Jump to content
களத்தில் உள்நுழையும் வழிமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலதிக விளக்கங்களிற்கு

Eelathirumagan

கருத்துக்கள பார்வையாளர்கள்
 • Posts

  550
 • Joined

 • Last visited

Everything posted by Eelathirumagan

 1. இந்த யுகம் சமன்பாடுகளுக்கானது. எனக்கு தெரிந்த வகையில்இ பௌதிகவியலில் இரண்டே இரண்டு முறைதான் எமது புரிதல்கள் இருவேறு தளங்களுக்கு உந்தித்தள்ளப்பட்டன. முதலாவதாக சேர் ஐசாக் நியூட்டன் தன் இயக்க விதிகளை தந்தபோது இரண்டாவது ஆல்பேட் ஐன்ஸ்டைன் பொது சார்பியல் கொள்கைகளை வெளியிட்டபோது இரண்டுக்கும் கிட்டத்தட்ட 200 வருடங்கள் இடைவெளி. இந்த காலவெளியில் தரப்பட்ட கொள்கைகளை வைத்து சமன்பாடுகள்மூலம் இயந்திரங்களையும் ஆயுதங்களையும் உற்பத்தி செய்வது வியாபாரமாக்குவதாக உலகம் அசைந்து வந்திருக்கிறது. இதுவும் தொடரும். வியாபார உத்திகள் மட்டும் மாறும். இவை அனைத்தையும் கடந்து ஒவ்வொருகணமும் இயங்கியபடி ஏதோவொன்று உயிர்ப்புடன் இருக்கிறது. விஞ்ஞானமும் மெய்ஞானமும் அதை அறிய முனைகின்றன. சிறிது சிந்தித்துபாருங்கள். அடிப்படை கணிதம்கூட எமது எடுகோளே. உதாரணமாக புள்ளி என்பது கூட வரைவிலக்கண படுத்த முடியாத ஒன்று நேர்கோடு தளம் பொருள் எல்லாமே புள்ளி என்பதில் இருந்து வருவனவே. விசை என்பது கூட என்ன என்று புரியமுடியாத ஒன்று. நியூட்டன் மேலோட்டமாக சொல்லி சென்றார். இப்படி நிறைய விடயங்கள் ஆழமாக சென்றால் எல்லாம் எமது எடுகோள் என்பது புரியும்.
 2. ம்ம். பணம் பண்ணும் பாடு. சம்ஸ்கிருதம் ஒரு மொழி. (ஆங்கிலம் போலவே). வேதமும் வேதாந்தமும் நமக்கு எட்டா தொலைவில் உள்ளன. ஆங்கிலம் மட்டுமே தெரிந்த ஒருவன், எப்படி வைத்திய நூல்களை வாசித்து விளக்கம் கொடுப்பானோ அதே மதிரித்தான் இந்த மனிதர்களும். இவர்களுக்கு வேதம், வேதாந்தம் எதுவுமே ஒரு பொருட்டல்ல. உங்கள் கலை, கலாச்சாரம், சமூக கட்டமைப்பு என்பவற்றை குலைப்பதுதான் குறிக்கோள். வேதம் வகுத்த தர்மத்தின் படி வாழ்ந்து பாருங்கள். பல உண்மைகள் புரியும். இப்போது நிறையவே விஞ்ஞானிகள் மேற்கத்தைய விஞ்ஞாக கருத்துக்களை கைவிட்டு, பௌத்தம் கூறிய “நாகார்ஜுன சூத்ரம்”, வேதாந்த கருத்துக்களை ஊன்றி படிக்கிறார்கள். அதற்காக, தங்கள் வாழ்க்கை முறையினைக்கூட மாற்றி, ஒரு பரிசோதனை போல வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். உங்களில் சிலபேர் அறிந்திருக்கக்கூடும். மனித இனம், அதன் பரிசோதனைக்களத்தில் தேவையற்ற பொருளாகிவிட்டது. அடுத்தது hybrid humans. இங்கு இருக்கும் பிரச்சனையே, எப்படி சடப்பொருட்களுக்கு அறிதிறனை (consciousness) கொடுப்பது என்பது தான். இதை தேடித்தான் இன்று கிழக்கு நோக்கி பயணிக்கிறார்கள். எமது மூதாதையர், தாம் கண்ட பேரறிவை ஏலுமான அளவு உபதேசங்களாகவும், சுவடிகளாகவும், பாட்டுக்களாகவும் விட்டு சென்றனர். இதெல்லாம் எமக்காக தான். சிறுபிள்ளை தனமாக, எதையும் நுண்ணறிவோடு நோக்காமல் தூக்கி வீசினால் குரங்காவது நாம் தான். தொப்பி யாரிடமோ போய்விடும். அன்புடன் - ஈழத்திருமகன் -
 3. திரு. ந. கிருஷ்ணன் அவர்களே. நீண்ட நாட்களாக என் மனதில் தோன்றிய விடயம். ஒரு 50 அல்லது 60 வருடங்களுக்கு முன், தமிழ்நாட்டில் துறைபோன தமிழறிஞர்கள் நிறையவே இருந்திருக்கிறார்கள். வரகனேரி வேங்கடேச சுப்ரமணிய ஐயர், மு.வரதராசனார், மீ.ப.