• advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt

Eelathirumagan

கருத்துக்கள உறவுகள்
 • Content Count

  549
 • Joined

 • Last visited

Community Reputation

42 Neutral

About Eelathirumagan

 • Rank
  உறுப்பினர்
 • Birthday March 2

Contact Methods

 • Website URL
  http://
 • ICQ
  0
 • Yahoo
  eelathirumagan@yahoo.com

Profile Information

 • Gender
  Male
 • Location
  USA
 • Interests
  Engineering, Philosophy, Higher Mathematics, General Relativity and Nano Technology

Recent Profile Visitors

1,602 profile views
 1. ம்ம். பணம் பண்ணும் பாடு. சம்ஸ்கிருதம் ஒரு மொழி. (ஆங்கிலம் போலவே). வேதமும் வேதாந்தமும் நமக்கு எட்டா தொலைவில் உள்ளன. ஆங்கிலம் மட்டுமே தெரிந்த ஒருவன், எப்படி வைத்திய நூல்களை வாசித்து விளக்கம் கொடுப்பானோ அதே மதிரித்தான் இந்த மனிதர்களும். இவர்களுக்கு வேதம், வேதாந்தம் எதுவுமே ஒரு பொருட்டல்ல. உங்கள் கலை, கலாச்சாரம், சமூக கட்டமைப்பு என்பவற்றை குலைப்பதுதான் குறிக்கோள். வேதம் வகுத்த தர்மத்தின் படி வாழ்ந்து பாருங்கள். பல உண்மைகள் புரியும். இப்போது நிறையவே விஞ்ஞானிகள் மேற்கத்தைய விஞ்ஞாக கருத்துக்களை கைவிட்டு, பௌத்தம் கூறிய “நாகார்ஜுன சூத்ரம்”, வேதாந்த கருத்துக்களை ஊன்றி படிக்கிறார்கள். அதற்காக, தங்கள் வாழ்க்கை முறையினைக்கூட மாற்றி, ஒரு பரிசோதனை போல வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். உங்களில் சிலபேர் அறிந்திருக்கக்கூடும். மனித இனம், அதன் பரிசோதனைக்களத்தில் தேவையற்ற பொருளாகிவிட்டது. அடுத்தது hybrid humans. இங்கு இருக்கும் பிரச்சனையே, எப்படி சடப்பொருட்களுக்கு அறிதிறனை (consciousness) கொடுப்பது என்பது தான். இதை தேடித்தான் இன்று கிழக்கு நோக்கி பயணிக்கிறார்கள். எமது மூதாதையர், தாம் கண்ட பேரறிவை ஏலுமான அளவு உபதேசங்களாகவும், சுவடிகளாகவும், பாட்டுக்களாகவும் விட்டு சென்றனர். இதெல்லாம் எமக்காக தான். சிறுபிள்ளை தனமாக, எதையும் நுண்ணறிவோடு நோக்காமல் தூக்கி வீசினால் குரங்காவது நாம் தான். தொப்பி யாரிடமோ போய்விடும். அன்புடன் - ஈழத்திருமகன் -
 2. திரு. ந. கிருஷ்ணன் அவர்களே. நீண்ட நாட்களாக என் மனதில் தோன்றிய விடயம். ஒரு 50 அல்லது 60 வருடங்களுக்கு முன், தமிழ்நாட்டில் துறைபோன தமிழறிஞர்கள் நிறையவே இருந்திருக்கிறார்கள். வரகனேரி வேங்கடேச சுப்ரமணிய ஐயர், மு.வரதராசனார், மீ.ப.