Jump to content
களத்தில் உள்நுழையும் வழிமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலதிக விளக்கங்களிற்கு

poet

கருத்துக்கள பார்வையாளர்கள்
 • Posts

  2,080
 • Joined

 • Last visited

 • Days Won

  7

Everything posted by poet

 1. மணலும் மண்ணுமாக உருவாகிய எம் தாயக இயற்க்கை மிக நொய்ந்தலானது. மிகவும் நொய்ந்த நம் தாயக இயற்கையில் மின்போன்ற தேவைக்கு கை வைக்கும்போது அவற்றின் புதுப்பிக்கதக்க Renewable energy ஆற்றலை உறுதிப்படுத்துவது அவசியம். இயற்கையை மீழ புதிப்பிக்கும் திட்டங்களில்லாமல் எம் தாய்மண்ணை தொடுவது துரோகச் செயலாகும்.
 2. ஜனாதிபதியும் மணல் மாபியாக்களும், - வ.ஐ.ச.ஜெயபாலன் . இ.லங்கை ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச அவர்களுக்கு, தயவுசெய்து நாட்டை தங்கத்தட்டில் வைத்து மணல் மாபியாக்களிடம் கையளிக்கும் தவறான முயற்ச்சியை உடனடியாகக் கைவிடுங்கள். அதற்க்குள் தமிழ் மணல் மாபியாக்கள் சுண்டிக்குழம் இறவை வெட்டி யாழ்ப்பாணத்தை இலங்கை பெருநிலத்தீல் இருந்து துண்டிக்கும் முயற்ச்சியில் ஈடுபடுகின்றனர். தயவுசெய்து மண் மணல் ஏற்ற்றிச் செல்வது தொடர்பான உங்கள் ஆபத்தான சட்டத்தை ரத்துச் செய்யுங்கள். - வ.ஐ.ச.ஜெயபாலன் . உங்கள் அரசின் புதிய மண் மணல் எற்றிசெல்லும் சட்டம் இலங்கையின் கரையோர கடல் ஏரிகளையும் ஆற்றுப்படுகைகளையும் நிலத்தடி நீராதாரங்களையும் அழித்துவிடும். மண்ணை உவரக்கிவிடும். இது இலங்கை அடங்கிலும் இன வேறுபாடின்றி கடல் ஏரிச் சூழலுக்கும் ஆறுகளின் சூழலுக்கும் அண்டி வாழும் மக்களுக்கும் பேரழிவாக முடியும். றீயல் எஸ்ட்டேட் கட்டுமானத்துறையின் லாபத்துக்காக நாட்டை பலிகொடுக்கும் முயற்ச்சி இது. உடனடியாக இந்த ஆபத்தான சட்டத்தை இரத்துச் செய்யுமாறுகோருகிறேன். . TWEET poet @tamilpoet · 58m SOS.. SOS,,, SOS,,,, . DEAR PRESIDENT GOTABAYA, PLEASE SAVE THE COUNTRY FROM THE 'SAND MAFIA' . TAMIL SAND MAFIA HAVE STARTED TO CUT OFF JAFFNA PENINSULA FROM THE MAIN LAND. PLEASE WITHDREW YOUR DANGEROUS NEW REGULATION FOR SOIL AND SAND TRANSPORTATION. - V.I.S.JAYAPALAN POET
 3. சீனா முதலீடுகள் தொடர்பாக இந்தியா மேற்க்குநாடுகளோடு வடகிழக்கு உங்க ஏரியா தெற்க்கு என் ஏரியா என்கிற மோதலற்ற போகையே இதுவரை கடைப்பிடிக்குது. எல்.எம் காற்றாலைக் கம்பனி கொலண்டில் இருந்து செயல்படும் டென்மார்க் கம்பனியென்கிற வகையில் அஞ்ச வேண்டியதில்லை. சிக்கல் வந்தால் புலம்பெயர் தமிழர்களின் அழுத்தம் வல்ல ஆயுதமாக அமையும் என்பதால் அஞ்சாமல் வரவேற்க்கலாம். இப்பவே LMW மாகாண உள்ளூராட்ச்சி சபைகளின் அனுசரணையுடன் இயங்க வேண்டுமென்கிற புலம்பெயர்ந்த தமிழரின் அழுத்தம் முக்கியம்.
