Jump to content
களத்தில் உள்நுழையும் வழிமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலதிக விளக்கங்களிற்கு

poet

கருத்துக்கள பார்வையாளர்கள்
 • Posts

  2,080
 • Joined

 • Last visited

 • Days Won

  7

Everything posted by poet

 1. எங்கள் பிள்ளைகளைகளுக்கு உண்மையைச் சொல்லி வளர்ப்போம். . NO TO TAMIL NATIONAL ANTHEM. "SRI LANKA IS ONLY FOR SINHALESE" - 1956, 1958, 1983 AND NOW IN 2020. எனது Jaya Palan பதிவு தொடர்பான முகநூல் விவாதங்கள். . M YM Siddeek ஒரு சாண் ஏற்றம் ஒரு முழம் இறக்கம். அப்போதய தமிழ் உரிமை ப்போராளிகள் பலர் தம் தாய்மொழிக்காக உயிரை விட்டார்கள். ஒருசிலர் இன்னும் உயிருடன் இருக்கின்றனர். எதிர்க்கட்சி த்தலைமை கதிரையை சூடேற்றி அரச சௌபாக்கியங்களை அனுபவித்த வர்கள் ஏன் வாயடைத்தவர்களாக காணப்படுகின்றனர்? தமிழ் பேசும் சமூகங்களை ஒன்றை ஒன்று பகைக்க வைத்து தமிழ் பேசும் சமூகங்களின் அடப்படை உரிமை களைக்கூட பறிப்பதற்கான சூழ்ச்சி க்குள் அகப்பட்டு தமிழ் பேசும் சமூகங்கள் இன்று எல்லா உரிமைகளையும் இழந்து நிற்கின்றன. தமிழர் விடுதலை ப்போராட்டம் உலக்கைதேய்ந்து உளிப்பிடியான கதையாகி தமிழ் த்தாயகத்திற்காகப்போராடிய தமிழ் மக்கள் பேரின வாத சக்தி களுடன் கைகோர்த்து ஒரு பிரதேச செயலகத்திற்காக களம் இறங்கி ய அசிங்கத்தை அண்மையில் கண்டோம். . Nazeer Haji ஈழம் கேட்டாவார்கள் இன்று தமிழில் தேசியகீதம் இல்லை என போராடுகிறார்கள். அவர்களிடாம் ஆயுதமும்., இயக்கங்களும் இருந்த போது முஸ்லிம்களை மானுடப்பிறவிகளாககூட பார்த்தார்களா? இன வெறி பிடித்தாடினார்கள். இன்றும் கூட மனச்சாட்சியுடன் நடக்கின்றார்களா? முஸ்லிம்களை பகைக்க வில்லை என்றிருந்தால் எல்லாம் கிடைத்திருக்கும். . Jaya Palan : இனக்கொலையின்பின் சம்பந்தர் இல்லையெனில், பதிலாக இன்னொருவர் இருந்திருந்தால் தமிழர் தேசிய கட்சிகளின்பின் சரணடைவதைத்தவிர நிமிர வழி இருந்திருக்காது நண்பர்களே. இன்று சர்வதேசிய அழுத்தம் முதன்மை பெற்றிருக்கு. சர்வதேச அழுத்தமும் செல்வாக்கும் சிறப்பாக வளர்ந்திருக்கு. அவர் அமைச்சுபதவியை ஏற்க்கவில்லை. எதிர்கட்ச்சி பதவியை தமிழரது சமதத்துடனும் சர்வதேச ஆதரவோடும்தான் ஏற்றார். அதனால்தான் போரில் இரத்த சகதியில் கிடந்த மக்களை தேசிய கட்ச்சிகளில் சரணாகதி அடையாமல் தடுத்து நிலம் மிட்ட்பு சர்வதேச அழுத்தம் போன்ற காரியங்களை செய்யக்கூடியதாக இருந்தது, யில் . “பேரின வாத சக்தி களுடன் கைகோர்த்து ....