Jump to content
களத்தில் உள்நுழையும் வழிமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலதிக விளக்கங்களிற்கு

poet

கருத்துக்கள பார்வையாளர்கள்
  • Posts

    2,080
  • Joined

  • Last visited

  • Days Won

    7

Everything posted by poet

  1. அன்புக்குரிய நிழலி, நீங்கள் தசாப்தங்களாக களநிலமைகளை அறிந்துகொள்ளாத நிலையில் களநிலைபற்றி நீங்கள் விரும்பியவற்றை மட்டுமே வாசிக்கிற நிலையில் பேசும் அதிதீவிர தேசியவாதம்பற்றி சற்று சிந்திக்க வேண்டுகிறேன். அதிதீவிரவாதிகளும் எதிரிகளும் எதிர் நிலையில் இருந்து ஒன்றையே சொல்வார்கள் எதிர் எதிர் திசையில் இருந்தாலும் வரலாற்றை ஒரே திசையில் தள்ளுவார்கள் என்து தத்துவம். என்னைப்பற்றி எதிரி சார்ப்பு சிங்களபத்திரீகை எதை எழுதுகிறதோ அதைத்தான் நீங்களும் எழுதுகிறீர்கள். அதிதீவிரவாதிகள் எதிரி விரும்புவதையே செய்து அழிவைத்தேடிக்கொள்வார்கள் என்பதை லெனின் அழுத்தம் திருத்தமாக பதிவுசெய்திருக்கிறார் "Left-Wing" Communism: An Infantile Disorder இடது (அதிதீவிர) பொதூடமைவாதம் ஒரு சிறுபிள்ளை நோய் என்கிறகட்டுரையை புலம்பெயர்ந்த நாடுகளில் வாழும் அதி தீவிரவாத தமிழ்தேசிய வாதிகள் கட்டாயம் வாசிக்கவேண்டும். மக்களோடு தொடர்பில்லாத புரட்சிக்காரர்களும் தேசிய வாதிகளும் அதிதீவிர தேசியவாதம் என்கிற கற்பனைவாத சிறுபிள்ளை நோய்க்கு ஆளாகும் ஆபத்துள்ளது. மக்களோடு தொடர்புபடுகிறது தவிர்க்க முடியாத தருணங்களில் ஆபத்தை மேற்கொண்டும் மக்களை சந்திப்பது அவசியமானதுதான்லிதனையே நான் செய்தேன். மக்களோடு தொடர்பில்லாத புலம் பெயர் வாழ்வில் தரவுகள் கள ஆய்வுசாராத கொள்கைசார்ந்த கற்பனைகளாகிவிடுகின்றது. இதனை நான் அனுபவரீதியாக உணர்ந்துள்ளேன். அதிதீவிரவாதியும் எதிரியும் எதிர் நிலையில்க் செயல்பட்டாலும் ஒன்றையே செய்வார்கள் என்கிற தத்துவத்துக்கு சரியான உதாரணம் சென்ற கடந்த திருமலை நாடாளுமன்றடத் தேர்தலாகும். தமிழரிடம் இருந்து திருமலையைப் பறிப்பதே எதிரியின் பிரதான குறிக்கோளாக இருந்தது. ஏறக்குறைய 50 ஆயிரம் திருமலைத் தமிழர்கள் தமிழகத்தில் அகதிகளாக இருக்கும் சூழலில் இது எதிரிகளுக்குச் சாத்தியமான இலக்குத்தான். மக்களோடு தொடர்பில்லாத அதிதீவிரவாதிகளின் ஆதரவோடு திரு கஜேந்திரகுமார் திருகோணமலையில் சம்பந்தரை தோற்க்கடிக்க வேட்பாளரை நிறுத்தினார்கள். மகிந்த ராசபக்சவின் ஒரே கனவு சம்பந்தரை தோற்க்கடிப்பதும் திருகோணமலையை தமிழரிடமிருந்து கைப்பற்றுவதும்தான். அதிஸ்ட்டவசமாக சம்பந்தர் தப்பிப் பிழைத்துவிட்டார். அதனால் சர்வதேச நாடுகள் 1 தமிழர் பிரச்சினை வடமாகாணப் பிரச்சினை என்ற வாதத்தை ஏற்றுக்கொள்ளும் ஆபத்தும் 2 போரினால் பாதிக்கப்பட்ட தமிழரை அணுகும் ஆபத்தும் தவிர்க்கப்பட்டது. ஆனால் திருமலையினல் தமிழருக்கிருந்த இரண்டு பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை ஒன்றாக்கியதுதான் அதி தீவிர தமிழ் தேசியவாதிகளின் பங்களிப்பாக இருந்தது. ஆனாலும் தமிழர்கள் சிறுபிள்ளைக் கோளாறுள்ள அதிதீவிர வாதிகளை ஏற்றுக்கொள்ளவில்லை. இதனைத்தான் நம் முன்னோர் சிறுபிள்ளை வேளான்மை விழைந்தும் வீடுவந்து சேராது என்பார்கள். நான் தப்பியதற்க்கு முகீய காரனங்கள். 1.என் கைது சம்பவம் இடம்பெற்ற பொழுதே வன்னிவிழான்குளத்தில் இருந்து சுந்தரலிங்கம் கனபதிப்பிள்ளைக்கு (நோர்வே) தகவல்பெகிடைத்ததும் அவர் குளோபல் தமிழ் இணைய நடராசா குருபரனுக்கு உடன் தகவல்தந்ததும், குருபரன் இதயசந்திரன் போன்றவர்கள் அதே கணமே என்கைதை உலகளாவிய செய்தியாக்கியதும். 