 4. காற்றாலை சூரிய ஒளி மின் உற்பத்திவாய்ப்புகள் மாகாணசபையின் கட்டுப்பாட்டில் அமைவது வரவேற்கப்படவேண்டியதே. தெற்க்கில் இருந்து கொண்டுவராமல் வடகிழக்கு மாகாணத்தில் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட வேண்டும். அனல் மின் நிலையம் எங்கள் நெய்தலை அழித்துச் சிதைத்துவிடும். அனல்மின் நிலையம் வேண்டாம்.
 5. காற்றாலை தனியார் உடமையாக அமைவதுதான் இங்கு அடிப்படைச் சிக்கல். மாகாணசபையின் பங்கும் பங்குபற்றுதலாம் இல்லாமல் மாகாண மக்களுக்கு பங்கு விற்க்காமலும் இத்தகைய முதலீடுகள் வரவேற்க்கப் படலாமா?. பொருளாதார மற்றும் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த, சமாந்திரமான 1. மறவன்புலவு-கேரதீவு, 2.அரியாலை-பூம்புகார், 3.கல்முனை (கட்டைக்காடு) பூனகரி நிலத் தொடர்களில் வாய்ந்த சமாந்தரமான மூன்று நிலத் தொடர்கள் இடம் ஆக்கரமிக்கப் படுவதை சிங்கள குடியேற்றங்களுக்கு அத்திவாரமாவதை ஏற்க்கக்கூடாது. இத்தகைய முடிவுகள் மாகாண சபை தேர்தல்வரை பின்போடபடவேண்டுமென தமிழர் கூட்டமைப்பு தீர்க்கமாக சொல்லவேண்டிய தருணமிது. என் கோரிக்கையை யாராவது சம்பந்தர் ஐயாவின் உடனடிக் கவனத்துக்குக் கொண்டுவார வேண்டுகிறேன்.
 6. காலங்காலமாக ஈழத் தமிழர் கட்ச்சிகள் 1.திறமையானவர்களை ஒதுக்குவதும் 2.திறமையாளர்கள் - உட்கட்ச்சி ஜனநாயகம், கட்டுப்பாடுகளுக்கு அமையாமல் - கட்ச்சியை ஒத்துக்குவதும்தான் நாம் எதிர்நோக்கும் சிக்கல்கள் பலவறின் அடிப்படை. தமிழரசுக் கட்ச்சி செல்வநாயகம் காலம்போல ஊர் மவட்ட மாநில மட்டக் கிழைகள் அடிப்படையில் ஜனநாயாக ரீதியாக மக்கள் அதிகார அமைப்பாக மீழக் கட்டியமைக்கப்பட வேண்டும். இது இன்னும் கண்டுகொள்ளப்படாத சம்பந்தர் ஐயாவின் வரலாற்றுப்பணியாகும். சுமந்திரன் போன்ற திறமைசாலிகள் தன்னிச்சையாக செயற்படாமல் கட்சி கட்டுப்பாடுகளுக்கு அமைந்து செயல்படவேண்டும். அதுதான் காலத்தின் கோரிக்கையாகும்.
 7. அர அரசியல் வித்தையில் ஊக வணிகமும் உண்டு. ஆனால் அரசியல் ஊக வணிக வித்தையல்ல
 8. புனிதம் - வ.ஐ.ச.ஜெயபாலன் . கங்கை நதியே கங்கை நதியே பதட்டமேன்? இலங்கை தமிழரின் இரத்தத்தை என்னுள் இறங்கிக் கழுவவோ? கூடா நட்பின் கேடாய் நானும் பாவ நதியாய் மாழவோ? கங்கை நதியே கங்கை நதியே பதட்டமேன்? .