களம் இறங்குதல்” ஒரு தரப்பின் மீது மட்டும் வைக்கக்கூடிய குற்றச் சாட்டா? கழுகொட்டியா நாட்களில் பாண்டியூரான் மகன் பற்றி உன்னிடம் தொலைபேசியில் விசாரித்தபோது நீயும் மனம் நொந்து போயிருந்தாயல்லவா? எல்லா இழிவுகளும் எங்களோடு மறைய வேண்டும் தமிழரோ முஸ்லிம்களோ நாம் நமது பிள்ளைகளுக்கு நாம் உண்மையைச் சொல்லி வளர்க்க வேண்டும். அல்லது நாம் அவர்களையும் பயங்கரவாதத்தை நோக்கி தள்ளியவர்களாக இருப்போம். . தமிழ் முஸ்லிம் உறவைப் பொறுத்து 1970 பதுகளில் இருந்தே கலவர சூழல் முழைவிடுகிறது. உதரணத்துக்கு மன்னார் முஸ்லிம் கிரமங்கள் அம்பாறையில் வீரமுனை போன்ற கிராமங்கள். அதன் அடிப்படை. தமிழர் மத்தியில் செல்வநாயகத்தின் அணுகுமுறைக்குப் பதைலாக தமிழ் மைய அரசியல் உருவானதும் முஸ்லிம்கள் மத்தியில் சவூதி அரேபிய செல்வாக்கில் முஸ்லிம் மைய வாதமும் 1970 களில் உருவானதும் அடிப்படைக் காரணங்களாகும். இது 1990களில் இயக்க அரசியல் வளற்சியில் மோசமடைகிறது. 1985 அமபாறை மாவட்டத்தில் மருதமுனை தவிர்த்து ஏனைய தமிழ் கிராமங்கள் எரியூட்டப்பட்ட கலவரத்தின்பின் “முஸ்லிம் என்று சொல்ல வெட்கி தலை குனிகிறேன்” என தோழர் தலைவர் அஸ்ரப் மனம் நொந்து அறிக்கைவெளியிட்டார். 1990 களில் வடபகுதி முஸ்லிம் வெளியேற்றம்போன்ற பாதகங்களைப் பார்த்து ”அழியட்டும் எனது இனம். அழியட்டும் என் கவிதை. அழியட்டும் எனது தமிசழ்” என நான் மனம் நொந்து அறம் பாடினேன், இரண்டும் இரண்டு வரலாற்றுக் கல்வெட்டுகள். . தோழர் M YM Siddeek. நண்பர் Nazeer Haji, எங்கள் பிள்ளைகளுக்கு நாங்கள் சொன்ன பொய்கள் போதும். கலவரம் கொலை வீடெரிப்பு பயங்கரவாத தற்கொலைத் தாக்குதல் என நிறைய கண்டுவிட்டோம். நண்பர்ர்களே, எங்கள் பிள்ளைகளுக்கு நாம் உண்மையை சொல்லி வளர்க்கவேணும். இல்லாவிட்டால் அவர்களுக்கும் போராட்டத்துக்கும் பயங்கரவாதத்துக்கும் வித்தியாசம் தெரியாமல் போய்விடும்.
 2. " ”இந்த நாடு சிங்களவரது. தேசியகீதம் இனி தமிழல் இல்லை” "SRI LANKA IS ONLY FOR SINHALESE" - 1956, 1958, 1983 AND NOW IN 2020. . . NO TO TAMIL NATIONAL ANTHEM - PRESIDENT (Sri Lanka’s Constitution provides for the singing of the national anthem in both Sinhalese and Tamil. ) ”இந்த நாடு சிங்களவரது.” என 1956ல் பண்டார நாயக்க எங்கள் தந்தையருக்குச் சொன்னார். :இந்த நாடு சிங்களவரது” என 1983ல் ஜே.ஆர் எங்கள் தலைமுறைக்குச் சொன்னார். இப்ப 2020பதில் புதியவர் மீண்டும் ”இந்த நாடு சிங்களவரது” என எங்கள் பிள்ளைகளுக்கு சொல்லியிருக்கிறார். சாம்ராட்சியங்களதும் தேசங்களதும் குப்பைமேட்டில் நிமிரும் புதிய புதிய தேசங்களின் உலகம் இதனைக் கேட்டு வாய்விட்டுச் சிரிக்கிறது. உலக வரலாறோ எல்லா தடவையும் மீண்டும் மீண்டும் பேரினமே அதிஸ்ட்டசாலியாக இருக்க முடியாது என்கிறது. புதியவரே சிந்தியுங்கள். பாவம் இலங்கை.
 3. தமிழர் மத்தியிலும் இராஜதந்திரிகளா? மகிழ்ச்சி CVK . ஆனாலும் உங்கள் சுயநலம் இராஜதந்திரத்தை வியாபாரமாக்குவது நெருடுது. பாவம் மாவை. அதைவிடப் பாவம் ஈழத் தமிழர்கள். CVK அவர்களே, மாவைக்குப் பதிலாக தமிழரசுக் கட்ச்சித் தலமையை யாருக்கோ கொடுத்து கைமாறாக முதலமைச்சர் பதவியை அல்லது 2வது அதிகார பீடத்தை அடையும் உங்கள் நகர்வு என்பது நல்ல லாபமுள்ள வியாபாரம்தான்.