சோமசுந்தரம், போன்றோர். ஆனால் இன்று அப்படி பெயர் சொல்லக்கூட யாரும் இல்லையே? திறமை ஜொலிக்கவில்லையே? காரணம் என்ன? இன்னொன்று: தமிழும் சம்ஸ்கிருதமும் இந்தியாவின் இரு கண்கள். இரண்டிற்கும் வெவ்வேறு பயன்பாடுகள் உண்டு. ஒலிக்கட்டுக்களால் ஆன சம்ஸ்கிருதம், ஒலி ரூபமாக நூல்களை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்வதற்கு உதவியிருக்கலாம். உதாரணமாக, நன்னூல்களை ஓதி உணர் என்று தான் தமிழில் கூட சொல்வார்கள். தமிழ்வேதம் திருஞானசம்பந்த பெருமான் “வேதம் ஓதி வெண்ணீறணிந்து ” என்று கூறவில்லையா? அச்சு ஊடகங்கள் இல்லாத காலத்தில் பதினாயிரக்கணக்கான பாசுர செய்யுட்களை கர்ண பரம்பரையாக தான் அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்ல முடியும். இன்று எமக்கு கிடைத்துள்ள தமிழ், சம்ஸ்கிருத சுவடிகள்கூட எண்ணற்ற மானுட ஜீவன்களின் முயற்சியால் தலைமுறை தலைமுறையாக கொண்டுவரப்பட்டு எமக்கு தரப்பட்டுள்ளன. இவற்றின் நுண்மான் நுழைபுலமறிந்து, மனித மேம்பாட்டிற்காக பாமர மக்களுக்கும் சுவறச்செய்யவேண்டியது கற்றோர் கடனல்லவா? வீணே யார் பெரிது என்று எண்ணாமல், எனது சமூகத்துக்கு நான் தரக்கூடிய உன்னதமான தகவல் எது என்று கண்டறிவதே ஆராட்சி. தமிழ் = அமிர்தம் சம்ஸ்கிருதம் = நன்றாக செய்யப்பட்டது அன்புடன் - ஈழத்திருமகன் -
 3. என்னை மிகவும் கவர்ந்த ஒரு தத்துவஞானி. நான் முதன்முதலில் வாசித்த நூல் “Limits of Thoughts", ஜே.கே மற்றும் டேவிக் போஹம். மிக அருமையான கலந்துரையாடல். இன்னொன்று “The awakening of intelligence", அறிவுசார் நூல்களில் ஒன்று.
 4. குருட்டினை நீக்கும் குருவினைக் கொள்ளார் குருட்டினை நீக்காக் குருவினைக் கொள்வர் குருடும் குருடும் குருட்டுஆட்டம் ஆடிக் குருடும் குருடும் குழிவீழு மாறே (திருமந்.1680) குரு என்னும் சொல், கு+ரு என பகுபடும். ரு - இருள் கு - நீக்குதல் அதன்படி, “குரு” என்பவர் அறியாமை என்னும் பேரிருளை நீக்குபவர் என பொருள்படும். அதாவது, ” எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல், ‘யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்’ என்று தன்னிலிருந்து பிறருக்குக் கடத்துகிற ஆசிரியர் ‘குரு’ ஆகிறார்” என்பது தவறாகும். ஒரு மாணவனின் அஞ்ஞான இருளை போக்குபவரே குரு. இங்கு எழுதிய இரு விடயங்களுக்குள்ளும் நிறைய வித்தியாசங்கள் உள்ளன. திருமந்திரம் பொருட்செறிவு மிகுந்த பொக்கிஷம். அதன் ரசத்தை பருகுவதற்கு நுண்ணறிவு மிகமுக்கியம். வெறுமனே தமிழ் விரித்தெழுதல் பயன் தரா. நுணுகி ஆராய்ந்து பாருங்கள் நண்பர்களே.
 5. மிகவும் துக்கம் தரும் செய்தி. சோழியன் அண்ணாவின் ஆத்மா சாந்தியடைவதாக.
 6. பேஷ் பேஷ் ... ரொம்ப நன்னாருக்கே. :lol:
 7. கரும் துளைகள் இருக்கக்கூடிய இடங்களை கணித ரீதியாக தருவிக்க முடியும், பிரபஞ்சத்தின் சக்தி ஊற்று இந்த கருந்துளைகள். காலம் இந்த கருந்துளைகளில் காணாமற் போய்விடும்.
 8. ம். ஆயிரம் வார்த்தைகளில் சொல்வதில் விட ஒருமுறை தன் உடலை Light Body ஆக மாற்றிக்காட்டினாலே போதுமே. :lol: மனிதர்களின் “ஆராய்ந்து அறியும்” குணாதிசயம் படிப்படியாக குறைந்து வருகிறது. எனவே இப்படியானவர்கள் எதை சொன்னாலும் அவற்றை நம்ப வேண்டிய கட்டாயத்துக்கு சாதாரண மனிதர்கள் ஆட்பட்டுள்ளனர்.
