• advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt

adsharan

கருத்துக்கள உறவுகள்
 • Content Count

  129
 • Joined

 • Last visited

Community Reputation

0 Neutral

About adsharan

 • Rank
  உறுப்பினர்
 • Birthday August 29

Contact Methods

 • MSN
  adsharan@hotmail.com
 • ICQ
  0

Profile Information

 • Gender
  Male
 • Location
  London
 • Interests
  reading

Recent Profile Visitors

1,127 profile views
 1. இந்திய விமானங்களை சுட்டு வீழ்த்திய பாகிஸ்தான்... எல்லையில் பயங்கரம்..!
 2. வசவுக்கு குறை வைக்காத எம் சமூகம்.. செய்து முடிச்சது என்ன...??! சாதித்தது என்ன..???! நல்ல விடயம் நடக்கும்போது நாலு பேர் நாலுவிதமாகதான் கதைப்பார்கள் ஆனால் இறுதியில் தர்மம்தான் வெல்லும் நல்லதே நடக்கும்.
 3. உங்கள் படம் வெற்றிபெற எனது வாழ்த்துக்கள்
 4. இத்தாலி கிண்ணத்தை கைப்பற்ற வேண்டும் அதனை வடிவமைத்தவர் விரும்புகிறார் இந்த ஆண்டு உலகக் கிண்ணத்தை இத்தாலி வென்று வர வேண்டும் என்று, தான் பெரிதும் ஆசைப்படுவதாக சிற்பி சில்வியோ கஸ்ஸானிகா ( வயது 75) கூறியுள்ளார். இத்தாலியைச் சேர்ந்த கஸ்ஸானிகா, மிலானில் பிறந்தவர். தற்போது பல நாடுகளில் ஒரே குறிக்கோளாக இருக்கும் பிபா உலகக் கிண்ணத்தை வடிவமைத்தவர் இவரே. பிபாவின் அதிகார பூர்வ இணையத் தளத்தில் ஒரு பேட்டியில் கஸ்ஸானிகா இவ்வாறு கூறியுள்ளார். "நான் வடிவமைத்த கிண்ணம் எனது சொந்த பூமிக்கே திரும்பி வர வேண்டும் என்பதில் பேராவலுடன் உள்ளேன்" என்றார் கஸ்ஸானிகா. http://www.thinakkural.com/news/2006/7/1/s...ws_page5470.htm
 5. இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் தாரணி
 6. பிலேயின் சாதனையை முறியடித்தார் ரொனால்டோ ஜப்பானுக்கு எதிரான மூன்றாவது லீக் போட்டியில் பிரேசில் அணி 4-1 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்றது. பிரேசிலின் நட்சத்திர வீரர் ரொனால்டோ இரண்டு கோல்கள் அடித்து புதிய சாதனை படைத்தார். இப் போட்டியில் தோல்வி அடைந்த ஜப்பான், உலகக் கிண்ணத் தொடரின் இரணடாவது சுற்றுக்கு தகுதி பெறும் வாய்ப்பை இழந்தது. மூன்றாவது லீக் போட்டியில் பிரேசில்,ஜப்பான் அணிகள் மோதின. முதல் இரண்டு லீக் போட்டிகளில் பிரேசில் வெற்றியையும்,ஜப்பான் ஒரு போட்டியில் டிராவும் செய்திருந்தன. இப் போட்டியில் வெற்றி பெற்றாக வேண்டிய கட்டாயத்தில் களமிறங்கியது ஜப்பான். 24 ஆவது நிமிடத்தில் ஜப்பானுக்கு அருமையான வாய்ப்பு அமைந்தது. கோல் லைனுக்கு அருகே ஷொட் அடிக்க முயன்ற அகிரா காஜியின் கனவை கலைத்தார் பிரேசில் வீரர் கில்பர்டோ.