 9. பிழைத்திருத்தல் கேழ்விக்குறியாகும் தருணங்களில் ஆண் பெண்ணாகவல்ல தப்பிக்க வழிதேடும் மனிதர்களாவே நாம் எல்லோரும் செயல்படுகிறோம். இது தொடர்பான புரிந்துணர்வு மனிதாபிமானத்தின் அடிப்படையாகும்.
 10. எங்கள் பிரச்சினைகள் 100%மும் விவாதாங்கள் தீர்மானங்களும் தீர்வும் இல்லாமல் இருக்கு. அவற்றை விவாதிப்போம். தமிழகத்தில் ஈழ ஆதரவுக் குரல் கொடுப்பவர்களிடை ஆயிரம் உட்பிரச்சினைகள். இவற்றுக்குள் நாம் மூக்கை நுழைப்பது பிழையான ராஜதந்திரமாகும். நண்பர்கள் உதவுகிறவர்கள் ஆதரவு சக்திகளிடையே நிலவும் மோதல்களில் எவ்வண்ணம் நிலைபாடு எடுப்பது என்பதை பலஸ்தீனிய தலைவர் ஜசீர் அரபாத்திடம் இருந்து கற்றுக்கொள்ளுங்கள். எல்லோருடைய ஆதரவுக்குரலும் உதவியும் நிலைப்பது முக்கியம் என்பதை பலஸ்தீனியர்கள் உணர்ந்திருந்தனர். அந்த சரியான இராஜதந்திரத்தில் இருந்து ஈழ இறுதி யுத்தத்தின்போது பலஸ்தீனியர்கள் தவறிவிட்டார்கள் என்பது என் கவலை. தமிழக நட்புச் சக்திகளின் உள்விவகாரம் நமக்கு வேண்டாம். பஞ்சாயத்துக்களை அவர்களே தீர்த்துக் கொள்ளட்டும்.
 11. Maharajah பக்கத்தில் முருங்கை மரங்கள் இல்லை. பதில்தானே? தலை வெடிக்கமுன் சொல்லிவிடுகிறேன். ஆதாரபூர்வமான விவாதங்களை விடுத்து ”சாத்தான் வேதம் ஓதுகிறதுபோல” என்று கூறியவரின் தகுதியில் குறைகாணுவது சிறந்த விவாத முறைமையில்லை. பதிலில் நிலவும் தெரிவுகள் பற்றி ஒன்று கூற வேணும். மக்களும் எதிரியும் சர்வதேச சமூகமும் ஏன் வாக்களிக்கும் மக்கள்கூட கழத்தில் நின்று நிலவும் தெரிவுகளுக்கு மத்தியில் தான் அரசியல் செய்வார்கள். சதுரங்கமும் அப்படித்தானே ஆடுகிறார்கள். இருக்கிற காய்களை பலப்படுத்தி நகர்த்தித்தானே ஆடுவீர்கள். எங்கள் ராணிக்காய் தேசிய இன அரசியல் தான். இன்றைய நிலையில் எல்லா விமர்சனங்களோடும் தன் வல்லமைக்குள் சம்பந்தரைதவிர வேறுயாரும் அந்தக் காயைப் போட்டுடைக்காமல் காப்பாற்ரவில்லை. வெட்டுப்பட்ட காய்களை நகர்த்த முடியாது அல்லது நீங்கள் விரும்புமிடத்தில் விரும்பும்காயை தள்ளி வைத்தும் நகர்த்த முடியாது. சதுரங்கப் பலகையில் மட்டுமல்ல அரசியல் பலகையிலும் அப்படித்தான். அதனால்தான் ஜனாதிபதித்தேர்தலின்போது வடகிழக்கு மாகாணங்களில் சஜித் பெற்ற வெற்றியை சம்பந்தன் ஐயாவின் வெற்றியெனவாதிட்டு நாம் நகர்த்தக்கூடிய காயை பலப்படுத்தினேன். நண்பன் தமிழ் சிறியும் என் பதிலை வாசிக்க வேண்டும். நிழலிக்கு, சிறப்பு வரவேற்பும் விருந்தும். விபரத்துக்கு பைபிள் கதைகளை வாசிக்கவும்.