 4. எங்கள் பிள்ளை திக்சிகாவின் சிறுவயது மரணம் துயர் தருகிறது. தலை பணிந்து அஞ்சலிக்கிறேன். நண்பர் nedukkalapoovan சொல்வதுபோல நமது இளையவர்களை பரவலாக புற்றுநோய் தாக்குவது உண்மையாயின் அது எல்லோராலும் உடனடியாக கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய விடயமாகும். அரை நூற்றாண்டுக்கும் மேலான ஆய்வுகள் இலங்கை தமிழர் குறிப்பாக யாழ் தமிழர் மத்தியில் தற்கொலை விகிதம் மிக மிக உயர் மட்டத்தில் இருப்பது உறுதி செய்யபட்டுள்ளது. இத்தகைய விடயங்களையிட்டு ஒரு இனமாக நாம் தீவிர கவனம் செலுத்தவேண்டியது அவசியமாகும்.
 5. உங்கள் துயரம் எங்கள் யாழ் குடும்பத்தின் துயரம். நிலாமதி, உங்கள் துயரை நானும் யாழ் குடும்பத்தினருடன் சேர்ந்து பகிர்ந்து கொள்கிறேன். உங்களுக்கும் உங்கள் தம்பியின் மனைவி மக்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்கள்.
 6. மேற்படி பதிவுக்கு நன்றி. இக்கட்டுரையாளருக்கும் என் நன்றிகள். இக்கட்டுரையாளர் போன்ற இளம் ஆய்வாளர்களோடு சேர்ந்து எமது எதிர்கால சந்ததிக்காக போராட்டத்தின் இராணுவ வரலாற்றை நேர்மையுடன் பதிவு செய்யும் அவா மேலெழுகிறது. நாம் அறிந்த சம்பந்தப்பட்ட பகுதிகள் பதிவு செய்யபடாமல் அழிந்து கொண்டிருப்பது கொடுமையாகும். இத்தகைய முயற்ச்சிகளில் பங்குபற்றி செயல்பட உதவுவது தொடர்பாக புலம் பெயர்ந்த தமிழர்கள் முடிவுவு எடுக்க வேண்டும். 1995 க்கும் 2000 க்கும் இடையிலான காலக்கட்டத்தில் ஒரு இராணுவ புவியியல் ஆய்வு மாணவனாக விடுதலைப்புலிகளின் இராணுவ நகர்வுகளில் அதிக ஆர்வம் காட்டினேன். பதிலுக்கு இயக்கம் என் விமர்சிக்கும் உரிமையை அங்கீகரித்தது. குறிப்பாக, 1987 களில் இருந்தே நேரடியாகவும் பகீரங்கமாகவும் அரசியல் மனித உரிமைகள் தொடர்பான விமர்சனங்களையும் நேரடியாகவும் இரகசியமாகவும் இராணுவம் சம்பந்தபட்ட விமர்சனங்களையும் கருத்துக்களையும் முன் வைத்து வந்திருக்கிறேன். ஆனால் 1995ல் இயக்கம் என் விமர்சன உரிமையை முழுமையாக ஏற்று அங்கீகரித்தது. நமது இராணுவ அரசியல் வரலாறு முழுமையாக எழுதப்பட வேண்டும் என்கிற துயரத்தோடுதான் வாழ்கிறேன்.. எனக்கும்கூட அந்த வரலாற்றை பதிவு செய்யும் பொறுப்புள்ளது. ஆனால் பல தேசங்களில் சிதறியுள்ள போராளிகளையும் வளவாளர்களையும் சந்தித்து முழுமையான ஆய்வுகள் செய்ய அதற்காண பணி வலைப்பின்னலோ - நெட்வேக் - வளங்களோ இப்போது என்னிடம் இல்லை. இறுதி யுத்தத்தின்பின் குறிப்பாக ஒரு தசாப்தத்தின் பின் இக்கட்டுரையை வாசிக்கும்போது மகிழ்ச்சியாக உள்ளது. இக்கட்டுரை ஆசிரியர் போன்றவர்களோடு சேர்ந்து இராணுவ வரலாற்றை பதிவு செயும் வேலைகளில் ஈடுபட விருப்பம்.
