கும் காலச்சுவடான ஒற்றையடிப்பாதை. வீடுதிரும்ப விழைகின்ற காளைகளை ஏழை ஒருவன் தோளில் கலப்பை சுமந்து தொடர்கிறான். . தொட்டதெல்லாம் பொன்னாக தேவதையின் வரம்பெற்ற மாலைவெய்யில் மஞ்சட்பொன் சரிகையிட்ட நிலபாவாடை நீளவிரிக்கிறது. இதயத்தைக்கொள்ளையிட வண்ணத்துப்பூச்சிகள் வழிமறிக்கும் காட்டுமல்லிகைகள் காற்றையேதூதனப்பி கண்சிமிட்டும். அழகில் கால்கள் தரிக்கும். முன்நடக்கும்எருதுகளோ, தரிக்கா. . ஏழையவன் ஏகும்வழி நெடுந்தூரம் 1970
 20. சரி நான் புரிந்ததை பதிவு செய்கிறேன் நண்பா. கொசோவா தீர்வு பாதையில் சென்று பேரழிவைத் தடுத்து வெற்றிபெறும் சாத்தியகூறுகளை பாலா அண்ணன் உருவாக்குவதாகத் தோற்றம் இருந்த சூழலில்தான் நான் அண்ணாவுடன் பேசினேன். கொசோவோ மொடல் சாத்தியக்கூறுகள் பற்றியும் நான் ஆதங்கப்பட்டேன். அண்ணா இவை பற்றி ஒன்றும் சொல்லவில்லை. என் புரிதலின் படி மிக சுருக்கமாக அவர் பேசிவற்றின் சாராம்சம். “இந்தியா உட்பட எல்லா நாடுகளோடும் பாலங்களை உடையவிட்டாச்சு. எஞ்சிருப்பது மேற்க்குத்தான். நான் சாகமுன்னம் அந்த பாலத்தையாவது காப்பாற்றி தீர்வை கொண்டுவந்தாதான் மா----னை காப்பாற்றலாம். இஞ்ச சிலர் விடுகிறாங்களில்லை. நான் செத்தா எல்லோரும் சேர்ந்து மா-------னையும் இயக்கத்தையும் எல்லோரையும் அழிச்சிடுவாங்க.” இந்த கருத்தைத்தான் சொன்னார். அவர் விடுகிறாங்களில்லை என்று குறிப்பிட்டதுயார் என்பதை சொல்லவில்லை. என் அனுமானப்படி அவர் கஸ்றோவையும் தனக்கு முட்டுக்கட்டைபோடும் புலம்பெயர்ந்த அமைப்பின் தலைமகள் சிலவற்றையும்தான் குறிப்பிட்டார் என்றுதான் நான் புரிந்துகொண்டேன்.
 21. புதிய தலைமுறை டிவி தளத்தில் எழுதிய பதிலின் பிரதி ----------------------------------------------------------------- மேலோட்டமான விடயங்களையே பலரும் பேசினார்கள். உண்மையில் சினாவின் தற்போதய பதட்டத்துக்கு முக்கிய காரணம் அமரிக்காவுக்கும் இலங்கை மற்றும் புலம்பெயர்ந்த தமிழர்களுக்குமமிடையில் உருவாகிவரும் அரசியல் உறவுகள்தான் எனத் தோன்றுகிறது. அதன் வெளிப்பாடுகளாகவே அண்மைக்கால சீன நகர்வுகளை நான் பார்க்கிறேன். அமரிக்காவும் மேற்க்கு நாடுகளும் மட்டுமே 2000 -2006 பேச்சுவார்த்தை காலக்கட்டத்தில் இருந்து இலங்கைத் தமிழரை ஒரு தரப்பாக அங்கீகரித்திருக்கிறது. அமரிக்கா மேற்க்கு நாடுகள் ஐநா போன்ற சர்வதேச