 12. அன்புக்குரிய தனிக்காட்டு ராஜா , மன்னிக்க வேண்டுகிறேன். விமர்சன கருத்து சொல்ல எலோருக்கும் உரிமை உண்டு. யாரும் சொல்லல்லாம் . திரு.ஆனந்தசங்கரி சொன்ன கருத்தில் எனக்கு உடன்பாடில்லை என பதிவு செய்திருக்க வேண்டும். நன்றி
 13. சம்பந்தர் ஐயா பற்றி பேசும் விமர்சிக்கும் அருகதை நண்பர் ஆனந்தசங்கரி அவர்களுக்கு இல்லை என்பதை பணிவன்புடன் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்.
 14. என்றும் நான் போற்றும் மாவீரன் பால்ராஜ் அவர்கள் நினைவை துதித்து அஞ்சலிகள்
 15. நல்வரவு. யாழில் பக்கங்கள் ஆரம்பிக்க முடியுமா? அதுபற்றி அறிய விருப்பம்
 16. அன்புக்குரிய ஜூட், புங்கைஊரான், வல்கனோ, என்மீதான உண்மையான குற்றச்சாட்டு தமிழ் முஸ்லிம்களை இணைத்து போராடும் நடவடிக்கையில் நான் ஈடுபட்டிருக்கிறேன் என்கிற அவர்களின் ஊகம் சார்ந்தது. இன்னொருபுறம் எங்கள் பண்ணையை அபகரிக்கும் முயற்சியில் சில பெரும் அரசாங்க புள்ளிகள் ஈடுபட்டிருப்பது கிழைக் கதை. அரசு கண்ணுக்குத் தெரியும் ஒடுக்குதலைக் கைவிட்டு கண்ணுக்கு புலனாகாத ஒடுக்குதலை அதிகரித்திருப்பது தொடர்பான என் ஆய்வுக் கருத்துக்கள். என்னை அவர்கள் உடல்ரீதியாகத் தாக்கவில்லை. ஆனால் சிறைக்குள் முடக்கி வைக்கப் பார்த்தார்கள். அதிஸ்ட்டவசமாமெரிக் சோல்கைம் அரசை எச்சரித்ததும் ரவ்கக்கீம் அரசைன் நடவடிக்கையை எதிர்த்ததும் பசீர் சேகுதாவுத் அரசிடம் என்விடுதலைக்காக பேசியதும் நோர்வீஜிய அரசின் உறுதியான நடவடிக்கைகளும் உலக தமிழர்களது எதிர்ப்பும் சிங்கள தோழர்களது எதிர்ப்பும் நான் சிறைப் படாமல் தப்பிக்க உதவியது. நல்லவேளையாக சிங்கள பத்திரீகைகள் விசம் கக்க ஆரம்பிக்கும்போது நான் வெளியேறியிருந்தேன். . தமதமாகி இருந்தால் சிறை நிரந்தரமாகி இருக்கும். எனக்காக குரல்கொடுத்த எல்லோருக்கும் எனது நன்றிகள். நான் மாறப்போவதில்லை.நான் எனக்குத் தோன்றுவதை செய்ய ஒருபோதும் அஞ்சியதில்லை. எனக்கு என்னுடைய 19 நாள் இலங்கை வாசத்தில் எனக்குத் தேவையான ஆய்வுத் தகவல்களில் சிலவற்றை கிரகிக்கக்கூடியதாக இருந்தது. மீண்டும் போய் என் ஆய்வுகளை பூர்த்தியாக்க வேண்டும் என்கிற மனநிலை தொடரும். யாழ்க்களத்தில் அதிக நேரத்தை செலவுசெய்துவிட்டேன். அன்புடன் விடை பெறுகிறேன்.