சோமசுந்தரம், போன்றோர். ஆனால் இன்று அப்படி பெயர் சொல்லக்கூட யாரும் இல்லையே? திறமை ஜொலிக்கவில்லையே? காரணம் என்ன? இன்னொன்று: தமிழும் சம்ஸ்கிருதமும் இந்தியாவின் இரு கண்கள். இரண்டிற்கும் வெவ்வேறு பயன்பாடுகள் உண்டு. ஒலிக்கட்டுக்களால் ஆன சம்ஸ்கிருதம், ஒலி ரூபமாக நூல்களை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்வதற்கு உதவியிருக்கலாம். உதாரணமாக, நன்னூல்களை ஓதி உணர் என்று தான் தமிழில் கூட சொல்வார்கள். தமிழ்வேதம் திருஞானசம்பந்த பெருமான் “வேதம் ஓதி வெண்ணீறணிந்து ” என்று கூறவில்லையா? அச்சு ஊடகங்கள் இல்லாத காலத்தில் பதினாயிரக்கணக்கான பாசுர செய்யுட்களை கர்ண பரம்பரையாக தான் அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்ல முடியும். இன்று எமக்கு கிடைத்துள்ள தமிழ், சம்ஸ்கிருத சுவடிகள்கூட எண்ணற்ற மானுட ஜீவன்களின் முயற்சியால் தலைமுறை தலைமுறையாக கொண்டுவரப்பட்டு எமக்கு தரப்பட்டுள்ளன. இவற்றின் நுண்மான் நுழைபுலமறிந்து, மனித மேம்பாட்டிற்காக பாமர மக்களுக்கும் சுவறச்செய்யவேண்டியது கற்றோர் கடனல்லவா? வீணே யார் பெரிது என்று எண்ணாமல், எனது சமூகத்துக்கு நான் தரக்கூடிய உன்னதமான தகவல் எது என்று கண்டறிவதே ஆராட்சி. தமிழ் = அமிர்தம் சம்ஸ்கிருதம் = நன்றாக செய்யப்பட்டது அன்புடன் - ஈழத்திருமகன் -
 4. மிகவும் துக்கம் தரும் செய்தி. சோழியன் அண்ணாவின் ஆத்மா சாந்தியடைவதாக.
 5. பேஷ் பேஷ் ... ரொம்ப நன்னாருக்கே. :lol:
 6. கரும் துளைகள் இருக்கக்கூடிய இடங்களை கணித ரீதியாக தருவிக்க முடியும், பிரபஞ்சத்தின் சக்தி ஊற்று இந்த கருந்துளைகள். காலம் இந்த கருந்துளைகளில் காணாமற் போய்விடும்.
 7. ம். ஆயிரம் வார்த்தைகளில் சொல்வதில் விட ஒருமுறை தன் உடலை Light Body ஆக மாற்றிக்காட்டினாலே போதுமே. :lol: மனிதர்களின் “ஆராய்ந்து அறியும்” குணாதிசயம் படிப்படியாக குறைந்து வருகிறது. எனவே இப்படியானவர்கள் எதை சொன்னாலும் அவற்றை நம்ப வேண்டிய கட்டாயத்துக்கு சாதாரண மனிதர்கள் ஆட்பட்டுள்ளனர்.
 8. ம்.. மிகவும் நல்லது, ஈசன் எனது கருத்துக்களை தொடரமுன், இரு விடயங்களை தெளிவுபடுத்த விரும்புகின்றேன். 1. நான் ஒரு உளவியலாளனோ அல்லது உளவியல் நூல்களை நுணுகி ஆராய்ந்தவனோ அல்ல. 2. இது ஒரு மிகவும் சிக்கலான பகுதி. சாதாரணமாக வாசிக்கும் நண்பர்கள் இதை நம்ப மறுக்கலாம். இனி, தத்துவார்த்த கொள்கைகளில் மிகவும் நுணுக்கமாக ஆராயப்படும் “நான்” என்னும் பதம் பற்றி விவரிப்பது தகும் என நினைக்கிறேன். ஒரு உடலின் ”இருப்பு” என்பது “நான்” என்னும் எண்ணக் கருவுடன் நேரடியாக தொடர்புபட்டது. நான் என்பதுதான் எம் எல்லோரையும் தன் மைய நோக்கி ஈர்ப்புடன் இயங்க வைப்பது. ஒரு நபர் இருக்கிறார் என்பதை ஒவ்வொரு கணமும் அவருக்கு நினைவு படுத்துவது இந்த “நான்”. எமது சகல விதமான விருப்பு, வெறுப்பு, கொள்கைகள், பகுப்புக்கள் எல்லாமே இந்த “நான்” என்பதை சுற்றி அமைக்கப்பட்டுள்ள கடினமான சுவர்களே. இந்த எண்ணச் சுவர்களின் மத்தியில் “நான்” என்னும் எண்ணமும் பாதுகாப்பாக, “என்றும் பயந்தபடி” இருக்கின்றது. இதை முதலில் உணர வேண்டும். மனித உடல் மட்டுமே “அந்த நபர்” என்றாகாது. ஒவ்வொரு கணமும் அதை இயக்கும் இந்த “நான்” என்பதும் வேண்டும். எனவே, ஒரு மனிதனின் இருப்பு என்பது கூட “ஒரு எண்ணம்” தான். இது தனியொருவருக்கும், பலருக்கும் பொருந்தும். உலகின் சகல தோற்றப்பாடுகளும் எண்ணங்கள் தான். இதை உலகமே எண்ணங்களின் கோர்வை எனலாம். ஒரு சிறு உதாரணத்தை பார்க்கலாம். இன்று நான் எனது வேலைத் தலத்திற்கு சென்று, திரும்பி வீடு வருகின்றேன் என்னும் நிகழ்ச்சி ஒரு எண்ணங்களின் கோர்வையே. கனவில் எப்படி அந்தக்கணத்தில் எல்லாமே மெய் போல தோன்றுகிறதோ, அவ்வாறே நனனும் ஒருபடி கூடிய கனவுதான். இது பலரும் நம்ப மறுக்கும் ஒன்று. கனவில் 5% விழிப்பு நிலை என்றால், நனவில் 20% விழிப்பு நிலை என எடுக்கலாம். அதாவது கனவிலும் பார்க்க நனவு எம்மை மிக நம்ப வைக்கின்றது. இந்த நனவிலும் பார்க்க அதிக விழிப்பு ஏற்படுமானால் இந்த நனவுகூட கனவாகலாம். நான் நண்பர்களை குழப்பவில்லை என நினைக்கின்றேன். :rolleyes: உங்கள் கருத்துக்களை பதியுங்கள். நாம் மெதுவாக செல்லலாம்.