 9. ம்.. மிகவும் நல்லது, ஈசன் எனது கருத்துக்களை தொடரமுன், இரு விடயங்களை தெளிவுபடுத்த விரும்புகின்றேன். 1. நான் ஒரு உளவியலாளனோ அல்லது உளவியல் நூல்களை நுணுகி ஆராய்ந்தவனோ அல்ல. 2. இது ஒரு மிகவும் சிக்கலான பகுதி. சாதாரணமாக வாசிக்கும் நண்பர்கள் இதை நம்ப மறுக்கலாம். இனி, தத்துவார்த்த கொள்கைகளில் மிகவும் நுணுக்கமாக ஆராயப்படும் “நான்” என்னும் பதம் பற்றி விவரிப்பது தகும் என நினைக்கிறேன். ஒரு உடலின் ”இருப்பு” என்பது “நான்” என்னும் எண்ணக் கருவுடன் நேரடியாக தொடர்புபட்டது. நான் என்பதுதான் எம் எல்லோரையும் தன் மைய நோக்கி ஈர்ப்புடன் இயங்க வைப்பது. ஒரு நபர் இருக்கிறார் என்பதை ஒவ்வொரு கணமும் அவருக்கு நினைவு படுத்துவது இந்த “நான்”. எமது சகல விதமான விருப்பு, வெறுப்பு, கொள்கைகள், பகுப்புக்கள் எல்லாமே இந்த “நான்” என்பதை சுற்றி அமைக்கப்பட்டுள்ள கடினமான சுவர்களே. இந்த எண்ணச் சுவர்களின் மத்தியில் “நான்” என்னும் எண்ணமும் பாதுகாப்பாக, “என்றும் பயந்தபடி” இருக்கின்றது. இதை முதலில் உணர வேண்டும். மனித உடல் மட்டுமே “அந்த நபர்” என்றாகாது. ஒவ்வொரு கணமும் அதை இயக்கும் இந்த “நான்” என்பதும் வேண்டும். எனவே, ஒரு மனிதனின் இருப்பு என்பது கூட “ஒரு எண்ணம்” தான். இது தனியொருவருக்கும், பலருக்கும் பொருந்தும். உலகின் சகல தோற்றப்பாடுகளும் எண்ணங்கள் தான். இதை உலகமே எண்ணங்களின் கோர்வை எனலாம். ஒரு சிறு உதாரணத்தை பார்க்கலாம். இன்று நான் எனது வேலைத் தலத்திற்கு சென்று, திரும்பி வீடு வருகின்றேன் என்னும் நிகழ்ச்சி ஒரு எண்ணங்களின் கோர்வையே. கனவில் எப்படி அந்தக்கணத்தில் எல்லாமே மெய் போல தோன்றுகிறதோ, அவ்வாறே நனனும் ஒருபடி கூடிய கனவுதான். இது பலரும் நம்ப மறுக்கும் ஒன்று. கனவில் 5% விழிப்பு நிலை என்றால், நனவில் 20% விழிப்பு நிலை என எடுக்கலாம். அதாவது கனவிலும் பார்க்க நனவு எம்மை மிக நம்ப வைக்கின்றது. இந்த நனவிலும் பார்க்க அதிக விழிப்பு ஏற்படுமானால் இந்த நனவுகூட கனவாகலாம். நான் நண்பர்களை குழப்பவில்லை என நினைக்கின்றேன். :rolleyes: உங்கள் கருத்துக்களை பதியுங்கள். நாம் மெதுவாக செல்லலாம்.
 10. ஈசன், விஞ்ஞானமும் மெய்ஞானமும் ஒரே கோட்டில் பயணிக்க முடியாது. அடிப்படையில், விஞ்ஞானம் “ஏன்”, “எப்படி” என்ற கேள்விகளுடன் அதற்கான பதிலை தேடுகின்றது. விஞ்னான விளக்கம் என்பது இந்த கேள்விகளுக்கான பதில்களே. இந்த பதில்கள் முழுமையானதாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை. மற்றது சரியானபடி வரையறுக்கப்பட்ட செயன்முறைகள் மூலம் விளைவுகள் வாய்ப்புப்பார்கப்படலாம். உதாரணத்துக்கு, அன்று Youngs செய்த பரிசோதனையை நான் இன்றும் செய்து பார்க்கலாம். முடிபுகள் கிட்டத்தட்ட சரியாக இருக்கும். மேலும் தொடர்ச்சியான அறிவுக் கோர்வைகள், சரியானபடி