அரங்குகளில் போர்குற்றம் மனித உரிமைகள் விடயத்தில் இலங்கைக்குப்பின்னே நிற்காமல் தமிழர் மீதும் கரிசனை காட்டுகின்றன. இந்தியா 1987 ஒப்பந்ததின்போதுகூட இலங்கை தமிழரை ஒரு தரப்பாக அங்கீகரிக்கவில்லை. இதுதான் இலங்கைத் தமிழர்களுக்கு இந்தியா மீதுள்ள வருத்தம். இலங்கை தமிழர் இந்தியாவிடமிருந்து பொருளாதார உதவிகளைவிட அரசியல் உதவிகளையே முதன்மையாக எதிர்பார்க்கிறார்கள். இதனை இந்தியா புரிந்து கொள்ள வேண்டும். ஏனெனில் இலங்கை தமிழருக்கான பொருளாதார உதவிகள் இந்தியா அமரிக்கா மேற்குநாடுகள் மட்டுமல்ல இலங்கை அரசும்கூடச் செய்கிறது. புலம் பெயர்ந்த தமிழர்களும் செய்கிறார்கள். இப்போ சீனாவும் செய்கிறது. இந்தியாவில் சிலர் அரசியல் ரீதியாக இலங்கையோடு மட்டும் நின்றுகொண்டு வடகிழக்கில் சில கட்டிடங்களை வீதிகளை அமைப்பதன்மூலம் இலங்கை தமிழர்களை வெண்றுவிடலாமென கருதுகிறார்களா? என்கிற கேழ்வி தமிழ் இளைஞர் மத்தியில் உள்ளது. வடகிழக்கு தமிழர் மத்தியில் இந்தியா காலூன்றும் விடயத்தில் இந்தியாவின் வடகிழக்கு கொள்கை தோற்றுப்போய்விட்டது. அமரிக்காவும் சீனாவும் அதனை உணர்ந்துவருகிறது. அண்மையில் அமரிக்கா மற்றும் மேற்க்கு நாடுகளுக்கும் இலங்கை தமிழர் தரப்புக்குமிடையே நெருக்கம் அதிகரித்து வருவது அண்மை நிகழ்வுகள் மூலம் புலப்படுகிறது. அதற்க்கு அமரிக்கா மேற்க்குநாடுகளின் பொருளாதார உதவிகளல முக்கிய காரணம். அதற்க்கு மேற்குநாடுகள் இலங்கையை கண்டிப்பது போர்குற்றம் செய்த இராணுவ தலைவர்களை எதிர்ப்பது என அரசியல் ரீதியான நகர்வுகளை மேற்கொள்ளுவதே முக்கிய காரணம். இனியாவது இந்தியா இதனை புரிந்து கொள்ளவேணும். சீனா பதட்டபடுவது இந்தியாவின் நகர்வுகள் தொடர்பாக என நான் நினைக்கவில்லை. சீனா பதட்டப்படுவது அமரிக்காவுக்கும் இலங்கை தமிழர் மற்றும் புலம் பெயர்ந்த தமிழருக்குமிடையிலான நெருக்கம் தொடர்பானது எனவே நான் கருதுகிறேன். வடகிழக்கில் இந்தியாவை சீண்டுவதன்மூலம் 1. தமிழர் மத்தியில் செல்வாக்குப் பெறுகிற போட்டியில் இந்தியா அமரிக்காவுடன் தானும் களமிறயும்ங்குவது 2 களத்தில் அமரிக்காவுடன் தான் மட்டும் மோதாமல் , இந்தியாவை களத்தில் இறக்கிவிடுவது என்கிற இரண்டுமுனை இராசதந்திரத்தை சீனா கையாள்வதாகவே தோன்றுகிறது. . - வ.ஐ.ச.ஜெயபாலன் கவிஞன்
 22. நன்றி. கவிஞர்கள் வல்வை சகாறாவுக்கும் நிழலிக்கும் என் நன்றிகள்.
