Jump to content
களத்தில் உள்நுழையும் வழிமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலதிக விளக்கங்களிற்கு

Eppothum Thamizhan

கருத்துக்கள உறவுகள்
 • Posts

  1,436
 • Joined

 • Last visited

Posts posted by Eppothum Thamizhan

 1. 1 hour ago, பாலபத்ர ஓணாண்டி said:

  உண்மைய சொன்னா நான் நாதம் கோசான் மூண்டுபேரும் தலைவரின் குடும்பம் வெளிநாட்டுக்கு போகவே இல்லை எண்டு நினைச்சு நானும் கோசானும் எழுத நாதம் பேப்பர் நியூசை நம்பி 90களில போனதெண்டு எழுத ஆகமொத்தம் எங்கள் மூண்டுபேருக்கும் தலைவர்குடும்பம் பிரேமதாசகாலத்துல வெளிநாட்டுக்கு( இந்தியா அல்ல ஊரோப்) போனது தெரியாது.. மீரா எழுதினதுக்கு அப்புறம்தான் எனக்கே சுதந்திரவேட்கையில் படிச்சது நாபகம் வந்து மானக்கெட்டவேலை விலாசக்கதை கதச்சு அசிங்கப்பட்டன் எண்டு ஒளிச்சிருந்தன் இவ்வளா நேரமும் யாழுக்கு வராமல்.. இதில பகிடி என்னெண்டா நாதமும் கோசானும் விழுந்தும் மீசையில மண்படேல்ல எண்டு விடியவிடிய பாக்குர ஆக்களுக்கு மண்டை கழுவுப்படுகுது தங்களுக்கு முதலே தெரியுமெண்டு 😂😂😂.. நான் பிக்பாஸ் சோவை யோசிச்சுட்டுதான் ஓடிவந்து இப்ப உண்மைய ஒத்துக்கொண்டு கால்ல விழுந்திட்டன்.. 😂😂அங்கயும் உப்பிடித்தான் என்னத்தையும் செஞ்சுபோட்டு கமரா இருக்கெண்டதையும் மறந்து தாங்கள் செய்தது சரியெண்டு உருட்டு நடக்கும்… ஆனா சனம் முதலே கண்டுபிடிச்சிட்டு நமுட்டு சிரிப்பு சிரிச்சுகொண்டிருக்கும்.. அதுமாதிரித்தான் நேத்தே எங்கட மூண்டுபேற்ற வண்டவாளமும் வாசிச்ச ஆக்களுக்கு விளங்கி இருக்கும்.. தேவை இல்லாமல் ரெண்டுபேரும் விடியவிடிய மாத்திமாத்தி வாசிக்குர ஆக்கள் மண்ட கழுவுரத விட்டிட்டு தொபுக்கடி எண்டு என்னயமாதிரி கால்ல உழுந்திருக்கலாம்..😂😂 பாழ்பட நாசமாப்போன நாபமறதி.. நானும் சுதந்திர வேட்கையில வாசிச்சனான் உதை.. சுரந்திரவேட்கை புத்தகத்தை ஒரேநாளில விடியவிடிய வாசிச்சு முடிச்சனான் மறந்து துலைச்சு போனன்.. நாதமும் கோசானும்கூட உது தெரிஞ்சிருக்கு ஆனா மறந்திட்டினம்.. இதில கோசான் உசார்பாட்டி.. 😂மீரா சொன்ன உடன டக்கெண்டு நாபகம் வந்து கீழ உசாரா எழுதிட்டு ஆள் முதலே தெரியும் எண்டா மாரி… இதில விடியவிடிய ரெண்டுபேரும் பந்திபந்தியா எழுதி விளக்கம்குடுத்து எங்ககிட்ட இருந்து மறைக்க நினச்சது தங்கட நாபகமறதிய..😂😂 இதுக்கு பேசாம என்னய மாரி உண்மைய ஒத்திருக்கலாம் மறந்து துலச்சிட்டம் எண்டு..😂😂