 9. ஈசன், விஞ்ஞானமும் மெய்ஞானமும் ஒரே கோட்டில் பயணிக்க முடியாது. அடிப்படையில், விஞ்ஞானம் “ஏன்”, “எப்படி” என்ற கேள்விகளுடன் அதற்கான பதிலை தேடுகின்றது. விஞ்னான விளக்கம் என்பது இந்த கேள்விகளுக்கான பதில்களே. இந்த பதில்கள் முழுமையானதாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை. மற்றது சரியானபடி வரையறுக்கப்பட்ட செயன்முறைகள் மூலம் விளைவுகள் வாய்ப்புப்பார்கப்படலாம். உதாரணத்துக்கு, அன்று Youngs செய்த பரிசோதனையை நான் இன்றும் செய்து பார்க்கலாம். முடிபுகள் கிட்டத்தட்ட சரியாக இருக்கும். மேலும் தொடர்ச்சியான அறிவுக் கோர்வைகள், சரியானபடி இணைக்கப்படுகின்றன. மெய்ஞானத்தில் இது சாத்தியமல்ல. ஏன், எதற்கு என்ற கேள்விகள் அவ்வளவாக வரவேற்கப்படுவதில்லை. ஆனாலும் நமக்கே தெரியாத எதிர்கலத்திலும் , முற்பிறப்பு என்பதிலும் பல பதில்களை செருகி வைத்திருக்கின்றனர். இவை என்றுமே வாய்ப்பு பார்க்க முடியாதவை. எனவே ஒன்றோடொன்று இணையாத, விஞ்ஞான ரீதியில் மெய்ஞானத்தை அணுகுதல் சாத்தியமான ஒன்றல்ல. மேலும், ஆய்வுகூட பரிசோதனைகள் கூட, அதன் இறுக்கமான பார்வையில், தனி நபர் சார்ந்ததாகி விடுகின்றது. அங்கு பார்ப்பவனும் (observer) பார்க்கப்படும் பொருளும் (observed) வேறு வேறாக தெரியும் மாயத்தோற்றத்தாலேயே பரிசோதனைகள், தியறிகள் என்பன வருகின்றன. பார்ப்பவனும், பார்க்கப்படும் பொருளும் ஒன்றிவிட்டால் அங்கு நேரம் (time) , காலம் (period), தேசம் (space) என்பன ஒடுங்கிவிடும். அனுபவம் என்பது கூட அங்கு இருக்காது என நினைக்கின்றேன். எனவே, ஆபிரிக்க மதத்தை பின்பற்றுவதும், அதி உன்னதமான இன்னொரு மதத்தை பின்பற்றுவதும் ”அடிப்படையில்” ஒரே மாதிரித்தான். ஆனால் பின்னையதில் சிறிது கர்வம் வரலாம். சாதாரண விமானத்திலோ அல்லது உலங்கு வானூர்தியிலோ பயணித்து சந்திரனுக்கு போக முடியாதென்பது உண்மை எனும் போது எதில் பயணித்தால் என்ன? விமானம் சிறுது comfort ஆக இருக்கக்கூடும். உண்மைகளை தரிசிக்கும் அனுபவம் அற்புதமானது. பாருங்கள், ஒவ்வோர் உயிரினத்தின் வாழ்விலும் மரணம் என்பது சத்தியமான உணமை. என்றாவது அதை பற்றி சிந்திக்க தலைப்பட்டிருக்கிறோமா? உண்மைகளுக்கு பல வடிவங்கள் இல்லை. அது தன்னை செஞ்சூரியன் போல தகதகவென காட்டியபடி எந்தக்கணமும் உள்ளது. பொய்மையிலும், தற்காலிக சொகுசிலும் வாழ பிரியப்படும் மனம், உண்மைகளை பார்க்க அஞ்சும். உண்மைகள் பெரும் சுமையாக தோன்றும். எனவே ஒவ்வொரு மனமும் தனக்கு பிடித்தபடி ஏற்பாடுகளையும், அமைதி தரும் என அது நம்பும் முறைகளையும் கூட்டிணைத்து ஒரு செயல்முறையாக வாழ்க்கையை அமைத்து கொள்கிறது. இந்த பொய்மைகளை களைந்தெறிவது தான் மனித முன்னேற்றத்திற்கான முதற்படி. அமைதி, ஆத்மஞானம், காருண்யம் என்பன வெளியில் இருந்து என்றுமே, எப்போதுமே வர முடியாது. இது ஒவ்வொரு மனிதனுள்ளும் ஆழக்கிடங்கில் புதையுண்டிருக்கும் அற்புதமான அணிகலன்கள். state of mind என்பதை பற்றி இன்னொரு பதிவில் விரிவாக எழுதுவோம்.