 7. மனுசாவுக்கு என்னுடைய நல்வாழ்த்துக்கள். துருபனையும் வாழ்த்துகின்றேன். உங்கள் எங்கள் அன்பு ஆற்றல் ஆலோசனை வருமானம் தாயகத்தில் அல்லலுறும் நம்மவர்களுக்கும் பயன்பட வேண்டும். அவர்கள் போராடியதால் இரத்தம் சிந்தியதால் மட்டுமே உங்கள் எங்கள் குடும்பங்கள் சுவிஸ் குடிமக்களாகும் வாய்ப்பு கிடைத்தது. புலம் பெயர்ந்த நாம் ஈழ தாயகத்துக்கு இரத்தக்கடன் செலுத்த வேண்டியவர்கள் என்பதையும் ஒருபோதும் மறக்கக்கூடாது. மறக்க மாட்டீர்கள் என்கிற நம்பிக்கையுடன் மீண்டும் உங்களை வாழ்த்துகிறேன்.
 8. எனக்கு இப்போது அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது - பாராளு மன்றத்தில் ஹக்கீம். - செய்தி . . 2000 வசந்த காலமென ஞாபகம். இரவிரவாக தோழர் தலைவர் அஸ்ரப்புடன் பேசிக்கொண்டிருந்தேன்.அதிகாலைதான் என்னை என் விடுதிக்கு அனுப்பி வைத்தார். மாலை நோர்வேக்கு செல்லும் அவசரத்தில் இருந்தேன். ஆனால் சற்று நேரத்தில் தோழர் அஸ்ரப் கார் அனுப்பி திரும்பவும் என்னை வீட்டுக்கு வரும்படி அழைத்தார். மாலை என்னை விமான நிலையம் அனுப்பிவைப்பதாக கூறி அதிகாலை தோழர் தலைவர் அஸ்ரப் அவர்கள் என்னை மாவனல்ல அழைத்துச் சென்று காலை விருந்தின்போது தனது வலது கையென தோழர ரவூப் ஹக்கீமை எனக்கு அறிமுகம் செய்து வைத்தார். அதற்க்கு கொழும்பில் முதல்நாள் தனது வீட்டில் வைத்து தோழர் பசீர் சேகு தாவுதை எனது கை வாழ் என அறிமுகம் செய்திருந்தார். காலை மாவனல்லவில் இருந்து விடைபெறும்போது இறுதிச் சந்திபென நான் உணரவில்லை, . தோழர் தலைவர் அஸ்ரப் அவர்களின் வலது கையும் கைவாழும் பிரிந்தபோது என்னைவிட யாரும் அதிகமாக கவலைப்பட்டிருக்க மாட்டார்கள். அவர்கள் இருவரும் தனிப்பட்ட ரீதியிலாவது ஒருவருக்கு ஒருவர்பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதுதான் தோழர் தலைவர் அஸ்ரப்பின் விருப்பமாக இருந்திருக்க வேண்டும். இன்றைய நெருக்கடி சேதி முதலில் எனக்கு இச்சம்பவத்தைத்தான் நினைவு படுத்தியது. . ஒருபோதும் தோழர் ரவூப் ஹக்கீம் வன்முறையை ஆதரிப்பவரல்ல. ஒரு தலைவர் என்கிற முறையில் அவர் எல்லோருக்கும் நல்லது செய்ய விரும்புகிறவர். அவர்மீது அவதூறுகூறி அரசியல் பழிவாங்கும் முயற்ச்சிகள் ஒருபோதும் வெற்றிபெறாது. இந்த தருணத்தில் தோழர் பசீர், அன்பர் சேகு இசத்தின், மதிப்புக்குரிய அதாவுல்லா உட்பட தோழர் அஸ்ரப்பின் வழிவந்த அனைவரும் தோழர் ரவூப் ஹக்கீம் அவர்களுக்கு இளைக்கப்படும் அரசியல் பழிவாங்கலுக்கு அநீதிக்கு எதிராக குரல் கொடுக்க வேண்டும். செல்வநாயகம் அவர்களது மரபையும் முன் உதாரணங்களையும் பின்பற்றி சம்பந்தர் ஐயாவும் கூட்டமைப்பும் தோழர் ரவுப் ஹக்கீம் அவர்களுக்கு துணை நிற்க்க வேண்டும் என கேட்டுக்கொள்கின்றேன். . இறுதியில் தர்மம் வெற்றி பெறும். . .
 9. மனதை கிளரச்செய்யும் பதிவுக்கு nunavilan க்கும் யாழ் இணையத்துக்கும் நன்றி.