இணைக்கப்படுகின்றன. மெய்ஞானத்தில் இது சாத்தியமல்ல. ஏன், எதற்கு என்ற கேள்விகள் அவ்வளவாக வரவேற்கப்படுவதில்லை. ஆனாலும் நமக்கே தெரியாத எதிர்கலத்திலும் , முற்பிறப்பு என்பதிலும் பல பதில்களை செருகி வைத்திருக்கின்றனர். இவை என்றுமே வாய்ப்பு பார்க்க முடியாதவை. எனவே ஒன்றோடொன்று இணையாத, விஞ்ஞான ரீதியில் மெய்ஞானத்தை அணுகுதல் சாத்தியமான ஒன்றல்ல. மேலும், ஆய்வுகூட பரிசோதனைகள் கூட, அதன் இறுக்கமான பார்வையில், தனி நபர் சார்ந்ததாகி விடுகின்றது. அங்கு பார்ப்பவனும் (observer) பார்க்கப்படும் பொருளும் (observed) வேறு வேறாக தெரியும் மாயத்தோற்றத்தாலேயே பரிசோதனைகள், தியறிகள் என்பன வருகின்றன. பார்ப்பவனும், பார்க்கப்படும் பொருளும் ஒன்றிவிட்டால் அங்கு நேரம் (time) , காலம் (period), தேசம் (space) என்பன ஒடுங்கிவிடும். அனுபவம் என்பது கூட அங்கு இருக்காது என நினைக்கின்றேன். எனவே, ஆபிரிக்க மதத்தை பின்பற்றுவதும், அதி உன்னதமான இன்னொரு மதத்தை பின்பற்றுவதும் ”அடிப்படையில்” ஒரே மாதிரித்தான். ஆனால் பின்னையதில் சிறிது கர்வம் வரலாம். சாதாரண விமானத்திலோ அல்லது உலங்கு வானூர்தியிலோ பயணித்து சந்திரனுக்கு போக முடியாதென்பது உண்மை எனும் போது எதில் பயணித்தால் என்ன? விமானம் சிறுது comfort ஆக இருக்கக்கூடும். உண்மைகளை தரிசிக்கும் அனுபவம் அற்புதமானது. பாருங்கள், ஒவ்வோர் உயிரினத்தின் வாழ்விலும் மரணம் என்பது சத்தியமான உணமை. என்றாவது அதை பற்றி சிந்திக்க தலைப்பட்டிருக்கிறோமா? உண்மைகளுக்கு பல வடிவங்கள் இல்லை. அது தன்னை செஞ்சூரியன் போல தகதகவென காட்டியபடி எந்தக்கணமும் உள்ளது. பொய்மையிலும், தற்காலிக சொகுசிலும் வாழ பிரியப்படும் மனம், உண்மைகளை பார்க்க அஞ்சும். உண்மைகள் பெரும் சுமையாக தோன்றும். எனவே ஒவ்வொரு மனமும் தனக்கு பிடித்தபடி ஏற்பாடுகளையும், அமைதி தரும் என அது நம்பும் முறைகளையும் கூட்டிணைத்து ஒரு செயல்முறையாக வாழ்க்கையை அமைத்து கொள்கிறது. இந்த பொய்மைகளை களைந்தெறிவது தான் மனித முன்னேற்றத்திற்கான முதற்படி. அமைதி, ஆத்மஞானம், காருண்யம் என்பன வெளியில் இருந்து என்றுமே, எப்போதுமே வர முடியாது. இது ஒவ்வொரு மனிதனுள்ளும் ஆழக்கிடங்கில் புதையுண்டிருக்கும் அற்புதமான அணிகலன்கள். state of mind என்பதை பற்றி இன்னொரு பதிவில் விரிவாக எழுதுவோம்.
 11. ஈசன், விஞ்ஞானம் ஒரு வடிவமைக்கப்பட்ட தர்க்க சாஸ்த்திரம் தானே. கணிதம் என்பது அதன் மொழியாக உள்ளது. மேலும் சாத்தியக்கூறு என்பதும் கணிதத்தின் ஒரு பகுதியே. ஆனால் கணிதம் என்பது முழுமையானது அல்ல. அதி உயர் கணித பகுமுறைகள் தம்முள் முரணானவை. உதாரணமாக ஐன்ஸ்டைன் கண்டறிந்த ஒரு தீர்வு ஓரலகு ஆரையுள்ள வட்டத்தின் பரிதி 2*Pi இலும் கூட. இது கணித ரீதியில் சாத்தியமில்லை. மாபெரும் கணித மேதை கோடெல், தன்னுடைய The Incompleteness Theorem என்பதில் கணிதத்தின் அடியாதாரங்களை