  பாராட்டுக்கள் புலவரே! இங்கு கருத்தெழுதும் எவருமே தாம் எழுதுவது பொய் என்று தெரிந்து எழுதுவதில்லை. எங்காவது வாசித்தறிந்ததை மனதில்வைத்தே எழுதுகிறார்கள். சிலவேளைகளில் அவை பிழையாகவிருப்பின் பெருந்தன்மையுடன் ஏற்றுக்கொள்வார்கள். மேலே குத்திமுறியும் எவருக்கும் அந்த மனநிலை இல்லை. இதில் பதில் எழுதாமல் கடந்துபோகும் மற்றவர்களையும் சாட்சிக்கு இழுக்கிறார்கள். நேரம் பொன்னானது காண்.

  • Thanks 1
 2. 12 hours ago, Kapithan said:

  ஐயா  கஜேந்திரகுமார் அவர்கள,

  நாட்டை கட்டியெளுப்ப உங்களுக்கு assignment கொடுக்கப்படவில்லயே. TNA யை உடைத்து இல்லாதொழிக்கும் assignment அல்லவா உங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளது. அதனைச் செய்யுங்கள். அப்போதுதான் உங்கள் எசமானர்கள் மகிழ்வடைவார்கள். 

  ☹️

  இதைத்தானே சுமந்திரன் கனகச்சிதமாக செய்துகொண்டிருக்கிறார்! பிறகென்னத்திற்கு வேற ஆக்கள்??

 3. 3 hours ago, Paanch said:

  நான் ஓட்டமாவடியில் 17 வருடங்கள் வாழ்ந்துள்ளேன். அங்கு தமிழருக்குச் சொந்தமான வீடுகள். பெரும் காணிகள். சில வியாபார நிலையங்கள் எனப் பல இருந்தன. இன்று அங்கு ஒரு தமிழரும் இல்லை, தமிழருக்குச் சொந்தமாக இருந்த வீடுகள், காணிகள், வியாபார நிலையங்கள் எதுவுமே அங்கு இல்லை. தமிழர்களைத் துரத்திவிட்டதோடு இல்லாமல் ரயில்வே திணைக்களத்திற்குச் சொந்தமான காணிகளையும் அவர்களுடைய அரசியல்வாதிகளின் ஆதரவுடன், அங்குள்ள முசுலீம்கள் தங்களுக்குச் சொந்தமாக்கிக் கொண்டுள்ளனர்.  

  நான் புலம்பெயர்ந்து வந்தபின்பு ஒருமுறை நாட்டிற்குச் சென்றசமயம், என்னுடன் வேலைசெய்த முசுலீம் நண்பர்களையும் சந்திக்க ஓட்டமாவடிக்கும் சென்றிருந்தேன். என்னை வரவேற்று உபசரிக்க அவர்கள் தவறவில்லை. பல விடயங்களை நாங்கள் கதைத்து அளவளாவியபோது, அங்கு ஒருவர் "இங்கு இப்போது ஒரு தமிழ்....." என்று வாயைத் திறந்தபோது பக்கத்தில் இருந்தவர் தட்டவும், தன்னைச் சுதாகரித்துக் கொண்டு சொல்லவந்ததைச் சொல்லாமல் வாயைத் திரும்ப மூடிக்கொண்டார். ஆனாலும் அவர் என்ன செல்லவந்திருப்பார் என்பதை என்னால் யூகிக்க முடிந்தது. 

  இதைபற்றியெல்லாம் எங்கள் ஐடியா ஆசாமிகள் கதைக்கவே மாட்டார்கள். சுமந்திரன் யாழில் நடந்த முஸ்லீம் வெளியேற்றம் இனச்சுத்திகரிப்பு என்றால் அதுக்கு முட்டுக்கொடுக்க வரிசையா வெவ்வேறு ஐடியோடை வந்து நிப்பினம். ஏனென்றால் எங்கடை சில சனத்தின்ரை டிசைன் அப்பிடி!!🤣

  • Like 2
  • Thanks 1
  • Haha 1
 4. 17 hours ago, ரதி said:

  வழிக்கு வந்திட்டிங்கள் இங்கேயிருந்து  காசை தூக்கி எறிந்தால் அங்கேயிருப்பவர்கள் தங்கள் உயிரை துச்சமாய் மதித்து உங்களுக்கு பேர் சொல்ல ஒரு நாடு எடுத்து தரோணும் ...அந்த நாட்டில் நீங்கள் போய் இருக்க போவதும் இல்லை ...உங்கள் பணத்திற்கு அவர்கள் உயிர் சமன் இல்லையா?
   

  போராளிகளின் உயிர்கள்  விலைமதிக்க முடியாதவை. வடிவாக வாசியுங்கள்! நான் எழுதியது புலம்பெயர் தமிழர்களின் பேராதரவும், பண உதவியுமே போராட்டத்தை இவ்வளவுக்கு வளர்ச்சி அடைய செய்ததென்றே!!

 5. 41 minutes ago, Kapithan said:

  கடமையைச் செய். பலனை எதிர்பாராதே. 

  அப்பிடீன்னு நா சொல்லலீங்க. கிருஸ்ண பரமாத்மா சொன்னாருன்னு சொல்றாங்க. 

  இது புரீதா...?

  அப்படிச்சொன்ன கிருஷ்ண பரமாத்மாவிற்கே கிடைத்த பலன் தெரியும்தானே?  காந்தாரியின் சாபம்!!

 6. 14 hours ago, Kapithan said:

  உங்கள் கேள்வி புரிகிறது,

  துணிவும் நேர்மையும் இருப்பவர்கள்  கேட்கலாம். 

  இல்லாதவர்கள் கொட்டாவி விடவேண்டியதுதான்.

  😂

  என்ன பதில் வருமென்று முதலே தெரிந்தபின் அவர்களை கேட்டுத்தான் என்ன பயன்??

 7. On 30/11/2021 at 12:05, ரதி said:

  மற்ற இயக்கங்கள் இப்பவாவது தங்களுக்கு நடந்ததை வெளிப்படையாய் எழுதுகிறார்கள் ...அதை ரசித்து படிக்கும் நீங்கள்  புலிகளில் நடந்த உள்  வீட்டுக் கதைகளை  எழுதினால் நாண்டுக்கிட்டு சாகோணும் .

  ஓம் ஓம், அதுவும் கருணா அம்மானின் கதையை எழுதினால் நீங்களும் சேர்ந்துதான் நாண்டுக்கிட்டு சாகணும் .

  On 30/11/2021 at 11:52, ரதி said:

  பணத்தை கொடுத்தால்  போராட்டத்தை விலைக்கு வாங்கலாம் என்று நினைக்கின்ற ஆட்களாச்சே நீங்கள் எல்லாம் உங்களிடம் மன சாட்சி  இருக்குதா ஜயா ...எனது  ,என் குடும்ப உசிரு தான் உசிரு மற்றவர்கள் எல்லாம் ம .. என்ற கொள்கை உடையவர்கள் தானே உங்களை போன்றோர் 
   

  பல புலம்பெயர் மக்கள் எவ்வளவு கஷ்டத்தின் மத்தியிலும் பணத்தை அள்ளிக்கொடுத்ததால்தான் போராட்டம் இவ்வளவுக்கு வளர்ந்தது என்ற சாதாரண புரிதல் கூட இல்லையா?? ஆட்களை மட்டும் வைத்து என்ன ஈட்டி, அம்பு கொண்டா போரிடுவது!!

  அந்தப்பணத்தை ஏப்பம் விட்டவர்களையும், அதைவைத்து இப்போ சொகுசு வாழ்க்கை வாழ்பவர்களையும் இதில் சேர்க்கவேண்டாம்.

 8. On 29/11/2021 at 19:47, Kapithan said:

  தெரியாது  என்பது சரியான கூற்றாக இருக்கும். 

  ஆனால் அந்தக் கும்பலைத் தூக்கியெறிய வேண்டும் என்றீர்களே அதை அவர்களிடம்  கேட்டீர்களா ?

  அதைக் கேட்க (இலகுவாக)  மறந்திருப்பீர்கள் என யூகிக்கிறேன்.

   

  அதை எப்படி சுமந்திரனின் ஆட்களிடம் கேட்பது??

 9. 11 hours ago, Kapithan said:

  இங்கே இதைக் கூறுவதற்கு முன்னர்  ஒரு முறை இவர்களது பயணம் தொடர்பாக ஊரில்  ஓரிருவரது கருத்தைக் கேட்டு, அதன் பின்னர் உங்கள் கருத்தைக் கூறுவது நன்று என்று கருதுகிறேன்.

   

  நானும் எனக்கு தெரிந்த பலரிடம் (சுமந்திரனுக்கு மிக நெருங்கிய) கேட்டுவிட்டேன். கிடைத்தபதில் எதற்கு சென்றாரென்று யாருக்குமே தெரியாதென்பதே!! மிகவும் ரகசியமான விடயமாக இருக்குமோ??

 10. 36 minutes ago, பெருமாள் said:

  கொடியும் பிடிக்கிறார்கள் சுமிக்கு பின்னாலும் திரியினம்********************************************************** 🤣 ஆகா என்ன டிசைன் என்று இன்னும் எனக்கு புரியலை .

  இப்பவாவது விளங்கிதோ இந்த கொடிபிடிக்கிற கோஷ்டியை ஆட்டுவிக்கிறது யாரென்று??

  • Haha 1
 11. 1 hour ago, Justin said:

  நான் சளாப்பிய போது கேட்ட கேள்வியை தவற விட்டு விட்டீர்கள் போல! ஏதாவது உதாரணம் அப்படி இருக்கிறதா உங்களிடம்?😎

  புலிகள் இயக்கத்தினுள் தலைமைக்கு விரும்பியதைச் சொல்பவர்கள் மட்டுமே தலைமையின் செவிமடுத்தலுக்கு அருகில் இருக்கலாம்! இதை அறிய அங்கேயே வாழ்ந்து சில பத்திரிகைச் செய்திகளை வாசித்தாலே போதும்! ரமில்னெற்றும், ஈழநாதமும் வாசித்தால் எல்லாம் மேற்கத்தைய ஜனநாயகம் போலத் தான் தெரியும்.

  இந்தக் காரணம் தான் தமிழினி பேசாமல் மக்களுக்காக தன் பணியைச் செய்து விட்டு பின்னர் பேசியதற்குக் காரணம். இப்படி பலர் இன்றும் இருக்கிறார்கள். கேட்கத் தான் ஆட்கள் இல்லை!

  அப்படி யாரும் அங்கு இருந்ததாக நான் சொல்லவில்லையே! பாலசிங்கத்தார் பக்குவமாக ஒதுங்கியமாதிரி, தலைவரின் கொள்கைகள் பிடிக்காவிட்டால் தமிழினியும் ஒதுங்கியிருக்கலாம் என்றுதானே சொன்னேன்!!

 12. 11 hours ago, tulpen said:

  பிம்பங்களை  வைத்து பிழைப்பு  நடத்தும் புலம்பெயர் புலிவால்கள்

  இப்படி எழுத அனுமதிக்கும் நிர்வாகம் கூலிக்கு மாரடிக்கும் கூட்டம் என்று எழுதும்போதுமட்டும் ஏன் வெட்டியெறிகிறது? யாழ் நிர்வாகமும் இப்போ அந்த கூட்டத்துடன் சேர்ந்துவிட்டதோ ??

 13. 19 minutes ago, goshan_che said:

  காணி அதிகாரம், குடியேற்றத்தடை இவைதான் இப்போதைக்கு நம் முன் இருக்கும் முக்கிய இலக்குகள். அதை தரும் எந்த தீர்வும் நல்ல தீர்வே.

  கனடா அல்லது தற்போது ஸ்கொட்லாந்துக்கு இருக்கும் உரிமை போல ஆனால் பிரிந்து போக முடியாத அலகு ஒன்று கிடைக்கும் என்றால் - அதை விட அதிகமான அதிகாரப்பகிர்வு சாத்தியமில்லை (எதிர்காலத்தில் எதுவும் நடக்கலாம்).

  போலீஸ் அதிகாரம் முக்கியமில்லையா கோஷான்?? எங்கட சனத்தட்டை குடுத்தாலும் பிரச்சனைதான்!!

 14. 6 hours ago, tulpen said:

  அரசியல் அறிவின்றி போராட்டதலைவரின் மீது கொண்ட பக்தியால் மட்டும் போராடக்கூடாது என்பதையே அவர் தனது சாட்சியமாக பதிவு செய்துள்ளார். 

  போராட்டத்தையும் மக்களையும் நேசித்த அவரின் நேர்மையான வாக்குமூலம் போராட்டத்தையும் தலைவரின் பிம்பங்களையும், மாவீரரையும் வைத்து பிழைப்பு நடத்தும் சுயநல கும்பலுக்கு உவப்பானது அல்ல. 

  தலைவர் அரசியலை நம்பி போராட தொடங்கவில்லை, ஆயுதத்தை நம்பியே தொடங்கினார். ஆயுதத்தை கீழே வைத்தால் என்ன நடக்கும் என்பதை இந்திய அமைதிப்படை காலத்திலேயே உணர்ந்திருந்தார். 

  ****
   

 15. 13 hours ago, Justin said:

  மேலே போய் பாலசிங்கம் பற்றிய உதாரணம் ஏன்  வந்தது என்று வாசித்தால் உங்களுக்கு பின்னணி தெரியலாம். தலைவர் விரும்பினால் மட்டும் தான் ஒரு கருத்து புலிகள் இயக்கத்தினுள் நிலைக்கலாம். "அப்படியல்ல, அங்கே கூட்டுத் தலைமை, ஆலோசனை, உள்-ஜனநாயகம் எல்லாம் இருந்தன" என்று ஒருவர் ரீல் விட்டார் - நீங்கள் அவருக்குத் தான் புத்தி சொல்ல வேணும்! 😂

  நான் அப்படி ஒரு ரீலும் விடவில்லை ஜஸ்டின். நீங்கள் வழமைபோல் உங்கள் பாணியிலான சாளாப்பல்களை தொடங்கிவிட்டீர்கள். நான் சொன்னது தமிழினிக்கு தனது கருத்துக்களை கூற சந்தர்ப்பம் இருந்திருக்கும் என்றுதான். அதை தலைவர் ஏற்றால் சரி இல்லையென்றால் இனியும் தொடர முடியாது என்று ஒதுங்கியிருக்கலாம் என்றுதான். எல்லாம் முடிந்தபிறகு ராணுவ புலனாய்வாளர்கள் சொல்வதை ஒப்பித்தார். அதை வேதவாக்காக எடுத்து நீங்கள் பாடமெடுக்கிறீர்கள்.

  • Like 1
 16. 16 hours ago, Justin said:

  இதுக்கெல்லாம் ரெக்கி ஏன்? உங்கள் செய்திகள் பார்த்து உள் நிலை புரிந்து கொள்ளும் reasoning இற்கு என்ன ஆயிற்று? பாலசிங்கத்தாருக்கு சமாதான காலத்தின் இறுதிப்பகுதியில் என்ன நடந்தது? அவர் த.செ வை விட மேலேயா , கீழேயா? என்ன தான் கற்றுக் கொண்டீர்கள் அந்த நேர சம்பவங்கள் பற்றி?அதைக் கூட விடுங்கள்.