 10. எனது முதலாவது கவிதை ’பாலிஆறு நகர்கிறது’ (1968. ) இரண்டாவது கவிதை (நம்பிக்கை 1968) இரண்டுமே புரட்ச்சியில் அல்லது தமிழர் விடுதலைப் போராட்டத்தில் வன்னிக்காடு மையமாக அமையும் என்பதை இராணுவ புவியியல் அடிப்படையில் இனம்கண்டு முன் மொழிந்த கவிதைகளாகும். . நம்பிக்கை.. வ.ஐ.ச.ஜெயபாலன். . துணை பிரிந்த குயில் ஒன்றின் சோகம்போல் மெல்ல மெல்லக் கசிகிறது ஆற்று வெள்ளம். காற்றாடும் நாணலிடை மூச்சுத் திணறி முக்குளிக்கும் வரால் மீன்கள். ஒரு கோடை காலத்து மாலைப் பொழுது அது. . என்னருகே வெம் மணலில் ஆலம் பழக் கோதும் ஐந்தாறு சிறு வித்தும் காய்ந்து கிடக்கக் காண்கின்றேன். என்றாலும் எங்கோ வெகு தொலைவில் இனிய குரல் எடுத்து மாரிதனைப் பாடுகிறான் வன்னிச் சிறான் ஒருவன். . 1968 (வன்னி.இலங்கை) *** 42 . நகர்கிறது பாலி ஆறு - 50 வருடங்களின் முன்னர் வன்னிக் காடுகள் பொது உடமைப் புரட்சியின் அல்லது தமிழர் விடுதலைப் போராட்டத்தின் மையமாகும் என்பதை முன்னுணர்ந்து எழுதப்பட்ட என் முதல் கவிதை . நகர்கிறதுபாலி ஆறு வ.ஐ.ச.ஜெயபாலன் .* அங்கும் இங்குமாய் இடையிடையே வயல் வெளியில் உழவு நடக்கிறது இயந்திரங்கள் ஆங்காங்கு இயங்கு கின்ற ஓசை இருந்தாலும் எங்கும் ஒரே அமைதி . ஏது மொரு ஆர்ப்பாட்டம் இல்லாமல் முன் நோக்கி பாலி ஆறு நகர்கிறது. ஆங்காங்கே நாணல் அடங்காமல் காற்றோடு இரகசியம் பேசி ஏதேதோ சலசலக்கும். எண்ணற்ற வகைப் பறவை எழுப்பும் சங்கீதங்கள். துள்ளி விழுந்து 'துழும்' என்னும் வரால்மீன்கள். . என்றாலும் அமைதியை ஏதோ பராமரிக்கும் அந்த வளைவை அடுத்து கருங்கல் மறைப்பில் அடர்ந்துள்ள நாணல் அருகே மணற் கரையில் இரு மருங்கும் ஓங்கி முகடு கட்டி ஒளி வடிக்கும் மருத மர நிழலில் எங்கள் கிராமத்து எழில் மிகுந்த சிறு பெண்கள் அக்குவேறு ஆணிவேறாய் ஊரின் புதினங்கள் ஒவ்வொன்றாய் ஆராய்ந்து சிரித்து கேலி செய்து சினந்து வாய்ச்சண்டை யிட்டு துவைத்து நீராடிக் களிக்கின்றார் . ஆனாலும் அமைதியாய் பாலி ஆறு நகர்கிறது அந் நாளில் பண்டார வன்னியன் படை நடந்த அடிச் சுவடு இந்நாளும் இம்மணலில் இருக்கவே செய்யும் அவன் தங்கி இளைப்பாறி தானைத் தலைவருடன் தாக்குதலைத் திட்டமிட்டு புளுதி படிந்திருந்த கால்கள் கழுவி கைகளினால் நீரருந்தி வெள்ளையர்கள் பின் வாங்கும் வெற்றிகளின் நின்மதியில் சற்றே கண்ணயர்ந்த தரை மீது அதே மருது இன்றும் நிழல் பரப்பும் . அந்த வளைவுக்கு அப்பால்அதே மறைப்பில் இன்றும் குளிக்கின்றார் எங்களது ஊர் பெண்கள் ஏது மொரு ஆர்ப்பாட்டம் இல்லாமல் பாலியாறு நகர்கிறது. . 1968 (வன்னி, இலங்கை)
 11. மன்னிக்கவும் விசுக்கு. தவறுக்கு வருந்துகிறேன். கற்புள்ளவர் பட்டியலில் நான் நிழலி மட்டுமல்ல நண்பர் விசுகு வும் இருக்கிறார். நண்பர் விசுகு வோடு சேர்த்து உலகில் மொத்தமாக இரண்டரை கற்புள்ளவர்கள் இருக்கிறோம்.