 17. தமிழ் சூரியன் உங்களுக்கு என் நன்றி. என்னை அறிந்த ஓரிருவராவது இருங்கு இருக்கிறீர்கள் என்பது நிம்மதி. புலிகளுக்கு எழுதிய கையால் இங்கு காகிதப் புலிகளுக்கு எழுத நேர்ந்ததுதான் என் தலைவிதி. துளசி நீங்களும் நாரதரும் விடப்பிடியாக திரும்ப திரும்ப வலியுறுத்துவதால் நம்முள் யாருக்கோ உளவியல் பிரச்சினை இருக்கலாம். என தெரிகிறது. நம்முள் யார் தவறோ அவர்களை தர்மம் தண்டிக்கட்டும்.
 18. நிழலி களநிலமை தெரியாமல் பேசுகிறீங்க. குடிவரவு குற்றச்சாட்டில் கைதாகும் வெளிநாட்டவர்களிடம் கைபேசியை பறிப்பதில்லை. கைபேசியை அனுமதித்து ஒட்டுக்கேட்பதன்மூலம்தான் அவர்கள் தகவல் சேகரிக்கிறார்கள். ஆனால் நாம் பேசும்போது அவர்கள் விரும்பினால் தொடர்பு இருக்கும். விரும்பாவிட்டால் துண்டிக்கப் படும். அப்படி ஒருமுறை தொடர்பு துண்டிக்கப் பட்டதால் என்னுடன் பேசிக்கொண்டிருந்த அருள் எழிலன் துடித்துப்போனதை தன் முகநூல் பக்கத்தில் பதிவு செய்திருக்கிறார். நிழலி, உங்கள் அனுதாபத்தை கோருகிற அளவுக்கு நான் ஒன்றும் அத்தனை அற்பமில்லை.முஸ்லிம் மக்கள் மத்தியிலும் தமிழ் மக்கள் மத்தியிலும் எனக்கு அனுதாபம் இருப்பதாக அரசு நினைப்பதுதான் எனக்கு பிரச்சினையாயிற்று. உங்கள் அனுதாபத்தை பத்திரப் படுத்துங்கள். அது உங்களுக்குத் தேவைப்படலாம்..
 19. துளசி யாருக்கு உளவியல் பிரச்சினை என்கிற ஆய்வுக்குமுன்னம் நீங்கள் எனக்கெதிராக எழுதிய எல்லாவற்றையும் திரும்ப ஒருமுறை வாசித்துப் பாருங்கள். தப்பிவந்த களை ஆறுமுன்னம் என்மீது நீங்கள் சுமத்திய பழிகளுக்கு குற்றச்சாட்டுக்களுக்கு என் எழுத்தில் ஆதாரம் இருக்கா என்பதையும் ஆராய்ந்துபாருங்கள். நீங்கள் எழுதியவை ஆதரமுள்ள உண்மையென்றால் விசர் எனக்கு வரட்டுக்கும்.
 20. நண்பார் விசுக்கு, தூயவன் தெரிந்து சொன்னாரா தெரியாமல் சொன்னாரா என்பது தெரியவில்லை. ஆனால் என்னை விசாரித்தவர்கள் சொன்னதையே தூயவனும் சொல்கிறார்..
