Jump to content

poet

கருத்துக்கள பார்வையாளர்கள்
  • Posts

    2116
  • Joined

  • Last visited

  • Days Won

    7

Posts posted by poet

  1. நான் எழுத வேன்டிய பலவற்றை எழுத நாளாகும். என்னை சந்தித்த எனக்காக பாடுபட்ட பலரின் பாதுகாப்பு பற்றி முதலில் உறுதி செய்யவேன்டியுள்ளது. அதற்க்கு எனக்கு 2 வாரமாவது வேன்டும். அதன்பின்னர் என்னுடைய 2ம் அறிக்கையை எழுதுவேன். 

  2. நான் யாழ்குடும்ப உறுப்பினர்களின் கருத்துக்களை வரவேற்கிறேன். அதற்க்கான உரிமை என்க்கு உள்ளது. தூயவன் சொல்வதுபோல

    தலைப்பை மூடிவிடவேண்டாம்.

  3. விடைபெறுமுன்னம் இறுதிவார்த்தை.

    விசாரணையில் என்னிடம் நெடுநேரம் துருவித் துருவிக் கேட்க்கப்பட்டது 

    தமிழர்களையும் முஸ்லிம்களையும் இணைத்து வடகிழக்கின் சுதந்திரத்துக்காக போராடும் கருத்தை பிரச்சாரம் செய்திருக்கிறீர் என்பதுதான். அதற்கான வல்லமை உள்ள ஒரே நபர் என்பது அவர்கள் கருத்தாக இருந்தது. அதுவே அவர்கள் அச்சத்துக்கு காரணமாக இருந்தது...

    தோழர் சோல்கைமின் அறிக்கை வந்தபின்னர் நான் மேலும் இறுக்கமாகிவிட்டேன்.என்னைவிசாரித்தவர்களின் நிலை இறுக்கம் குறைந்திருந்தது.

     

    அனந்தி என் ஊடக கருத்தரங்குக்கு வந்தது பற்றி கேட்டார்கள்..அநந்தியை நேரில் சந்திக்கவில்லை என்று சொன்னேன்.  நான் புலிகளுக்கு உதவியது பற்றிக் கேட்டார்கள். நான் சமாதான பேச்சுவார்த்தைகளுக்கு முன்னர் நிகழ்தவைகள் பற்றி பேச மறுத்துவிட்டேன். அனந்தியுடன் தனிப்பட்ட முறையில் பேசவில்லை என்றேன். ஐங்கரநேசனை சந்தித்த தகவல் அவர்களிடம் இருந்தது. மற்றப்படி என்னைச் சந்தித்த நண்பர்கள் யாரின் பெயரையும் வெளியிடவில்லை. 

     

    24 பகல் களுபோவில ஆஸ்பத்திரியில் பொலிசாரின் சதி இடம்பெற்றது..குமர என்கிற  74792 இலக்க  பொலிஸ்காரர் என்னை அச்சுறுத்தியபடி இருந்தார். அவர்  என் தொலைபேசியை சார்ச் பண்ணவிடவில்லை. தொலைபேசியை தாங்கள் சார்ச் பண்ணித் தருவதாக தொலைபேசியை கேட்டார்கள். நான் மறுத்துவிட்டேன். தொலைபேசி தொடர்பு துண்டிக்கப்பட்ட நிலையில் முதன் முறையாக எச்சரிக்கையானேன்.  நோயாளிகள் சிலரை தூண்டிவிட்டார்கள்.  குடிவரவுத் துறை வந்திராவிட்டால் அந்த இரவு கொல்லப்பட்டுக்கூட இருக்கலாம். குடிவரவுத் துறையினருடனும் அவர் முறுகினார். இதனால் அவருக்கு பலமான பின்னணி இருப்பது தெளிவானது.

     

    குடிவரவுதுறை இங்ஸ்பெக்டர் அமித் பெரரா நிலமையை புரிந்துகொண்டு உடனே என்னை அங்கிருந்து அகற்றியதால் ஆபத்தில் இருந்து தப்பினேன். நான் வெளியேறும்வரை அந்த சம்பவம்பற்றி முறையிடவேண்டாமென்று கேட்டுக்கொண்டேன்.

     

    சிங்கள தோழர்களின் ஆதரவு பிரச்சாரம் மேலோங்கியபோது தியவினவும் ஏனைய சிங்கள ஊடகங்களும் எனக்கெதிராக வகுப்புவாதத்தைக் கக்க ஆரம்பித்தன. இதனால் இறுதி நாட்க்களில் நான் நாட்டை விட்டு உடன் வெளியேறும் அவசியத்தை உணர்ந்து கோபத்தை விட்டுவிட்டு இராசதந்திரத்தோடு செயல்பட்டேன்..

     

    http://www.youtube.com/watch?v=4dOgJclq0Bk&feature=youtu.be

     

     

  4. நன்றி புத்தன்.

    புங்கையூரானுக்கு. நான் வணிக புலவன் இல்லை. தர்ம கோபம் என் அடையாளம்.

     கோபப்படுவது கோழைத்தனம் என்பது அபத்தமானது.

    உலக வரலாற்றின் திருப்பு முனைகள்பல சத்திய ஆவேசங்களில்  தர்ம கோபங்களில் இருந்தே ஆரம்பமாகியுள்ளது.

    என்னைக் கைது செய்தவர்களிடம் நான் கோபப்படாமல் கெஞ்சியிருக்கவேண்டும் என்கிறீர்களா?

    நான் எதிர்பார்த்ததுபோல என் சத்தம் கேட்டு வீதிக்கு வந்த வன்னிவிளான்குளம் மக்கள் ஆமி மெதுவாய்ப் பேசுது ஜெயபாலன் கோபமாய் கத்திக்கொண்டு நிற்கிறார் என்று நோர்வே நண்பன் கணபதிப்பிள்ளை சுந்தரலிங்கத்துக்கு சொல்லியிருக்கிறார்கள். அவர்தான் குளோபல் செய்தி ஆசிரியர் நடராசா குருபரனுக்கு உடனே செய்தி கொடுத்தார். நான் எதிர்பார்த்ததுபோலவே சற்றைக்கெல்லாம் என் கைதுச் செய்திகள் எரிக் சொல்கைம் உட்பட எனது சர்வதேச நண்பர்கள் பலரை உலுப்பிவிட்டது.

    என்னைக் கைது செய்தவர்களையும் செய்தி பரவிய வேகம்  ஆச்சரியப்படவைத்தது.

    என் கைபேசி தலைமை அலுவலகத்தில் இருந்து ஒட்டுக்கேட்க்கும் புலநாய்வுப்பிரிவினரால் கட்டுப்படுத்தப்பட்டது. . அவர்கள் விரும்பியபோது என் தொடர்புகளை அவர்கள் துண்டித்தார்கள்.  

    நான் அன்று கோபப்படாமல் மெதுவாக பேசி இருந்தால் இலகுவாகத் தனிமைப் படுத்தப் பட்டிருப்பேன்..

    என்னுடைய கோபமும் சத்தியமும் இராசதந்திரமும்தான் என்னைக் காப்பாற்றிது. உங்கள் கூற்று அபத்தமானது நண்பரே.

    இனி யாழ்வர இரண்டு வாரங்களுக்கு பிறகுதான் நேரம்கிடைக்கும்.  அப்போது அவசியமானால் மேலதிகமாக எழுதுகிறேன்.

    அதுவரை நன்றிகூறி விடைபெறுகிறேன்..

    2 வாரங்களின்பின்னர் சந்திக்கிறேன்.

    அப்போது உருப்படியான கருத்துக்களுக்கு பதிலளிப்பேன். அவதூறுகளை பொருட்படுத்த மாட்டேன்..

     

  5. என் விடுதலையை விரும்பி கருத்துத் தெரிவித்த அனைத்து யாழ்க்கள தோழ தோழியர்களுக்கும் என்றென்றும் கடமைப் பட்டிருக்கிறேன்.

    நன்றி. என்னைக் கொச்சைப் படுத்தியவர்கள்மீதும் வருத்தமில்லை.