 12. எல்லா துயரங்களின் மத்தியிலும் எங்கள் கலாச்சார அடையாளங்களை மறைக்காமல் இருப்பதும் நமது பண்பாட்டின் கொடியை உயர உயர ஏற்றுவதும் மிக மிக முக்கியம். நாம் ஒருவர் என்பதை நாம் தலைபணிய மாட்டோம் என்பதையும் நாம் நீதியும் சமத்துவமும் உள்ள சமதான சகவாழ்வுக்கு ஆதரவானவர்கள் என்பதையும் வெளி உலகுக்கும் நமக்கும் ஒருக்கும் தரப்பை சேர்ந்த மக்களுக்கும் உணர்த்த நமது கலாச்சாரத்தை உறுதியாகக் கடைப்பிடிப்பதும் உயர்த்துவதும் முக்கியமான வழியாகும். எந்த நெருப்பு எமைச் சூழ்ந்தாலும் எமது கலைகளின் கொடியை எமது கலாச்சாரத்தின் கொடியை எமது மொழியின் கொடியை மேலும் மேலும் உயர்த்துவோம்.
 13. கவிஞரே உங்களுக்கும் எனது அன்பான புத்தாண்டு வாழ்த்துக்கள்
 14. MEERA உங்கள் விருந்தோம்பும் பண்புக்கு தலை பணிகிறேன். உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் என் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்
 15. 1989 இலையுதிர்கால முடிவில் நான் ஒஸ்லோ நகரில் இருந்தேன். விடைபெறும் இலையுதிர்காலம் கடைசி மஞ்சள் இலைகளை உதிர்த்தது. உள்ளே நுழையும் கூதிர் காலம் ஆரம்ப வெண்பனியை பெய்தது. பெரும்பாலான பறவைகள் குளிருக்குத் தப்பி என் தாய்நாட்டின் திசையில் பறந்துவிட்டன. மக்பை என்னும் காக்கை இனப்பறவைகள் மட்டும் என் அறை சன்னலுக்கு வெளியே அடிக்கடி தோன்றி வெண்பனியில் அலைந்தன. உதிரும் இலைகளும் வாட்டும் குளிரும் மனசை நசிக்க நாட்டேக்த்தில் உளன்ற நாட்க்கள் அவை. அந்த நாட்க்களில்தான் இந்தக் கவிதையை எழுதினேன். இந்த புகழ் பெற்ற கவிதை புலம்பெயர்ந்த தமிழர் பற்றிய கட்டுரைகளில் அடிக்கடி எடுதாளப்படுகிறது. . * இலையுதிர்கால நினைவுகள் - வ.ஐ.ச.ஜெயபாலன். * இன்பக் கனவுபோல் தோன்றி மறைந்தது கோடை. காற்றுக் குதிரைகளில் குளிர் சாட்டை சொடுக்கி வரும். வெய்யிற் சுகம் தேடி வடதுருவப் பறவைகளும் என் தாய்நாட்டின் திசை நோக்கி தங்களது சிறகசைக்கும். வான் நோக்கிக் கை உயர்த்தித் தொழுகின்ற கறுப்பர்களைப்போல் இலை உதிர்த்து நிற்க்கும் ஓக் மரங்களின் கீழே தனிதலையும் மக்பாய் இழிவாக எனை நோக்கும். ”மக்பாய்! மக்பாய்! எல்லாப் பறவைகளும் என்னுடைய தாய்நாட்டின் திசைகளிலே சூரியனைத் தேடிப் புலம் பெயரும் குளிர் நாளில் நீ மட்டும் இந்த துருவத்தில் தரித்ததென்ன?” மக்பையோ உனக்கிவைகள் புரியாது என்பதுபோல் தலை அசைக்கும். “எனக்கிவைகள் புரியாதா?” “உனகெப்படிப் புரியும்? துருவத்துப் பறவைகளே தேடுமுந்தன் தாய்நாட்டை குண்டி மண்ணைத் தட்டுதல்போல் தட்டிவிட்டு வந்தவன் நீ” மக்பை சொல் தீக்கோலாய் மனதில் குறிபோடும். “நில் மக்பை” என்றேன். ”நாமறிவோம் இலங்கைத் தமிழர் உங்கள் நாகரீகம் பிறருடைய பேச்சுச் சுதந்திரத்தை என்றேனும் ரசித்ததுண்டா நீங்கள்? என்றபடி மக்பை எட்டப் பறந்து செல்லும். வானில் ஒரு பரதேசிபோல் குளிர்ந்துபோன சூரியனின் பரிதாபம். மண்ணில் மஞ்சளாய் தலை நரைத்த