  உள்ளேயே இருந்து புலிகளின் தலைமையை விமர்சனம் செய்து வழி மாற்றி பின்னரும் புலிகளுடன் தொடர்ந்த எவர் பற்றியாவது ஒரு உதாரணம் இருக்கிறதா உங்களிடம்? "அப்படி மாற்ற எதுவும் இருக்காததால், எவரும் சொல்லவில்லை - எனவே உதாரணம் இல்லை" என்று சொல்வீர்கள் போல! 😂

  பாலசிங்கத்தாருக்கும் தலைவருக்கும் என்ன பிரச்சனையை என்பதை அவர்கள் இருவரோ அல்லது உயர்மட்ட தலைவர்களோ சொன்னால்தான் உண்டு. மற்றவர்கள் சொல்வதெல்லாம் ஊகங்களே. தலைவரின் நடவடிக்கையில் அதிருப்தி இருந்ததால் பாலசிங்கத்தார் பக்குவமாக ஒதுங்கிக்கொண்டார்.

  தமிழினிக்கும் பிடிக்காமல் இருந்திருந்தால் ஒதுங்கியிருக்கலாமே? அவரும் அரசியல் பிரிவில்தானே இருந்தார்?

  • Haha 1
 17. 1 hour ago, Kandiah57 said:

  விடுதலைப்புலிகளின் போராட்டத்திலிருந்து                                      1....இலங்கையில் பேச்சுவார்த்தை மூலமே அல்லது ஆயுதப்போராட்டத்தின் மூலமே ஒரு தீர்வுவைப் பெற்றுக் கொள்ள முடியாது என்பதை நீங்கள் கற்றுக் கொள்ளவில்லையா.  ?

   

  எனவே தயவுசெய்து போராடியது பிழை என்று சொல்லாதீங்கள் இப்படிப்பட்ட இலங்கை  தமிழன்  இருக்கும் வரை இலங்கை தமிழனுக்கு விடுதலை கிடையாது  

  ஆயுதப்போராட்டம் என்று ஒன்று தொடங்கியபின்தான் சர்வதேசமோ ஏன்  ஸ்ரீலங்கா அரசாங்கமே தமிழ் தரப்புடன் பேச்சுவார்த்தை என்ற ஒன்றை தொடங்கியது என்பது சிலருக்கு புரிவதேயில்லை. எவ்வளவோ பேச்சுவார்த்தைகளில் கலந்துகொண்டபோதும் சர்வதேசமும் ஸ்ரீலங்கா அரசும் முன்வைத்த தீர்வுதான் என்ன என்பதை இந்த புத்திஜீவிகளை கூறச்சொல்லுங்கள் பார்க்கலாம்?

  • Like 3
 18. 16 hours ago, Justin said:

  நடந்த சம்பவங்கள் வைத்துக் கொண்டு ஊகிக்க முடியாமல் இருக்கிறீர்கள் என நினைக்கிறேன். எனவே மத்திய குழு கூட்டங்களில் எடுத்த வீடியோக்கள் வரும் வரை பொறுத்திருங்கள்! 😉

  புலிகளின் தலைமை தாங்கள் கேட்க விரும்பியதைச் சொல்பவர்களையே அருகே வைத்திருந்தது. இது பாலசிங்கம் ஒதுக்கப் பட்டு தமிழ்செல்வன் முன்னிலைப் படுத்தப் பட்ட இடத்திலேயே வெளியே தெரிந்தது. இதை விட பல சம்பவங்கள், பலராலும் பல இடங்களில் பதிவு செய்யப் பட்டிருக்கின்றன.

  நீங்கள்தானே ஊகத்தில் எழுதும் எல்லாவற்றிற்கும் ஆதாரம் கேட்பீர்கள். பலராலும் பதிவுசெய்யப்பட்ட கருத்துக்கள் அவர்களின் ஊகமே. அது உண்மையாக இருக்கவேண்டிய அவசியமில்லை.

  16 hours ago, Justin said:

  நீங்களோ, ஏதோ புலிகள் அமைப்பினுள் ஜனநாயகமும் கருத்துகளின் பன்முகத் தன்மையும் ஆட்சி செய்ததது போல ஒரு பாவனை செய்கிறீர்கள்! இது தமிழர் போராட்டத்தை இணையத்தில் மட்டும் வாசிக்கும், எழுதும் இளவல்களிடம் எடுபடும்! 