2. முஸ்லிம் மக்களின் உறுதியான ஆதரவு. தோழர்கள் ரவ் கக்கீமும் பசீர் சேகுதாவித்தும் அரசுக்கு கொடுத்த அழுத்தம். 3.தோழன் எரிக் சோல்கைம் இலங்கை அரசை மிரட்டும் தோரணையில் என் விடயத்த்யைக் கையாண்டதும் நோர்வீஜிய ஐரோப்பிய அரசுகளை செயல்பட வைத்ததும். எனக்காக குரல்கொடுத்த தமிழக புலம்பெயர் தமிழ் உறவுகளுக்கு நான் என்றும் கடமைப் பட்டுள்ளேன். நான் சிறைப் படுத்தப்படுவதை எதிர்பார்த்திருந்து அது நடக்காமல் நான் நாடுகடத்தப் படுவது உறுதியானபின் என் விடுதலைக்காக சிலர் குரல்கொடுத்தார்கள். தமிழ் தேசிய வாத முகம் காட்டும் என் நண்பர் ஒருவர் தேனியில் சிங்கள் இனவாத பத்திரிகையாளரின் அதே நோக்கத்தோடு என்னை இகழ்ந்து கட்டுரை எழுதினார். நிழலிபோன்றவர்கள் கோபபடுவதைத் தவிர்த்து மகிந்த ஆதரவுச் சிங்களப் பத்திரிகைகள் எழுதுவதுபோல எழுதுவதைத் தவிர்த்து சிந்திக்கவேண்டும் என பணிவுடன் விண்ணப்பிக்கிறேன்.
  2. யாழ்க்கள நண்பர்களுக்கு நன்றி. நான் என் அனுபவங்களையும் வடகிழக்கு மாகாணத்தின் சமூக பொருளாதார அரசியல் நிலைபற்றி ஆராய்ந்த விடயங்களையும் புத்தகமாக எழுத வேண்டியுள்ளது அதனால் இனி அடிக்கடி யாழ்க்களம் வாய்ப்பிருக்காது. நான் நிலமையை தெரிந்துகொண்டே இலங்கை சென்றேன். புறப்படுவதற்க்கு 16 மணித்தியாலயங்களுக்குமுன்னம் மனைவிக்கு சொன்னபோது வாய்த் தர்க்கம் ஏற்ப்பட்டது.இதற்க்குமுன் பதினாறு பதினேழுதடவை கொலைமுயற்சிகள் மேற்கொள்ளப்பட்டபோது யாரும்வரவில்லை நான்தான் தப்பி வந்தேன் எனக்கு புத்தி சொல்லாதே என மனைவியைக் கடிந்துகொண்டேன். என் மனைவி சோதிடத்தில் நம்பிக்கை உள்ளவள். எனக்கு மரண ஆபத்துள்ள காலம் என நண்பன் ஆய்வறிஞன் ரகுபதி வேறு கூறியிருந்தான். என் மனைவியின் துயரத்தை நான் புரிந்துகொண்டேன். நான் எடுத்த இடர் risk நியாயமானதுதான். இப்போ வடகிழக்கு மாகாணம் பற்றிய என் சிந்தனைகளுக்கு மிக மிக அவசியமான தரவுகள் பல எனக்கு கிடைதுள்ளது.ஒரு ஆய்வாளனாக தரவுகள் இல்லாமல் உயிர் வாழ்ந்து என்னத்தை சாதித்துவிடப்போகிறேன்? சாத்தியப் படும்போது தரவுகளுக்காக மீண்டும் போகவே செய்வேன். பயணத்தின்முன் எனது முகநூலில் பின்வருமாறு எழுதினேன். '' இந்த வாரம் அம்மாவின் சமாதியில் என் கண்ணீர் மலர்வளையம் சாத்தி நம் அம்மாக்களின் வாழ்வை காவியமாக எழுத ஆரம்பிப்பேன். இதை தவிர்த்திருந்து வேறு என்ன பெரிய சாதனை செய்து விடப்போகிறேன்.'' என்னுடனான கடைசி சந்திப்பை தமிழக நண்பன் Don Ashok பின்வருமாறு பதிவு செய்திருக்கிறான். ”திடீரென இலங்கை போகும் ஆசை ஏற்பட்டுள்ளது. என்ன விதியோ தெரியவில்லை”. ''இதுதான் நண்பர் கவிஞர் Jaya Palan தன் தாயின் நினைவு நாளை முன்னிட்டு அவர் சமாதியில் அஞ்சலி செலுத்த இலங்கை செல்வதற்கு முன் என்னிடம் சொன்னது. கவிஞர் ஜெயபாலன் போன்றவர்களின் முடிவுகளை நண்பர்களோ, காவல் துறையோ, சிங்கள அரசோ மாற்றிவிட முடியாது. அவர் கவிதைகள் சொல்வதைப் போல அவர் எதற்கும் கட்டுப்படாத, எதற்குள்ளும் அடைக்கப்பட முடியாத ஒருநாடோடிப் பறவை.'' அம்மாவின் சமாதி அமைந்துள்ள எங்கள் பண்ணை நிலத்தை இலங்கை அரச குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் மற்றும் வேறு அரசியல் பிரபலங்கள் அபகரிக்க திட்டமுள்ளதும் இங்கு குறிப்பிடப் படவேண்டிய கிழைக் கதை. எனது முகநூல் அடையாளக் குறி Jaya Palan. என் தோழ தோழியர்களுக்காக அங்கு தகவல் புதிப்பிப்பேன். யாழ்க்களத்தில் என் நோவுக்கு ஒத்தட வார்த்தைகளை எழுதியவர்களுக்கு என் நன்றிகள். தாக்கியவர்கள்மீது கோபமில்லை. நன்றி.
  3. செங்கொடி, நான் பாதுகாப்பு இருக்காது என்று தெரிந்து எல்லாவற்றையும் எதிர்பார்த்து முகம்கொடுக்கவும் தயாராகத்தான் இலங்கை சென்றேன். அம்மாவின் சமாதியை பார்க்காமல் உயிர்வாழ்ந்து என்னத்தை சாதிக்கப்போகிறேன் என்கிற கருத்தை முகநூலில் பதிவுசெய்துவிட்டே சென்றேன்.16 வயசில் சாதி எதிர்ப்புப் போராட்டத்தில் கலந்துகொண்டதில் இருந்தே பல தடவைக்குமேல் கொலை முயற்சிகளில் இருந்து தப்பியிருக்கிறேன்.1972 ஏப்பிரல் 2ம்திகதி இரவு அதிஸ்ட்டவசமாக ஒரு அமரிக்க தத்துவஞானி என்வீட்டுக்கு வந்திருந்ததால் பொலிஸ் என்கவுண்டரில் இருந்து தப்பினேன். எனினும் எல்லாத் தடவையும் அதிஸ்ட்டம் என் பக்கத்தில் இருக்காது என்பதையும் அறிவேன். நான் எவ்வழியிலாவது விரைவில் மீண்டும் இலங்கைதீவுக்குச் செல்வேன். அம்மாவின் சமாதிக்கும் மலர் அஞ்சலி செய்வேன்.. என்னை வராதே என்று சொல்ல ராஜப்கச்ச யார்? என் அம்மா இறந்தபோது நான் எழுதிய கவிதை. வரமுடியவில்லை அம்மா தீயினை முந்தி உந்தன் திரு உடலில் முத்தமிட.... சிங்கமும் நரிகளும் பதுங்கும் நீர்ச்சுனையின் வழியில் உயிர்வற்றும் மானாக அஞ்சினேன் அம்மா அரக்கர்களின் மண்மிதிக்க சென்னைச் சுவர்ப் பாலையிலே துடிக்கும் பல்லி வாலானேன் தோப்பாகும் கனவோடு நீ சுமந்த நறுங்கனிகளைத் தின்றதே ஈழத்தமிழன் விதி என்ற பேர் அறியா தேசத்துப் பறவை. துருவக்கரை ஒன்றில் அதன் பீயாய் விழுந்தேனே என் கனிகளைச் சுமந்தபடி இறால் பண்ணை நஞ்சில் நெய்தல் சிதைந்தழியும் சேதுக் கரையோரம் படகுகளும் இல்லை கண்ணீரால் உன்மீது எழுதாத கவிதைகளைக் காலத்தில் எழுதுகிறேன்...
  4. அர்ஜுணன், ஒருதுறையில் இருக்கும் அதிஸ்ட்டமான வாழ்வு எனக்கு வாய்க்கவில்லை. பலதுறையில் இருப்பதாலான என் ஞாபக மறதி எல்லோருக்கும் தெரியும். சிந்திக்கும்வேழையில் சிலசமயம் பக்கதில் நடப்பதே புலனாவதில்லை. சந்தித்தவேழையில் உங்களை அடையாளம்காண மறந்திருந்தால் மன்னிக்கவும்
  5. நவம், நான் இலங்கைக்கு சென்று அங்கேயே அடக்குமுறைக்கு எதிராக பேசியவன் என்பதைமட்டும் ஏனோ மறந்துவிடுகிறீர்கள். எனக்கு
  6. தயா, நீங்கள் உங்கள் தனிப்பட்ட கருத்தை எழுதுகிறீங்க. நீங்கள் யாழ்கள ஆதரவு பற்றி பேசுகிறீங்கள் போலும். அதுபற்றிக்கூட நீங்க எல்லோருக்குமாக பேசமுடியாதே. . நீங்கள் நான் எழுதுகிறவற்றை புரிந்துகொள்ள முனையவில்லை. எரிக்சொல்கைமில் இருந்து கக்கீம் வரைக்கும் சிங்கள கலைஞர்களில் இருந்து தமிழக கலைஞர்கள் வரைக்கும் எனக்காக குரல்கொடுத்தவர்கள் உங்கள் கருத்தை ஏற்றுக்கொள்வார்கள் என நான் நினைக்கவில்லை. உங்களை திருப்திப் படுத்துவது என் நோக்கமல்ல. நான் நஎன்னை சந்திதவர்கள் என் தோழ தோழியர்கள் பாதுகாப்பு பற்றி உறுதிப் படுத்திய பின்னர்தான் மேலதிக விபரங்களை எழுதமுடியும். ஒரு சிலரைத் தவிர பெரும்பாலான யாழ்கள வாசககள் இதனைப் புரிந்து கொள்ளுவார்கள் என நம்புகிறேன்.
  7. யாழ்க்கள நண்பர்களே, நான் பொறுப்பில்லாமல்பேசி என்னோடு தொடர்பு கொண்டவர்களையும் எனக்காக அலுவல் பார்த்தவர்களையும் ஆபத்துக்குள் மாட்டி விடமுடியாது. எனது இரண்டாவது அறிக்கை எழுதுமுன்னம் நான் என் தோழ தோழியர்களின் பாதுகாப்பை உறுதிப் படுத்த வேண்டும் என்பதை புரிந்துகொள்ளுங்கள். எங்கள் பண்ணைவீட்டை ஒரு அமைச்சர் அபகரிக்க திட்டமிட்டுள்ளார். அவரது சேட்டைகள் இங்கு ஒரு கிழைக்கதையாக உள்ளது. என் தோழ தோழியர் நலன்கருதி நான் ஒவ்வொரு வார்த்தையையும் பொறுப்புடன் பேசுவது முக்கியமாக உள்ளது. நெடுக்காலபோவான் போன்றவர்கள் என்னை புரிந்துகொள்ளுகிற காலம் வரும். .
  8. நான் எழுத வேன்டிய பலவற்றை எழுத நாளாகும். என்னை சந்தித்த எனக்காக பாடுபட்ட பலரின் பாதுகாப்பு பற்றி முதலில் உறுதி செய்யவேன்டியுள்ளது. அதற்க்கு எனக்கு 2 வாரமாவது வேன்டும். அதன்பின்னர் என்னுடைய 2ம் அறிக்கையை எழுதுவேன்.
  9. நான் யாழ்குடும்ப உறுப்பினர்களின் கருத்துக்களை வரவேற்கிறேன். அதற்க்கான உரிமை என்க்கு உள்ளது. தூயவன் சொல்வதுபோல தலைப்பை மூடிவிடவேண்டாம்.
  10. கவிஞர் வ.ஜ.ச. ஜெயபாலன் நாடுகடத்தப்பட்ட பின்னர் வழங்கிய நேர்காணல் - நோர்வே தமிழ் 3 வானொலி (27.11.2013) தொடர்புகளுக்கு: radiotamil3@gmail.com http://www.youtube.com/watch?v=4dOgJclq0Bk&feature=youtu.be
  11. விடைபெறுமுன்னம் இறுதிவார்த்தை. விசாரணையில் என்னிடம் நெடுநேரம் துருவித் துருவிக் கேட்க்கப்பட்டது தமிழர்களையும் முஸ்லிம்களையும் இணைத்து வடகிழக்கின் சுதந்திரத்துக்காக போராடும் கருத்தை பிரச்சாரம் செய்திருக்கிறீர் என்பதுதான். அதற்கான வல்லமை உள்ள ஒரே நபர் என்பது அவர்கள் கருத்தாக இருந்தது. அதுவே அவர்கள் அச்சத்துக்கு காரணமாக இருந்தது... தோழர் சோல்கைமின் அறிக்கை வந்தபின்னர் நான் மேலும் இறுக்கமாகிவிட்டேன்.என்னைவிசாரித்தவர்களின் நிலை இறுக்கம் குறைந்திருந்தது. அனந்தி என் ஊடக கருத்தரங்குக்கு வந்தது பற்றி கேட்டார்கள்..அநந்தியை நேரில் சந்திக்கவில்லை என்று சொன்னேன். நான் புலிகளுக்கு உதவியது பற்றிக் கேட்டார்கள். நான் சமாதான பேச்சுவார்த்தைகளுக்கு முன்னர் நிகழ்தவைகள் பற்றி பேச மறுத்துவிட்டேன். அனந்தியுடன் தனிப்பட்ட முறையில் பேசவில்லை என்றேன். ஐங்கரநேசனை சந்தித்த தகவல் அவர்களிடம் இருந்தது. மற்றப்படி என்னைச் சந்தித்த நண்பர்கள் யாரின் பெயரையும் வெளியிடவில்லை. 24 பகல் களுபோவில ஆஸ்பத்திரியில் பொலிசாரின் சதி இடம்பெற்றது..குமர என்கிற 74792 இலக்க பொலிஸ்காரர் என்னை அச்சுறுத்தியபடி இருந்தார். அவர் என் தொலைபேசியை சார்ச் பண்ணவிடவில்லை. தொலைபேசியை தாங்கள் சார்ச் பண்ணித் தருவதாக தொலைபேசியை கேட்டார்கள். நான் மறுத்துவிட்டேன். தொலைபேசி தொடர்பு துண்டிக்கப்பட்ட நிலையில் முதன் முறையாக எச்சரிக்கையானேன். நோயாளிகள் சிலரை தூண்டிவிட்டார்கள். குடிவரவுத் துறை வந்திராவிட்டால் அந்த இரவு கொல்லப்பட்டுக்கூட இருக்கலாம். குடிவரவுத் துறையினருடனும் அவர் முறுகினார். இதனால் அவருக்கு பலமான பின்னணி இருப்பது தெளிவானது. குடிவரவுதுறை இங்ஸ்பெக்டர் அமித் பெரரா நிலமையை புரிந்துகொண்டு உடனே என்னை அங்கிருந்து அகற்றியதால் ஆபத்தில் இருந்து தப்பினேன். நான் வெளியேறும்வரை அந்த சம்பவம்பற்றி முறையிடவேண்டாமென்று கேட்டுக்கொண்டேன். சிங்கள தோழர்களின் ஆதரவு பிரச்சாரம் மேலோங்கியபோது தியவினவும் ஏனைய சிங்கள ஊடகங்களும் எனக்கெதிராக வகுப்புவாதத்தைக் கக்க ஆரம்பித்தன. இதனால் இறுதி நாட்க்களில் நான் நாட்டை விட்டு உடன் வெளியேறும் அவசியத்தை உணர்ந்து கோபத்தை விட்டுவிட்டு இராசதந்திரத்தோடு செயல்பட்டேன்.. http://www.youtube.com/watch?v=4dOgJclq0Bk&feature=youtu.be .
  12. நன்றி புத்தன். புங்கையூரானுக்கு. நான் வணிக புலவன் இல்லை. தர்ம கோபம் என் அடையாளம். கோபப்படுவது கோழைத்தனம் என்பது அபத்தமானது. உலக வரலாற்றின் திருப்பு முனைகள்பல சத்திய ஆவேசங்களில் தர்ம கோபங்களில் இருந்தே ஆரம்பமாகியுள்ளது. என்னைக் கைது செய்தவர்களிடம் நான் கோபப்படாமல் கெஞ்சியிருக்கவேண்டும் என்கிறீர்களா? நான் எதிர்பார்த்ததுபோல என் சத்தம் கேட்டு வீதிக்கு வந்த வன்னிவிளான்குளம் மக்கள் ஆமி மெதுவாய்ப் பேசுது ஜெயபாலன் கோபமாய் கத்திக்கொண்டு நிற்கிறார் என்று நோர்வே நண்பன் கணபதிப்பிள்ளை சுந்தரலிங்கத்துக்கு சொல்லியிருக்கிறார்கள். அவர்தான் குளோபல் செய்தி ஆசிரியர் நடராசா குருபரனுக்கு உடனே செய்தி கொடுத்தார். நான் எதிர்பார்த்ததுபோலவே சற்றைக்கெல்லாம் என் கைதுச் செய்திகள் எரிக் சொல்கைம் உட்பட எனது சர்வதேச நண்பர்கள் பலரை உலுப்பிவிட்டது. என்னைக் கைது செய்தவர்களையும் செய்தி பரவிய வேகம் ஆச்சரியப்படவைத்தது. என் கைபேசி தலைமை அலுவலகத்தில் இருந்து ஒட்டுக்கேட்க்கும் புலநாய்வுப்பிரிவினரால் கட்டுப்படுத்தப்பட்டது. . அவர்கள் விரும்பியபோது என் தொடர்புகளை அவர்கள் துண்டித்தார்கள். நான் அன்று கோபப்படாமல் மெதுவாக பேசி இருந்தால் இலகுவாகத் தனிமைப் படுத்தப் பட்டிருப்பேன்.. என்னுடைய கோபமும் சத்தியமும் இராசதந்திரமும்தான் என்னைக் காப்பாற்றிது. உங்கள் கூற்று அபத்தமானது நண்பரே. இனி யாழ்வர இரண்டு வாரங்களுக்கு பிறகுதான் நேரம்கிடைக்கும். அப்போது அவசியமானால் மேலதிகமாக எழுதுகிறேன். அதுவரை நன்றிகூறி விடைபெறுகிறேன்.. 2 வாரங்களின்பின்னர் சந்திக்கிறேன். அப்போது உருப்படியான கருத்துக்களுக்கு பதிலளிப்பேன். அவதூறுகளை பொருட்படுத்த மாட்டேன்..
  13. என் விடுதலையை விரும்பி கருத்துத் தெரிவித்த அனைத்து யாழ்க்கள தோழ தோழியர்களுக்கும் என்றென்றும் கடமைப் பட்டிருக்கிறேன். நன்றி. என்னைக் கொச்சைப் படுத்தியவர்கள்மீதும் வருத்தமில்லை. இனி சில வாரங்களின்பின் யாழ்களத்துக்கு வரும்போது உங்களோடு தொடர்புகொள்வேன். நன்றி - வ.ஐ.ச.ஜெயபாலன்
  14. முதல் அறிக்கை FIRST REPORT https://www.facebook.com/jaya.palan.9 நான் நோர்வே வந்து சேர்ந்திருக்கிறேன். நவம்பர் 6ம் திகதி அம்மாவின் நினைவுதினம். நவம்பர் 8ம் திகதி பின்வரும் சேதியை என் முகநூலில் வெளியிட்டேன். . ''இன்று என் அம்மாவின் 7வது வருட நினைவுதினம். அம்மாவின் மரணத்துக்கு முதல்நாள் தொலைபேசியில் பேசியபோது எனக்கு என்ன நடந்தாலும் வந்துவிடாதே என கத்தி சத்தியம் வாங்கினார். இன்று அம்மாவின் நினைவுதினம். அம்மாவின் சமாதிக்கு வணக்கம் செலுத்தும் ஆசை மீண்டும் மூண்டெரிகிறது. இராணுவ முகாமாக இருக்கும் எங்கள் பண்ணைக்குள் அம்மாவின் சமாதி இருக்கு. இந்த வாரம் அம்மாவின் சமாதியில் என் கண்ணீர் மலர்வளையம் சாத்தி நம் அம்மாக்களின் வாழ்வை காவியமாக எழுத ஆரம்பிப்பேன். இதை தவிர்த்திருந்து வேறு என்ன பெரிய சாதனை செய்து விடப்போகிறேன்' நான் ஒரு முடிவு எடுத்துவிட்டால் அஞ்சுகிறவனல்ல. அது என் தோழர்களுக்கு தெரியும். 1967ல் சாதிப்போராட்டக் களங்களில் தோழனான புதுவை இரத்தினதுரை என்னை எப்போதும் தேச பக்தனும் கலகக்காரனுமான கவிஞன் என்றே அழைப்பார். 1984ல் புளொட் இயக்கம் பொட்டம்மானை பட்டுக்கொட்டையில் வைத்துக் கைதுசெய்தபோது நான் முகுந்தனில் அலுவலகத்துக்குள் புகுந்து செய்த கலாட்டாவை அப்போது அங்கிருந்த தோழர் சிவா சின்னப்பொடி அறிவார். கொலைகாரன் டம்பிங் கந்தசாமியிடம் என்னைக் கொல்ல சொல்வதா அல்லது பொட்டம்மானை விடுதலை செய்வதா என முதலில் குழம்பிய முகுந்தன் இறுதியில் பொட்டம்மானை விடும்படி உத்தரவிட்டார். இதை இறுதிவரை பொட்டம்மான் மறக்கவில்லைனிதை நான் அறிந்திருந்தேன். 1990ல் முஸ்லிம்களை குழப்புகிறேன் என்ற குற்றச்சாட்டில் மட்டக்களப்பில் வைத்து கரிகாலனும், டேவிட்டும் என்னை கடத்தினார்கள். முஸ்லிம் மக்கள் தொடர்பான என் நிலைபாட்டை மாற்றிக்கொள்ள மறுத்தேன். கருணா என்னை வந்து பார்த்தபோது வன்னிக்கு அறிவிக்காமல் எந்த முடிவும் எடுக்கக்கூடாது என சத்தியம் வாங்கினேன். ஒரிரு நாட்க்களின் பின்னர் கிரான் சுடலைக்கு மண்வெட்டி சகிதம் அழைத்துச் சென்றபோது இறுதி நேரத்தில் பொட்டம்மான் தலையிட்டு என்னை விடுவித்தார். கருணா பிரிந்தபோது மட்டக்களப்பு போராளிகளை சுட பிரபாகரனுக்கு மக்கள் ஆணை இல்லை பிரபாகரன் அவர்களை வீடுகளுக்கு போகும்படி சொல்லல்லாம் என அறிக்கை வெளியிட்டேன். குளோபல் செய்தி நடராஜா குருபரன் இந்த அறிக்கையை உடனேயே சூரியன் எவ் பெம்மில் ஒலிபரப்பினார். வீரகேசரி வாரமலரும் அதனை வெளியிட்டது. பின்னர் வன்னிக்கு சென்றபோது உறவினர்களும் நண்பர்களும் செத்தவீடு கொண்டாடினார்கள். எனினும் வன்னியில் எனது நிலைபாட்டை ஏற்றுக்கொண்டார்கள். நானும் அவர்கள் கேட்ட சில உதவிகளைச் செய்தேன். இதுபோலத்தான் நான் இலங்கைக்கு போகும் முடிவையும் சென்ற 8ம் திகதி அன்று எடுத்தேன். தடுத்துவிடுவாள் என்பதால் என் பயணம் பற்றி இறுதிவரை மனைவிக்கும் சொல்லவில்லை. நான் இலங்கை வரும் செய்தியை அறிந்து தோழர் தலைவர் ரவ்கக்கீம் என் கடவு சீட்டு இலக்கத்தை கேட்டு பெற்றுக்கொண்டார். விமான நிலையத்தில் சிக்கல் இருக்கவில்லை. கொழும்பிலிம் யாழிலும் பல நிகழ்வுகளுக்குக்குப் பின்னர் 22.11.13 மாலை ராணுவம் கைப்பற்றி வைதிருக்கும் எங்கள் குடும்பப் பண்ணையில் உள்ள எங்கள் அம்மாவின் சம்மாதிக்கு அஞ்சலி செலுத்த சென்றேன். மறுநாள் காலை முள்ளிவாய்க்கால் செல்ல திட்டமிட்டிருந்தேன். புலனாய்வாளர் என் தொடர்புகள் கருத்துக்கள் என்னைச் சந்திப்பவர்கள் மற்றும் என் பயணத்தடங்கள்போன்ற சகலதையும் எனதும் என்னோடு தொடர்புகொள்கிறவர்களதும் மொபைல் போண்கள் மூலம் கண்காணித்து வந்துள்ளனர். அம்மாவின் சமாதிக்கு 3 கிலோமீட்டர் முன்னே வன்னிவிழான்குளம் கோவில்முன்றலில் வைத்து இலங்கை பயங்கரவாத தடை பிரிவு (TID) என்னை தடுத்தது. சுற்றுலா விசாவில் குடிவரவு சட்டத்தைமீறி நாட்டுக்கெதிராக செயல்பட்டது இன நல்லிணக்கத்துக்கு பங்கம் விழைவிக்கும் வகையில் ஊடகங்களுக்கு பேட்டி கொடுத்தது என குற்றம் சாட்டினார்கள். தமிழ் முஸ்லிம் மக்களை ஒன்றுபடுத்தி வடகிழக்கு மாகாணங்களில் போராடத்தை ஆரம்பிக்கும் நோக்கம் எனக்கிருக்கக்கூடும் என அவர்கள் அஞ்சினார்கள். கைதா என கேட்டதற்க்கு தடுப்புக் காவல் என்றார்கள். அதனால் என் தொலைபேசியை அவர்கள் பறிக்கவில்லை. மேலும் என் தொலைபேசிதான் என் தொடர்பு வலைப்பின்னலைக் கண்காணிக்க அவர்களுக்குள்ள ஒரே சாதனமாகவும் இருந்தது. நான் உறுதியாக அம்மாவின் சமாதிக்கு போகவேணும் என்றேன். சாத்தியமில்லை என்றார்கள். நான் என் உச்சத்தாயியில் சுடுகிறதென்றால் சுடு கொல்வதென்றால் கொல் அம்மாவின் சமாதிக்கு போகாமல் நான் எங்கும் வரமாட்டேன் என கத்தினேன். நான் எதிர் பார்த்ததுபோலவே சம்பவத்துக்குச் சாட்ச்சியாக என்னை நன்கறிந்த வன்னி விளான்குள மக்கள் வேலிகளுக்கும் வீதிக்கும் வந்துவிட்டார்கள். மீண்டும் ரிடிஐ அலுவலர்கள் அம்மாவின் சமாதிக்கு போகமுடியாது என்றார்கள். நான் ஒன்றில் அம்மாவின் சமாதிக்கு போய்விட்டு விசாரணைக்கு வருகிறேன் அல்லது என்னைச் சுட்டுவிட்டு சடலத்தை விசாரணைக்கு எடுத்துச் செலுங்கள் என கத்தினேன். சம்பவம் நடந்துகொண்டிருக்கும்போதே வன்னிவிளான்குள மக்கள் நோர்வேயில் வசிக்கும் சுந்தரலிங்கம் கணபதிப்பிள்ளைக்கு தகவல் சொல்லிவிட்டார்கள். நல்லகாலமாக அவர் உடனேயே குளோபல் தமிழ் குருபரனுக்கு செய்தி கொடுத்துவிட்டார். நான் பசீர் சேகுதாவுத்துக்கு செய்தி சொன்னேன். சேதி உலகெல்லாம் பரவ ஆரம்பித்தது. இதுபற்றி ரிடிஐ அலுவலர்களுக்கும் தகவல் கிடைத்தது. அவர்கள் உறுதி தளர ஆரம்பித்தது. இறுதியில் என்னை அம்மாவின் சமாதிக்கு அழைத்துச் செல்ல உடன்பட்டார்கள். முன்னர் இராணுவ முகாமாய் இருந்து தற்போது இராணுவ சிவில் பிரிவின் கட்டுப்பட்டில் இருக்கும் என்கள் பண்ணைக்கு அழைத்துச் செல்லப்பட்டேன். அம்மாவின் சமதியை கண்டுபிடிக்க முடியவில்லை. ஒரு குறிப்பில் கற்பூரம் கொழுத்தி வணங்கினேன். பின்னர் என்னை விசாரணைக்காக வவுனியா அழைத்துச் சென்றார்கள். வழியில் மாங்குளம் பொலிஸ் நிலையத்தில் ரக் வண்டியில் இருந்த என்னுடன் மாங்குளம் பொலிஸ் அதிகாரி முரட்டுதனமாக பேசினார். நானும் அதே பாணியில் பதிலளித்தேன். ஆனாலும் பபயங்கரவாத விசாரணைப் பிடரிவினர் (TID) அவரை என்னுடன் தொடர்ந்துபேச அனுமதிக்கவில்லை. சுந்தரலிங்கத்துக்கும் குளோபல் தமிழ் செய்தி ஆசிரியர் நடராஜா குருபரனுக்கும் நன்றி. வவுனியா செல்ல முன்னமே என் கைது சர்வதேச செய்தியாகிவிட்டிருந்தது பற்றி TID அலுவலகர்கள் ஆச்சரியமடைந்தார்கள். ஒரிரவு, ஒருகாலைப்பொழுது விசாரணைக்குப் பிறகு கொழும்பில் குடிவரவு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டேன். உடனே விடுதலை சாத்தியமில்லை என தோன்றியது. முதலில் நெஞ்சுவலியென்றதால் கழுபோவில வைத்தியசாலையில் தங்க வைக்கப்பட்டேன். மறுநாள் அங்குள்ள பொலிசார் எனக்கெதிராக நோயாளிகளை தூண்டி சதி செய்ததார்கள். அதிஸ்ட்டவசமாக அங்குவந்த குடிவரவு துறை அதிகாரி அமித் பெரரோ என்னை அங்கிருந்து குடிவரவு பிரிவின் வெளிநாட்டவர்களுக்கான தடை முகாமுக்கு அழைத்துச் சென்றார். அதனால்தான் இன்று உயிரோடு இருக்கிறேன். என் விடுவிப்புக்கு வழி வகுத்த காரணிகள். 1. அமைச்சக வளமைக்கு மாறாக அரசு குற்றம் சாட்டியிருந்த நிலையில் அதை வலுவாக்கவேண்டிய நீதி அமைச்சர் ரவ் ஹக்கீம் அரசின் கருத்துக்கு எதிராக நான் குற்றமிழைக்கவில்லை என்ற நிலைபாட்டை துணிச்சலுடன் எடுத்தது. 2. ராஜதந்திர வளமைக்கு மாறாக தோழர் எரிக் சோல்கைம் என்னை நியாயப்படித்தியதும். இலங்கை அரசுக்குச் சவாலாக உறுதியான எச்சரிக்கை விடுத்ததும். இது போர்குற்ற விசாரணை பற்றிய ஐநா மனித உரிமை ஆணையக கூட்டம் இடம்பெறவுள்ள சூழலில் இலங்கைக்கு ஒரு அதிற்ச்சி வைத்தியமாகும். 3. பசீர் சேகுதாவுத்தின் அயராத ராசதந்திர முன்னெடுப்புகள். தயங்கிய இலங்கைப் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாயவிடம் ஜெயபாலனை விடுங்கள் அவன் பொய்சொல்லமாட்டான். பாதுகாவலர்கள் தன்னைக் கொடுமைப் படுத்தியதாக பொய்ப்பிரசாரம் செய்ய மாட்டான் என பசீர் என்னைக் கேட்க்காமலே உத்தரவாதம் கொடுதிருக்கிறான். 4.நோர்வீஜிய அரசின் உறுதியான நடவடிக்கைகள் 5.இலங்கை ஒருபோதும் எதிர்பார்க்கத அளவுக்கு சர்வதேச ரீதியாக ஊடகங்களும் கலைஞர்களும் மனித உரிமை ஆர்வலர்களும் முன்னெடுத்த கிளர்ச்சிகள். இதில் விரைந்து செயல்ப்பட்ட குருபரனும் தமிழ உறவுகளும் புலபம்பெயர்ந்த சமிழர்களும் பாசன மற்றும் மஞ்சுள வெடிவர்த்தன தலைமையில் சிங்கள தோழர்களும் முன்னணி வகுத்தார்கள். குமரகுருபரன் எனது மருமகன் ரமணன் தமிழக தோழன் டாண் அசோக், தமிழக மற்றும் புலம்பெயர் உறவுகள் பாசன் மஞ்சுள வெடிவர்த்தன போன்ற சிங்கள தோழர்கள். எனது தம்பி பாரதி மக்கள் ஆதி இளவேனில் மனைவி வாசுகி எல்லோருக்கும் என் நன்றிகள். விரைவில் விரிவாக எழுதுவேன். https://www.facebook.com/jaya.palan.9 கவிஞர் வ.ஜ.ச. ஜெயபாலன் நாடுகடத்தப்பட்ட பின்னர் வழங்கிய நேர்காணல் - நோர்வே தமிழ் 3 வானொலி (27.11.2013) தொடர்புகளுக்கு: radiotamil3@gmail.com http://www.youtube.com/watch?v=4dOgJclq0Bk&feature=youtu.be நான் எழுத வேன்டிய பலவற்றை எழுத நாளாகும். என்னை சந்தித்த எனக்காக பாடுபட்ட பலரின் பாதுகாப்பு பற்றி முதலில் உறுதி செய்யவேன்டியுள்ளது. அதற்க்கு எனக்கு 2 வாரமாவது வேன்டும். அதன்பின்னர் என்னுடைய 2ம் அறிக்கையை எழுதுவேன்.
  15. எனை வாழ்த்திய அன்புள்ளங்கள் சுபேஸ், புங்கைஊரான், நந்தன், கறுப்பி, தமிழ்ச்சூரியன், துளசி, விசுக்கு,தமிழரசு, இளம்கலைஞன், தப்பிலி அனைவருக்கும் என் அன்பும் நன்றிகளும். விரைவில் நம் மண்ணில் சந்திப்போம் என்கிற நம்பிக்கையுடன் - ஜெயபாலன்
  16. My E mail visjayapalan@hotmail.com

  17. அன்புக்குரிய தோழர்/தோழி சாருமதிக்கு. தங்கள் குறிப்புக்கு நன்றி. நேரமுள்ளபோது இதுபற்றி சற்று விரிவாக மின்னஞ்சல் எழுதுவீர்களா? எனது மின்னஞ்சல் முகவரி : visjayapalan@gmail.com அன்புடன் ஜெயபாலன்

  18. பிறந்த நாள் உங்களுக்கு ஒரு நூறும் பெருமை பெறும் நாட்கள் பலநூறுமாக நல்வாழ்த்துக்கள்

  19. poet

    ஹை நல்வரவாகுக

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.