விடா முயற்சியோடு போராடிய ஜப்பான் அணிக்கு, ஆட்டத்தின் 34 ஆவது நிமிடத்தில் பலன் கிடைத்தது. அலெக்ஸ் கொடுத்த அருமையான பாஸை பெற்ற கெய்ஜி டமாடா பிரேசிலுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் கோல் அடித்து அசத்தினார். திகைத்துப் போன பிரேசிலுக்கு நட்சத்திர வீரர் ரொனால்டோ 46 ஆவது நிமிடத்தில் ஆறுதல் அளித்தார். இம்முறை பாஸ் கொடுத்தவர் ரொனால்டினோ. இவர் கொடுத்த பாஸை பெற்ற ரொபின்ஹோ தலையால் முட்ட அது ரொனால்டோவை நோக்கி வந்தது. நொடிப் பொழுதில் தலையால் முட்டி கோலாக்கினார் ரொனால்டோ. இதன் மூலம் உலகக் கிண்ண வரலாற்றில் பிரேசில் ஜாம்பவான் பிலேயின் (12 கோல்) சாதனையை முறியடித்தார். ரொனால்டோ (13 கோல்). முதல் பாதியில் இரு அணிகளும் தலா 1 கோல் அடித்திருந்தன. இரண்டாவது பாதியில் பிரேசில் முன்னிலை பெற கடுமையாக போராடியது. முதல் பாதியில் பிரேசிலின் கோல் மழையை பெருமளவு கட்டுப்படுத்திய ஜப்பான் கோல் கீப்பர் கவாகுச்சி இரண்டாவது பாதியில் சோபிக்க தவறினார். ஆட்டத்தின் 53 ஆவது நிமிடத்தில் பிரேசில் வீ ரர் ஜூனின்ஹோ 120 அடி தூரத்திலிருந்து அடித்த ஷொட் கோலாக மாறியது. இந்த அதிர்ச்சியில் இருந்து ஜப்பான் மீண்டு வருவதற்குள் பிரேசிலின் கில்பர்டோ 59 ஆவது நிமிடத்தில் அற்புதமாக கோல் அடித்தார். ரொனால்டினோ கொடுத்த அருமையான பாஸ், சர்வதேச கால்பந்து அரங்கில் கில்பர்டோவுக்கு முதல் கோலை பெற்று தந்தது. பிரேசில் முன்னிலை பெற காரணமாக இருந்த ரொனால்டினோ, ஆட்டத்தின் 71 ஆவது நிமிடத்தில் வெளியேறினார். அவருக்குப் பதில் வீரராக ரிகார்டினோ களமிறங்கினார். இரண்டாவது பாதியில் உலக சம்பியனான பிரேசிலின் ஆட்டத்துக்கு ஜப்பான் ஈடு கொடுக்க முடியவில்லை. சாதனை சமன் கடந்த இரண்டு லீக் போட்டிகளில் பதற்றத்துடன் விளையாடி வந்த பிரேசிலின் நட்சத்திர வீரர் ரொனால்டோ இந்தப் போட்டியில் கலக்கி விட்டார். பிரேசில் அணிக்காக தனது முதல் கோலை அடித்த இவர்,81 ஆவது நிமிடத்தில் இரண்டாவது கோலை அடித்தார். இதுவரை உலகக் கிண்ணத் தொடர்களில் 14 கோல்கள் அடித்துள்ள ரொனால்டோ, அதிக கோல் அடித்தவர் பட்டியலில் முதல் இடத்தில் உள்ள ஜேர்மனியின் முல்லர் சாதனையை சமன் செய்தார். இறுதியில் பிரேசில் 4-1 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்றது. இவ்வெற்றியின் மூலம் `எப்' பிரிவில் 9 புள்ளிகளுடன் முதல் இடத்தை பெற்று இரண்டாவது சுற்றுக்குள் நுழைந்தது பிரேசில் www.dinakural.com
 7. இன்றுடன் முதல் சுற்றுப்போட்டிகள் முடிவு [உலகக் கிண்ணப் போட்டியில் இன்று 23 ஆம் திகதி வெள்ளிக்கிழமை 4 போட்டிகள் நடைபெறவுள்ளன. இன்றைய போட்டிகளுடன் உலகக் கிண்ண ஆரம்பச் சுற்றுப் போட்டிகள் யாவும் முடிவடைகின்றன. இந்த ஆரம்பச் சுற்றில் மொத்தம் 48 போட்டிகள் நடைபெற்றுள்ளன. இன்று `ஜீ' பிரிவில் இரு போட்டிகளும், `எச்' பிரிவில் இரு போட்டிகளும் நடைபெறவுள்ளன. இப்பிரிவில் இன்றைய போட்டிகளின் முடிவுகளைப் பொறுத்தே 