  ஏதோ நீங்கள் அமைப்புக்குள் ஊடுருவி ரெக்கி எடுத்த ரேஞ்சுக்கு அடிச்சுவிடுறியள்! தொடருங்கோ, கைதட்டிற கூட்டம் இருக்கும்வரை!!

 19. 1 hour ago, Justin said:

  இதைச் செய்திருந்தால் அவர் கருணாவுக்கு முதலே துரோகிப் பட்டியலில் சேர்ந்திருப்பார். புற்று நோய் அவரைக் கொன்றிருக்காது!

  புலிகளின் தலைமை எப்படி வேலை செய்தது என்ற ஒரு ஐடியா கூட இல்லாமலா இவ்வளவு நாளும் பக்தி மயமாக திரியிறியள்?😂 

  கருணா செய்தது தலைமைக்கு சொல்லாமல். இவர் தமிழ்செல்வனுக்கு இணையான பதவியில் இருந்தவர் என்பதால் அவர் தனது கருத்துக்களை தலைமைக்கு சொல்ல சந்தர்ப்பங்கள் இருந்திருக்குமே? அவர் சொல்லியும் தலைமை கேட்கவில்லை என்று எங்காவது சொல்லியிருக்கிறாரா? அல்லது நீங்கள்தான் சும்மா அடிச்சு விடுகிறீர்களா?

 20. 2 hours ago, tulpen said:

  போராட்டம்  200 வருடம் பின்னுக்கு போய்விட்டது என்று கூறியது நானல்ல. தமிழீழ விடுதலைப்புலிகளின் அரசியல்துறை மகளிர் பொறுப்பாளர் தமிழினி தான் அவ்வாறு கூறினார். போராட்டதை உண்மையாக நேசித்ததால் தான் அவ்வாறு சுயவிமர்சனம் செய்ய அவரால் முடிந்தது.

  எப்போது இதை கூறினார். எல்லாம் முடிந்தபின்பா? முதலே இதை உணர்ந்திருந்தால் அதை ஏன்  தனது தலைமையிடம் கூறி சரியான பாதையில் கொண்டு செல்ல முடியவில்லை?

  எல்லாம் முடிந்தபின் இதை செய்திருக்கலாம், அதைசெய்திருக்கலாம் என்று புத்திமதி கூறுவதும் குற்றம் கண்டுபிடிப்பதும் மிக இலகுவானது. உலகநாடுகளை அனுசரித்து தீர்வைப்பெற வேண்டுமென்றால் உலகநாடுகள் என்ன தீர்வை முன்வைத்தன? அரசாங்கம் எதற்காவது இணங்கியதா? 

  அதுசரி எதற்கெடுத்தாலும் எதிர்கால தலைமுறை என்கிறீர்களே அது யார் சுமந்திரனும் சாணக்கியனுமா?

 21. 16 minutes ago, குமாரசாமி said:

  எல்லாம் பிழைச்சுப்போச்சு எண்டபடியாலை தானே உங்களிட்ட வாறன்....

  அப்படியெல்லாம் கேட்கக்கூடாது குசா அண்ணை! எங்களுக்கு தெரிந்ததெல்லாம் புலிவாந்திதான்! நீங்கள் புதுசுபுதுசாக்கேட்டால் நாங்கள் எங்க போறது! கேட்டால் போராட்டத்தை 100, 200 வருடம் பின்னுக்கு கொண்டுபோட்டாங்கள் என்று கூப்பாடு. 100, 200 வருஷத்துக்கு முன் இலங்கையில் ஆங்கிலேயர் ஆட்சியில் தமிழருக்கும், சிங்களவருக்கு ஒரேயளவு உரிமைதான் இருந்ததென்ற அடிப்படை அறிவுகூட இல்லை. சும்மா அடிச்சுவிடுறது!!

  • Like 1
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.