முழுமையானதல்ல என விவரித்துள்ளார். முழுமையான பேருண்மையை, முழுமையற்ற தர்க்க விதிகளால் விவரிக்க முடியாது. எனவே அறிவு என்ற முழுமையற்ற தர்க்க பகுப்பாய்வுகள் பேருண்மையை கண்டுணர என்றுமே பயன்படாது. சித்தாந்தங்களும், வேதாந்தங்களும், விஞ்ஞானமும் அறிவின் வெவ்வேறு பகுதிகளே. எமது மனஸ் எப்படி தொழிற்படுகிறது? நான் மூளை பற்றி குறிப்பிடவில்லை. sub concious mind concious mind super concious mind பொதுவாகவே (1) எப்போதும் இயங்குவது. இதற்கு தர்க்க வியாக்கியானங்கள் தெரியாது. ஒருவரை மயக்க நிலையில் வைத்திருந்தாலும் இது வேலை செய்யும். வலி, கவலை, துன்பம், இன்பம் என்றவை இதை அணுகா. (இல்லையேல் மயக்க நிலையில் பல சத்திர சிகிச்சைகள் செய்ய முடியாது ) இதில் (2) நாம் விழிப்புடன் இருக்கும்போது இயங்குவது. பொதுவாகவே தர்க்கரீதியில் முடிவுகளை எடுக்கும். அறிவு தொழிற்படுவது இதில் தான். எமது கருத்துக்கள், எடுகோள்கள், பகுப்பாய்வுகள் எல்லாமே இத்தோடு நின்றுவிடுகின்றன. முக்கியமாக (3) மிக மிகச் சிலரே அடைந்திருக்கின்றனர். எல்லா மனிதரும், இதை இயக்க முடியும் என்பது ஒரு உண்மை. புவியீர்ப்பு எப்படி எல்லாருக்கும் ஒரே மாதிரி தொழிற்படுகிறதோ அதேபோல் இந்த (3) ம் எல்லோராலும் முடியும். ஆனால் இதை அடையும் வழி இலேசுப்பட்டதல்ல. எனவே, (1) + (2) ஐ கடக்காதவரை பேருண்மை புலப்படாது. இதில் விநோதம் என்னவென்றால், (3) ல் பேருண்மையை தரிசித்தவர்கள் எந்த பெருமுயற்சி செய்தாலும் (1) அல்லது (2) ல் உள்ளவர்களுடன் அதை பகிர்ந்து கொள்ள முடியாது. அவர்கள் மொழி மூலம் (இது ஏற்கனவே சொன்னது போல முழுமையற்றது) தாம் பெற்ற அனுபவங்களை பகிர முனைந்தனர். அதுவும் இயல்பாகவே பிறழ்வாகி போனது. எனவே சாஸ்திர சித்தாந்த வேதாந்தங்கள் மூலம் விடை தேடுவது பயனற்ற வேலை. இனி நீங்கள் சொன்ன Account Management. ஒரு சின்ன உதாரணம். எங்கள் வீட்டுக்கருகில் ஒரு குரக்கன் தோட்டம் இருந்தது. நான் எங்கள் வீட்டு பசு மாட்டை தோட்டத்துக்கருகில் மேயக்கட்டும் போது குரக்கன் பாத்திக்குள் போகாத மாதிரி அளவாக ஒரு கட்டை அடித்து கட்டி விடுவேன் . குரக்கன் தோட்டமும் தப்பியது, மாடும் மேய்ந்தது. மாடு ஒர் வட்ட பரப்பில் மேயும். எனவே மாட்டை பற்றி நான் பின்பு கவனிக்க வேண்டியது இல்லை. கயிறு அதை பார்த்துக்கொள்ளும். இந்த கயிறுதான் இயற்கை விதி. மாட்டை கயிற்றில் கட்டி விடுவது மட்டும் தான் என் வேலை. உங்களுக்கு புரியும் என நினைக்கிறேன்.
 12. ம். சற்றே வித்தியாசமான ஒரு திரி. நண்பர்கள் பகிர்ந்து கொண்ட கருத்துக்களை வாசித்தேன். நாம் இன்னும் கடந்து செல்ல வேண்டும். தத்துவங்கள், அவை எவ்வளவு உன்னதமாக இருந்தாலும், மெய்யறிவை உணர்ந்து கொள்ள உதவா. அவை விஞ்ஞானமாக இருந்தாலும் சரி, மெய்ஞானமாக இருந்தாலும் சரி. புரட்சி. ஏன் திடீர் என்று இந்த தேடல்? :rolleyes: