Jump to content

Eppothum Thamizhan

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    1854
  • Joined

  • Last visited

Posts posted by Eppothum Thamizhan

  1. 8 minutes ago, Kapithan said:

    ஆனால் தாங்கள் யார்? An Anonymous. தாங்கள் இதைக் கூறுவதென்றால் தாங்கள் களத்தில் நிற்க வேண்டும். கொல்லப்படுவது வேறு யாரோ பெற்ற பிள்ளைகள். கொல்வதும் வேறு யாரோ பெற்ற பிள்ளைகள். வெளிநாடுகளில் பாதுகாப்பாக தாங்களும் இருந்துகொண்டு, தங்கள் பிள்ளைகளையும் பாதுகாப்பாக கல்வியறிவூட்டி வளர்த்துக்கொண்டு, களைகள் ஒழிக்கப்பட வேண்டும் எனக் கூறுவது சுத்த அயோக்கியத்தனம். 

    வீட்டுக்கொரு போராளி வரவேண்டுமென்று கேட்டபோது எங்கள் குடும்பத்திலிருந்து ஒருவனை கொடுத்தோம். இப்போது பேசலாமல்லவா?

    இத்தனைக்கும் இப்போதும் நான் ஒரு ஸ்ரீலங்கன் பிரஜை!

    • Like 2
    • Thanks 1
  2. On 17/2/2024 at 16:07, நன்னிச் சோழன் said:

    என்னே! நீலனுக்கு இத்தனை கண்ணீர் அஞ்சலி சுவரொட்டிகளா...

     

    நன்னி, இப்போதுதான் முகமூடிகளுக்கு பின்னாலுள்ள முகங்கள் எட்டிப்பார்க்கின்றன! அவர்களுக்கு சிங்குச்சா அடிக்க, முண்டுகொடுக்க எத்தனைபேர்!!

    On 17/2/2024 at 23:01, விசுகு said:

    தவறு.

    விசுகர் இவர் யாரென்று தெரிகிறதா? இப்படியான களைகளை அழிக்காமல் மனிதாபிமானமாக அகன்றுவிடச்சொன்னதால் வந்த விளைவுதான் முள்ளிவாய்க்கால்!

    • Thanks 1
  3. On 17/2/2024 at 00:30, Kapithan said:

    எத்தனை முள்ளிவாய்க்கால் வந்தாலும் உங்களைப் போன்றவர்கள் நாகரீகம் அடைவதும் இல்லை,  திருந்தப்போவதும் இல்லை. உங்களைப் போன்றவர்கள்தான் எங்கள் இனத்தின் நச்சு வேர்கள். சிறிது சிறிதாக முழு மரத்தையும் அழித்துவிடுவீர்கள். 

    😏

    நீங்கள் இதை சொல்கிறீர்களா? உங்கள் வண்டவாளங்கள் தண்டவாளமேறி ரொம்ப நாளாச்சே!

    நெற்கதிர் வளரவேண்டுமென்றால் களைகள் அழிக்கப்பட அல்லது அகற்றப்பட வேண்டியவையே!!

    • Like 1
  4. On 9/2/2024 at 06:40, நிழலி said:

    அந்த தொட்டிலில் தான் நீங்கள் வாழ்கின்றீர்கள். உங்கள் குழந்தைகள் நிம்மதியாக வள்ர்கின்றார்கள்.

    அந்த தொட்டிலை உங்கள் சுயமுயற்சியால் உருவாக்கவேண்டும். காலா காலமாக பாவப்பட்ட ஆசிய, ஆபிரிக்க, தென்னமெரிக்க நாடுகளை சுரண்டி தொட்டிலை உருவாக்கிவிட்டு இப்போ மற்றவர்களுக்கு பாடம் எடுக்கிறார்கள். அதற்கும் செம்புதூக்க ஒரு கூட்டம் . விளங்கீடும் !!

  5. Umpire , match referee எண்டு எல்லாரும் சேர்ந்து அளாப்பி வென்று விட்டார்கள். முதல் சூப்பர் ஓவரில் அவுட்டான ரோஹித்தை இரண்டாவது சூப்பர் ஓவரில் ஆட விட்டிருக்க கூடாது. இந்தியாவில் எதுவும் நடக்கும்!!]

    If the same batter didn't bat or didn't get out or had retired hurt in the first 'Super Over', the said batter is allowed to be listed among the three batters for the second 'Super Over' as well. But if the batter was dismissed in the first 'Super Over', the rules don't allow his inclusion for a second go.