மரங்களின்கீழ் பொன்னாய் இறகசைக்கும் வணத்துப் பூச்சியாய் பகட்டி பேர்ச் இலை பழுத்தல் ஒன்று புல்லில் தரை இறங்கும் ஒரு புது அகதி வந்துபோல். உலகெங்கும் உதிர்க்கும் வாழ்வை இழந்து வசதி பொறுக்குகின்ற மனிதச் சருகுகளாய் புரள்கின்றோம். என்ன நம் தாய்நாடு ஓயாமல் இலை உதிர்க்கும் உயிர்ப்பிழந்த முது மரமா? யாழ்நகரில் என் பையன் கொழும்பில் என் பெண்டாட்டி வன்னியில் என் தந்தை தள்ளாத வயதினிலே தமிழ்நாட்டில் என் அம்மா சுற்றம் பிராங்போட்டில் ஒரு சகோதரியோ பிரான்ஸ் நாட்டில் நானோ வழிதவறி அலாஸ்க்கா வந்துவிட்ட ஒட்டகம்போல் ஒஸ்லோவில் என்ன நம் குடும்பங்கள் காற்றில் விதிக் குரங்கு கிழித்தெறியும் பஞ்சுத் தலையணையா? பாட்டனார் பண்படுத்தி பழமரங்கள் நாட்டி வைத்த தோப்பை அழியவிட்டு தொலை தேசம் வந்தவன் நான். என்னுடைய பேரனுக்காய் எவன் வைப்பான் பழத் தோட்டம். கடந்த வசந்தத்தில் கின்னரங்கள் மீட்டி எழில்க் கன்னியர்கள் பாடுகின்ற களியாட்டரங்குகளில் கிண்ணங்கள் கொஞ்ச, மங்களம்கூறி மனமுடைந்தேன் பரதேசி. இது இயற்கையே விரக்தியுறும் இலையுதிர் காலம். இனி நீர்க்கூடக் கல்லாகும் நீண்ட குளிர்காலம். இன்னும் எத்தனை நாள் இந்துக் கடல் மடியில் வாடையும் தென்றலும் மீட்ட இசைக்கின்ற மரகத வீணையென. வடகிழக்காய் நீண்ட என் தாய்நாட்டை நெஞ்சில் சுமந்துநான் ஏங்குவது? நாட்டேக்கம் என் உயிரை நஞ்சாய் சமிக்கிறதே. நெஞம் கலங்காதே என்றபடி நெருங்கி வந்த மக்பை ”அதோ தெரியுது பார்” என்று விமான நிலையத்தின் வழிகாட்டும். 1989.
 16. தமிழ் சிறி நண்பா, பொங்கல் பொதி எனக்கு பயன்படாது. தயவு செய்து “காற்றினிலே வரும் கீதம்” என பாடியபடி ஒருவர் பொங்கல் பொதியை தேடுகிறாராம். தயவு செய்து அவருக்கே அனுப்பிவிடுங்க.
 17. மிகவும் நன்றி தம்பி நிழலி. தம்பி, “எத்தனையோ மேடுபள்ளம் வழியிலே உன்னை இடறவைத்து தள்ளப்பார்க்கும் குழியிலே. அத்தனையும் தாண்டிக் காலை முன்வையடா. அஞ்சாமல் கற்பினிலே கண்வையடா” என்ற திருக்குறள்படி வாழவும். தம்பி. ஒரே ஒரு முறை வாழும் இந்த வாழ்வில் உயிரிலும் மேலான கற்பையும் இழந்துவிட்டால் நமக்கு என்ன மிஞ்சும்? தம்பி கற்ப்பு விடயத்தில் இறுதிவரை அண்ணனைப்போல புத்தியாய் நடக்கவும்.
 18. அலைகடல் வற்றினாலும் அன்புக்கடல் வற்றாத அன்புத் தம்பி suvy க்கு, நலம் நலமறிய ஆவல். உங்களுக்கு எழுதிய பதிலில் விலாசத்தை குமாரசாமி என தவறாக எழுதி போஸ்ட் செய்துவிட்டேன். கடிதத்தை அவர் திறந்திருந்தால் சண்டை போடவேண்டாம். அவர் அவசரப்பட்டு திறந்திருந்தால் கோபிக்க வேண்டாம். . கடித்ததை குமாரசாமியிடம் பெற்றுக்கொள்ளவும்.
 19. Kavi arunasalam என்னை விழையாட்டுக்கும் தனிமைப் படுத்தி விடாதீங்க. “திரு திரு” அல்ல திரு திருமதி என்று எழுதுங்க. நெஞ்சு நோகுது. கற்புள்ளவர்களுக்குத்தான் என் வேதனை தெரியும் Kavi arunasalam நீயுமா ராசவன்னியன்? இப்படிக் கேலிக்குக்கூட இன்னொருத்தியை அதுவும் என்னோடு இணைத்துப் பேசலாமா? ......