 10. ஈசன், விஞ்ஞானம் ஒரு வடிவமைக்கப்பட்ட தர்க்க சாஸ்த்திரம் தானே. கணிதம் என்பது அதன் மொழியாக உள்ளது. மேலும் சாத்தியக்கூறு என்பதும் கணிதத்தின் ஒரு பகுதியே. ஆனால் கணிதம் என்பது முழுமையானது அல்ல. அதி உயர் கணித பகுமுறைகள் தம்முள் முரணானவை. உதாரணமாக ஐன்ஸ்டைன் கண்டறிந்த ஒரு தீர்வு ஓரலகு ஆரையுள்ள வட்டத்தின் பரிதி 2*Pi இலும் கூட. இது கணித ரீதியில் சாத்தியமில்லை. மாபெரும் கணித மேதை கோடெல், தன்னுடைய The Incompleteness Theorem என்பதில் கணிதத்தின் அடியாதாரங்களை முழுமையானதல்ல என விவரித்துள்ளார். முழுமையான பேருண்மையை, முழுமையற்ற தர்க்க விதிகளால் விவரிக்க முடியாது. எனவே அறிவு என்ற முழுமையற்ற தர்க்க பகுப்பாய்வுகள் பேருண்மையை கண்டுணர என்றுமே பயன்படாது. சித்தாந்தங்களும், வேதாந்தங்களும், விஞ்ஞானமும் அறிவின் வெவ்வேறு பகுதிகளே. எமது மனஸ் எப்படி தொழிற்படுகிறது? நான் மூளை பற்றி குறிப்பிடவில்லை. sub concious mind concious mind super concious mind பொதுவாகவே (1) எப்போதும் இயங்குவது. இதற்கு தர்க்க வியாக்கியானங்கள் தெரியாது. ஒருவரை மயக்க நிலையில் வைத்திருந்தாலும் இது வேலை செய்யும். வலி, கவலை, துன்பம், இன்பம் என்றவை இதை அணுகா. (இல்லையேல் மயக்க நிலையில் பல சத்திர சிகிச்சைகள் செய்ய முடியாது ) இதில் (2) நாம் விழிப்புடன் இருக்கும்போது இயங்குவது. பொதுவாகவே தர்க்கரீதியில் முடிவுகளை எடுக்கும். அறிவு தொழிற்படுவது இதில் தான். எமது கருத்துக்கள், எடுகோள்கள், பகுப்பாய்வுகள் எல்லாமே இத்தோடு நின்றுவிடுகின்றன. முக்கியமாக (3) மிக மிகச் சிலரே அடைந்திருக்கின்றனர். எல்லா மனிதரும், இதை இயக்க முடியும் என்பது ஒரு உண்மை. புவியீர்ப்பு எப்படி எல்லாருக்கும் ஒரே மாதிரி தொழிற்படுகிறதோ அதேபோல் இந்த (3) ம் எல்லோராலும் முடியும். ஆனால் இதை அடையும் வழி இலேசுப்பட்டதல்ல. எனவே, (1) + (2) ஐ கடக்காதவரை பேருண்மை புலப்படாது. இதில் விநோதம் என்னவென்றால், (3) ல் பேருண்மையை தரிசித்தவர்கள் எந்த பெருமுயற்சி செய்தாலும் (1) அல்லது (2) ல் உள்ளவர்களுடன் அதை பகிர்ந்து கொள்ள முடியாது. அவர்கள் மொழி மூலம் (இது ஏற்கனவே சொன்னது போல முழுமையற்றது) தாம் பெற்ற அனுபவங்களை பகிர முனைந்தனர். அதுவும் இயல்பாகவே பிறழ்வாகி போனது. எனவே சாஸ்திர சித்தாந்த வேதாந்தங்கள் மூலம் விடை தேடுவது பயனற்ற வேலை. இனி நீங்கள் சொன்ன Account Management. ஒரு சின்ன உதாரணம். எங்கள் வீட்டுக்கருகில் ஒரு குரக்கன் தோட்டம் இருந்தது. நான் எங்கள் வீட்டு பசு மாட்டை தோட்டத்துக்கருகில் மேயக்கட்டும் போது குரக்கன் பாத்திக்குள் போகாத மாதிரி அளவாக ஒரு கட்டை அடித்து கட்டி விடுவேன் . குரக்கன் தோட்டமும் தப்பியது, மாடும் மேய்ந்தது. மாடு ஒர் வட்ட பரப்பில் மேயும். எனவே மாட்டை பற்றி நான் பின்பு கவனிக்க வேண்டியது இல்லை. கயிறு அதை பார்த்துக்கொள்ளும். இந்த கயிறுதான் இயற்கை விதி. மாட்டை கயிற்றில் கட்டி விடுவது மட்டும் தான் என் வேலை. உங்களுக்கு புரியும் என நினைக்கிறேன்.