 23. எனது சுயசரிதையில் விரிவாக எழுதுவேன். யாழ் குழுமம் அங்கீகரித்தால் கேட்டால் பாலசிங்கம் அண்ணன் சொன்னதை சுருக்கமாக வெளியிடமுடியும்.
 24. அண்ணா, உங்கள் நினைவை போற்றுகிறேன். 2002 ஒஸ்லோ மாநாட்டின்போது நீங்கள் என்னிடம் சொன்ன சேதிகள் இப்ப தீர்க்க தரிசனமாகிவிட்டது. 2006ல் பேச்சுவார்தைகளில் நீங்கள் கலந்துகொள்ளவில்லை என்பதில் மேற்குலகம் கோபமாக இருந்தது. உங்கள் உடல்நிலை பற்றி சொன்னதை அவர்கள் ஏற்கவில்லை. ”பாலசிங்கத்தைத் தவிர தவிர பிறருடன் பேச ஒன்றுமில்லை. இது முடிவின் ஆரம்பம்” என மேற்குலக இராசதந்தரிகள் எச்சரித்ததை நான் தலைமைக்கு உடனேயே அறிவித்தேன். உங்கள் மரணச் சேதியை கேட்டபோது "This is the beginning of the end" என்ற மேற்குலக இராஜதந்திரிகளின் குரல் என் காதுகளில் மீண்டும் ஒலித்தது. அண்ணா உங்கள் கடைசிகால நிலைபாடுகளில் இருந்து கற்றுக்கொள்வதால் மட்டுமே நம் இனம் வெற்றியடையமுடியும்.
 25. இன்றைய மது - ஜெயபாலன் * உலகம் விதியின் கள்ளு மொந்தை. நிறைந்து வழிகிறது அது மதுக் கிண்ணம் தாங்கியவர்களால் எப்போதும் நுரைத்தபடி. நேற்றிருந்தது வேறு. இங்கே நுரை பொங்குவது புதிய மது. . அது இன்றைய நாயகனுக்கானது. நாளை கிண்ணம் நிறைகிறபோது வேறு ஒருவன் காத்திருப்பான். நிச்சயம் இல்லை நமக்கு நாளைய மது அல்லது நாளை. . எனக்காக இன்று சூரியனை ஏற்றி வைத்தவனுக்கு நன்றி. அது என் கண் அசையும் திசைகளில் சுவர்க்கத்தின்கதவுகளைத்திறக்கிறது. மயக்கும் இரவுகளில் நிலாவுக்காக ஓரம்போகிற சூரியனே உன்னையும் வணங்கத் தோன்றுகிறதடா. . கள்ளு நிலா வெறிக்கின்ற இரவுகள் தோறும் ஏவாளும் நானும் கலகம் செய்தோம். ஏடன் தோப்பினால் விரட்டி அடித்தோமே கடவுளையும் பாம்பையும். இதைத் தின்னாதே என்னவும் இதைத் தின் என்னவும் இவர்கள் யார். காதலே எமது அறமாகவும் பசிகளே எமது வரங்களாகவும் குதூகலித்தோம். . எப்பவுமே வரப்பிரசாதங்கள் வசந்தம் முதலாம் பருவங்கள் போலவும் உறவுகள் போலவும் நிகழ் தருணங்களின் சத்தியம். . நிலம் காய்ந்த பின் விதைப் பெட்டி தூக்கியவனுக்கு ஐயோ பட்டமரம் துளிர்க்கிறமண்ணில்கூட அவனது வியர்வை முளைப்பதில்லை. போன மழையை அவன் எங்கே பிடிப்பான். அது ஈரமாய் காத்திருந்திருந்த சத்தியம். நனைந்த நிலத்தில் உழுகிறவனின்கவிதையை எழுதுகிறது ஏர்முனை. . காலியான விதைப் பெட்டியில் காட்டுமலர்களோடுநிறைகிறது கனவுகள் -2004 photo - My Bro Vanithasan Rasamma Shanmugampillai
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.