    Rohit walks off retired out. Gamesmanship? Well within the rules. Rinku comes out without a helmet, seemingly to sprint his lungs out to try and complete two. Rohit has a laugh as he goes back into the dug out. Call it excellent game awareness.

    • Like 1
    • Haha 1
  6. 11 minutes ago, விசுகு said:

    எது கொடுமை என்பதை நான் அல்லவா உணரணும்??

    இப்படி பார்த்தால் நானோ நீங்களோ உலகின் எந்த மூலையிலும் வாழமுடியாது. எல்லா நாடுகளுக்கும் எல்லா இன் மக்களுக்கும் இன்னொரு பக்கம் இருக்கு. எல்லோரும் தற்கொலை செய்து கொள்வோமா??

    நீங்கள் உங்கள் நாட்டில் நிம்மதியாக இருக்க விரும்பினால் மற்ற நாடுகளை சொறியாமல் இருக்கவேண்டும்!

    காலனித்துவப்படுத்தப்பட்ட நாடுகளுக்கு ஒரே முகம்தான்!

  7. 10 hours ago, விசுகு said:

    அப்படி இருந்தபடியால் தான் இன்று பிரான்ஸ் என்றொரு தேசம். அதில் நான் நிம்மதியாக வாழ்கிறேன். சாப்பிட்ட கோப்பையில் மலம் கழிக்க கூடாது அல்லவா அண்ணா ?

    நீங்கள் இப்படி நிம்மதியாக வாழ உங்கள் நாடு (பிரான்ஸ்) எத்தனை நாடுகளை சுரண்டி அழித்து அந்தந்த நாட்டவர்களை வறுமைக்கோட்டிற்கு கீழ் கொண்டுவந்து விட்டிருக்கிறது என்பதை இலகுவாக மறந்துவிட்டீர்களே!!

    • Like 2
  8. 23 hours ago, விசுகு said:

    2009 க்கு முன்னர் உண்டியல் குலுக்க பணித்தவர் தலைவர். எனவே தலைவரின் தொண்டர்களை தொடுபவர்களுக்கு குளிர் விட்டு போச்சு என்று மட்டுமே சொல்ல முடியும். 

    2009 இற்கு முன் காசு சேர்க்கசொன்னவர் தலைவர்தான் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை! ஆனால்  எல்லாம் முடியும் வேளையிலும், ஆயுதங்களை மௌனித்து சரணடைய சொன்னபின்பும், இன்னும் ஒரு பெரிய அடிக்கு தயார் செய்கிறோம் என்று கூறி உண்டியல் குலுக்கியவர்களுக்கானதே பையனின் கருத்து என்றுதான் நான் விளங்கிக்கொண்டேன்! எவ்வளவோ கஷ்டப்பட்டு உழைத்து போராட்டத்திற்கு கொட்டிக்கொடுத்து இப்பவும் கஷ்டப்படும் ஆயிரக்கணக்கானோர் இருக்கும்போது, உண்டியல் குலுக்கி இப்போ ராஜபோகவாழ்க்கை வாழும் ஈனர்களை ஏதோ போராளிகள் ரேஞ்சிற்கு உயரத்தில் வைக்கிறீர்களே!!

  9. On 2/12/2023 at 02:41, Cruso said:

    எதுக்கு கேட்க வேண்டும்? வெளி நாடுகளில் போய் அடிமைகளாய் இருக்கிறதை  விட இங்கேயே அடிமையாய் இருக்கலாம்.ஆனாலும் இங்கு யாரும் எங்களை அடிமைகளாக நடத்தவில்லை.

    போர்த்துக்கேயர், ஒல்லாந்தர் காலத்திலிருந்தே அப்படியே வாழ பழகிவிட்டீர்கள்! அதனால்தான் எப்படி வாழ்கிறீர்கள் என்று தெரியாமலே வாழ்கிறீர்கள்!🤣

    • Haha 1
    • Downvote 1
  10. 9 hours ago, குமாரசாமி said:

    அவர்களை வாழ்த்துவதும் போறுவதும் அவர்கள் விட்டுச்சென்ற கொள்கைகளை முன்னெடுத்து செல்வதும் நம் கடமை.