     

    இனி சில வாரங்களின்பின் யாழ்களத்துக்கு வரும்போது உங்களோடு தொடர்புகொள்வேன். நன்றி  - வ.ஐ.ச.ஜெயபாலன் 

    • Like 1
  6. முதல் அறிக்கை FIRST REPORT

     

    https://www.facebook.com/jaya.palan.9

    நான் நோர்வே வந்து சேர்ந்திருக்கிறேன். 

    நவம்பர் 6ம் திகதி அம்மாவின் நினைவுதினம். நவம்பர் 8ம் திகதி பின்வரும் சேதியை என் முகநூலில் வெளியிட்டேன்.
    . ''இன்று என் அம்மாவின் 7வது வருட நினைவுதினம். அம்மாவின் மரணத்துக்கு முதல்நாள் தொலைபேசியில் பேசியபோது எனக்கு என்ன நடந்தாலும் வந்துவிடாதே என கத்தி சத்தியம் வாங்கினார். இன்று அம்மாவின் நினைவுதினம். அம்மாவின் சமாதிக்கு வணக்கம் செலுத்தும் ஆசை மீண்டும் மூண்டெரிகிறது. இராணுவ முகாமாக இருக்கும் எங்கள் பண்ணைக்குள் அம்மாவின் சமாதி இருக்கு. இந்த வாரம் அம்மாவின் சமாதியில் என் கண்ணீர் மலர்வளையம் சாத்தி நம் அம்மாக்களின் வாழ்வை காவியமாக எழுத ஆரம்பிப்பேன். இதை தவிர்த்திருந்து வேறு என்ன பெரிய சாதனை செய்து விடப்போகிறேன்' 

    நான் ஒரு முடிவு எடுத்துவிட்டால் அஞ்சுகிறவனல்ல. அது என் தோழர்களுக்கு தெரியும். 1967ல் சாதிப்போராட்டக் களங்களில் தோழனான புதுவை இரத்தினதுரை என்னை எப்போதும் தேச பக்தனும் கலகக்காரனுமான கவிஞன் என்றே அழைப்பார். 

    1984ல் புளொட் இயக்கம் பொட்டம்மானை பட்டுக்கொட்டையில் வைத்துக் கைதுசெய்தபோது நான் முகுந்தனில் அலுவலகத்துக்குள் புகுந்து செய்த கலாட்டாவை அப்போது அங்கிருந்த தோழர் சிவா சின்னப்பொடி அறிவார். கொலைகாரன் டம்பிங் கந்தசாமியிடம் என்னைக் கொல்ல சொல்வதா அல்லது பொட்டம்மானை விடுதலை செய்வதா என முதலில் குழம்பிய முகுந்தன் இறுதியில் பொட்டம்மானை விடும்படி உத்தரவிட்டார். இதை இறுதிவரை பொட்டம்மான் மறக்கவில்லைனிதை நான் அறிந்திருந்தேன்.

    1990ல் முஸ்லிம்களை குழப்புகிறேன் என்ற குற்றச்சாட்டில் மட்டக்களப்பில் வைத்து கரிகாலனும், டேவிட்டும் என்னை கடத்தினார்கள். முஸ்லிம் மக்கள் தொடர்பான என் நிலைபாட்டை மாற்றிக்கொள்ள மறுத்தேன். கருணா என்னை வந்து பார்த்தபோது வன்னிக்கு அறிவிக்காமல் எந்த முடிவும் எடுக்கக்கூடாது என சத்தியம் வாங்கினேன். ஒரிரு நாட்க்களின் பின்னர் கிரான் சுடலைக்கு மண்வெட்டி சகிதம் அழைத்துச் சென்றபோது இறுதி நேரத்தில் பொட்டம்மான் தலையிட்டு என்னை விடுவித்தார். 

    கருணா பிரிந்தபோது மட்டக்களப்பு போராளிகளை சுட பிரபாகரனுக்கு மக்கள் ஆணை இல்லை பிரபாகரன் அவர்களை வீடுகளுக்கு போகும்படி சொல்லல்லாம் என அறிக்கை வெளியிட்டேன். குளோபல் செய்தி நடராஜா குருபரன் இந்த அறிக்கையை உடனேயே சூரியன் எவ் பெம்மில் ஒலிபரப்பினார். வீரகேசரி வாரமலரும் அதனை வெளியிட்டது. பின்னர் வன்னிக்கு சென்றபோது உறவினர்களும் நண்பர்களும் செத்தவீடு கொண்டாடினார்கள். எனினும் வன்னியில் எனது நிலைபாட்டை ஏற்றுக்கொண்டார்கள். நானும் அவர்கள் கேட்ட சில உதவிகளைச் செய்தேன். இதுபோலத்தான் நான் இலங்கைக்கு போகும் முடிவையும் சென்ற 8ம் திகதி அன்று எடுத்தேன். தடுத்துவிடுவாள் என்பதால் என் பயணம் பற்றி இறுதிவரை மனைவிக்கும் சொல்லவில்லை. 

    நான் இலங்கை வரும் செய்தியை அறிந்து தோழர் தலைவர் ரவ்கக்கீம் என் கடவு சீட்டு இலக்கத்தை கேட்டு பெற்றுக்கொண்டார். விமான நிலையத்தில் சிக்கல் இருக்கவில்லை.
    கொழும்பிலிம் யாழிலும் பல நிகழ்வுகளுக்குக்குப் பின்னர் 
    22.11.13 மாலை ராணுவம் கைப்பற்றி வைதிருக்கும் எங்கள் குடும்பப் பண்ணையில் உள்ள எங்கள் அம்மாவின் சம்மாதிக்கு அஞ்சலி செலுத்த சென்றேன். மறுநாள் காலை முள்ளிவாய்க்கால் செல்ல திட்டமிட்டிருந்தேன்.

    புலனாய்வாளர் என் தொடர்புகள் கருத்துக்கள் என்னைச் சந்திப்பவர்கள் மற்றும் என் பயணத்தடங்கள்போன்ற சகலதையும் எனதும் என்னோடு தொடர்புகொள்கிறவர்களதும் மொபைல் போண்கள் மூலம் கண்காணித்து வந்துள்ளனர். 

    அம்மாவின் சமாதிக்கு 3 கிலோமீட்டர் முன்னே வன்னிவிழான்குளம் கோவில்முன்றலில் வைத்து இலங்கை பயங்கரவாத தடை பிரிவு (TID) என்னை தடுத்தது. சுற்றுலா விசாவில் குடிவரவு சட்டத்தைமீறி நாட்டுக்கெதிராக செயல்பட்டது இன நல்லிணக்கத்துக்கு பங்கம் விழைவிக்கும் வகையில் ஊடகங்களுக்கு பேட்டி கொடுத்தது என குற்றம் சாட்டினார்கள். 
    தமிழ் முஸ்லிம் மக்களை ஒன்றுபடுத்தி வடகிழக்கு மாகாணங்களில் போராடத்தை ஆரம்பிக்கும் நோக்கம் எனக்கிருக்கக்கூடும் என அவர்கள் அஞ்சினார்கள். 

    கைதா என கேட்டதற்க்கு தடுப்புக் காவல் என்றார்கள். அதனால் என் தொலைபேசியை அவர்கள் பறிக்கவில்லை. மேலும் என் தொலைபேசிதான் என் தொடர்பு வலைப்பின்னலைக் கண்காணிக்க அவர்களுக்குள்ள ஒரே சாதனமாகவும் இருந்தது. 

    நான் உறுதியாக அம்மாவின் சமாதிக்கு போகவேணும் என்றேன். சாத்தியமில்லை என்றார்கள். நான் என் உச்சத்தாயியில் சுடுகிறதென்றால் சுடு கொல்வதென்றால் கொல் அம்மாவின் சமாதிக்கு போகாமல் நான் எங்கும் வரமாட்டேன் என கத்தினேன். நான் எதிர் பார்த்ததுபோலவே சம்பவத்துக்குச் சாட்ச்சியாக என்னை நன்கறிந்த வன்னி விளான்குள மக்கள் வேலிகளுக்கும் வீதிக்கும் வந்துவிட்டார்கள். 