 11. ம். சற்றே வித்தியாசமான ஒரு திரி. நண்பர்கள் பகிர்ந்து கொண்ட கருத்துக்களை வாசித்தேன். நாம் இன்னும் கடந்து செல்ல வேண்டும். தத்துவங்கள், அவை எவ்வளவு உன்னதமாக இருந்தாலும், மெய்யறிவை உணர்ந்து கொள்ள உதவா. அவை விஞ்ஞானமாக இருந்தாலும் சரி, மெய்ஞானமாக இருந்தாலும் சரி. புரட்சி. ஏன் திடீர் என்று இந்த தேடல்? :rolleyes:
 12. சிலேடையில் காளமேகத்தை விஞ்சியவர் இல்லை எனலாம்.. இங்கு எலுமிச்சம் பழத்துக்கும் பாம்புக்கும் பொருந்தும்படி வெண்பா பாடியிருக்கிறார். பெரியவிட மேசேரும் பித்தர்முடி ஏறும் அரியுண்ணும் உப்பும்மேல் ஆடும் - எரிகுணமாம் தேம்பொழியும் சோலைத் திருமலைரா யன்வரையில் பாம்பும் எலுமிச்சம் பழம். பெரியவிடமே சேரும் - எலுமிச்சை பெரியவர்களுக்கு மரியாதை நிமித்தம் தரப்படுவது. பாம்பில் பெரிய விசமே இருக்கிறது. பித்தர் முடியேறும் - பித்தம் பிடித்தவர் தலையில் எலுமிச்சை வைத்து தேய்ப்பார்கள். பித்தனாகிய சிவன் தலையில் இருப்பதும் பாம்பே. அரியுண்ணும் - எலுமிச்சை பழம் அரிபடும் (ஊறுகாய்க்காக வெட்டுப்படும்), பாம்பும் காற்றை (அரி) உண்ணும். உப்பும் - எலுமிச்சம்பழ ஊறுகாய்க்கு உப்பும் சேர்க்கப்படும். பாம்பு உப்பிப் பெருக்கும். எரிகுணமாம் - எலுமிச்சை காயத்தில் பட்டால் எரியும். பாம்பின் கடிவிடமும் எரியும். என்று வருகிறது இந்தப் பாடல்.
 13. காளமேகம் தில்லை நடராசரை தரிசித்து மீண்டபோது தில்லை மூவாயிரர் "நடராசர் கையில் இருக்கும் மான் தன் முகத்தையும் முன்னங்கால்களையும் அவர் திருமுகத்துக்கு நேராக உயரத் தூக்கியிருப்பதன் காரணம் என்னவோ?" என கேட்டனர். அதற்கு காளமேகம், பொன்னம் சடையறுகம் புல்லுக்கும் பூம்புனற்கும் தன்னெஞ்சு உவகையுறத் தாவுமே - அன்னங்கள் செய்கமலட்த்து உற்றுலவும் தில்லை நடராசன் கைக்கமலத்து உற்றமான் கன்று. பொன்னம்பலத்தானுடைய சடை (சடாமுடி) அறுகம்புல் போன்றது. அவர் தலையில் கங்கை குடிகொண்டிருப்பதால் பூம் புனலும் கிடைக்கும். எனவே அறுகம்புல்லும் தண்ணீரும் கிடைத்ததென மிக அகமகிழ்ந்து தன் முன்னங்கால்களை உயர்த்தி நடராசரை நோக்க்கி பாய்கிறது என பொருள்படும்படி வெண்பா பாடினார்.
 14. ஒருமுறை ஔவைப்பாட்டி ஒரு வீட்டுக்கு விருந்து சாப்பிட அழைக்கப்பட்டிருந்தார். பாவம் அந்த வீட்டு தலைவன். அவர் மனைவிக்கு மிகவும் பயந்தவர். ஔவையார் விருந்துக்கு வந்தபின் என்ன நடைபெற்றதென்பதை அவரே பாடிவிடுகிறார். இருந்து முகந்திருத்தி ஈரோடு பேன்வாங்கி விருந்தொன்று வந்ததென விளம்ப - வருந்திமிக ஆடினாள் பாடினாள் ஆடிப் பழம்முறத்தால் சாடினாள் ஓடோடத் தான். இருந்து முகந்திருத்தி - தன் மனைவிக்கு அருகில் சென்று அமர்ந்து, இனிய கதைகள் பேசி என்றுமே சிடுசிடுவென இருக்கும் அவள் கொடிய முகத்தில் சிறிது மகிழ்ச்சி வரும்படியாக அதை திருத்தி, ஈரோடு பேன்வாங்கி - மனைவி தலையில் ஈர் பேன் என்பவற்றை வாரியெடுத்து (நயமாக நடப்பதாக காண்பித்து) விருந்தொன்று வந்ததென விளம்ப - இஞ்சரப்பா, எங்கடை வீட்டுக்கு விருந்து சாப்பிட ஒருவர் வந்திருக்கிறார் என சொன்னதுதான் தாமதம் வருந்திமிக - மிக்க கோபமுற்று ஆடினாள் பாடினாள் - உருத்திர தாண்டவமாடி, வசைமொழிகள் பேசி ஆடிப் பழம்முறத்தால் சாடினாள் ஓடோடத்தான் - கிடந்த பழைய முறத்தினால் (முறம் - சுழகு) கணவனை ஓடோட விரட்டி விரட்டி அடித்தாள். B) B)
 15. நல்லது சுவி. அறிந்தவற்றை இணயுங்கள். இது காளமேகம், தன் அத்தைமகள் சமைத்த உணவைப்பற்றி பாடியது. எல்லாச் சொற்களுக்கும் பொருள் தெரியவில்லை. தெரிந்தவர்கள் பொருளெழுதவும். கரிக்காய பொரித்தாள்கன் னிக்காயைத் தீய்த்தாள் பரிக்காயைப் பச்சடியாப் பண்ணாள் - உருக்கம்உள்ள அப்பைக்காய் நெய்துவட்டல் ஆக்கினாள் அத்தைமகள் உப்புக்காண் சீச்சி உமி. ஆமாம். புலிகேசியின்மேல் பாடப்பட்ட சிலேடையை இணைத்துவிடுங்கள். B)
 16. காளமேகப் புலவர் வைத்தீஸ்வரப் பெருமானை தரிசித்து இகழ்வதுபோல் பாடியது வாதக்கால் ஆம்தமக்கு மைத்துனர்க்கு நீரிழிவாம் பேதப் பெருவயிறாம் பிள்ளைதனக்கு - ஒதக்கேள் வந்தவினை தீர்க்க வகையறியார் வேற்றூரார் எந்தவினை தீர்ப்பார் இவர். வாதக்கால் ஆம்தமக்கு - ஒருகாலை எப்போதுமே கீழேவைக்க முடியாமல் தூக்கி ஆடுவதால் மைத்துனர்க்கு நீரிழிவாம் - சிவனின் மைத்துனர் விஷ்ணு கடலிலே படுத்திருப்பதால் பேதப் பெருவயிறாம் பிள்ளைதனக்கு - பேழைவயிறுடைய விநாயகப் பெருமான் ஓதக்கேள் - சொல்வதைக் கேள் இவ்வாறாக தமக்கு வந்த நோயை தீர்க்கவே வகையறியாது திண்டாடுபவர்கள் மற்றவர் நோயை எப்படி தீர்ப்பார் என நகைச்சுவையாக கேட்கிறார்.