2 ஆம் சுற்று ஆட்டத்துக்கு தெரிவாகும் இரு அணிகளின் விபரம் தெரியவரும். இப்பிரிவின் 1 ஆவது ஆட்டத்தில் உக்ரைன்- டுனீசியா மோதுகின்றன. உக்ரைன் முன்னைய இரு போட்டிகளின் மூலம் 3 புள்ளிகளுடனும், டுனீசியா ஒரு புள்ளியுடனும் இருக்கின்றது. இன்றைய போட்டியில் வெற்றிபெறும் அணி 2 ஆம் சுற்றுக்குத் தெரிவாகும். இப்பிரிவின் மற்றொரு ஆட்டத்தில் ஸ்பெயின்- சவூதி அரேபியா அணிகள் மோதுகின்றன. ஸ்பெயின் முன்னைய இரு போட்டிகளிலும் வெற்றிபெற்று 6 புள்ளிகளுடன் 2 ஆம் சுற்றுக்குத் தெரிவாகிவிட்டது. சவூதி அரேபியாவுக்கு ஒரு புள்ளி மட்டுமே கிடைத்துள்ளது. `எச்'- பிரிவில் முதல் போட்டி டோஹா- பிரான்ஸ் அணிகளிடையே நடைபெறும். முன்னைய இரு போட்டிகளின் மூலம் பிரான்ஸ் 2 புள்ளிகளுடனும் டோஹா ஒரு புள்ளியுடனும் இருக்கின்றது. இப்போட்டியில் வெற்றிபெறும் அணி 2 ஆம் சுற்றுக்குத் தெரிவாகிவிடும். இப்பிரிவில் 2 ஆவது போட்டி சுவிற்சர்லாந்து- தென்கொரியா அணிகளிடையே நடைபெறவுள்ளது. முன்னைய இருபோட்டிகளிலும் சுவிற்சர்லாந்து வெற்றிபெற்று 6 புள்ளிகளுடனும் தென்கொரியா 4 புள்ளிகளுடனும் இருக்கின்றன. இப்போட்டியில் தென்கொரியா வெற்றிபெற்றால் இவ்வணி 2 ஆம் சுற்றுக்குத் தெரிவாகிவிடும். http://www.thinakkural.com/news/2006/6/23/...ws_page4978.htm
 8. உலகக் கிண்ண இன்றைய ஆட்டங்கள் உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில் இன்று வியாழக்கிழமை 4 போட்டிகள் நடைபெறவுள்ளன. இதில் ஈ பிரிவில் இரு போட்டிகளும், எப் பிரிவில் இரு போட்டி களும் நடைபெறவுள்ளன. ஈ பிரிவில் முதல் போட்டியில், இத்தாலி, செக் குடியரசு அணிகள் மோதுகின்றன. இத்தாலி, கானாவை 2-0 கோல்களினால் வெற்றி பெற்ற போதிலும் அமெரிக்காவுடன் வெற்றி தோல்வியின்றி (1-1) முடித்துக் கொண்டதால் 4 புள்ளிளை பெற்றுள்ளது. செக் குடியரசு முதலாவது ஆட்டத்தில் அமெரிக்காவை 3-0 கோல்களினால் வெற்றி பெற்ற போதிலும் கானாவிடம் 2-0 கோல்களினால் தோல்வி அடைந்த நிலையில் 3 புள்ளிகளைப் பெற்றுள்ளது. இன்றைய போட்டியில் எந்த அணி வெற்றி பெறுகின்றதோ அந்த அணி 2 ஆவது சுற்றுக்கு தெரிவாகும். மற்றொரு ஆட்டத்தில் கானா, அமெரிக்க அணிகள் மோதுகின்றன. கானா தற்போது 3 புள்ளிகள் பெற்றுள்ளது. அமெரிக்கா ஒரு புள்ளியையே பெற்றுள்ளது. இப்போட்டியில் கானா வெற்றி பெற்றால் 2 ஆம் சுற்றுக்கு தெரிவாகிவிடும். எப் பிரிவிலும் இன்று 2 போட்டிகள் நடைபெறவுள்ளன. ஒரு போட்டியில் பிரேசில், ஜப்பான் அணிகள் மோதுகின்றன. பிரேசில் அணி முதல் இரு போட்டிகளிலும் வெற்றி பெற்று 2 ஆம் சுற்றுக்கு தெரிவாகிவிட்டது. மற்றொரு ஆட்டத்தில் அவுஸ்திரேலியா, குரோஷியா அணிகள் மோதுகின்றன. அவுஸ்திரேலியா முதல் போட்டியில் ஜப்பானை 3-1 கோலினால் வென்று 3 புள்ளிகளைப் பெற்றுள்ளது. ஜப்பான், குரோஷியாவும் போட்டியிட்ட ஆட்டம் வெற்றி தோல்வியின்றி (0-0) முடிந்ததனால் இரு அணிகளும் தலா ஒரு புள்ளியைப் பெற்றுள்ளன. இப்பிரிவில் இன்று நடைபெறும் இரு போட்டிகளின் முடிவில் தான் 2 ஆவது சுற்றுக்குத் தெரிவாகும் அடுத்த அணி எது என்பது தெரிவாகும். http://www.thinakkural.com/news/2006/6/22/...ws_page4900.htm