    மீண்டும் ரிடிஐ அலுவலர்கள் அம்மாவின் சமாதிக்கு போகமுடியாது என்றார்கள். நான் ஒன்றில் அம்மாவின் சமாதிக்கு போய்விட்டு விசாரணைக்கு வருகிறேன் அல்லது என்னைச் சுட்டுவிட்டு சடலத்தை விசாரணைக்கு எடுத்துச் செலுங்கள் என கத்தினேன். சம்பவம் நடந்துகொண்டிருக்கும்போதே வன்னிவிளான்குள மக்கள் நோர்வேயில் வசிக்கும் சுந்தரலிங்கம் கணபதிப்பிள்ளைக்கு தகவல் சொல்லிவிட்டார்கள். நல்லகாலமாக அவர் உடனேயே குளோபல் தமிழ் குருபரனுக்கு செய்தி கொடுத்துவிட்டார். நான் பசீர் சேகுதாவுத்துக்கு செய்தி சொன்னேன். சேதி உலகெல்லாம் பரவ ஆரம்பித்தது. இதுபற்றி ரிடிஐ அலுவலர்களுக்கும் தகவல் கிடைத்தது. அவர்கள் உறுதி தளர ஆரம்பித்தது. 
    இறுதியில் என்னை அம்மாவின் சமாதிக்கு அழைத்துச் செல்ல உடன்பட்டார்கள். முன்னர் இராணுவ முகாமாய் இருந்து தற்போது இராணுவ சிவில் பிரிவின் கட்டுப்பட்டில் இருக்கும் 
    என்கள் பண்ணைக்கு அழைத்துச் செல்லப்பட்டேன். அம்மாவின் சமதியை கண்டுபிடிக்க முடியவில்லை. ஒரு குறிப்பில் கற்பூரம் கொழுத்தி வணங்கினேன். பின்னர் என்னை விசாரணைக்காக வவுனியா அழைத்துச் சென்றார்கள்.

    வழியில் மாங்குளம் பொலிஸ் நிலையத்தில் ரக் வண்டியில் இருந்த என்னுடன் மாங்குளம் பொலிஸ் அதிகாரி முரட்டுதனமாக பேசினார். நானும் அதே பாணியில் பதிலளித்தேன். ஆனாலும் பபயங்கரவாத விசாரணைப் பிடரிவினர் (TID) அவரை என்னுடன் தொடர்ந்துபேச அனுமதிக்கவில்லை.

    சுந்தரலிங்கத்துக்கும் குளோபல் தமிழ் செய்தி ஆசிரியர் நடராஜா குருபரனுக்கும் நன்றி. வவுனியா செல்ல முன்னமே என் கைது சர்வதேச செய்தியாகிவிட்டிருந்தது பற்றி TID அலுவலகர்கள் ஆச்சரியமடைந்தார்கள். ஒரிரவு, ஒருகாலைப்பொழுது விசாரணைக்குப் பிறகு கொழும்பில் குடிவரவு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டேன். உடனே விடுதலை சாத்தியமில்லை என தோன்றியது.

    முதலில் நெஞ்சுவலியென்றதால் கழுபோவில வைத்தியசாலையில் தங்க வைக்கப்பட்டேன். மறுநாள் அங்குள்ள பொலிசார் எனக்கெதிராக நோயாளிகளை தூண்டி சதி செய்ததார்கள். அதிஸ்ட்டவசமாக அங்குவந்த குடிவரவு துறை அதிகாரி அமித் பெரரோ என்னை அங்கிருந்து குடிவரவு பிரிவின் வெளிநாட்டவர்களுக்கான தடை முகாமுக்கு அழைத்துச் சென்றார். அதனால்தான் இன்று உயிரோடு இருக்கிறேன்.