 20. ஆமாம் suvy முதல் முதல் திருடிய காரணத்தால் அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் முழிக்கிறேன். ஒரு திருத்தம் Paanch ”திரு திருமதியென திருட்டு முழி தெரிகிறது” என்று இருக்க வேண்டும்.
 21. இருக்காதா பின்னே. கற்புள்ளவனை தேடினா நான் மட்டும் ஒன்னே ஒன்னு என தனியா நிற்கிறேனே.
 22. நன்றி குமாரசாமி, நீங்கள் ”காலா லாலத்தில் ஒன்று இரண்டு இருதாலும்” என்று எப்படி இலகுவாக எழுதுகிறீங்க? அப்படி இருப்பது தப்பு என்று என் அம்மா சொல்லி சொல்லி வளர்த்திருக்கிறாங்களே. பின்னர் எப்படி சாமி. “ தப்பு பண்ணலாமா குமாரசாமி?”
 23. 1987ல் இடம்பெற்ற என் திருமண படத்தை மருமகள் தேவகி அனுப்பியிருந்தாள். படத்தில் திரு திருவென விழிப்பது நான்தான். முன்னர் திருமணம் செய்தோ பெண்களோடு நெருக்கமாக நின்றோ அனுபவம் இல்லாததால் திரு திருவென் விழிக்கிறேன். எனக்குப் பக்கத்தில் தெய்வத் திருமகள் காளி ஆத்தாமாதிரி விழாக் கோலத்தில் என் ஒரே ஒரு மனைவியான வாசுகி அவர்கள் நிற்கிறார்கள். ”என் கதை” என்கிற தலைப்பில் என் ஒரே ஒரு மனைவி வாசுகி பற்றி எழுதிய கவிதை; . . என் கதை வ.ஐ.ச.ஜெயபாலன் * அவள் தனி வனமான ஆலமரம். நான் சிறகுகளால் உலகளக்கிற பறவை. என்னை முதன் முதற் கண்டபோது நீலவானின் கீழே அலையும் கட்டற்ற முகிலென்றே நினைத்தாளாம். நானோ அவளை கீழே நகரும் பாலையில் தேங்கிய பாசி படர்ந்த குளமென்றிருந்தேன். * ஒருநாள் காதலில் கிளைகளை அகட்டி ஜாடை காட்டினாள். மறுநாள் அங்கிருந்தது என் கூடு. இப்படித்தான் தோழதோழியரே எல்லாம் ஆரம்பமானது. தண்ணீரை மட்டுமே மறந்துபோய் ஏனைய அனைத்துச் செல்வங்களோடும் பாலை வழி நடந்த காதலர் நாம். * அவளோ வேரில் நிமிர்ந்த தேவதை. நிலைப்பதே அவளது தர்மமாயிருந்தது. சிறகுகளில் மிதக்கும் எனக்கோ நிலைத்தல் இறப்பு. மண்ணுடன் அவள் எனை வேரால் இறுகக் கட்ட முனைந்தும், நானோ விண்ணுள் அவளைச் சிறகுடன் எய்ய நினைந்தும் தோற்றுப் போனோம். * உண்மைதான் அவளை நொண்டியென்று விரக்தியில் வைதது. முதலில் அவள்தான் என்னைப் பார்த்து கண்ட மரம் குந்தி, ஓடுகாலி மிதக்கும் நரகல் என்றாள். * ஓரு வழியாக இறுதியின் இறுதியில் கூட்டுக்காகவும் குஞ்சுகட்காகவும் சமரசமானோம். மாய ஊறவின் கானல் யதார்த்தமும் வாழ்வின் உபாயங்களும் காலம் கடந்தே வாய்த்தது நமக்கு நம் காதலாய் அரங்கேறியதோ உயிர்களைப் படைக்குமோர் பண்ணையார் என்றோ எழுதிய நாடகச் சுவடி. * இப்போது தெளிந்தேன். சந்திக்கும் போதெலாம் என் தங்க ஆலமரத்திடம் சொல்வேன். ”ஆயிரம் வனங்கள் கடந்தேன் ஆயினும் உன் கிளையன்றிப் பிறிதில் அமர்ந்திலேன்.” மகிழ்ந்த என் ஆலமரம் சொல்லும் ” என்னைக் கடந்தன ஆயிரம் பறவைகள் என் கிளைகளில் அமர்ந்ததோ நீ மட்டும்தான்.” * இப்படித்தான் தோழதோழியரே ஒரு மரமும் பறவையும் காவியமானது.
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.