 21. உங்களை பல்துறை விற்பன்னர் என்று நீங்களே நினைத்துக் கொள்வது ஒரு உளவியற் பிரச்சைனையாகவே நான் கருதுகிறேன்.- நாரதர் நாரதர் நான் எங்கே பல்துறை விற்பனன் என்று சொன்னேன? ஆதாரத்தை வெட்டி ஒட்டுங்கள். இப்படி மற்றவர் நினைப்பதை சொல்லமுடியும் என நினைப்பது ஒரு உளவியல் பிரச்சினையல்லவா நண்பரே. வீடுவந்து 72 மணிதியாலங்கள்தான் ஆகிறது அதற்குள்ளேயே ஏன் இப்படி? நாரதர் இராசவன்னியன் உங்கள் ஆலோசனைக்கு நன்றி, நீங்கள் களத்தில் வாழும் பல்லாய்ரக்கணக்கான முஸ்லிம் தமிழ் உறவுகளை கேட்டுப்பாருங்கள். ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். அவர்கள் விரும்பும் கோரும் எனது ஆய்வுப் பணிகளிலும் தமிழ் முஸ்லிம் நல்லுறவுக்கான பணிகளிலும் நான் ஒருபோதும் பின்வாங்கப்போவதில்லை. இலங்கை அரசு தமிழரையும் முஸ்லிம்களையும் சேர்த்து ஆயுதப் போராட்டத்தை ஆரம்பிக்க நான் முயல்வதாக குற்றம் சாட்டுகிறது. சிங்களப் பத்திரிகைகளும் அதனையே சொல்கின்றன. நீங்கள் இப்படி சொல்கிறீங்க. அழுவதா சிரிப்பதா என தெரியவில்லை
 22. ஆன்புக்குரிய நிழலி, இது சிலருக்கு பூனை எலி விழையாட்டாக இருக்கு. ஆனால் எனக்கோ உயிர் மானபிரச்சினை. பிரச்சினை. பொத்தாம் பொதுவாக பேசாமல் உங்கள் குற்றச்சாட்டுக்கு ஆதாரங்களை என் அறிக்கையில் இருந்து வெட்டி ஒட்டுங்கள். நிழலி, நான் அறிக்கை என எழுதாமல் முதல் அறிக்கை என்று எழுதியதன் பொருளென்ன? என் தோழர்களின் பாதுகாப்பை உறுதிப் படுத்தியபின் 2, அறிக்கை எழுதுவேன் என சொன்னதுகூட உங்களுக்கு புரியவில்லையா? நிழலி, ஜெயபாலன் ஏன் தயங்கவேண்டும் களத்தில் அவருக்கு தகவல்கள் தந்தவர்கள் அதன்பின்னர் புலம் பெயர்ந்திருப்பார்கள்தானே. தயங்க வேன்டியதில்லை என நினைதீர்களா?. ஆனால் அவர்கள் இன்னும் புலம்பெயராமல் ஊரில் இலங்கை சர்வாதிகாரத்தின் பிடிக்குள் இருக்கிறார்கள். அதனால்தான் என் அறிக்கையை பிரித்து ,முதல் அறிக்கையை மட்டும் வெளியிட்டேன். தயவு செய்து உங்கள் பக்கம் தவறிருந்தால் மனச்சாட்சியுடன் தவறை என்று ஒத்துக்கொள்ளுங்கள். தவறில்லையெனில் தொடர்ந்தும் அப்படியே எழுதுங்கள். நான் உயிரோடிருப்பது முஸ்லிம் மக்களதும் எரிக் சோல்கைமினதும் ஆதரவால் நிகழ்ந்தது. அது என் தவறல்ல என்பதையாவது நம்புங்கள் நிழலி. தன்நெஞ்சறிவது பொய்யற்க்க பொய்த்தபின் தன்னெஞ்சே தன்னைச் சுடும்.
 23. இப்ப கோபமில்லை தூயவன், தமிழ் தேசிய முகம்காட்டும் ஒருவர் என்பது தமிழ்தேசியவாதிபோல வேடம்போடும் ஒருவர் என்றுபொருள். தமிழ் தேசியவாதி என்று பொருளில்லை. நீங்கள் அர்த்தம் புரியாமல் கோபப்பட்டிருந்தால் எழுதியிருந்தால் பிரச்சினை இல்லை. விட்டுவிடுவோம். ஆனால் துளசி நிழலிபோன்ற சிலரின் எழுத்துக்கள் பனையில் இருந்து விழுந்தவனை மாடு ஏறி மிரித்ததுபோல இருக்கு. .எனக்கு இது உயிர்வதை.
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.