 17. தெனாலியும் பிராம்மணர்களும்: மன்னர் கிருஷ்ணதேவராயரின் தாயார் மரணப்படுக்கையில் இருந்தபொது, தன் இறுதி மூச்சை விடுவதற்கு முன் தன் மகன் ராயரிடம் ஒரு மாங்கனி கேட்டார். சேடிகள் மாங்கனி வெட்டி எடுத்து வருவதற்குள் அவரின் உயிர் பிரிந்து விட்டது. ராயருக்கோ அடங்காத துன்பம். தாயின் ஆத்மா சாந்தியடையாதே என்று பெருங் கிலேசமடைந்தார். என்ன செய்வாது? தன் அரசவை பிராம்மணர்களை அழைத்து ஏதாவது வழி இருக்கிறதா என கேட்டு வைத்தார். பேராசைக்கார பிராம்மணர்களும் மிக்க நல்ல சந்தர்ப்பம் வாய்த்ததென மகிழ்ந்து, "மன்னா!! ஒரு வெள்ளித் தட்டில் பசும்பொன்னால் செய்த இரட்டை மாங்கனிகளை வைத்து 108 பிராம்மணர்களுக்கு தானம் செய்தால் உங்கள் தாயார் ஆத்மா சாந்தியடையும்." என பெரிய பொய்யொன்றை வாய்கூசாமல் சொல்லிவைத்தார்கள். மன்னரும் சரியெனெ ஒப்புக் கொண்டு, 108 பிராம்மணர்களுக்கு பொன்னால் செய்த இரட்டை மாங்கனிகளும் வெள்ளித்தட்டும் தானமாக கொடுத்தார். இந்த வேடிக்கையை பார்த்த ராமன் மனம் மிக நொந்து, "இப்படி பகற்கொள்ளை அடிக்கிறார்களே. இவர்களுக்கு தக்க பாடம் புகட்ட வேண்டும்" என மனதில் நினைத்துக்கொண்டு அரச சபை சென்றான். வழியில் கண்ட பிராம்மணர்களுக்கெல்லாம் "எனது தாயாரின் ஆத்மா சாந்தியடைய நானும் 108 பிராம்மணர்களுக்கு தானம் செய்ய போகிறேன். அவசியம் வரவேண்டும்" என அழைப்பு விடுத்தான். இந்த செய்தி பேராசைக்கார பிராம்மணரிடையே காட்டுத்தீயாக பரவியது. 108 பிராம்மணர்கள் ராமன் வீட்டில் சங்கற்பம் தரித்து உக்கார்ந்திருக்க, ராமன் அவர்கள் ஒவ்வொருவராக வந்து தானம் பெறுமாறு ஒரு இரகசிய அறைக்கு அழைத்துச் சென்றான். இருண்ட அந்த அறையில் ஒரு அடுப்பில் இரும்புக்கம்பி செக்கச் செவேல் என்று காய்ந்துகொண்டு இருந்தது. அதை எடுத்து பிராம்மணர்கள் கைகளிலும் கால்களிலும் சூடு வைத்து அடித்து துரத்திவிட்டான். சூடுவைத்த வெப்பு ரணமும், அடி உபாதையின் வலியும் தாங்கமாட்டாது "ஓவென" புலம்பியபடி மன்னர் ராயரின் அரண்மனை நோக்கி ஓட்டமெடுத்தனர் பிராம்மணர். வழக்கை விசாரித்த ராயர், "அடே ராமா!! ஏன் இந்த கொடிய பாதக செயலை செய்தாய்?" என்று கேட்க, ராமன் மிகவும் பவ்யமாக "மன்னா!! எனது தாயார் வலிப்பு நோயால் கடும் அவஸ்த்தைப்பட்டார். நோயில் இருந்து விடுபடுவதற்காக வைத்தியர் கூறியதுபோல் இரும்புக் கம்பியை காய்ச்சி சூடுவைக்குமாறு வருந்திக் கேட்டார். நான் அதை தயார்செய்து எடுத்துவருவதற்குள் பரலோகம் அடைந்துவிட்டார். என்ன செய்வது. இதுநாள் வரையில் அவர் ஆத்மா சாந்தியடைய எந்த வழியும் தெரியவில்லை. இந்த பிராம்மணர்கள் தங்க மாங்கனி பெற்று உங்கள் தாயாரின் ஆத்மாவை சாந்தியடைய வைத்தபோதுதான் எனக்கும் வழி தெரிந்தது" என கூறினான். இதைக் கேட்ட பிராம்மணர் சொல்வதற்கேதுமின்றி வாய்மூடி மௌனியாக தலைகுனிந்து நின்றனர். மன்னரும் மற்றையோரும் பிராம்மணரின் பேராசை நிமித்தம் அவர்கள் அடைந்த தண்டனை கண்டு சிரிப்பாய் சிரித்தனர்.