    என் விடுவிப்புக்கு வழி வகுத்த காரணிகள்.
    1. அமைச்சக வளமைக்கு மாறாக அரசு குற்றம் சாட்டியிருந்த நிலையில் அதை வலுவாக்கவேண்டிய நீதி அமைச்சர் ரவ் ஹக்கீம் அரசின் கருத்துக்கு எதிராக நான் குற்றமிழைக்கவில்லை என்ற நிலைபாட்டை துணிச்சலுடன் எடுத்தது.
    2. ராஜதந்திர வளமைக்கு மாறாக தோழர் எரிக் சோல்கைம் என்னை நியாயப்படித்தியதும். இலங்கை அரசுக்குச் சவாலாக உறுதியான எச்சரிக்கை விடுத்ததும். இது போர்குற்ற விசாரணை பற்றிய ஐநா மனித உரிமை ஆணையக கூட்டம் இடம்பெறவுள்ள சூழலில் இலங்கைக்கு ஒரு அதிற்ச்சி வைத்தியமாகும். 
    3. பசீர் சேகுதாவுத்தின் அயராத ராசதந்திர முன்னெடுப்புகள். தயங்கிய இலங்கைப் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாயவிடம் ஜெயபாலனை விடுங்கள் அவன் பொய்சொல்லமாட்டான். பாதுகாவலர்கள் தன்னைக் கொடுமைப் படுத்தியதாக பொய்ப்பிரசாரம் செய்ய மாட்டான் என பசீர் என்னைக் கேட்க்காமலே உத்தரவாதம் கொடுதிருக்கிறான். 
    4.நோர்வீஜிய அரசின் உறுதியான நடவடிக்கைகள் 
    5.இலங்கை ஒருபோதும் எதிர்பார்க்கத அளவுக்கு சர்வதேச ரீதியாக ஊடகங்களும் கலைஞர்களும் மனித உரிமை ஆர்வலர்களும் முன்னெடுத்த கிளர்ச்சிகள். இதில் விரைந்து செயல்ப்பட்ட குருபரனும் தமிழ உறவுகளும் புலபம்பெயர்ந்த சமிழர்களும் பாசன மற்றும் மஞ்சுள வெடிவர்த்தன தலைமையில் சிங்கள தோழர்களும் முன்னணி வகுத்தார்கள்.
    குமரகுருபரன் எனது மருமகன் ரமணன் தமிழக தோழன் டாண் அசோக், தமிழக மற்றும் புலம்பெயர் உறவுகள் பாசன் மஞ்சுள வெடிவர்த்தன போன்ற சிங்கள தோழர்கள். எனது தம்பி பாரதி மக்கள் ஆதி இளவேனில் மனைவி வாசுகி எல்லோருக்கும் என் நன்றிகள். 
    விரைவில் விரிவாக எழுதுவேன்.

     

    https://www.facebook.com/jaya.palan.9

     

    கவிஞர் வ.ஜ.ச. ஜெயபாலன் நாடுகடத்தப்பட்ட பின்னர் வழங்கிய நேர்காணல் - நோர்வே தமிழ் 3 வானொலி (27.11.2013) தொடர்புகளுக்கு: radiotamil3@gmail.com

    http://www.youtube.com/watch?v=4dOgJclq0Bk&feature=youtu.be

     

     

    நான் எழுத வேன்டிய பலவற்றை எழுத நாளாகும். என்னை சந்தித்த எனக்காக பாடுபட்ட பலரின் பாதுகாப்பு பற்றி முதலில் உறுதி செய்யவேன்டியுள்ளது. அதற்க்கு எனக்கு 2 வாரமாவது வேன்டும். அதன்பின்னர் என்னுடைய 2ம் அறிக்கையை எழுதுவேன். 

     

  7. எனை வாழ்த்திய அன்புள்ளங்கள் சுபேஸ், புங்கைஊரான், நந்தன், கறுப்பி, தமிழ்ச்சூரியன், துளசி, விசுக்கு,தமிழரசு, இளம்கலைஞன், தப்பிலி அனைவருக்கும் என்  அன்பும் நன்றிகளும். விரைவில் நம் மண்ணில் சந்திப்போம் என்கிற நம்பிக்கையுடன் - ஜெயபாலன்

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.