 9. நெதர்லாந்து 0 ஆர்ஜென்டினா 0 ( 37 ) நிமிடங்கள்
 10. இத்தாலி-அமெரிக்கா அணிகளிடையேயான ஆட்டத்தில் இத்தாலி வீரர் டேனிலி டிரோசி, அமெரிக்க வீரர்கள் பேப்லோ, எடிட் போப் ஆகியோர் நடுவரால் சிவப்பு அட்டை காண்பிக்கப்பட்டு பாதியில் வெளியேற்றப்பட்டனர். உலகக் கிண்ணப் போட்டியில் ஒரே ஆட்டத்தில் 3 வீரர்களுக்கு சிவப்பு அட்டை காண்பிக்கப்பட்டு வெளியேற்றப்படுவது இது 4 ஆவது முறையாகும். *அமெரிக்காவுக்கு எதிரான ஆட்டத்தில் இத்தாலி வீரர் கிறிஸ்டியன் வாக்கர்டோ `சேம் சைற்' கோல் அடித்தார். இந்த உலகக் கிண்ணப் போட்டியில் அடிக்கப்பட்ட 2 ஆவது `சேம் சைற் கோல் இதுவாகும். இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் பராகுவே வீரர் கமரா சேம் சைற் கோல் அடித்தது தெரிந்ததே. * உலகக் கிண்ணப் போட்டியில் ஆர்ஜென்ரீனா மோதும் ஆட்டங்களை நேரில் ரசித்து வரும் ஆர்ஜென்ரீனா முன்னாள் கதாநாயக ஆட்டக்காரர் மரடோனா வேகமாக தனது காரில் ஹோட்டலுக்கு சென்றார். ஜேர்மனி பொலிஸார் மரடோனா மீது வழக்குப் பதிவு செய்து ரூ.25,000 அபராதம் விதித்தனர். * அமெரிக்காவுக்கு எதிரான ஆட்டத்தில் இத்தாலி வீரர் டேனியல் டிரோசியின் முழங்கை தாக்குதலால் அமெரிக்க வீரர் பிரைன் பெக்பிரிட்டுக்கு கண்ணுக்கு அருகில் காயம் ஏற்பட்டு இரத்தம் வழிந்தது. தனது முரட்டு ஆட்டத்தால் சிவப்பு அட்டை காண்பிக்கப்பட்டு வெளியேற்றப்பட்ட இத்தாலி வீரர் டிரோசி தனது முரட்டு ஆட்ட செயலுக்கு வருத்தம் தெரிவித்துள்ளார். வேண்டும் என்றே தான் அப்படி செயற்படவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். *சவூதி அரேபியாவின் நடுகள வீரர் முகமது அல்சால், தனது தாயார் இறந்ததைத் தொடர்ந்து நாடு திரும்பியுள்ளார். அவர் எப்போது ஜேர்மனிக்கு திரும்புகிறார் என்று தெரியவில்லை. உக்ரைனுக்கு எதிரான இன்றைய ஆட்டத்தில் முகமது அல்சால் ஆடவில்லை. * ஸ்பெயின் டுனிசியா அணிகளிடையேயான நேற்றைய போட்டியின் கமிஷனராக அகில இந்திய கால்பந்து சம்மேளனத் தலைவரும், மத்திய அமைச்சருமான பிரிய ரஞ்சன்தாஸ் முன்ஷி நியமிக்கப்பட்டுள்ளார். உலகக் கிண்ணக் கால்பந்து போட்டியில் இந்திய நிர்வாகி ஒருவர் போட்டி கமிஷனராக நியமிக்கப்பட்டது இதுவே முதல் முறையாகும். *அமெரிக்காவுக்கு எதிரான ஆட்டத்தில் சேம் சைற் கோல் காரணமாக இத்தாலி `டிரா' செய்தது. இதனால், அந்த அணி 2 ஆவது சுற்றுக்கு முன்னேறுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதனால் இத்தாலி அணியை அந்த நாட்டு பத்திரிகைகள் வசைமாரி பொழிந்துள்ளன http://www.thinakkural.com/news/2006/6/20/...ws_page4784.htm