    இனி மேலும் அவர்கள் வந்துதான் முன்னெடுத்து செல்வார்கள்/ செல்ல வேண்டும் என நினைப்பது மடமை.

    அதே!!👍

  11. 10 hours ago, nedukkalapoovan said:

    தலைவர் எங்காவது சொல்லி வைச்சாரா எனக்கு தனியா அஞ்சலி செய்யுங்கோ.. பனர் கட்டுங்கோ.. படையல் வையுங்கோன்னு..??! இதை எல்லாம் யாழ் அனுமதிச்சிருக்குது.. கடந்த காலங்களில். 

     

    எப்போ உங்களுக்கு யாழ் களம் பந்திவைச்சு படையல் போட்டவை? எங்களுக்கு சொல்லவேயில்லை!!

    தலைவருக்கும் மாவீரர்களுக்கும் அஞ்சலிசெலுத்துவது அவரவரின் தனிப்பட்ட உரிமை, கடமை. அதை இப்படித்தான் செய்ய வேண்டுமென்று சொல்ல யாருக்கும் அதிகாரமில்லை! பிடிக்கவில்லையா உங்களுக்கு பிடித்த மாதிரி செய்துவிட்டு, பேசாமல் ஒதுங்கி இருங்கள்!!

    8 hours ago, Cruso said:

    அதாவது தலைவரின் கொள்கையான தமிழ் ஈழத்தில் உறுதியாக இருக்கும்படி சொல்லுகிறீர்கள். மிஞ்சி இருக்கிற தமிழர்களையும் கடவுள்தான் காப்பாற்ற வேண்டும். 

    தலைவரின் கடைசி மாவீரர்நாள் உரையை கேட்கவில்லை போலிருக்கிறது. அதுசரி அடிமையாகவே இருந்து பழகி விட்டோம். கர்த்தர் ஆசீர்வதிப்பாராக!!!😜

    • Like 1
  12. 9 hours ago, nedukkalapoovan said:

    வாழ்வது வீழ்வது..அவர்கள் தெரிவு.. வாழ்த்துவது நம் கடமை. ஏனெனில்.. நமக்காக அவர்கள் வாழ்ந்தது வழிநடத்தியது போதும். எனி அவர்கள் காட்டிய வழிபற்றி நடப்பதும் விடுவதும் அவரவர் விருப்பு. இனம் வாழ.... நாம் செய்வது.. அவர்கள் இலட்சியத்தை சுமப்பதும் சாத்தியப்படுத்துவதுமே...! அதற்காய் உளமார உழைப்பது ஒவ்வொரு இனமானத் தமிழர் கடமை..!!

    தலைவா! இது வேதவாக்கு!! அதைவிட்டிட்டு பவுடர் மாமி சொல்ல வாறதை கொஞ்சம் கேளுங்கோ எண்டால்??

  13. 7 hours ago, nedukkalapoovan said:

    அப்போ.. முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தில் மட்டும் தலைவருக்கு படையல்.. பனர் கட்ட யாழ் அனுமதிப்பது மட்டும்.. அவமானப்படுத்தல் இல்லையோ..??! முள்ளிவாய்க்காலில் மாண்டவர்களில் மக்கள் போராளிகள் என்று பலர் உள்ள போது தலைவரை முன்னிலைப்படுத்துவதன் நோக்கம்..?! தமிழ் மக்களை தொடர்ந்து சோர்வில் வைச்சிருக்கும் எதிரிகளின் தேவைகளுக்காகவா..??!

    என்ன நெடுக்ஸ் விளக்கமே இல்லையா? மாவீரர் தினம் என்பது தலைவரால், எமக்காக உயிர் சிந்தியவர்களை நினைவுகூருவதற்காக உருவாக்கப்பட்ட நாள். முள்ளிவாய்க்கால் மே 18 என்பது நாம் தலைவருக்கும் அவருடன் மரணித்தோருக்கும் அஞ்சலி செலுத்து நாள்! இரண்டிற்கும் வித்தியாசம் தெரியவில்லையா? இல்லாட்டி பவுடர் மாமி வந்து எல்லாத்தையும் குழப்பி போட்டாவோ?? இப்ப கொஞ்ச நாளா ஒரு மார்க்கமாத்தான் திரியுறியள்!! ம் ம்,பாவம் எப்பிடி இருந்த மனுஷன்!!!