 18. ஆமாம். கண்ணதாசன்கூட சிலேடை பாடல்கள் பாடியுள்ளார். "அத்திக்காய் காய்காய் ஆலங்காய் வெண்ணிலவே" எனும் பாடல்தான் உடனே ஞாபகத்துக்கு வருகிறது. பாடலை தெரிந்தவர்கள் பொருளுடன் இணைத்தால் நல்லது.
 19. நல்லது ஈழவன், வெண்ணிலா. சின்னப் பிள்ளைகள் நிறையக் கதை படியுங்கோ.
 20. ம்.. இன்னொரு கதை. வெற்றித் திருநகரை ஆண்டுவந்த கிருஷ்ணதேவராயரின் அரண்மனை விகடகவி தெனாலிராமன் மீது பிராமணர்களுக்கு கடுங்கோபம். அது ஏன் என பிறகு எழுதுகிறேன். ஒருமுறை கடும் வயிற்று நோவினால் தெனாலிராமன் அவஸ்த்தைப்பட்டு, ஊண் உறக்கம் இன்றி மெலிந்து துரும்பாக இளைத்துவிட்டான். அரண்மனை வைத்தியர் உட்பட பலரும் மருந்து செய்தும் ஆள் தேறியபாடில்லை. ராமன் மனைவிக்கோ பயம் தொற்றிக் கொண்டது. என்ன செய்வது என கடுமையாக யோசித்த போது, பட்டாபிஷேக சர்மா உடனே நினைவுக்கு வந்தார். அவரிடம் கேட்டால் ஏதாவது யாகம், மந்திரம் செய்து ராமனை பிளைக்க வைத்துவிடுவார் என பூரணமாக நம்பினாள். விடயத்தை கூர்ந்து கேட்ட பட்டாபிஷேக சர்மா, ஏற்கெனவே ராமன்மீதிருந்த குரோதத்தை நினைத்துக்கொண்டே, அவனை பழிக்குப் பழி வாங்க நல்ல சந்தர்ப்பம் வாய்த்ததடா சாமி என சந்தோஷப்பட்டு ராமன் வீட்டுக்கு வந்து பார்ப்பதாக கூறி அனுப்பினார். ராமன் மனைவியும் ஒருவாறு தேறி, வீடுசென்றாள். அடுத்த நல்ல முகூர்த்தத்தில் பட்டாபி சர்மா இராமனை பார்க்க வந்து, "அடே ராமா, பார்த்தாயா? பிராம்மணர்களை வதைத்த தோஷம் உன்னை பிடித்திருக்கிறது. இதற்கு ஒரு யாகம் செய்தால் சரியாக போய்விடும். ஆனாலும் நிறைய பொற்காசுகள் செலவாகுமே? என்ன செய்வது?" என ராமனுக்கு ஒரு போடு போட்டார். பட்டாபி சர்மாவின் வஞ்சனை ராமனுக்கு உடனே புரிந்தது. அவனும், "அய்யா பிராம்மணரே, சாவது விதியென்றால் யாரால் மாற்ற இயலும். போனால் போகட்டும். என்பாட்டில் இருக்கும்வரை இருந்துவிட்டு போகிறேன். இந்த யாகங்களுக்கெல்லாம் என்னிடம் பொற்காசுகள் இல்லை" என வேண்டா வெறுப்புடன் கூற, எங்கே தன் பணம்பண்ணும் வேலை பாழாய்ப் போய்விடுமோ என்று பயந்த பட்டாபி சர்மா, "அடப் பாவி. உயிரைவிடவா பொருள் பெரிது. நீ இப்பொழுது பணம் தரவேண்டாம். நீ பூரணகுணமானதும் உன் குதிரையை விற்று அந்த பணம் முழுவதையும் எனக்கே தந்துவிடவேண்டும்" இதுதான் நமக்குள் எழுதாத ஒப்பந்தம் என அடித்து சத்தியம் வாங்கிக்கொண்டு வீடுசென்றார். அடுத்த கிழமை, ராமனின் வீட்டில் ஒரே அமர்க்களம் போங்கள். தடல்புடலான யாகம், பல்வேறு பட்சணபலகாரங்களுடன் அமோகமாய் நடந்தேறியது. பட்டாபி சர்மாவும், மிகுந்த விநயத்டுடன், யாகத்தை முடித்து, இருந்த பல்வேறு பதார்த்தங்களையும் அள்ளிக் கொண்டு வீடு சென்றார். பிராம்மணர் செய்த யாகம் எப்படியும் கணவனை குணப்படுத்தி விடும் என்று ராமன் மனைவிக்கு ஒரு நம்பிக்கை இருந்தது. நம்பிக்கை வீண்போகவில்லை. ராமனும் நாளொரு மேனியாக தேறி, பழைய அலங்காரங்களுடன் கொலுவாக வீற்றிருந்தான். பணத்தை வசூல்செய்ய பட்டாபியும் ஒவ்வொரு நாளும் ராமன் வீட்டுக்கு நடையாய் நடந்து துரும்பாய் இளைத்துவிட்டார். ராமனோ பணத்தை தருவதாக இல்லை. இறுதியில், பொற்காசு பெறாமல் நான் வீடு ஏகேன் என பிராம்மணர் ஒரே முடிவாக ராமன் வீட்டில் இருந்துவிட்டார். ராமனுக்கும் மனசு பொறுக்கவில்லை. பிராம்மணரின் பேராசையை மட்டந்தட்ட எண்ணினான். பட்டாபியை பார்த்து, "பிராம்மணரே!! என்னுடன் வாரும். சந்தையில் குதிரையை விற்று உமக்கு பொற்காசுகளை தருகிறேன்" என்று கூற, அவரும் மிகுந்த சந்தோசத்துடன் "ராமா!! நமக்குள் இருக்கும் ஒப்பந்தம் நன்றாக ஞாபகம் இருக்கட்டும். குதிரைவிற்ற பொற்காசு அவ்வளவும் எனக்கே" என மீண்டும் ஞாபகமூட்டினார். சந்தைக்கு புறப்படும்போது ராமன் வீட்டில் நின்ற வெள்ளை பூனைக்குட்டியையும் கடாசுவதற்காக தன்னுடன் எடுத்து சென்றான். வீட்டில் பூனைக்குட்டியின் கொடுமை தாங்க முடியாது. அன்று சந்தையில் குதிரைகள் படு கலாதியாக, அதிக விலைக்கு விற்பனையாகிக் கொண்டு இருந்தன. பிராம்மணருக்கு மகிழ்ச்சி தாளமுடியவில்லை. ஒப்பந்தத்தை மீண்டும் மீண்டும் ராமனுக்கு நினைவுபடுத்தியபடியே இருந்தார். "ராமா, குதிரை 1000 பொன் பெறும். கவனம்" என அறிவுரையும் கூறிவைத்தார். உள்ளூர இதைக்கேட்டு நகைத்த ராமன், "இந்த பூனைக்குட்டியை 1000 பொன்னுக்கு வாங்குபவனுக்கு இந்தக் குதிரை 1 பொன்னுக்கு விற்கப்படும். இரண்டும் சேர்த்தே விற்கப்படும்" என பெருங்குரலில் கூவினான். இதைக்கேட்டு பலர் திகைத்தனர். பூனைக்கு 1000, குதிரைக்கு 1 பொன்னா? என்ன விசித்திரம்? பிராம்மணர் மூர்ச்சையாகிவிட்டார். கூட்டத்தில் நின்ற ஒருவன், "அண்ணே!! பூனையென்றால் என்ன, குதிரை என்றால் என்ன. வாங்கிவிடுங்கள்" என தன் தமயனுக்கு உற்சாகமூட்ட, குதிரை 1 பொன்னுக்கும், பூனை 1000 பொன்னுக்கும் விற்பனையானது. மூர்ச்சை அடைந்திருந்த பிரம்மணரை தலையில் தண்ணீர் தெளித்து எழுப்பி, "அய்யா. நமது ஒப்பந்தப்படி குதிரை விற்ற பணம்." என 1 பொற்காசை அவர் உள்ளங்கையில் அழுத்தி வைத்தான் ராமன். மெல்லவும் முடியாமல், முழுங்கவும் முடியாமல் கற்சிலையாய் நின்றார் பட்டாபி. - ஈழத்திருமகன் -
 21. ம்.. நாய்க்குட்டியையும் தேங்காயையும் ஒன்றாக வைத்து காளமேகம் எழுதியது ஓடுமிருக்கும் அதன் உள்வாய் வெளுத்திருக்கும் நாடும் குலைதனக்கு நாணாது - சேடியே தீங்கானது இல்லாத் திருமலைராயன் வரையில் தேங்காயும் நாயுமெனச் செப்பு. நாய்க்குட்டி ஓடும், இருக்கும். தேங்காய்க்கு ஓடும் இருக்கும். நாய்க்குட்டியின் உள்வாய் வெளுத்திருக்கும். தேங்காயின் உள்பகுதி வெண்மையாக இருக்கும். நாய்க்குட்டி குலைப்பதற்கு என்றும் நாணாது. அதேபோல் தேங்காய் குலைகளாக தொங்கவும் நாணாது. காளமேகத்தின் அருமையான கற்பனை.
 22. "பாம்பும்" "எள்ளும்" ஒன்றே தான் என்று கவி காளமேகம் பாடிய ஒரு சிலேடை. ஆடிக் குடத்தடையும் ஆடும்போதே இரையும் மூடித் திறக்கின் முகம்காட்டும் - ஓடிமண்டை பற்றில் பரபரவெனும் பாரில்பிண்ணாக்கும் உண்டாம் உற்றிடும்பாம்பு என்எனவே ஓது. எள்ளு செக்கிலே கடையப்பட்டு (ஆடி) எண்ணெய்க்குடத்திலே சேரும். பாம்பும் படமெடுத்தாடியபின் பாம்பாட்டி கொண்டுவரும் குடத்தில் அடைந்துவிடும். எள்ளு செக்கிலே கடையப்படும் போது இரைவதுபோன்ற சந்தம் எழுப்பும். பாம்பும் படமெடுத்தாடும்போது சினந்து சீறும் எண்ணெய் வைத்துள்ள குடத்தின் மூடியை திறந்தால் அங்கு பார்ப்பவரின் முகத்தை கண்ணாடிபோல் காட்டும். பாம்பு இருக்கும் குடத்தின் மூடியை திறந்தாலும் பாம்பு "எட்டி முகம் காட்டும்". எள்ளெண்ணெயை தலையில் (மண்டை) தேய்த்தால் அது பரபரவென தலையோட்டினுள் ஊடுருவி செல்லும். பாம்பின் தலையை பிடித்தால் அதுவும் பரபரவென சுற்றிக்கொள்ளும். எள்ளில் இருந்து வருவது எள்ளுப் பிண்ணாக்கு. பாம்பின் நாக்கும் பிளவுபட்ட நாக்கு (பிண்ணாக்கு).
 23. நல்லது கறுப்பி. புதைந்துபோய் இருக்கும் தமிழ் இரசனையை மீட்டிப் பார்ப்பதற்கே இந்த சிறுமுயற்சி. நேரம் கிடைக்கும்போது உங்கள் ஆக்கத்தையும் எழுதுங்கள்.
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.