 11. சிகரட் பிடிப்பவர்களுக்கு முகச் சுருக்கம் இருந்தால் நுரையீரல் புற்றுநோய் வரும் அறிகுறி [சிகரெட் பிடிப்பவர்களில் முகச்சுருக்கங்கள் இருக்குமானால், அவர்களுக்கு நுரையீரல் புற்றுநோய் வரும் என்று பிரிட்டன் மருத்துவ நிபுணர்கள் புதிய பீதியை கிளப்பியுள்ளனர். சிகரெட் பிடிப்பவர்களுக்கு புற்றுநோய் வரும் என்று ஆண்டாண்டு காலமாக சொல்லித்தான் வருகின்றனர். ஆனால், இன்னமும் பலரும் சிகரெட் பிடிப்பதை விடுவதே இல்லை. இளம் பருவத்தினரிடம் வளர்ந்து கொண்டு தான் இருக்கிறது இந்த பழக்கம். சிகரெட் கெடுதல்கள் பற்றி இன்னமும், ஆராய்ச்சிகள் செய்த வண்ணம் தான் உள்ளனர் மருத்துவ நிபுணர்கள். சமீபத்தில் பிரிட்டன் நாட்டில் உள்ள ரோயல் தவோன் எக்சேடர் மருத்துவமனை நிபுணர்கள், ஆராய்ச்சி பேராசிரியர் பிபேன் படேல் தலைமையில் ஆராய்ந்தனர். லண்டனில் இருக்கும் இந்திய நிபுணரான படேல் தலைமையில் இந்தக் குழுவினர், சிகரெட் பிடிப்பவர்கள் பலரிடம் மதிப்பீடும் செய்தனர். கடந்த சில ஆண்டுகளாக சிகரெட் பிடிக்கும் 78 குடும்பங்களைச் சேர்ந்த 45 முதல் 70 வயது வரை உள்ள 149 பேரிடம் மதிப்பீடு எடுக்கப்பட்டது. அவர்களில் சிலருக்கு முகத்தில் சுருக்கங்கள் இருந்தன. இவற்றின் அடிப்படையில், குழுவினர் ஆராய்ச்சி செய்தனர். ஆராய்ச்சி முடிவுகள் வருமாறு: சிகரெட் பிடிக்கும் நீண்டகால பழக்கம் உள்ளவர்களுக்கு புற்றுநோய் வருவதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன. அதில் ஒன்று தான் இப்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அது தான் முகத்தில் காணப்படும் சுருக்கங்களை வைத்து கண்டறியப்பட்டது. அந்த கோளாறுக்கு பெயர் `க்ரானிக் அப்ஸ்ட்ரக்டிவ் பல்முனோரி டீசிஸ்' என்பது. நுரையீரல் நோய்களுக்கு பொதுவாக சொல்லப்படும் மருத்துவ தொழில்நுட்ப வார்த்தை இது என்றாலும், பலருக்கு இது ஏற்படுகிறது. பிரிட்டனைப் பொறுத்தவரை பல இலட்சம் பேர் சிகரெட் பிடிக்கின்றனர். அவர்களில் 10 இலட்சம் பேருக்கு இத்தகைய பாதிப்பு உள்ளது. சிகரெட் பிடிப்பவர்களுக்கு நுரையீரல் புற்றுநோய் தான் மிக மோசமான, எளிதான பாதிப்பு என்று டாக்டர்கள் ஏற்கனவே கூறிவருகின்றனர். அடுத்த 2020 ஆம் ஆண்டில் இது தான் மிக அதிக உயிர்களை பலி கொல்லும் கோளாறாக இருக்கும் என்றும் கூறுகின்றனர். இதற்கு அறிகுறி தான் முகத்தில் காணும் சுருக்கங்கள். இப்படி சுருக்கங்கள் வந்தபின்னர் டாக்டரைப் பார்த்தால் நல்லது. இவ்வாறு நிபுணர்கள் தங்கள் ஆராய்ச்சி முடிவில் கூறியுள்ளனர் http://www.thinakkural.com/news/2006/6/20/...ws_page4789.htm