     மேலே சிவப்பில் உள்ள எழுத்துக்களில் இருந்து தெரிகிறது உங்கள் வண்டவாளம்!😡

    • Like 2
  14. 11 hours ago, nedukkalapoovan said:

    அப்ப தலைவர் இரண்டு நாள் இறந்தவரோ.. மேலும் தலைவர் மற்றும் அவர் குடும்பம் மாவீரர் இல்லையோ..??!

    என்ன நெடுக்ஸ், முகப்பில் உள்ளதை வாசிக்கவில்லை போலிருக்கு? தாயக கனவுடன் சாவினை தழுவிய மாவீரர்களை நினைவு கூர்வோம் என்றால் அதற்குள் தலைவரும் அவர் குடும்பமும் அடக்கம்தான். தனியே தலைவருக்கு மட்டும் மாவீரர் நாளில் அஞ்சலி செய்வது தலைவரையே அவமானப்படுத்துவது போலாகாதா??

    மேக்கப் மாமியின் உருவ அலங்காரத்தை பார்த்தவுடனேயே தெரிந்திருக்க வேண்டும் இது யாரின் வேலை என்று! என்ன செய்வது இந்தியாவிற்கும், உண்டியல் குலுக்கும் கோஷ்டிக்கும் இப்படியான மட்டமான ஐடியாக்கள்தான் வரும்போல!!

    • Like 1
  15. வாழ்த்துக்கள் தாயே! 🙏

    ஓட்டப்போட்டிகளில் அவ்வளவு கடினமான விதிமுறைகள் இல்லைதான். ஆனால் விரைவு நடை போட்டிக்கு பல கடினமான விதிமுறைகள் உண்டு. அவற்றையெல்லாம் பழகி தங்கம் வென்றது உண்மையிலேயே மெச்சப்படவேண்டியதே! 👏

    • Like 1
  16. 8 hours ago, Cruso said:

    ஹூத்தி பயங்கரவாதிகள் இப்போது கடல் கொள்ளையர்களாக மாறி விடடார்கள். இவ்வளவு பலம் பொருந்திய பணக்கார நாடு, ராணுவ பலத்தில் வலிமை மிக்க நாடு இப்படி கடல் கொள்ளையர்களாக மாறியது வெட்கக்கேடு.

    என்னது Yemen பணக்கார, ராணுவ பலம் பொருந்திய நாடா? நான் இவ்வளவுநாளும் சாத்தான்தான் உள்ளேயிருந்து எழுதவைக்கிது என்று நினைத்தால், இப்பத்தானே தெரியுது பயபுள்ளைக்கு மேல பிரச்சனை எண்டு! 😕

    • Haha 2
  17. 14 hours ago, சுவைப்பிரியன் said:

    இது தான் எனது நிலைப்பாடாகவும் இருந்தது.ஜஸ்வாலுக்கு பயப்பிடுறாங்கள போல விட்டால் எல்லா இந்திய வீரர்களின் சாதனையகளை முறயடிப்பான் என்று.

    Yashasvi Jaiswal ஒரு நல்ல ஆரம்ப துடுப்பாட்ட வீரர். அவரை உள்ளே கொண்டுவருவதானால் ரோஹித் அல்லது சுப்மான்  கில் வெளியே செல்லவேண்டும். அதனால் ரோஹித் ஓய்வை அறிவித்தபின்தான் அவர் உள்ளே வர முடியும். நிச்சயம் இனிவரும் போட்டிகளில் விளையாடுவர்.

    இஷான் கிஷானையும் வெளியில் அனுப்ப முடியாது. ஏனெனில் அவர்தான் reserve விக்கெட் காப்பாளர்.

  18. 15 hours ago, பையன்26 said:
    15 hours ago, பையன்26 said:

    இந்தியா வீர‌ர் சூரிய‌ குமார் ஜ‌டாவ் இந்த‌ உல‌க‌ கோப்பையில் 

    பெரிசா சாதிக்க‌ வில்லை ப‌ண்டியா காய‌ப் ப‌ட்ட‌து இந்தியாவுக்கு சிறு பின்ன‌டைவு...................

     

    பையா, Hardik Pandiya காயப்பட்டதால்தான் Shami உள்ளே வர முடிந்தது! Suryakumar இற்கு பதிலாக Ashwin ஆடியிருக்க வேண்டும். அதுவும் அவுஸின் ஆரம்ப வீரர்கள் இருவரும் இடதுகை ஆட்டக்கார்கள்!!

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.